Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை சந்தித்தார் செந்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை சந்தித்தார் செந்தில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

image_ba130026cf.jpgimage_4904a2637c.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனை-சந்தித்தார்-செந்தில்/175-317966

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்திததார் கிழக்கு மாகாண ஆளுநர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்திததார் கிழக்கு மாகாண ஆளுநர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறிதத சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

இதன்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1332724

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் நியமனத்தின் பின்னால் இந்தியா உள்ளதாக தெரிகிறது.

சீன, இந்திய வல்லரசுப் போட்டியில், கிழக்கில் இருந்த கோத்தாவால் நியமிக்கப்பட்ட சிங்கள ஆளுனர் அம்மையார் 13 அமுலாக்கல் குறித்து பல சர்ச்சையான எதிர்கருத்துகளை கூறியதோடல்லாமல், சீனத் தூதரை சந்தித்ததுடன், கிழக்கு மாகாணத்தை, சீன மாகாணம் ஒன்றுடன் இணைத்து (Twined) பல அபிவிருத்தி திட்டங்களை செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையிலே, வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பிய இந்தியா, ரணில் மீது பல அழுத்தங்களை பிரயோகித்து இவரை ஆளுனராக்கியுள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் என்ன சம்பந்தம்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் என்ன சம்பந்தம்? :cool:

கந்து வட்டி வாக்கு சம்பந்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றைய நிலையில் திருகோணமலையில் வாழ்ந்து கொண்டிருப்பேனாகில்.    எனது வாக்கு நிச்சயம் சம்பந்தனுக்குத் தான் போடுவேன்....காரணம் எனது அரசியல் அறிவு  .......எனக்கு சம்பந்தனைப்பற்றி எவர் ஏது சொன்னாலும் ஏற்க்கும் மனநிலையில் இருந்திருக்க மாட்டேன்  ...இதேநிலையில் தான் அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....எனவேதான் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை....அவர்களுக்கு தேவை அரசியல் அறிவுட்டல்....நான் ஜேர்மனி வந்து தான்  சுயாட்சி பற்றி தெரிந்து கொண்டேன்   ....

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்திததார் கிழக்கு மாகாண ஆளுநர்!

மேலே உள்ள இணைப்பில் ஏன் மும்மூர்த்திகளையும் காட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நான் இன்றைய நிலையில் திருகோணமலையில் வாழ்ந்து கொண்டிருப்பேனாகில்.    எனது வாக்கு நிச்சயம் சம்பந்தனுக்குத் தான் போடுவேன்....காரணம் எனது அரசியல் அறிவு  .......எனக்கு சம்பந்தனைப்பற்றி எவர் ஏது சொன்னாலும் ஏற்க்கும் மனநிலையில் இருந்திருக்க மாட்டேன்  ...இதேநிலையில் தான் அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....எனவேதான் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை....அவர்களுக்கு தேவை அரசியல் அறிவுட்டல்....நான் ஜேர்மனி வந்து தான்  சுயாட்சி பற்றி தெரிந்து கொண்டேன்   ....

திருகோணமலை மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள எல்லா தமிழர்களும் , விசேடமாக வட கிழக்கு தமிழர்கள்  அதே மன நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மேலே உள்ள இணைப்பில் ஏன் மும்மூர்த்திகளையும் காட்டவில்லை.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லாமைக்கு காரணம் இதுதான்..! கூறினாா் மாவை.  “நக்கிற நாய்க்கி செக்கென்ன சிவலிங்கமென்ன..” | Jaffna Breaking News 24x7  இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு - pathivu.com

இலங்கை தமிழரசு கட்சி | தினகரன்

சம்பந்தன்,மாவை தேர்தலில் தோற்கடிக்கப்படுவர்:சுரேஸ் - pathivu.com

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக  அமைப்புகள் (கூர்மை - Koormai)

சுமந்திரன் நாடு திரும்பியதும் தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன்  தீர்மானம்! – Athavan News

சமஷ்டி கேட்டு வந்தவர் சம்பந்தன்! சும்மா உள்ளே வந்தவர் சுமந்திரன்!  பனங்காட்டான் - pathivu.com

நீங்கள்... இவர்களையா தேடுகிறீர்கள். 🤣 😜

இந்தாங்கோ... ஆசை தீர, பாருங்கோ.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

நான் இன்றைய நிலையில் திருகோணமலையில் வாழ்ந்து கொண்டிருப்பேனாகில்.    எனது வாக்கு நிச்சயம் சம்பந்தனுக்குத் தான் போடுவேன்....காரணம் எனது அரசியல் அறிவு  .......எனக்கு சம்பந்தனைப்பற்றி எவர் ஏது சொன்னாலும் ஏற்க்கும் மனநிலையில் இருந்திருக்க மாட்டேன்  ...இதேநிலையில் தான் அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....எனவேதான் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை....அவர்களுக்கு தேவை அரசியல் அறிவுட்டல்....நான் ஜேர்மனி வந்து தான்  சுயாட்சி பற்றி தெரிந்து கொண்டேன்   ....

அண்ணா,

சம்பந்தருக்கு எதிராக சரியான ஒருவர் வரும் வரை இந்த நிலமை தொடரும். ஏனெனில் அங்கு தமிழரின் வாக்கு பிரிந்தால் இலாபம் அடைவது சிங்களவரும் சோனகருமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லாமைக்கு காரணம் இதுதான்..! கூறினாா் மாவை.  “நக்கிற நாய்க்கி செக்கென்ன சிவலிங்கமென்ன..” | Jaffna Breaking News 24x7  இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு - pathivu.com

இலங்கை தமிழரசு கட்சி | தினகரன்

சம்பந்தன்,மாவை தேர்தலில் தோற்கடிக்கப்படுவர்:சுரேஸ் - pathivu.com

தமிழரசுக் கட்சியை பகிரங்கமாகக் கண்டிக்கத் தயங்கிய மாணவர்கள், சிவில் சமூக  அமைப்புகள் (கூர்மை - Koormai)

சுமந்திரன் நாடு திரும்பியதும் தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன்  தீர்மானம்! – Athavan News

சமஷ்டி கேட்டு வந்தவர் சம்பந்தன்! சும்மா உள்ளே வந்தவர் சுமந்திரன்!  பனங்காட்டான் - pathivu.com

நீங்கள்... இவர்களையா தேடுகிறீர்கள். 🤣 😜

இந்தாங்கோ... ஆசை தீர, பாருங்கோ.... 😂

இந்த மூவரும் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்கள். ..மூன்சையை நீட்டி கொண்டும்   நக்கல் சிரிப்புடன்...கவலையாய்  .....இருக்கிறார்கள் நாங்கள் ஓற்றுமை என்றும்...மற்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைய வேண்டும்.....சிங்களவரும் எம்முடன். ஒற்றுமையாக தீர்வு கிடைக்க. உழைக்க வேண்டும்   எனவும்   கோரிக்கை விடுவார்கள்    சம்பந்தனை நேருக்கு. நேரக.  உங்களுக்கு வயது போய்விட்டது    வீட்டில் இருங்கள்’  இதுவரை தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த சேவைகளுக்கு.  நன்றிகள்   என்று செல்ல பயந்தவர்கள்   ...இதற்கெல்லாம் துணிவு இல்லையென்றால் சிங்களவனுடன். எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அண்ணா,

சம்பந்தருக்கு எதிராக சரியான ஒருவர் வரும் வரை இந்த நிலமை தொடரும். ஏனெனில் அங்கு தமிழரின் வாக்கு பிரிந்தால் இலாபம் அடைவது சிங்களவரும் சோனகருமே. 

மீரா  சம்பந்தனுக்கும்.  ..கூட்டமைப்பின் எந்த வேட்பாளர்களுக்கும்.      தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள்.   எந்த பெரிய தகுதி உடயவர்களும்   கூட்டமைப்பின் அடிமட்ட.   கீழ் நிலையில் உள்ள வேட்பாளர்களையும்.  வெற்றி பெற முடியாது   ...தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால்.    தோற்கடிப்பார்கள்.   

நான்  றோட்டு போட்டேன்..பாடசாலைகள். கட்டினேன்    ஆஸ்பத்திரி.  கட்டினோம்” வேலைவாய்ப்புகள் பெற்று தந்தோம்.    ........இப்படி சொல்லி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு அபாரதம் விதிக்க வேண்டும்   ..சிறை தண்டனை விதிக்ககூடிய. சட்டங்கள்.  இயற்றப்படவேண்டும்.   தமிழ் மக்கள் உணர்த்து கொள்ளவேண்டும்   இது எங்கள் பணத்தில் தான் செய்யப்படுகின்றது  ..வரி பணத்தில்   அனேகமான. தமிழ் மக்களுக்கு ஏதோ சம்பந்தன். போன்றோர் வெட்டி விழுத்துகிறார்கள்  என்ற நினைப்பு.   எண்ணம்   இப்படியான மனநிலை மாறினால் ஓழிய   சம்பந்தன்.  போன்றோரை. தோற்கடிப்பது. கடினம் 

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் ஒன்றும் செய்யாவிட்டாலும் தமிழ் தேசியம் என்கிற பெயரை மட்டும்  வைத்திருந்தாலே வெல்வோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அதன் நிழலில் இருந்துகொண்டு அதில் வேறொருவரையும் அண்டவிடாமல் தடுத்துக்கொண்டும் விரட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அந்தக்கனவு மெல்ல கலையத்தொடங்குகிறது அதனால் பாதிக்கப்படப்போவது அவர்களல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

செந்திலை காரசாரமாக சுனந்திரன் திட்டிய காணொளியை முகப்புத்தகத்தில் பார்த்தேன். கிடைத்தால் இணைத்து  விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் அமெரிக்க, இந்திய தூதர்களை சந்தித்தார்.

இந்தியா, கிழக்குக்கும் விமான சேவைகளை ஆரம்பிக்கும் படியும், ரயில்பாதைகளை புனரமைத்து தரும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் - சம்பந்தன் சந்திப்பு ; சமகால அரசியல் நிலைவரம் குறித்து அவதானம்

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (26)  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போதே நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

சஜித் - சம்பந்தன் சந்திப்பு ; சமகால அரசியல் நிலைவரம் குறித்து அவதானம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு ராஜதந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்திய மாதிரி செய்தி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.