Jump to content

இறால் குழம்பு


Recommended Posts

nuprawncurry-1%20copy.jpg

தேவையானப் பொருட்கள்

இறால் - அரை கிலோ

சி. வெங்காயம் - ஐம்பது கிராம்

பூண்டு - மூன்று பல்

தக்காளி - மூன்று

மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்

உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்

எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்

சோம்பு - ஒரு டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - மூன்று கொத்து

தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்

சீரகம் - கால் டீ ஸ்பூன்

செய்முறை

* இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.

* தேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.

* சோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.

* புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.

* இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.

* ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

நன்றி

அறுசுவை

Link to comment
Share on other sites

இறால் குழம்பு பார்க்க வடிவா இருக்கு வெண்ணிலா

அது சரி நீங்கள் செய்து பார்த்துட்டீங்களா?

இறால் குழம்புக்கு தக்காளி பொடுறதை விட முருங்கக்காய் போட்டு வைச்சால் சூப்பரா இருக்கும் ;)

Link to comment
Share on other sites

இறால் குழம்பு பார்க்க வடிவா இருக்கு வெண்ணிலா

அது சரி நீங்கள் செய்து பார்த்துட்டீங்களா?

இறால் குழம்புக்கு தக்காளி பொடுறதை விட முருங்கக்காய் போட்டு வைச்சால் சூப்பரா இருக்கும் ;)

:D:lol: நாங்க அசைவம் சாப்பிடுறதில்லை கடந்த சில மாதங்களாக.

ஹீஹீ முருக்கங்காய் சாப்பிடுறதில்லை. தக்காளி சேர்த்து குழம்பு வைப்பதுதான் கேள்விப்பட்டிருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புலத்து இறால். குழம்போடு ஒட்டாமல் வெள்ளையாக இருக்குது பாருங்கள்! :D

Link to comment
Share on other sites

ஏற்கனவே தக்காளி புளி.பிறகு புளி வேறை போட சொல்லுறிங்க நிலா.எதற்கும் சமைத்து விட்டு சொல்லுங்கள்..

Link to comment
Share on other sites

நிலா, நீங்க சமைத்துப்பார்த்தீர்களா?

படத்தில் பார்க்க டொம் யாம் சூப் போல இருக்கு.

நான் முயற்சி செய்து பார்த்தால், எப்படி வந்தது என சொல்கின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

அம்மா வெந்தயம் போட்டு சுப்பரா ஒரு குளம்பு புட்டோடை சாப்பிடும் போது வைக்கிறவ.எதற்கும் நிலா கறியை வைத்து விட்டு சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பு சேராமல் வெள்ளைய இருக்கு. இப்பிடி சாப்பிட ஒரு இனிப்பு தன்மையாக இருக்கும்.

இறாலை சாடையா பொரிச்சிட்டு இல்லையெண்டால் அவணில (oven) கொஞ்ச நேரம் வைச்சிட்டு... கத்தரிக்காயையும் பொரிச்சு... வறட்டலா சமைச்சா... புட்டோட சாப்பிட நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

அட பேபிக்கு பிடித்த இறாலு குழம்பு த ங் கீயூ நிலா அக்கா :lol: ...................அட யாராவது சோறு சமைத்து பேபிக்கு தீத்திவிடுங்கோ :P !!இறால் பொரியல் & இறால் போட்ட சொதியும் தந்தீங்கள் என்றா இன்னும் நல்லா இருக்கும் பேபிக்கு சரியான விருப்பம்!! :lol:

Link to comment
Share on other sites

இறால் குழம்பு பார்க்க வடிவா இருக்கு வெண்ணிலா

அது சரி நீங்கள் செய்து பார்த்துட்டீங்களா?

இறால் குழம்புக்கு தக்காளி பொடுறதை விட முருங்கக்காய் போட்டு வைச்சால் சூப்பரா இருக்கும் ;)

முருகக்காயோ பேபி நேற்று பாக்கியராஜ் படம் பார்தது............. :P

Link to comment
Share on other sites

நிலா, நீங்க சமைத்துப்பார்த்தீர்களா?

படத்தில் பார்க்க டொம் யாம் சூப் போல இருக்கு.

நான் முயற்சி செய்து பார்த்தால், எப்படி வந்தது என சொல்கின்றேன்.

நன்றி

நிலா அசைவம் சாப்பிடுவதில்லை

ஓ நீங்கள் சொல்லுற டொம் ஜாம் சூப் எப்படி இருக்கும்?? அதை ஒருக்கா எங்களுக்கும் செய்து காட்டுங்கோவன் அதுக்கும் இறால் போடுறதோ?

சரி இறால் குழம்பு செய்து சாப்பிட்டு வாங்கோ. :P

Link to comment
Share on other sites

நிலா அசைவம் சாப்பிடுவதில்லை

வானத்தில இருகிற நிலாவோ அல்லது ஜம்மு பேபியின்ட சிஸ்டர் நிலாவோ.......... :P

Link to comment
Share on other sites

அம்மா வெந்தயம் போட்டு சுப்பரா ஒரு குளம்பு புட்டோடை சாப்பிடும் போது வைக்கிறவ.எதற்கும் நிலா கறியை வைத்து விட்டு சொல்லுங்கோ.

:lol: வெந்தயம் சேர்த்து கறி சமைத்தால் அது தனி ருசி. ஓ எனக்கு தெரியாது அசைவ உணவுக்கும் வெந்தயம் சேர்க்கிறது என்று. இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் கறி சோறு,புட்டு,இடியப்பம்.பாண் என எல்லாவற்றுடனும் ரசித்து ருசித்து சாப்பிடலாம்.அதை விட கூனீஇறால்கருவாட்டோடை முருங்கைஇலையும் சேர்த்து ஒரு வறை செய்தால்.........சொல்லி வேலையில்லையப்பா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவூறவைக்கிறத்துக்கு ஒரு அளவே இல்லையா :D இதுக்குத்தான் நான் இந்தப்பக்கம் வாறதுல்ல :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்! சோதரி ரசிகை சொன்னது போல் கொஞ்சம் உறைப்பாக சாப்பிடுபவர்களுக்கு முருங்கைக்காய், சுண்டங்காய், பாவைக்காய் போன்றவற்றுக்கு இறால் போட்டு குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும். :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்! சோதரி ரசிகை சொன்னது போல் கொஞ்சம் உறைப்பாக சாப்பிடுபவர்களுக்கு முருங்கைக்காய், சுண்டங்காய், பாவைக்காய் போன்றவற்றுக்கு இறால் போட்டு குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும். :icon_mrgreen::lol:

பாவக்காயுடன் இறாலா??????????????? :unsure:

Link to comment
Share on other sites

பேபிக்கு பாவற்காயை கண்ணிலையும் காட்ட ஏலாது என்று தெரியாதோ நல்லா இல்லை சொல்லிட்டேன்!! ;)

Link to comment
Share on other sites

பேபிக்கு பாவற்காயை கண்ணிலையும் காட்ட ஏலாது என்று தெரியாதோ நல்லா இல்லை சொல்லிட்டேன்!! ;)

:P ஏன் பாவற்காய் கறி பிடிக்காதா ஜம்மு?

கைக்கும் என்று தான் பிடிக்காதா? அல்லது வேறு ஏதும் காரணமா?

கைக்கும் என்று பிடிக்காது எனில் கறி காய்ச்சும் போது கொஞ்சம் சீனீ சேர்த்தால் கைக்காது :D (எனக்கு அபப்டித்தான் செய்து தாறவா அம்மா)

Link to comment
Share on other sites

:P ஏன் பாவற்காய் கறி பிடிக்காதா ஜம்மு?

கைக்கும் என்று தான் பிடிக்காதா? அல்லது வேறு ஏதும் காரணமா?

கைக்கும் என்று பிடிக்காது எனில் கறி காய்ச்சும் போது கொஞ்சம் சீனீ சேர்த்தால் கைக்காது :( (எனக்கு அபப்டித்தான் செய்து தாறவா அம்மா)

கைக்கும் என்று தான் பிடிகாது :) நிலா அக்கா வேற என்ன காரணம் இருக்கு ஆனா பொறித்து தந்தா சீனி போட்டு தான் சாப்பிடுறனான் அது விருப்பம் நிலா அக்கா :lol: ........ஆனா ஒன்லி பொறியல் மட்டும் தான் :D .........ஓ நீங்களும் சீனி போடுறனீங்களா நல்ல அக்கா.......இன்றைக்கு அக்கா வீட்ட பாகற்காயா!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவைக்காய்க்கு ஊரில் இளனி விட்டுத்தான் சமைக்கிறவை. இங்கே பாவைக்காய்க்கு நிலா சொன்னதுபோல் கொஞ்சம் சீனி போட்டுச் சமைக்கலாம். அத்துடன் இறாலும் சேர்த்தால் ஓரு தனிச் சுவையாகவிருக்கும். :D:)

Link to comment
Share on other sites

பாவைக்காய்க்கு ஊரில் இளனி விட்டுத்தான் சமைக்கிறவை. இங்கே பாவைக்காய்க்கு நிலா சொன்னதுபோல் கொஞ்சம் சீனி போட்டுச் சமைக்கலாம். அத்துடன் இறாலும் சேர்த்தால் ஓரு தனிச் சுவையாகவிருக்கும். :D:)

இளனி விட்டு சமைகிறவையோ அப்ப இங்கே ஒரு செஞ்சிற்கு பேபி பியர் விட்டு சமைக்க போகுது எப்படி இருக்கும் பெரியப்பா........... :P

Link to comment
Share on other sites

கைக்கும் என்று தான் பிடிகாது :) நிலா அக்கா வேற என்ன காரணம் இருக்கு ஆனா பொறித்து தந்தா சீனி போட்டு தான் சாப்பிடுறனான் அது விருப்பம் நிலா அக்கா :( ........ஆனா ஒன்லி பொறியல் மட்டும் தான் :D .........ஓ நீங்களும் சீனி போடுறனீங்களா நல்ல அக்கா.......இன்றைக்கு அக்கா வீட்ட பாகற்காயா!! :)

:lol::lol: இண்டைக்கு இல்லை நேற்று :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.