Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

kugenJune 7, 2023
 
351344207_933552631195406_6463449235535117765_n.jpg

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது

தன்மீதான தாக்குதல்  தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
 

 

http://www.battinews.com/2023/06/blog-post_969.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”பொலிஸாரின் அராஜகத்தை கண்டிக்கின்றோம்”

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவில் உடையில் வந்த நபர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உயிராபத்தை மேற்கொள்ள எத்தனித்த சந்தர்ப்பத்தில் அப்பட்டமான பொய்களை கூறி இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸாரின் அராஜக நடவடிக்கை குறித்து நாடாளுமன்றில் அறிவிக்கவிருந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/பொலிஸாரின்-அராஜகத்தை-கண/

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவரை அழைத்து வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்படக்கூடாது என சபாநாயகர் என்ற ரீதிதில் பொலிஸாரிடம் இதனை தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1333838

  • கருத்துக்கள உறவுகள்

மிரிஹான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

கஜேந்திரகுமார் கைது விவகாரம் : மருந்தங்கேணி பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில், கடந்த 3 ஆம் திகதியன்று மக்கள் சந்திப்பில், ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் காண்பிக்காத ஒருவர், துப்பாகியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்ள மருதங்கேணி பொலிஸாருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நான்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பொலிஸார் இன்று தமது காரியாலயத்தில் முன்னிலையாக உள்ளதாக, அறியப்படுத்தியுள்ளனர் என்றும் கனகராஜ் தெரிவித்தார்.

சாதாரணதரப் பரீட்சைக் கடமைகளின் நிமிர்த்தம், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்துள்ள ஏனைய இரு அதிகாரிகளும், பிறிதொரு தினத்தில் முன்னிலையாக உள்ளதாக அறியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1333835

  • கருத்துக்கள உறவுகள்

எனது வன்மையான கண்டனங்கள்.இதையும் நாடகம் என்று சொல்ல பலபேர் வருவார்கள

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

எனது வன்மையான கண்டனங்கள்.இதையும் நாடகம் என்று சொல்ல பலபேர் வருவார்கள

நேரம் இருக்கையில் இந்தத் திரியையும் பாருங்க புலவர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

ஸ்ரீதரனின்... பழைய தகவல்களை திரட்டிய, அருமையான பாராளுமன்ற பேச்சு.
அவ்வளவிற்கும்.... பாராளுமன்றத்தில், அத்தனை பேரும் குழப்பம் விளைவிக்காமல்  
அமைதியாக  கேட்டுக் கொண்டு இருந்தமை, அவர்களின் பக்கம் உள்ள தவறை 
ஏற்றுக் கொண்டதாகவே கருதுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, புலவர் said:

எண்ணத்தை கூவி என்ன எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்...... நாளைக்கு இந்த பேச்சுகூட பாராளமன்ற பதிவில் இருப்பது சந்தேகம்தான்......!

நன்றி புலவர்.......!

  • கருத்துக்கள உறவுகள்

 கஜேந்திரக்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கிய  சாணக்கியன்

கஜேந்திரக்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கிய சாணக்கியன்

 



பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமாரின் கைதினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிய செயல்பாடாகும்.

ஓர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கே இவ் கதி என்றால் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமையினை இவ்வளவு காலம் அவர்கள் அனுபவிப்பதை யோசித்து பாருங்கள்.

கொள்கைகள் வேறு பட்டாலும் என்றும் அநீதிக்காக எம் குரல் ஒலிக்கும். இவ் அநீதி சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய மற்றைய உறுப்பினர்களின் மவுனம் சொல்வது என்ன. என்று சாணக்கியன் தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=174042

  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் - கிளிநொச்சி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார் கஜேந்திரகுமார் எம்.பி

ளம்பரம்

இரண்டாம் இணைப்பு

இன்று காலை கொழும்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் கிளிநொச்சி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

கிளிநொச்சி காவல் நிலையத்தில் அவருக்கான விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாக நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பயணத் தடை

gajendrakumar arrested

 

மேற்குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

காவல்துறை நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

 

மேலும், இதே குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு 

"என்னை கைது செய்வதற்கான பிடியாணையைக் காண்பியுங்கள், நான் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்."

இவ்வாறு, இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதற்கு காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்ற போது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினருடன் முரண்பட்ட அவர்,

நான் இன்று நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற வரப்பிரசாதம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன், எனக்கு சபாநாயகர் அறிவித்திருக்கிறார் .

என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள், நான் அங்கு எனது கடமையை செய்ய வேண்டும்.

 

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பிலான எனது பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், நீங்கள் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

என்னுடைய கடமைகளை முடித்து விட்டு காவல்நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நேற்றையதினம் இரவு கடிதம் அனுப்பி காவல்துறையினர் என்னிடம் கூறி இருந்தார்கள்.

நேற்றையதினம் இரவு அப்படியான ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு, இன்று காலை ஆறு மணிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும் என வந்திருக்கின்றீர்கள்.

 

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் 12 ம் திகதி வாக்குமூலம் வழங்குவேன் என எழுத்துமூலம் அறிவித்துள்ளேன்.

இவ்வாறு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியும், அதனை கருத்தில் கொள்ளாமல் நாளை காலை 10 மணிக்கு காவல்நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்க வேண்டும் என நேற்றிரவு கடிதம் அனுப்பி இருக்கின்றீர்கள்.

இன்றைய தினம் 10 மணிக்கு மருதங்கேணி காவல்நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருமாறு கடிதம் அனுப்பிவிட்டு, காலை 6 மணிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும் என வந்து நிற்கிறார்கள்.

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை, ஆனால் சிங்கள மக்களின் பெயரில் இவர்கள் செய்கின்ற அராஜகத்தை சிங்கள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." என தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

நேற்றைய கருத்து 

gajendrakumar said

எனது தந்தையை சுட்டுக்கொன்றபோதே ஓடியொழியாத நான் தற்போது நாட்டை விட்டு ஓடியொழிய எந்த தேவையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயணத்தடை தொடர்பாக நேற்றையதினம் பிரத்தியேக செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/gajendrakumar-mp-in-colombo-arrested-promptly-1686102966

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் தேசிய முன்னணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் முடக்குவதற்கு இலங்கை இந்திய புலனாய்வுப் பிரிவினர் நீண்ட காலமாகவே முயற்சி செய்கிறார்கள்.

சகல கட்சிகளும் இந்தியாவின் கட்டுக்குள் இருக்கும் போது இவரகள் மட்டும் தனியாக இயங்குவது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

இது ஆரம்பம் தான்.இவர்களை உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்து தான் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் எம்.பி. திடீர் கைது - துப்பாக்கியை காட்டி மிரட்டியதா போலீஸ்?

இலங்கையில் தமிழ் எம்.பி. திடீர் கைது

பட மூலாதாரம்,TWITTER/@JDSLANKA

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த போலீஸ் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், போலீஸாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் போலீஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

 

 

பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் மக்கள் சந்திப்பொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நடத்த முயற்சித்திருந்தார். பரீட்சை நிலையத்திற்கு அருகில் மக்கள் சந்திப்பை நடத்துகின்றமை குறித்து, பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த போலீஸ் உத்தியோகத்தர்கள், போலீஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர்.

 

இதையடுத்து, சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகள், விசாரணைகளை நடத்த முயற்சித்துள்ளனர். இதன்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போலீஸ் அடையாள அட்டையை கோரியுள்ளார். எனினும், போலீஸார் அதற்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், போலிஸாருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

 
இலங்கையில் தமிழ் எம்.பி. திடீர் கைது

பட மூலாதாரம்,KAJENDRAKUMAR PONNAMPALAM

 
படக்குறிப்பு,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் எம்.பி., இலங்கை

இதையடுத்து, பரீட்சை நிலைய பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதாகாரிகள் இந்த விடயத்தில் தலையீடு செய்தனர். இதன்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

 

தன்னை மரியாதையுடன் பேசுமாறு, போலீஸ் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிய போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் போலீஸ் அதிகாரி என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தார்.

 

தன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிய போதும், அதனை போலீஸார் நிராகரித்திருந்தனர். இந்த நிலையிலேயே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை ஒன்று போலீஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வௌிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதித்திருந்தது. அத்துடன், சம்பவம் தொடர்பில் போலீஸாருக்கு வாக்குமூலம் ஒன்றை உடனடியாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

பெண் ஒருவரும் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி அமைப்பாளரான ஜெகதீஸ்வரி சத்குணதேவி நேற்று முன்தினம் போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பதில்

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை குறித்து சபாநாயகரிடம் அடுத்த அமர்வின் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், சம்பவம் குறித்து போலீஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

தன்னிடம் விடயங்களை ஆராய்வதற்கு முன்னர், போலீஸார் ஊடகங்களுக்கு அவர்களின் கருத்துகளை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அடையாள அட்டையை காட்டவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

கூட்டத்திற்கு வந்த புலனாய்வு உத்தியோகத்தர்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டைகளை வழங்கியதாக தெரிவித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

 

“துப்பாக்கி சுட்டிக்காட்டப்பட்டது என்பது முற்றிலும் மறுக்கப்படுகிறது. அங்கு சென்ற அரசு அதிகாரிகள் அடையாள அட்டையை காட்டியுள்ளனர் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

 

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் போலீஸாருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரியிடம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிக்கை கோரியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cv281l7mrj1o

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

Published By: NANTHINI

07 JUN, 2023 | 06:50 PM
image
 

கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/157203

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

பரீட்சை நிலையத்திற்கு அருகில் மக்கள் சந்திப்பை நடத்துகின்றமை குறித்து, பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த போலீஸ் உத்தியோகத்தர்கள், போலீஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர்.

 

6 hours ago, ஏராளன் said:

இதையடுத்து, சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகள், விசாரணைகளை நடத்த முயற்சித்துள்ளனர். இதன்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போலீஸ் அடையாள அட்டையை கோரியுள்ளார். எனினும், போலீஸார் அதற்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், போலிஸாருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

விசாரணை நடத்த வந்த போலீஸ் அதிகாரி சிவிலில் வரவேண்டிய தேவையென்ன? அவர் விசாரணை நடத்த முடியுமா? விசாரணை நடத்த வந்தவர் தான் யார் என சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கி, தனக்கு ஒத்துழைக்கும்படி கேட்டிருக்கலாம் அல்லது அவரது உத்தியோக சீருடை அவர் யார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடியதாக இருந்திருக்க வேண்டும் இல்லை அவரை வரவழைத்த போலீசார் விளங்கப்படுத்தியிருக்க வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசாரணை செய்ய வந்தவரின் அடையாளத்தை கேட்டார் என்பதை இருபகுதியும் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படி அவர் தன் அடையாளத்தை காட்டியிருந்தால் அங்கு முரண்பாடு ஏற்படவேண்டிய தேவை எழுந்திருக்காது? அப்படி அடையாளமுள்ளவர் தனது சீருடையிலேயே வந்திருக்கலாமே? இந்த நாட்டில்; நடு றோட்டில், பலர் முன்னலையில், கைது செய்யப்பட்டவர்கள் இன்று இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. யாரும் பொறுப்பெடுக்கவுமில்லை. ஆனால் பொலிஸார் இராணுவ புலனாய்வாளர் என்று சொல்லியே இத்தனை அராஜகங்களும் நடந்தன. ஆனால் தாம் கைது செய்யவில்லை  என கை விரித்து விட்டனர். ஏன் சம்மந்தப்பட்டவரின் தந்தையாரே இதே துறையை சேர்ந்தவர்களாலேயே கொல்லப்பட்டார். ஆகவே இங்கு, போலீசார் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்துகின்றனர். யார் வேண்டுமானாலும் யாரையும் அச்சுறுத்தலாம் கைது செய்து அடைக்கலாம், கொல்லலாம் என்கிற நிலை மாறவேண்டும். நீதிமன்றம் அதற்கு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும். இதனாலேயே பல தேவையற்ற கைதுகளும் அலைச்சல்களும் ஏற்படுகின்றன. நீதிமன்றங்கள் இப்படியான செயல்களில் ஏற்படும் போலீசாரை எச்சரிக்க வேண்டும். போலீசார் தமது நம்பகத்தன்மையை பாதுகாத்து, கடமையை சரிவர செய்ய வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் தமது அடாவடியிலிருந்து.         

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கைது செய்யப்படுவார் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். தென்பகுதி மக்களை சந்தோஷப்படுத்த அப்படி செய்யவேண்டிய கடடயம் அவர்களுக்கு இருந்தது. உதய கம்மன்பில தனது சந்தோசத்தை வெளிப்படையாகவே கூறி இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள ராவய, குமார் பொன்னம்பலத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்யவும் தயாராக இருந்ததாம் எனவும் செய்தி வந்தது. ரணில் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன, அதற்கு இப்படியான ஆரவாரங்கள் தேவை. ஆனால் இது எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படியான தமிழரின் கைதுகளையும், அடக்குமுறைகளையும் மூலதனமாக  வைத்து தேர்தலை சந்திப்போரை மக்கள் வீட்டுக்கு அனுப்பினாலே, ஊழல் மறைந்து நீதியாக செயற்படும் அரசாங்கம் உருவாகும். தாங்கள் நாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம், எப்படி பிரச்சனைகளை தீர்க்கபோகிறோம் எனும் திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்க்கும் காலத்தை உருவாக்கவேண்டும் மக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறித்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கண்டனம்

Published By: Digital Desk 3

08 Jun, 2023 | 10:05 AM
image

(நா.தனுஜா)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்திருக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம், தமிழ் அரசியல் கட்சிகளிடையேயும் தமிழ்மக்கள் மத்தியிலும் நிலவும் ஒற்றுமையின்மையே இதற்குக் காரணம் என்று விசனம் வெளியிட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கடந்த 3 ஆம் திகதி தாக்க முற்பட்ட சம்பவம் மற்றும் நேற்று முன்தினம் அவர் கைதுசெய்யப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமையையும், அவரது சிறப்புரிமையை மீறும்வகையில் அவர் கைதுசெய்யப்பட்டமையையும் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, கடந்த 5 ஆம் திகதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் சற்குணதேவி (அருள்மதி) மருதங்கேணியில் கைதுசெய்யப்பட்டமையையும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தையிட்டி போராட்டத்தில்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டிக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டபோது, கட்சி பேதங்களை மறந்து அதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைக் காண்பித்திருந்தால் இந்தளவுக்குக் கைதுகள் தொடர்ந்திருக்காது. சரி, தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருநாள் பாராளுமன்ற அமர்வைப் பகிஷ்கரித்திருந்தால், இந்த அடக்குமுறைகள் நிகழ்ந்திருக்காது.

தெற்கில் நடைபெறும் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கின்ற யாழ்ப்பாணத்தைத் தளமாகக்கொண்ட மகளிர் அமைப்புக்கள், தமிழ் தாய்மார்கள் தாக்கப்பட்டபோதும், சற்குணதேவி கைதுசெய்யப்பட்டபோதும் வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்?

தமிழ்மக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைப் பாருங்கள். அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, இலங்கையின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இன ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

 

https://www.virakesari.lk/article/157218

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் கைது தென்பகுதி அரசிசியல்வாதிகளினது வெற்றிக்கும் அவசியம் அதே வேளை கஜேந்திரகுமாரின் வெற்றிக்கும் அவசியம். இருபகுதி அரசியல்வாதிகளும் மக்களை உசுப்பேற்றி தமது வெற்றிக்காக உழைப்பது இலங்கையின் 70 வருட அரசியல். இது ஒன்றும் புதிய விடயம் அல்ல.  இணையவன் கூறியது போல் இவ்வறான உசுபேற்றும் விடயங ங்களில் தமது நேரத்தை செலவழிப்பதை விட்டு விட்டு தமது கலவி பொருளாதார  விடயங்களில் மக்கள் கூடிய கவனம் செலுத்துவதே இன்றைய தேவை.  

தமிழர்களிலும்  சிங்களவர்களிலும்  உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் போலியாக  இங்குஉணர்சசிவசப்படுவது போல் நடித்து தத்தமது அரசியல் தலைவர்களின் அரசியல் தேவைக்காக மக்களை உசுப்பேற்றுவார்கள்.  தோல்வி  அடைவது இரு பகுதிகளிலும் உள்ள மக்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, island said:

கஜேந்திரகுமார் கைது தென்பகுதி அரசிசியல்வாதிகளினது வெற்றிக்கும் அவசியம் அதே வேளை கஜேந்திரகுமாரின் வெற்றிக்கும் அவசியம். இருபகுதி அரசியல்வாதிகளும் மக்களை உசுப்பேற்றி தமது வெற்றிக்காக உழைப்பது இலங்கையின் 70 வருட அரசியல். இது ஒன்றும் புதிய விடயம் அல்ல.  இணையவன் கூறியது போல் இவ்வறான உசுபேற்றும் விடயங ங்களில் தமது நேரத்தை செலவழிப்பதை விட்டு விட்டு தமது கலவி பொருளாதார  விடயங்களில் மக்கள் கூடிய கவனம் செலுத்துவதே இன்றைய தேவை.  

தமிழர்களிலும்  சிங்களவர்களிலும்  உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் போலியாக  இங்குஉணர்சசிவசப்படுவது போல் நடித்து தத்தமது அரசியல் தலைவர்களின் அரசியல் தேவைக்காக மக்களை உசுப்பேற்றுவார்கள்.  தோல்வி  அடைவது இரு பகுதிகளிலும் உள்ள மக்களே. 

இது குணா கவியழகன் போன்ற இந்தியாவை மேவிப்போகாத 13வது திருத்தச் சட்டத்துக்குள் போக விரும்பாத அரைகுறை ஊடகவியலாளர்கள் இஅரை அவியல் ஆய்வாளர்களின் கருத்து.தமது கட்டுரைகளிலும் பேட்டிகளிலும் மக்களைத்திரட்டிப் பேராட வேண்டும் எழுதுவார்கள்.அனால் கபாராட்டத்திற்கு ஒரு துரும்பளவிலும் பங்களிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு கஜேந்திரகுமார் 13ஜ ஏற்றுக் கொள்ளாதே கடுப்பு. பேராடினாலும் மக்களை உசுப்பேத்தும் அரசியலுக்காக செய்கிறார் என்று சொல்லுவார்கள் பேராடா விட்டாலும் வுpட்டில் இருந்து அரசியல் செய்கிறார் என்று எழுதுவார்கள். இப்படியான விமர்சனங்களை அவர்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கஜேந்திரகுமாரோ இந்த விமர்சனங்களை கடந்து உறுதியான கொள்கையில் பயணித்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, island said:

 இணையவன் கூறியது போல் இவ்வறான உசுபேற்றும் விடயங ங்களில் தமது நேரத்தை செலவழிப்பதை விட்டு விட்டு தமது கலவி பொருளாதார  விடயங்களில் மக்கள் கூடிய கவனம் செலுத்துவதே இன்றைய தேவை.  

 

100 வீதம் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Cruso said:

இவர் கைது செய்யப்படுவார் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். தென்பகுதி மக்களை சந்தோஷப்படுத்த அப்படி செய்யவேண்டிய கடடயம் அவர்களுக்கு இருந்தது. உதய கம்மன்பில தனது சந்தோசத்தை வெளிப்படையாகவே கூறி இருந்தார். 

சிங்களவன்களுக்கு எத்தியோப்பியா சோமாலியா பஞ்சம் வந்தாலும் திருந்த மாட்டானுகள். :face_with_tears_of_joy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.