Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்கி

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள பல இந்து அமைப்புகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்திய இந்து அமைப்புகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தாலும் இறுதித் திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியதன் அவசியம் குறித்து முன்னதாக அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1333427

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம்

கோரி..... போர் தொடுக்கவோ? சச்சியரின் அறிக்கைகளில் இருந்து விளங்கவில்லை... இந்திய இந்து மத அமைப்புகளின் கொள்கை என்னவென்று? கோவில்கள் இடித்து விகாரைகள் எழும்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்? வேண்டுமென்றால் ஒரு கண்டன அறிக்கை விடுவார்கள் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

கோரி..... போர் தொடுக்கவோ? சச்சியரின் அறிக்கைகளில் இருந்து விளங்கவில்லை... இந்திய இந்து மத அமைப்புகளின் கொள்கை என்னவென்று? கோவில்கள் இடித்து விகாரைகள் எழும்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்? வேண்டுமென்றால் ஒரு கண்டன அறிக்கை விடுவார்கள் அவ்வளவே.

நோ மோ காமன்ஸ் 😁

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் ஒரே இந்துமத நாடு நேப்பாள்காரனிடம் கதைத்தாலாவது ஏதாவது செய்வான்..😢

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்கள் சிங்கள தேசத்தை  ஆக்கிரமித்துவிடுவார்களோ என்ற அந்தக்கால அச்சம்தான் இன சிக்கல்களுக்கான ஆரம்பபுள்ளியென்று கூறுகிறார்கள்.

இன்று எந்தவிதமான பலமும் எம் பக்கம் இல்லாத காலகட்டத்தில் உசுப்பேத்தும் அந்தக்கால பேச்சை இவர் ஆரம்பிக்கிறார்.

எந்த காலத்திலும் இந்தியாவாலோ அல்லது இந்திய அமைப்புகளாலோ  நமக்கு எதுவித நன்மையும் கிடைக்கபோவதில்லை என்பது கருங்கல்லில் செதுக்கிய முடிவு.

மத ஆக்கிரமிப்பு விகாரை மயமாக்குதலை கண்டித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா பண்ணலாமே? அது உலகத்தின் கவனத்தை ஈர்க்க  பெரிய உதவியாய் இருக்கும்.

பாராளுமன்ற அங்கத்தவர் பதவியை ராஜினாமா செய்தால் எமது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட முடியாது போய்விடும் என்று சப்பை கட்டு கட்டுவீர்கள்.

பதவியை வைத்துக்கொண்டு இப்போ மட்டும் என்ன பண்ணுகிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரை தலைநகராக கொண்டிருந்த யாழ்ப்பாண ராசதானி, சிங்களத்துக்கு கடுக்காய் கொடுத்ததன் முக்கிய காரணமே, தமிழகம். ஏதாவது பிரச்சனை என்றால், மூவேந்தர்களில் யாராவது ஒருவர் உதவிக்கு வந்து கொண்டிருந்தார்கள். ராசராச சோழன், பொலன்னறுவையையே பிடித்து, சிங்களவர்களை தென் பகுதிக்கு விரட்டினான்.

1520 களில் தமிழகம் தெலுங்கர்களின் விஜய நகர சாம்ராஜ்யத்திடம் வீழ, சிங்களமும் மண உறவுகளை அதனுடன் வைத்துக்கொள்ள, போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண ராசதானி வீழ்ந்தபோது, தமிழகத்தினை ஆண்ட தெலுங்கு விஜய நகர ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள வில்லை.

இந்த நிலையே, கருணாநிதி காலத்திலும் நடந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஆகவே, தமிழகத்தில், தமிழர் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே ஈழ தமிழர்களுக்கு பாதுகாப்பு என, தூரப்பார்வையில் உணர்ந்து கொண்ட பத்திரிகையளர்கள் பலர். அவர்களில் ஒருவர் இப்போது தமிழகத்தில் வாழும் திருநாவுக்கரசு. இவர், ஈழத்தின் சாவி, தமிழகத்தில் என்றார், வன்னியில் இருந்து ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி நிதர்சனத்தில். வீரா என்பவரே இவரை பேட்டி கண்டவர்.

விக்கி சொல்வது, மத சார்பு கருத்து. அது வேலை செய்யுமோ தெரியவில்லை. ஏனெனில், இந்தியாவில் பௌத்தம் கொஞ்ச நஞ்சமாக தப்பித் பிழைப்பதே, புத்தர், விஸ்ணுவின் ஒரு அவதாரம் என்று சொல்வதன் மூலமாக.

தென் இந்தியாவில், பௌத்தம் துடைத்தெறியப்பட்டது. அங்கிருந்து தப்பி வந்த பிக்குகளே இலங்கையில் பௌத்தம் அழியாமல் பார்த்துக் கொண்டவர்கள். ஆகவே அவர்கள், இந்தியா குறித்து கவலை படுவதில் நியாயம் உண்டு.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரின் இயலாத்தன்மை புரிகிறது. நாங்கள் எப்படி த. தே. கூட்டமைப்பை கண்ணை மூடிக்கொண்டு தெரிகிறோமோ அவ்வாறே அவர்களும் இந்தியாவை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் போலும். எல்லாம் பொய் வாக்குறுதியும் வேறு வழி இல்லாமையும் எம்மை கவிட்டு விடுகிறது.

8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உலகின் ஒரே இந்துமத நாடு நேப்பாள்காரனிடம் கதைத்தாலாவது ஏதாவது செய்வான்..😢

இதைத்தான் நானும் சொல்கிறேன். சும்மா இந்தியாவை சுற்றுவதையும் இலங்கையை கெஞ்சுவதையும் விடுத்து, சும்மா மனதுக்கு ஆறுதலாய்  சுற்றுலா போய் உறவை வளர்த்து மெல்ல கதையை சொல்லி ஆதரவு தேடலாம். சிங்களம் ஒரு சந்திப்பு, என்று போய் பலரிடம் கதைத்து உறவை வளர்த்து கடனும் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறது, பயங்கரவாதம் என்கிற இல்லாத கதையை பரப்பியதும் அவ்வாறே. அதை ஏன் நாம் செய்யக்கூடாது? இருந்தாலும் சகுனி சும்மா இராது, அங்கேயும் போய் கன்னம் வைக்கும். ஆனால் முயற்சிப்பதில் தப்பில்லை. இல்லையென்றால் இந்தியாவுக்கு எதிரிகளை உருவாக்கி உறக்கம் இல்லாமல் அலைய விட வேணும். இந்தியா பக்கம் கொஞ்சநாளைக்கு திரும்பிப்பாராமல் இருப்பது, அவர்களே பேச்சுக்கு கூப்பிட்டாலும், நாங்கள் எங்கள் பிரச்சனையை பாத்துக்கொள்கிறோம், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பதின்மூன்றாம் சீர்த்திருத்த சட்டத்தை நிறைவேற்றுவிக்க உங்களால் முடியவில்லை, அதை நீங்கள் வாபஸ் பெறவுமில்லை, சும்மா காலத்தை இழுத்தடிக்கிறீர்கள், ஆகவே நம் பிரச்சனையை நாமே பாத்துக்கொள்கிறோம் என்று துணிந்து சொல்லிப்பாக்கட்டும்! முடியமா இவர்களால்? இந்தியா தன் இயலாமையை ஏற்றுக்கொள்ளவேண்டும், அல்லது தமிழரை பகடைக்காய்களாக வைத்து தன்னைப்பாதுகாக்கும் நயவஞ்சகத்தை நிறுத்திக்கொள்ளவேண்டும். "குட்டக்குட்ட குனியிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையனே."  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நோ மோ காமன்ஸ் 😁

நோ கமெண்ட்ஸ். நாம் எதாவது சொல்லப்போக , ஏன் தேவை இல்லாத பிரச்சினை? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நோ கமெண்ட்ஸ். நாம் எதாவது சொல்லப்போக , ஏன் தேவை இல்லாத பிரச்சினை? 

வாழ்க்கையே பிரச்சினை நிறைந்ததுதானே, சும்மா சொல்லிப்பாருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

350983976_746209017326109_3371882031510055412_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=F2txccOate4AX-kLo0y&_nc_ht=scontent-fra3-1.xx&oh=00_AfB2BF8Iq8ee0iN9fB623md4LM-anmE2OYWahCttxpZjjg&oe=6482269D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியா உதவாது – மனோ கணேசன்

தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டில் தோன்றிய பௌத்தத்தை மற்ற இடங்களிலும் வளர வேண்டும் என்றே இந்தியா விரும்பும் என்பதனால் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவதற்கு பதிலாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளூர் நடவடிக்கைகளை எடுக்க தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வவுனியா – வெடுக்குநாரி ஆதிசிவன் கோவிலின் சிவலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் பௌத்த மயமாக்களை நிறுத்த கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக் கோரி தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1333442

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியா உதவாது – மனோ கணேசன்

உங்களுக்குப் புரியுதையா,!ஆனால் எங்கடை மேதாவியள் கிந்தியன்ரை *** த்துக்கைதானே      தொங்குகினம். தமிழரின் தலைவிதி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

உங்களுக்குப் புரியுதையா,!ஆனால் எங்கடை மேதாவியள் கிந்தியன்ரை *** த்துக்கைதானே      தொங்குகினம். தமிழரின் தலைவிதி.

தமிழரே அந்த விகாரையில் வழிபாடு நடத்த வரும்போது யாரை குறைகூறுவது? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

தமிழரே அந்த விகாரையில் வழிபாடு நடத்த வரும்போது யாரை குறைகூறுவது? 

உண்மைதான்,  மேய்ப்பன் அற்ற மந்தைகளல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

விலை போகும் கூட்டம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உங்களுக்குப் புரியுதையா,!ஆனால் எங்கடை மேதாவியள் கிந்தியன்ரை *** த்துக்கைதானே      தொங்குகினம். தமிழரின் தலைவிதி.

 

1 hour ago, satan said:

தமிழரே அந்த விகாரையில் வழிபாடு நடத்த வரும்போது யாரை குறைகூறுவது? 

 

1 hour ago, nochchi said:

உண்மைதான்,  மேய்ப்பன் அற்ற மந்தைகளல்லவா

 

54 minutes ago, satan said:

விலை போகும் கூட்டம்!

 

தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் பொஸன் நிகழ்வு !

தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் பொஸன் நிகழ்வு !

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்று சனிக்கிழமை பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.

வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராமவின் தலைமையில் பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

பொஸன் வழிபாடுகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் வந்த ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு தானம் வழங்கப்பட்டது

https://athavannews.com/2023/1333501

#################    ###################   ####################

346942403_1264630854480864_3630765712672846123_n.jpg?stp=dst-jpg_p640x640&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=e3f864&_nc_ohc=e6A_onPWYTgAX-jePfs&_nc_ht=scontent-fra3-1.xx&oh=00_AfCWDC9t7s5Islo6M9J5cif7OmgB9B910uptcOcamOAnbA&oe=648071B6

தமிழர்களின் ஏழ்மையை பயன்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் விகாரைக்கு...  அழைத்துச் செல்பவர்களின் மும்முரமாக  இயங்குபவர்... 
நல்லூர் கோவிலை இடித்து மலசலகூடம் கட்டுவேன் என்று சொல்லிய 
அருண் சித்தார்த் எனப்படும் சிங்கள கைக்கூலி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 08:13, satan said:

வாழ்க்கையே பிரச்சினை நிறைந்ததுதானே, சும்மா சொல்லிப்பாருங்கள்!

அப்படியா. எந்த இந்து அமைப்பு? உயர்சாதி இந்து அமைப்பா இல்லை தாழ்ந்த சாதி இந்து அமைப்பா? ஏன் என்றால் இவர் பிரேமானந்தா சுவாமியுடைய சீடன். விக்கி ஐயா சாதி பார்ப்பவர்   என்கிறபடியால்  இதை கேட்க வேண்டி உள்ளது. நேற்றைய வீரகேசரி பத்திரிகையில் இதை பற்றி எழுதி இருக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.