Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 minutes ago, விசுகு said:

அப்ப சொல்லுங்கள்

புலம்பெயர் தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யணும்???

பொத்திக்கொண்டு இருந்தால் சரி தானே??

புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்  அதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் ? இங்கிருப்பவர்கள் சொல்லி எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை உதவி திட்டங்கள் , போராளிகளுக்கு உதவி செய்தல் , இங்கே அவர்கள் திட்டங்கள் வந்தாலே அது புலிப்பார்வையில்  இருக்கும் .
தமிழக தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ஆனால் அவர்களை சிந்திக்க  ஆதிக்க சக்தி விடாது தங்களது கைக்குள்ளே வைத்துக்கொள்ளும் இந்தியா தமிழ்நாட்டை வைத்துக்கொள்வதைப்போல

18 minutes ago, விசுகு said:

அதே

சீமானும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு தவிர்க்க முடியாத சக்தி. எனவே அவரைப் பற்றி கண்டபடி இங்கே எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும். நன்றி 👍

மத்திய அரசு சீமானுக்கு வைக்கும் ஒரு செக்  விட்டு பிடிக்கிற  அதாவது நெடிய கயித்தில விடுவதுதான்

  • Replies 196
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தா இப்ப வந்த செய்தி 👇

கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம்

இது.. இதுதான் நமக்கு தேவை.. மலையில் இருந்து உருண்டு விழுந்து பாதியில் நிப்பவன் கிடைக்கும் கொழு கொம்பை எல்லாம் பிடிச்சு எப்படியாவது மேல போகத்த்தான் பாப்பான்.. அவனுக்கு அந்த கொழுகொம்புகளில் எதுவுமே பெரிசாகத்தான் தெரியும்.. எதையும் சிறுமைப்படுத்தமாட்டான்.. அம்பிட்டதை எல்லாம் பிடிச்சு மேல போயிடனும் அவனுக்கு அவ்வளவுதான்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு திண்ட சோறு செமிக்க எழுதுற கோஸ்ட்டிதான் சீமானை திட்டிறதும் சீமானை ஆதரிக்கிறம் எண்டு திமுகா திக வை திட்டிறதும்.. ஊரில இருக்கிறவனுக்கு எதெண்டாலும் நமக்கு ஆதரவு தந்தால் போதும் எண்ட சிந்தனைதான்..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

அதே

சீமானும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு தவிர்க்க முடியாத சக்தி. எனவே அவரைப் பற்றி கண்டபடி இங்கே எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும். நன்றி 👍

உங்க நாம் கத்திறதை, தமிழகத்தில் மினக்கெட்டு யாரும் பார்ப்பார்கள், பதறுவார்கள் என்பதே பேதமை.

சும்மா பொழுது போகாமல், நமக்குள்ள பினாத்திறம்.

சபையேறாது!!

அவ்வளவு தான்!!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

த‌மிழீழ‌த்தில் இருக்கும் சில‌ர் சீமானை ஆத‌ரிக்கின‌ம் ஆனால் எண்ணிக்கை மிக‌ குறைவு முனிவா

புல‌ம்பெய‌ர் நாட்டில் அதிக‌ம்.........
அண்ண‌ன் சீமானை வ‌ள‌த்து விடுவோம்
உல‌க‌ அர‌சிய‌ல் எப்ப‌வும் ஒரே மாதிரி இருக்காது...........சீனா தாய்வானை பிடிக்க‌ போகுது...........தாய்வானுக்கு அமெரிக்கா ம‌றைமுக‌ ஆத‌ர‌வு கொடுக்குது...............

என்ன‌ செய்ய‌ இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளை இழ‌ந்து விட்டோம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌ முடிந்த‌ அள‌வு அகிம்சை வ‌ழியில் போராடுவோம் முனிவா

யாழில் ப‌ல‌ வாட்டி எழுதி விட்டேன் இன்னொரு ஆயுத‌ போர் வேண்டாம் அறிவாயுத‌ம் ஏந்தி சிங்க‌ள‌வ‌னை சிக்க‌ வைக்க‌னும்...........சீன‌ன் அரைவாசி நாட்டை எழுதி வாங்கி விட்டான்..............அது த‌மிழ‌ர்க‌ள் நில‌ப்ப‌ர‌ப்பிலும் வ‌ரும்..........வ‌ந்த‌ அது பெரும் பின்ன‌டைவாய் த‌மிழ‌ருக்கு போய் முடியும்............

2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் பிற‌ந்த‌துக‌ளுக்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் ப‌ற்றி பெரிய‌ பிரித‌ல் இல்லை.........போதை பொருளுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம்..........அதோடு திருட்டுக்க‌ள்..............ப‌ள்ளியில் ப‌டிக்கும் பெண் பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழியில் ப‌ய‌ணிக்கின‌ம்..............இந்த‌ 14ஆண்டுக‌ளில் எம் க‌லாச்சார‌ம் முற்றிலும் சீர் கெட்டு போச்சு 
நாம் என்ன‌ செய்ய‌...........ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளை வெளி நாட்டில் இருந்து போவ‌ர்க‌ளே காம‌ இச்சைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம்................இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாகினால் தான் எல்லாத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க‌ முடியும்..............எங்க‌ட‌ இந்த‌ கால‌த்தில் இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாவ‌து ச‌ந்தேக‌மே முனிவா😔.................

நான் மேலே கறுப்பு எழுத்துக்களால் காட்டியுள்ளேன் ஆதரிக்கலாம் ஆனால் வாக்கு அங்குள்ள மக்கள்தானளிக்க வேண்டும்  அவர்களை காசுக்கு வாங்கும் அரசுகள் .
நம்ம நாடு கெட்டு பல வருடம் ஆகிவிட்டது தம்பியா  இனி நிமிர்த்த முடியாது அதை நான் இங்கிருந்து சொல்கிறேன் அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்  அதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் ? இங்கிருப்பவர்கள் சொல்லி எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை உதவி திட்டங்கள் , போராளிகளுக்கு உதவி செய்தல் , இங்கே அவர்கள் திட்டங்கள் வந்தாலே அது புலிப்பார்வையில்  இருக்கும் .
தமிழக தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ஆனால் அவர்களை சிந்திக்க  ஆதிக்க சக்தி விடாது தங்களது கைக்குள்ளே வைத்துக்கொள்ளும் இந்தியா தமிழ்நாட்டை வைத்துக்கொள்வதைப்போல

மத்திய அரசு சீமானுக்கு வைக்கும் ஒரு செக்  விட்டு பிடிக்கிற  அதாவது நெடிய கயித்தில விடுவதுதான்

இது முற்றிலும் த‌வ‌று முனிவா..........சீக்கிய‌ர்க‌ள் அன்மைக் கால‌மாய் இந்தியாவுக்குள்ளையே மோடிய‌ ஆட்ட‌ம் காண‌ வைச்ச‌வ‌ர்க‌ள்............சீமானை தொட்டால் பின் விளைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்று ம‌த்திய‌ அர‌சுக்கும் தெரியும் மானில‌ அர‌சுக்கும் தெரியும்................

வ‌ட‌க்க‌ன்  த‌மிழ் நாட்டை த‌ங்க‌ளுக்கு அடிமையா சைத்து இருக்கிறான் இந்தியா என்ர‌ போலி போர்வைக்குள்................க‌ஸ்மீர் தொட‌ங்கி ப‌ஞ்சாப் வ‌ரை உள் நாட்டுக்கையே ப‌ல‌ பிர‌ச்ச‌னை அதே பிர‌ச்ச‌னை த‌மிழ் நாட்டுக்கையும் வ‌ந்தால் சுத‌ந்திர‌மாய் எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளும் ந‌ட‌மாட‌ முடியாத‌ நிலை ஏற்ப‌டும்..................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து புலிகள் இருக்கும்போது தமிழ்நாட்டு அரசியல் சக்திகள் எதையும் அவர்கள் எதிர்க்கவில்லை.. அவர்கள் இருந்த காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் திருமாவளவன் வைகோ கருணாநிதி என்று இவர்கள் எல்லாம் எம்மைப்பற்றி பேசி அதை நான் வாசிக்காத நாட்கள் குறைவு.. பிரியாமல் ஒட்டுமொத்தமாக எமக்கு ஆதரவு தந்தார்கள்.. என்றைக்கு ஈழத்தமிழர்களில் சிலர் இணையத்தில் திமுகாவை சீமானுக்காக விமர்சிக்க தொடங்கினார்களோ அண்டைக்கு புடிச்சது சனி.. சீமான் எதையாவது பேசட்டும் அதுக்கு திமுகா எதையாவது பேசட்டும் நாம எதுக்கு அதுக்க பூரணும்..? இருபக்க ஆதரவையும் அறுவடை செய்துகொண்டு இலங்கை முஸ்லீம்கள் போல வாழ்ந்திட்டு போயிருக்கணும்.. அந்த அறிவு எங்கட உணர்ச்சி வசப்படும் தீக்கோழி தமிழனுக்கு இல்லை.. இப்ப புதுசா இன்னொரு கோஸ்டி ஈழத்தமிழன்ல இருந்து சீமானை தீட்டிறம் எண்டு புறப்பட்டிருக்கு.. என்னத்த சொல்ல.. 🤦🏻 தமிழ் இனத்தின் தலை விதி..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

இது முற்றிலும் த‌வ‌று முனிவா..........சீக்கிய‌ர்க‌ள் அன்மைக் கால‌மாய் இந்தியாவுக்குள்ளையே மோடிய‌ ஆட்ட‌ம் காண‌ வைச்ச‌வ‌ர்க‌ள்............சீமானை தொட்டால் பின் விளைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்று ம‌த்திய‌ அர‌சுக்கும் தெரியும் மானில‌ அர‌சுக்கும் தெரியும்................

வ‌ட‌க்க‌ன்  த‌மிழ் நாட்டை த‌ங்க‌ளுக்கு அடிமையா சைத்து இருக்கிறான் இந்தியா என்ர‌ போலி போர்வைக்குள்................க‌ஸ்மீர் தொட‌ங்கி ப‌ஞ்சாப் வ‌ரை உள் நாட்டுக்கையே ப‌ல‌ பிர‌ச்ச‌னை அதே பிர‌ச்ச‌னை த‌மிழ் நாட்டுக்கையும் வ‌ந்தால் சுத‌ந்திர‌மாய் எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளும் ந‌ட‌மாட‌ முடியாத‌ நிலை ஏற்ப‌டும்..................

தமிழ்நாடு எவ்வளவு முக்கியம் என்பது இந்தியாவுக்கு தெரியும் முக்கிய குறிப்பு தமிழன் எவ்வளவு நல்லவர்கள் என்று தெரியுமா ஒன்றை உடன நம்பி ஏமாந்து விட்டு பின்பு கத்துவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

செய்தி வாசிக்கவில்லையா?

விஜி வழக்கு மீண்டும் உக்கிரமாக முதல்

1. திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி. 

2. திமுக தமிழ் இன எதிரி

3. தமிழ்நாட்டில்  திமுகவை, திராவிட கொள்கையை  வேரறுப்பதே என் முதல் பணி

விஜி வழக்கு சம்பந்தமாக விசாரணை உக்கிரமான பின்

1. நான் திராவிடத்துக்கு எதிரானவன் அல்ல

2. திமுக என் பங்காளி

3. மோடியை எதிர்த்து இராமநாத புரத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தினால் - நாதக ஆதரிக்கும்.

முடிவு

விஜி அண்ணி வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு பெங்களூர் பஸ்சில் ஏற்றம்.

சீமான் என்காரணத்துக்காகச் சொன்னார் என்று பாருங்கள். இராமநாத புரத்தில் மோடி போட்டியிட்டால் தானே அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சொன்னார். அதற்கு திமுக  போட்டியிலிருந்து விலகுமா? எனென்றால் மோடியை கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்லும்

 தீமுக போட்டியிலிருந்து விலகி சீமானுக்கு ஆரவு கொடுக்குமா? அப்படிக் கொடுக்காவிட்டாலும் மோடியை வீழ்த்தவதற்கு திமுக போட்டியிட்டால் தான் திமுகவுக்கு அதரவு தருவதாகச் சொன்னார்.
மேலும் திமுகவுடனே விஜஸயுடனோ எந்த 

டீலும் இல்லை. நாளை சீமான் சிசாரைணக்குச் செல்கிறார். அதேநேரம் விஜி>வீரலட்சுமி தீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். வீலலட்சுமிமீதே விஜி குற்றங்சாட்டிய நிலையில் சீமானுக்கும் விஜிக்கும் சமாதானம் எற்பட்டதற்காக கோவிலில் அன்னதானம் செய்கிறேன் என்று விழுந்தும் மீசையில் மண்பட வில்லை என்று சொல்லும் வீரலட்சுமி யார் என்பதமும் அவரை பின்னணியில் இருந்து இயக்குவது யார் என்பதும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மைகள்.

May be an image of 6 people and text that says "இனி எப்படி சீமான பழி வாங்குறது தலைவரே..? அதுக்கும் ஐடியா இருக்கு.. உங்க வீட்டு பொம்பளைகளை சீமான் கெடுத்துட்டார்னு தினம் ஒருத்தன் வழக்கு கொடுக்கனும்.. சுப. வீ உபிஸ்"

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புலவர் said:

இந்த‌ மீன்ஸ்ச‌ பார்த்து சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை புல‌வ‌ர் அண்ணா ஹா ஹா 😁🤣😂............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 உதவி திட்டங்கள் , போராளிகளுக்கு உதவி செய்தல் , 

அதாவது பொத்திக்கொண்டு 

கேட்கும் போது காசை மட்டும் அனுப்பணும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

அதாவது பொத்திக்கொண்டு 

கேட்கும் போது காசை மட்டும் அனுப்பணும்?

உங்கள் பார்வை ஒரு கோணத்தில் தான் உள்ளது 
அல்லிராஜா , சுபாஸ்கரன் என்பவர்கள் இலங்கையிலே என்ன செய்கிறார்கள் என்பதும்  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் 

உங்கள் கணிப்பின் படி சீமான் முதலமைச்சரானால் ஈழம் கிடைக்குமா ? அல்லது இந்திய ஆரசை வற்புறுத்தி ஈழத்தை பெற்றுத்தருவார் என  நீங்கள் நினைக்கிறீர்களா?? இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் இதற்கான விடைகள் என்ன????

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் பார்வை ஒரு கோணத்தில் தான் உள்ளது 
அல்லிராஜா , சுபாஸ்கரன் என்பவர்கள் இலங்கையிலே என்ன செய்கிறார்கள் என்பதும்  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் 

உங்கள் கணிப்பின் படி சீமான் முதலமைச்சரானால் ஈழம் கிடைக்குமா ? அல்லது இந்திய ஆரசை வற்புறுத்தி ஈழத்தை பெற்றுத்தருவார் என  நீங்கள் நினைக்கிறீர்களா?? இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் இதற்கான விடைகள் என்ன????

தவறு

பிரபாகரனால் முடியாததை சீமான் முடித்து தருவார் என்று எதிர்பார்க்க நான் ஒன்றும் இலங்கை இனப்பிரச்சினையை தூர நின்று பார்த்தவன் அல்ல.

பக்கத்தில் எமக்காக குரல் கொடுக்க ஒரு வலுவான அரசோ அல்லது அமைப்போ இருந்தால் எமது இனம் பலம் பெறும் அல்லது கேட்க ஒரு நாதி இருக்கு என்று பயமின்றி வாழும் சூழல் வரும். அவ்வளவு தான். 

மற்றும் படி சுபாஷ்கரன் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார். லாபம் வந்தால் தொடர்வார். நட்டம் வந்தால் பல நாடுகளிலும் போட்ட மாதிரி நாமம் போட்டுவிட்டு ஓடி விடுவார். அப்படி ஓடும் போது இப்ப அவருடன் நிற்பவர்கள் அனைவரும் மாலை போட்ட ஆடுகளைப்போல உள்ளே போவார்கள். இங்கே இப்பொழுதும் அப்படி இருப்பவர்களை எனக்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் பார்வை ஒரு கோணத்தில் தான் உள்ளது 
அல்லிராஜா , சுபாஸ்கரன் என்பவர்கள் இலங்கையிலே என்ன செய்கிறார்கள் என்பதும்  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் 

உங்கள் கணிப்பின் படி சீமான் முதலமைச்சரானால் ஈழம் கிடைக்குமா ? அல்லது இந்திய ஆரசை வற்புறுத்தி ஈழத்தை பெற்றுத்தருவார் என  நீங்கள் நினைக்கிறீர்களா?? இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் இதற்கான விடைகள் என்ன????

முனிவா அர‌சிய‌ல் சூழ‌ல் இப்ப‌வும் போல‌ எப்ப‌வும் இருக்காது...............உதார‌ன‌த்துக்கு ர‌ஸ்சியா உக்கிரேன் பிர‌ச்ச‌னையால் ஒன்னா இருந்த‌ உல‌க‌ம் இர‌ண்டாய் உடையும் நிலையில் இருக்குது............

இப்ப‌டி ந‌ட‌க்கும் என்று ஏன் ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாருக்கும் தெரிந்து இருக்குமா..............இது தான் அர‌சிய‌ல் முனிவா 

புரிந்து கொண்டால் ச‌ரி...............

நாளை ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளால் த‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் என்றால் எம்மை த‌டை செய்த‌வ‌ர்க‌ளே த‌டைய‌ நீக்கி எம்மை  ஆதாரிப்பின‌ம்...............இது தான் உல‌க‌ அர‌சிய‌ல்...............

2009ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை தான் என்று க‌ன‌டா பிர‌த‌ம‌ர் அறிக்கை விட‌ வில்லையா............

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

பிரபாகரனால் முடியாததை சீமான் முடித்து தருவார் என்று எதிர்பார்க்க நான் ஒன்றும் இலங்கை இனப்பிரச்சினையை தூர நின்று பார்த்தவன் அல்ல.

பக்கத்தில் எமக்காக குரல் கொடுக்க ஒரு வலுவான அரசோ அல்லது அமைப்போ இருந்தால் எமது இனம் பலம் பெறும் அல்லது கேட்க ஒரு நாதி இருக்கு என்று பயமின்றி வாழும் சூழல் வரும். அவ்வளவு தான். 

11 minutes ago, பையன்26 said:

முனிவா அர‌சிய‌ல் சூழ‌ல் இப்ப‌வும் போல‌ எப்ப‌வும் இருக்காது...............உதார‌ன‌த்துக்கு ர‌ஸ்சியா உக்கிரேன் பிர‌ச்ச‌னையால் ஒன்னா இருந்த‌ உல‌க‌ம் இர‌ண்டாய் உடையும் நிலையில் இருக்குது............

இப்ப‌டி ந‌ட‌க்கும் என்று ஏன் ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாருக்கும் தெரிந்து இருக்குமா..............இது தான் அர‌சிய‌ல் முனிவா 

புரிந்து கொண்டால் ச‌ரி...............

நாளை ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளால் த‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் என்றால் எம்மை த‌டை செய்த‌வ‌ர்க‌ளே த‌டைய‌ நீக்கி எம்மை  ஆதாரிப்பின‌ம்...............இது தான் உல‌க‌ அர‌சிய‌ல்...............

உங்களது இருவரது கருத்துக்கு ஏற்றால் போல நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமே 

ஆனால் அது எனக்கு கனவு போலவே   கடந்து போய்விட்டது நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களது இருவரது கருத்துக்கு ஏற்றால் போல நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமே 

ஆனால் அது எனக்கு கனவு போலவே   கடந்து போய்விட்டது நன்றி வணக்கம் 

மீண்டும் தவறு

எனக்காக கருத்துக்கு ஏற்றார்போல பேசவேண்டாம்

உண்மையை எழுதுங்கள். நன்றி 👍

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.. https://tamilwin.com/article/gajan-attacked-trincomalee-1694960217

கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம்

https://tamilwin.com/article/selvarasa-gajendran-attack-trincomalee-1694957177

தங்களுக்குள் அரசியலில் அடிபட்டாலும் எங்களுக்கு ஒண்டு என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள் இல்லையா.. இதை நாங்கள் தொடர்ந்து தக்கவைக்கணும் எண்டால் தமிழ்நாட்டின் எந்தக்கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் எந்தக்கட்சியையும் எதிர்க்காமல் அவர்கள் அரசியல் விடயங்களில் நாமுண்டு நம்பாடு உண்டு எண்டு எல்லோருடன் உறவுடன் இருப்பதுதான் நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் இந்த விடயங்களில் கவனமாக இருக்கிறார். 

உதாரணமாக திருமால் வளவனை அண்ணா என்றும் ராமசாமி அவர்களை ஐயா என்றுமே அழைப்பார் 

வேண்டும் என்றால் இந்த வீடியோவை பாருங்கள்

https://www.facebook.com/reel/3968068633419875?s=yWDuG2&fs=e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானுக்கான ஆதரவு பற்றிய என் கருத்தும் கேள்வியும் என்னவென்றால்.....
 நான் சீமானை அல்லது நாம் தமிழர் கட்சியை 90 வீதம் ஆதரிப்பதற்கான காரணம் அவரது உள்நாட்டு அரசியல் மற்றும் இயற்கை சம்பந்தப்பட்ட கொள்கை. தமிழ்நாட்டு இயற்கை வளங்களை பேணுதல் மொழி பற்றிய கொள்கை. பொதுவாக சொல்லப்போனால் தமிழ்நாடு தமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். உதாரணத்திற்கு கேரளம் தெலுங்கு கன்னடம் போன்ற மாநிலங்களைப்போல் இருக்க வேண்டும். 

ஈழ அரசியலை பொறுத்த வரையில் சீமான் ஈழம் பெற்றுத்தருவார் அல்லது இவரால் ஈழத்தவர்களின் பிரச்சனை தீரும் என என்றும் நினைத்ததில்லை. ஈழம் பெற்றுத்தர மோடியால் கூட முடியாது. ஆனால் ஈழத்தவர் பிரச்சனைகளையும் நடந்த அழிவுகளையும்  தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல சீமான் தேவைப்படுகின்றார்.சீமானின் அந்த தமிழ்நாட்டு அரசியல் எமக்கு தேவைப்படுகின்றது.அந்த உணர்ச்சி பூர்வ அரசியலும் எமக்கு அவசியம் தேவை.

ஈழத்தமிழருக்காக கதை கவிதை கட்டுரை போராட்டங்கள் எந்தவகையில் உதவுமென எனக்கு தெரியவில்ல? ஏனென்றால் இதையும் 60 வருடங்களுக்கு மேலாக பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றேம். முள்ளிவாய்க்கால் அழிவின் போது நடந்த நன்றி நவிலல்களையும் நாம் கண்குளிர பார்த்தோம் அல்லவா? சில இடங்களில் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டினார்களே ஒழிய இன்றுவரை ஏதாவது எங்கேயாவது அழுத்தம் அல்லது கோரிக்கை வைத்தார்களா? அங்கு வசிக்கும் ஈழத்து அகதிகளுக்கு கூட ஆட்சியில் இருப்பவர்கள்  உரிமைகள் வழங்க நடவடிக்கை எடுத்தார்களா என எனக்கு தெரியவில்லை.

எனது கணிப்பின் படி நாம் தமிழர் கட்சி இல்லாது விடில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நாடகம் நடக்கும். பொது மக்கள் பஞ்சத்தால் வாடுகின்றார்கள் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றோரு மாயையை உருவாக்கியிருப்பார்கள். என் கணிப்பு  பிழையாகவும் இருக்கலாம்.

எனது கேள்வி என்னவென்றால்?
நாம் தமிழர்கட்சியை விட  ஏனைய கட்சிகள்  ஏன் ஈழத்தமிழர் விடயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

தைரியம் இருந்தா என்தெருவுக்கு வந்து பார்யா. அங்க நான் உக்கிரமா இருப்பேன்.

ஏனோ தெரியவில்லை இந்த திரைப்படக் காட்சி மனக்கண்ணணில் வந்து போகுறது. 😂😂

உங்களுக்கு திரை படகாட்சி தான் நினைவுக்கு வந்தது. சீமானின் பயங்கரமான மிரட்டல் பேச்சை வீடியோவில் கேட்டேன்.  நான் மோசமான ரவுடி, கட்சியாவது கிட்சியாவது என்று வெட்டி எறிந்துவிட்டு போய்கொண்டே இருப்பேன் என்று தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி தரபோகின்ற சீமான் பேசியுள்ளார். இந்த சீமானை தொட்டால் பின் விளைவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என்று ம‌த்திய‌ அர‌சுக்கும் தெரியும் மானில‌ அர‌சுக்கும் தெரியுமாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

சீமான் என்காரணத்துக்காகச் சொன்னார் என்று பாருங்கள். இராமநாத புரத்தில் மோடி போட்டியிட்டால் தானே அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சொன்னார். அதற்கு திமுக  போட்டியிலிருந்து விலகுமா? எனென்றால் மோடியை கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்லும்

 தீமுக போட்டியிலிருந்து விலகி சீமானுக்கு ஆரவு கொடுக்குமா? அப்படிக் கொடுக்காவிட்டாலும் மோடியை வீழ்த்தவதற்கு திமுக போட்டியிட்டால் தான் திமுகவுக்கு அதரவு தருவதாகச் சொன்னார்.

பாஜக=காங்கிரஸ்=திமுக= தமிழர் எதிரிகள்.

இதுதான் சீமான் இதுவரை சொன்னது.

இருவருக்கும் எதிராக சீமான் ஏன் போட்டியிட முடியாது?

6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு தெரிந்து புலிகள் இருக்கும்போது தமிழ்நாட்டு அரசியல் சக்திகள் எதையும் அவர்கள் எதிர்க்கவில்லை.

இதை பற்றி இங்கே விடுதலை புலிகள் அணிசாரா கொள்கையை தமிழ் நாட்டில் பின்பற்றினார்கள் - அதை தொடர்வதே உசிதம் என பல தடவை நான் எழுதிய போது நீங்கள் கோமாவிலா இருந்தீர்கள்.

ஈழதமிழர் ஒன்றில் எவரையும் ஆதரிக்க கூடாது அல்லது பலவாறு பிரிந்து பல கட்சிகளை ஆதரிக்க/ எதிர்க்க வேண்டும்.

இல்லாடிவிடில் ஈழதமிழர் முழுவதும் திராவிட கொள்கை/கட்சிகளுக்கு எதிரிகள், சீமானின் ஆதரவாளர்கள் என்ற மாய விம்பம் கட்டி எழுப்பப்பட்டு, அதனால் ஈழத்தமிழர் மேலும் ஆப்பு அடிபடுவார்கள்.

இப்போ புரிகிறதா? ஏன் சீமானை எதிர்பவர்கள் நீங்கள் சொல்வது மோட்டு கூட்டங்கள் அல்ல, என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அமைதி பாஸ்... அமைதி..

வழக்கம் போல... அவசரப்படாதீங்க.

அந்தம்மா.... விட்ட பொய்களில் லாஸ்ட் பொய்... சீமான் பேசீனார் என்று.

சீமானே இன்று இல்லை என்று சொல்லீட்டார்.

உன்னிப்பா அவதானீப்போம்.

இடைவேளை தான்..

இன்னொரு பக்கம் துரைமுருகனை, ED தூக்கப்போகுதெண்டு மெகா சீரீயல் ஓடுது.

ஸ்ராலின் காங்கிரசை வெட்டி விடாவிடில் அவருக்கு சிக்கலாமே.

சரணாகதி!! 🥹🤣

அமைதி பாஸ்... அமைதி..

வழக்கம் போல... அவசரப்படாதீங்க.🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் பார்வை ஒரு கோணத்தில் தான் உள்ளது 
அல்லிராஜா , சுபாஸ்கரன் என்பவர்கள் இலங்கையிலே என்ன செய்கிறார்கள் என்பதும்  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் 

உங்கள் கணிப்பின் படி சீமான் முதலமைச்சரானால் ஈழம் கிடைக்குமா ? அல்லது இந்திய ஆரசை வற்புறுத்தி ஈழத்தை பெற்றுத்தருவார் என  நீங்கள் நினைக்கிறீர்களா?? இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் இதற்கான விடைகள் என்ன????

Just now, Kandiah57 said:

எவர் கண்டனம் தெரிவித்தாலும். பிரயோஜனம் இல்லை  1983  இனக்கலவரத்துக்கு   இந்திராகாந்தி மிக கடுமையாக கண்டனங்கள் தெரிவித்தார்   என்ன பலனை கண்டோம்   1983 இல்  தமிழர்களை கொலை செய்தவர்கள் தாக்கியவர்கள்....பரம்பரைகள். இன்றும் செழிப்பாக.  இலங்கையில் வாழ்கிறார்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி என்னவென்றால்?
நாம் தமிழர்கட்சியை விட  ஏனைய கட்சிகள்  ஏன் ஈழத்தமிழர் விடயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள்?

அனுபவம்   அதாவது எப்படி எப்படி செயற்பட்டலும். ஒன்றுமே செய்ய முடியாது  எந்த பலனுமில்லை   சீமானுக்கு இன்னமும் அது தெரியவில்லை    நீங்கள் சொல்லி உள்ளீர்கள்  மோடியாலும் முடியாது என்று   பிறகு ஏன். இந்த சீமான்  பட்டி தொட்டி. எல்லாம்   இலங்கை தமிழர்கள் பற்றி பேசுகிறார்   ??  இதனால் என்ன பிரயோஜனம்   ??  தமிழ் ஈழம் கிடைத்து விடுமா  ?? இவர் வளர முயற்சிகள் செய்கிறார். இவரால் மற்றைய அமைப்புக்கள் ஈழத்தமிழர்களை  எதிர்த்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்  என்று ரஞ்சித் சொல்லுகிறார்கள்   ஆகவே சீமானை ஆதரிக்க கூடாது பிரயோஜனம் இல்லை   

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

  ஆகவே சீமானை ஆதரிக்க கூடாது பிரயோஜனம் இல்லை   

நீங்கள் ஆதரிக்காவிடில் என்ன நடக்கும??

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நீங்கள் ஆதரிக்காவிடில் என்ன நடக்கும??

இந்த கேள்வியை கொஞ்சம் ஆழமாக யோசித்தால் - அதற்கான பதில் 👇

8 hours ago, goshan_che said:

ஈழதமிழர் ஒன்றில் எவரையும் ஆதரிக்க கூடாது அல்லது பலவாறு பிரிந்து பல கட்சிகளை ஆதரிக்க/ எதிர்க்க வேண்டும்.

இல்லாடிவிடில் ஈழதமிழர் முழுவதும் திராவிட கொள்கை/கட்சிகளுக்கு எதிரிகள், சீமானின் ஆதரவாளர்கள் என்ற மாய விம்பம் கட்டி எழுப்பப்பட்டு, அதனால் ஈழத்தமிழர் மேலும் ஆப்பு அடிபடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.