Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனா இந்த போரை நடத்துகின்றது? 😎

நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லுங்கள் ஆனால் உக்ரைன் தன் மண்ணை காக்கத்தான் போராடுகிறது. 

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, விசுகு said:

நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லுங்கள் ஆனால் உக்ரைன் தன் மண்ணை காக்கத்தான் போராடுகிறது. 

இல்லை.உக்ரேன் போரை நடத்தி செல்வது வேறு நாடுகள்.

உக்ரேன் மட்டும் போரை நடத்துவதானால் அது என்றோ முடிந்திருக்கும்.

இலங்கையில் சிங்களம் மட்டும் போரை நடத்தவில்லை....அது போல் இதுவும்....

காசி ஆனந்தனின் நறுக்குகளை இன்னுமா காவிக்கொண்டு திரிகின்றீர்கள்? 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, குமாரசாமி said:

காசி ஆனந்தனின் நறுக்குகளை இன்னுமா காவிக்கொண்டு திரிகின்றீர்கள்? 

ஏனண்ணா 

ஒருவரின் கருத்தை காவ அவரை இடைக்கிடையே முகர்ந்து பார்க்கணுமா??

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/12/2023 at 23:14, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவுக்குக் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேயளவு இழப்புக்கள் உக்ரேன் பக்கத்திலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வீணான போரின்மூலம் ரஸ்ஸிய வல்லரசின் ராணுவ பலம் பலவீனப்பட்டிருக்கும் அதேவேளை உக்ரேனின் பல கட்டுமானங்கள் நிரந்தரமாகவே ரஸ்ஸியாவால் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நீண்டு முடிவின்றிச் செல்கிறது.

ரஸ்ஸியா தானாகவே விரும்பி நிறுத்தினால் ஒழிய இப்போர் நிற்கப்போவதில்லை. உக்ரேனினால் ரஸ்ஸியாவை தனது நாட்டிலிருந்து விரட்டும் பலம் எப்போதுமே இருக்கப்போவதில்லை. மேற்குலகின் உதவிகள் வற்றத் தொடங்கியிருக்கும் இவ்வேளை, தனது எதிர்த்தாக்குதல் இன்னமும் வீரியம் இழக்கவில்லை என்பதைக் காட்ட செலென்ஸ்கி படாத பாடு படுவது தெரிகிறது. 

தேவையற்ற அநியாய யுத்தம். நிறுத்தப்பட வேண்டும். ரஸ்ஸியாவும் உக்ரேனும் வீம்பிற்குப் போரிடுவதை நிறுத்தி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வழி விடவேண்டும். 

செலென்ஸ்கிக்கும் உக்ரைனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்று தேடிப்பாருங்கள். 
அதோடு இஸ்திரேலி சியோனிஸ்ட்டுக்களுக்கும் யூதர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்றும் தேடி பாருங்கள். 

ரஸ்யா உக்ரைன் விரும்பினாலும் போரினால் கோடிக்கணக்கான பணத்தை லாபம் பார்க்கும் கூட்டம் ஏன் போரை நிறுத்தவேண்டும்? 

இந்தியாவுக்கும் மொக்கு மோடிக்கும் கொம்பு சீவி இப்போது லாபகமாக இந்தியாவையும் போருக்கு இழுத்து செல்லும் வேலை மிக நன்றாக நடக்கிறது  ஹிந்தியாவை பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத வேலை என்றாலும் சுற்றி எதிரிகளை உருவாக்கி விட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு ஆயுதங்கள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு காலை எழுந்தால் காலைக்கடன் முடிக்க கூட வசதி இல்லை. 

இத்தாலிக்கும் குளை  அடித்து இப்போ பெரும் ஆயுத வியாபாரம் செய்து நீங்கள் துருக்கியை விட பலமாகிக்கொண்டு இருக்கிறீர்கள் அதுதான் பாதுகாப்பு என்று நம்பவைத்து ஆயுதம் விற்கிறார்கள். 

தைவானை கைகாட்டி பிலிப்பைன்ஸ் ஜப்பானுக்கு விற்கக்கூடிய இரும்பெல்லாம் விற்கப்படுகிறது உங்கள் வரிப்பணத்திற்கும்  செலவுவைக்க பல பல பெயர்களில் நேவி கப்பல் ஓடடம் நடக்கிறது 

இவற்றையெல்லாம் பின்தொடர்ந்தால் ....... ஒரே ஒரு குழுதான் கடந்த 100 வருடமாக எந்த மனித நேயமுமற்று மக்களை கொத்து கொத்தாக  கொன்று வருகிறது அவர்கள் ஒரே இலக்கு பணம் அதன்மூலம் அதிகாரம். 

இன்று இஸ்திரேல் செய்துகொண்டு இருக்கும் அக்கிரமத்தை ரஸ்யா நினைத்திருப்பின் கிவையே தரைமடடம்  ஆக்கி இருப்பார்கள் கைப்பற்றிய கீவ் அணுமின் நிலையத்தை கூட விட்டுவிட்டு பின்வாங்கினார்கள்  உக்ரைனில் இருப்பவர்களும் பாதிக்கு மேல் ரஷ்யர்கள்தான் 

டிசம்பர் தொடக்கத்தில் செலென்ஸ்கி (25ஆம் புலிகேசி) இங்கு அமேரிக்காவுக்கு வந்தபோது 
10 அதி உயர் விமான எதிர்ப்பு மிஸைல் ( பல மில்லியன் பெறுமதியான) கொடுத்து அனுப்பினார்கள் 
ரசியர்கள் 8 ட்ரான்களை வேண்டும் என்றே அனுப்பி 8 மிசைல்களை வேண்டும் என்றே அடிக்க வைத்து வீணடித்து விட்டார்கள் பல ஆயிரம் மில்லியன்கள் ஒரு வாரத்தில் புகையாகி போனதில் எனது வரிப்பணமும் உண்டு என்பதுதான் எனக்கு உறுத்தல் ஆன விடயம்  

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Maruthankerny said:

இந்த யுத்தம் தொடர்பான எனது அடிப்படை புரிதலில் மாற்றமில்லை மருதர். உக்ரேன் இறையாண்மையுள்ள ஒரு நாடு. ரஸ்ஸிய நடத்துவது ஆக்கிரமிப்பு என்பதில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை.

எனது அக்கறையெல்லாம் இருபக்கமும் நடக்கும் அழிவுதான். அதானால்த்தான் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன். 

இந்த யுத்தத்தைப் பாவித்து தமது சொந்த நலன்களை அடைந்துகொள்ள விரும்பும் மேற்குலகாகட்டும், அல்லது ரஸ்ஸியாவிற்கு ஆயுதம் விற்கும் வடகொரியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளாகட்டும், இவை எதுவுமே ஆக்கிரமிக்கப்படும் உக்ரேனியர்களுக்காகவோ அல்லது கொல்லப்படும் ரஸ்ஸிய வீரர்களுக்காகவோ அனுதாபப்படவில்லை. 

பல வியாபாரிகளின் நலன்களுக்காகவும், ஒரு அதிகாரி வெறி பிடித்த சர்வாதிகாரிக்காகவும் அப்பாவி உக்ரேனியர்களும், ரஸ்ஸிய வீரர்களும் மாண்டு வருகிறார்கள்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ரஞ்சித் said:

உக்ரேன் இறையாண்மையுள்ள ஒரு நாடு. ரஸ்ஸிய நடத்துவது ஆக்கிரமிப்பு என்பதில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை.

ஒரு அதிகாரி வெறி பிடித்த சர்வாதிகாரிக்காகவும் அப்பாவி உக்ரேனியர்களும், ரஸ்ஸிய வீரர்களும் மாண்டு வருகிறார்கள்.

மிகச் சரியான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Maruthankerny said:

 செலென்ஸ்கி (25ஆம் புலிகேசி) 

உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை

தலைவரை யாராவது இவ்வாறு விமர்சித்தால் வரும் அதே கோபம் வருகிறது. விடுதலைவிரும்பி அல்லது தாயகப்பற்றின் ஆகக் குறைந்த நிலைப்பாடு கூடவா நம்மிடம் இல்லை???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை

தலைவரை யாராவது இவ்வாறு விமர்சித்தால் வரும் அதே கோபம் வருகிறது. விடுதலைவிரும்பி அல்லது தாயகப்பற்றின் ஆகக் குறைந்த நிலைப்பாடு கூடவா நம்மிடம் இல்லை???

தலைவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்?

நிர்வாணமாக ஓடித்திரிந்து கோமாளிக் கூத்தாடிய செலன்ஸ்க்கியை அண்ணனுடன் ஒப்பிடும் நிலையிலா தாங்கள் இருக்கிறீர்கள்? 

2024ல் செலன்ஸ்கி பணப் பெட்டிகளுடன் விமானத்தில் தப்பியோடுவார் அல்லது சொந்த ஆட்களாலேயே அவர் கொல்லப்படுவார. அப்போது  அவரின்/அவர்களின் உண்மையான முகம் வெளியே தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, Kapithan said:

தலைவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்?

நிர்வாணமாக ஓடித்திரிந்து கோமாளிக் கூத்தாடிய செலன்ஸ்க்கியை அண்ணனுடன் ஒப்பிடும் நிலையிலா தாங்கள் இருக்கிறீர்கள்? 

2024ல் செலன்ஸ்கி பணப் பெட்டிகளுடன் விமானத்தில் தப்பியோடுவார் அல்லது சொந்த ஆட்களாலேயே அவர் கொல்லப்படுவார. அப்போது  அவரின்/அவர்களின் உண்மையான முகம் வெளியே தெரிய வரும். 

அந்த கேள்வி என் தம்பி மருதங்கேணிக்கானது. அவருக்கும் எனக்கும் இடையே உள்ள புரிதல் அவ்வாறானது. அதற்கு பதில் தரும் சகல வல்லமையும் அவருக்கு உண்டு. எனவே உங்கள் உதவி அவருக்கோ அல்லது எனக்கோ தேவையற்றது. நன்றி. 

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

அந்த கேள்வி என் தம்பி மருதங்கேணிக்கானது. அவருக்கும் எனக்கும் இடையே உள்ள புரிதல் அவ்வாறானது. அதற்கு பதில் தரும் சகல வல்லமையும் அவருக்கு உண்டு. எனவே உங்கள் உதவி அவருக்கோ அல்லது எனக்கோ தேவையற்றது. நன்றி. 

அப்படியானால் உங்கள் பதிலைத் தனிநபர் மடலின் ஊடாகத் தெரிவியுங்கள். பப்ளிக்குட்டி செய்ய வேண்டாம். 

முக்கியமாக, தலைவர் ஒன்றும் உங்கள் தனிச் சொத்து அல்ல. அவர் உலகத் தமிழர் எல்லோருக்கும் பொதுவானவர். 

அவரைக்  கோமாளியுடன் ஒப்பிடும்போது, ஒப்பிடுபவரின் துகிலை யாரும் உரியலாம் என்பது என் நிலைப்பாடு. 

🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Kapithan said:

அப்படியானால் உங்கள் பதிலைத் தனிநபர் மடலின் ஊடாகத் தெரிவியுங்கள். பப்ளிக்குட்டி செய்ய வேண்டாம். 

முக்கியமாக, தலைவர் ஒன்றும் உங்கள் தனிச் சொத்து அல்ல. அவர் உலகத் தமிழர் எல்லோருக்கும் பொதுவானவர். 

அவரைக்  கோமாளியுடன் ஒப்பிடும்போது, ஒப்பிடுபவரின் துகிலை யாரும் உரியலாம் என்பது என் நிலைப்பாடு. 

🙏

முதலில் தமிழை ஒழுங்காக வாசியுங்கள் புரிந்து கொள்ள முயலுங்கள்

தலைவரை எவருடனும் ஒப்பிடவில்லை. அவரை இவ்வாறு விமர்சனம் செய்தால் வரும் கோபம் வருகிறது (எனக்குத்தான்)

அநியாயத்தை ஆக்கிரமிப்பை கண்டு எவன் கோபப்படுகிறானோ அவன் என் தோழன்.

இது எனது நிலைப்பாடு. இது தான் ஒரு விடுதலை விரும்பி அல்லது தாயகப்பற்றின் ஆகக் குறைந்த தெரிவாக இருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

ஒப்பிட தாங்கள் விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்,

ஆனால்  கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து இறந்த மனிதனை இங்கே கொண்டுவருவதைத் தவிர்த்திருக்கலாம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் மீது ரஸ்யா மிகக்கடுமையான வான் தாக்குதல் - 150க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை பயன்படுத்தியது.

Published By: RAJEEBAN  29 DEC, 2023 | 04:56 PM

image

ரஸ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனிற்கு எதிரான  போர் ஆரம்பமான பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான் தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீது முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும்  ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ukrine_dece_23.jpg

நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும்  ஏற்பட்டுள்ளன என  உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரில் புகையிரத நிலையமொன்றை ரஸ்யா இலக்கு வைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/172721

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரஞ்சித் said:

இந்த யுத்தம் தொடர்பான எனது அடிப்படை புரிதலில் மாற்றமில்லை மருதர். உக்ரேன் இறையாண்மையுள்ள ஒரு நாடு. ரஸ்ஸிய நடத்துவது ஆக்கிரமிப்பு என்பதில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை.

எனது அக்கறையெல்லாம் இருபக்கமும் நடக்கும் அழிவுதான். அதானால்த்தான் இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்கிறேன். 

இந்த யுத்தத்தைப் பாவித்து தமது சொந்த நலன்களை அடைந்துகொள்ள விரும்பும் மேற்குலகாகட்டும், அல்லது ரஸ்ஸியாவிற்கு ஆயுதம் விற்கும் வடகொரியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளாகட்டும், இவை எதுவுமே ஆக்கிரமிக்கப்படும் உக்ரேனியர்களுக்காகவோ அல்லது கொல்லப்படும் ரஸ்ஸிய வீரர்களுக்காகவோ அனுதாபப்படவில்லை. 

பல வியாபாரிகளின் நலன்களுக்காகவும், ஒரு அதிகாரி வெறி பிடித்த சர்வாதிகாரிக்காகவும் அப்பாவி உக்ரேனியர்களும், ரஸ்ஸிய வீரர்களும் மாண்டு வருகிறார்கள்.

சிலர் இஸ்திரேல் பாலஸ்தீன பிரச்சனையை அக்டோபர் 7ஆம் திகதியில் தொடங்கிய பிரச்சனைபோல பேசிக்கொண்டு இருப்பது போலவே உங்கள் கருத்தும் எனக்கு தெரிகிறது மன்னிக்கவும். 

ரஷியா நேரடியான படை நடவடிக்கை தொடங்கு முன்பே உக்ரைன் எவ்வளோ ஊடுருவல் தாக்குதல்களை ரசிய நிலப்பரப்பில் செய்து  இருக்கிறது. உக்ரைன் அரசுகளால் மிக கீழ்த்தரமாக நடத்தப்பட்ட ரஷ்ய எல்லைப்பகுதி மக்கள் ஏற்கனவே உக்கரைனுடன் இனி சேர்ந்துவாழ முடியாது என்று போராடி பிரிந்து தனித்துவமாக ரசிய ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்கள் கிரிமியா மக்களை கூட தேர்தலின் மூலம் உக்ரைனில் இருந்து பிரிவதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். மேற்குலகிடம் விலை போய் தமது தனித்துவத்தை இழந்து சொந்த சகோதர்களான ரசியர்களை மேற்குலகின் விருப்புக்கு அழிவுக்கு உடப்படுத்தும் துரோக தனத்தை எதிர்த்து 
தனியாக வாழவிடுங்கள் என்று பிரிந்த மக்களை வகை தொகை இன்றி உக்ரைன் இராணுவம் கொன்று குவித்து இருக்கிறது. இப்போது ரசியா கைப்பற்றி வைத்திருக்கும் பெரும்பாலான நிலப்பரப்பு ரசிய ஆதரவு மக்கள் வாழும் பகுதியாகவே இருக்கிறது. இது புட்டின் தொடங்கிய போர் அல்ல .... ரசியா மீது திணிக்கப்பட்ட போர் 
மேற்குலகின் டிவி பெட்டியை பார்த்துக்கொண்டு நாங்கள் எழுதிக்கொண்டு இருந்தால் 

அப்பாவி பலஸ்தீன குழந்தைகளை காமாஸ் தீவிரவாதிகள் என்றுதான் எழுதிக்கொண்டு இருப்போம் 
சிலர் யாழ்களத்தில் அப்படிதான் எழுதுகிறார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுமக்கள் குடியிருப்புக்கள் வழிபாட்டு தலங்கள் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் மீது சர்வாதிகாரி புட்டின் நடத்தும் இவ்வாறான தாக்குதல்களை கண்டிப்பதோடு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நானும் கேட்டு கொள்கிறேன் 

625c2d53-f7b8-459d-8043-60ef2ee265c6-lar

256625.JPG

1738632111.jpeg?h=a5f2f23a&itok=jUBXGfDF

346836Q-highres-1-1701333924.jpg?resize=

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, விசுகு said:

உங்களிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை

தலைவரை யாராவது இவ்வாறு விமர்சித்தால் வரும் அதே கோபம் வருகிறது. விடுதலைவிரும்பி அல்லது தாயகப்பற்றின் ஆகக் குறைந்த நிலைப்பாடு கூடவா நம்மிடம் இல்லை???

புலிகேசி ஒரு பயந்த நகைசுவை சுபாவம் கொண்டவரே தவிர 
சேலன்ஸ்கிபோல கொடியவன் அல்ல ........ செலென்ஸ்கி மிக கொடூரமானவன் 
அவனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. செலென்ஸ்கி ஒரு சியோனிஸ்ட் 
அவனுக்கு உக்ரைன் மக்கள் இறப்பு என்பது ஆனந்தமானது உக்ரைனுக்கு உதவிக்கு என்று கொடுத்த மில்லியன் டாலர்களை சுருட்டிக்கொண்டு இருக்கிறான். மார்ச் மாதம் தேர்தல் வைக்க வேண்டும் .... அப்படி நடந்தால் உக்ரைன் மக்கள் அடித்தே துரத்துவார்கள் என்பது அவனுக்கு நான்கே தெரியும் என்பதால் இந்த போரை சாட்டி அவன் தேர்தலை வைக்கப்போவதில்லை. இனி மேற்கு அண்ணர் வாக்கு சாவடிகளை களவாடும் வேலை எல்லாம் செய்து முடித்த பின்னர்தான் ஒரு சுத்துமாத்து தேர்தலை வைப்பார்கள் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2023 ம் ஆண்டின்  மிகச் சிறப்பான  விடயம் என்னவென்றால் 

உந்த உலகத்தில் மனித உரிமை பேசுவோர் எல்லோரும் அதனை தங்களுக்குத் தேவையான ஒரு கருவியாக மனித  உரிமையைப் பாவிக்கிறார்களே தவிர அவர்களின் உண்மையான நோக்கம் மனித உரிமை அல்ல.  தங்களின் சுயநலனுக்கான ஒரு கருவியே மனித உரிமை. 

இது அப்பட்டமாக வெளிப்பட்ட இடம்

👇

ரஸ்ய - உக்ரேன்  மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம். 

உலக  நிலைமை இப்படி இருக்கும்போது,

ஈழத் தமிழரின் மீதான இனவழிப்பு யுத்தத்தில் மனித உரிமை பற்றி இவர்களது அக்கறையில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்வது? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஸ்ய ஏவுகணை

Published By: RAJEEBAN   30 DEC, 2023 | 09:00 AM

image
 
ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள் நுழைந்தன என ஜெனரல் வைஸ்லோ குக்குலா தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்று நிமிடங்கள் ரஸ்ய ஏவுகணை போலந்தின் வான்பரப்பில் காணப்பட்டுள்ளது - இதேவேளை ஏவுகணை தென்பட்ட பகுதியில் அது விழுந்து வெடித்ததா என்பது குறித்த சோதனைகள் இடம்பெறுகின்றன.

உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய வான்தாக்குதல்களின் போதே ரஸ்ய ஏவுகணை போலந்து ஊடாக உக்ரைன் சென்றுள்ளது.

ரஸ்யா உக்ரைன் மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனிற்கு எதிரான  போர் ஆரம்பமான பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான் தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீது முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும்  ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும்  ஏற்பட்டுள்ளன என  உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரில் புகையிரத நிலையமொன்றை ரஸ்யா இலக்கு வைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/172735

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் உத்தியை உக்ரைனில் பயன்படுத்திய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC

திரியோடு தொடர்புடைய விடயங்கள் உரையாடப்படுவதால் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி - யூரூப்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த ரஷ்யா!

1-2.jpg

உக்ரைன் மீதான போரில் வடகொரியாவினால் வழங்கப்பட்ட, ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் இந்த விடயம் தொடர்பில், அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுத பரிமாற்றத்தை எளிதாக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் பொருளாதார விதிப்பதற்கான விவாதங்கள் அதன்போது முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/287073

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவுடன் போர் நிறுத்தம்: உக்ரைன் ஜனாதிபதி நிராகரிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்தார்.

என்றபோதிலும் ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷ்யா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்” என்றார்.

https://thinakkural.lk/article/287928

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது எறிகணை தாக்குதல் - 27 பேர் பலி

Published By: RAJEEBAN   22 JAN, 2024 | 07:54 AM

image

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

GEXfnbSW4AA5K-p.jpg

எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது.

GEXfnbLW8AAFaWF.jpg

எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174486

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய வீரர்களின் மனைவிகளால் புதிய சிக்கலில் புதின்

2022 பெப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. இரண்டாம் வருடத்தை நெருங்கும் இப்போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. ரஷிய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

2022ல் சுமார் 3 இலட்சம் உபரி இராணுவ வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் படையில் சேர்த்தார்.

Untitled-2-3.jpgநீடிக்கும் போரினால் இராணுவ வீரர்கள் உயிரிழப்பதும், நீண்ட நாட்கள் குடும்பங்களை விட்டு பிரிந்திருப்பதும், படுகாயங்களால் உடல் உறுப்புகளை இழப்பதும் நடப்பதால், இந்த இராணுவ வீரர்களின் மனைவிகள் பொறுமை இழந்து வருகின்றனர்.

இது குறித்து சமூக வலைதளங்கள் வழியாக அவர்கள் உரையாடி, ஒருங்கிணைந்து “தி வே ஹோம்” (The Way Home) எனும் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். நாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமையில் தங்கள் கணவர்கள் அவர்களது பங்கை சரிவர செய்து விட்டதாகவும், இனி அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போரிஸ் நடெஸ்டின் (Boris Nadezhdin) எனும் முக்கிய அரசியல் தலைவரிடம் இது குறித்து முறையிட்ட வீரர்களின் மனைவிகள், ” இரண்டாம் உலகப் போரின் போது ரஷியாவில் இருந்த நிலை வேறு. அப்போது நாங்கள் தாக்கப்பட்டோம். இப்போது நிலைமை அப்படி இல்லையே; நேரெதிரான நிலைதான் உள்ளது. எங்கள் கணவர்களை திருப்பி அனுப்ப எப்போது அரசாங்கம் முடிவெடுக்கும்? அவர்கள் கைகள் அல்லது கால்களை இழந்த பிறகா? படுகாயங்களினால் வெறும் காய்கறிகளை போல் அவர்கள் மாறியதும்தான் அவர்களை திருப்பி அனுப்புவீர்களா? இல்லை, அவர்களது உடல்கள் பிரேத பெட்டியில் அடைக்கப்பட்டு அனுப்பப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா?” என கோபத்துடன் கேட்டனர்.

போர் குறித்து பொதுவெளியில் எந்த விமர்சனம் செய்தாலும் ரஷியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/289214

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

போரிஸ் நடெஸ்டின் (Boris Nadezhdin) எனும் முக்கிய அரசியல் தலைவரிடம் இது குறித்து முறையிட்ட வீரர்களின் மனைவிகள், ” இரண்டாம் உலகப் போரின் போது ரஷியாவில் இருந்த நிலை வேறு. அப்போது நாங்கள் தாக்கப்பட்டோம். இப்போது நிலைமை அப்படி இல்லையே; நேரெதிரான நிலைதான் உள்ளது. 

இது தான் உண்மை

இது தான் வரலாறு

இதை கணக்கெடுக்கவில்லை என்றால் மேலும் மேலும் நாசம் மட்டுமே. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யா- உக்ரைன் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன.என்ற போதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.

போர் நிறுத்தம் என்பது ரஷ்யாவுக்கு சாதகமானது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.

ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் ரஷ்யாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/290200

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.