Jump to content

இலங்கையில் ஒளிபரப்பாகும் தமிழ்த் திரைப்படங்களே வன்முறைகளைத் தூண்டுகின்றன : பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் டயனா கமகே தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

FB_IMG_1685345130083.jpg

 

(நிர்ஷன் இராமானுஜம்)
 
தமிழ்த் திரைப்படங்களே சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளைத் தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜன ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழுக் கூட்டத்தின்போது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்த கருத்துக்கு நேருக்கு நேர் கடும் எதிர்ப்பை வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி., அந்தக் கூற்றை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
 
 
 
இந்தக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ் சாலைகள் மற்றும் வெகுசனஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.
 
 
 
பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 
 
 
ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
 
 
 
அங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வன்முறைகளைத் தூண்டுவதாக அமைவதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்துக் காயங்கள், வெளிப்படையாக வழங்கப்படும் தண்டனைகள் ஆகியன சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனைகளைத் தூண்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
 
 
இதன்போது குறுக்கிட்ட மனோ கணேசன் எம்.பி., டயனாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் திரைப்படங்கள் என்ற பொதுவான சொல்லாடல் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தமிழ்த் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
 
 
 
இதனால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
 
 
வன்முறைக் காட்சிகள் அனைத்து மொழித் திரைப்படங்களிலும் இடம்பெறுகின்றன. தமிழ்த் திரைப்படங்களாலேயே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார். கூட்டத்துக்கு தலைமைதாங்கிய அமைச்சர் பந்துல குணவர்தன இருவரையும் சமாதானம் செய்வதற்கு முயற்சித்தார்.
 
 
 
அதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக்கொள்வோம். தமிழ் மொழித் திரைப்படங்கள் மாத்திரமல்ல இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என டயனா கமகே தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற அம்மணி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சாவோடை மனுசி மனோவையும் விடுறேல்லை எண்டு நிக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரில் செய்பவர்கள் திரையை பார்த்து ஊளை இடுகினம்..

Posted

சிங்கள இளைஞர்கள் தமிழ் படத்தை பார்த்து தான் வன்முறையில் ஈடுபடுகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனவாத பேச்சுக்களும் இனக்கலவரங்களும் எந்த படத்தை பார்த்து வந்ததாம்? :worried_face:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் கஞ்சா வளர்ப்பதட்கான திடத்தையும் , இரவு விடுதிகளை திறப்பதட்கான திடடதயும் கொண்டு வந்தவர் . இரண்டுமே நிறைவேற்றிவிடடார். இருந்தாலும் அவருக்கு பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் பிரச்சினை இருக்கின்றது. அவர் வெளி நாட்டு பிரஜை என்பதால் அங்கம் வகிக்க முடியாது. இவை எல்லாம் திசைதிருப்ப இப்படியாக அதிரடி கருத்துக்கள், தீர்மானங்களை காலத்துக்கு காலம் கொண்டு வருவார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அடிதடி , கொள்ளை கொலை சம்பவங்கள் கொஞ்சம் ஓவர்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தம்மா புதுசு புதுசாய் ஒவ்வொண்டை கண்டுபிடிக்கும், பிறகு நடைமுறைக்கு கொண்டுவரவேண்டுமென்று அடம்பிடிக்கும். இது வெளிநாட்டுப்பிரஜை பாராளுமன்றத்திலிருந்து குசும்பு பண்ணுது. உலகெங்கும் வெட்டுக்குத்து  நடைபெறுகுது அதுக்கும் தமிழ் திரைப்படங்கள்தான் காரணமோ? தமிழர்மேல் வெறுப்பென்றால் பொறுப்பில்லாமல் குற்றம் சாட்டுவதா? அதை கண்டிக்க வேண்டியவர் சமாதானம் செய்து வைத்தாராம். இதுவே ஒரு தமிழ் அரசியல்வாதி சிங்கள  திரைப்படத்திற்கு எதிராக சொல்லியிருந்தால் இவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? அப்படியென்றால் சிங்களவர் தமிழ் திரைப்படங்களை பார்க்கிறார்களா? அது எப்படி கொலை அடிதடி செய்வதற்காகவா? அப்போ பிக்குகளும் அதை பாத்துதான் கள்ளப்போதனை செய்கிறார்களா? கஞ்சா கடத்துகிறார்களா? தமிழர் படம் பாத்து சமூக சீர்கேடுகளில் ஈடுபடவில்லை, சிங்களவர்தான் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களிற்தான் ஏதோ தவறிருக்கிறது. அரசு  காவற்துறையை இராணுவத்தை ஏவி என்ன செய்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம இன்னும் இந்த படங்களை பாரத்ததில்லையே



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
    • போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.