Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்!

world-news-22.jpg

உணவு விடயங்களில் மட்டுமல்லாமல் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக சீனா இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாசார முறை தற்போது சீனாவில் ட்ரெண்டாகி வருகிறது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒருநாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். அதாவது, ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க மாட்டார்கள்.

இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த பாவம் பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, இறந்த பின்பும் தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களுக்கும் கட்டாயம் திருமணமாகி இருக்க வேண்டும்.

Husband and wife only for one day.. 'One day marriage' is increasing in China.. Do you know why?

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள். உள்ளூர் பெண்கள் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய தயங்குவதால், வெளியூரில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார் அந்த பகுதியில் இருக்கும் திருமண தரகர் ஒருவர்.

மேலும், திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இது போன்ற ஒருநாள் திருமணங்களை செய்து வருகிறார்கள். இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை அல்ல, வெறும் சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ என பிரிந்து சென்று விடுவார்கள் என்கிறார் அவர்.

(காமதேனு)

 

https://thinakkural.lk/article/269255

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு நல்ல கலாச்சாரமாக இருக்கிறது...... அப்படியே அந்த வழித்தடங்களையும் (map ) இணைத்து விடுங்கள் கிருபன் , சில கலியாணங்களை செய்து வைத்த புண்ணியமாவது உங்களைச் சேரும்.........!  💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சண்முவம், எட்றா வண்டிய! 😍 🥰

வழீல, நம்ம பங்காளியையும் ஏத்திக்குவும்.

ஒரே நாள்ள திரும்பிறம்!! 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாவில் இது ஏற்கனவே இருக்கிறது சமூகத்தில் வெளியில் சொல்லாமல்.

இப்பொது வைபவ அடிப்படையில் வெளிக்கொண்டு வரப்படுகிறது.

மற்றது, சீனாவில் சின்ன வீடு வைத்திருக்காவிட்டால், ஆண் அல்ல என்பதும் ஆழமாக புரையோடிப்போய் இருக்கிறது.

இது ஒரு முக்கிய காரணம்,  அநேகமான சீனர், 2-3 மொபைல் வைத்து இருப்பது. 

Posted
2 hours ago, Nathamuni said:

சண்முவம், எட்றா வண்டிய! 😍 🥰

வழீல, நம்ம பங்காளியையும் ஏத்திக்குவும்.

ஒரே நாள்ள திரும்பிறம்!! 😜

நானும் தொத்திக் கொண்டு வரவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, நிழலி said:

நானும் தொத்திக் கொண்டு வரவா?

பங்காளி எண்டது உங்களைத் தான்!🤣😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் பழசு,

தமிழக, ஆந்தீர போடரில், நெல்லூர், குண்டூர் பகுதிகளில், 'மாப்பிள்ள காரூ' ஒரு வெளீள தெரிஞ்ச கூத்து.

காசை எறிந்தால், மாமா (அந்த 😜) எல்லா அலுவலையும் கச்சிதமா பார்த்து செய்வார்.

அதாவது, செற்றப் அப்பா, அம்மாவுக்கு செற்றப் அழகான மகள். 2 நாள், 7 நாள்….  உங்கள் பர்ஸ் வசதிப்படி.

காலைல, மாப்ளை, சாப்பாடு ரெடி சொல்ல மாமி, பரிமாற பெண்ணு, மத்தியானம், இரவுக்கு என்ன வேணும் என்று பையோட சந்தைக்கு கிளம்ப மாமா.

ஆயில் மசாஜ்...... பெண்ணு.🤣😍😍🥰

நான்போனேனா எண்டு கேக்கிறேல்ல, குமுதத்தில் வந்தது 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

இது ஒரு நல்ல கலாச்சாரமாக இருக்கிறது...... அப்படியே அந்த வழித்தடங்களையும் (map ) இணைத்து விடுங்கள் கிருபன் , சில கலியாணங்களை செய்து வைத்த புண்ணியமாவது உங்களைச் சேரும்.........!  💞

 

4 hours ago, Nathamuni said:

சண்முவம், எட்றா வண்டிய! 😍 🥰

வழீல, நம்ம பங்காளியையும் ஏத்திக்குவும்.

ஒரே நாள்ள திரும்பிறம்!! 😜

 

1 hour ago, நிழலி said:

நானும் தொத்திக் கொண்டு வரவா?

நீங்க எல்லோருமெ உங்க நிலமை தெரியாம காலை விடுகிறீர்கள் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவன்
முரட்டு சிங்கிள்
90ஸ் கிட்

vadivel.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிச்சுப்போயிட்டுது என்னையும் இதில சேருங்கோ ஒரு நாள் என்ன இன்னுமொரு நாள் எண்டாலும் நான் ரெடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/8/2023 at 20:34, Nathamuni said:

இதெல்லாம் பழசு,

தமிழக, ஆந்தீர போடரில், நெல்லூர், குண்டூர் பகுதிகளில், 'மாப்பிள்ள காரூ' ஒரு வெளீள தெரிஞ்ச கூத்து.

காசை எறிந்தால், மாமா (அந்த 😜) எல்லா அலுவலையும் கச்சிதமா பார்த்து செய்வார்.

அதாவது, செற்றப் அப்பா, அம்மாவுக்கு செற்றப் அழகான மகள். 2 நாள், 7 நாள்….  உங்கள் பர்ஸ் வசதிப்படி.

காலைல, மாப்ளை, சாப்பாடு ரெடி சொல்ல மாமி, பரிமாற பெண்ணு, மத்தியானம், இரவுக்கு என்ன வேணும் என்று பையோட சந்தைக்கு கிளம்ப மாமா.

ஆயில் மசாஜ்...... பெண்ணு.🤣😍😍🥰

நான்போனேனா எண்டு கேக்கிறேல்ல, குமுதத்தில் வந்தது 😁

 

குமுதம் உண்மையைத்தானே சொல்லுது 

நான் நம்பல  🤗🤗

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குமுதம் உண்மையைத்தானே சொல்லுது 

நான் நம்பல  🤗🤗

நூந்து போற திரியளை பத்தவைக்கிற வேலையாத் தான் தம்பி இருக்காரு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

நூந்து போற திரியளை பத்தவைக்கிற வேலையாத் தான் தம்பி இருக்காரு!

பொழுது போகணும் அண்ணை நாதா மேடைக்கு வரவும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

பொழுது போகணும் அண்ணை நாதா மேடைக்கு வரவும்

@Nathamuni  அண்ணை தம்பி உங்களைத் தேடுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஏராளன் said:

@Nathamuni  அண்ணை தம்பி உங்களைத் தேடுறார்.

வந்து என்ன உண்மையானதை சொல்ல மாட்டார் சும்மா மளுப்புவார் 😛😛



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.