Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

2. பிரிகோசன் பெலரூசில் இல்லை - ரஸ்யா திரும்பிவிட்டார் என்கிறார், பெலரூஸ் அதிபர்.

இந்தச் செய்தி ஆச்சரியமாகத் தான் இருக்குது. நவால்னிக்குப் பக்கத்தில் அறை ஒதுக்கியிருப்பார்களோ என்று யோசிக்கிறேன். அரச தொலைக்காட்சியில் பிரிகோஷினின் மாளிகை, கைப்பற்றப் பட்ட தங்கக் கட்டிகள் என்பன காட்டினார்களாம் என்கிறது பிபிசி.

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Justin said:

இந்தச் செய்தி ஆச்சரியமாகத் தான் இருக்குது. நவால்னிக்குப் பக்கத்தில் அறை ஒதுக்கியிருப்பார்களோ என்று யோசிக்கிறேன். அரச தொலைக்காட்சியில் பிரிகோஷினின் மாளிகை, கைப்பற்றப் பட்ட தங்கக் கட்டிகள் என்பன காட்டினார்களாம் என்கிறது பிபிசி.

ஓம் மாளிகை, தங்கம், பல மல்டி மில்லியன் டாலர் ரொக்கம், பிரி கோசனின் விக் (டோப்பா) கலெக்சன் என பலதை காட்டியுள்ளார்கள்.

நடப்பவற்றை பார்க்க, ரஸ்யாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் உள்ளன, புட்டினிடம் முழு அதிகாரமும் இல்லை என யோசிக்க வைக்கிறது.

ஷிகோ நிச்சயம் பிரிகோசனின் எதிர் முகாம்தான்.

ஆனால் புட்டின்? இத்தனைக்கும் பிறகு பிரிகோசனை மன்னிக்க - லூக்கா சொல்லும் புட்டின் கருணையாளர் என்ற விளக்கம் நம்பும்படி இல்லை.

ஒன்றில் உண்மையில் பிரிகோசனை புட்டின் ஒரு சகோதரமாக பாவித்து மன்னிக்க தயாராகிறார்.

அல்லது ரஸ்யாவில் கொம்பிரமாட் என்பார்கள். ஆங்கிலத்தில் compromising evidence. புட்டின் பற்றிய ஏதோ கொம்பிரமார்ட் பிரிகோசனிடம் மாட்டி உள்ளாதாக இருக்கலாம்.

ஏதோ ஒன்று பிரிகோசனை பாதுகாக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஆனால் இந்த சக்தியால் - வாக்னரை கலைப்பதை, அவர்களின் டிவி சாம்ராஜ்யத்தை குலைப்பதை, வீட்டு சோதனையை - நிறுத்த முடியவில்லை.

FSB யில் இருந்து இயங்கும் winds of change எனும் மாற்றம் விரும்பும் அமைப்பு பிரிகோசனை புட்டினை மீறி இந்தளவு எதிர்க்க முடியாது.

எப்படி பார்த்தாலும் - முடிவு ரஸ்யாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகார மையங்கள் உள்ளன, புட்டினிடம் முழு அதிகாரமும் இல்லை என்பதை நோக்கியே மீள மீள வருகிறது (என் மனதில்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் அந்த வீடியோ👇

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்யாவில் - பெலாரஸ் ஜனாதிபதி

Published By: RAJEEBAN

06 JUL, 2023 | 02:41 PM
image
 
வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்யாவிலேயே உள்ளார் என பெலாரஸின் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுடனான கருத்துப்பகிர்வின்போது சிஎன்என்னிற்கு பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸாண்டர் லுகன்ஸ்கோ இதனை தெரிவித்துள்ளார்.

யெவ்ஜெனி பிரிகோசினை பொறுத்தவரை அவர் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ளார். இன்று காலை அவர் மொஸ்கோவிற்கோ அல்லது வேறு எங்கோ செல்லக்கூடும் என பெலாரஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் பெலாரஸில் இல்லை என லுகன்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவினர் எங்குள்ளனர் என்பது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பக்கூடாது, ஏன் என்றால் அது ரஸ்ய நிறுவனம் அவர்கள் தங்கள் முகாம்களிலேயே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159358

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனுக்குக் கொத்தணிக் குண்டுகளை (Cluster munitions) வழங்க அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. சுமார் 100 நாடுகளில் பாவிக்கத் தடைசெய்யப்பட்டுள்ள இந்த அழிவு ஆயுதத்தை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

உபயம் CNN

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

உக்ரேனுக்குக் கொத்தணிக் குண்டுகளை (Cluster munitions) வழங்க அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. சுமார் 100 நாடுகளில் பாவிக்கத் தடைசெய்யப்பட்டுள்ள இந்த அழிவு ஆயுதத்தை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

உபயம் CNN

ஜனநாயகம் தலைவிரித்து ஆடும்போது 
அப்ப அப்ப மக்கள் தலைகளில் அணுகுண்டுகளே வெடிக்கும்போது 
குளுஸ்டர் குண்டுகள் வெடிக்க கூடாதா?

ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள் ?
நேற்று முன்தினம்தான் பூமிக்கு வாந்தார்களோ ? 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, Maruthankerny said:

ஜனநாயகம் தலைவிரித்து ஆடும்போது 
அப்ப அப்ப மக்கள் தலைகளில் அணுகுண்டுகளே வெடிக்கும்போது 
குளுஸ்டர் குண்டுகள் வெடிக்க கூடாதா?

ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள் ?
நேற்று முன்தினம்தான் பூமிக்கு வாந்தார்களோ ? 
 
கொத்தணிக்குண்டுகள் என்றவுடனேயே நினைவிற்கு வருவது சிங்கள வான்படை வன்னியில் எமது உறவுகள் மீது அதிகளவில் கொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக வீசியவவைதான். உலகில் பல நாடுகள் இதனைத் தடை செய்திருந்தாலும்கூட, அமெரிக்கா உட்பட இன்னும் பல நாடுகள் இவற்றினை உற்பத்திசெய்து விற்று வருகின்றன. உக்ரேன் கொத்தணிக்குண்டுகளை ரஸ்ஸிய ராணுவம் மீது பாவிக்கின்றதா அல்லது பரஸ்ஸியப் பொதுமக்கள் மீது பாவிக்கப் போகின்றதா என்பது கேள்விக்குறிதான். பரவலாகத் தடை செய்யப்பட்ட , பரந்தளாவில் அழிவைத் தரும் ஆயுதம் ஒன்றினை அமெரிக்கா கொடுக்க நினைப்பது தவறு என்பதே எனது கருத்து. நாம் ஒரு தவற்றினைச் செய்யும்போது, மற்றையவ‌ர்களின் தவற்றினைச் சுட்டிக்காட்டும் தார்மீக நிலையினை (Morale) இழந்துவிடுகிறோம். 

The US will provide cluster munitions to Ukraine as part of a new military aid package: AP sources - ABC News (go.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுமக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொத்துக் குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து ஆராய்கின்றது அமெரிக்கா- நியுயோர்க் டைம்ஸ்

Published By: RAJEEBAN

07 JUL, 2023 | 09:17 AM
image
 
அமெரிக்காவின் நேசநாடுகள் உட்பட பல உலக நாடுகள் தடை செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்   ஆராய்ந்து வருகின்றார்.

உக்ரைனிடம் வெடிபொருட்கள் மிகவும் குறைவாக காணப்படுவதால் அந்த நாடு பொதுமக்களிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டுகளை கோரியுள்ளது.

ireland-cluster-bombs.jpg

கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதியும் அவரது சகாக்களும் உக்ரைன் யுத்தம் தொடர்பான மிக முக்கியமான கேள்வியுடன் போராடுகின்றனர்.

ரஸ்யாவுடனான போரில் உக்ரைனிற்கு மிகவும் அவசிய தேவையாகவுள்ள ஆட்டிலறி வெடிபொருட்கள் முற்றிலும் தீர்ந்துபோவதற்கு அனுமதிப்பதா அல்லது கொத்துக் குண்டுகளை வழங்குவதா என்பதே இந்த கேள்வி.

தடைசெய்யப்பட்ட இந்த ஆயுதம் பொதுமக்களிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது- குறிப்பாக சிறுவர்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

வியாழக்கிழமை உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது என்ற தீர்மானத்தை பைடன் எடுத்துள்ளார் போல தோன்றுகின்றது.

பைடனின்  இந்த நடவடிக்கை அவரது நெருங்கிய சகாக்கள் பலரிடமிருந்து அவரை தனிமைப்படுத்தலாம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் பல கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது சேமிப்பது ஏனைய நாடுகளிற்கு வழங்குவதை தடை செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உட்பட பைடன் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது குறித்து தயக்கம் கொண்டுள்ளனர், எனினும் இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை அமெரிக்க ஜனாதிபதியிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர் என  விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்கும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களமே பெரும் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றது -தடையாக காணப்படுகின்றது.

மனிதாபிமான காரணங்களிற்காகவும்,அமெரிக்கா தனது நேசநாடுகளின் பாதையிலிருந்து விலகிச்செல்லவேண்டிய நிலையேற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும்  அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை எதிர்க்கின்றது.

ஆனால் தற்போது பைடனின் சகாக்கள் கொத்துக்குண்டுகளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என கருதுகின்றனர்.

joe-biden.jpg

கொத்துக்குண்டுகளை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி பைடனிற்கு  தொடர் அழுத்தங்களை கொடுத்துவருகின்றார்.

கொத்துக்குண்டுகளே பதுங்குழியிலிருந்து போரிடும் ரஸ்ய படையினரை கொலை செய்வதற்கான சிறந்த ஆயுதங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வாதிடுகின்றார்.

போர்கள தேவைகளிற்கு கொத்துக்குண்டுகள் மிகவும் அவசியமானவை என்பது தற்போது 100 வீதம் உறுதியாகிவருகின்றது என அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159403

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஏராளன் said:

இது நிகழ்ந்தால், மிகவும் தவறான ஒரு நடவடிக்கை. கொத்துக் குண்டுகளால், உக்ரைன் படைகளுக்கு மேலதிக நன்மை எதுவும் கிடைக்குமென நினைக்கவில்லை. மறு பக்கம், வெடிக்காத bomblets நிறைந்த நிலப்பகுதியை ரஷ்யாவிடமிருந்து மீட்டு உக்ரைனியர்கள் குடியேறும் போது அது உக்ரைனிய மக்களுக்கு ஆப்பாக முடியும்.

யுத்தம் முடிந்த பின்னர், இந்தக் கொத்துக் குண்டுகளை கறுப்புச் சந்தையில் வேறு நாடுகளும், பயங்கரவாத அமைப்புகளும் உக்ரைனிடமிருந்து வாங்கவும் வாய்ப்புகள் உண்டு.

பைடன், அனேகமாக நல்ல முடிவை எடுப்பாரென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொத்தணி குண்டுகளை இலங்கை அரசு போல, குடிமனைகள் மீது நேரடியாக உக்ரேனோ, ரஸ்யாவோ பாவிக்காது என்றே நான் நம்புகிறேன்.

குறிப்பாக உக்ரேன் இதை ரஸ்ய மண்ணில் பாவிக்காது.

ஆனால் இந்த போரில் ரஸ்யா மரியோபோலில் நடத்திய கொடூரங்கள் - இரு பக்கமும் எதுவும் சாத்தியமே என்பதை சொல்லி நிற்கிறது.

ரஸ்யா அமைத்துள்ள பதுங்குகுழிகளை கிளியர் பண்ண இது தேவை (clearing the trenches) என்கிறது உக்ரேன்.

இதற்கு பதிலாக F16 ஐ கொடுக்கலாம்.

இது யுத்தம். உக்ரேனை ஒரு கையை கட்டி கொண்டு அடிபடு என சொல்ல முடியாது.

உக்ரேனிய மண்ணில் பதுங்குகுழிள் இருக்கும் ரஸ்யபடைகள் மரணம் அல்லது சரணடைதல் மூலம் அகற்ப்படவேண்டும்.

அதை கொத்தணி குண்டு அல்லாத இன்னொரு முறையில் அடைய முயன்றால் நல்லது.

புட்டின் விரும்பினால் இன்றைக்கே பின்வாங்கியும் போகலாம்.

Edited by goshan_che
Posted

அமெரிக்கா  ஈராக், ஆப்கானிஸ்தானில் கொத்தணி குண்டுகளை பாவித்தது. எந்த யோசனையும் இல்லாமல்  உக்ரேனுக்கு பைடன்  வழங்குவார் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஸ்யா ஏலவே உக்ரேனில் கொத்து குண்டுகளையும், நெருப்பு குண்டுகளையும் (தேர்மோபாரிக்) பாவித்துள்ளது என்கிறது.

சாட்சாத் - தமிழ் கார்டியன்.

https://www.tamilguardian.com/content/what-are-thermobaric-and-cluster-bombs-look-their-use-sri-lankan-army

7 minutes ago, nunavilan said:

அமெரிக்கா  ஈராக், ஆப்கானிஸ்தானில் கொத்தணி குண்டுகளை பாவித்தது. எந்த யோசனையும் இல்லாமல்  உக்ரேனுக்கு பைடன்  வழங்குவார் என நம்புகிறேன்.

ஆனந்தபுர சண்டையில் புலிகளுக்கு அதிஸ்டவசமாக ஒரு தொகை கொத்தணி குண்டுகள் கிடைத்திருந்தால் - அதை இலங்கை படை மீது பாவித்திருப்பார்களா இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பாவித்து இருப்பார்கள் அதுதான் சரி என நான் கருதுகிறேன்.

மேலே உள்ள தமிழ் கார்டியன் கட்டுரையில் இருந்து.

Photographs obtained by the Guardian show demining teams excavating cluster munitions from Kilinochchi and Chalai in Mullaitivu, sites of heavy bombardment by Sri Lankan forces during the armed conflict.

Leaked by a former employee of the Halo Trust to non-governmental organisation Together Against Genocide, the munitions in the photographs were identified by a senior weapons researcher at Human Rights Watch as “Russian-made cluster bombs and unexploded cluster submunitions”.

The former MAG official told the Guardian that cluster bombs had been found in a “densely civilian-populated area” in one of the ‘No Fire Zones’ near Puthukudiyiruppu.

His testimony adds to the large number of witness accounts that confirm the Sri Lankan government used cluster bombs during the final phase of its large-scale military offensive.

இலங்கைக்கு யார் கொத்து குண்டுகளை கொடுத்தார்கள்?

அப்போ அந்த நாட்டின் அதிபர்/அதிகாரம் மிக்கவராக யார் இருந்தார்?

யோசிக்க வேண்டிய விடயங்கள்.

Edited by goshan_che
Posted

Ukrainian and Russian thermobaric weapons in Sri Lanka

Thermobaric weapons, also known as aerosol bombs or vacuum bomb, are explosives filled with a fuel and chemical mix. On impact the explosion causes supersonic blast waves that have a significantly higher impact than conventional explosives.

The history of thermobaric use by the Sri Lankan military goes back further and with more controversy.

thermobaric_purchase_order.jpg

A reportedly leaked document by TamilNet, showing a Sri Lankan military order for thermobaric weapons.

In 2001, an investigation by the Sunday Leader and another by The Guardian revealed how British arms dealers used a loophole in UK law to sell weapons to the Sri Lankan military.

According to The Guardian, 1,000 shoulder-launched rockets with fuel-air warheads, “a unique Russian design”, were sold to Sri Lanka in June 2001, through the use of off-shore companies and both Russian and Ukranian officials.

“The Sri Lankan military have received at least two secret shipments of the RPO-A Shmel Bumblebee rockets,” it added.

“Documents seen by the Guardian show that the Sri Lankan army was originally promised up to date 1999 weapons from the manufacturers in Tula, Russia, and not the 1989-91 Ukrainian models they received. But the Sri Lankan government said this week the weapons had been "refurbished".”

RPO-A_missile_and_launcher.jpg

A RPO flamethrower (RPO-A) rocket launcher and rocket.

Sri Lankan army officers reportedly demanded bribes to authorise the deal.

"The nature of these weapons is so dreadful that they ought to be governed by an international convention such as the kind which outlawed the use of soft-nosed bullets and banned landmines," said Menzies Campbell, the then-foreign affairs spokesman of the Liberal Democrats at the time.

The Sri Lankan military’s use of these weapons is part of its aim to “annihilate” the Tamil people, said Joseph Pararajasingham, Tamil United Liberation Front MP for Batticaloa.

"I am shocked and dismayed by news report that the defense Ministry has acquired a deadly weapon to counter the on going conflict in the northeast, which will eventually affect the civilian population in these areas,” he added. "It is said that this weapon utilizes advanced fuel air explosive technique when on detonation creates deflagration as the warhead clouds expand. When this weapon is fired against structures its effect is said to be equivalent to a 122 MM. Artillery Shell.”

இரண்டு நாடுகளும் எங்களுக்கு போட கொடுத்துள்ளார்கள். இப்போ தங்களுக்குள் மாறி மாறி போட  வேண்டிய நிலை வந்துள்ளது.

https://www.tamilguardian.com/content/what-are-thermobaric-and-cluster-bombs-look-their-use-sri-lankan-army

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யா தனது நண்பன் இலங்கைக்கு இனகொலை செய்வதற்கு கொத்து குண்டுகளை கொடுத்ததோடு, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமாக கொத்து குண்டுகளை வீசி பெருந்தொகையான  மக்களை கொன்று போர் குற்றம் செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொத்தணிக்குண்டுகள் மக்கள் செறிவாக உள்ள இடங்களில் வீசப்படும்போது பெருமளவு உயிர்ச்சேதங்களை உடனடியாக உருவாக்கக் கூடியது. மேலும், கொத்தணிக் குண்டுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான குண்டுகளில் எல்லாமே ஒரே நேரத்தில் வெடிப்பதில்லை. சுமார் 30 - ‍ 40 வீதமானவை வெடிக்காமலேயே நிலத்தில் வீழ்ந்துவிடுகின்றன. பின்னர் இவற்றினைக் கையாளும்போது மீண்டும் வெடிக்கக் கூடியன. போர் இன்று நடக்கும் பகுதிகளில் ஒருகாலத்தில் மக்கள் மீளக் குடியேறும்போது இக்குண்டுகளை சிறுவர்கள் விளையாட்டுப்பொருள் என்று எண்ணி கையாளும்போது இவை வெடித்து அழிவுகளை ஏற்படுத்துவதென்பது இன்னொரு பிரச்சினை.

உக்ரேன் மீதான் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே ரஸ்ஸியாவும் உக்ரேனும் கொத்தணிக்குண்டுகளைப் பாவித்தே வருகின்றன. இவ்விரு நாடுகளும் கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதுடன் வேறு நாடுகளுக்கும் அவற்றினை ஏற்றுமதி செய்தே வருகின்றன.  ஆகவே, இந்த நாடுகளைப் பொறுத்தவரையில் கொத்தணிக் குண்டுகளை பாவிப்பதென்பது சாதாரண விடயம் தான். ஆனால், உலகிற்கு நியாயங்களைப் போதிக்கும் மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா, இக்குண்டுகளை உக்ரேனுக்கு வழங்க முடிவெடுத்திருப்பது இன்றுவரை அது பேசிவரும் நியாய தர்மங்களைக் கேள்விக்குள்ளாக்குவதுடன்,உக்ரேனுக்கு இதுவரை உதவிவரும் மேற்குலக நாடுகளுக்கிடையே பிளவினையும் இது உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா இன்றுவரை கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. ஆகவே அவற்றினை பாவிக்கவும் விற்கவும் அதனால் முடிகிறது.

ஆக்கிரமிப்பொன்றினை எதிர்த்து, தனது சொந்த மண்ணில் போராடும் ஒரு அமைப்போ, இனமோ, அல்லது நாடோ கொத்தணிக் குண்டுகளை தமது இறுதி ஆயுதமாகப் பாவிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. முன்னேறிவரும் ஆயிரக்கணக்கான எதிரி ராணுவம் மீது கொத்தணிக் குண்டுகளைப் பாவிப்பதன் மூலம் முன்னகர்வைத் தடுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதேகுண்டுகளைத் தம்மீது எதிரி பாவிப்பதைத் தவறென்று கோரும் தார்மீக நிலையினை அது இழந்துவிடுகிறது. அல்லது, இதேவகையான அழிவுகளை ஏற்படுத்தும் வேறு ஆயுதங்களை எதிரி தம்மீது பாவிப்பதற்கு இதுவே கதவுகளையும் திறந்து விடுகிறது.

ஆனந்தபுரத்தில் எம்மிடம் கொத்தணிக் குண்டுகள் இருந்திருந்தால் நிச்சயம் பாவித்திருக்கவேண்டும். எதிரியைப் பின்வாக்கச் செய்யவும், ஆக்கிரமிப்பை உடைக்கவும் இது நிச்சயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், எமது நிலத்தின் எதிரியின் மக்கள் வாழவில்லை. இருப்பது எம்மை அழிக்க முன்னேறி வரும் ஆயிரமாயிரம் எதிரிகளின் படைகள் தான்.

ஆனால், எம்மிடம் எதுவுமே இருக்கவில்லை. ஆகவேதான், எம்மால் இன்று கொத்தணிக் குண்டுகளைப் பாவிப்பதை தார்மீக நிலையிலிருந்து விமர்சிக்க முடிகிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

Ukrainian and Russian thermobaric weapons in Sri Lanka

Thermobaric weapons, also known as aerosol bombs or vacuum bomb, are explosives filled with a fuel and chemical mix. On impact the explosion causes supersonic blast waves that have a significantly higher impact than conventional explosives.

The history of thermobaric use by the Sri Lankan military goes back further and with more controversy.

thermobaric_purchase_order.jpg

A reportedly leaked document by TamilNet, showing a Sri Lankan military order for thermobaric weapons.

In 2001, an investigation by the Sunday Leader and another by The Guardian revealed how British arms dealers used a loophole in UK law to sell weapons to the Sri Lankan military.

According to The Guardian, 1,000 shoulder-launched rockets with fuel-air warheads, “a unique Russian design”, were sold to Sri Lanka in June 2001, through the use of off-shore companies and both Russian and Ukranian officials.

“The Sri Lankan military have received at least two secret shipments of the RPO-A Shmel Bumblebee rockets,” it added.

“Documents seen by the Guardian show that the Sri Lankan army was originally promised up to date 1999 weapons from the manufacturers in Tula, Russia, and not the 1989-91 Ukrainian models they received. But the Sri Lankan government said this week the weapons had been "refurbished".”

RPO-A_missile_and_launcher.jpg

A RPO flamethrower (RPO-A) rocket launcher and rocket.

Sri Lankan army officers reportedly demanded bribes to authorise the deal.

"The nature of these weapons is so dreadful that they ought to be governed by an international convention such as the kind which outlawed the use of soft-nosed bullets and banned landmines," said Menzies Campbell, the then-foreign affairs spokesman of the Liberal Democrats at the time.

The Sri Lankan military’s use of these weapons is part of its aim to “annihilate” the Tamil people, said Joseph Pararajasingham, Tamil United Liberation Front MP for Batticaloa.

"I am shocked and dismayed by news report that the defense Ministry has acquired a deadly weapon to counter the on going conflict in the northeast, which will eventually affect the civilian population in these areas,” he added. "It is said that this weapon utilizes advanced fuel air explosive technique when on detonation creates deflagration as the warhead clouds expand. When this weapon is fired against structures its effect is said to be equivalent to a 122 MM. Artillery Shell.”

இரண்டு நாடுகளும் எங்களுக்கு போட கொடுத்துள்ளார்கள். இப்போ தங்களுக்குள் மாறி மாறி போட  வேண்டிய நிலை வந்துள்ளது.

https://www.tamilguardian.com/content/what-are-thermobaric-and-cluster-bombs-look-their-use-sri-lankan-army

ரஸ்ஸியாவுடனான போர் ஆரம்பிக்கும்வரை உக்ரேனின் மனோநிலைக்கும், தர்ம நியாயங்களைக் கடைப்பிடிக்கும் அதன் நிலைப்பாட்டிற்கும், ரஸ்ஸியாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே அதிக வேறுபாடிருந்ததாக நான் நினைக்கவில்லை. அடிப்படையில் இரு நாடுகளும் அதே கம்மியூனிச, அடக்குமுறை கட்டமைப்புக்குள்ளிருந்து வந்தவைதான்.இன்று மேற்குலகைக் கவர மனிதாபிமான வேஷம் போடும் உக்ரேன்  மிக அண்மைக் காலம்வரைக்கும் சோவியத் காலத்து நாசகார ஆயுதங்களை ஏற்றுமதி செய்தே வந்திருக்கிறது. இலங்கை கூட உக்ரேனிடமிருந்தும் ரஸ்ஸியாவிடமிருந்தும் பல ஆயுதங்களைத் தொடர்ச்சியாகவே கொள்வனவு செய்து வந்திருக்கிறது. 

எம்மை அழிக்க இந்த நாடுகள் இரண்டும் துணைபோனவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

இரண்டு நாடுகளும் எங்களுக்கு போட கொடுத்துள்ளார்கள். இப்போ தங்களுக்குள் மாறி மாறி போட  வேண்டிய நிலை வந்துள்ளது

ஓம். ஆனால் - அப்போ இருந்தது செலன்ஸ்கியின் உக்ரேன் அல்ல.

ஆனால் அப்போதும், இப்போதும் இருப்பது புட்டினின் ரஸ்யா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவுடனான போர் ஆரம்பிக்கும்வரை உக்ரேனின் மனோநிலைக்கும், தர்ம நியாயங்களைக் கடைப்பிடிக்கும் அதன் நிலைப்பாட்டிற்கும், ரஸ்ஸியாவின் நிலைப்பாட்டிற்கும் இடையே அதிக வேறுபாடிருந்ததாக நான் நினைக்கவில்லை. அடிப்படையில் இரு நாடுகளும் அதே கம்மியூனிச, அடக்குமுறை கட்டமைப்புக்குள்ளிருந்து வந்தவைதான்.இன்று மேற்குலகைக் கவர மனிதாபிமான வேஷம் போடும் உக்ரேன்  மிக அண்மைக் காலம்வரைக்கும் சோவியத் காலத்து நாசகார ஆயுதங்களை ஏற்றுமதி செய்தே வந்திருக்கிறது. இலங்கை கூட உக்ரேனிடமிருந்தும் ரஸ்ஸியாவிடமிருந்தும் பல ஆயுதங்களைத் தொடர்ச்சியாகவே கொள்வனவு செய்து வந்திருக்கிறது. 

எம்மை அழிக்க இந்த நாடுகள் இரண்டும் துணைபோனவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

தனியே தரவுகளை மட்டும் வைத்து பார்த்தால் இது சரியே.

ஆனால்,

ஹிட்லரின் ஜேர்மனியின் கொடுமைகளுக்காக…..

மேர்கலின் ஜேர்மனி மீது கறுவியம் வைப்பது சரிதானா?

49 minutes ago, ரஞ்சித் said:

ஆனந்தபுரத்தில் எம்மிடம் கொத்தணிக் குண்டுகள் இருந்திருந்தால் நிச்சயம் பாவித்திருக்கவேண்டும். எதிரியைப் பின்வாக்கச் செய்யவும், ஆக்கிரமிப்பை உடைக்கவும் இது நிச்சயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், எமது நிலத்தின் எதிரியின் மக்கள் வாழவில்லை. இருப்பது எம்மை அழிக்க முன்னேறி வரும் ஆயிரமாயிரம் எதிரிகளின் படைகள் தான்.

நன்றி.

இதுதான் என் நிலைப்பாடும்.

உக்ரேனும் இப்படி ஒரு நிலையில் (தன் நிலத்தில் பதுங்குகுழி அமைத்து இருக்கும்) ஆக்கிரமிப்பு படையை அழிக்கவே இதை கோருவதாகவே நான் விளங்கி கொள்கிறேன்.

ஆனால் இதை மேற்கு குறிப்பாக அமெரிக்கா கொடுக்ககூடாது, மாறாக பதுங்கு குழிகளை தாக்கும் வேறு ஆயுதங்களை கொடுக்கலாம் என்பதே என் நிலைப்பாடு.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொத்து/கொத்தணி குண்டுகளை உக்ரேனுக்கு கொடுப்போம் என பைடன், வெள்ளை மாளிகை அறிவிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்க தீர்மானம் - தனது முடிவை நியாயப்படுத்துகின்றார் பைடன்

Published By: Rajeeban

08 Jul, 2023 | 11:12 AM
image

உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது என்ற அமெரிக்காவின் முடிவை ஜனாதிபதி ஜோபைடன் நியாயப்படுத்தியுள்ளார்.

பொதுமக்களை கொன்ற வரலாற்றை கொண்ட கொத்துக்குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது என்ற மிகவும் கடினமான முடிவை அவர் நியாயப்படு;த்தியுள்ளார்.

கொத்துக்குண்டுகளை வழங்குவா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு நீண்டகாலம் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிடம் வெடிபொருட்கள் முடிவடைவதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என உக்ரைன் தலைவர்கள் இதனை வரவேற்றுள்ள அதேவேளை  மொஸ்கோ இதனை சாடியுள்ளது.

உலகின் 120 நாடுகள் கொத்துக்குண்டுகளை தடை செய்துள்ளன.

அடுத்தவாரம் நேட்டோவின் உச்சிமாநாடு இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் நேசநாடுகளிற்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

கொத்துக்குண்டுகள் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் உணர்ந்திருந்ததால் உக்ரைனிற்கு அவற்றை வழங்கும் நடவடிக்கைகளை நீண்டகாலமாக தவிர்த்துவந்தோம் என  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிடம் ஆட்டிலறிகள் இல்லாத நிலை உருவாகின்றது அமெரிக்கா உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளை விநியோகங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எந்த நிலையிலும் உக்ரைனை பாதுகாப்பற்ற நிலையில் விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொத்துக்குண்டுகள் நீண்டகாலம் வெடிக்காமல் மண்ணில் புதையுண்டு இருக்ககூடியவை என்பதால் சர்ச்சைகள் காணப்படுகின்றன.
 
https://www.virakesari.lk/article/159491

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்ய-உக்ரேன் யுத்தம் தொடங்கி 500 நாள் நிறைவை ஒட்டி, செலன்ஸ்கி கருங்கடலில் உள்ள பாம்பு தீவுக்கு விஜயம் செய்துள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

கொத்து/கொத்தணி குண்டுகளை உக்ரேனுக்கு கொடுப்போம் என பைடன், வெள்ளை மாளிகை அறிவிப்பு. 

1980 களில் ரஸ்ஸியாவுக்கெதிராகப் போராடிய ஆப்கானிய முஜஹிதீன்களுக்கு அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளான ஸ்டிஞ்சர்களை வழங்கியது. பின்னர் அவை பயணிகள் விமானங்களைத் தாக்கப் பயன்படலாம் அல்லது கறுப்புச் சந்தையில் விற்கப்படலாம் என்பதால் தானே பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கியது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரஞ்சித் said:

1980 களில் ரஸ்ஸியாவுக்கெதிராகப் போராடிய ஆப்கானிய முஜஹிதீன்களுக்கு அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளான ஸ்டிஞ்சர்களை வழங்கியது. பின்னர் அவை பயணிகள் விமானங்களைத் தாக்கப் பயன்படலாம் அல்லது கறுப்புச் சந்தையில் விற்கப்படலாம் என்பதால் தானே பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கியது. 

எல்லாம் ஒரு வகை cost -benefit analysis அடிப்படையில்தான் செய்யப்படுகிறன என நினைக்கிறேன்.

அமெரிக்காவை அதன் சகாக்களை நோக்கி இந்த ஆயுதங்கள் திரும்பாதாவரை - இதனால் வரும் பெனிபிட் கூட என கணித்து கொடுக்கிறார்கள்.

அண்மையில் கூட தலிபான் ஆப்கான் ஆமியிடம் கைப்பற்றிய ஆயுதங்களை வைத்து, ஈரானை அடித்தது.

தனது வீரர்கள் இழப்பை குறைக்க, இரு நகரங்கள் மீது அணுகுண்டை போட்ட நாடு அல்லவா?

எல்லாமுமே cold calculations தான். 

பிரித்தானியாவின் ஸ்டோம் ஷடோ குரூஸ் ஏவுகணை ஒன்றை அதிகம் சேதம் இல்லாமல் ரஸ்யா சுட்டு வீழ்த்தி, கைப்பற்றியுள்ளதாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆபத்தான க்ளஸ்டர் வெடிகுண்டுகளை யுக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்கா

டான்பாஸ் பகுதியில் க்ளஸ்டர் குண்டுகளால் தனது வீட்டை இழந்த பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டான்பாஸ் பகுதியில் க்ளஸ்டர் குண்டுகளால் தனது வீட்டை இழந்த பெண்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மிக ஆபத்தான ‘க்ளஸ்டர் வெடிகுண்டுகள்’ என்று அழைக்கப்படும் கொத்து குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், கொத்துக் குண்டுகளின் ஆபத்து காரணமாகவே யுக்ரேன் நாட்டுக்கு அவற்றை அளிப்பதை இத்தனை மாதங்களாக தாமதப்படுத்தியதாக தெரிவித்தார்.

"இருப்பினும் யுக்ரேன் நாட்டில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது." என்றும் அவர் தெரிவித்தார்.

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கொத்துக் குண்டுகள் ஆபத்தானவை என்பதால் தான் அவற்றை யுக்ரேனுக்கு அளிக்க அதிக காலதாமதம் செய்ததாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெள்ளியன்று தெரிவித்தார்

மேலும், யுக்ரேனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள் ரஷ்யாவால் ஏற்கனவே யுக்ரேன் மீதான போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட மிகவும் பாதுகாப்பானவை என்றார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முடிவு "சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு" என யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர், இது அமெரிக்காவின் மோசமான நிலையைக் காட்டுவதாக கடுமையாக சாடியுள்ளார்.

கொத்து குண்டுகள் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவைப் பற்றி நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்ததாக வெள்ளிக்கிழமை சிஎன்என் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

கொத்துக் குண்டுகள் என்பவை ராக்கெட், ஏவுகணை அல்லது பீரங்கி போன்ற உபகரணங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை சிதறடிக்கும் ஒரு தாக்குதல் முறையாகும். இந்த தாக்குதலில் ஒரு பெரிய குண்டின் உள்ளே பல சிறிய குண்டுகளை வைத்து ராக்கெட், ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து குண்டு வீசப்படுகிறது.

இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் எறியப்படும் என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்தபின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே இலக்கின் பரந்த பகுதியைத் தாக்கும் தன்மை உடையவை.

இந்த பெரிய குண்டில் இருந்து வெளியேறும் சிறிய குண்டுகள் வெடிக்கும் தன்மை உடையவை என்றாலும், ஈரமான அல்லது மென்மையான நிலத்தை அடைந்தால் அவை வெடிக்காது. இதனால் தாக்குதல் நடக்கும் போதும் இந்த குண்டுகள் ஆபத்தானவை, தாக்குதலுக்குப் பின் வெடிக்காமல் இருக்கும் குண்டுகளும் ஆபத்தானவையாக இருக்கின்றன. இவற்றை வானில் இருந்து இலக்கை நோக்கி வீசவும் முடியும். தரையில் இருந்து மற்றொரு இலக்கை நோக்கி தாக்குவதற்கும் பயன்படுத்த முடியும்.

தரையை அடைந்த பின்னரும் வெடிக்காமல் இருக்கும் குண்டுகள் 'டட்ஸ்' என அழைக்கப்படுகின்றன. இந்த வெடிக்காத குண்டுகள், பின்னர் ஏதோ ஒரு நேரத்தில் வெடித்து, அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தலாம், அல்லது பலத்த காயங்களை ஏற்படுத்தலாம்.

ராணுவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அகழிகள் மற்றும் பதுங்கு குழிகளில் மறைந்திருக்கும் ராணுவத்தினர் மீது இது போன்ற குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. இத்தாக்குதலில், அந்த பதுங்கு குழிகளைச் சுற்றிலும் வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளை கவனமாக அகற்றாவிட்டால் அங்கிருந்து யாரும் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவை ஆபத்தானவை.

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?
 
படக்குறிப்பு,

பெரிய குண்டில் இருந்து வெளிப்பட்டு பின்னர் சிதறி பரந்த நிலப்பரப்பைத் தாக்கும் குண்டுகள் தான் கொத்துக் குண்டுகள்

க்ளஸ்டர் குண்டுகள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளன?

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதன் காரணமாக இந்த வகையான குண்டுகளைப் பயன்படுத்துவதை அல்லது சேமித்து வைப்பதை அந்த உடன்படிக்கை சட்டவிரோதமாக்குகிறது.

கொத்து குண்டுகளின் ஆபத்தில் சிக்கும் பொதுமக்களில் ஏராளமானோர், குறிப்பாக குழந்தைகள் படுகாயமடைந்து வாழ்க்கையில் பெரும் துயரங்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குடியிருப்புக்கள் மற்றும் வேளாண் நிலங்களில் வெடிக்காமல் கிடக்கும் இந்த குண்டுகள் சாதாரண பொம்மையைப் போல் இருப்பதால், பெரும்பாலும் ஆர்வத்தின் காரணமாக அவற்றை அப்பாவி பொதுமக்கள் கைகளில் எடுக்கின்றனர்.

கொத்து குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது ஒரு "வெறுக்கத்தக்க" செயல் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

பட மூலாதாரம்,JOEL GUNTER/BBC

படக்குறிப்பு,

கார்கிவ் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தின் அருகே க்ளஸ்டர் குண்டுகளால் தாக்கப்பட்ட காரில் உள்ள அடையாளங்கள்

இன்னும் யார் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்?

பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன.

இவற்றைத் தடை செய்யும் உடன்படிக்கையில் இந்த இரு நாடுகளும் கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும், முன்னர் ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான கொத்து குண்டுகளைப் பயன்படுத்திய போது அது குறித்து கடுமையாக விமர்சித்தது.

ரஷ்யாவின் கொத்து குண்டுகளில் 40% குண்டுகள் வெடிக்காத "டட்" களாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தரைப்பகுதியில் ஒரு பெரிய ஆபத்தாகவே உள்ளது. ஆனால் சராசரியாக 20% அளவுக்கே இந்த "டட்"கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்க அரசு அதன் சொந்த கொத்துக் குண்டுகள் 3% க்கும் குறைவான "டட்" வீதத்தைக் கொண்டிருப்பதாக மதிப்பிடுகிறது.

யுக்ரேன் ஏன் அவற்றைக் கேட்கிறது?

யுக்ரேனிய படைகளிடம் பீரங்கி குண்டுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பெரும்பாலும், ரஷ்யர்களைப் போலவே, யுக்ரேனிய ராணுவமும் அவற்றை அசாதாரணமாக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துகிறது. மேலும், யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் அந்த எண்ணிக்கையிலான ஆயுதங்களை அவர்களுக்குத் தரமுடியாது.

யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பெரும்பாலும் பீரங்கிகளைப் பயன்படுத்தும் நிலையே காணப்படுகிறது.

1,000 கிமீ (621 மைல்) நீளத்திற்கு கிணறு போன்ற தற்காப்பு நிலைகளில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யர்களை வெளியேற்றும் முயற்சியில் யுக்ரேனியர்கள் இப்போது ஒரு சவாலான பணியை எதிர்கொள்கின்றனர்.

போதுமான பீரங்கி குண்டுகள் இல்லாத நிலையில், அந்த தற்காப்பு அகழிகள் அனைத்தையும் நிர்வகிக்கும் ரஷ்ய காலாட்படையை குறிவைக்க, கொத்துக் குண்டுகளை அளித்து உதவுமாறு அமெரிக்காவிடம் யுக்ரேன் கேட்டுள்ளது.

ஆனால் இது வாஷிங்டனுக்கு அவ்வளவு எளிதான வேண்டுகோளாக இருக்கவில்லை. மேலும் அமெரிக்காவில் உள்ள பல ஜனநாயகவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஏற்கமாட்டார்கள். எனவே யுக்ரேனின் இந்த வேண்டுகோள் குறித்து குறைந்தது ஆறு மாதங்களாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

கொத்துக் குண்டுகள் என்றால் என்ன?

பட மூலாதாரம்,JOEL GUNTER/BBC

படக்குறிப்பு,

கார்கிவ் நகரில் நடந்த ஒரு கொத்துக் குண்டு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பகுதி

க்ளஸ்டர் குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கினால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?

இந்தப் போரில் தார்மீக அடிப்படையில் யுக்ரேனுக்கு உதவி வரும் அமெரிக்காவை, அந்த இடத்திலிருந்து அகற்றுவதே உடனடி விளைவாக இருக்கும்.

ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் அனைத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அமெரிக்கா யுக்ரேனுக்கு கொத்துக் குண்டுகளை அளித்தால், அமெரிக்கா மீதும் குற்றச்சாட்டுக்கள் எழும். இது ரஷ்யாவுக்கு சாதகமான ஒரு நிலையை அளிக்கும்.

கிளஸ்டர் வெடிமருந்துகள் ஒரு பயங்கரமான, கண்மூடித்தனமான ஆயுதங்களாக இருக்கின்றன. ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த வகை குண்டுகள் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தற்போதைய முடிவு காரணமாக, க்ளஸ்டர் குண்டுகளைத் தடை செய்துள்ள மேற்கத்திய நாடுகளுடன் முரண்பாடுகள் ஏற்படும் நிலையும் உருவாகும். இந்த ஒரே காரணத்தினால் அது போல் முரண்கள் ஏற்பட்டு, அந்நாடுகளின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுமானால், அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் விருப்பதை நிறைவேற்றுவதற்கு சமம் என்பதை விட வேறு எதுவும் கூறமுடியாது.

கொத்து குண்டுகளைப் பயன்படுத்தியதாக ரஷ்யா மீது ஏற்கெனவே உலக அளவிலான மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்திவரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கள் யுக்ரேன் மற்றும் அமெரிக்கா மீதும் சுமத்தப்படும் நிலை உருவாகும்.

https://www.bbc.com/tamil/articles/c4n3ddz347do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://twitter.com/Gerashchenko_en/status/1677754477959430145/mediaViewer?currentTweet=1677754477959430145&currentTweetUser=Gerashchenko_en
 
ஒரு தொகுதி வாக்னர் கூலிப்படையினர் பெலரூசில் வந்திறங்கி உள்ளனராம்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.