Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”சுழிபுரம், பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதிகளை தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தும் செயற்பாடானது உரிய வழிமுறைகளை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தன்னால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், குறுகிய நலன்களுக்காக சிலரினால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான விடயங்கள் வேதனைக்குரியவை என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட இணக்க அரசியல் என்பது, இருப்பவற்றை பாதுகாத்து முன்னோக்கி நகர்வதாகவும் பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாகவும் இருக்க முடியுமே தவிர, தவறான நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதாக இருக்க முடியாது” எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1344064

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ரணிலின் உண்மை முகம்.

Posted

தொல்லியல் திணைக்களம் எந்த அமைச்சரின் கீழ் இயங்குகிறது ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, nunavilan said:

தொல்லியல் திணைக்களம் எந்த அமைச்சரின் கீழ் இயங்குகிறது ?

மகிந்த காலத்து, பெரும் இனவாதியான முன்னாள் பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்காவின் மகன் தான் பௌத்த சாசன அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கா.

இந்த மொட்டு கட்சி பின்னால் இருந்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறது. இந்த பௌத்த சாசன உயர் அதிகாரியை பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார் ரணில். ஆனாலும், விதுர தன் வேலையினை காட்டிக் கொண்டே இருக்கிறார்.

எனது சந்தேகம், இவர்களுக்கு பின்னால் சீனாவும், அதன் நிதியுதவியும் இருக்க கூடும். காரணம், சீனமும், சிங்களமும் இணையும் ஒரே ஒருபுள்ளி பௌத்தம். 

சீனா நேரடியாக, வடபகுதியில் இயங்க முனைந்த போது, இந்தியா தடுத்ததால், இப்போது வேறு வகையில் நுழைகிறது போல தெரிகிறது. அண்மையில் மறவன்புலவு சச்சியர், குருந்தூர் சென்றார். அது இந்தியாவின் வேண்டுதலில் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிய போயிருக்கலாம் என்று கொழும்பு பத்திரிகையாள நண்பர் குசுகுசுத்தார்.

ஆக, இந்தியா வழக்கம் போல ஆவெண்டு இருந்தால், சீனன் வேறு வகையில் குடைச்சல் கொடுக்கத்தான் போகிறான்.

RADAR – Raising Awareness on Disinformation: Achieving Resilience - TEPSARadar - Free technology icons

Edited by Nathamuni
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, Nathamuni said:

அப்போ ரணில் அச்சாபிள்ளை?

விதுரதான் கக்காபிள்ளை என்கிறீர்களா?

இலங்கையில் நிர்வாக அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியிடமே - ஒரு ஜனாதிபதி கண்டும் காணாமல் விட்டாலே ஒழிய - எந்த அதிகாரியோ, அமைச்சரோ இப்படி செய்ய முடியாது.

இது முழுக்க முழுக்க ரணிலின் டபுள் கேம்.

இனவாதிகளில் மிக மோசமன இனவாதி தமிழர் அடையாளத்தை அழிக்க சங்கற்பம் பூண்டவரும் ரணில்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, goshan_che said:

ரணில் ஜனாதிபதி தான். ஆனாலும், மொட்டுக்கட்சியின் கையில் அரசும், மந்திரிசபையும். ஆக, ரணில் என்ன செய்தாலும், இந்த முழு இனவாதிகள் பின்னால் இருக்கும் வரை, ரணிலுக்கு benefit of doubts கொடுப்போம்.

ரணில் இனவாதி இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், சிறிது நேரம் கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

எனது சிறு நம்பிக்கையின் காரணம்: ரணிலை பதவிக்கு கொண்டு வந்த அமெரிக்காவும், மேலை நாடுகளும். ரணில் இந்தியாவின் தெரிவு இல்லை என்ற வகையில் இந்த எனது சிறு நம்பிக்கை. இவர்கள் இதே வழியில் போனால், நாமும், வேறு வழியில்லாமல், சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல் என்று கிளம்ப வேண்டியது தான். 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

ரணில் ஜனாதிபதி தான். ஆனாலும், மொட்டுக்கட்சியின் கையில் அரசும், மந்திரிசபையும். ஆக, ரணில் என்ன செய்தாலும், இந்த முழு இனவாதிகள் பின்னால் இருக்கும் வரை, ரணிலுக்கு benefit of doubts கொடுப்போம்.

ரணில் இனவாதி இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், சிறிது நேரம் கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

எனது சிறு நம்பிக்கையின் காரணம்: ரணிலை பதவிக்கு கொண்டு வந்த அமெரிக்காவும், மேலை நாடுகளும். ரணில் இந்தியாவின் தெரிவு இல்லை என்ற வகையில் எனது சிறு நம்பிக்கை. இவர்கள் இதே வழியில் போனால், நாமும், வேறு வழியில்லாமல், சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல் என்று கிளம்ப வேண்டியது தான். 

ரணில் மீள ஜனாதிபதியாக வர இரு காரணங்கள்.

1. பதவியாசை

2. இந்த பொருளாதர நெருக்கடியை பயன்படுத்தி தமிழர் தரப்பு ஒரு சுயாட்சி தீர்வை அடைந்து விடக்கூடாது என்ற ரணிலின் இனவாத-முனைப்பு.

ரணிலின் நோக்கம்

மேற்கு, தமிழர் தரப்பு எல்லோருக்கும் துண்ணீறு அடித்து விட்டு, ஒட்டு மொத்த பெளத்த சிங்கள மேலாண்மைக்கு நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு பங்கமும் ஏற்படாமல் - நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது.

நீங்கள் ரணில் மீது வைத்துள்ள சிறு நம்பிக்கை புரிகிறது. ஆனால் எனக்கு அப்படி நம்பிக்கை வரவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, goshan_che said:

உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன்.

13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார்.

இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். 

பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும்.

மொட்டுகள், இறுதியாக, மொட்டைகளை அவிழ்த்து, தெருவுக்கு விடலாம். அது எமக்கு நன்மையாகவே முடியும். 

ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் வழக்கமாக சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.   

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன்.

13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார்.

இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். 

பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும்.

ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.   

அவதானிப்பதை வேறு என்னத்தைதான் நாம் செய்ய முடியும்🤣.

நமது புலம், புலம்பெயர் தலைவர்களே இப்போ எமது விடயத்தில் வெறும் அவதானிப்பாளர்கள் மட்டுமே எனும் போது, கருத்தாளர் நாம் என்ன செய்ய முடியும்.

அவதானிப்போம்…அவதானிப்போம்…

48இல் இருந்து நாமும் அவதானிக்கிறோம்…அவர்களும் தீத்துகிறார்கள். இன்னும் கொஞ்ச காலம்தானே..அவதானித்து பார்ப்போம். பிறகு அவதானிக்க ஏதும் இராது.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, goshan_che said:

48இல் இருந்து நாமும் அவதானிக்கிறோம்…அவர்களும் தீத்துகிறார்கள். இன்னும் கொஞ்ச காலம்தானே..அவதானித்து பார்ப்போம். பிறகு அவதானிக்க ஏதும் இராது.

கடந்த 500 வருட கால எமது வரலாறு அவ்வாறு சொல்லவில்லை.

பல ஆலயங்களை அழித்த போர்த்துக்கேயர் இரும்புப்பிடியில் இருந்த யாழ்ப்பாண ராஜ்ஜியம், அதனிடம் இருந்து எப்படி தப்பும் என்று தவித்த போது, ஒல்லாந்தர்கள் வந்தார்கள். ஓரளவு மத சுதந்திரமும் வந்தது.

அவர்களை வெளியே அனுப்ப முடியுமா என்று தவித்த போது, ஐரோப்பாவில் நடந்த குழப்பத்தால், ஒல்லாந்தர் இடம் இருந்து, ஆங்கிலேயர் கை மாறியது.

ஹிட்லர் செய்த குழப்பத்தால், ஆங்கிலேயர்களும் நம்மை விட்டு கிளம்பினார்கள்.

இப்போது, சிங்களவர்கள் முறை.... அவர்களும் கிளம்ப இலங்கைக்கு வெளியே சில வேலைகள் நடக்கின்றன. பொறுத்து இருப்போம். 

****

கடந்த வாரம் நடந்த சீமான் சர்ச்சையின் போது, சீமானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையா என்று.

சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
Posted

தமிழர் என வரும் போது  சிங்களம் கட்சி பேதம் இன்றி தாக்க வருவார்கள். வகை தான் வேறு. அது ரனிலின் நரி விளையாட்டில் இருந்து விமலின் இனவாத பேச்சு வரை அடங்கும். 
இப்போ எதாவது  தமிழர்களுக்கு செய்வது போல் படம் காட்டுவது மேற்கின் கடனை வாங்கி  தின்று இனவாத ஏப்பம் விடவே.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

//சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல்..//

தொல்லியல் தினைக்களம் ஒரு பக்கத்தால் இடத்தைப் பிடிக்க.. நாங்கள் தமிழ் மொழியை அதன் தொன்மையை முறையாக எழுதாமல் தொலைக்கிறோம். 

இப்பொழுது வரும் பத்திரிகை செய்திகளாகட்டும், கருத்துகளை எழுதுபவர்களாகட்டும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் மொழியும் வளரும்.

சுஜ என்ற ஒரு சொல் உள்ளதா? 

IMG-0597.png

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

//சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல்..//

தொல்லியல் தினைக்களம் ஒரு பக்கத்தால் இடத்தைப் பிடிக்க.. நாங்கள் தமிழ் மொழியை அதன் தொன்மையை முறையாக எழுதாமல் தொலைக்கிறோம். 

இப்பொழுது வரும் பத்திரிகை செய்திகளாகட்டும், கருத்துகளை எழுதுபவர்களாகட்டும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் மொழியும் வளரும்.

சுஜ என்ற ஒரு சொல் உள்ளதா? 

IMG-0597.png

நன்றி, ஆனாலும் திரி பேசும் முக்கியவிடயத்தை திசை திரும்புவதை தவிர்க்க, திண்ணையில் அல்லது புது திரியில் இதனை விவாதிப்பது நல்லது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nunavilan said:

தொல்லியல் திணைக்களம் எந்த அமைச்சரின் கீழ் இயங்குகிறது ?

தெரிஞ்சு என்னத்தை செய்யப்போறியள் நுணாவில்? எந்த அமைச்சர் எண்டாலும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தானே....:cool:

கேள்வி கேக்கிற விதத்தை பார்த்தால் ஆளை கூப்பிட்டு இரண்டு தட்டு தட்டுவியள் போல கிடக்கு..:rolling_on_the_floor_laughing:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை ஏற்கனவே திண்ணை பூட்டப் பட முன்னர் திண்ணையில் பகிர்ந்தேன், ஏனெனில் இதனை ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி அறிவிப்பாளரிடமிருந்து hearsay ஆக அறிந்தேன். எனவே, நம்பகமான தகவலாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இது தான் நான் அறிந்த கதை:

1. இந்தியாவின் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் (RSS), விஷ்வ ஹிந்து பரிசத் (VHP) ஆகிய அமைப்புகளின் பிரமுகர்களுக்கும் இலங்கையின் பௌத்த குருமாருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இந்தியா போனால் இவர்கள் அவர்களைச் சந்திப்பதும், இலங்கையில் இருக்கும் இவ்வமைப்புகளின் பிரதிநிதிகள் பௌத்த பீடத்தினரைச் சந்திப்பதும் நடக்கிற அளவுக்கு நெருக்கம்.

2. இந்த இந்து அமைப்புகளின் பிரமுகர்களிடம், பௌத்த குருமார் "வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் கிறிஸ்தவ மதமாற்றிகளாக மாறி, புதிய ஆலயங்கள் கட்டுகிறார்கள்" எனக் கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும் இந்த RSS, VHP அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதையே உறுதி செய்கிறார்களாம். எனவே இதைத் தடுக்க, "நாம் விகாரைகளையும், புத்த சின்னங்களையும் வைத்து இந்தியாவுக்கு நெருக்கமான பௌத்த மதத்தை காக்கிறோம்" என்கிறார்களாம்.  

இது உறுதியாக நிறுவ முடியாத ஒரு விடயம் என்றாலும், ஊரில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தத் தொடர்பிற்கு வலு சேர்க்கின்றன.

மறுபக்கம் பார்த்தால், இலங்கையில் இருக்கும் தேரவாத மஹாயான பௌத்தத்திற்கும் சீனாவிற்கும் என்ன தொடர்பு? சீனா ஒரு கம்யூனிச நாடு. அங்கே இந்தியாவிலிருந்து சென்ற பௌத்தம், டாவோயிசமாக மாறி 1950 வரை பிரபலமாக இருந்திருக்கிறது. இப்போது அது ஒரு அரச மதமாகக் கூட இல்லை. சீனா வேறு வகைகளில் இலங்கையில் நுழைகிறது - உண்மை. ஆனால், பௌத்தம் ஒரு தொடர்பிழை என்பது வரலாற்று ரீதியில் சரியான கணிப்பாகத் தெரியவில்லை!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1. RSS இலங்கை பௌத்த அமைப்புகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய தேவை தான் என்ன? அப்படி நெருக்கமாக இருந்து அடையும் நன்மைகள் எதுவுமே இல்லையே.

2. மிக சிறிய இலங்கையில் கிறிஸ்தவம் பரவினால், மிகப் பெரிய இந்தியாவின், RSS க்கும் கவலைப்பட தேவை இல்லையே. அவர்களுக்கு முக்கியமானது இந்து மதம், அதுகுறித்த கவலைப்படுவார்கள். பௌத்தமதம் குறித்ததாக இராதே.

3. சீனா சிங்களத்துடன் இணையும் ஒரே ஒரு புள்ளி, பௌத்தம். சீனாவின் நோக்கம் ராணுவ நலன், மதமல்ல. ஆனால் மதத்தினை ஒரு காரணமாக காட்டி உள்ளே புக வேட்டி, சால்வையுடன் நல்லூர் வந்தார்கள் என்பதை மறக்காமல், இப்போது, வேறு வகையில் வருகிறார்கள் என்பதை புரிவது புத்திசாலித்தனமானது. 

இஸ்லாமியர் மத்திய கிழக்குடன் இணையும் ஒரே புள்ளி இஸ்லாம். ஆயினும், உள்ளே புகுந்து, சன்னி, சியா என்று ஆய்வது, பிரயோசனம் இல்லாத வேலை.

சீனாவுக்கு, இராணுவ நலன் முக்கியமானது. இந்தியா அதனை மறந்ததால், தென் இலங்கையும், கொழும்பு போர்ட் சிட்டியும் கைமாறியது. இதனாலேயே, அமெரிக்கா உள்ளே வந்தது.

.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Nathamuni said:

இப்போது, சிங்களவர்கள் முறை.... அவர்களும் கிளம்ப இலங்கைக்கு வெளியே சில வேலைகள் நடக்கின்றன. பொறுத்து இருப்போம். 

ம்ம்ம்… ஏதோ நீங்கள் சொல்லுறியள் எண்டு பொறுக்கிறன். இல்லாட்டில் ஒரு படையணியோட மன்னாரில இறங்கி அடிபட ரெடி🤣

6 hours ago, Nathamuni said:

சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே

திரிக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் இனப்படுகொலை, மலையக உறவு வெளியேற்றம் நடக்காமல் - இயற்கையான இனப்பெருக்கம் நடந்து இருந்தாலும் இலங்கை தீவில் சிஙகளவர்தான் இப்போதும் பெரும்பான்மையாக இருப்பர். இப்போ 75% மாய் இருப்பது 65-70% இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

இதை ஏற்கனவே திண்ணை பூட்டப் பட முன்னர் திண்ணையில் பகிர்ந்தேன், ஏனெனில் இதனை ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி அறிவிப்பாளரிடமிருந்து hearsay ஆக அறிந்தேன். எனவே, நம்பகமான தகவலாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இது தான் நான் அறிந்த கதை:

1. இந்தியாவின் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் (RSS), விஷ்வ ஹிந்து பரிசத் (VHP) ஆகிய அமைப்புகளின் பிரமுகர்களுக்கும் இலங்கையின் பௌத்த குருமாருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இந்தியா போனால் இவர்கள் அவர்களைச் சந்திப்பதும், இலங்கையில் இருக்கும் இவ்வமைப்புகளின் பிரதிநிதிகள் பௌத்த பீடத்தினரைச் சந்திப்பதும் நடக்கிற அளவுக்கு நெருக்கம்.

2. இந்த இந்து அமைப்புகளின் பிரமுகர்களிடம், பௌத்த குருமார் "வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் கிறிஸ்தவ மதமாற்றிகளாக மாறி, புதிய ஆலயங்கள் கட்டுகிறார்கள்" எனக் கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும் இந்த RSS, VHP அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதையே உறுதி செய்கிறார்களாம். எனவே இதைத் தடுக்க, "நாம் விகாரைகளையும், புத்த சின்னங்களையும் வைத்து இந்தியாவுக்கு நெருக்கமான பௌத்த மதத்தை காக்கிறோம்" என்கிறார்களாம்.  

இது உறுதியாக நிறுவ முடியாத ஒரு விடயம் என்றாலும், ஊரில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தத் தொடர்பிற்கு வலு சேர்க்கின்றன.

மறுபக்கம் பார்த்தால், இலங்கையில் இருக்கும் தேரவாத மஹாயான பௌத்தத்திற்கும் சீனாவிற்கும் என்ன தொடர்பு? சீனா ஒரு கம்யூனிச நாடு. அங்கே இந்தியாவிலிருந்து சென்ற பௌத்தம், டாவோயிசமாக மாறி 1950 வரை பிரபலமாக இருந்திருக்கிறது. இப்போது அது ஒரு அரச மதமாகக் கூட இல்லை. சீனா வேறு வகைகளில் இலங்கையில் நுழைகிறது - உண்மை. ஆனால், பௌத்தம் ஒரு தொடர்பிழை என்பது வரலாற்று ரீதியில் சரியான கணிப்பாகத் தெரியவில்லை!

இதற்கு hearsay evidence மட்டும் அல்ல சந்தர்பசாட்சியும் உண்டு. RSS ஐ பொறுத்தவரை பெளத்தம் இந்து என்ற குடையின் கீழ் வருகிறது. இது அவர்களின் சிந்தாத்ந்த முடிவு.

https://m.timesofindia.com/city/bhopal/jains-sikhs-buddhists-not-different-from-hindus-rss/articleshow/39495560.cms

அதேபோல் மகிந்த என நினைக்கிறேன் புத்த காயா போனபோது - உமா பாரதி உள்ளிட்டோர் - அவரும் இந்துவே என கூவினர்.

உண்மை என்னவென்றால்,

ஆரிய வம்சம் என கூறி கொள்ளும் சிங்களவர்களை, இந்துதுவா தலைமகள், சூத்திர திராவிடர் என தாம் கருதும் தமிழர்களை விட தமது பங்காளிகளாகவே கருதுகிறார்கள்.

2 hours ago, Justin said:

பௌத்தம் ஒரு தொடர்பிழை என்பது வரலாற்று ரீதியில் சரியான கணிப்பாகத் தெரியவில்லை!

எனக்கும் தெரியவில்லை. மாவோ விற்கு பின்னான சீனாவில் பெளத்தத்துக்கு ஒரு வகிபாகம் இல்ல என்பது மட்டும் அல்ல, அதை சிசிபி கண்காணிப்பில் வைத்துள்ளது என்பதே யாதார்த்தம்.

அதே போல் பிஜேபி ஆளும் இந்தியா போலன்றி - சீன வெளியுறவு கொள்கை மதம் சார்ந்து எங்கும் இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக முக்கியமான ஒன்று.

இலங்கையில் சீனாவின் ஆர்வம் 2000 ஆண்டுக்கு பின்னானது.

ஆனால்…

இலங்கை தீவில் தமிழர் நிலத்தில் பெளத்த-சிங்கள சின்னத்தை ஊன்றி விட வேண்டும், சிங்கள மயமாக்கி விட வேண்டும் என்ற “வரலாற்று அரிப்பு” துட்டு கெமுனுவுக்கும் முன்னானது.

சுதந்திர இலங்கையின் முதல் பாரிய திட்டம் என கல்லோயாவில் நிலம் பறித்தது முதல், 1995 இல் யாழ் வீழ்ந்ததும் அவசர அவசரமாக ஜம்புகோள பட்டுனவை கட்டியது வரை - இலங்கையின் பக்கம் சீனாவின் பார்வை திரும்ப பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே, நடைமுறையில் இருக்கிறது இந்த “வரலாற்று அரிப்பு”.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

அதேபோல் மகிந்த என நினைக்கிறேன் புத்த காயா போனபோது - உமா பாரதி உள்ளிட்டோர் - அவரும் இந்துவே என கூவினர்.

உண்மை என்னவென்றால்,

உண்மை என்னவென்றால்,
 
1. மகிந்த இந்துவுமல்ல, பெளத்தருமல்ல 😁

2. சீனாகாரன் அல்வா கொடுத்து விட்டான். இந்தியாவின் இயலாமை, கையறுநிலை கண்டே அமெரிக்கன் உள்ள வந்து சீன சார்பு கோத்தாவை துரத்தி, இந்தியா விரும்பாத ரணிலை ஏத்திவிட்டார்கள்.

3. ஆக, RSS நிலைப்பாடு நமக்கு முக்கியமல்ல என்று நிணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. அதுதான் சிங்களவனின் கெட்டித்தனம். உமா பாரதிக்கு பெளத மகிந்தன் முகம். போப்பாண்டவருக்கு மகிந்த “பேர்சி” ராஜபக்ச. 

2. சீனாக்காரன், இந்தியாகாரன் எல்லாருக்கும் அல்வா கொடுத்தது சிங்களவன். இன்றைக்கு மேற்க்குக்கு கொடுக்க பாராளுமன்றத்தில் வைத்து அல்வா கிண்டி உள்ளான்🤣.

3. நீங்கள்தானே ஒரு ஆறு மாதம் முதல் - மோடியால்தான் எமக்கு தீர்வு என யாழில் எழுதினது? நான் சீமானுக்கும், திராவிட கட்சிக்கும் ஆதரவில்லை. மோடிதான் என் தெரிவு என எழுதினீர்களே?

இப்ப ஆ எஸ் எஸ் முக்கியம் இல்லை எண்டுறியள்?

5 minutes ago, Nathamuni said:

உண்மை என்னவென்றால்,
 
1. மகிந்த இந்துவுமல்ல, பெளத்தருமல்ல 😁

2. சீனாகாரன் அல்வா கொடுத்து விட்டான். இந்தியாவின் இயலாமை, கையறுநிலை கண்டே அமெரிக்கன் உள்ள வந்து சீன சார்பு கோத்தாவை துரத்தி, இந்தியா விரும்பாத ரணிலை ஏத்திவிட்டார்கள்.

3. ஆக, RSS நிலைப்பாடு நமக்கு முக்கியமல்ல என்று நிணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, goshan_che said:

திரிக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் இனப்படுகொலை, மலையக உறவு வெளியேற்றம் நடக்காமல் - இயற்கையான இனப்பெருக்கம் நடந்து இருந்தாலும் இலங்கை தீவில் சிஙகளவர்தான் இப்போதும் பெரும்பான்மையாக இருப்பர். இப்போ 75% மாய் இருப்பது 65-70% இருந்திருக்கும்.

15% வெளியே போனபோது, மொத்த சனத்தொகை ஒருகோடிக்கும் குறைவு. 

அவ்வகையில் 1958, 77, 83 பின்னர் யுத்தம் மலையக தமிழர்களை பெருமளவில் தமிழகம் அனுப்பியது. ஈழத்தமிழர் நாமும் இங்கே வந்துவிட்டோம்.
 
ஆக 60 -62% தான் சிங்களம் வந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

15% வெளியே போனபோது, மொத்த சனத்தொகை ஒருகோடிக்கும் குறைவு. 

அவ்வகையில் 1958, 77, 83 பின்னர் யுத்தம் மலையக தமிழர்களை பெருமளவில் தமிழகம் அனுப்பியது. ஈழத்தமிழர் நாமும் இங்கே வந்துவிட்டோம்.
 
ஆக 60 -62% தான் சிங்களம் வந்திருக்கும். 

65-70 என நினைக்கிறேன். 

பரவாயில்லை உங்கள் கணிப்பையே எடுப்போம்.

100% இல் 60-62% பெரும்பான்மையா? சிறுபான்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

3. நீங்கள்தானே ஒரு ஆறு மாதம் முதல் - மோடியால்தான் எமக்கு தீர்வு என யாழில் எழுதினது? நான் சீமானுக்கும், திராவிட கட்சிக்கும் ஆதரவில்லை. மோடிதான் என் தெரிவு என எழுதினீர்களே?

இப்ப ஆ எஸ் எஸ் முக்கியம் இல்லை எண்டுறியள்?

நீங்கள் தானே, சில நாட்கள் முன்னர் திண்ணையில், நாம் ஊகிக்க மட்டுமே முடியும். எதுவுமே புரியவில்லை என்று ஏத்துக்கொண்டீர்கள். 😁

ஆக, இலங்கை அரசியல் வாரத்துக்கு, வாரம் மாறுகிறது. இதில் 6 மாத கதை எங்க அய்யா? 🤪

நாம் ஒன்றை நினைக்க, வேறு ஒன்று அல்லவா நடக்கிறது. 🤦‍♂️

3 minutes ago, goshan_che said:

65-70 என நினைக்கிறேன். 

பரவாயில்லை உங்கள் கணிப்பையே எடுப்போம்.

100% இல் 60-62% பெரும்பான்மையா? சிறுபான்மையா?

இன்று இருப்பதிலும் பார்க்க அதிகமாக இருந்திருப்போம். குறிப்பாக, தீவுப்பகுதி இன்று உள்ளதை போலல்லாமல், மக்களால் நிரம்பி காணித்துண்டே இல்லாமல் இருந்திருக்கும்.

தமிழனை சிறுபான்மையாக்கி, இடத்தினை பறிக்கவே சிங்களவன் முனைந்தான். 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.