Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரானிடமிருந்து கைப்பற்றிய 1 மில்லியன் துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியது அமெரிக்கா

Published By: RAJEEBAN

05 OCT, 2023 | 11:25 AM
image
 
ஈரானிடமிருந்து கைப்பற்ற 1.1மில்லியன்  துப்பாக்கி ரவைகளை அமெரிக்கா உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் யுத்தங்களிற்கு பொறுப்பான அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் யேமனிற்கு சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து துப்பாக்கி ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இவற்றை உக்ரைனிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சென்ட்கொம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 ம் திகதி மர்வன் 1 எனப்படும் தேசம் குறிப்பிடப்படாத கப்பலில் இருந்து இந்த துப்பாக்கி ரவைகளை கைப்பற்றியதாக  அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சொத்து ஒன்றின் உரிமையாளர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதனை அரசாங்கம் கைப்பற்றலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி கப்பலை தனதாக்கிய அமெரிக்கா அதிலிருந்த துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் கப்பலே அது என குற்றம்சாட்டியே அமெரிக்கா அந்த கப்பலை தனதாக்கிகொண்டது.

உக்ரைன் வெடிபொருட்களை பயன்படுத்தும் வேகத்திற்கு தங்களது உற்பத்திகளால் இடம்கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக உக்ரைன் மேற்குலக சகாக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/166136

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!

மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் ரஷ்யா ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நிதியுதவி

“மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது.

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..! | Putin Ukraine Last Western Military Support Stops

நிதியுதவி மட்டுமல்லாமால், இராணுவ தளபாட உதவிகள் என அனைத்தும் நின்றுவிட்டால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும்.

தற்போது வரை ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில்,  90ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.” என்றார்.

https://ibctamil.com/article/putin-ukraine-last-western-military-support-stops-1696602987

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்லாந்துக்கும் லிதுவேனியாவுக்கும் இடையான எரிவாயு குழாயை ரஸ்ய கப்பல் ஒன்று உடைத்துள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/10/2023 at 17:10, ஏராளன் said:

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!

மேற்கத்தேய நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் ரஷ்யா ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அகல கால் வைத்த அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தர்மசங்கட நிலை.....
எதை கவனிப்பது....?

உக்ரேனையா?

அல்லது....

மத்திய கிழக்கு சொக்கத்தங்கம் இஸ்ரேலையா?

ஐயகோ.....😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப. செ

கிரைமியாவின் செவஸ்டபோலில் நிண்ட Pavel Derzhavin என்ற ரஸ்ய ரோந்துக்கப்பல் - மூழ்கடிக்கப்பட்டுள்ளதாம்.

(நாங்கள் வாயை திறந்தாலே ரஸ்யாவுக்கு வெளுவைதான் போலயே🤣).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எக்ஸகத்தில் எவனோ உக்ரைனுக்கு ஜால்ரா அடிக்கிறவனை நம்பி ஒருத்தர் நல்லா உருட்டுறார் உருட்டுக்கட்டைகளாக. யாழ் தான் உருட்டி விளையாட கிடைச்சிருக்குப் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று வெளியிட்ட உறுதி படுத்த படாத உருட்டலை இன்னொரு ஒரு new media ஊடகத்தின் கணக்கும் உருட்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!

 இப்படி ஊர் உலக நிலவரம் தெரியாத புரினெல்லாம் ஒரு அணுவாயுத நாட்டின் தலைமையில் இருக்கிறார் என்றால் எங்கையோ உதைக்கிறது!

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, Justin said:

"ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!

 இப்படி ஊர் உலக நிலவரம் தெரியாத புரினெல்லாம் ஒரு அணுவாயுத நாட்டின் தலைமையில் இருக்கிறார் என்றால் எங்கையோ உதைக்கிறது!

உக்கிரேனிற்கான மேற்கின் முழுமையான நிதி உதவி நின்றால் எனவே புட்டின் குறிப்பிட்டதாக கருதுகிறேன்.

உக்கிரேனது நாளொன்றிற்கான செலவாக் 100 மில்லியன் செலவிடப்படுகிறதாக உக்கிரேன் கூறுகிறது ஆனால் அந்த தொகை 200 மில்லியனுக்கு கூடுதலாக உள்ளதாக அண்மையில் எங்கோ வாசித்த நினைவு.

https://kyivindependent.com/reznikov-russias-war-costs-ukraine-100-million-daily/#:~:text=Ukraine spends around %24100 million,state-run media outlet Ukrinform.

உக்கிரேனின் பொருளாதாரம் 200 பில்லியன் பொருளாதாரம், அதாவது நாளொன்றிற்கு 1% தனது GDP இல் செலவு செய்தாக வேண்டும்.

தற்போது தனது GDP இல் 70% கடனை கொண்டுள்ளது, உக்கிரேனின் வட்டி விகிதம் 18% விகிதத்திற்கு சற்று கூடுதலாக உள்ளது.

இந்த நிலவரங்களை வைத்து பார்க்கும் போது உக்கிரேன் மேற்கின் உதவிகள் நிறுத்தப்படுமாயின் தற்போது போல போரினை தொடர முடியாது எனவே கருதுகிறேன்.

மறுவளமாக எவ்வளவு காலம் இரஸ்சியா இந்த போரினை தாக்குபிடிக்கும்?

இரஸ்சிய பொருளாதாரம் ஏறத்தாழ 1 ரில்லியன் என கருதுகிறேன் , அதன் கடன் 20% GDP இல் உள்ளது, வட்டி விகிதம் ஏறத்தாழ 13% அதன் பாதுகாப்பு செலவு 87 பில்லியன், 

இரண்டு வருட காலம் தொடர்ந்து போரினை தொடர்ந்தால் தற்போதுள்ள கடன் 30% GDP இல் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஏற்கனவே தனது இருப்பில் உள்ள தங்கத்தினை இரஸ்சியா விற்றதாக கூறப்பட்டது(அளவு தெரியவில்லை). 

இரஸ்சியாவின் சேமிப்பு முழுமையாக இல்லாவிட்டாலும் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனால் தற்போதுள்ள சூழ்நிலையின்படி ( பெற்றோல் விலை அதிகரிப்பு, பலனற்ற பொருளாதார தடை) எந்த வித பிரச்சினையுமின்றி போரினை தொடரமுடியும்.

பெற்றோலின் விலையினை சரிப்பதற்காக அமெரிக்கா மத்திய கிழக்கில் உற்பத்தியினை அதிகரிக்க கூறிய உத்தரவினை மத்திய கிழக்கு நாடுகள் அலட்சியம் செய்தமையினால் அமெரிக்கா தனது இருப்பினுள் இருந்த பெற்றோலினை குறைந்த விலையில் விற்றுவிட்டு தற்போது வெறும் 17 நாள் இருப்பு எனும் ஆபத்தான கட்டத்தில் நிற்கிறது.

முன்பு ஒரு திரியில் குறிப்பிட்ட 2030 இல் இரு வேறுபட்ட வட்டி விகிதத்தில் அமெரிக்க கடன் (வட்டி விகிதம்2.5%) 1 ரில்லியன் கடன் வட்டி, அடுத்த வட்டி விகிதம் (5%) 2ரில்லியன் கடன் வட்டி என ஒரு அண்ணளவான கணிப்பினை அந்த இலக்கங்களுடன் குறிப்பிட்ட நினைவுள்ளது.

https://www.foxbusiness.com/economy/the-us-paying-record-amount-interest-on-national-debt

இந்த தளத்தில் 2032 1.4 ரில்லியன் கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது மொத்த பாதீட்டில் 10% அதிகளவான கடன் வட்டி செலுத்தும் நிலை உருவாகும், ஏற்கனவே அமெரிக்க பணமுறியினை நாடுகள் விற்பதனால் அதன் yeild 5% மேலாக அதிகரித்து விட்டது, பல தடவை ஜெனற் ஜெலன் சீன விஜயம் செய்தும் பணமுறி விற்பனை அதிகரிப்பு குறையவில்லை, இதனை வேறு ஒரு திரியில் அமெரிக்க மத்திய வங்கி 1919 பின் முதல் தடவையாக பண இழப்பை சந்திக்கிறது என குறிப்பிட்ட நினைவுள்ளது.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா விரும்பினாலும் இந்த போரிற்கு உதவிட முடியாது.

போரினை சமாதானமாக முடிப்பதே சிறந்தது.

Edited by vasee
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, vasee said:

இவையெல்லாம் பற்றி முன்னரும் உரையாடியிருக்கிறோம் வேறு திரிகளில்.

அமெரிக்காவின் பொருளாதாரம், இராணுவ மேலாண்மை, தேசிய பாதுகாப்பு, சட்ட ஆட்சி என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இராணுவ மேலாண்மை இல்லயெனில் பொருளாதாரம் நிலைக்காது, ஐரோப்பாவில் பாதுகாப்பு இல்லையெனில் அமெரிக்காவிற்கும் பாதுகாப்பில்லை, பாதுகாப்பில் குறைபாடு வந்தால் அமெரிக்க டொலர், பங்குச் சந்தை எல்லாம் பாதிக்கப் படும்.

எனவே, தான் எவ்வளவு  நிதி உக்ரைனுக்கோ, இஸ்ரேலுக்கோ அமெரிக்கா கொடுக்கிறது என்பதை விட, அதனால் அமெரிக்கா எதைப் பெறுகிறது என்பதையும் பார்த்தே எல்லாம் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கு ஒரு டொலர் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்து "போரை முடித்து விடலாம், உக்ரைனை வெட்டி விடலாம்" என்ற tunnel vision முடிவை அமெரிக்கா இலகுவாக எடுக்காது.

அப்படி வெட்டி விட வேண்டும் என்று கூறும் சிவப்புக் கட்சியினர் 2024 இல் காங்கிரஸ் தேர்தலில் ஆசனங்கள் இழப்பார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Justin said:

ஆம், வேறு திரிகளி உரையாடியுள்ளோம்.

பிரித்தானியா இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுக்க காரணமாக இருந்ததிற்கு காரணமாக கூறப்படுவது, பிரித்தானியா அப்போது அதன் கடன் தொகை GDP இல் 240%, தற்போது அமெரிக்கா 122% GDPஇல் கடனை கொண்டுள்ளது, முன்பு கணிக்கப்பட்ட 5% ஆண்டு கடனதிகரிப்பினடிப்படையில் 31 ரில்லியன் கடனில் (தற்போது 33 ரில்லியன்) 50.3 ரில்லியன் கடன் 10 ஆண்டுகளில் ஏற்படும், தற்போது அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆண்டொன்றிற்கு சராசரியாக 5% என்றால் 10 ஆண்டுகளில் கிட்டதட்ட 37.7 ரில்லியன். ஆனால் தற்போது 2.1% பொருளாதார வளர்ச்சி 28.4 ரில்லியன் பொருளாதாரம், தற்போது பணமுறி வட்டி விகிதம் 5.95% வரை அதிகரித்துள்ளது, சராசரி கடனுக்கான வட்டி யாக 2.95% தற்போது செலுத்துகிறது, புதிய கடன் வட்டி 5% மேலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது இதனை கருத்தில் கொள்ளும் போது 10 வருடங்களில் இரண்டாம் உலக போரின் பின்னரான காலத்தில் பிரித்தானியாவின் நிலை அதாவது பொருளாதாரத்தினை விட 2 மடங்கு அதிகமான கடனினை உள்ள நாடாக அமெரிக்கா மாறிவிடும்.

நீங்கள் கூறுவது போல உக்கிரேனிற்கான 100 அல்லது 200 பில்லியன் செலவு என்பது அமெரிக்காவினை பொறுத்தவரை ஒன்றுமில்லை ஆனால், அமெரிக்க பொருளாதார கொள்கைக்கும் இராஜதந்திர கொள்கைக்குமிடையேயான முரண் பொருளாதார நலிவினை துரிதமாக்குகிறது, எதிர்காலத்தில் தற்போதய அமெரிக்க ஏகாதிபத்தியம் இல்லாமல் போவதற்கு காரணமாகும்.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் அதிகரித்த இராணுவ செலவீட்டினை கட்டாயம் மட்டுப்படுத்தியே ஆகவேண்டும் குறிப்பாக பல நாடுகளில் உள்ள தளங்களை உடனடியாக மூடவேண்டும்,மற்றது டொலரினை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்,  மூன்றாவது பொருளாதார வளர்ச்சியினை தூண்டுவது, மூன்றாவது முதல் இரண்டிலும் தங்கியுள்ளதுடன் அரசின் பொருளாதார கொள்கையிலும் தங்கியுள்ளது. என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

முன்பு ஒரு திரியில் குறிப்பிட்ட 2030 இல் இரு வேறுபட்ட வட்டி விகிதத்தில் அமெரிக்க கடன் (வட்டி விகிதம்2.5%) 1 ரில்லியன் கடன் வட்டி, அடுத்த வட்டி விகிதம் (5%) 2ரில்லியன் கடன் வட்டி என ஒரு அண்ணளவான கணிப்பினை அந்த இலக்கங்களுடன் குறிப்பிட்ட நினைவுள்ளது.

2030 அல்ல 2033 (10 ஆண்டில்), 2.5% வீத வட்டி அல்ல 2% விகித வட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

இந்த நிலவரங்களை வைத்து பார்க்கும் போது உக்கிரேன் மேற்கின் உதவிகள் நிறுத்தப்படுமாயின் தற்போது போல போரினை தொடர முடியாது எனவே கருதுகிறேன்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேன் தமக்கு வழங்கப்பட்ட கொத்து குண்டுகளை  பாவித்து Berdyansk and Luhansk  ஆகிய இடங்களில் உள்ள ரஸ்ய விமான ஓடுபாதைகளை தாக்கியுள்ளதாம். இது ஹெலிகள் எரியும் காட்சியாம்.

பைடனுக்கு வாக்கு கொடுத்தது போலவே கொத்து குண்டை சரியான இடத்தில் பாவிக்கிறோம் என்கிறார் செலன்ஸ்கி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமா இன்னும் போர் நடக்குதா? அங்கு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2023 at 15:03, vasee said:

ஆம், வேறு திரிகளி உரையாடியுள்ளோம்.

பிரித்தானியா இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுக்க காரணமாக இருந்ததிற்கு காரணமாக கூறப்படுவது, பிரித்தானியா அப்போது அதன் கடன் தொகை GDP இல் 240%, தற்போது அமெரிக்கா 122% GDPஇல் கடனை கொண்டுள்ளது, முன்பு கணிக்கப்பட்ட 5% ஆண்டு கடனதிகரிப்பினடிப்படையில் 31 ரில்லியன் கடனில் (தற்போது 33 ரில்லியன்) 50.3 ரில்லியன் கடன் 10 ஆண்டுகளில் ஏற்படும், தற்போது அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆண்டொன்றிற்கு சராசரியாக 5% என்றால் 10 ஆண்டுகளில் கிட்டதட்ட 37.7 ரில்லியன். ஆனால் தற்போது 2.1% பொருளாதார வளர்ச்சி 28.4 ரில்லியன் பொருளாதாரம், தற்போது பணமுறி வட்டி விகிதம் 5.95% வரை அதிகரித்துள்ளது, சராசரி கடனுக்கான வட்டி யாக 2.95% தற்போது செலுத்துகிறது, புதிய கடன் வட்டி 5% மேலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது இதனை கருத்தில் கொள்ளும் போது 10 வருடங்களில் இரண்டாம் உலக போரின் பின்னரான காலத்தில் பிரித்தானியாவின் நிலை அதாவது பொருளாதாரத்தினை விட 2 மடங்கு அதிகமான கடனினை உள்ள நாடாக அமெரிக்கா மாறிவிடும்.

நீங்கள் கூறுவது போல உக்கிரேனிற்கான 100 அல்லது 200 பில்லியன் செலவு என்பது அமெரிக்காவினை பொறுத்தவரை ஒன்றுமில்லை ஆனால், அமெரிக்க பொருளாதார கொள்கைக்கும் இராஜதந்திர கொள்கைக்குமிடையேயான முரண் பொருளாதார நலிவினை துரிதமாக்குகிறது, எதிர்காலத்தில் தற்போதய அமெரிக்க ஏகாதிபத்தியம் இல்லாமல் போவதற்கு காரணமாகும்.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் அதிகரித்த இராணுவ செலவீட்டினை கட்டாயம் மட்டுப்படுத்தியே ஆகவேண்டும் குறிப்பாக பல நாடுகளில் உள்ள தளங்களை உடனடியாக மூடவேண்டும்,மற்றது டொலரினை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்,  மூன்றாவது பொருளாதார வளர்ச்சியினை தூண்டுவது, மூன்றாவது முதல் இரண்டிலும் தங்கியுள்ளதுடன் அரசின் பொருளாதார கொள்கையிலும் தங்கியுள்ளது. என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

ரவுடிஸ்யம் இனியும் கைகொடுக்கும் என்ற மனப்பிராந்தியில் மிதந்துகொண்டு இருக்கும்போதுதான் 
சீனா ட்ராகோன் எழும்பி நிற்கிறது இன்னமும் திருந்தவில்லை 
இனி திருந்த இடம் இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, விசுகு said:

ஆமா இன்னும் போர் நடக்குதா? அங்கு?

மேற்கத்தையவர்களுக்கு உக்ரேனை விட இஸ்ரேல்  மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா?😂
செலென்ஸ்கி ரஷ்யாவிடம் தஞ்சமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்தையவர்களுக்கு உக்ரேனை விட இஸ்ரேல்  மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா?😂
செலென்ஸ்கி ரஷ்யாவிடம் தஞ்சமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.😎

ஹஹஹா உண்மை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனா ட்ராகன் எழும்பி விட்டது (ஆனால், உள்ளூரில் ~20% இளையோர் வேலை வாய்ப்பின்மையாம் சீனாவில்!😎

பிறிக்ஸ் நாணயம் டாலரை விழுங்கி விட்டது

இந்தா கியேவ் விழுந்து விடப் போகிறது..

இப்படி பல "அமிக்டலா" வழியாக யோசிக்கும் அபிப்பிராயங்களைப் பார்த்தாயிற்று, ஒன்றும் நடந்த மாதிரித் தான் தெரியவில்லை!

பி.கு: இங்கே உள்ளூரில் இதே போல அமிக்டலா வழியாக யோசித்து "உக்ரைனுக்கு நிதியை நிறுத்து" என்ற கூப்பாட்டின் வழியாக கீழ் சபையின் சிவப்புக் கட்சியின் ஒரு சிறு அணி மக்கார்தியை சபாநாயகர் பதவியில் இருந்து அகற்றியது. இப்போது, இஸ்ரேலுக்கு அதை விட அதிக உதவி குறுகிய நாட்களில் போகிற நிலையில், "இஸ்ரேலுக்கு உதவியை நிறுத்து" என்று கத்த முடியாமல் தொண்டையில் முள் சிக்கித் தவிக்கிறார்கள்😂!

இப்படி எதிர்த்து, அடுத்த தேர்தலில் யூத அமெரிக்கர்களின் வாக்கை சிவப்புக் கட்சி இழக்க வேண்டுமென நான் யாசிக்கிறேன்!    

அமிக்டலா - Amygdala: மூளையின் அடிப்பாகத்தில் இருக்கும் உணர்ச்சிக்குப் பொறுப்பான பகுதி! இதனை முன் மூளைப் படையின் (prefrontal cortex) தரவு கிரகிக்கும் பகுதி கட்டுப்படுத்தா விட்டால், உணர்ச்சி மயமான கோசங்கள் மட்டுமே தரவுகள் போலத் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஹஹஹா உண்மை..

ஒரு வழியாக உக்ரேனில் நடந்த மனித பேரவலம் பற்றி எழுத நேரம் கிடைத்து விட்டதாக்கும்.

அப்படியே எழுதி கொட்டி விட்டீர்கள் போங்கள்🤣

1 hour ago, குமாரசாமி said:

மேற்கத்தையவர்களுக்கு உக்ரேனை விட இஸ்ரேல்  மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா?😂
செலென்ஸ்கி ரஷ்யாவிடம் தஞ்சமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.😎

புட்டினின் 3 நாள் யுத்தத்தின் 602 நாள் இன்று🤣.

பிகு

ஏதோ 599 நாட்கள் எக்ஸ்ராவாக எடுத்து விட்டேன் யுவர் ஆனர். இதை பெரிய குற்றம் எண்டு என் மேல் வழக்கு போட்டுள்ளார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

புட்டினின் 3 நாள் யுத்தத்தின் 602 நாள் இன்று🤣.

பிகு

ஏதோ 599 நாட்கள் எக்ஸ்ராவாக எடுத்து விட்டேன் யுவர் ஆனர். இதை பெரிய குற்றம் எண்டு என் மேல் வழக்கு போட்டுள்ளார்கள்🤣

காகம் கரிச்சட்டைய பார்த்து நீ கறுப்பு எண்டு சொன்ன பீலிங் தெரியுது😂
நம்புங்கள் அடுத்த தைப்பொங்கள் தமிழீழத்தில் என சொன்னதை மறந்து இப்போதும் கூத்தாடிக்கொண்டிருக்கின்றோம் அல்லவா அது போல்தான் இதுவும்...
அதே போல் இந்தா சதாம் ஹுசைன அழிக்கிறம் தூக்கிறம் எண்டு சொன்ன பெரியண்ணைக்கு கள்ள கேஸ் போட்டு தூக்கிலை போட எவ்வளவு நாள் செண்டதாம்?😋

ரஷ்யா இப்பவும் உக்ரேன் மண்ணில் தான் நிற்கின்றது. மேற்குலகம் ஒன்று சேர்ந்து இதுவரைக்கும் ஏதாவது செய்ய முடிந்ததா? இல்லையே!! அது சரி இப்ப செலென்ஸ்கி டெய்லி போசெய்திகள் குடுக்கிறேல்லை ஏன்...ஏஏ ஏன்? :cool:

நிற்க...

நான் மேற்கத்திய அரசியல் முறைகளை மதிப்பவன்.வரவேற்பவன். இவர்களின் மனிதாபிமான கொள்கைகளை நேசிப்பவன். ஆனால் இவர்களின் வெளிநாட்டு கொள்கைகளை விரும்பாதவன்.
தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவனுக்கு ஒரு கொள்கை 🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

🤣 இந்த போரை கொரிய யுத்தம் போல் ஒரு உறங்கு நிலைக்கு கொண்டு போவதுதான் இரு தரப்புக்கும் நல்லது.

பின்லாந்து ஒரு பெரும் பகுதியை ரஸ்ய பூதத்துக்கு விட்டு கொடுத்தது போல் - உக்ரேனும் இப்போ ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள 18% ஐ விட்டு கொடுத்து விட்டு அதன் விலையாக நேட்டோ, ஈயு அங்கதுவத்தை பெறலாம்.

புட்டினும் ரஸ்யாவிலாவது மீசையில் மண் படவில்லை என சமாளிக்கலாம்.

———

பெரியண்ணை ஈராக்கை டக் எண்டு பிடிச்சுப்போட்டார். பிறகு வழக்கு என்ன தான் பொய் கேஸ் எண்டாலும் இழுத்தடிச்சு முடிச்சால்தானே விசாரணை நடந்தது எண்ட பீலிங்கை உருவாக்க முடியும்🤣.

————

செலன்ஸ்கி டெய்லி கொடுக்க செய்தி இருக்க வேணுமே? அண்மையில் ரஸ்யா அட்வீகா நகரில் முன்னேற முயன்று அடிவாங்கியதை தவிர ஒரு மாதமாக பெரிய நகர்வு ஏதும் இல்லை.

கொவிட் நேரம் பொரிஸ் ஒவ்வொரு நாளும் சந்திப்பு நடத்தினார். பின்னர் நிப்பாட்டினார். அப்படிதான் இதுவும்.

2 hours ago, குமாரசாமி said:

நான் மேற்கத்திய அரசியல் முறைகளை மதிப்பவன்.வரவேற்பவன். இவர்களின் மனிதாபிமான கொள்கைகளை நேசிப்பவன். ஆனால் இவர்களின் வெளிநாட்டு கொள்கைகளை விரும்பாதவன்.
தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவனுக்கு ஒரு கொள்கை 🙃

நான் இதை வரவேற்பவன் என்பதை விட - உள்ளதில் திறமானது என்பதால் இதை ஆதரிப்பவன்.

வெளிநாட்டு கொள்கை - இதை முன்பே எழுதி உள்ளேன். வெளிநாட்டு கொள்கை, சர்வதேச சட்டம் எல்லாம் சும்மா - லுலுலுலா. வல்லான் வகுத்ததே சட்டம்.

மேற்கு - உள்நாட்டில் நல்லாட்டாட்சி. வெளிநாட்டில் காட்டாட்சி.

ரஸ்யா+சீனா+ இத்யாதிகள் - உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் காட்டாட்சி.

இதுமட்டுமே வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, goshan_che said:

🤣 இந்த போரை கொரிய யுத்தம் போல் ஒரு உறங்கு நிலைக்கு கொண்டு போவதுதான் இரு தரப்புக்கும் நல்லது.

பின்லாந்து ஒரு பெரும் பகுதியை ரஸ்ய பூதத்துக்கு விட்டு கொடுத்தது போல் - உக்ரேனும் இப்போ ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள 18% ஐ விட்டு கொடுத்து விட்டு அதன் விலையாக நேட்டோ, ஈயு அங்கதுவத்தை பெறலாம்.

புட்டினும் ரஸ்யாவிலாவது மீசையில் மண் படவில்லை என சமாளிக்கலாம்.

உக்ரேன் அழிவுகளுக்கு பதறிய கதறிய அலறிய  நம்மவர்களும் அரைவாசி உலகமும் .காசா அழிவுகளை கண்டு சந்தோசப்படுகின்றனர்.   வாழ்த்து சொல்லாத குறை மட்டுமே. கமாஸ் செய்த தவறுக்கு பலஸ்தீன மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? கமாஸ்  என்றால் பலஸ்தீனம் என்று அர்த்தமா? 😂

விதியின் சதியை பார்த்தீர்களா?  உக்ரேன் எனும் சிறிய கோடு அழிவினை  பலஸ்தீனம் எனும் பெரிய கோட்டு அழிவிற்குள் மேற்குலகை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. 😎 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் அழிவுகளுக்கு பதறிய கதறிய அலறிய  நம்மவர்களும் அரைவாசி உலகமும் .காசா அழிவுகளை கண்டு சந்தோசப்படுகின்றனர்.   வாழ்த்து சொல்லாத குறை மட்டுமே. கமாஸ் செய்த தவறுக்கு பலஸ்தீன மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? கமாஸ்  என்றால் பலஸ்தீனம் என்று அர்த்தமா? 😂

நான் அவதானித்தவரை  உக்ரேன் அழிவில் கவலை கொண்டவர்கள் கஸா அழிவிலும் கவலை கொள்வதாகவே தெரிகிறது.

பலர் ரஸ்யா போலவே இஸ்ரேலும் போர் குற்றம் செய்கிறது. ஹமாசை அடிக்க, மக்களை மானாவரியாக தாக்குவது போர் குற்றம், காசாவில் இருந்து வெளியேற்ற நினைப்பது இனசுத்தீகரிப்பு என்பது வரை எழுதியுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

விதியின் சதியை பார்த்தீர்களா?  உக்ரேன் எனும் சிறிய கோடு அழிவினை  பலஸ்தீனம் எனும் பெரிய கோட்டு அழிவிற்குள் மேற்குலகை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. 😎 

இதில் விதி எங்கே இருக்கிறதெனத் தெரியவில்லை. இரண்டு பிரதேச அழிவுகளும் முதிர்ச்சியற்ற மனிதர்கள் தலைமையேற்றமையால் வந்த  அவலங்கள். உக்ரைனில் அவலத்திற்கு 100% காரணம் ரஷ்யாவின் தலைமை, பலஸ்தீனத்தின் அழிவுக்கு இரு தரப்பும் சமபங்காளிகள்!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.