Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு

Published By: Rajeeban

10 May, 2023 | 06:50 AM
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

1990களில் நியுயோர்க்கின் பல்பொருள் அங்காடியில் பத்தி எழுத்தாளர் ஒருவரை டிரம்ப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேர்க்டோவ் குட்மனின் ஆடைமாற்றும் அறையில் டிரம்ப் ஈ ஜீன்  கரோலை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளி;த்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய் என தெரிவித்தமைக்காக  டிரம்பிற்கு எதிராக அவதூறு வழக்கினை தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளமை இதுவே முதல் தடவை.

இன்று உலகிற்கு உண்மை தெரியவந்துள்ளது என டுவிட்டரில் ஈ ஜீன் கரோல் பதிவிட்டுள்ளார். இது எனக்கு மாத்திரம் வெற்றியல்ல பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததை நம்பாததால் துயரை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த தீர்ப்பு ஒரு வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/154930

  • கருத்துக்கள உறவுகள்

பெண் கட்டுரையாளருக்கு டிரம்ப் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்து நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

டொனால்ட் டிரம்புக்கு எதிரான தீர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த எலிசபெத் ஜீன் காரல், பத்திரிகையாளர்களை நோக்கி புன்னகைத்தார்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபராவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு, டொனால்ட் ட்ரம்ப் ஒரு பத்திரிகையின் பெண் கட்டுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நியூயார்க்கில் உள்ள மான்ஹட்டன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில் இ.ஜீன் காரல் என்ற அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கவில்லை என்று கண்டறிந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அந்த எழுத்தாளரின் குற்றச்சாட்டை புரளி மற்றும் பொய் என்று அழைத்த டொனால்ட் டிரம்ப் அவதூறு வழக்கை எதிர்கொள்ளத் தக்கவர் ஆகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் கட்டுரையாளருக்கு இழப்பீடாக டொனால்ட் டிரம்ப் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதிகள் அமர்வில் - ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண் நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர். மூன்று மணி நேர வாதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் அதன் தீர்ப்பை அளித்தது.

"இன்று உலகம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டுள்ளது," என்று காரல் வெளியிட்டுள்ள எழுத்துபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல. தான் சொல்வது பிறரால் நம்பப்படாமல் அவதிப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்குமானது," என்று காரல் அதில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டாெனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

"இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் நடப்பதற்கு பதிலாக சிவில் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. டிரம்பை பாலியல் ரீதியாக குற்றம் புரிந்தவராக சிவில் நீதிமன்றத்தில் அறிவிக்க முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் 79 வயதாகும் காரல் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஆரம்பம் முதல் டொனால்ட் டிரம்ப் நிராகரித்து வந்தார். அங்கு நடந்த இரண்டு வார கால விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை.

தீர்ப்பு வெளிவந்தவுடன் தமது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பெரிய எழுத்துகளில் தமது கருத்தை பதிவிட்ட டிரம்ப், "எனக்கு இந்த பெண் யார் என்பது பற்றி எந்தவொரு ஞாபகமும் இல்லை," என்று கூறியுள்ளார்.

இரு வார விசாரணை

முன்னதாக, இந்த வழக்கின் குறுக்கு விசாரணை நடந்தபோது, காரல், டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

1996ஆம் ஆண்டில் ஆடம்பர அங்காடியில் உள்ள பெண்கள் உள்ளாடை பிரிவில் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சொல்லப்படும் கூற்றை நிரூபிக்க 11 சாட்சியங்களை காரலின் தரப்பு வழக்கறிஞர் ஆஜர்படுத்தினார்.

அந்த சாட்சியங்களில் இடம்பெற்றிருந்த இரண்டு பெண்கள், டிரம்ப் பல பத்தாண்டுகளுக்கு முன்னால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

பெண் ஒருவர் நீதிபதிகளிடம் பேசும்போது, 1970களில் ஒரு விமான பயணத்தின்போது, டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார். மற்றொரு பெண், 2005இல் ஒரு நாளிதழுக்காக கட்டுரை எழுதி வந்த தனக்கு ஒரு பேட்டியின்போது டிரம்ப் முத்தம் கொடுத்ததாக கூறினார்.

நடந்த சம்பவம் குறித்து தமது நீண்ட கால நெருங்கிய தோழிகள் இருவரிடம் டிரம்ப் பற்றி முறையிட்டதாக காரலின் நெருங்கிய தோழிகள் தெரிவித்தனர்.

வழக்கு தொடுத்த பெண் பத்திரிகையாளரின் வழக்கறிஞர்களில் ஒருவரான ராபெர்டா கப்லான், "இந்த வழக்கில் வெற்றி பெற்றது, எலிசபெத் ஜீன் காரலின் வெற்றி மட்டுமல்ல. அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்பதோடு, இது போன்ற குற்றச்சாட்டுக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான வெற்றி," என்று கூறினார்.

விறுவிறுப்பான இரண்டு வார விசாரணை

இந்த விசாரணையின் போது டிரம்ப் மற்றும் காரலின் வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன.

காரலின் வழக்கறிஞர்கள் 11 சாட்சியங்கள் மூலம் விசாரணை செய்து 1995 அல்லது 96-ம் ஆண்டு டிரம்ப் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த புகாரை நிரூபிக்க முயன்றனர்.

இந்த சாட்சிகளில், டிரம்ப் மீது ஏற்கெனவே பாலியல் புகார் தெரிவித்து வரும் இரண்டு பெண்களும் அடங்கியிருந்தனர். 1970களில் ஒரு விமானப் பயணத்தின் போது டிரம்ப் தன் மீது பாலியல் உணர்வுடன் அடிக்கடி கைகளால் தடவியதாக ஒரு பெண் இந்த விசாரணையின் போது தெரிவித்தார்.

இன்னொரு பெண், 2005-ம் ஆண்டு ஒரு செய்தி ஏட்டில் கட்டுரை வெளியிடுவதற்காக அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது வலுக்கட்டாயமாக தன் கன்னத்தில் முத்தமிட்டதாகத் தெரிவித்தார்.

கட்டுரையாளர் எலிசபெத் ஜீன் காரல், டொனால்ட் டிரம்ப் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று அந்த சம்பவத்துக்கு பின்னர் தங்களிடம் தெரிவித்ததாக காரலின் இரண்டு நீண்ட கால தோழிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இதற்கிடையே, காரலிடம் டிரம்ப் எப்படி நடந்துகொண்டார் என்பதை அப்படியே அவர் நீதிபதிகளிடம் விளக்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருவதாகவும், அந்த உணர்வு தம்மை எப்போதும் வருத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

"டொனால்ட் டிரம்ப் எனது சம்மதம் இன்றி வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு வைத்துக் கொண்டதால் தான் நான் இங்கே நிற்கிறேன். இது குறித்து நான் எழுதிய போது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என அவர் பொய் பேசினார்," என நீதிபதிகளிடம் காரல் தெரிவித்தார்.

ஆனால் டிரம்பின் வழக்கறிஞர்கள் எந்த சாட்சியையும் அழைக்கவில்லை. நீதிமன்றத்துக்கே டிரம்ப் வராத நிலையில், அவர் பதிவு செய்து, வழக்கறிஞர்களிடம் அளித்த வீடியோ காட்சிகள் நீதிபதிகளுக்கு காண்பிக்கப்பட்டன. அதில் டிரம்ப், தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

"அது ஒரு அபத்தமான மற்றும் அருவருப்பான கட்டுக் கதை," என அதில் தெரிவித்துள்ள டிரம்ப், "அது ஒரு செயற்கை புனைவு," என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் வாதத்துக்கு எதிர்ப்பு

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்புக்கு எதிரான இந்த வழக்கில், அவர் தனது சமூகவலைதளத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காரலின் குற்றச்சாட்டுக்கள் என்பவை ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான தகவல் என்றும், காரல் பொய் பேசியதைத் தவிர வேறு எதையும் பேசவில்லை என்று பொருள்படும்படி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது குறித்தும் காரலின் வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

மேலும், 2005ஆம் ஆண்டில் தாம் பேசியதாக 2016இல் வெளியான ஒரு ஒலிப்பதிவில் டிரம்ப் பேசியிருந்த விஷயங்களை அவரே பொய் என்று நிரூபித்துள்ள நிலையில், அது குறித்தும் காரலின் வழக்கறிஞர்கள் சில விவரங்களை நீதிமன்றத்தின் முன் வைத்தனர்.

அந்த ஒலிப்பதிவில், திரை நட்சத்திரங்கள் பெண்களிடம் எவ்வளவு அந்தரங்கமாக நடந்து கொண்டாலும் அதை அவர்கள் அனுமதிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதே தவறைத் தான் காரலிடம் டொனால்ட் டிரம்ப் செய்துள்ளார் என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட டிரம்பின் வீடியோ பதிவில், தமது முன்னாள் மனைவி மர்லா மேபில்சைப் போலவே காரல் இருந்ததாக அவர் தெரிவித்த தகவலை வைத்து வாதிட்ட காரலின் வழக்கறிஞர்கள், ஒரு முறை காரல் எனக்குப் பிடித்தமானவர் அல்ல என டிரம்ப் பேசியது, இதன் மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

இதற்கிடையே, காரலின் குற்றச்சாட்டு ஒரு கட்டுக்கதை என வாதிட்ட டிரம்பின் வழக்கறிஞர் டகோபினா, காரல் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கூடுதல் விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

காரலிடம் விசாரணை நடத்திய அவர், சம்பவம் நடந்த தேதியை அவர் சரியாக நினைவுபடுத்தாத நிலையில், அப்போது டிரம்ப் என்ன செய்துகொண்டிருந்தார் என நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

"தேதி, மாதம், வருடம் என எதுவும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை நீங்கள் எழுப்ப முடியாது, இந்த விவரங்கள் தெரியாமல் சாட்சிகளையும் அழைக்க முடியாது," என டிரம்பின் வழக்கறிஞர் வாதிட்டார்.

"உண்மைகளை புறந்தள்ளிவிட்டு டிரம்ப்பை வெறுக்கச்செய்ய வேண்டும் என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பவம் நடந்த உடனே அது குறித்து ஏன் காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், டிரம்பிடம் இருந்து தப்பும் நோக்கில் அக்கம்பக்கத்தினரின் உதவியைக் கூட நாடாமல் காரல் ஓடி விட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

பாலியல் தொல்லையில் எப்போது பாதிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்து புகார் அளிக்கலாம் என நியூயார்க்கில் 2022ஆம் ஆண்டு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பெண் கட்டுரையாளரான எலிசபெத் ஜீன் காரல் இந்த வழக்கை தொடுக்க முடிந்தது.

பாலியல் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், காலம் கடந்த நிலையிலும் அது குறித்த புகார்களை அளிக்க அந்த சட்டம் வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தது.

டிரம்பின் எதிர்கால அரசியலில் ஏற்படும் பாதிப்பு

அமெரிக்க அதிபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் இருக்கும் டிரம்ப்புக்கு இந்த தீர்ப்பு நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

டிரம்ப்புக்கு எதிரான இந்தத் தீர்ப்பு குடியரசு கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் அடிப்படை ஆதரவை அது எந்த வகையிலும் பாதிக்காது. இருப்பினும் குடியரசு கட்சியில் இருக்கும் அவரது போட்டியாளர்கள், இந்த தீர்ப்பை அவருக்கு எதிராக வலுவாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன.

"பல்வேறு விஷயங்கள் ஒன்றாக இணைந்து டிரம்புக்கு எதிராக ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது," என்கிறார் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ஜான் துனே.

"அதிபர் தேர்தலின் போது யாரை தேர்வு செய்யவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்."

"டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என நான் நம்பவில்லை, அடிப்படை ஆதரவை மட்டும் நம்பி ஒரு தேர்தலில் ஒருவர் வெற்றிபெறும் வாய்ப்பில்லை," என்கிறார் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டர் ஜான் கார்னின்.

தற்போதைய தீர்ப்பின் அடிப்படையில் அல்லது மற்ற விசாரணைகளில் வரவிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் டிரம்ப் எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என்பதை விட, அவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதியாகப் பயன்படுத்துவார்கள் என்றே நம்பப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cv2440dp60ko

இது தான் ட்றம்ப். தீவிர வலதுசாரித்தனத்துக்குள் தங்கள் அனைத்து கேவலமான குணயியல்புகளையும் புதைத்து வைத்து அதை ஒரு அரசியல் கொள்கையாக மக்கள் முன் வைக்கும் கபட தாரி. இத்தனை கேவலமான வேலைகளையும் செய்து கொண்டு, அமெரிக்காவின் பிரச்சனைகளுக்கு எல்லாம் வெள்ளையினம் தவிர்ந்த ஏனைய இனத்து குடியேறிகள் தான் காரணம் என்று கூசாமல் மக்கள் முன் பொய்யுரைப்பவர்.

இந்த ட்றம்ப் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் புட்டின் அரசின் புலநாய்வுப் பிரிவு தீயாய் வேலை செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பெண் யாரென்றே தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.😄😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அந்தப்பெண் யாரென்றே தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.😄😁

சீமானிடம்… விஜயலட்சுமியை அனுப்பின மாதிரி,
றம்பிடம்…  காசு  பறிப்பதற்காக, எலிசபெத் ஜீன் கரோலை…
பைடன் செற் பண்ணி அனுப்பியிருக்கலாம். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு பொய்யர்

23 minutes ago, nunavilan said:

அந்தப்பெண் யாரென்றே தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.😄😁

யாரென்றே தெரியாது என்றும் தான் ஒரு போதும் அவரைப் பார்க்கவில்லை என்றும் மறுத்தவர் தான்

Quote

நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட டிரம்பின் வீடியோ பதிவில், தமது முன்னாள் மனைவி மர்லா மேபில்சைப் போலவே காரல் இருந்ததாக அவர் தெரிவித்த தகவலை வைத்து வாதிட்ட காரலின் வழக்கறிஞர்கள், ஒரு முறை காரல் எனக்குப் பிடித்தமானவர் அல்ல என டிரம்ப் பேசியது, இதன் மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

என்று கூறியுள்ளார்.

9 minutes ago, nunavilan said:

மற்றுமொரு பொய்யர்

இவர் பொய்யர். ஆனால் பாலியல் வல்லுறவில்   வன்முறையில் ஈடுபடவில்லை. Mutual understand டில் நடந்த உறவு அது.  அதன் பின் மோனிக்கா அதை வெளியே சொன்ன பின்னும், மோனிக்காவின் பற்றி அவதூறாக கிளின்டன் கதைத்ததாக வழக்கு இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன சொல்ல வாறியள்? டொனால்ட் ரம்ப் அமெரிக்காவுக்கு நல்லவரா? கெட்டவரா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இவர் பொய்யர். ஆனால் பாலியல் வல்லுறவில்   வன்முறையில் ஈடுபடவில்லை. Mutual understand டில் நடந்த உறவு அது.  அதன் பின் மோனிக்கா அதை வெளியே சொன்ன பின்னும், மோனிக்காவின் பற்றி அவதூறாக கிளின்டன் கதைத்ததாக வழக்கு இல்லை

அதனால் கிளின்டன் நல்லவர், ட்றம் கெட்டவர். 

🤣

1 hour ago, குமாரசாமி said:

இப்ப என்ன சொல்ல வாறியள்? டொனால்ட் ரம்ப் அமெரிக்காவுக்கு நல்லவரா? கெட்டவரா? :cool:

இப்ப ME TOO இயக்கத்தைக் காணவில்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இது தான் ட்றம்ப். தீவிர வலதுசாரித்தனத்துக்குள் தங்கள் அனைத்து கேவலமான குணயியல்புகளையும் புதைத்து வைத்து அதை ஒரு அரசியல் கொள்கையாக மக்கள் முன் வைக்கும் கபட தாரி. இத்தனை கேவலமான வேலைகளையும் செய்து கொண்டு, அமெரிக்காவின் பிரச்சனைகளுக்கு எல்லாம் வெள்ளையினம் தவிர்ந்த ஏனைய இனத்து குடியேறிகள் தான் காரணம் என்று கூசாமல் மக்கள் முன் பொய்யுரைப்பவர்.

இந்த ட்றம்ப் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் புட்டின் அரசின் புலநாய்வுப் பிரிவு தீயாய் வேலை செய்தது.

அப்போ 

இனி உலகம் அமைதியாக தூங்க வழியே இல்லையா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

யாரென்றே தெரியாது என்றும் தான் ஒரு போதும் அவரைப் பார்க்கவில்லை என்றும் மறுத்தவர் தான்

என்று கூறியுள்ளார்.

இவர் பொய்யர். ஆனால் பாலியல் வல்லுறவில்   வன்முறையில் ஈடுபடவில்லை. Mutual understand டில் நடந்த உறவு அது.  அதன் பின் மோனிக்கா அதை வெளியே சொன்ன பின்னும், மோனிக்காவின் பற்றி அவதூறாக கிளின்டன் கதைத்ததாக வழக்கு இல்லை

பொய்யர் என்று தான் கூறி இருக்கிறேன்.

1 hour ago, Kapithan said:

அதனால் கிளின்டன் நல்லவர், ட்றம் கெட்டவர். 

🤣

🤣

ட்றம்ப் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து தீவிர வலதுசாரிகளும் கெட்டவர்கள் மட்டுமல்ல, மனித குலத்தை ஆபத்தான இடத்திற்கு கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்தான பேர்வழிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

ட்றம்ப் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து தீவிர வலதுசாரிகளும் கெட்டவர்கள் மட்டுமல்ல, மனித குலத்தை ஆபத்தான இடத்திற்கு கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்தான பேர்வழிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நியூ ஹாம்ஷயர் மாநிலம் தனது சிவப்புக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் primary வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. அதையொட்டி நேற்றிரவு சி.என்.என் இல் ட்ரம்ப் கேள்வி town hall  நடந்தது. அமெரிக்காவிற்கு இருண்ட காலம் திரும்பப் போகிறதோ என்ற அச்சத்தை ஊட்டிய ட்ரம்பின் பதில்கள்.

ட்ரம்ப் மாறவேயில்லை. ஒரு கட்டத்தில், இந்த வழக்கில் நீதியான வழியில் நஷ்ட ஈடு வென்ற பெண்ணைக் கேவலமாகத் திட்டுகிறார், பார்வையாளர்கள் (பெரும்பாலும் சிவப்புக் கட்சி வாக்காளர்கள்) மத்தியிலிருந்து கரகோஷமும் சிரிப்பும் எழுகிறது. இது ட்ரம்பை விட ஆபத்தான ஒரு மக்கள் கூட்டம் அமெரிக்காவில் வேரூன்றி, வளர்ந்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டிய ஒரு நிகழ்வு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, Justin said:

நியூ ஹாம்ஷயர் மாநிலம் தனது சிவப்புக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் primary வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. அதையொட்டி நேற்றிரவு சி.என்.என் இல் ட்ரம்ப் கேள்வி town hall  நடந்தது. அமெரிக்காவிற்கு இருண்ட காலம் திரும்பப் போகிறதோ என்ற அச்சத்தை ஊட்டிய ட்ரம்பின் பதில்கள்.

உலகில் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டால் அமெரிக்காவிற்கு இருண்ட காலம் தானே.:rolling_on_the_floor_laughing:

ரம்ப் காலத்தில் பெரிதாக இராணுவ சண்டைகளும் இல்லை. சண்டைகாரன் செலென்ஸ்கி போய் உதவி கேட்டபோதும் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என துரத்தி விட்டவர்.:face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

உலகில் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டால் அமெரிக்காவிற்கு இருண்ட காலம் தானே.:rolling_on_the_floor_laughing:

ரம்ப் காலத்தில் பெரிதாக இராணுவ சண்டைகளும் இல்லை. சண்டைகாரன் செலென்ஸ்கி போய் உதவி கேட்டபோதும் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என துரத்தி விட்டவர்.:face_savoring_food:

வேறு யாருக்காவது சொன்னாலும் பரவாயில்லை அண்ணா

உந்தாளின் பொழுதுபோக்கே சண்டை தானே?🤣 WWF

25 minutes ago, குமாரசாமி said:

ரம்ப் காலத்தில் பெரிதாக இராணுவ சண்டைகளும் இல்லை. சண்டைகாரன் செலென்ஸ்கி போய் உதவி கேட்டபோதும் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என துரத்தி விட்டவர்.:face_savoring_food:

அப்படியா?

ஆனால் ட்றம்ப் பைடனை உளவு பார்க்க உதவுமாறு செலன்ஸ்கியை கேட்க, அவர் (செலன்ஸ்கி) மறுத்து விட்டதால், உறுதியளித்து இருந்த இராணுவ உதவிகளை நிறுத்தி வைக்க சொல்லி ட்றம்ப் கேட்டதாக செய்திகள் வந்தனவே.

https://en.wikipedia.org/wiki/Trump–Ukraine_scandal

https://www.britannica.com/event/Ukraine-scandal

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

உலகில் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டால் அமெரிக்காவிற்கு இருண்ட காலம் தானே.:rolling_on_the_floor_laughing:

ரம்ப் காலத்தில் பெரிதாக இராணுவ சண்டைகளும் இல்லை. சண்டைகாரன் செலென்ஸ்கி போய் உதவி கேட்டபோதும் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என துரத்தி விட்டவர்.:face_savoring_food:

24 மணி நேரத்துக்குள்... ரஷ்ய . உக்ரைன் போரை தீர்த்து வைப்பேன் 💪
என்று சொன்ன ட்ரம்ப் தான், அமெரிக்காவுக்கு animiertes-usa-fahne-flagge-bild-0004.gif உகந்த ஜனாதிபதி 👍
மற்றதெல்லாம் வெத்து வேட்டுகள். 😂  🤣

எனது ஓட்டு... அண்ணன் ட்ரம்புக்கே... 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, விசுகு said:

வேறு யாருக்காவது சொன்னாலும் பரவாயில்லை அண்ணா

உந்தாளின் பொழுதுபோக்கே சண்டை தானே?🤣 WWF

24 minutes ago, நிழலி said:

அப்படியா?

ஆனால் ட்றம்ப் பைடனை உளவு பார்க்க உதவுமாறு செலன்ஸ்கியை கேட்க, அவர் (செலன்ஸ்கி) மறுத்து விட்டதால், உறுதியளித்து இருந்த இராணுவ உதவிகளை நிறுத்தி வைக்க சொல்லி ட்றம்ப் கேட்டதாக செய்திகள் வந்தனவே.

https://en.wikipedia.org/wiki/Trump–Ukraine_scandal

https://www.britannica.com/event/Ukraine-scandal

அமெரிக்க அரசியலுக்குள் நான் வரவில்லை. லிபியா,சிரியா அனர்த்தங்களிற்கு பின் இந்த உலகம் அமைதியாக இருந்ததா இல்லையா? இதற்கு பதிலை சொல்லுங்கள்.
வட கொரிய குள்ளன் வெடி கூட கொளுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க அரசியலுக்குள் நான் வரவில்லை. லிபியா,சிரியா அனர்த்தங்களிற்கு பின் இந்த உலகம் அமைதியாக இருந்ததா இல்லையா? இதற்கு பதிலை சொல்லுங்கள்.
வட கொரிய குள்ளன் வெடி கூட கொளுத்தவில்லை.

உந்தாளுக்கு டுவிட்டரோட கூட சண்டை பிடிக்க முடியவில்லையே அண்ணை.

அதிலேயே நேரம் போச்சு 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, விசுகு said:

உந்தாளுக்கு டுவிட்டரோட கூட சண்டை பிடிக்க முடியவில்லையே அண்ணை.

அதிலேயே நேரம் போச்சு 😀

நான் கேட்ட கேள்விக்கு மழுப்பல் பதில்கள் தேவையில்லை.
ஆம் அல்லது இல்லை எனவும் பதில் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நான் கேட்ட கேள்விக்கு மழுப்பல் பதில்கள் தேவையில்லை.
ஆம் அல்லது இல்லை எனவும் பதில் சொல்லலாம்.

32 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க அரசியலுக்குள் நான் வரவில்லை. லிபியா,சிரியா அனர்த்தங்களிற்கு பின் இந்த உலகம் அமைதியாக இருந்ததா இல்லையா? இதற்கு பதிலை சொல்லுங்கள்.
வட கொரிய குள்ளன் வெடி கூட கொளுத்தவில்லை.

இல்லை அண்ணா

இந்த லூசன் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்க அரசியலுக்குள் நான் வரவில்லை. லிபியா,சிரியா அனர்த்தங்களிற்கு பின் இந்த உலகம் அமைதியாக இருந்ததா இல்லையா? இதற்கு பதிலை சொல்லுங்கள்.
வட கொரிய குள்ளன் வெடி கூட கொளுத்தவில்லை.

அமெரிக்க அரசியலுக்குள் வராமலே எப்படி இவ்வளவு ஆழமாக "உலக சமாதானம்" பற்றிப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்?😂

மேலே நிழலி கூறியிருப்பது தான் நடந்தது: "பைடனுக்கெதிராக ஒரு விசாரணையை அறிவி, இல்லாவிட்டால் 400 மில்லியன் இராணுவ உதவி கிடையாது" என்று தான் வெல்வதற்காக அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை சட்டப்படியான தேவைக்குக் கொடுக்காமல் தடுத்தார் ட்ரம்ப். இது தான் முதலாவது குற்றவிசாரணைக்குக் காரணம்.

இதெல்லாம் உலக சமாதான ஆர்வத்தில் செய்த வேலையல்ல! மகிந்த, ஹிற்லர், புரின் பாணியில் செயல்பட்டு அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்ற செய்த வேலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

இல்லை அண்ணா

இந்த லூசன் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தது 

ரம்பின் நான்கு வருட ஆட்சியில் நாட்டுக்கு வருமானமும் திறைசேரியும் கூடியதாக கூறுகின்றார்களே?

அமெரிக்கா என்றாலே என்றுமே பதட்டம்தானே?

சென்ற தேர்தலில் ரம்பும் பைடனுக்கு சமமாக,ஏட்டிக்கு போட்டியாகத்தானே இருந்தார்? எனவே அமெரிக்க மக்கள் டொனாட் ரம்பையும் விரும்புகின்றார்கள் என்றுதானே அர்த்தம்!?!?!?!

அது சரி. டொனால்ட் ரம்பின் அறப் பழைய பாலியல் செயல்களை இதுவரை காலமும் இல்லாமல் இப்போது தூசு தட்டி குற்றங்களை சுமத்துவதன் மர்மம் என்னவோ?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Justin said:

பைடனுக்கெதிராக ஒரு விசாரணையை அறிவி,

ஏன் எதற்காக பைடன் மேல் ஒரு விசாரணையை செலென்ஸ்கி அறிவிக்க வேண்டும் என டொனால்ட் ரம்ப் கூறினார்? பைடன் செய்த குற்றம் அல்லது செயல் என்ன?

4 hours ago, Justin said:

இல்லாவிட்டால் 400 மில்லியன் இராணுவ உதவி கிடையாது"

அன்றே உக்ரேனுக்கு அமெரிக்கா இராணுவ உதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்போது உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சண்டைகளே நடக்கவில்லையே?

4 hours ago, Justin said:

இதெல்லாம் உலக சமாதான ஆர்வத்தில் செய்த வேலையல்ல! மகிந்த, ஹிற்லர், புரின் பாணியில் செயல்பட்டு அமெரிக்க ஆட்சியைக் கைப்பற்ற செய்த வேலை.

டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போதுதானே செலென்ஸ்கியை சந்தித்தார். இரண்டாவது தேர்தலில் நூலிழையில் தானே பைடன் வெற்றியீட்டினார். :rolling_on_the_floor_laughing:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.