Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ண‌ன் சீமான் மீது தொடுத்த‌ புகாரை திரும்ப‌ பெற்ற‌ விஜ‌ய‌ல‌ட்சுமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Edited by பையன்26

  • வீரப் பையன்26 changed the title to அண்ண‌ன் சீமான் மீது தொடுத்த‌ புகாரை திரும்ப‌ பெற்ற‌ விஜ‌ய‌ல‌ட்சுமி

இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்

- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).

- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார்

சீமான் பகிரங்கமாகவே மிரட்டல் பேச்சு பேசினார்.   நான் யாரென்று நினைத்துக் கொண்டு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கேடுகெட்ட ரவுடி நான்.(எங்களுக்கு தெரியும்) ரொம்ப சீரியஸான ஆளு நான். கட்சியாவது கிட்சியாவது என்று வெட்டி எறிந்துவிட்டு போய்கொண்டே இருப்பேன். ]  அவாவால் எதிர்த்து போராட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இணையவன் said:

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

IMG-4463.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்

- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).

- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.

வ‌ண‌க்க‌ம் அண்ணா

நான் அன்மைக்கால‌மாய் இந்த‌ விடைய‌த்தில் கூடுத‌லான‌ நேர‌த்தை ஒதுக்கினேன்........அண்ண‌ன் சீமான் தான் த‌ன் ம‌னைவியுட‌ன் 18திக‌தி காவ‌ல் நிலைய‌ம் வ‌ருவ‌தாக‌ இன்று சொல்லி இருந்தார்............இது முற்றிலும் திராவிட‌ர்க‌ளால் திரைக்க‌தை வ‌ச‌ன‌ம் எழுதி விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ந‌டிக்க‌ வைச்சார்க‌ள்.............அத‌ர்ம‌ம் ம‌னோச் தொட்டு திராவிட‌ கொள்கை உடைய‌வ‌ர்க‌ள்..........விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ தொட‌ர்வு கொண்டு த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து காவ‌ல்துறை முன் இப்ப‌டி புகார் கொடு என்னு சொன்ன‌ காணொளி யூடுப்பில் இருக்கு.............

இதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கார‌ண‌மாக‌ போட‌ ப‌ட்ட‌ வழ‌க்கு மற்ற‌ம் ப‌டி இதில் ஆச்சிரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை...............

க‌ர்நாட‌காவில் விஜ‌ய‌ல‌ட்சிமியின் பெய‌ர் கெட்டு போச்சு திரைதுறையில் இருந்து  இவாவை ஒதுக்கி வைச்சிட்டின‌ம்.............காசு தேவைப் ப‌டும் போது க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இவாக்கு நெருக்க‌மாய் இருந்த‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து மிர‌ட்டி காசு ப‌றிப்ப‌து...........ஏதும் தொழில் செய்து வாழ‌ ப‌ழ‌காம‌ பிளாக்மேல் செய்து வாழ்வ‌து எல்லாம் ஒரு வாழ்க்கையா.............

இப்போது உள்ள‌ சூழ் நிலையில் இவாவை முற்றிலும் இய‌க்கின‌து திராவிட‌ம்............இவான்ட‌ ப‌ல‌ உண்மை காணொளிக‌ளை க‌ர்நாடகாவில் இருப்ப‌வர்க‌ள் ஜ‌யா ஏக‌லைவன் மூல‌ம் பொது வெளியில் வெளியிட்ட‌வை..............

இவான்ட‌ போட்டிக‌ள் ஒவ்வொன்ரும் முன்னுக்கு பின் முர‌னான‌து............

உண்மை ஏதும் இல்லை
7முறை க‌ரு க‌லைப்பு ச‌ம்ப‌வ‌ம் முற்றிலும் பொய்..........அதை 15 வ‌ருட‌ம் க‌ழித்து எப்ப‌டி க‌ண்டு பிடிக்க‌ முடியும்.........அத‌ற்கு பிற‌க்கு இவா எத்த‌னை க‌ர்நாட‌கா ந‌டிக‌ர்க‌ள் கூட‌ குடும்ப‌ம் ந‌ட‌த்தி உட‌ல் உற‌வு செய்து இருப்பா........பஞ்சும் நெருப்பும் ப‌க்க‌ம் இருந்தா ப‌த்திக்கொள்ளும் லொல்😂😁🤣............7முறை க‌ரு க‌லைப்பு இது அண்ண‌ன் சீமானின் பெய‌ரை க‌ல‌ங்க‌ப் ப‌டுத்த‌ போட்ட‌ திட்ட‌ம் அதுவும் எடு ப‌ட‌ வில்லை............

இவாவிட‌ம் இருக்கும் திற‌மைய‌ வைத்து இனியாவ‌து ந‌ல்ல‌ வாழ்க்கைய‌ தொட‌ங்க‌ட்டும்.................

பையன், எனது கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதிய பதிலிலிருந்து நீங்கள் இக் காணொளியைச் சரியாகப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. 

சீமான் ஏற்கனவே பத்திரிகையாளர்களைக் காக்க வைத்து போலீஸ் நிலையத்துக்கு வருவதாகக் கூறி இரண்டு தடவை வரவில்லை. 18 ஆம் திகதியும் வந்திருப்பார் என்று எந்த நிச்சயமும் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavi arunasalam said:

IMG-4463.jpg

Screenshot-20230915-225400-Collage-Maker

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இணையவன் said:

பையன், எனது கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதிய பதிலிலிருந்து நீங்கள் இக் காணொளியைச் சரியாகப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. 

சீமான் ஏற்கனவே பத்திரிகையாளர்களைக் காக்க வைத்து போலீஸ் நிலையத்துக்கு வருவதாகக் கூறி இரண்டு தடவை வரவில்லை. 18 ஆம் திகதியும் வந்திருப்பார் என்று எந்த நிச்சயமும் இல்லை. 

அண்ணா அண்ண‌ன் சீமான் அவ‌ரின் வ‌க்கில் மூல‌ம் சில‌ கேள்விக‌ளை காவ‌ல்துறையிட‌ம் கேட்டு இருந்தார் தான் ஆய‌ர் ஆவ‌து ப‌ற்றி.........அத‌ற்கு காவ‌ல்துறை அண்ண‌ன் சீமானிட‌ம் ம‌ட்டும் தான் சொல்ல‌ முடியும் என்று சொல்லி அனுப்பினார்க‌ள்.............நீதி ம‌ன்ற‌ம் போய் ர‌த்து செய்ய‌ப் ப‌ட்ட‌  கேசை மீண்டும் தூசி த‌ட்டி எடுக்க‌லாமா அண்ணா.............

2013ம் ஆண்டு அண்ண‌ன் சீமானுக்கு திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் போது நீங்க‌ள் என்ன‌ செய்து கொண்டு இருந்தீங்க‌ள் என்று விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ஊட‌க‌ நெறியாள‌ர் கேட்க்க‌ தான் தூங்கிட்டு இருந்தேன் என்று ந‌க்க‌லா ப‌தில் சொல்லுறா.............

க‌ர்நாட‌க‌ம் போனால் தான் சுத்த‌ க‌ர்நாட‌கா ம‌க‌ள் என்ற‌தும்...........தமிழ் நாட்டுக்கு வ‌ந்தால் தான் த‌மிழ் பெண் என்ற‌தும் ............இப்ப‌டி தான் இவான்டா ராமா போய் கிட்டு இருக்கு..........இப்ப‌டியான‌ அவ‌தூறு வ‌ழ‌க்குக்கு அண்ண‌ன் சீமான் காவ‌ல்நிலைய‌ம் போக‌லாமா அண்ணா............... 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மடியில் ஏதோ இருக்குப் போல😎!

"18 ஆம் திகதி வாறேன் சார்" எண்டு விட்டு, 15 ஆம் திகதியே உள்ளால காரியம் பார்த்து விட்டார் என ஊகிக்கிறேன்: சீமான், ஒரிஜினல் சராசரி தமிழ்நாட்டு அரசியல் வாதி என மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இல்லை. இன்னும் இரண்டொரு வருடங்களில் திரும்பவும் விஜயலக்சுமி திரும்பி வந்து வீடியோ போடுவாங்க. தொடரும்…….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் இல்லை. இன்னும் இரண்டொரு வருடங்களில் திரும்பவும் விஜயலக்சுமி திரும்பி வந்து வீடியோ போடுவாங்க. தொடரும்…….

திராவிட‌ மாபியா கும்ப‌ல் பிடியில்  இருந்து விஜ‌ய‌ல‌ட்சுமி வெளிய‌ போன‌து ம‌கிழ்ச்சி🙏............

விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ப‌க‌டைகாயா ப‌ய‌ன் ப‌டுத்தினார்க‌ள் ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை..........அவ‌தூறு ப‌ர‌ப்ப‌ சொல்லி கொடுத்தார்க‌ள் அத‌ற்கு விஜ‌ய‌ல‌ட்சுமி ஊட‌க‌த்துக்கு முன்னாள் நின்று ஏனோ தானோ என்று உள‌றி கொட்டிச்சுது............

ஆனால்  வீரல‌ட்சுமி இந்த‌ விடைய‌த்தில் அதிக‌ம் பொங்கி எழும்போது தெரிந்து விட்ட‌து திராவிட‌ சில்ல‌றைக‌ள் தான் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரையும் இய‌க்குவ‌தென்று............

நீங்க‌ள் மேல‌ கேட்ட‌து போல் இந்த‌ புகாரை அண்ண‌ன் சீக்கிர‌ம் முடித்து வைப்பார் இன்னும் ஒரு சில‌ காணொளிக‌ள் வெளிய‌ வ‌ரும் அப்போது எல்லாத்துக்கும் ஒரேய‌டியா முற்றுப்புள்ளி வைப்பார்

திராவிட‌ வைக்கில் விஜ‌ய‌ல‌ட்சுமி காலில‌ விழுந்து இப்ப‌டி சொல்ல‌ம்மா அப்ப‌டி சொல்ல‌ம்மா என்னு ம‌ண்டியிட்ட‌தாக‌வும் விஜ‌ய‌ல‌ட்சுமி அப்ப‌டி எல்லாம் சொல்ல‌ முடியாது என்னு சொன்னாதாக‌ பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌ல்  தெரிவிக்கின்ற‌ன‌...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜ‌ய‌ல‌ட்சுமியை கொன்று விட்டு ப‌ழிய‌ அண்ண‌ன் சீமான் மேல‌ போட‌ ந‌ட‌ந்த‌ நாட‌க‌மும் அம்ப‌ல‌மாகி விட்ட‌து.............விஜ‌ய‌ல‌ட்சுமியின் புது காணொளிக‌ளில் பல‌ உண்மைக‌ள் வ‌ரும் அது ம‌ட்டும் காத்து இருப்போம்😏................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இணையவன் said:

இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்

- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).

- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.

உங்க‌ளின் கேள்விக்கு இவ‌ர் சொல்லும் ப‌திலை கேலுங்கோ அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இணையவன் said:

இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்

- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).

- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.

இந்தக் காணொளியில் இருந்து உங்களுக்கு சார்பான அதாவது சீமானுக்கு எதிரான வகையில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள்.அனால் வேறு விடயங்களையும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையில் சண்டை எதற்காக வந்தது. நிச்சயமாக பணம் பங்கிடுவதாகத்தான் இருந்திருக்கும். அரசியல் ரீதியாக விஜயலட்சுமியை விட வீரலட்சுமி பலம் வாயந்தவர்.சமூன் மீது சேறு பூசுவதற்கு இந்த விடயத்தை திமுகவும் திராவிடர் கழகத்தினரும் தமிழ்த்தேசிய எதிரிகளும் விஜய லட்சுமி வீரலட்சுமியை வைத்து பணம் கொடுத்து தங்கள் உடகங்கள் மூலம் விடயத்தைப் பெரியதாக்கினார். ஆனால் சீமான் கைதுசெய்யப்பட்டால் அது சீமானுக்கு சாதகமாகத்தான் முடியும் என்ற நிலையில் அவர்கள் பின்வாங்க விஜயலட்சமி வகவிடப்பட்டார்.இனி அவர் பெங்களுர் போவது அவருக்கு நல்லது. ஊடகங்கள் தொடர்ந்து சீமாகனை எதிர்மறையாய் விமர்சிக்கப் போய் அது சீமானுக்கு விளம்பரமாகப் போய்விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, இணையவன் said:

பையன், எனது கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதிய பதிலிலிருந்து நீங்கள் இக் காணொளியைச் சரியாகப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. 

சீமான் ஏற்கனவே பத்திரிகையாளர்களைக் காக்க வைத்து போலீஸ் நிலையத்துக்கு வருவதாகக் கூறி இரண்டு தடவை வரவில்லை. 18 ஆம் திகதியும் வந்திருப்பார் என்று எந்த நிச்சயமும் இல்லை. 

அண்ண‌ம் சீமான் விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ போனில் பேச‌ வில்லையாம்.............போர‌ போக்கில் 10ஓட‌ 15ஜ‌ந்தை அடித்து விட்டு போய் இருக்கு..........அண்ண‌ன் சீமான் ஊட‌க‌த்துக்கு அடுத்த‌ முறை பேட்டி கொடுக்கும் போது இதை உறுதி ப‌டுத்துவார்😁.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இந்தக் காணொளியில் இருந்து உங்களுக்கு சார்பான அதாவது சீமானுக்கு எதிரான வகையில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள்.அனால் வேறு விடயங்களையும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையில் சண்டை எதற்காக வந்தது. நிச்சயமாக பணம் பங்கிடுவதாகத்தான் இருந்திருக்கும். அரசியல் ரீதியாக விஜயலட்சுமியை விட வீரலட்சுமி பலம் வாயந்தவர்.சமூன் மீது சேறு பூசுவதற்கு இந்த விடயத்தை திமுகவும் திராவிடர் கழகத்தினரும் தமிழ்த்தேசிய எதிரிகளும் விஜய லட்சுமி வீரலட்சுமியை வைத்து பணம் கொடுத்து தங்கள் உடகங்கள் மூலம் விடயத்தைப் பெரியதாக்கினார். ஆனால் சீமான் கைதுசெய்யப்பட்டால் அது சீமானுக்கு சாதகமாகத்தான் முடியும் என்ற நிலையில் அவர்கள் பின்வாங்க விஜயலட்சமி வகவிடப்பட்டார்.இனி அவர் பெங்களுர் போவது அவருக்கு நல்லது. ஊடகங்கள் தொடர்ந்து சீமாகனை எதிர்மறையாய் விமர்சிக்கப் போய் அது சீமானுக்கு விளம்பரமாகப் போய்விட்டது.

வ‌ண‌க்க‌ம் புல‌வ‌ர் அண்ணா

உங்க‌ட‌ க‌ருத்தை நான் வ‌ர‌வேற்கிறேன்

நேற்று விஜ‌ய‌ல‌ட்சுமி ஊட‌க‌த்துக்கு முன்னாள் சொன்ன‌தில் ப‌ல‌ பொய்க‌ள் இருக்கு என்று இப்ப‌ தான் தெரிய‌ வ‌ருது.............விஜ‌ய‌ல‌ட்சுமி சொன்னா அண்ண‌ன் சீமான் கூட‌ தான் போனில் பேசின‌தாக‌..............உண்மை நில‌வ‌ர‌ம் அண்ண‌ன் சீமான் விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ பேச‌ வில்லை

நீதி ம‌ன்ற‌த்தில் அண்ண‌ன் சீமான் சார்பாய் கொடுத்த‌ புகாரை அண்ண‌ன் சீமான் திரும்ப‌ பெற‌ வில்லை ஒரு கோடி ந‌ஷ்ட‌ ஈடு...........விஜ‌ய‌ல‌ட்சுமி வீர‌ல‌ட்சுமி மீது கொடுத்த‌ புகார் ச‌ம்ம‌ந்த‌மா  நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌க்கில்க‌ள் மிக‌ வேக‌மாக‌  செய‌ல் ப‌டுகின‌ம்...........அண்ண‌ன் சீமான் ஒன்றுக்கும் பின் வாங்க‌ வில்லை...........இன்னும் ஒரு மாத‌த்தில் விஜ‌ய‌ல‌ட்சுமி வீர‌ல‌ட்சுமிக்கு நீதி ம‌ன்ற‌த்துக்கு வ‌ரும் ப‌டி நேடிஸ் கொடுக்க‌ப் ப‌டும்

அது ம‌ட்டும் நாம் அமைதி காப்போம்............யாழில் சீமான் வெறுப்பாள‌ர்க‌ள் ஏதோ எல்லாம் எழுதுகின‌ம் என‌க்கு ஒன்றும் புரிய‌ வில்லை😂😁🤣.............

அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் உண்மையான‌ நீதி வென்றால் ம‌கிழ்ச்சி...........அன்றோடு விஜ‌ய‌ல‌ட்சுமி ரோட்டால் போர அனாதை நிலைக்கு ஆகிடுவா😯...........

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

“சீமானிடம் பேசினேன், வழக்கை திரும்பப் பெறுகிறேன்” - விஜயலட்சுமி

சீமான்

பட மூலாதாரம்,IDUMVAVAM KARTHI/ NAAM TAMILAR

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச. பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தானும் சீமானும் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும், தனது அனுமதி இல்லாமலேயே சீமான் தனக்கு ஏழு முறை கருச்சிதைவு செய்ததாகவும், நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரத்தில் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சார்பில் 2 முறை சம்மன் அனுப்பபட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை, சீமான் மறுத்து வருகிறார். “விஜயலட்சுமி விவகாரத்தில் நான் மெளனமாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் வெடித்துச் சிதறினால் யாரும் தாங்க மாட்டீர்கள்.

பெரிய லட்சியங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை அவதூறு செய்கிறார்கள். என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் விஜயலட்சுமியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது எனக்கு எதிரான அரசியல் கட்சிகளின் சதி,” என்றும் சீமான் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, தான் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் யாரும் கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ வழக்கை வாபஸ் பெறவில்லை என்றும் தானாகவே வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

சீமானிடம் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், “வழக்கு எனக்கு திருப்திகரமாக இல்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டனர். கடைசியில் சீமான் தான் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிகாரம் உள்ளது. அவரை எதுவும் செய்ய முடியாது. என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சீமான் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்,” என்றார்.

வழக்கை வாபஸ் பெறுவதற்காகப் பணம் எதையும் வாங்கவில்லை எனக் கூறிய அவர், “சீமானை எதிர்கொள்ள எனக்குப் போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவரை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டேன். திமுகவால் சீமானை கைது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

சாதாரண நபர் மீது புகார் அளித்திருந்தால் 24 மணிநேரத்தில் விசாரணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். சீமானை அழைத்து வர முடியவில்லை. எனவே, நான் போராடுவது வீண். இந்த விவகாரத்தில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை எதிர்கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

சீமான்

பட மூலாதாரம்,IDUMBAVAM KARTHI NAAM TAMILAR

படக்குறிப்பு,

விஜயலட்சுமி

தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘சீமான் என்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்,’’ எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.

போலீஸார் சம்மன்
 
படக்குறிப்பு,

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

“நான் சினிமாவில் நடித்து சேர்த்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் பணம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 2011இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

சீமான் மீதும், என்னை மிரட்டும் மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

விஜயலட்சுமியின் புகாரின் பேரில் சீமான் மீது போலீஸார், பாலியல் வல்லுறவு, மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

சீமான், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்

போலீசார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பெற்று, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது, நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் அவதூறு வழக்குகள் பதிவு செய்ததுடன், ‘விஜயலட்சுமி பணம் பறிப்பதற்காக சீமான் மீது புகார் கொடுத்துள்ளார்,’ எனக் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் பதிவேற்றினர்.

சீமான்

பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI

நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன்

விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு, ‘விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணையைச் செய்ய வேண்டியுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி காலை, 10:30 மணிக்குள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்,’ என எழுதப்பட்ட சம்மன் ஒன்றை, பாலவாக்கம் சக்திமூர்த்தி அம்மன் நகரில் உள்ள சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேரில் வழங்கினர். எனினும் சீமான் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சில ஊடகங்களில் பேட்டியளித்திருந்தார். மேலும், தனக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக வீரலட்சுமி போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்தார். நாம் தமிழர் கட்சியினர் தன்னை பற்றி இழிவாக பேசுவதாகவும் தனக்கு வேறு முகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு நேற்று பதிலளித்து பேசிய சீமான், தனக்கும் விஜயலட்சுமிக்கும் இடைப்பட்ட பிரச்னைக்கு நடுவே வீரலட்சுமி யார் என்று கேள்வி எழுப்பினார் .

ஜனநாயகவாதியாக தற்போது தாம் உள்ளதாகவும் தனக்கு வேறு ஒரு முகம் உள்ளதாகவும் கூறிய அவர் சிரிக்க, சிரிக்க பேசுவதாக நினைக்க கூடாது. நான் மிகவும் கோபக்காரன். என்னை குறித்து என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று நினைக்கிறார்கள். எனக்கு பிறப்பிலேயே வீரம் இருக்கிறது. லட்சுமிதான் இல்லை என்பதால், தனலட்சுமி, தாராளலட்சுமி என எத்தனை லட்சுமிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். அவதூறுகளால் என்னை அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c0v5rv9vjnjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

இந்தக் காணொளியில் இருந்து உங்களுக்கு சார்பான அதாவது சீமானுக்கு எதிரான வகையில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள்.அனால் வேறு விடயங்களையும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையில் சண்டை எதற்காக வந்தது. நிச்சயமாக பணம் பங்கிடுவதாகத்தான் இருந்திருக்கும். அரசியல் ரீதியாக விஜயலட்சுமியை விட வீரலட்சுமி பலம் வாயந்தவர்.சமூன் மீது சேறு பூசுவதற்கு இந்த விடயத்தை திமுகவும் திராவிடர் கழகத்தினரும் தமிழ்த்தேசிய எதிரிகளும் விஜய லட்சுமி வீரலட்சுமியை வைத்து பணம் கொடுத்து தங்கள் உடகங்கள் மூலம் விடயத்தைப் பெரியதாக்கினார். ஆனால் சீமான் கைதுசெய்யப்பட்டால் அது சீமானுக்கு சாதகமாகத்தான் முடியும் என்ற நிலையில் அவர்கள் பின்வாங்க விஜயலட்சமி வகவிடப்பட்டார்.இனி அவர் பெங்களுர் போவது அவருக்கு நல்லது. ஊடகங்கள் தொடர்ந்து சீமாகனை எதிர்மறையாய் விமர்சிக்கப் போய் அது சீமானுக்கு விளம்பரமாகப் போய்விட்டது.

இந்த‌ காணொளி உங்க‌ளுக்காக‌ புல‌வ‌ர் அண்ணா நேர‌ம் இருக்கும் போது பாருங்கோ ............இதில் ப‌ல‌ உண்மைக‌ள் அட‌ங்கி இருக்கு..........நான் ஏக‌லைவ‌ன் ஜ‌யாவின் காணொளிக‌ள் அதிக‌ம் பார்ப்பேன்..............அவ‌ரின் பேச்சில் இருந்து நா அட‌க்க‌த்தில் இருந்து பொறுமையில் இருந்து உண்மைய‌ சொல்லுவ‌தில் இருந்து அத‌னால் ஜாவை ரொம்ப‌ பிடிக்கும்..............அடுத்த‌ முறை த‌மிழ் நாடு போகும் போது ஜ‌யாவை சந்திப்பேன்..................

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கும் விஜயலட்சுமி சீமானோடு பேசியிருந்தால் அதையும் பதிவு செய்து வைத்திருப்பார். அதைப் போட்டுக்காடட்டி உறுதிசெய்யும்வரை அதை நம்பத்தகுந்த ஆதாரமாக எடுக்க முடியாது. உண்மையில் விஜயலட்சுமியை பகடைக்காயாக வைத்து சமூனின் செல்வாக்கைச் சரிப்பதற்கு சீமானின் அரசியல் எதிரிகள் வீரலட்சுமியை வைத்து போட்ட திட்டம் பிசுபிசுத்துப் போய் உள்ளது. தனக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு சீமானின் அரசியல் பலததை சிதைக்கும் வேலையை அவர்கள் செய்தார்கள். விஜயலட்சுமி வழக்குப் போட வைத்து விட்டு விஜயலட்சுமியை அம்போ என்று விட்டு விட்டு அந்த வழக்கை வைத்து சீமானை கைதுசெய்து சீமானின் அரசியல்பலத்தை உடைக்கும் வேலையைச் செய்தார்கள். தான் கைவிடப்பட்டதை உணர்ந்த விஜயலட்சுமி பிச்ழச வேண்டாம் நாயைப்பிடி என்று வழக்கை வாபஸ்வாங்கிக்கொண்டு பெங்களுரக்கு ஓடிவிட்டார்.அவருக்கே இந்த வழக்கு எடுபடாது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவதூறு வழக்கும் அவர்மீது போடப்பட்டுள்ளது. இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓடிவிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

அவ‌தூறு வ‌ழ‌க்கு இர‌ண்டு பேர் மீதும் நீதி ம‌ன்ற‌த்தில் போட‌ ப‌ட்டு இருக்கு புல‌வ‌ர் அண்ணா

வீர‌ல‌ட்சுமி பொல்லை கொடுத்து அடி வாங்கிட்டு இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் தெரியும் தான் கூலிக்கு பார் அடிக்க‌ போன‌து த‌ப்பு என்னு

விஜ‌ய‌ல‌ட்சுமி அண்ண‌ன் சீமானின் தாயாரை பேசின‌து தொட்டு இன்னும் ப‌ல‌ அவ‌தூறுக்கு  வ‌ழ‌க்கு தொடுத்து இருக்கு................நீதி ம‌ன்ற‌த்தில் அடிக்கு மேல‌ அடி விழுந்தா விஜ‌யல‌ட்சுமி த‌ன்னை யார் இய‌க்கின‌து த‌ன்னை யார் எல்லாம் இப்ப‌டி சொல்ல‌ சொன்ன‌ உண்மைக‌ளை போட்டு உடைக்கும்.............

வீர‌ ல‌ட்சுமிக்கு ஏன் தேவை இல்லா வேலை...........அது தேர்த‌லில் போட்டி இட்டு 200க்கு குறைவான‌ ஓட்டு தான் அவாக்கு ம‌க்க‌ள் போட்ட‌வையாம்.............

இவை இர‌ண்டு பேரும் நீதி ம‌ன்ற‌ம் போவ‌து உறுதி அத‌ற்கு பிற‌க்கு ந‌ட‌ப்ப‌தை பாப்போம் புல‌வ‌ர் அண்ணா..............

இவைக்கு ஜிங்சாங் அடிக்க‌ அத‌ர்ம‌ம் ம‌னோச்சும் யூ2 வுருடுச்சும் இருக்கின‌ம்

இந்த‌ சில்ல‌றைக‌ளை என‌க்கு க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது............அவ‌தூறுக்கு இவ‌ங்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ளே இல்லை வாய் திற‌ந்தா பொய்யும் புர‌ளியும் புல‌வ‌ர் அண்ணா................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  தான் விஜயலட்சுமியுடன் பேசவில்லை என்று மறுத்துள்ளார். 29 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2023 at 22:00, இணையவன் said:

இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்

- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).

- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.

இவற்றுடன் சேர்த்து ஏன் உங்களால் சீமான் பக்கமாக இருந்தும் சிந்திக்கமுடியவில்லை..? ஏனென்றால் உங்கள் மண்டை முழுக்க சீமான் போபிய புடிச்சிருக்கு.. நியாயமாக சிந்திக்கவேண்டும் என்றால் ஒருவர்மீது எங்களுக்கு இருக்கும் பேர்சனல் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு சிந்தித்து பார்க்கணும்.. எனக்கு இந்த சந்தேகம்கள் இருக்கு இவற்றுடன் சேர்த்து

* சீமான் விஜலட்சுமி மீது வழக்குப்போடுகிறேன் என்று சொன்ன அன்றே விஜலட்சுமியின் சுருதி மாறி விட்டது.. அன்று மாலை வீரசட்சுமிக்குஎதிராக வீடியோ விடுகுது.. அடுத்த நாள் வழக்கை வாபஸ் வாங்குவது.. இதெல்லாம் சீமான் வழக்கு போட்ட அன்று ஏன் நிகழனும்..? எனக்கு வழக்குக்கு அஞ்சி விஜலட்சுமி சுருதி மாறிவிட்டதோஎன்று சந்தேகமாக இருக்கிறது.. வழக்கறிஞர்கள் சொல்லி இருப்பார்கள் இந்த வழக்கு தோற்கும் நிற்காது என்று.. அப்படி விஜலட்சுமி வழக்கு தோற்றால் அந்த தீர்ப்பையே காட்டி சீமானின் அவதூறு வழக்கை சீமான் தரப்பினர் இலகுவாக வென்றுவிடுவார்கள் என்று கருதி இருக்கலாம்..

என்ற சந்தேகமும் இருக்கு..

இன்னொரு திரியில் என்று நினைக்கிறேன் எதில் என்று சரியாக நாபகம் இல்லை..சீமான் வழக்குப்போடவில்லை நோட்டீஸ்தான் அனுப்பி இருக்கிறார் என்று இணையவன் எழுதி இருந்தார்.. அது தவறு சீமான் வழக்கு போட்டு இருக்கிறார்.. ஒருவர் மீது வெறுப்பை வச்சு தவறான தகவல்களை பரப்புவது அழகு அல்ல.. அதுவும் தமிழ்நாட்டின் ஒரு அரசியல்கட்சி தலைவரை ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்படி காழ்ப்புணர்வுடன் அணுகுவது பொய்களை பரப்புவது எந்த விதத்திலும் எமது எதிர்கால நலன்களுக்கு கொஞ்சம்கூட நல்லதல்ல.. ஒருசிலர் யாழ்களத்தில் சீமானை பாலியல் குற்றவாளி என்றுகூட எழுதுகிறார்கள்.. அவர் எந்த நீதிமன்றத்தில் பாலியல் குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்..? அவர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்குற்றவாளி அல்ல.. இவை எல்லாம் ஈழத்தமிழர்களை நோக்கி திமுகா ஆதர்வாளர்களை எமக்கு எதிராக நாம்தமிழர் கட்சி ஈழ ஆதரவாளர்கள் திருப்பியது போல போல் இன்னொரு தொகுதி நாம் தமிழர் கட்சி இந்திய தமிழர்களின் வெறுப்பை எம்மை நோக்கி திருப்பும் விதத்தில் எழுதப்படும் விசக்கருத்துக்கள் அன்றி வேறு நன்மை எதுவும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2023 at 22:00, இணையவன் said:

இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.

- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்

- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).

- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்

- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.

உங்க‌ளுக்கு நான் கொடுத்த‌ விள‌க்க‌ காணொளிய‌ என்ன‌ கார‌ண‌த்துக்காக‌ நிர்வாக‌ம் தூக்கின‌து 
ஏதும் உள் குத்து இருக்கா இணைய‌வ‌ன்...........

  • கருத்துக்கள உறவுகள்

Seeman: ``நான்தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன்!" - சீமான்

``இந்தப் பெண்களால் நான்தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன். எட்டு முறை கருக்கலைப்பு செய்யச் சொன்னேன் என்பதெல்லாம் நகைச்சுவை." - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில், வீரலட்சுமியுடன் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, கடந்த வாரம் தனது புகாரை திரும்பப் பெற்றிருந்தார். இந்த நிலையில் சீமான் தன்னுடைய மனைவி கயல்விழியுடன், வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு நேரில் ஆஜராக வந்தார்.

நடிகை விஜயலட்சுமி, சீமான்
 
நடிகை விஜயலட்சுமி, சீமான்

அப்போது சீமானுடன் ஐந்து பேர் மட்டும் உள்ளே நுழைய வேண்டும் என்று சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சீமான் ஆஜராக வரும் செய்தியறிந்து காவல் நிலையம் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள், தாங்களும் உள்ளே வருவோம் என போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து, சீமானுடன் அவரின் மனைவி உட்பட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், போலீஸில் தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்த பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``2011-ல் புகார் கொடுக்கப்பட்டதே தி.மு.க, காங்கிரஸ் தூண்டுதலால்தான். இப்போதும் இந்தப் புகாரின் பின்னணியிலும் தி.மு.க-வின் தூண்டுதல் இருந்திருக்கிறது. என் மீதான மதிப்பைக் கெடுத்துவிடலாம் என்று இது செய்யப்பட்டது. முன்பு, 60 லட்சம் பணம் கொடுத்ததாகவோ, நகை கொடுத்ததாகவோ ஏன் புகாரில் சொல்லவில்லை. இதெல்லாம் வெறும் அவதூறு. இந்தப் பெண்களால் நான்தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன்.

சீமான்
 
சீமான்

இந்தச் சமூகத்தின் முன்பு நான் அசிங்கப்படுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை அவர்களே சான்றுகளோடு நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். எட்டு முறை கருக்கலைப்பு செய்யச் சொன்னேன் என்பதெல்லாம் நகைச்சுவை. என்னுடைய மௌனத்தில் அதிகமாகப் பேசிவிட்டார்கள். அவர்கள் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் 20-ம் தேதி வருகிறது" என்று கூறினார். மேலும், சீமானின் மனைவி கயல்வழி, இந்தப் பிரச்னையால் தனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை என்றார்.

Seeman: ``நான்தான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன்!" - சீமான் | NTK leader seeman appeared in valasaravakkam police station about vijayalakshmi complaint - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.