Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

402432579_732793585552283_11381342690771

  • Replies 1.5k
  • Views 158.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

செங்கடல் பகுதியில்  இஸ்ரேலின் கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அடி இருக்குது. இஸ்ரேலுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது. இஸ்ரேல் இதைக்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தது.   பயங்கரவாதிகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்திருப்பதால் அவர்களை நிரம்மூலமாக்குவதட்கு இதுதான் தருணம். 

நீங்க‌ள் புத்த‌க‌த்தின் ஒரு ப‌க்க‌த்தை தான் பார்க்கிறீங்க‌ள் 

ம‌று ப‌க்க‌த்தையும் பாருங்கோ................இன‌வாத‌ இஸ்ரேல் அர‌சால் ப‌ர‌ப்ப‌ப் ப‌டும் புர‌ளிக‌ளை கேட்டு வ‌ன்ம‌த்தை க‌க்கிறீங்க‌ள்.............இற‌ந்த‌ இஸ்ரேல் ராணுவ‌த்தை அட‌க்க‌ம் செய்யிற‌வ‌ர் இன்று ஒரு ஊட‌க‌த்துக்கு க‌வ‌லையுட‌ன் பேட்டி கொடுத்து இருக்கிறார்...........ஹ‌மாஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் இற‌ந்த‌ இஸ்ரேல் ராணுவ‌த்தை இடை விடாது அட‌க்க‌ம் செய்து கொண்டு இருக்கிறோமாம்............ஹ‌மாஸ் போராளிக‌ளின் அடி இதெல்லாம் ஒரு அடியா என்று ந‌க்க‌ல் செய்தீங்க‌ள்..........இற‌ந்த‌ காய‌ப்ப‌ட்ட‌ இஸ்ரேல் ப‌டையின‌ரை கெலிக‌ப்ட்ட‌ரில் கொண்டு போகின‌ம் உட‌னுக்கு உட‌ன்...........ர‌ஸ்சிய‌ன்ட‌ ஈரான்ட‌ ஆயுத‌ம் எவ‌ள‌வு அழிவை ஏற்ப‌டுத்தும் என்ற‌துக்கு இது ந‌ல்ல‌தொரு எடுத்துக் காட்டு

மேற்க்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் எல்லாம் அமெரிக்க‌ன்ட‌ க‌ட்டு பாட்டில்................ Twitterரில்  உண்மை காணொளிக‌ளை ப‌திவேற்ற‌ம் செய்ய‌ முழு சுத‌ந்திர‌ம் உண்டு............நீங்க‌ள் த‌லைகீழா நின்று எழுதினாலும் இஸ்ரேல் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு........ஜ‌நாவை ம‌திக்காத‌ எந்த‌ நாடும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு தான்.............காசாவில் 500  ம‌க்க‌ளுக்கு ஒரு க‌ழிவ‌றை..........இத‌னால் நோய் தொற்று அதிக‌மாக‌ கூடும் என்று சுகாதாரத்துறை சொல்லி இருக்கு.............இன‌வாத‌ இஸ்ரேல் கொன்று குவிப்ப‌தெல்லாம் ப‌ச்சில‌ங் குழ‌ந்தைக‌ளை............ஹ‌மாஸ் போராளிக‌ள்  போர் செய்வ‌து இன‌வாத‌ இஸ்ரேல் அர‌சுட‌ன்.........ஹ‌மாஸ் போராளிக‌ன் நோக்க‌ம் அப்பாவி இஸ்ரேல் ம‌க்க‌ளை கொல்லுவ‌து கிடையாது...................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

இருந்தாலும் நீங்கள் ஹமாஸின் தீவிர ஆதரவாளர்தான். உங்கள் போராட்டங்களின் நிற உங்களுக்கு உதவி செய்திருப்பார்கள் போல. எதோ அவர்களை நம்பி இருக்கிறீர்கள். உங்களுக்கு எதாவது அவர்கள் பெற்று கொடுத்தால் நல்லதுதான். என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தரவிடடாலும் பரவாயில்லை எங்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும்.

இன்னும் இஸ்ரேலிய ராணுவம் ஆயிர கணக்கில் உயிரிழப்பதாக கூறுகிறீர்கள். யுத்தத்தில் உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்யும். எனவே நீங்கள் ஏன் ஒரு தரப்பின் உயிரிழப்பை பெரிதாக காட்டுகிறீர்கள். இருபக்கமும் பெரிய உயிரிழப்புக்கள் நடக்கின்றன.

பயங்கரவாதிகள் மக்களுக்குள் இருந்து தாக்குவதால் அங்கு மக்களுக்கும் உயிரிழப்புகள் ஏட்படுகின்றது. இஸ்ரேல் ராணுவத்துக்குள் நீங்கள் சொல்வதுபோல நிறைய உயிரிழப்புகள் ஏட்படுமாக இருந்தால் அவர்களை சும்மா இருக்கும்படி யாரும் கூற முடியாது.

ஒன்று மக்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

இஸ்ரேலிய கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கை ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு - கப்பலொன்றையும் கைப்பற்றினர்

Published By: RAJEEBAN   20 NOV, 2023 | 10:25 AM

image

செங்கடல் பகுதியில்  இஸ்ரேலின் கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாக யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஜப்பானிலிருந்து இயங்கும் கப்பலை கைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய வர்த்தகர் ஒருவருக்கும் சொந்தமான கலக்ஸி லீடர் கப்பலில் 22 பேர் காணப்பட்டனர் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியிலிருந்து இந்தியாவிற்கு சென்று கொண்டிருந்த கப்பலையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கப்பலை ஹைப்பற்றியுள்ளதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் இஸ்ரேலின் கொடியுடன் பயணிக்கும் கப்பல்களை தாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதை அவர்கள் அறிவித்துள்ளனா என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் செய்தியாளர் இஸ்ரேல் போன்ற நாடுகளிற்காக பணியாற்றவேண்டாம் என சர்வதேச மாலுமிகளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169734

ஹூத்தி பயங்கரவாதிகள் இப்போது கடல் கொள்ளையர்களாக மாறி விடடார்கள். இவ்வளவு பலம் பொருந்திய பணக்கார நாடு, ராணுவ பலத்தில் வலிமை மிக்க நாடு இப்படி கடல் கொள்ளையர்களாக மாறியது வெட்கக்கேடு. இந்த பயங்கரவாதிகளுக்கு ஊது குழலாக செயட்படுவதுதான் இந்த அல் ஜஸீரா ஊடகம்.

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. இஸ்ரேல் நினைத்தால் ஒரு கப்பலும் செங்கடலை தாண்டி செல்லாமல் தடுக்க முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

402650440_733342438830731_77050818323193

  • கருத்துக்கள உறவுகள்

Israel's Arab Warriors : Israel இராணுவத்தில் அரேபிய முஸ்லிம்கள் | Niraj David's Nitharsanam | IBC

இந்தத் திரியோடு தொடர்புடைய செய்தியைக் கொண்டுள்ளதால் இணைத்துள்ளேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

ஹூத்தி பயங்கரவாதிகள் இப்போது கடல் கொள்ளையர்களாக மாறி விடடார்கள். இவ்வளவு பலம் பொருந்திய பணக்கார நாடு, ராணுவ பலத்தில் வலிமை மிக்க நாடு இப்படி கடல் கொள்ளையர்களாக மாறியது வெட்கக்கேடு.

என்னது Yemen பணக்கார, ராணுவ பலம் பொருந்திய நாடா? நான் இவ்வளவுநாளும் சாத்தான்தான் உள்ளேயிருந்து எழுதவைக்கிது என்று நினைத்தால், இப்பத்தானே தெரியுது பயபுள்ளைக்கு மேல பிரச்சனை எண்டு! 😕

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 5,600 சிறுவர்கள் பலி!

02-11.jpg

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 13,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, காசாவில் ஹமாஸின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 5,600 பேர் சிறுவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/281847

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவிலிருந்து வெளியேற முயன்ற பாலஸ்தீன கவிஞர் இஸ்ரேலிய படையினரால் கைது

Published By: RAJEEBAN    21 NOV, 2023 | 04:00 PM

image

காசாவிலிருந்து வெளியேறமுயன்றவேளை பாலஸ்தீன கவிஞர் மொசாப் அபு டொகா  இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் எகிப்திற்கு செல்ல முயன்றவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரவா எல்லையை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவரையும் ஏனைய பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலிய படையினர் கைதுசெய்துள்ளனர் என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்

mosab1.jpg

அமெரிக்க தூதரகமே அவரது குடும்பத்துடன் ரபாவிற்கு செல்லுமாறு கே;ட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அவரது மகனிற்கே  எகிப்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது கவிஞருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனினும் பின்னர் அவருக்கும் குடும்பத்தினருக்கும் அனுமதி கிடைத்தது என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்ல முயன்றவேளை அவரையும் பலரையும் இஸ்ரேலிய படையினர் தடுத்துநிறுத்தினர்  அவர்களை கைகளை உயர்த்தச்சொன்னார்கள் மகனை கீழே இறக்கிவிடச்சொன்ன பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தினர் அவரையும் 200 பேரையும்  இழுத்துச்சென்றனர் என கவிஞரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இஸ்ரேலிய படையினரோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

அபுடோகா வடகாசாவில் குண்டுவீச்சிற்கு மத்தியில் வாழ்வது குறித்த தனது அனுபவத்தை நியுயோர்க்கர் சஞ்சிகைக்கு எழுதிவந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169886

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தம் - மிகவிரைவில் சாத்தியமாகலாம் என ஹமாஸ் தெரிவிப்பு

Published By: RAJEEBAN   21 NOV, 2023 | 12:02 PM

image

இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இதனை தெரிவித்துள்ளார்

யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்ற நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளில் கட்டார் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - கட்டாரில் ஹமாசின் அரசியல் அலுவலகம் உள்ளதும் ஹனியே கட்டாரில்  வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

சில சிறிய விவகாரங்கள் காரணமாகவே பணயக்கைதிகள் விடுதலை தாமதமாவதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பணயக்கைதிகள் விவகாரத்தில் இணக்கப்பாட்டை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாஹ்யா சின்வார்: இஸ்ரேல் ராணுவம், மொசாத் இரண்டும் இவருக்கு குறி வைப்பது ஏன்? எங்கே போனார்?

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங் கார்ட்னர்
  • பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

யாஹ்யா சின்வாரைக் காணவில்லை.

இஸ்ரேல் ராணுவம் பல ஆயிரம் துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள், மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கையில் அவர் காணாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

வெள்ளை முடி மற்றும் கருப்பு புருவங்களைக் கொண்ட சின்வார், காஸாவில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராகவும், இஸ்ரேலால் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.

இதற்குக் காரணமானவர்களில் ஒருவராக சின்வாரையும் இஸ்ரேல் சேர்த்திருக்கிறது.

"யாஹ்யா சின்வார் தான் தளபதி... அவருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி அக்டோபரில் அறிவித்தார்.

"இந்த அருவருப்பான தாக்குதலை நடத்த யாஹ்யா சின்வார் தான் முடிவு செய்தார்," என்று ஐ.டி.எஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி கூறினார். "ஆகையால் அவர் மீதும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் மீதும் குறிவைத்திருக்கிறோ,” என்றார்.

அதில் ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் என்பவரும் அடங்குவார்.

அக்டோபர் 7-ஆம் தேதியின் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதற்குப் பின்னால் டெய்ஃப் மூளையாக இருந்தார், ஏனெனில் அது ஒரு இராணுவ நடவடிக்கை. ஆனால், சின்வார் ‘திட்டக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்,’ என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளர் ஹக் லோவாட் கூறுகிறார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கும் சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

யார் இந்த சின்வார்?

அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். அவரது பெற்றோர் இன்று இஸ்ரேலில் இருக்கும் அஷ்கெலோன் நகரைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் அகதிகளானார்கள். 1948-இல் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.

அவர் கான் யூனிஸில் ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில், கான் யூனிஸ் இஸ்லாமிய சகோதரத்துவ ஆதரவிற்கான கோட்டையாக இருந்தது என்று கூறுகிறார், கிழக்கு நாடுகள் கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி. இவர் சின்வாரை நான்கு முறை சிறையில் பேட்டி கண்டவர்.

அந்த இஸ்லாமியச் சகோதரத்துவக் குழு "அகதி முகாமில் வறுமையின் பிடியில் வாழ்ந்த, மசூதி செல்லும் இளைஞர்களுக்கான ஒரு பெரிய இயக்கமாக இருந்தது," என்று யாரி கூறுகிறார். பின்னாளில் அது ஹமாஸுக்கும் முக்கியமானதாக மாறும் என்கிறார்.

சின்வார் முதன்முதலாக, 1982-இல், தனது 19 வயதில், இஸ்ரேலால் அவரது ‘இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக’ கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985-இல் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் அவர் ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார்.

இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர்.

ஹமாஸ் 1987-இல் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 25 தான்.

அல்-மஜ்த் அமைப்பு ‘தார்மீகக் குற்றங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றைத் தண்டிப்பதில் பிரபலமடைந்தது. இந்த அமைப்பு பாலியல் வீடியோக்களை விற்ற கடைகளை குறிவைத்ததாக கூறுகிறார் மைக்கேல். அத்துடன் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் எவரையும் வேட்டையாடிக் கொன்றது.

இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களை ‘மிருகத்தனமாக கொலை செய்ததற்கு’ சின்வார் தான் பொறுப்பு என்று யாரி கூறுகிறார். "அதில் சில கொலைகளை அவர் தனது கைகளால் செய்ததாக என்னிடமும் மற்றவர்களிடமும் பேசிப் பெருமைப்பட்டார்," என்று கூறினார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைக் கூறுகின்றனர். பின்னாளில் அவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அதில் உளவாளி என்று அவர் சந்தேகப்பட்ட ஒருவரை, அந்த நபரின் சகோதரரை வைத்தே உயிருடன் புதைக்க வைத்தார். மண்வெட்டிக்குப் பதிலாக ஒரு ஸ்பூனை வைத்து அந்த வேலையைச் செய்ய முடிக்க வைத்தார்.

"அவர் தன்னைச் சுற்றிப் பல தொண்டர்கள், ரசிகர்கள், பேன்றவர்களைச் சேர்த்தார். அவர்களில் பலரும் அவரைக் கண்டு பயப்படுபவர்கள். அவருடன் எந்த பிரச்னையையும் வைத்துக்கொள்ள விரும்பாதவர்கள்," என்று யாரி கூறுகிறார்.

1988-இல், சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா
படக்குறிப்பு,

யாஹ்யா சின்வார்

சிறை வாழ்க்கை

சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். 1988 முதல் 2011 வரை. அங்கு அவர் தனிமைச் சிறையில் இருந்த காலம், அவரை மேலும் தீவிரமாக்கியதாகத் தெரிகிறது.

"அவர் தனது அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தினார்," என்கிறார் யாரி. அவர் கைதிகள் மத்தியில் ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர்கள் சார்பாக சிறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் கைதிகளிடையே ஒழுக்கத்தை அமல்படுத்தினார்.

சின்வார் சிறையில் இருந்தபோது அவரை மதிப்பீடு செய்த இஸ்ரேலிய அரசு, அவரது குணாதிசயத்தை "கொடுமை, அதிகாரம், செல்வாக்கு, வலியைத் தாங்கும் திறன், தந்திரம் மற்றும் சூழ்ச்சியின் அசாதாரண திறன்கள், கொஞ்சம் கிடைத்தாலே மன நிறைவடையும் தன்மை... மற்ற கைதிகள் மத்தியில் சிறைக்குள் கூட ரகசியங்களை வைத்திருப்பது... திறமை உள்ளது. கூட்டத்தைத் தக்கவைப்பது,” என்று வரையறுத்தது.

சின்வாரைச் சந்தித்துப் பேசிய யாரியின் மதிப்பீடு, ‘அவர் ஒரு மன நோயாளி’ என்பதுதான். "ஆனால் 'சின்வார் ஒரு மனநோயாளி’, என்று பொதுப்படையாகச் சொல்வது தவறு" என்று அவர் கூறுகிறார், "ஏனென்றால் அந்த விசித்திரமான, சிக்கலான மனிதரை நீங்கள் புரிந்துகொள்ளாமல் போகக்கூடும்," என்கிறார்.

யாரியின் கூற்றுப்படி, சின்வார் ‘மிகவும் தந்திரமானவர், புத்திசாலி - ஒரு வகையான தனிப்பட்ட வசீகரம் கொண்டவர்’.

சின்வார் யாரிஒயிடம் ‘இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும்’ என்றும், பாலத்தீனத்தில் யூத மக்களுக்கு இடமில்லை என்றும் கூறியபோது, கேலியாக, ‘உங்கள் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்காகச் செய்கிறேன்,’ என்பாராம்.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எகிப்து எல்லையில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம்

சிறையிலிருந்து விடுதலை

சிறையில் இருந்த சின்வார் இஸ்ரேலிய செய்தித்தாள்களைப் படித்து ஹீப்ரு மொழியில் சரளமாக பேசக் கற்றுக்கொண்டார். யாரி அரபு மொழியில் சரளமாக இருந்தபோதிலும், சின்வார் தன்னுடன் எப்பொழுதும் ஹீப்ருவில் பேச விரும்புவதாக யாரி கூறுகிறார்.

"அவர் தனது ஹீப்ருவை மேம்படுத்த முயன்றார்," என்று யாரி கூறுகிறார். "சிறைக் காவலர்களை விட நன்றாக ஹீப்ரு பேசும் ஒருவரிடமிருந்து அவர் பயனடைய விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

சின்வார் 2011-இல் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.

சின்வார் மேலும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

அந்தத் தருணத்தில், இஸ்ரேல் காஸா பகுதியில் தன் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்று, அதன் போட்டியாளர்களான யாசர் அராஃபத்தின் ஃபத்தாஹ் கட்சியின் பல உறுப்பினர்களை உயரமான கட்டிடங்களின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சின்வாரின் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக நிற்கும் ஆயுதமேந்திய போராளி

‘கொடூரமும் கவர்ச்சியும் கலந்த நபர்’

சின்வார் காஸாவிற்கு திரும்பியதும், அவர் உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று மைக்கேல் கூறுகிறார். இஸ்ரேலிய சிறைகளில் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தியாகம் செய்த ஹமாஸின் ஸ்தாபக உறுப்பினர் என்ற பெருமை பெற்றார்.

ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். இவர் தனது கைகளால் மக்களைக் கொன்றவர் என்ற முறையில்," என்று மைக்கேல் கூறுகிறார். "அவர் மிகவும் கொடூரமானவர், ஆனால் அவரிடம் ஒரு கவர்ச்சி இருந்தது," என்கிறார்.

"அவர் ஒரு சொற்பொழிவாளர் அல்ல," என்கிறார் யாரி. "அவர் பொது மக்களிடம் பேசும் போது, ஒரு கும்பலைச் சேர்ந்தவர் போலப் பேசுவார்."

சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று யாரி கூறுகிறார்.

2013-இல், அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-இல் அதன் தலைவராக ஆனார்.

சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் பங்கு வகித்தார். 2014-இல் ஹமாஸால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக அவர் கூறிக்கொண்டார். ஆனால், ஊடக அறிக்கைகள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், காஸாவின் அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மறைந்திருக்கும் ஹமாஸின் இராணுவப் பிரிவில் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என்றும், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் பங்கு வகித்திருக்கலாம் என்றும் கூறுகின்றன.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் ஷேக் அகமது யாஸீனின் படம் தாங்கிய சுவரோவியம்

‘மூர்க்கத்தனமான விதிகளை விதிப்பவர்’

சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

"அவர் மூர்க்கத்தனமான ஒழுக்க விதிகளை விதிப்பவர்," என்று யாரி கூறுகிறார். "ஹமாஸில் அனைவரும் அறிந்த ஒன்று, நீங்கள் சின்வாருக்கு கீழ்ப்படியாவிட்டால், உங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறீர்கள்."

மோசடி மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஹ்மூத் இஷ்டிவி என்ற ஹமாஸ் தளபதி 2015-இல் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கு அவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

2018-ஆம் ஆண்டில், சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில், அமெரிக்கா தன் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதை எதிர்த்து, இஸ்ரேலில்-காஸா எல்லை வேலியை உடைத்துக்கொண்டு செல்ல ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்கு அவர் தனது ஆதரவை சமிக்ஞையாகத் தெரிவித்தார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், மேற்குக் கரையில் இருக்கும் போட்டி அமைப்பான பாலஸ்தீன அதிகாரத்திற்கு (PA) விசுவாசமானவர்கள் நடத்திய படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாகக் கூறினார்.

ஆயினும்கூட, அவர் சில சமயங்களில் நடைமுறையில் சாத்தியமான பார்வைகளையும் முன்வைத்தார். இஸ்ரேலுடன் தற்காலிக போர் நிறுத்தங்களை ஆதரித்தார், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் பாலத்தீன அதிகாரத்துடன் நல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்தார்.

இதனால் அவரது போக்கு மிகவும் மிதமானது என்று அவரது எதிரிகள் சிலர் விமர்சித்தனர் என்று மைக்கேல் கூறுகிறார்.

இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகள் படங்களைத் தாங்கிய போஸ்டர்கள்

இரானுடன் நெருக்கம்

இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள்.

ஹமாஸுக்குப் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் வேலைக்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம், அந்த இயக்கம் போர் செய்வதறகான உந்துதலை இழந்துவிடும் என்ற தவறான கணிப்பில் அந்தக் கைதிகள் பரிமாற்றத்தைச் செய்ததாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.

அது மிகத் தவறான கணிப்பாகிப் போனது.

"பாலத்தீனத்தை விடுவிக்க வந்த நபராக அவர் தன்னைப் பார்க்கிறார். காஸாவின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதோ, சமூக சேவைகள் செய்வதோ அவரது நோக்கம் இல்லை, " என்று யாரி கூறுகிறார்.

2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு மக்களை அவர் ஊக்குவித்தார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது.

அக்டோபர் 14 அன்று, இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட், சின்வாரை ‘தீமையின் முகம்’ என்று குறிப்பிட்டார். மேலும் "அந்த மனிதரும் அவரது முழு குழுவும் எங்கள் பார்வையில் உள்ளனர். நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம்,” என்றார்.

சின்வார் இரானுக்கும் நெருக்கமானவர். ஒரு ஷியா நாட்டிற்கும் சன்னி அரபு அமைப்புக்கும் இடையிலான கூட்டு என்பது வெளிப்படையான ஒன்றல்ல. ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே நோக்கம், இஸ்ரேல் அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜெருசலேமை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து ‘விடுவிப்பது’.

இருவரும் ஒன்றாக வேலை செய்கின்றனர். இரான் ஹமாஸுக்கு நிதியுதவி அளித்து, பயிற்சியும் ஆயுதங்களும் வழங்குகிறது, அதன் ராணுவத் திறன்களை கட்டமைக்க உதவுகிறது, மற்றும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளைக் கொடுக்கிறது. இது இஸ்ரேலிய நகரங்களை குறிவைக்க பயன்படுத்துகிறது.

சின்வார் 2021-இல் ஒரு உரையில் இரானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். "இரான் இல்லாதிருந்தால், பாலத்தீனத்தின் எதிர்ப்பு இவ்வளவு வலுவாக இருந்திருக்காது," என்றார்.

எதிர்காலம் என்னவாகும்?

ஆயினும்கூட, சின்வாரைக் கொல்வது இஸ்ரேலுக்கு ஒரு "விளம்பர வெற்றியாக’ இருக்குமே தவிர, அது ஹமாஸ் இயக்கத்தை உண்மையில் பாதிக்காது என்று லோவாட் கூறுகிறார்.

அரசு எதிர்ப்பு நிறுவனங்களில் ஒரு தளபதியோ தலைவரோ கொல்லப்பட்டால், அவர்களுக்கு பதில் மற்றொருவர் வருவார். அடுத்து வருபவர்களுக்கு அதே அனுபவம் அல்லது நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அமைப்பு வேறு வடிவத்தில் தன்னை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும்.

"அவர் கொல்லப்பட்டால், அது ஹமாஸுக்கு இழப்பாகத்தான் இருக்கும்," என்று லோவாட் கூறுகிறார். "ஆனால் அவருக்குப் பதில் இன்னொருவர் வருவார். அதற்கான கட்டமைப்புகள் உள்ளன. இது பின்லேடனைக் கொல்வது போல் இல்லை. ஹமாஸுக்குள் மற்ற மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் உள்ளனர்," என்றார்.

ஆனால், மிகப்பெரிய கேள்வி, ‘இஸ்ரேல் ஹமாஸை ஒழிப்பதற்கான தனது தாக்குதலை இராணுவப் பிரசாரத்தை முடிக்கும்போது, காஸாவுக்கு என்ன நடக்கும், இறுதியில் யார் பொறுப்பேற்பார்கள்?’ என்பதுதான்.

மேலும், ‘காஸா மீண்டும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கான ஏவுதளமாக மாறுவதைத் தடுக்க முடியுமா? அப்படித் தடுப்பதன் மூலம் தற்போது நடப்பது போன்ற பெரும் மனிதாபிமானப் பேரழிவுகளைத் தடுக்க முடியுமா?’

https://www.bbc.com/tamil/articles/cd1pqqrp1pdo

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

இருந்தாலும் நீங்கள் ஹமாஸின் தீவிர ஆதரவாளர்தான். உங்கள் போராட்டங்களின் நிற உங்களுக்கு உதவி செய்திருப்பார்கள் போல. எதோ அவர்களை நம்பி இருக்கிறீர்கள். உங்களுக்கு எதாவது அவர்கள் பெற்று கொடுத்தால் நல்லதுதான். என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தரவிடடாலும் பரவாயில்லை எங்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும்.

இன்னும் இஸ்ரேலிய ராணுவம் ஆயிர கணக்கில் உயிரிழப்பதாக கூறுகிறீர்கள். யுத்தத்தில் உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்யும். எனவே நீங்கள் ஏன் ஒரு தரப்பின் உயிரிழப்பை பெரிதாக காட்டுகிறீர்கள். இருபக்கமும் பெரிய உயிரிழப்புக்கள் நடக்கின்றன.

பயங்கரவாதிகள் மக்களுக்குள் இருந்து தாக்குவதால் அங்கு மக்களுக்கும் உயிரிழப்புகள் ஏட்படுகின்றது. இஸ்ரேல் ராணுவத்துக்குள் நீங்கள் சொல்வதுபோல நிறைய உயிரிழப்புகள் ஏட்படுமாக இருந்தால் அவர்களை சும்மா இருக்கும்படி யாரும் கூற முடியாது.

ஒன்று மக்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.

இதுவ‌ரை ஹ‌மாஸ் போராளிக‌ளால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ இஸ்ரேல் ராணுவ‌த்தின் எண்ணிக்கையை ச‌ரியா சொன்னால் நான் உங்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்வ‌தை நிறுத்தி கொள்ளுகிறேன்..............உங்க‌ளுக்கு இப்ப‌டி சொன்னாலும் புரியுதான்டு பாப்போம்...........ஏன் என்றால் இடைசுக‌ம் எம் நாட்டு பிர‌ச்ச‌னையையும் இதுக்கை இழுக்கிறீங்க‌ள்......அதாவ‌து 1996ம் ஆண்டு மூன்று நாள் முல்லைத்தீவில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் 1000க்கு மேல் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ ராணுவ‌ம் கொல்ல‌ ப‌ட்டார்க‌ள் தானே அதில் எத்த‌னை உட‌லை சிங்க‌ள‌ அர‌சு வேண்டின‌து..............சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு முல்லைத்தீவில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் எத்த‌னை பேர் உயிர் இழ‌ந்தார்க‌ள் என்று அவ‌ர்க‌ளின் முக்கிய‌மான‌ ஊட‌க‌ம் மூல‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ப் ப‌ட்ட‌து............அதே போல் தான் இன‌வாத‌ இஸ்ரேல் அர‌சும் மேற்க‌த்தைய‌ நாடுக‌ளுக்கு த‌ங்க‌ளின் ப‌க்க‌ம் இழ‌ப்புக‌ள் குறைவு என்று ப‌ச்சையாய் பொய்ய‌ அவுட்டு விடுகின‌ம்.............உல‌கில் இஸ்ரேல் அர‌சை போல் ஒரு அர‌சு இந்த‌ நூற்றாண்டில் இருக்க‌ வாய்ப்பே இல்லை..............புற்றுநோய் ம‌ருத்தும‌னை மீது தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ ம‌ன‌சு வ‌ருகுது என்றால் அவ‌ங்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளையா இருக்க‌ வாய்ப்பே இல்லை சாத்தான் ஓதும் அழிவுக்கு இஸ்ரேல் உட‌ந்தை 

ஒசாமா பின்லேடன‌ வ‌ள‌த்து விட்ட‌தும் அமெரிக்கா தான் அதே ஒசாமா பின்லேடன ப‌டுகொலை செய்து க‌ட‌லில் தூக்கி  போட்ட‌தும் நீங்க‌ள் க‌ழுவி விடும் நாடான‌ அமெரிக்கா தான்.................ஹமாஸ் போராளிக‌ளின் உண்மை வ‌ர‌லாறை ப‌டியுங்கோ அப்ப‌ ப‌ல‌ உண்மைக‌ள் வெளிய‌ வ‌ரும்...........

நெல்சன் மண்டேலா அவ‌ரும் ஒரு கால‌த்தில் ப‌ய‌ங்க‌ர‌வாதி தீவிர‌வாதி என்று தான் இந்த‌ உல‌க‌ம்  சித்தரித்தவர்கள்.......... பின்னைய‌ கால‌ங்க‌ளில் நெல்சன் மண்டேலாவை த‌ங்க‌ளின் வெள்ளை மாளிகைக்கு வ‌ர‌ வைத்து விருந்து கொடுத்த‌வ‌ர்க‌ள் இதெல்லாம் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ம் க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்..............நெல்சன் மண்டேலாவின் இறுதி ச‌ட‌ங்குக்கு உல‌க‌ த‌லைவ‌ர்க‌ள் எல்லாரும்  முந்தி அடிச்சு கொண்டு போன‌தெல்லாம் இன்னொரு வ‌ர‌லாறு.............எடுத்த‌துக்கெல் லாம் போராளிக‌ளை தீவிர‌வாதி என்று சொல்லாதீர்க‌ள் அதை நினைத்து பின்னைய‌ கால‌ங்க‌ளில் நீங்க‌ள் வ‌ருத்த‌ப் ப‌டுவீங்க‌ள்😁🙈..............

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

என்னது Yemen பணக்கார, ராணுவ பலம் பொருந்திய நாடா? நான் இவ்வளவுநாளும் சாத்தான்தான் உள்ளேயிருந்து எழுதவைக்கிது என்று நினைத்தால், இப்பத்தானே தெரியுது பயபுள்ளைக்கு மேல பிரச்சனை எண்டு! 😕

விளங்கினால் சரிதான். 😜

4 hours ago, பையன்26 said:

இதுவ‌ரை ஹ‌மாஸ் போராளிக‌ளால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ இஸ்ரேல் ராணுவ‌த்தின் எண்ணிக்கையை ச‌ரியா சொன்னால் நான் உங்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்வ‌தை நிறுத்தி கொள்ளுகிறேன்..............உங்க‌ளுக்கு இப்ப‌டி சொன்னாலும் புரியுதான்டு பாப்போம்...........ஏன் என்றால் இடைசுக‌ம் எம் நாட்டு பிர‌ச்ச‌னையையும் இதுக்கை இழுக்கிறீங்க‌ள்......அதாவ‌து 1996ம் ஆண்டு மூன்று நாள் முல்லைத்தீவில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் 1000க்கு மேல் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ ராணுவ‌ம் கொல்ல‌ ப‌ட்டார்க‌ள் தானே அதில் எத்த‌னை உட‌லை சிங்க‌ள‌ அர‌சு வேண்டின‌து..............சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு முல்லைத்தீவில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் எத்த‌னை பேர் உயிர் இழ‌ந்தார்க‌ள் என்று அவ‌ர்க‌ளின் முக்கிய‌மான‌ ஊட‌க‌ம் மூல‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ப் ப‌ட்ட‌து............அதே போல் தான் இன‌வாத‌ இஸ்ரேல் அர‌சும் மேற்க‌த்தைய‌ நாடுக‌ளுக்கு த‌ங்க‌ளின் ப‌க்க‌ம் இழ‌ப்புக‌ள் குறைவு என்று ப‌ச்சையாய் பொய்ய‌ அவுட்டு விடுகின‌ம்.............உல‌கில் இஸ்ரேல் அர‌சை போல் ஒரு அர‌சு இந்த‌ நூற்றாண்டில் இருக்க‌ வாய்ப்பே இல்லை..............புற்றுநோய் ம‌ருத்தும‌னை மீது தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ ம‌ன‌சு வ‌ருகுது என்றால் அவ‌ங்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளையா இருக்க‌ வாய்ப்பே இல்லை சாத்தான் ஓதும் அழிவுக்கு இஸ்ரேல் உட‌ந்தை 

ஒசாமா பின்லேடன‌ வ‌ள‌த்து விட்ட‌தும் அமெரிக்கா தான் அதே ஒசாமா பின்லேடன ப‌டுகொலை செய்து க‌ட‌லில் தூக்கி  போட்ட‌தும் நீங்க‌ள் க‌ழுவி விடும் நாடான‌ அமெரிக்கா தான்.................ஹமாஸ் போராளிக‌ளின் உண்மை வ‌ர‌லாறை ப‌டியுங்கோ அப்ப‌ ப‌ல‌ உண்மைக‌ள் வெளிய‌ வ‌ரும்...........

நெல்சன் மண்டேலா அவ‌ரும் ஒரு கால‌த்தில் ப‌ய‌ங்க‌ர‌வாதி தீவிர‌வாதி என்று தான் இந்த‌ உல‌க‌ம்  சித்தரித்தவர்கள்.......... பின்னைய‌ கால‌ங்க‌ளில் நெல்சன் மண்டேலாவை த‌ங்க‌ளின் வெள்ளை மாளிகைக்கு வ‌ர‌ வைத்து விருந்து கொடுத்த‌வ‌ர்க‌ள் இதெல்லாம் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ந‌ம் க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்..............நெல்சன் மண்டேலாவின் இறுதி ச‌ட‌ங்குக்கு உல‌க‌ த‌லைவ‌ர்க‌ள் எல்லாரும்  முந்தி அடிச்சு கொண்டு போன‌தெல்லாம் இன்னொரு வ‌ர‌லாறு.............எடுத்த‌துக்கெல் லாம் போராளிக‌ளை தீவிர‌வாதி என்று சொல்லாதீர்க‌ள் அதை நினைத்து பின்னைய‌ கால‌ங்க‌ளில் நீங்க‌ள் வ‌ருத்த‌ப் ப‌டுவீங்க‌ள்😁🙈..............

ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு செல்ல முடியாது என்று உங்கள் அடி  குறிப்பில் எழுதியுள்ளீர்கள். நீங்கள் அதை மறந்து விட கூடாது என்பதட்காகத்தான் இடைக்கிடை ஞாபக படுத்துகிறேன். ஈழம் கிடைத்தால் அதை எப்படி கொண்டு நடத்துவதென்று நான் யோசிப்பதுண்டு. நிச்சயமாக அப்போது நீங்கள் ஈழத்துக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.😜

மற்றப்படி பயங்கரவாதிகள் எல்லோரும் அழிக்கப்பட வேண்டியவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

Three Americans could be part of the agreement securing the release of 50 women and children held hostage in Gaza, senior US officials said. 

Ten Americans remain unaccounted for, including two women and one 3-year-old girl, according to a senior administration official.

“We’re determined to get everybody home," a senior administration official said when pressed by CNN’s MJ Lee on the remaining unaccounted for Americans.

பிடித்துக் கொண்டு போன இஸ்ரேலியர்களில் 50 பேரை விடுவிக்க கமாஸ் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம் இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் 150 பாலஸ்தீனியரை விடுவிக்க கோருகிறார்கள்.

இதனால் 4 நாட்கள் யுத்தநிறுத்தமும் வரலாம்.

https://www.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-21-23/index.html

இதில் 50 பெண்களும் குழந்தைகளுமே அடங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு அல்ல‌து க‌ட‌ந்து விட்டு செல்ல முடியாது என்ற‌ ப‌டியால் தான் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ழிக‌ளில் போராடுகின‌ம் ஜ‌ மீன் அகிம்சை வ‌ழியில்.................

நான் உங்க‌ளை பார்த்து எத்த‌னையோ கேள்விக‌ள் கேட்டு விட்டேன் நீங்க‌ள் ஒன்றுக்கும் ஒழுங்காய் ப‌தில் அளித்த‌ மாதிரி தெரிய‌ வில்லை..............ஒரு இன‌த்தின் விடுத‌லைக்காக‌ போராடும் ஹ‌மாஸ் போராளிக‌ளை தீவிர‌வாதி என்று எத‌ன் அடிப்ப‌டையில் சொல்லுறீங்க‌ள்.............இதுக்கு நீங்க‌ள் விள‌க்க‌ம் த‌ந்தால் தொட‌ர்ந்து விவாதிப்போம் இல்லையேன் இதோட‌ முடித்து கொள்ளுவோம்😜🙈.............

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நாளை விடுவிக்கப்படலாம் என செய்திகள் சொல்கின்றன. மருந்துகள், எரிபொருட் கள், உணவு என்பன காசாவுக்குள் வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

நாளை விடுவிக்கப்படலாம் என செய்திகள் சொல்கின்றன. மருந்துகள், எரிபொருட் கள், உணவு என்பன காசாவுக்குள் வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போரால் க‌டும்  காய‌த்தில் உள்ள‌ ம‌க்க‌ளை காப்பாற்ற‌ இந்த போர் நிறுத்த‌ ஒப்ப‌ந்த‌ம் வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து . க‌ட்டார் நாட்டுக்கு ந‌ன்றி அவ‌ர்க‌ளின் முய‌ற்ச்சியால் ஏற்ப்ப‌ட்ட‌ போர் நிறுத்த‌ம் 🙏அதிக‌ உண‌வுக‌ள் ம‌ருந்துக‌ள் தான் காசாவுக்கு இப்போது தேவைப் ப‌டுது..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெண் பணியாளர் இஸ்ரேலின் தாக்குதலில் குடும்பத்துடன் பலி

Published By: RAJEEBAN     22 NOV, 2023 | 03:14 PM

image

உலக சுகாதார பணியகம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் தனது பெண் பணியாளர் டிமா அப்துல்இலத்தீவ் முகமட் அல்ஹாஜ்; கொல்லப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.

காசா நகரிலிருந்து இடம்பெயர்ந்து காசாவின் தென்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தவேளை இடம்பெற்ற குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளார் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குண்டுவீச்சின் காரணமாக டிமாவும் கணவரும் ஆறுமாத குழந்தையும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

dima.jpg

ஓக்டோபர் ஏழாம் திகதி முதல் ஐநாவும் மனிதாபிமான சமூகமும் பலரை இழந்துள்ளன இன்று எல்லைகள் அற்ற வைத்தியர்கள அமைப்பு இரண்டு மருத்துவர்களை இழந்துள்ளது  பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு 108 பேரை இழந்துள்ளது இவர்கள் வெறுமனே பணியாளர்கள் இல்லை ஏனையவர்களின் சிறந்த வாழ்க்கைக்காக பணியாற்றியவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

டிமாவின் மரணம் அர்த்தமற்ற இந்த யுத்தத்திற்கான மற்றுமொரு உதாரணம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் வெளியேற்றப்படும்போதும் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  உலக சுகாதார ஸ்தாபனம் தங்கள் கரங்களில் அதிகாரங்களை வைத்துள்ளவர்களை இந்த மோதலை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள் கேட்டுக்கொள்கின்றோம்எனவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169974

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Cruso said:

பயங்கரவாதிகள் எல்லோரும் அழிக்கப்பட வேண்டியவர்களே. 

ஹமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்த குழந்தைகள் , தாய்மார்கள் ,வயதான பெண்கள் உட்பட 240 பேரில் 50 பேரை விடுதலை செய்வர்களாம். பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீன பயங்கரவாதிகள் விடுதலை செய்யபட வேண்டுமாம்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டியவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஹமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்த குழந்தைகள் , தாய்மார்கள் ,வயதான பெண்கள் உட்பட 240 பேரில் 50 பேரை விடுதலை செய்வர்களாம். பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீன பயங்கரவாதிகள் விடுதலை செய்யபட வேண்டுமாம்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டியவர்களே.

50 பணயக்கைதிகளுடன் நிறைய நிபந்தனைகளும் இருக்குது. அப்படி எல்லாம் கணக்கு பார்த்தால் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கு ஏறக்குறைய 10 பலஸ்தீன கைதிகள்  பரிமாற்றம் போல வரும். அதேபோல யுத்தத்தில் இறப்புக்களும் அதே கணக்கில் வரும்.

எப்படி இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பையன்26 said:

ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு அல்ல‌து க‌ட‌ந்து விட்டு செல்ல முடியாது என்ற‌ ப‌டியால் தான் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ழிக‌ளில் போராடுகின‌ம் ஜ‌ மீன் அகிம்சை வ‌ழியில்.................

நான் உங்க‌ளை பார்த்து எத்த‌னையோ கேள்விக‌ள் கேட்டு விட்டேன் நீங்க‌ள் ஒன்றுக்கும் ஒழுங்காய் ப‌தில் அளித்த‌ மாதிரி தெரிய‌ வில்லை..............ஒரு இன‌த்தின் விடுத‌லைக்காக‌ போராடும் ஹ‌மாஸ் போராளிக‌ளை தீவிர‌வாதி என்று எத‌ன் அடிப்ப‌டையில் சொல்லுறீங்க‌ள்.............இதுக்கு நீங்க‌ள் விள‌க்க‌ம் த‌ந்தால் தொட‌ர்ந்து விவாதிப்போம் இல்லையேன் இதோட‌ முடித்து கொள்ளுவோம்😜🙈.............

நீங்கள் உங்கள் ஈழ கனவில் இருங்கள். ஒவ்வொருவரும் கனவு காண வேண்டுமென்று அப்த்துல் கலாம் கூறிய கருத்தில் நீங்கள் உறுதியாக இருப்பதுபோல தெரிகின்றது. அதை நான் தடுக்கவில்லை. 

நான் முன்பே கூறிவிடடேன் கேள்விகளுக்குத்தான் பதில் எழுதலாம் என்று. எழுதியும் இருக்கிறேன். நான் ஒரு நாளும் ஹமாஸ் தீவிரவாதிகள் என்று எழுதியது இல்லை. அவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதன் வித்தியாசம் உங்களுக்கு புரிந்தால் உங்களுக்கான விடையும் அங்கு உண்டு.

எனது கருத்துக்கு பதில் கருது நீங்கள் எழுதுவதோ இல்லையோ என்று நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். நிறைய பேர் எழுதி களைத்து இங்கிருந்தே போய் விடடார்கள். 

அப்த்துல் கலாம் சொன்ன‌தெல்லாம் உண்மை தான் மற்று க‌ருத்து இல்லை............ஜ‌யா இதை சொல்லி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ 

என்ன‌ ம‌ச்சான் நான் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் அளிக்க‌ முடியாம‌ உங்க‌ளுக்கு அதிக‌மாய் வேர்க்குது போல‌............ ச‌ரி நான் கேள்விக‌ளை கேட்டு உங்க‌ளை சோக‌த்தில் ஆழ்த்த‌ விரும்ப‌ல‌ உங்க‌ள் ப‌ணிய‌ தொட‌ருங்க‌ள் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

 பணய கைதிகள் விடுதலை  நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது என கட்டார் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பத்து பணய கைதிகள் விடுதலைக்கும் மேலதிக ஒரு நாள் போர் நிறுத்தம் தரப்படும் என நத்தனியாகு அறிவித்துள்ளார்.
இது வரை இஸ்ரேலால்  கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 13000 லும் அதிகமாகும்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.