Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டிருந்தன.

முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331984

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

இவர் ஊழல் விவகாரங்களில் கடுமையான நிலை எடுப்பவர் என்று அறிந்திருக்கிறேன்.
அங்கிருக்கும் சிலர் பாடு கொஞ்சம் பிரச்சனையாக இருக்கப்போகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, saravanar said:

இவர் ஊழல் விவகாரங்களில் கடுமையான நிலை எடுப்பவர் என்று அறிந்திருக்கிறேன்.
அங்கிருக்கும் சிலர் பாடு கொஞ்சம் பிரச்சனையாக இருக்கப்போகிறது 

கிழக்கு மாகாண  ஆளுநராக... நியமிக்கப்  செந்தில் தொண்டமானுக்கு,
முஸ்லீம் அரசியல்வாதிகள் குடைச்சல்  கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கிழக்கு மாகாண  ஆளுநராக... நியமிக்கப்  செந்தில் தொண்டமானுக்கு,
முஸ்லீம் அரசியல்வாதிகள் குடைச்சல்  கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். 

என்னத்தை குடையிறது?

கிஸ்புல்லா இருந்த போது, தமிழர்கள் எதிர்க்கவில்லையே!

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

என்னத்தை குடையிறது?

கிஸ்புல்லா இருந்த போது, தமிழர்கள் எதிர்க்கவில்லையே!

Napoleon solo GIF - Find on GIFER

தமிழனையும், சோனகனையும்.... ஒரே தராசில் வைத்து பார்க்க முடியுமா?
தமிழன் இளிச்சவாயன் என்றால்...  சோனகன் அப்பிடி இல்லையே..
பிரச்சினை  வர முதலே... குரல் கொடுத்துக் கொண்டு இருப்பான் சோனகன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கிழக்கு மாகாண  ஆளுநராக... நியமிக்கப்  செந்தில் தொண்டமானுக்கு,
முஸ்லீம் அரசியல்வாதிகள் குடைச்சல்  கொடுப்பார்கள் என நினைக்கின்றேன்

நிச்சயமாக.

தமிழரை பேச்சுவார்த்தை எண்டு கூப்பிடவே துள்ளுகிறவை சித்தர் விடமாட்டினம். 
ரணிலும் நரித்தனமாக தான் இதை செய்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழர் ஆளுனராக வருவது  நல்லது தானே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

கிழக்கில் தமிழர் ஆளுனராக வருவது  நல்லது தானே. 

நல்லதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த வயித்தெரிச்சல் பிடித்த, சோனகன் சும்மா இருக்க மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

பி.எஸ்.எம். சார்ள்ஸ், செந்தில் தொண்டமான், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆளுநர்களாக நியமனம்!.

image

டக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன  ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

346120877_284883043878161_86534407220860

பி.எஸ்.எம். சார்ள்ஸ், செந்தில் தொண்டமான், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆளுநர்களாக நியமனம்! | Virakesari.lk

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிழம்பு said:

செந்தில் தொண்டமான் ஆளுனர் பதவி ஏற்பு விழாவுக்காக…
புது கோட்டு, சூட்டு தைத்திருக்கிறார் போலுள்ளது.
முன்பை விட… இப்போ உடம்பு வைத்து, முகத்திலும் மாற்றம் தெரிகின்றது.
ரணிலுக்கு குடுத்த முட்டுக்கு… கை மேல் பலன் கிடைத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

செந்தில் தொண்டமான் ஆளுனர் பதவி ஏற்பு விழாவுக்காக…
புது கோட்டு, சூட்டு தைத்திருக்கிறார் போலுள்ளது.
முன்பை விட… இப்போ உடம்பு வைத்து, முகத்திலும் மாற்றம் தெரிகின்றது.
ரணிலுக்கு குடுத்த முட்டுக்கு… கை மேல் பலன் கிடைத்து விட்டது.

வட மேல் மாகாண கவனராக இருந்த கருணாகொட, தான் அப்பழுக்கில்லாத 45 வருட கடமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் என்று சொல்லி, மான நஷட வழக்கு போடுவதாக அமெரிக்க தூதருக்கு சவால்விட்டு இருப்பதால், ஜனாதிபதி ரணில், அவரை, அந்த மானஸ்தரை, காணமல் போன 11 பொடியளை கண்டுபிடிக்கும் வேலையினை  கொடுக்குமாறு சிபாரிசு செய்கிறோம்.  😲

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

வட மேல் மாகாண கவனராக இருந்த கருணாகொட, தான் அப்பழுக்கில்லாத 45 வருட கடமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் என்று சொல்லி, மான நஷட வழக்கு போடுவதாக அமெரிக்க தூதருக்கு சவால்விட்டு இருப்பதால், ஜனாதிபதி ரணில், அவரை, அந்த மானஸ்தரை, காணமல் போன 11 பொடியளை கண்டுபிடிக்கும் வேலையினை அவரிடம் கொடுக்குமாறு சிபாரிசு செய்கிறோம்.  😲

அவர் அமெரிக்க தூதுவர் மேல் வழக்கு போடுவதாக சொல்லி,
மூன்று கிழமைக்கு மேல் ஆகி விட்டது.
வழக்கு… என்று, சும்மா அமெரிக்கத் தூதுவரை வெருட்டிப் பார்த்திருக்கிறார். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

செந்தில் தொண்டமான் ஆளுனர் பதவி ஏற்பு விழாவுக்காக…
புது கோட்டு, சூட்டு தைத்திருக்கிறார் போலுள்ளது.
முன்பை விட… இப்போ உடம்பு வைத்து, முகத்திலும் மாற்றம் தெரிகின்றது.
ரணிலுக்கு குடுத்த முட்டுக்கு… கை மேல் பலன் கிடைத்து விட்டது.

ஆறுமுகம் தொண்டைமான் பேத்தண்ணீ சாமீ.

ஆனால் அவரது மகள்கள், மகன் எல்லோரும் நன்கு படித்தவர்கள். ஒரு மகள் டாக்டர். 

I may be a doctor fighting COVID-19 but now I am only a ...

image_eb42fe2077.jpg

image_9f67cd349c.jpg

Wedding of Dr. Nachiar Thondaman

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் - வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்

Published By: VISHNU

17 MAY, 2023 | 08:41 PM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநராக புதன்கிழமை (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்குவததாக உறுதியளித்துள்ளார்.

தாரளமான மனதுடைய ஜனாதிபதியின் கருத்துக்களை இட்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். 

வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளர்.

ஜனாதிபதியின் அழைப்பில் இப்பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்காக கொண்டு வடக்கு மக்கள் பிரதிநிதிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/155545

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆறுமுகம் தொண்டைமான் பேத்தண்ணீ சாமீ.

ஆனால் அவரது மகள்கள், மகன் எல்லோரும் நன்கு படித்தவர்கள். ஒரு மகள் டாக்டர். 

I may be a doctor fighting COVID-19 but now I am only a ...

image_eb42fe2077.jpg

image_9f67cd349c.jpg

Wedding of Dr. Nachiar Thondaman

ஆறுமுகம் தொண்டமானின் இறப்புக் கூட,
நிறை வெறியில் விழுந்து, தலையில் அடிபட்டு மரணம் என்று அப்போது பேசிக் கொண்டார்கள்.
பெரிய இடத்து சமாச்சாரம் என்ற படியால்… வேறு மாதிரி அமுக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நல்லதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த வயித்தெரிச்சல் பிடித்த, சோனகன் சும்மா இருக்க மாட்டான்.

குத்துவான் குடைவான் மட்டக்களப்பில கொஞ்சமா இறுக்கி வச்சி இருக்கிறம் அவ்வளவுதான் மற்றபபடி ,அம்பாறை,திருகோணமலை புகுந்த கொணடிருக்கான் சிங்களவர்கள் சொல்லிட்டும் நோட்டீஸ் அடிச்சும் செய்யுறான் இவர்கள் சத்தமே இல்லாமல் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பி.எஸ்.எம். சார்ள்ஸ், செந்தில் தொண்டமான், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆளுநர்களாக நியமனம்!.

image

டக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன  ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

346120877_284883043878161_86534407220860

பி.எஸ்.எம். சார்ள்ஸ், செந்தில் தொண்டமான், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆளுநர்களாக நியமனம்! | Virakesari.lk

.

செந்திலின்.  சேவைகள் சிறப்பாக இடம்பெற வாழ்த்துக்கள்.....கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள்   புதிய ஆளுநரை  மேள தளம் மாலை மரியாதையுடன் வரவேற்பார்கள்   ......

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கலாம், மலையகம் என்பதால் குடைச்சல் குறைவாகவும், எதிர்பார்ப்பு அதிகமாகவுமிருக்கும். தமிழனே தமிழனுக்கு நிஞாயம் செய்வதில்லை. செய்திருந்தால் நமது பூமி இப்படி சூறையாப்பட்டிருக்குமா? கிடைத்தவற்றை அவர்களுக்கே விட்டுக்கொடுத்துவிட்டு வாய் பாத்திருப்போமா? மக்கள் வாக்கு போட்டு கொடுத்த பதவியை விட்டுக்கொடுக்கும்போது, அந்த மக்களை ஒரு வார்த்தை கேட்டார்களா? செம்மறி ஆட்டு மந்தைபோல் நடத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, saravanar said:

இவர் ஊழல் விவகாரங்களில் கடுமையான நிலை எடுப்பவர் என்று அறிந்திருக்கிறேன்.
அங்கிருக்கும் சிலர் பாடு கொஞ்சம் பிரச்சனையாக இருக்கப்போகிறது 

அவர் அப்படி இருந்தாலும் , அவரது கணவர் அதில் கில்லாடி. வவுனியாவில் இருக்கும்போது தில்லுமுல்லுகள் செய்து பிடிபடடவர் அவரது கணவர். அவர் தலையிடாவிடடாள் பிரச்சினை இருக்காது.

12 hours ago, தமிழ் சிறி said:

நல்லதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த வயித்தெரிச்சல் பிடித்த, சோனகன் சும்மா இருக்க மாட்டான்.

ஒரு மாகாண சபைக்கு அவன்கடை ஆள் ஒருவர் இருக்கிற படியால் இப்போதைக்கு அடக்கித்தான் வாசிப்பார்கள். அவரை அகற்றினால்தான் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி குடைச்சல் கொடுப்பார்கள். இருந்தாலும் வயிற்றிச்சலுடன்தான் இப்போதும் இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்காவிடடாலும் தமிழனுக்கு கிடைக்கா கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஒரு கூடடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.