Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
27 minutes ago, goshan_che said:

அமரிக்க பாராளுமன்ற கட்டிடத்துள் புகுந்த பலஸ்தீன ஆதரவாளர்கள்.

துனிசியாவில் எரிக்கப்பட்ட யூத கோவில் (சினகோக்). 

தங்கட பாரிய அழிவுக்கான பாதையை இந்த முல்லாக்களே உண்டாக்குறாங்கள்...

எது எப்பிடியோ, இந்தத் தடவை செமச் சாத்து இருக்கு!

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நன்னிச் சோழன் said:

தங்கட பாரிய அழிவுக்கான பாதையை இந்த முல்லாக்களே உண்டாக்குறாங்கள்...

எது எப்பிடியோ, இந்தத் தடவை செமச் சாத்து இருக்கு!

ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போ பலஸ்தீன ஆதரவு லாபி அமெரிக்காவில் தோன்றியுள்ளது.

ஐந்து நீல கட்சியின் காங்கிரஸ்-பெண்கள் மிக தீவிரமாக இதை ஆதரிக்கிறார்கள்.

யூத லாபிக்கு நிகர் என இப்போ சொல்லமுடியாவிட்டாலும் இது இனி வளர்முகம்தான்.

ஆகவே உண்மையில் இந்த பிரச்சனையை இப்போதே தீர்த்து வைப்பது, போதிய பாதுகாப்பு உத்த்தவாதத்தோடு, 1967 எல்லையோடு ஒரு பலஸ்தீனை உருவாக்க்குவது இஸ்ரேலின் நீண்ட கால நலனுக்கும் நல்லதே.

———

பைடன் உத்தரவாத அடிப்படையில் எகிப்து எல்லை ஊடாக காசாவுக்கு நகர தொடங்கிய, நிவாரணப் பொருட்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
21 minutes ago, goshan_che said:

இஸ்ரேல் பாரிய ரத்தப்பலி வேண்டாமல் நிப்பாட்டது என்டு நினைக்கிறன்.
போகப் போகத் தெரியும்!
 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இஸ்ரேல் பாரிய ரத்தப்பலி வேண்டாமல் நிப்பாட்டது என்டு நினைக்கிறன்.
போகப் போகத் தெரியும்!
 
ஓம். சிவிலியன் இழப்பை, மக்களை இலக்கு வைக்கும் தடைகளை தளர்த்த இஸ்ரேல் மீது கடும் அளுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இதை செய்த பைடன் செயல் பாராட்டுக்குரியது. எகிப்தும் கூட.

ஆனால் ஹமாசை, ஜிகாத்தை ஒட்ட நறுக்குவது தொடரும் என்றே நினைக்கிறேன். தொடர வேண்டும். அதுதான் இஸ்ரேலிய, பலஸ்தீனிய அப்பாவிகளுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஆனால் ஹமாசை, ஜிகாத்தை ஒட்ட நறுக்குவது தொடரும் என்றே நினைக்கிறேன். தொடர வேண்டும். அதுதான் இஸ்ரேலிய, பலஸ்தீனிய அப்பாவிகளுக்கு நல்லது.

நிச்சயமாக இந்த சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தவற விடாது. ஹமாஸ், ஜிஹாதி பயங்கர வாத குழுக்கள் அழிக்கப்படுவார்கள். இதை விடடாள் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியவில்லை.

இஸ்லாமிய நாடுகள், குறிப்பாக ஈரானுக்கு இந்த பயங்கரவாதிகளை அழித்தால் தங்களது பிடி தளர்ந்துவிடும் என்று நன்றாகவே தெரியும். எனவே அதட்கு இலகுவில் அனுமதிக்கமாடடார்கள். இருந்தாலும் இந்த முறை இஸ்ரேல் அதை செய்து முடிப்பதுடன் அகண்ட இஸ்ரவேலயும் உருவாக்கும்.

சிரியா, லெபனான் நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட இஸ்ரேல் உருவாக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Cruso said:

சிரியா, லெபனான் நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட இஸ்ரேல் உருவாக்கப்படும். 

அகண்ட இஸ்திரேல் என்றால் ?
குறுகிய சிரியாவுக்கு .... குறுகிய லெபனானுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

UPenn crisis deepens: Former trustee calls for president to resign as donors bail

Former University of Pennsylvania trustee Vahan Gureghian is calling for Liz Magill, the Ivy League school’s president, to step down and warned the backlash from powerful donors will likely get worse over a growing uproar over how the school has dealt with allegations of antisemitism on campus.

“She is negligent and not really up to the job of being the president of one of the eight or so most elite universities in the world,” Gureghian, a charter-school magnate, told CNN in a phone interview on Wednesday.

A growing list of high-profile donors have pulled their funding from Penn, arguing Magill and her administration did not go far enough to condemn the Palestine Writes Literature Festival that took place last month on campus. UPenn leaders acknowledged that event included speakers with a history of making antisemitic remarks, issuing a statement ahead of the festival condemning antisemitism broadly – though not the festival specifically.

In the wake of Hamas’ attack on Israel, donors’ displeasure increased rapidly, as they argued the university wasn’t sufficiently battling antisemitism on campus.

The call for Magill’s resignation comes after Gureghian himself stepped down from the board of trustees late last week in protest of the school’s response to a Palestinian literature festival that took place last month, before the terror attacks by Hamas against Israel.

Vahan Gureghian, former University of Pennsylvania trustee, is calling for Liz Magill, the Ivy League school's president, to step down amid deepening donor backlash.

Vahan Gureghian, former University of Pennsylvania trustee, is calling for Liz Magill, the Ivy League school's president, to step down amid deepening donor backlash.

From CSMI

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் அறங்காவலர் வாகன் குரேஜியன், ஐவி லீக் பள்ளியின் தலைவரான லிஸ் மாகில் பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து, வளாகத்தில் மதவெறிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பள்ளி எவ்வாறு கையாண்டது என்பது குறித்த பெருகிவரும் சலசலப்புகளால் சக்திவாய்ந்த நன்கொடையாளர்களின் பின்னடைவு மோசமாகிவிடும் என்று எச்சரித்தார்.

"அவர் அலட்சியமாக இருக்கிறார், உலகில் உள்ள எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயரடுக்கு பல்கலைக்கழகங்களில் ஒன்றின் தலைவராக இருக்கும் வேலையை அவர் உண்மையில் செய்யவில்லை" என்று ஒரு பட்டயப் பள்ளி அதிபரான குரேஜியன் புதன்கிழமை CNN க்கு தொலைபேசி பேட்டியில் கூறினார்.

உயர்தர நன்கொடையாளர்களின் வளர்ந்து வரும் பட்டியல் பென்னிடம் இருந்து நிதியுதவியை எடுத்துள்ளது, மாகில் மற்றும் அவரது நிர்வாகம் கடந்த மாதம் வளாகத்தில் நடந்த பாலஸ்தீன எழுத்து இலக்கிய விழாவை கண்டிக்கும் அளவுக்கு செல்லவில்லை என்று வாதிட்டனர். யூபிஎன் தலைவர்கள் நிகழ்வில், யூத எதிர்ப்புக் கருத்துக்களைச் சொல்லும் வரலாற்றைக் கொண்ட பேச்சாளர்களை உள்ளடக்கியதாக ஒப்புக்கொண்டது, திருவிழாவிற்கு முன்னதாகவே ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அடுத்து, நன்கொடையாளர்களின் அதிருப்தி வேகமாக அதிகரித்தது, ஏனெனில் பல்கலைக்கழகம் வளாகத்தில் போதியளவு யூத எதிர்ப்புக்கு எதிராக போராடவில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற பாலஸ்தீனிய இலக்கிய விழாவிற்கு பள்ளி அளித்த பதிலை எதிர்த்து, கடந்த வார இறுதியில் குரேஜியன் அறங்காவலர் குழுவில் இருந்து விலகியதை அடுத்து, மகிலின் ராஜினாமா அழைப்பு வந்துள்ளது.

https://www.cnn.com/2023/10/18/business/president-upenn-donors-protest-israel/index.html

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

ஓம். சிவிலியன் இழப்பை, மக்களை இலக்கு வைக்கும் தடைகளை தளர்த்த இஸ்ரேல் மீது கடும் அளுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இதை செய்த பைடன் செயல் பாராட்டுக்குரியது. எகிப்தும் கூட.

ஆனால் ஹமாசை, ஜிகாத்தை ஒட்ட நறுக்குவது தொடரும் என்றே நினைக்கிறேன். தொடர வேண்டும். அதுதான் இஸ்ரேலிய, பலஸ்தீனிய அப்பாவிகளுக்கு நல்லது.

கமாஸை ஒட்ட நறுக்க வேணும். இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது இனி... ஒக்க துடைச்சழிக்க வேணும்.

அங்காலை லெபனான் எல்லையிலை ஆங்காங்கே மோதல் நடைபெறுகிறது...

இன்னொரு செய்தி, மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேரெல்லாம் கொல்லப்படவில்லையாம். வெகு குறைந்தளவிலான மக்கள் தான் கொல்லப்பட்டனராம். மேலும் அது மருத்துவமனையிலிருந்த ஒரு ஊர்தி தரிப்பிடம் மீதான தாக்குதலாம். மெய்யுண்மை (facts) தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாசை அழிப்பதோடு நிறுத்தி விடாது பலஸதீன மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பாரிய அழுத்தத்தை பலஸ்தனம் மற்றும் இஸ்ரேல் மீது செலுத்த வேண்டும்.  அதுதான் நீதியானது. இன்றையநிலை அதற்கு சந்தர்பபத்தை வழங்கி உள்ளதாக உணர்கிறேன். 

2009 ல் இலங்கையில் யுத்த முடிவிலாவது  ஓரு அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை வல்லரசு நாடுகள் இலங்கை மீது செலுத்தி இருந்தால் இன்றய நிலையே வேறு. 

ஆகவே ஹமாஸை அழிப்பதென்பது பலஸ்தீன மக்களின் அரசியல் தீர்வை புறக்கணிப்பதாக இருந்தால் அது புலிகளை அழித்ததுவிட்டு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை நிராகரித்ததை ஒத்த நிலையாகும்.

2002 ல் பேச்சுவார்ததை தொடங்கிய போது இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் சமமான பாரிய அழுத்தத்தை பிரயோகித்து சிங்கள தரப்பில் இருந்த,  சிங்கள பெளத்த மேலாண்மையை வலியுறுத்திய தீவிரவாதிகளையும் தமிழர் தரப்பில் இருந்த,  தமிழீழம் மட்டுமே தீர்வு அதற்காக இறுதிவரை போராடுவோம் என்ற தீவிரத்தன்மையுடன் செயற்பட்ட பிரிவினரையும் கட்டுக்குள்  கொண்டுவந்து  ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கான சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி முன்னேறி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் தமிழ் மக்கள் இன்றிருப்பதை விட  அரசியல் ரீதியில் ஒரு பலமான நிலையில் இருந்திருப்பர்.  

அதே வேளை ஹமாஸ் போன்ற அதி தீவிர ஆயுத போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்து சரவதேச அரசியலை புறக்கணிக்கும்  இயக்கங்களை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பனது  என்பதை பாலஸ்தீனிய மக்களும் உணரவேண்டும்.  இதற்காக உலக நாடுகளில் ஏற்கனவே உள்ள உதாரணங்களை பாரஸ்தீனத்தின் விடுதலைக்காக போராடும்,  மதச்சார்பற்று சிந்திக்கும் பிரிவினர் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் வெறுமனே வெறுப்பும் யுத்த வெறியுமே இரு பகுதியினரிடையேயும் உள்ளது என்பது கவலைக்கிடமான நிலமையாக உள்ளது.  

யுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் இன்றும் கொண்டாடும்,  அதுவே வீர வரலாறு என்று சிந்திக்கும், அதை ரசிக்கும் தரப்புக்கள் இன்றும் கோலோச்சும் நிலையானது  பாரிய மனித அழிவை  ஏற்படுத்தும் என்பதற்கு கண்முன்னே பல உதாரணங்கள் உண்டு.  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, island said:

எமது போராட்டம் அழிக்கப்பட்ட காலம் சோவியத் யூனியன் உடைவிற்குபின் பலச்சமனிலை  அற்ற ஒற்றை உலக ஒழுங்கு நிலவிய காலத்தில், ஆனால் நிலமை தற்போது மாறிவிட்டது, குறிப்பாக அமெரிக்க போர்க்கப்பல் தொடர்பாக இரஸ்சியாவின் கருத்து.

ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவுகளுக்கு இந்த மாறிவரும் பலதுருவ உலக ஒழுங்கு மீண்டும் பனிபோர் கால உலக ஒழுங்கினை போல ஒரு உவப்பான காலம் ஆகும், ஆனால் உலகில் அமைதியின்மை அதிகரிக்கும் ஆனால் பலவீனமானவர்களின் குரலை அமைதியாக்கி ஒரு மயான தீர்வை ஏற்படுத்துவதிலும் இது சிறப்பானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் யுத்தம் - முற்றுகை காரணமாக காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனையும் மூடப்படும் ஆபத்து

Published By: RAJEEBAN   19 OCT, 2023 | 11:29 AM

image

அல்ஜசீரா

யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற மிகவும் துயரமான சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காசாவின் அல்அஹ்லி மருத்துவமனையில் கொல்லப்பட்டுள்ள அதேவேளை வைத்தியர் சுபிசுகேய்க் தனது புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் சந்திக்கும் மற்றுமொரு துயரத்தை சந்திக்கின்றார்.

ஒக்டோபர் ஏழாம் திகதி மோதல் ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின்னர்  காசா பள்ளத்தாக்கின் மீது  முழுமையான தடையை விதித்தது, எரிபொருள் குடிநீர் உட்பட ஏனைய பொருட்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

துருக்கி பாலஸ்தீன நட்புற மருத்துவமனையின் இயக்குநர் சுபிசுகேய்க் தனது மருத்துவமனையில் எரிபொருள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மேலும் ஹீமோதெரபி சிகிச்சைக்கான மருந்துகளும் அவசியமாக தேவைப்படுகின்றன எனவும்  தெரிவித்துள்ளார்.

tika_hospital.jpeg

அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் இயங்குவதை உறுதி செய்ய முயல்கின்றோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ள அவர் நோய்களை கண்டுபிடித்து கண்காணிப்பதற்கான கதிரியக்க சேவைகளை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காசா தனது மின்;சாரத்தின் ஒருபகுதியை இஸ்ரேலில் இருந்தே பெறுகின்றது இதன் காரணமாக காசாவிற்கான மின்சார விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஏனைய மின்சாரத்தை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மூலம் இயக்கப்படும் மின்பிறப்பாக்கி மூலம்  காசா பெறுவது வழமை.ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் முழுமையான முற்றுகையால் அந்த மி;ன்நிலையம் முற்றாக செயல் இழந்தது.

இஸ்ரேல் அதன் பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் தாக்குதல் காரணமாக 3000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்-இதில் மூன்றில் ஒருவர் குழந்தைகள்.

எனினும் காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனை எந்தநேரத்திலும் செயல் இழக்கும் நிலையேற்பட்டுள்ளமை ஏவுகணைகளில் இருந்து வெளியாகும் குண்டுசிதறல்கள் மாத்திரம் காசா மக்களை அச்சுறுத்தவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

காசாவில் 9000க்கும் புற்றுநோயாளிகள் உள்ளனர் என முன்னர் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

துருக்கி பாலஸ்தீன நட்புறவு வைத்தியசாலை எரிபொருளில் இயங்கும் ஒரேயொரு மின்பிறப்பாக்கியின் உதவியுடன் இயங்கிவந்தது.தற்போது மின்சாரம் இல்லாததால் அந்த மின்பிறப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை உருவாக கூடும் இதனால் அந்த மருத்துவமனை அடிப்படை சேவைகளை கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

இதன் காரணமாக உரிய தருணத்தில் - தொடர்ச்சியாக சிகிச்சைகளை பெறவேண்டிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படும்.

தீவிர சிகிச்சை பிரிவு இயங்குவதற்கு அதிகளவு மின்சாரம் தேவை என தெரிவிக்கும் வைத்தியர் சுகேக் தெரிவிக்கின்றார்.ஒக்சிசன் இயந்திரங்கள் இயங்கவும் அவை தேவை என்கின்றார் சுகேக் 

சில நோயாளிகளிற்கான ஹீமோதெரபி சிகிச்சையை  நிறுத்தவேண்டியுள்ளது ஆனால் நோய் உடலிற்குள் பரவுவதை தடுப்பதற்காக அவர்களிற்கு சிகிச்சை அவசியம் என்கின்றார் சுகேக்.

யுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாளில் சில நோயாளிகள் சிகிச்சைக்குவரவில்லை -மருத்துவமனைக்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயமாக மாறியதே இதற்கு காரணம்.

https://www.virakesari.lk/article/167245

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of helicopter, map and text

May be an image of text that says 'Gaza Water food Electricity Medicines world Apathy SASITH KUMAR'

May be a doodle of text

May be a doodle of helicopter, blimp and text

May be an image of hospital and text that says 'WE ARE BOMBING THE HOSPITALS EVACUATE NOW o MG! Look what HAMAS DID Rau AHLI'

May be a doodle of text

May be an illustration of text

May be a doodle of text

May be an image of text

May be an image of text

May be a doodle of text

May be pop art of blimp

No photo description available.

May be an illustration of text

May be an image of text

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

ஹமாசை அழிப்பதோடு நிறுத்தி விடாது பலஸதீன மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பாரிய அழுத்தத்தை பலஸ்தனம் மற்றும் இஸ்ரேல் மீது செலுத்த வேண்டும்.  அதுதான் நீதியானது. இன்றையநிலை அதற்கு சந்தர்பபத்தை வழங்கி உள்ளதாக உணர்கிறேன். 

2009 ல் இலங்கையில் யுத்த முடிவிலாவது  ஓரு அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை வல்லரசு நாடுகள் இலங்கை மீது செலுத்தி இருந்தால் இன்றய நிலையே வேறு. 

ஆகவே ஹமாஸை அழிப்பதென்பது பலஸ்தீன மக்களின் அரசியல் தீர்வை புறக்கணிப்பதாக இருந்தால் அது புலிகளை அழித்ததுவிட்டு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை நிராகரித்ததை ஒத்த நிலையாகும்.

2002 ல் பேச்சுவார்ததை தொடங்கிய போது இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் சமமான பாரிய அழுத்தத்தை பிரயோகித்து சிங்கள தரப்பில் இருந்த,  சிங்கள பெளத்த மேலாண்மையை வலியுறுத்திய தீவிரவாதிகளையும் தமிழர் தரப்பில் இருந்த,  தமிழீழம் மட்டுமே தீர்வு அதற்காக இறுதிவரை போராடுவோம் என்ற தீவிரத்தன்மையுடன் செயற்பட்ட பிரிவினரையும் கட்டுக்குள்  கொண்டுவந்து  ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைக்கான சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி முன்னேறி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் தமிழ் மக்கள் இன்றிருப்பதை விட  அரசியல் ரீதியில் ஒரு பலமான நிலையில் இருந்திருப்பர்.  

அதே வேளை ஹமாஸ் போன்ற அதி தீவிர ஆயுத போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்து சரவதேச அரசியலை புறக்கணிக்கும்  இயக்கங்களை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பனது  என்பதை பாலஸ்தீனிய மக்களும் உணரவேண்டும்.  இதற்காக உலக நாடுகளில் ஏற்கனவே உள்ள உதாரணங்களை பாரஸ்தீனத்தின் விடுதலைக்காக போராடும்,  மதச்சார்பற்று சிந்திக்கும் பிரிவினர் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் வெறுமனே வெறுப்பும் யுத்த வெறியுமே இரு பகுதியினரிடையேயும் உள்ளது என்பது கவலைக்கிடமான நிலமையாக உள்ளது.  

யுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் இன்றும் கொண்டாடும்,  அதுவே வீர வரலாறு என்று சிந்திக்கும், அதை ரசிக்கும் தரப்புக்கள் இன்றும் கோலோச்சும் நிலையானது  பாரிய மனித அழிவை  ஏற்படுத்தும் என்பதற்கு கண்முன்னே பல உதாரணங்கள் உண்டு.  

அருமை ஐலண்ட்.

ஒரு அமரிக்க ஜனாதிபதி உங்களை போல் சிந்தித்தால் போதும்.  இந்த பிரச்சினை தீர்ந்து விடும்.

இலங்கையில் விட்ட பிழையை இங்கே விடக்கூடாது.

5 hours ago, நன்னிச் சோழன் said:

கமாஸை ஒட்ட நறுக்க வேணும். இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது இனி... ஒக்க துடைச்சழிக்க வேணும்.

அங்காலை லெபனான் எல்லையிலை ஆங்காங்கே மோதல் நடைபெறுகிறது...

இன்னொரு செய்தி, மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேரெல்லாம் கொல்லப்படவில்லையாம். வெகு குறைந்தளவிலான மக்கள் தான் கொல்லப்பட்டனராம். மேலும் அது மருத்துவமனையிலிருந்த ஒரு ஊர்தி தரிப்பிடம் மீதான தாக்குதலாம். மெய்யுண்மை (facts) தெரியவில்லை.

ஓம். ஆரம்பத்தில் ஹமாசை நம்பி செய்தி வெளியிட்ட பிபிசி போன்ற ஆக்களும், இப்போ இது இஸ்ரேல் செய்தது என்பதில் இருந்து பின்னடிக்கினம்.

2009 போல் இல்லை இப்போ. OSINTC எனப்படும் ஓப்பன் சோர்ஸ் இண்டெலிஜின்ஸ் ஆட்கள் எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரிச்சு மேய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

நிச்சயமாக இந்த சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தவற விடாது. ஹமாஸ், ஜிஹாதி பயங்கர வாத குழுக்கள் அழிக்கப்படுவார்கள். இதை விடடாள் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியவில்லை.

இஸ்லாமிய நாடுகள், குறிப்பாக ஈரானுக்கு இந்த பயங்கரவாதிகளை அழித்தால் தங்களது பிடி தளர்ந்துவிடும் என்று நன்றாகவே தெரியும். எனவே அதட்கு இலகுவில் அனுமதிக்கமாடடார்கள். இருந்தாலும் இந்த முறை இஸ்ரேல் அதை செய்து முடிப்பதுடன் அகண்ட இஸ்ரவேலயும் உருவாக்கும்.

சிரியா, லெபனான் நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட இஸ்ரேல் உருவாக்கப்படும். 

அகண்ட இஸ்ரேல் = அகண்ட அழிவு.

இஸ்ரேலின் நிலத்துக்கான உரிமை ஐ நா அமைத்து கொடுத்த 1967 போருக்கு முன்னான எல்லைக்கு மட்டுமே.

அதன் பின் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள நிலங்கள் எல்லாமும் கொள்ளை.

அத்தோடு அகல கால் வைத்தால் - உள்ளதும் போச்சுதடா என்ற நிலை வரலாம்.

இந்த காரணமே சினாய் பகுதி, ஜோர்தான் ஆற்றின் எதிர் கரையை இஸ்ரேல் மீள எகிப்த், ஜோர்தானிடம் கொடுக்க காரணம்.

இஸ்ரேலின், உலகின் பாதுகாபுக்கான ஆகச் சிறந்த, நிரந்தர உத்தரவாதம் - ஒரு மிதவாதிகளால் (PLO போல் மதச்சார்பற்ற என்றால் இன்னும் சிறப்பு) ஆளப்படும் பஸ்தீனத்தை அமைத்து கொடுப்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

எமது போராட்டம் அழிக்கப்பட்ட காலம் சோவியத் யூனியன் உடைவிற்குபின் பலச்சமனிலை  அற்ற ஒற்றை உலக ஒழுங்கு நிலவிய காலத்தில், ஆனால் நிலமை தற்போது மாறிவிட்டது, குறிப்பாக அமெரிக்க போர்க்கப்பல் தொடர்பாக இரஸ்சியாவின் கருத்து.

ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவுகளுக்கு இந்த மாறிவரும் பலதுருவ உலக ஒழுங்கு மீண்டும் பனிபோர் கால உலக ஒழுங்கினை போல ஒரு உவப்பான காலம் ஆகும், ஆனால் உலகில் அமைதியின்மை அதிகரிக்கும் ஆனால் பலவீனமானவர்களின் குரலை அமைதியாக்கி ஒரு மயான தீர்வை ஏற்படுத்துவதிலும் இது சிறப்பானது.

பனிப்போருக்கும் இஸ்ரேலுக்கும் ஒரே வயது. பலஸ்தீன பிரச்சினை அப்போது இருந்து இருக்கிறது.

பனிப்போர் காலத்தில் நைஜீரியா, பலஸ்தீன், காச்மீர், திபெத், இன்னும் பல இடங்களில் ஒடுக்கப்பட்ட இனங்கள்  அப்படி ஒன்றும் உவப்பான நிலைமைகளை காணவில்லை.

இரு அல்லது பல் துருவ உலகில் எப்படி எல்லாபக்கமும் எம்பக்கம் இருக்குமாறு காய் நகர்த்தலாம் என்பதற்கு சிங்கபூர், மலேசியா, இலங்கை என பல உதாரணங்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய இஸ்ரேலின் வான் தாக்குதலில் 121  பலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - 65 பொலிஸார் காயம் 174 பேர் கைது

Published By: RAJEEBAN    19 OCT, 2023 | 03:37 PM

image

ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 65 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

germen_police.jpg

கற்கள் எரிபொருட்கள் வீசப்பட்தாலும் ஆர்ப்பாட்டக்காராகள் பொலிஸாரை மீறியதாலும் பொலிஸாருக்கு இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என பேர்ளின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

174 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மனி பொலிஸார் 65 பேரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அராபியர்கள் அதிகமாக வாழும் நியுகோலான் பகுதியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

நியுகோலானை காசாவாக மாற்றுமாறு  டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/167279

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

பிரான்ஸ் பற்றி சிரித்த ஜேர்மனி வாழ் உறவுகள் வரிசையில் வரவும் 😂 

எப்படி இருந்த ஜேர்மனி?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

ஹமாசை அழிப்பதோடு நிறுத்தி விடாது பலஸதீன மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பாரிய அழுத்தத்தை பலஸ்தனம் மற்றும் இஸ்ரேல் மீது செலுத்த வேண்டும்.  அதுதான் நீதியானது. இன்றையநிலை அதற்கு சந்தர்பபத்தை வழங்கி உள்ளதாக உணர்கிறேன். 

இது தானே 1967 இல் நடந்தது.

திரும்பதிரும்ப இப்படியான ஒப்பந்தங்களை எப்படி போடுவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி இணக்கம்

world-news-10.jpg

ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

காசா எல்லைக்கான உதவிப் பொருட்கள் அடங்கிய சுமார் 20 ட்ரக் வாகனங்கள் செல்வதற்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

காசா பிராந்தியத்திற்கான “நிலையான” மனிதாபிமான உதவிகளை எகிப்து உறுதிப்படுத்துவதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் சிக்கி 4500-இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/277612

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மோதல் பிராந்திய போராக மாறும் அபாயம் – ரஷ்யா எச்சரிக்கை!

காசா பகுதியில் இடம்பெறும் மோதல், பிராந்திய போராக மாறும் அபாயம் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இடம்பெறும் மோதலுக்கு ஈரான் மீது பழி சுமத்துவது ஆத்திரமூட்டும் செயற்பாடு என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துருக்கியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்றைய தினம் இஸ்ரேலுக்கு விஜயமொன்றை மேற்கொள்கின்றார்.

இந்த விஜயத்தின் போது இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இஸ்ரேலுக்கான தங்களது ஆதரவையும் அவர் வெளிப்படுத்துவார் என பிரித்தானிய பிரதமர்; அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது பிரித்தானிய பிரதமரும் அங்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/277707

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு துருக்கி தலையிடும் -எர்டோகன் கடும் எச்சரிக்கை

19 OCT, 2023 | 05:30 PM
image

பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக தலையிடுவேன் என துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் எச்சரித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கில் இடம்பெறும் முன்னர் ஒருபோதும் இல்லாத இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையை முடிவிற்கு கொண்டுவருமாறு மனித குலத்தை கேட்டுக்கொள்கின்றேன் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167304

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் ஜேர்மன் அரச தலைவருக்கு ஏற்பட்ட நிலை

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு சென்ற ஜேர்மன் பிரதமர், ஹமாஸ் அமைப்பின் ஏவுகணை தாக்குதலில் விமான நிலையத்தில் படுக்க வைக்கப்பட்ட காட்சி எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 17ம் திகதி தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள விமான நிலையத்திற்கு ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் நாடு திரும்புவதற்காக வந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல்

இதன்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டார். பின் சில நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டார்.

https://ibctamil.com/article/condition-of-the-german-prime-minister-in-israel-1697718919

  • கருத்துக்கள உறவுகள்+

Image

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நன்னிச் சோழன் said:

Image

இது போன்ற கணக்குகளில் சொல்லப் படும் கருத்துக்களை கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ மனைக் கட்டிடம் மீது நேராக எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்பது உண்மை, ஆனால் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால், கட்டிடத்தின் ஒவ்வொரு ஜன்னலும் உடைந்து சன்னம் பறந்திருக்கிறது.

மருத்துவமனை பாதுகாப்பு என்று நம்பிய மக்கள் தஞ்சமடைந்து, வாகனத் தரிப்பிடதிலேயே தங்கியிருந்த சான்றுகள் தெரிகின்றன (மெத்தைகள்). அருகில் ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் இருந்திருக்கிறது, அங்கே சிறுவர்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் நூற்றுக் கணக்கானோர் இறந்து, காயப்பட்டிருக்கின்றனர் என நம்பக் காரணங்களாக இருக்கின்றன.

ஒரு வீடியோ உட்பட பலரின் பேட்டிகள் கருத்துகளை உள்ளடக்கிய செய்தியில் இவையெல்லாம் காட்டப் படுகின்றன.

https://www.nytimes.com/2023/10/18/world/middleeast/gaza-hospital-israel-hamas-explained.html

 மனித உயிர் இழப்புகளைப் பொய் என்று நிறுவ நாம் உதவக் கூடாது, இது பாதிக்கப் பட்ட மக்களை இன்னும் காயப்படுத்துவது போலாகும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.