Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளது.

அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1346923

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இரட்டை வேடத்துக்கு இப்படித்தான் பாடம் கற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளது.

அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1346923

இது மிகவும் சிறிய கப்பல்   படகு என்றே சொல்லலாம்  சந்திரனுக்கு போய் வெற்றிகரமாக தரையிறங்கிய. இந்தியா  இந்த சிறிய கப்பலை பற்றி கவலைப்படக்கூடாது  ஒரு தமிழன் இலங்கையில் இருக்கும் வரை   இந்தியாவுக்கு எதிராக இலங்கை செயற்பட முடியாது விடவும் மாட்டோம். 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இந்தியாவின் இரட்டை வேடத்துக்கு இப்படித்தான் பாடம் கற்க வேண்டும்.

சிறிலங்கா சீனாவைக்காட்டியே தமிழினத்தை அழித்துவருகிறதே.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nochchi said:

சிறிலங்கா சீனாவைக்காட்டியே தமிழினத்தை அழித்துவருகிறதே.

சீனா இல்லாவிட்டாலும் தமிழினத்தை சிங்களம் அழிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இந்தியாவின் இரட்டை வேடத்துக்கு இப்படித்தான் பாடம் கற்க வேண்டும்.

இலங்கை ஒரு இறைமை  மிக்க நாடு. எனவே சிறி லங்காவின் உள் நாட்டு , வெளி நாட்டு விவகாரங்களில் தனித்து தீர்மானம் எடுக்கலாம். எனவே இந்த விடயத்தில் இந்தியா தலையிட முடியாது. சீன கப்பலுக்கான அனுமதி எப்போதோ கொடுக்கப்பட்டு விட்ட்து. இனி இன்னொரு கப்பல் வருமென்று பயம் காட்டி இந்தியாவிடமிருந்து ஏதாவது அபகரிக்க முடியுமென்றால் இலங்கை அதை செய்யும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

தற்போது தென்சீனக் கடலில் நங்கூரமிட்டுள்ள சீன கடற்படையின் முக்கியமான ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான ‘ஷி யான்-6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.

அவ்வாறு வருகை தரும் குறித்த சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் 17 நாட்கள் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதோடு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும், கொழும்புத் துறைமுகத்துக்கும் செல்லவுள்ளது.

இந்தவிடயத்தினை இலங்கை கடற்படை உறுதி செய்துள்ளதோடு, நாரா எனப்படும், தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகமை நிறுவனமும் தம்முடன் இணைந்து குறித்த கப்பல் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக அப்பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக ஆராய்ச்சிக்காக கடல் நீர் மாதிரிகளைப் பெறுவதற்காகவே குறித்த கப்பல் விஜயம் செய்வதாகவும் பிறிதொரு தகவலும் உள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 10ஆம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுண் துறைமுகத்துக்குச் சந்தம் சந்ததியின்றிச் சென்றிருந்த ‘ஹாய் ஜங் 24’ என்ற சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கடந்த 10ஆம் திகதி காலையிலேயே கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்தது.

கொழும்பில் சீனாவின் நிதிபங்களில் உருவாக்கப்பட்டுள்ள முனையத்துக்குள் எவ்விதமான ஆரவாரமுமின்றி வருகை தந்த 129 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பல், 138 மாலுமிகளுடன் மூன்று நாட்கள் முழுமையாக இளைப்பாறிவிட்டுச் சென்றிருக்கின்றது.

குறித்த கப்பலின் தொடர்ச்சியாக ‘ஷி யான்-6’ வருகை தரவுள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக்கொண்டுள்ளது. இதனால் ‘ஷி யான்-6’ இன் வருகை குறித்த விடயம் சம்பந்தமாக நேரடியாகவும், நேர்மறையாகவும் அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், ‘ஷி யான்-6’ இன் வருகை குறித்த விடயத்தில் அரசாங்கம் எந்த முடிவினை எடுத்தாலும் அது சீனாவை, அல்லது இந்தியாவை நிச்சயமாக உரசிப்பார்ப்பதாகவே இருக்கப்போகின்றது.

முன்னதாக, சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங்-5’ வருகை தருவதற்கு இந்தியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிக்கப்பட்டு, பெருமடுப்பிலான வரவேற்பும் ராஜபக்ஷ அணியினரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. அதற்குப் பின்னரான காலத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக இந்தியா பாரிய அளவில் தனது கரிசனை களையும், அழுத்தங்ளையும் அரசாங்கம் மீது பிரயோகித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டபாய ஜனாதிபதியாக இருந்தபோதே அனுமதி பெறப்பட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு விட்டதாக கூறி இந்தியாவினை சமாளித்திருந்தார்.

எனினும், இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் எந்தவொரு வெளிநாட்டுப் போர்க்கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

குறிப்பாக, சீனாவின் பிறிதொரு கப்பலான செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்பு வசதிகளைக் கொண்ட ‘யுவான் வாங் 6’ அம்பாந்தோட்டைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரிய போதும், வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்தோடு, எந்த நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் சிறிலங்காவின் துறைமுகங்களுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் எவ்வாறு அனுமதியை அளிப்பது என்பது குறித்து கொள்கையொன்றை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் அதுபற்றி தற்போது வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை. இந்த நிலையில் தான் ‘ஷி யான்-6’ இன் வருகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நிச்சயமாக பூகோளத்தில் பிராந்திய இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஏற்கனவே 2014இல் கொழும்பு துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கிக் கப்பலின் வருகையை அடுத்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1347085

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

'ஷி யான் 6' சீனக்கப்பலின் வருகைக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை - வெளிவிவகார அமைச்சர்

Published By: DIGITAL DESK 3

14 SEP, 2023 | 08:57 PM
image
 

(நா.தனுஜா)

சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6' இன் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், இவ்விடயங்கள் இராஜதந்திர ரீதியிலேயே கையாளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் மட்டக்கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 

இதன்போது 'ஷி யான் 6' என்ற சீன ஆய்வுக்கப்பலின் வருகை மற்றும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர மோதல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி, சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6' இன் வருகையுடன் தொடர்புடைய விவகாரங்களில் தாம் (வெளிவிவகார அமைச்சு) நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று குறிப்பிட்ட அவர், அக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அதேவேளை, 'ஷி யான் 6' கப்பலின் வருகை தொடர்பில் வெளியான செய்திகளை அடுத்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் முறுகல் நிலையை இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்டக்கூட்டத்தின்போது எவ்வாறு கையாளப்போகின்றீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, எந்தவொரு நாடும் இவ்வாறான விடயங்களை இராஜதந்திர ரீதியிலேயே கையாளும் என்று குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிலவும் சவால்களை அடையாளங்காண்பதற்கும், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த அமைச்சர்கள் மட்டக்கூட்டம் பங்களிப்புச்செய்யும் என்று சுட்டிக்காட்டிய அவர், எதுஎவ்வாறெனினும் நாட்டின் உள்ளக நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே செயற்படுவோம் என்றும் உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/164579

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2023 at 21:28, தமிழ் சிறி said:

இந்தியாவை நிச்சயமாக உரசிப்பார்ப்பதாகவே இருக்கப்போகின்றது.

ஹாஹா.....  இந்தியாவை எப்படி உரசினாலும் அதுக்கு ரோசம் வராது. அப்படி ஒன்று அதுக்கு இருந்தாற்தானே வருவதற்கு? நம்பிக்கை துரோகம் என்றால் என்ன, அதன் வலி எவ்வளவு ஆழமானது, அழிவை தரக்கூடியது என இந்தியா உணர ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாமா?

On 28/8/2023 at 21:28, தமிழ் சிறி said:

கடந்த ஜூன் 10ஆம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுண் துறைமுகத்துக்குச் சந்தம் சந்ததியின்றிச் சென்றிருந்த ‘ஹாய் ஜங் 24’ என்ற சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்

??

  • கருத்துக்கள உறவுகள்

நக்குண்டார் நாவிழந்தார். இலங்கைக்கு வேறு தெரிவு இருக்க முடியாது. அவர்களது பணத்தை செலுத்தி முடிக்கும் வரைக்கும் எதுவுமே செய்ய முடியாது. இந்தியாவும் பணம்வழங்கி இருந்தாலும் இது வேறு ஒரு நாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயமாக்கயால் சிக்கலான விடயம். சீனா தனது அதிகாரத்தை காடடவே முயட்சிக்கும். இப்போதைக்கு எதை கூறினாலும் , சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ தேவைக்காக நிச்சயம் பயன்படுத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

சீனக்கப்பல் வருகை - வெளிவிகார அமைச்சிடம் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு 

16 SEP, 2023 | 08:53 PM
image

ஆர்.ராம்

சீனாவின் ஷியான்-6 கப்பலின் வருகைக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்களை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு தமது குறித்த கப்பல் தொடர்பான பரிந்துரைகளை தாம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான ஷியான்-6 கப்பலானது எதிர்வரும் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருவதாக சீனாவினால் அறிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தபோதும், பின்னர் வெளிவிவகார அமைச்சு அனுமதிக்கான விடயத்தினை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டது.

எனினும், குறித்த அறிவிப்புக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியில் இந்தியா உள்ளிட்ட தரப்புக்களினால் உத்தியோகப் பற்றற்ற அதிருப்திகள் அரசாங்கத்துக்கு வெளியிடப்பட்டன.

விசேடமாக இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி நேரத்தில் அதனை இரத்து செய்திருந்தார்.

குறித்த சீனக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கினால் இராஜதந்திர ரீதியில் பதற்றமான நிலைமைகள் உருவாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா உட்பட இந்திய ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். 

இந்நிலையில், சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதுகுறித்து இன்னமும் தீர்மானம் அறிவிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் அறிவித்தார். 

இவ்வாறான தருணத்தில் பாதுகாப்பு அமைச்சு, கடற்றொழில் நீரியல் வளத்துறையுடன் இணைந்து சீனாவின் ஷியான்-6 கப்பல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அது தொடர்பிலான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

தற்போது சீனாவின் ஷியான்-6 கப்பலானது தென்சீனக் கடலிலிருந்து இந்து சமுத்திர பிராந்தியத்தினை அண்மித்ததாக, மலேஷியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருக்கின்றது. 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயம் நிறைவடையும் வரையில் குறித்த கப்பலின் இலங்கை விஜயத்தை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், அதுகுறித்து இலங்கையில் உள்ள சீன தூதரகமோ அல்லது சீன வெளிவிவகார அமைச்சோ இதுவரையில் எவ்விதமான பதிலளிப்புக்களையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/164729

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

தற்போது சீனாவின் ஷியான்-6 கப்பலானது தென்சீனக் கடலிலிருந்து இந்து சமுத்திர பிராந்தியத்தினை அண்மித்ததாக, மலேஷியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருக்கின்றது. 

ம்ம்..... இந்தியாவுக்கு தூக்கம் போச்சு! போகணும்.... அலையணும்..... ஒரு அச்சுறுத்தல் விடலாம்.... நான் தமிழருக்கு உரிமை வழங்கப்போகிறேனென, ஆனால் இனிமேல் இதற்கெல்லாம் இலங்கை அஞ்சாது. இனி இலங்கையின் பின்னால் இந்தியா ஓடுவதை தவிர வேறேதும் சாதிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாதென்பதே சோகம் நிறைந்த உண்மை. காலங்கடந்த ஞானம் இந்தியாவுக்கு உதவாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல் |தென்னிந்தியாவுக்கான ஆபத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

18 SEP, 2023 | 04:17 PM
image
 

சென்னை:

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 (Shi Yan 6) என்ற உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவிருப்பதாகவும், அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் கிடைத்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

 

சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சி என்பது தென் மாநிலங்களை உளவு பார்ப்பது தான் என்பதால், இது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவுக் கப்பல் ஷி யான் இரு நாட்களுக்கு முன் மலேஷியாவை அடுத்த மலாக்கா நீரிணைக்கு வந்து விட்டதாவும், அங்கிருந்து அக்டோபர் மாத இறுதியில் இலங்கையில் கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மலாக்கா நீரிணையில் ஆய்வு மேற்கொள்ளாமல் உடனடியாக புறப்பட்டால், செப்டம்பர் 24 அல்லது 25ம் நாள் அக்கப்பல் இலங்கைக்கு வந்து சேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு துறைமுகங்களிலும் மொத்தம் 17 நாட்கள் சீனக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்; அப்போது பல ஆராய்ச்சிகள் செய்யப்படும் என தெரியவந்திருக்கிறது.

 

 

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்குள் நுழைய சீன உளவுக்கப்பலுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் அது தொடர்பான கோரிக்கை இலங்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரு மோசடி.

 

இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தான் சீனக் கப்பலுக்கு அனுமதி அளிக்காதது போல இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

 

ஷி யான் உளவுக் கப்பல் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். பல நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக் கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் இந்தக் கப்பலுக்கு உண்டு.

 

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டாலும் அங்கிருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும். அணு சக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

ஷி யான் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்று இந்த அச்சுறுத்தலை கடந்து செல்ல முடியாது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் என்ற கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பான்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதையடுத்து, அக்கப்பல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. யுவான் வாங் 6 கப்பலால் இந்தியாவுக்கு எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுமோ, அதை விட மோசமான அச்சுறுத்தல் ஷி யான் கப்பலாலும் ஏற்படும்.

 

அதுமட்டுமின்றி, யுவான் வாங் கப்பலை விட அதிகமாக 17 நாட்களுக்கு ஷி யான் கப்பல் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் என்பதால், தென்னிந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து முக்கிய நிலைகளையும் சீனா உளவு பார்த்து தகவல்களை செகரித்து வைத்துக் கொள்ள முடியும். அதை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு எதிராக சீன அரசால் பயன்படுத்த முடியாது. இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்து ஆகும்.

 

ஆசியாவை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது எதிர்காலத் திட்டத்துக்கு இந்தியா தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதும் சீனா, இந்தியாவைச் சுற்றிலும் தனது பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தி, ராணுவ ரீதியாக முடக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. அதற்காகவே ஒன்றன்பின் ஒன்றாக உளவுக்கப்பல்களை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

கடந்த காலங்களில் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சீனாவின் சாங்ஷெங் -2 நீர் மூழ்கிக் கப்பலும், சாங் ஜிங் தாவ் போக்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து 5 நாட்கள் இந்திய நிலைகளை உளவு பார்த்தன. கடந்த ஆண்டு யுவான் வாங் உளவுக் கப்பல் வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன் ஹாய் யாங் 24 என்ற போர்க்கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு வந்து, இரு நாட்கள் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சென்றுள்ளது.

 

அடுத்தக்கட்டமாக வரும் ஷி யான் கப்பலுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என இலங்கை தரப்பில் கூறப்பட்டாலும், அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையை மீறிய செயல் ஆகும்.

 

சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987ம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும். அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப் பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது. சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. சீனா தொடர்பான சிக்கல்களைப் பொறுத்தவரை இலங்கை அரசு இரட்டை வேடம் போடுகிறது என்பதையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.

 

அண்மையில், டெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்க, இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக சீன உளவுக் கப்பல்களுக்கு இலங்கை தொடர்ந்து கம்பளம் விரித்து வருகிறது.

 

இதை புரிந்து கொண்டு, இலங்கை அரசுடனான நமது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் திருத்தங்களை செய்ய வேண்டும். கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதை ஏற்க இலங்கை அரசு மறுத்தால் அந்நாட்டுக்கு மிகக் கடுமையான பாடத்தை மத்திய அரசு புகட்ட வேண்டும்." என ராமதாஸ் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/164873

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை வேவுபார்ப்பதற்காக இலங்கைக்கு கப்பல்களை அனுப்புகின்றதா சீனா - ரணிலின் கருத்து என்ன?

Published By: RAJEEBAN

19 SEP, 2023 | 10:46 AM
image
 

இலங்கையில் இராணுவதளங்களை இயக்குவதற்கு சீனாவிற்கு கொழும்பு அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை ஒரு வர்த்தக துறைமுகம் என தெரிவித்துள்ளதுடன் அந்த துறைமுகத்தின் பாதுகாப்பு நேட்டோவின் கரங்களில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கின் சர்வதேச அமைதிக்கான கார்னகி என்டோவ்மன்டின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வேவுபார்ப்பதற்காக சீனா இலங்கைக்கு கப்பல்களை அனுப்புகின்றது என்பதை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

இலங்கையில் வேவு கப்பல்கள் எவையும் இல்லை எவராலும் வேவுகப்பல்களை உருவாக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சீனாவின் கப்பல்களை ஆராய்ச்சி கப்பல்கள் என வர்ணித்துள்ளதுடன் இவ்வாறான கப்பல்கள் பத்து வருடங்களிற்கு இலங்கைக்கு இவ்வாறான கப்பல்கள் வந்து செல்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164912

  • கருத்துக்கள உறவுகள்

ஷி யான் 6 தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தமது உளவுக் கப்பலை கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளதா என்ற குழப்பத்தின் மத்தியில், சீன உளவுக் கப்பல் ஷி யான் 6 கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி, ஷி யான் 6 ரக கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பல்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான தமது பயணத்தை ரத்து செய்திருந்தார்.

இந்த கப்பல் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் முக்கிய பங்காளிகளாகக் கருதுகிறது.

அதேநேரம் இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடம் 7.1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள இலங்கை, அதில் கணிசமான பகுதியான 3 பில்லியன் டொலரை சீனாவுக்கு செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/273612

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2023 at 01:24, ஏராளன் said:

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்

உந்த எச்சரிக்கையெல்லாம் புலிகளை அழித்தவுடன் குளிர் விட்டுப்போச்சு போயிற்று, இனி வேண்டுமென்றால் கெஞ்சிப்பாருங்கள். ஏற்கெனவே கனடாவோடு உரசிக்கொண்டு இருக்கிறது பாரத மாதா, இதுக்குள்ள இன்னொன்றை இழுத்து மாட்டுப்படவோ? புலிகளை அழித்து தனக்குத்தானே சூனியம் வைத்தது இந்தியா! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பை நெருங்கும் சீனாவின் உளவுக் கப்பல் – இந்தியாவின் அடுத்த நகர்வு!

கொழும்பை நெருங்கும் சீனாவின் உளவுக் கப்பல் – இந்தியாவின் அடுத்த நகர்வு!

ஷி யான் 6 எனும் சீனாவின் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி, ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பற்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அனுமதி வழங்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த கப்பல் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான தமது பயணத்தையும் இரத்து செய்திருந்தார்.

நிதி சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் முக்கிய பங்காளிகளாகக் கருதுகிறது.

இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடம் 7.1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ள இலங்கை, அதில் கணிசமான பகுதியான 3 பில்லியன் டொலரை சீனாவுக்கு செலுத்தவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1350284

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீன கப்பலின் இலங்கை விஜயம் எப்போது? - பிற்போடுமாறு கோருகின்றது இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது சீனா

Published By: RAJEEBAN

04 OCT, 2023 | 10:59 AM
image
 

சீனா கப்பல் இலங்கைக்கு எப்போது விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை சீன கப்பலின் விஜயத்தினை பிற்போடவேண்டும் என கருதுகின்ற போதிலும் தனது கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கையை சென்றடையவேண்டும் என சீனா வலியுறுத்துகின்றது என தெரியவருகின்றது.

சீனாவிற்கான தனது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி சீனா ஜனாதிபதியுடன் இது குறித்து ஆராயவுள்ளார்.

சி யான் 6 விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் 60 பேர் அதில் உள்ளனர் என தெரிவித்துள்ள சீனாவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு சேவையான சிஜிடின் இந்த கப்பல் கடல் புவியியல் கடலியல் மற்றும் கடல் சோதனைகளை மேற்கொள்கின்றது என தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியநாடுகள் சீனாவுடன் புவிசார் அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளதால் கப்பல் குறித்து அதிக ஆர்வத்துடன் உள்ளன.

இந்த விடயத்தில் முத்தரப்பு அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள இலங்கை இலங்கை கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து சீன அதிகாரிகளிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

சீன கப்பல் தனது இலங்கை விஜயத்தின் போது வடபகுதி கடற்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

புவிசார்ரீதியில் நெருக்கமாக உள்ள பகுதி குறித்தே இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதால் வடபகுதி கடற்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இம்மாதம் ஐஓஆர்ஏ உச்சிமாநாடு இடம்பெறுவதால் அந்த விடயத்தில் மும்முரமாக உள்ள இலங்கை  சீன கப்பலின் விஜயத்தினை நவம்பரில் நடத்தவேண்டும் என விரும்புகின்றது - இந்த உச்சிமாநாட்டிற்கு பல சர்வதேச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர்.

எனினும் சீனா தனது கப்பல் இந்தமாதமே இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.

இந்த விடயம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மற்றுமொரு சவாலாக அமைய்பபோகின்றது இலங்கை இந்தியாவின் கரிசனைகளை போக்கவேண்டிய அதேவேளை சீனாவையும் அரவணைக்கவேண்டிய நிலையில் உள்ளது - கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனாவின் ஆதரவு இலங்கைக்கு அவசியம்.

https://www.virakesari.lk/article/166035

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆராய்ச்சி கப்பல் நவம்பரில் இலங்கை வருவதற்கு அனுமதி - வெளிவிவகார அமைச்சர்

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 12:39 PM
image
 

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது ஆனால் நவம்பர் மாதத்திலேயே சீன கப்பல் இலங்கை வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை கப்பல் இலங்கையில் தரித்துநிற்க்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள்  மிகவும் அவசியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/166542

  • கருத்துக்கள உறவுகள்

கொதி அடங்­குமா ?

Published By: VISHNU

09 OCT, 2023 | 12:50 PM
image

கார்­வண்ணன்

“எரி­கி­றதை பிடுங்­கினால் கொதிக்­கி­றது அடங்கும்“ என பழ­மொழி ஒன்று இருக்­கி­றது. சீனாவின் 'ஷி யான் 6' ஆய்வுக் கப்பல் விவ­கா­ரமும் அவ்­வாறு தான் கையா­ளப்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் எதிர்­வரும் 25ஆம் திகதி நங்­கூ­ர­மி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த ஷி யான் 6 ஆய்வுக் கப்பல், இந்­தியப் பெருங்­க­டலில் பய­ணித்து, அம்­பாந்­தோட்­டையில் இருந்து சுமார் 475 கடல் மைல் தொலைவை அடைந்­தி­ருப்­ப­தாக கடந்த வியாழன் மாலை வெளி­யா­கிய தக­வல்கள் தெரி­வித்­தன. இலங்­கையின் சிறப்பு பொரு­ளா­தார கடல் எல்லை- கரையில் இருந்து 200 கடல் மைல் வரை உள்­ளது. அதி­லி­ருந்து சுமார் 275 கடல் மைல் தொலை­வுக்குள் சீன ஆய்வுக் கப்பல் வந்து விட்ட நிலை­யிலும், அது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு வரு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பது, நிச்­ச­ய­மற்­ற­தா­கவே இருக்­கி­றது.

ஷி யான் 6 கப்பல் தற்­போது திரி­சங்கு நிலையில், இருக்­கி­றது.

ஏற்­கெ­னவே கடந்த ஆண்டு இறு­தியில் இந்­தியா அக்னி 5 ஏவு­கணைச் சோத­னையை நடத்­து­வ­தற்குத் தயா­ராகிக் கொண்­டி­ருந்த போதும், ஷி யான் 6 ஆய்வுக் கப்பல், இலங்­கைக்கு வரு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்­தது.

ஆனால், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நீண்ட இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர், ஷி யான் 5 என்ற ஆய்வுக் கப்பல் அம்­பாந்­தோட்­டையில் தரித்துச் செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டதால் இந்­தியா,- இலங்கை இடையே ஏற்­பட்ட முறுகல் நிலை கார­ண­மாக, ஷி யான் 6 கப்­ப­லுக்கு அர­சாங்கம் அனு­மதி அளிக்­க­வில்லை.

அப்­போது, ஷி யான் 6 கப்பல், இந்­தோ­னே­ஷி­யாவின் சுமாத்ரா கடல் பகு­தியில் தரித்து நின்று விட்டுத் திரும்பிச் சென்­றது.

அது இந்­தி­யாவின் அக்னி 5 ஏவு­கணைச் சோத­னையைக் கண்­கா­ணிப்­ப­தற்­கா­கவே வந்­தி­ருந்­தது என்ற குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

தற்­போது இலங்­கையின் பொரு­ளா­தாரக் கடல் எல்­லைக்கு வெளியே காத்­தி­ருக்கும் ஷி யான் 6 ஆய்வுக் கப்­பலை அம்­பாந்­தோட்டை அல்­லது கொழும்பு துறை­மு­கத்­துக்கு அனு­ம­திப்­ப­தற்கோ, சிறப்பு பொரு­ளா­தார கடல் எல்­லைக்குள் ஆய்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்கோ, அர­சாங்கம் அனு­மதி கொடுக்­குமா என்­பதில் தெளி­வற்ற நிலையே காணப்­ப­டு­கி­றது.

ஷி யான் 6 மாத்­தி­ர­மல்ல, அடுத்த ஆண்டு ஜன­வ­ரியில் இன்­னொரு ஆய்வுக் கப்­ப­லையும் இலங்­கைக்கு அனுப்ப சீனா திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது. சீனாவின் இந்த நட­வ­டிக்­கைகள், இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தனது பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களை கண்­கா­ணிப்­ப­தற்­கா­கவும், புல­னாய்வு தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்­கா­கவும் தான் சீனக் கப்­பல்கள் இலங்­கைக்குள் நுழை­கின்­றன என்று இந்­தியா கூறு­கி­றது,

2019இல் அந்­தமான் - நிகோபார் கடற்­ப­ரப்பில் இந்­தி­யாவின் சிறப்பு பொரு­ளா­தார கடல் எல்­லைக்குள் பிர­வே­சித்து, உளவுத் தக­வல்­களைச் சேக­ரிக்க முயன்ற போது, சீன ஆய்வுக் கப்பல் இந்­தியக் கடற்­ப­டை­யி­னரால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டது.

அவ்­வா­றான சம்­ப­வங்கள் கடந்த பல ஆண்­டு­க­ளாக இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தி­யா­வுக்கு அருகில் சென்று தக­வல்­க­ளையும், தர­வு­க­ளையும் சேக­ரிப்­ப­தாயின், நேர­டி­யாக அதன் சிறப்பு பொரு­ளா­தார கடல் எல்­லைக்குள் நுழைய வேண்டும். அதற்கு இந்­தியா அனு­ம­திக்­காது.

இவ்­வா­றான நிலையில் தான், இந்­தி­யா­வுக்கு மிக அண்­மை­யாக இருக்கும் இலங்­கையின் சிறப்பு பொரு­ளா­தார கடல் எல்­லைக்குள் நுழை­வதன் மூலம் இந்­தி­யா­வுக்கு அரு­காக இருந்து வேவு பார்க்க சீன ஆய்வுக் கப்­பல்கள் முற்­ப­டு­கின்­றன.

இதனை இந்­தியா மாத்­தி­ர­மன்றி அமெ­ரிக்­காவும் கடு­மை­யாக எதிர்க்­கி­றது.

சீன ஆய்வுக் கப்­பல்­களை இலங்கைத் துறை­மு­கங்­க­ளுக்கோ, இலங்­கையின் பொரு­ளா­தாரக் கடல் எல்­லைக்குள் ஆய்­வு­களை செய்­வ­தற்கோ இந்த இர­ணடு நாடு­களும் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன.

அதே­வேளை சீனாவும் தனது ஆய்வுக் கப்­பல்­களை இலங்­கைக்குள் அனுப்­பு­வ­தற்கு ஒற்­றைக்­காலில் நிற்­கி­றது. சீனா­விடம் கடன் பெற்ற நாடு என்­பதால் இலங்­கை­யிடம் பெய்ஜிங் பல சந்­தர்ப்­பங்­களில் கடும் போக்­குடன் - விடாப்­பி­டி­யாக நடந்து கொள்­கி­றது.

ஷி யான் 6 கப்பல் விவ­கா­ரத்­தினால் சீனா­வு­ட­னான உற­வு­களில் பாதிப்பு வந்து விடக் கூடாது என ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் கரு­து­கி­றது.

அடுத்த வாரம் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ள நிலையில், தொண்­டைக்குள் சிக்­கிய முள்­ளாக இந்த விவ­காரம் மாறி­யி­ருக்­கி­றது.

இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு சோத­னை­யான ஒரு விடயம் தான்.

அதனால் தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சீனப் பய­ணத்­துக்குப் பின்னர், ஷி யான் 6 கப்­பலை அனு­ம­திப்­பது குறித்து தீர்­மா­னிக்­கலாம் என, இலங்கை அர­சாங்கம் தக­வலை அனுப்­பி­யது.

ஆனால் சீனாவோ அதனை ஏற்க மறுப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின்­றன.

இந்த இழு­ப­றிகள் நடந்து கொண்­டி­ருக்கும் நிலையில் தான், ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான கூட்டு ஆய்வு திட்டம், தற்­போது நடை­மு­றையில் இல்லை என்ற தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

சீன ஆய்வுக் கப்பல் ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்த கூட்டு சமுத்­தி­ர­வியல் ஆய்வு திட்டம் தொடர்­பான பணி­க­ளுக்­கா­கவே இலங்கை வரு­வ­தாக முன்னர் செய்­திகள் வெளி­யா­கின.

ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் சீனா செய்து கொண்ட உடன்­பாட்­டுக்கு அமை­யவே, ஆய்வுக் கப்­பல்­களை அனுப்­பு­வது போன்ற தோற்­றப்­பாட்டை சீனா ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் தான் கொதிக்கும் விவ­கா­ர­மா­கிய ஷி யான் 6 கப்பல் விவ­கா­ரத்தை அடக்­கு­வ­தற்கு, ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கூட்டு ஒத்­து­ழைப்புத் திட்டம் என்ற நெருப்பை அணைக்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

குறித்த திட்­டத்தை முன்­னெ­டுத்த இரண்டு பேரா­சி­ரி­யர்­களும் தற்­போது ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இல்லை என்றும் அதனால் இந்த திட்­டத்தை செயற்­ப­டுத்த முடி­யாது என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

2019இல் சீனாவின் ஷி யான் 3 என்ற ஆய்வுக் கப்­ப­லுடன் இணைந்து, ஆய்­வு­களை மேற்­கொண்ட பின்னர், கடல்­வள ஆய்­வு­களை மேற்­கொள்­வது தொடர்­பாக எந்த இணக்­கப்­பாடும் சீனா­வுடன் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­ப­ட­வில்லை என்று, ருகுணு பல்­க­லைக்­க­ழ­கத்தின், கல்வி மற்றும் ஆராய்ச்­சிக்­கான சீன-­இ­லங்கை கூட்டு நிலை­யத்தின் இணைப் பணிப்­பாளர் பேரா­சி­ரியர் டிஸ்ன ரத்­ன­சே­கர தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அந்த ஆய்­வு­க­ளுக்குப் பின்னர், கூட்டு ஆய்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பல்­க­லைக்­க­ழ­கமோ தாமோ எந்த வேண்­டு­கோ­ளையும் சீனா­விடம் முன்­வைக்­க­வில்லை என்றும், வெளி­வி­வ­கார அமைச்சு பாது­காப்பு அமைச்சை மீறி, ஷி யான் 6 கப்­பலை அழைப்­ப­தற்கு தங்­க­ளுக்கு அதி­காரம் இல்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, ஷி யான் 6 கப்பல் விவ­காரம் தொடங்­கிய போது. 'நாரா' எனப்­படும், தேசிய கடல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி முக­மையின் தலை­வ­ரான பேரா­சி­ரியர் ஜயந்த விஜே­ரத்ன, இலங்­கையின் கடல் எல்­லைக்குள் பெற்றுக் கொள்­ளப்­படும் ஆய்வுத் தர­வு­களை எங்­க­ளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சீனத் தரப்­பிடம் கூறி­யி­ருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், இப்­போது நிலைமை மாறி­யி­ருக்­கி­றது.

ஷி யான் 6 விவ­கா­ரத்தில் இருந்து ஒவ்­வொரு தரப்­பி­னரும் விலகி ஓடு­கின்ற நிலையைக் காண முடி­கி­றது.

முதலில் பாது­காப்பு அமைச்சு அனு­மதி அளித்து விட்­ட­தாக கூறி­யது.

பின்னர் வெளி­வி­வ­கார அமைச்சே கப்­பலை அனு­ம­திப்­பது குறித்து தீர்­மா­னிக்கும் என பாது­காப்பு அமைச்சு கூறி­யது.

அதன் பின்னர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சீன ஆய்வுக் கப்­பல்­களை புல­னாய்வு கப்­பல்கள் அல்ல என்று நியா­யப்­ப­டுத்திப் பேசினார்.

அவ்­வா­றாயின் ஏன் அர­சாங்கம் இன்­னமும் ஷி யான் 6 கப்­பலை அனு­ம­திக்­காமல் இழுத்­த­டிக்­கி­றது?

இந்த விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்தின் எல்லாத் தரப்­புக்­குள்­ளேயும் குழப்­பங்கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. யார் இதற்குப் பொறுப்­பேற்­பது என்­பது தான் முக்­கி­ய­மான பிரச்சினை.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஷி யான் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்ட போது, அதற்கான அனுமதியை கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் வழங்கி விட்டதாகவும், அதனை மாற்றுவது முடியாத காரியம் என்றும் கைவிரித்திருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

ஆனால்,  தற்போது ஷி யான் 6 விவகாரத்தில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கையை மீறி பல நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒரு தரப்பை சாட்டிக் கொண்டு இன்னொரு தரப்பு, சீனக் கப்பலுக்கு பச்சைக்கொடி காண்பித்திருக்கிறதா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது.

விவகாரம் இறுகத் தொடங்கியதும் எல்லாத் தரப்பும் சீனக் கப்பலை கைவிட்டு விட அது திரிசங்கு நிலையில் நிற்கிறது.

இப்போது எரிகிறதை பிடுங்கும் வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும் கொதிக்கின்ற இந்த விவகாரம் இலகுவாக தணியாது போலவே தெரிகிறது.

https://www.virakesari.lk/article/166452

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்த குறித்த சீன ஆய்வுக் கப்பலின் வருகையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே 'ஷி யான் - 6' ஆய்வுக் கப்பலின் இலங்கைக்கான விஜயத்தை சீன தரப்பு இரத்து செய்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பலான ஷியாங் ஹொங் 6 என்ற கப்பலை எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனக் கப்பல் “ஷி யான் 6” க்கு அனுமதி!

சீனக் கப்பல் “ஷி யான் 6” க்கு அனுமதி!

சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த ப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்று வருகைத் தருவதற்கு வெளிவிவகார அமைச்சு திடீரென அனுமதி வழங்கியுள்ளது

https://athavannews.com/2023/1355633

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.

இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. Xiang Yang Hong 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது. Xiang Yang Hong 03 கப்பல் 99.06 மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை… இந்தியாவின் எதிர்ப்பு எப்படி இருக்கும் என பார்க்க ஆவலாக உள்ளது.
கடந்த காலங்களில்… இந்தியா பலமாக   எதிர்த்தும், சீனக்  கப்பல் குறிப்பிட்ட திகதிகளில் இலங்கைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டே சென்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2023 at 12:28, தமிழ் சிறி said:

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

தற்போது தென்சீனக் கடலில் நங்கூரமிட்டுள்ள சீன கடற்படையின் முக்கியமான ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான ‘ஷி யான்-6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.

அவ்வாறு வருகை தரும் குறித்த சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் 17 நாட்கள் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதோடு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும், கொழும்புத் துறைமுகத்துக்கும் செல்லவுள்ளது.

இந்தவிடயத்தினை இலங்கை கடற்படை உறுதி செய்துள்ளதோடு, நாரா எனப்படும், தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகமை நிறுவனமும் தம்முடன் இணைந்து குறித்த கப்பல் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக அப்பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக ஆராய்ச்சிக்காக கடல் நீர் மாதிரிகளைப் பெறுவதற்காகவே குறித்த கப்பல் விஜயம் செய்வதாகவும் பிறிதொரு தகவலும் உள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 10ஆம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுண் துறைமுகத்துக்குச் சந்தம் சந்ததியின்றிச் சென்றிருந்த ‘ஹாய் ஜங் 24’ என்ற சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கடந்த 10ஆம் திகதி காலையிலேயே கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்தது.

கொழும்பில் சீனாவின் நிதிபங்களில் உருவாக்கப்பட்டுள்ள முனையத்துக்குள் எவ்விதமான ஆரவாரமுமின்றி வருகை தந்த 129 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பல், 138 மாலுமிகளுடன் மூன்று நாட்கள் முழுமையாக இளைப்பாறிவிட்டுச் சென்றிருக்கின்றது.

குறித்த கப்பலின் தொடர்ச்சியாக ‘ஷி யான்-6’ வருகை தரவுள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக்கொண்டுள்ளது. இதனால் ‘ஷி யான்-6’ இன் வருகை குறித்த விடயம் சம்பந்தமாக நேரடியாகவும், நேர்மறையாகவும் அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், ‘ஷி யான்-6’ இன் வருகை குறித்த விடயத்தில் அரசாங்கம் எந்த முடிவினை எடுத்தாலும் அது சீனாவை, அல்லது இந்தியாவை நிச்சயமாக உரசிப்பார்ப்பதாகவே இருக்கப்போகின்றது.

முன்னதாக, சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங்-5’ வருகை தருவதற்கு இந்தியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிக்கப்பட்டு, பெருமடுப்பிலான வரவேற்பும் ராஜபக்ஷ அணியினரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. அதற்குப் பின்னரான காலத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக இந்தியா பாரிய அளவில் தனது கரிசனை களையும், அழுத்தங்ளையும் அரசாங்கம் மீது பிரயோகித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டபாய ஜனாதிபதியாக இருந்தபோதே அனுமதி பெறப்பட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு விட்டதாக கூறி இந்தியாவினை சமாளித்திருந்தார்.

எனினும், இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் எந்தவொரு வெளிநாட்டுப் போர்க்கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

குறிப்பாக, சீனாவின் பிறிதொரு கப்பலான செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்பு வசதிகளைக் கொண்ட ‘யுவான் வாங் 6’ அம்பாந்தோட்டைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரிய போதும், வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்தோடு, எந்த நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் சிறிலங்காவின் துறைமுகங்களுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் எவ்வாறு அனுமதியை அளிப்பது என்பது குறித்து கொள்கையொன்றை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் அதுபற்றி தற்போது வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை. இந்த நிலையில் தான் ‘ஷி யான்-6’ இன் வருகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நிச்சயமாக பூகோளத்தில் பிராந்திய இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஏற்கனவே 2014இல் கொழும்பு துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கிக் கப்பலின் வருகையை அடுத்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1347085

@தமிழ் சிறி

அடியேன் சொன்ன சிவனடியார் கதை தானே 🤣😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.