Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, colomban said:

பலஸ்தீனியர்களுடன் நொருங்கி பழகியவர்கள் என்னும் அனுபவத்தில் சொல்கின்றேன். இவர்கள் சக மனிதர்களை, விசேடமாக எம்போன்ற ஆசியர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கஷ்டம். 

பலஸ்தீனாகள் பற்றிய உண்மையை இங்கே நீங்கள் சொன்னது நல்லது. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த தமிழர்கள் தங்களது பலஸ்தீனாகள் பற்றிய மோசமான அனுபவங்களை  பற்றி சொன்னதாக நானும் அறிந்திருக்கிறேன்.

[உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு.
ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது.
இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள்.] கோஷான் சே
இவர்களோடு இஸ்ரேலியர்களும் இவர்களும் ஒன்று தான் என்று சொல்வது சரியல்ல.

 

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்லாமியருக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் யூதர்தான் மூதாதை. ஆனால் யூதருக்கு லெமூரியக் கண்டத்தின் தமிழர்தான் மூதாதை!!!

செப்டம்பர் 22, 2023. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு வரைபடத்தை எடுத்து அவையோரிடம் காட்டி, இனி இதுதான் ‘புதிய மத்திய கிழக்குப் பிரதேசம்’ (The New Middle East) என்று கூறினார். பலரும் அந்த வரைபடத்தை உற்று நோக்கினார்கள். அதில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இல்லாமல் செய்யப்பட்டிருந்தது. அந்த வரைபடத்தை மிகுந்த இறுமாப்போடு, தான் செய்து கொண்டிருப்பது முற்றிலும் ஒரு சட்ட விரோத காரியம் என்பதை உணர்ந்தே வெளியிட்டவர் வேறு யாருமல்ல, இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நேதன்யாகு.

56 சதவீதமும் 78 சதவீதமும்

1947இல் யூத மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு பாலஸ்தீனத்தின் 56 சத வீத நிலப்பகுதியை பிரித்து அவர்களை குடியேற்றம் செய்ய வைத்து, இஸ்ரேல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் பாலஸ்தீனத்தை பிரித்து சரிபாதிக்கும் அதிகமான நிலப்பகுதியை வேறொரு நாடாக மாற்றுவதை அன்றைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை. எனினும் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி விட்டபின்னர் 1950ல்தான் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது என்பது தனி வரலாறு.  உருவானது முதலே இஸ்ரேலின் ஆட்சியாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக, பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கொண்டவர்களாக செயல்பட்டார்கள். 1947-48இல் அதிபயங்கரமான தாக்குதல்  சம்பவங்களை இஸ்ரேல் அரங்கேற்றியது. பாலஸ் தீனத்தின் ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்தது. 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, கிராமங்களையும், நகரங்களையும் இழந்து அகதிகளாக நின்றார்கள். இதையொட்டி நடந்த மோதல்களில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய ராணுவத்தினர் மற்றும் யூத இனவெறி கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 56சதவீத நிலப்பகுதிக்கு பதிலாக இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்தின் 78 சத வீத நிலப்பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. இந்த பாலஸ்தீனப் பேரழிவின் 75ஆம் ஆண்டு, சமீபத்தில் 2023 மே மாதம் நினைவு கூரப்பட்டது. 

அன்று துவங்கிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு கடந்த 75 ஆண்டுகளாக - உலக நாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றிய போதிலும்- அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொடூரமான முறையில் இப்போது வரை நீடிக்கிறது.  1947-48 இல் நடந்த இஸ்ரேலின் மிகப் பெரும் இனஅழிப்பு நடவடிக்கையில் வாழ்விடங்களை இழந்த பாலஸ்தீனர்கள் மேற்குகரையிலும் காசா திட்டுப் பகுதியிலுமாக குடியேறினர். ஏராளமானோர் லெபனான், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அன்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனை படிப்படியாக ஆக்கிரமித்து, மேற்குகரையில் ஒரு சிறிய பகுதி மற்றும் காசா நகரம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர அனைத்து பகுதிகளையும் தன்வசமாக்கிவிட்டது. தற்போது வெறும் ஏழு சதுர கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியாக உள்ளது. 

‘அகண்ட இஸ்ரேல்’

இந்தப் பகுதியையும் அழித்து, இங்குள்ள பாலஸ்தீனர்களை முற்றாக ஒழித்து, வேறு நாடுகளுக்கு விரட்டி, நாடற்றவர்களாக ஆக்குவதுதான் இஸ்ரேலின் தற்போதைய திட்டம். இதைத்தான் பெஞ்சமின் நேதன்யாகு ஐ.நா. பொதுச் சபையில் பகிரங்கமாக முன்வைத்தார். அவர்  வெளியிட்ட வரைபடத்தில் சிரியா மற்றும் லெபனானின் சில பகுதிகளை யும் உள்ளடக்கி ‘அகண்ட இஸ்ரேல்’ (Greater Israel) என்று பெயரும் வைத்து விட்டார். இவருக்கு முன்பே இந்தாண்டு துவக்கத்தில் இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச், பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய மூன்று நாடுகளையும் அழித்து, ஒரு வரைபடத்தை வெளியிட்டார். இவையனைத்தும் உள்ளடக்கியதுதான் நாங்கள் எதிர்நோக்கும் அகண்ட இஸ்ரேல் என்று அறிவிக்கவும் செய்தார். ஹமாஸ் இயக்கத்தினர் அதிரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதன் பின்னணி இதுதான்.  பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு முன்பு மேற்கு கரை மற்றும் காசா இரண்டுக்குமான தலைமையிடமாக மேற்குகரையில் உள்ள ரமல்லாவே இருந்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)இந்த ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களை உணர்வூட்டி, இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் தலைமையில் இந்த எழுச்சி நீடித்து வந்தது. ஏராளமான பேச்சுவார்த்தைகள், அமைதி முயற்சிகள், இஸ்ரேலின் மீறல்கள், பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள், மேலும் மேலும் ஆக்கிரமிப்பு என வரலாறு நெடுகிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் களத்தில் நின்று சந்தித்தது. ஆனால் சுதந்திர பாலஸ்தீனத்துக்கான தீர்வு கிடைக்கவில்லை. இஸ்ரேலின் கொடிய அடக்குமுறைகள் தீரவில்லை. 

ஹமாஸ் இயக்கத்தின்  ஆயுதப் போராட்டம்

இந்த பின்னணியில், ரமல்லாவை தலையிட மாகக் கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் தலைமையிலான நிர்வாகத்தை காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. யாசர் அராபத்தும் மறைந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டமே தீர்வு என்ற முடிவு டன் ஹமாஸ் இயக்கம் மக்களை அணிதிரட்ட துவங்கியது. காசா பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி  பெற்ற ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத வழி போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டது.  ஏற்கெனவே கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டிருந்த இஸ்ரேல், ஹமாஸ் தலைமையிலான காசா பகுதியை மேலும் மேலும் முற்றுகையிட்டு, குண்டுமழை வீசி சல்லடையாக துளைத்தது. காசாவில் 2008க்கு பிறகு இது வரை சுமார் 1.5 லட்சம் பாலஸ்தீன மக்களின் உயிரைப் பறித்துள்ளது இஸ்ரேலிய ராணுவம். இவர்களில் 33ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். தற்சமயம் 20 லட்சத் திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் காசா, உலகிலேயே மிக மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்ட, எதிர்காலம் முற்றிலும் சூனியமாக்கப்பட்ட நகரம். 

ஐ.நா.சபையின் தோல்வி

75 ஆண்டு கால வரலாற்றில் பாலஸ்தீனத்திற்கு உரிய நியாயத்தை உறுதி செய்வதில், ஐக்கிய நாடுகள் சபை அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரித்ததில்லை. மாறாக, இஸ்ரேலை ஏவலாளியாக பயன்படுத்தி வளைகுடா பிரதேசத்தில் நிரந்தரமான பதற்றத்தை நிலவச் செய்வதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.  இத்தகைய பின்னணியில்தான், இஸ்ரேலில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அதிதீவிர வலதுசாரியான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு, பாலஸ்தீனத்தையே முற்றாக அழிப்பது என்ற நோக்கத்துடன் மேற்கொண்ட நகர்வுகள், ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களின் இயக்கங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்பதே பொருத்தமானது என்று, மிகுந்த நுட்பத்துடன் திட்டமிட்டு, இஸ்ரேலின் வலுவான உளவு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி, வலுவான தாக்குதலை நடத்தியுள்ளது ஹமாஸ் இயக்கம்.  இதற்கு இஸ்ரேல் தரப்பில் எதிர்வினை கடுமையாக இருக்கும் என்பது தெரிந்ததே. கடந்த இரண்டு நாட்களாக ‘போர்’ அறிவித்து காசாவை இன்னும் கடுமையாக தாக்கி வருகிறது இஸ்ரேல். 

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இத்தனை ஆண்டுகளாக தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போதேனும் பாலஸ்தீன மக்களின் தாய்நாட்டிற் கான சட்டப்பூர்வமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்; கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை  உருவாக்குவது என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக அமலாக்க வேண்டும்; பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் குடி யிருப்புகளும் ராணுவமும் அகற்றப்பட வேண்டும். இதுதான் தீர்வு.  ஆனால் இந்தத் தீர்வை எட்டுவதற்கு ஆயுத மோதலோ, உயிர் பறிக்கும் கொடிய போரோ வழி அல்ல. இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அலட்சியம் செய்து - இஸ்ரேலை முற்றாக தனிமைப்படுத்தி, அதன் மூலம் அரசியல் தீர்வுக்கு வரச் செய்ய வேண்டும். அத்த கைய தீர்வை நோக்கி உலகை உந்தித் தள்ளுவதில் இந்திய அரசுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

 

https://theekkathir.in/News/articles/உலகம்/greater-israel-and-palestinian-palestine

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

ஆபிரகாம் என்ற பாத்திரம் பல தெய்வங்களை வழி பட்ட ஒரு காலத்தில் பிறந்து வந்தவர் என்றாலும் ஏக கடவுள் (monotheism) என்ற நிலை நோக்கி அவர் காலத்தில் நகர்ந்த போது தான் யூத மதத்தின் ஆரம்ப வடிவம் உருவானது.

இதைத் தானே இஸ்லாமும் சொல்கி

வெகு அருமையாக சிலரை தவிர, 3 மதங்களின் தோற்றமும் ஆபிரகாம். இவை 3ம் அப்ரஹாமிக் மதங்கள் என்றே அழைக்கப்படுகின்றன 

ஏன் யூதம் மட்டும் தான் ஆபிராம் இல் இருந்து தோன்றியதாக, அதனால் ஆபிரகாம் யூதர் எனும் முடிவு?

இஸ்லாம் சொல்லுவது பொய் என்ற எடுகோளின் அடிப்படையில். 

ஆகக்குறைந்தது Arabs ஆபிரகாமின் எதாவது ஒரு மகனின் வழித்தோன்றல்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், யூதே இனத்துக்கு உள்ள நவீன இஸ்ரேல் அதே தொன்மை உரிமை, Arab இனமான நவீன பலஸ்தீனத்துக்கு உண்டு, பலஸ்தீனியர்களுக்கு எந்த மதமும் இல்லாவிட்டாலும் என்பதை எதிர்ப்பீர்களோ மறுப்பீர்களோ தெரியாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை..

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பெருந்தொகையான பண உதவிகள் எல்லாம் பாலஸ்த்தீனர்கள் ஊழல் மோசடிகளால் விழுங்கிவிடுகின்றனர்.

 

8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..

உண்மை.

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

🤣 உங்களுக்கு இன்றுதான் யூதர்கள் 2ம் உலக யுத்தத்தின் பின் இஸ்ரேலுக்கு வந்தவர் அல்ல என்ற விடயமே தெரியவந்துள்ளது….இதற்குள் நீங்கள் வரலாறு, யூதருக்கு முஸ்லீம் அடைக்கலம் கொடுத்தார் என அடித்து விடுகிறீர்கள்.

நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், 2000 ஆண்டுகளாக ரோமர், பின் இஸ்லாமியர் பறித்த தன் சொந்த நிலத்தை மீள உருவாக்கும் முயற்சியே இஸ்ரேல் என்ற தேசம்.

2ம் உலக போரில், இஸ்ரேலை ஐரோப்பாவில் வளமான ஒரு பகுதியில் ஸ்தாபிக்க வாய்ப்பு இருந்தும், இல்ல என வெறும் பாலவனமாக கிடந்த இஸ்ரேலுக்கு போனார்கள் யூதர்கள்.

என்ன காரணம்? அங்கேதான் அவர்களின் இனமூலம் இருக்கிறது.

அங்கேதான் அவர்களின் வரலாறு இருக்கிறது.

அதுதான் அவர்களின் மண்.

அந்த மண் அவர்களினதுதான்.

யூத தேசிய இனத்தின் மண் மீட்பு போரின் வெற்றியும், தொடர்ச்சியுமே இன்றைய இஸ்ரேல்.

 

நன்றி உங்கள் தகவல்களுக்கு....👍 
பல தெரியாத விடயங்களை அள்ளி வழங்குகின்றீர்கள். தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்.🙌 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, குமாரசாமி said:

நன்றி உங்கள் தகவல்களுக்கு....👍 
பல தெரியாத விடயங்களை அள்ளி வழங்குகின்றீர்கள். தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்.🙌 

இதென்ன பிரமாதம்….இன்னும் ஸ்பெசல் உருட்டு எல்லாம் கைவசம் வைத்திருக்கிறேன் 🤣

இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Kadancha said:

ஏன் யூதம் மட்டும் தான் ஆபிராம் இல் இருந்து தோன்றியதாக, அதனால் ஆபிரகாம் யூதர் எனும் முடிவு?

இதை விளங்க, நீங்கள் முதலில் மதங்கள் உருவாகிய டைம்லைனையும், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குரான் ஆகியவற்றுக்கிடையான வித்தியாசத்தையும் விளங்கி கொள்ள வேண்டும்.

அதற்கு உங்களுக்கும் நேரம் இல்லை. எனக்கும் இல்லை.

ஆகவே ஒரு சின்ன நன்கு தெரிந்த உதாரணம் மூலம் முயற்சிக்கிறேன்.

1. பெரியார் திராவிடர் கழகத்தை ஸ்தாபித்தார்.

2. அண்ணா திமுகவை திகவில் இருந்து சில வேறுபாடுகளுடன் ஸ்தாபித்தார். ஆனால் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார்.

3. எம் ஜி ஆர் அதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார்.

4. வைகோ மதிமுகவை ஸ்தாபித்தார். அவரும் பெரியார்தான் எமது தலைவர். திராவிடம்தான் எமது கொள்கை என்றார். 

இப்போ பெரியார் தி.கவா? திமுகவா? அதிமுகவா? மதிமுகவா?

பெரியார் திக மட்டும்தான்.

அப்படித்தான் ஆபிரஹாமும். அவர் யூதர் மட்டுமே. அவரின் வழியை ஒட்டி பின்பு சில மாற்றங்களோடு வந்த மதங்களே கிறிஸ்தவமும் இஸ்லாமும்.

ஆபிரஹாமுக்கும் முன்பே நான் இருந்தேன் before Abraham was I am என யேசு சொல்கிறார் என்கிறது வேதாகமம்.

அதே போல் ஆபிரஹாம், மோசஸ், யேசு அனைவரையும் நபிகளாக ஏற்கிறது இஸ்லாம். அது மட்டும் அல்ல, ஆபிரகாமுக்கும் முன்பே இஸ்லாம் இருந்தது, அது மொகமட்டுக்கு மீள் உரைக்கப்பட்டது என்பதே அவர்களின் நம்பிக்கை. அதாவது இஸ்லாம் மொகட்டுக்கும் முந்தியதாம்.

ஆனால் இவை எல்லாம் தரவுகள் சார் விடயங்கள் அல்ல. பெரும்பாலானவை நம்பிக்கை அடிப்படையிலானவை.

ஆனால் யூத நாடு அங்கே இருந்தது என்பது மறுக்கவியலாத உண்மை. Temple Mount இல்  தேவாலயம், மசூதியை வர பல நூற்றாண்டுகள் முன்பே அங்கு யூத கோவில் இருந்ததும் உண்மை.

அங்கே Semitic tribes பல வாழ்ந்துள்ளன. அதில் இன்நாளைய அரபிகளின் மூதாதையரும் அடங்குவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

ஆகக்குறைந்தது Arabs ஆபிரகாமின் எதாவது ஒரு மகனின் வழித்தோன்றல்கள் என்பதை ஏற்றுக்கொண்டால், யூதே இனத்துக்கு உள்ள நவீன இஸ்ரேல் அதே தொன்மை உரிமை, Arab இனமான நவீன பலஸ்தீனத்துக்கு உண்டு, பலஸ்தீனியர்களுக்கு எந்த மதமும் இல்லாவிட்டாலும் என்பதை எதிர்ப்பீர்களோ மறுப்பீர்களோ தெரியாது

இது ஒரு நம்பிக்கை என முன்பே கூறியுள்ளேன்.

சுருக்கமாக இந்த நம்பிக்கை யாதெனில் ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் இஷ்மாயில் பிறந்த பின் எதிர்பாராத வயதில் ஆபிரகாமுக்கும் மனைவி சாராவுக்கும் மகனாக ஐசாக் பிறக்கிறார்.

அதன் பின் சாரா ஈஷ்மாயில்லையும் அவர் தாயையும் ஆபிரகாமின் தேசத்தில் இருந்து விலக்கி வைக்க கோரி, ஆபிரகாம் சஞ்சலபட, கடவுள் ஆபிரகாமை அவ்வாறே செய்யும் படி கூறி, இஷ்மாயிலும் ஆபிரகாமின் ஒரு மகன் என்பதால் அவர் ஒரு பெரும் இனக்குழிவின் தலைவர் ஆவார் எனவும். அந்த இனகுழு செல்வம் படைத்து இருக்கும் எனவும் ஆபிரகாமுக்கு கடவுள் வாக்களிக்கிறார்.

இவ்வாறு இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட இஸ்மாயிலின் வழி வந்தவர்கள்களே அரபு மக்கள். இவர்களும் பல உட்பிரிவாக இருந்தனர். அதில் ஒரு பிரிவான குரோசி யில் பிறந்தவரே மொகமட்.

இது மகாபாரதம், இராமாயணம் போல ஒரு இதிகாசம். இதை வைத்து இஸ்ரேலில் அரபு மக்களுக்கு ஆட்சி உரிமை உள்ளது என வாதாட முடியாது.

ஆனால் அப்படியே வாதாடினாலும் கூட - இஸ்மாயிலின் வழி வந்த அரபுகள் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டோர். எனவே அவர்களுக்கு அங்கே ஆட்சி உரிமை இல்லை.

அனால் இந்த கதைகள் எதுவும் தேவையில்லை.

2023 இல் அங்கே யூதரும், அரபிகளும் உள்ளார்கள். ஆளை ஆள் அழிக்க முனையாத இரண்டு நாடுகளை உருவாக்குவதே செய்ய வேண்டியது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது மட்டுமல்ல அவர்களில் பலர் இஸ்ரேல் அரசியலில் இருக்கிறார்கள்.. பாராளுமன்றில் இருக்கிறார்கள்.. நம்மவர் ஜரோப்பா அமெரிக்காவில் வாழ்வதுபோல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை.. இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..

 

வெஸ்ட் பாங்க், காசா பாலஸ்தீனியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளதா? இரண்டும் திறந்தவெளி சிறைச்சாலைகள் என்பது உங்களுக்கு தெரியாதா? சர்வதேச விதிமுறைகளை உதாசீனம் செய்து இஸ்ரேல் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

பலஸ்தீனாகள் பற்றிய உண்மையை இங்கே நீங்கள் சொன்னது நல்லது. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த தமிழர்கள் தங்களது பலஸ்தீனாகள் பற்றிய மோசமான அனுபவங்களை  பற்றி சொன்னதாக நானும் அறிந்திருக்கிறேன்.

[உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு.
ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது.
இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள்.] கோஷான் சே
இவர்களோடு இஸ்ரேலியர்களும் இவர்களும் ஒன்று தான் என்று சொல்வது சரியல்ல.

 

 

கொழும்பான், விளங்கநினைப்பவன் (நீங்கள்) பக்குவப்பட்ட, நிதானமாக சீர்தூக்கி ஆராய்ந்து கருத்து எழுதும் கருத்தாளர்கள் என நினைத்தேன். 

உங்கள் வாதத்தின்படி பார்த்தால் தமிழர்களும் தனிநாடு பெற்று வாழ்வதற்கு அருகதை அற்றவர்கள். 

எப்படிப்பட்ட மோசடி பேர்வழி தமிழர்கள் எல்லாம் உள்ளார்கள். பாலஸ்தீனர்களின் குணாம்சங்களை விபரித்து அவர்கள் உரிமைகளை மட்டு கட்டும் தமிழர்கள் நகைப்புக்கு உரியவர்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/10/2023 at 11:49, nedukkalapoovan said:

இதே இஸ்ரேல்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆரம்பம் முதல் கடைசி வரை.. சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் இராணுவ இயந்திரத்திரத்திற்கும் பலவேறு வழிகளில் உதவி வந்ததோடு.. முக்கிய டோரா... பீரங்கிப் படகுகள்.. கிபீர் விமானங்களை சொறீலங்கா.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு பயன்படுத்த தொடர்ந்து வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளில்லா உளவு விமானங்களையும் (வண்டு).. இஸ்ரேலே சொறீலங்காவுக்கு வழங்கி இருந்தது.

கமாஸின் பயங்கரவாதத்தை விட இஸ்ரேலின் பயங்கரவாதம்.. எம்மினத்தை அதிகம் அழித்திருக்கிறது. எம்மினம் இன்று அடிமைப்பட்டுக்கிடக்க அதுவும் ஒரு காரணம். இஸ்ரேலின் பயங்கரவாதம் கமாஸினதை விட மிக மிக மிக மிக மோசமானது. அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவானது.

 

அடி வாங்கி உரிமைக்காக போராடிய அடிமைகள் கூட்டம் ஒன்று அடி வாங்கி உரிமைக்காக போராடும் இன்னோர் அடிமைகள் கூட்டத்தை பார்த்து எள்ளி நகையாடுகின்றது. 

மொசாட் இலங்கையில் குறிப்பாக தமிழருக்கு என்ன அநியாயங்கள் செய்தது எப்போது தொடக்கம் செய்கின்றது என எண்ணி பாருங்கள். 

சில மேதாவிகள் யூத இனத்தவராகவே தம்மை எண்ணி இங்கு கருத்துக்கள் பதிகின்றார்கள். யூதர்களின் உரிமை பற்றி பேசுவதற்கு ஆதாம் ஏவாள் காலம் வரை செல்வார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை எனும் நாட்டில் முஸ்லீம்கள் ஒரு தனி இனம். அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. 

இலங்கையில் முஸ்லீம்கள் இலங்கை தமிழர்களின் போராட்டத்திற்கு முரணாக செயற்பட்டனர் எனவே பாலஸ்தீனியத்தில் உள்ளவர்களும் முஸ்லீம்கள் அவர்களுக்கு கொடுமைகள் நிகழ வேண்டும், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் அடிவாங்கி சாகவேண்டும், அவர்களுக்கு உரிமைகள் கிடைக்கக்கூடாது என எண்ணுவது சிறுபிள்ளைத்தனம் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் பங்கு இலங்கையில்:

Israeli complicity in Sri Lanka war crimes must be investigated

During the civil war, Israel sold weapons and backed the Sri Lankan army while it was committing grave atrocities.

Human rights lawyer

Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo January 2, 2009. Sri Lankan troops fought their way into the Tamil Tigers' de facto capital of Kilinochchi and the entire town will soon be under government control, an official said on Friday, in what would be a major blow for the rebels. REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA) Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo on January 2, 2009 [Buddhika Weerasinghe/Reuters]

It has been more than 14 years since the civil war in Sri Lanka came to an end. Although a semblance of peace has returned to the parts of the country devastated by the 29-year conflict, its victims are yet to see justice delivered.

Over the years, the United Nations and human rights organisations have diligently documented war crimes committed during the war. Their focus has been mainly on atrocities carried out by government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). But there has been almost no attention paid to international backers of the Sri Lankan government who may have been complicit in the war crimes it committed against civilians.

Israel is one of them. In the 2000s, Sri Lanka became one of Israel’s most important clients in Asia, undertaking significant procurement of Israeli military technology. Israelis also trained Sri Lankan troops involved in the war.

Evidence that I and activists from Israeli human rights organisations Combatant for Peace, Yesh Gvul and Torat Tzedek have gathered reveals that Israeli weapons and military equipment were likely used in atrocities committed in Sri Lanka. We want Israeli complicity in these crimes exposed and prosecuted.

Israeli drones in Sri Lankan skies

In the mid-1970s, Israel bought primitive surveillance unmanned aerial vehicles (UAVs) that the United States had used a decade earlier in the Vietnam War and started developing them. In the 1980s, the Israeli army made groundbreaking use of this uncrewed aircraft during the war in Lebanon and later developed offensive prototypes, which were deployed in its assaults on the Gaza Strip.

These UAVs – repeatedly tested on civilians and military targets in the Middle East – have become one of Israel’s most sought-after products around the world. They were also among key military purchases the Sri Lankan government made from Israel in the 1990s and 2000s as the war against LTTE was raging.

In the Sri Lankan army’s own words the Israeli-made UAVs “played a critical role in the war“. Senior Sri Lankan government and security forces officials have repeatedly said in interviews and statements that before attacks, they would watch videos shot by UAVs to verify that no civilians were found in the area, in accordance with their policy of “zero harm to civilians”.

But the UN has uncovered evidence that there was, in fact, severe severe harm done to civilians. According to its estimates, in the last months of the war alone, between 40,000 and 75,000 civilians were killed, most of them due to deliberate fire by government security forces.

A 2015 UN report concluded that given the use of UAVs, “the loss of civilian life and damage to civilian property […] may have been anticipated, known and accepted by Government and military leaders in breach of international humanitarian law”. In other words, Israeli UAVs did not prevent civilian deaths, they facilitated them.

Other Israeli weapons also played a significant role in war crimes and crimes against humanity committed in Sri Lanka.

Sri Lanka bought Israeli-made Kfir combat aircraft, Dvora and Shaldag battleships, artillery systems and Gabriel sea-to-sea missiles. The Israeli surveillance UAVs were used to give direction to these heavy weapons, which deliberately bombed civilians and humanitarian sites and helped win the war at a heavy human cost.

One of the most famous incidents in which Kfir planes were used occurred on August 14, 2006. The Sri Lankan Air Force used the aircraft to bomb a girls’ orphanage in the village of Senchcholai, killing some 60 children and injuring dozens.

Other countries also sold weapons and training to the murderous government in Sri Lanka. However, according to Israeli analyst Shlomi Yass, “Israel stands out in regards to the scope of weapons provided, reaching hundreds of millions of USD.”

This has also been confirmed by Donald Perera, Sri Lanka’s former chief of staff who was appointed as an ambassador to Israel after the war.

In an interview with the Israeli Ynet News website, on July 21, 2010, he said: “For years Israel has aided our war on terror through the exchange of information and the sale of military technology and equipment…We have received billions of dollars in aid over the past few years.”

Seeking justice in Israel and Sri Lanka

Despite accumulated evidence and multiple reports from international bodies and human rights organisations on atrocities committed during the war, those directly responsible for them have not been prosecuted, nor have those who assisted them indirectly from Israel and other countries.

The UN failed to protect civilians during the war, which was reflected in its own internal report leaked to the media in 2011. After the war, the UN failed the civilian victims again, never providing them with recourse to justice for the war crimes and crimes against humanity committed against them.

Western countries, which are normally big on defending human rights rhetorically, have preferred to continue “business as usual” with the Sri Lankan government in pursuit of their narrow economic, military and political interests.

This has sent a signal to dictators and repressive regimes around the world that attacks on civilians can be committed with absolute immunity. This is precisely why neither the Sri Lankan officials accused of war crimes, nor their foreign accomplices should be let off the hook so easily.

In recent years, we – Israeli human rights activists that also work to stop the State of Israel’s apartheid policies, crimes against humanity and war crimes against the Palestinian people – have gathered information about Israeli involvement in the Sri Lankan civil war between February 2002 and May 2009.

There is more than enough evidence to justify opening a criminal investigation into the involvement of Israeli companies, officials and private individuals in the crimes committed, under both international and Israeli penal law. We have decided to submit a demand to Israel’s attorney general to start a criminal investigation against the Israelis involved in the crimes in Sri Lanka and we will do the same in international forums.

The chance of legal action proceeding is slim but we will not give up. Perhaps if the world had taken the crimes in Sri Lanka seriously, we would not have seen crimes being committed by Bashar al-Assad in Syria, Salva Kiir in South Sudan, Min Aung Hlaing in Myanmar and Vladimir Putin in Ukraine. We would not have seen Israel continue to commit crimes in Gaza and the West Bank either.

The globalisation of methods and technologies of repression and violence must be met with the globalisation of accountability.

The views expressed in this article are the author’s own and do not necessarily reflect Al Jazeera’s editorial stance.


  • Eitay Mack
    Human rights lawyer
    Eitay Mack is a human rights lawyer and activist.

https://www.aljazeera.com/amp/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நிலையில் சீனா தாய்வான் மோதல் ஏற்பட்டால் எப்படி இருக்கும்.

சீனாவுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

The Israeli-Sri Lankan Relationship

 

“At Israel’s inception, it faced diplomatic hostility from the Arab world, and many post-colonial countries—including India—refused to recognize it as an independent state. But Sri Lanka’s first PM, D.S. Senanayake, initiated the island nation’s cooperation with Israel, despite the disapproval of many Asian and African states. During the Senanayake era, the Sri Lankan Navy purchased its first gunship from Israel, the Gajabahu 1. In addition, Israeli technical advisors assisted in the digging of tube wells in the dry zone of northern Sri Lanka.”

 

https://besacenter.org/israel-sri-lanka-relationship/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, இணையவன் said:

மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா.

எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும்  போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.

மீண்டும்!! திரியை முழுவதுமாக வாசிக்காமல் வந்து பதில் எழுதுவதே உங்களுக்கு வேலையாகிவிட்டது. இதற்கான பதிலை பிரபாவுடனான கருத்தாடலில் எழுதிவிட்டேன். நன்னியின் சேவை போற்றுதற்குரியது என்பதில் மாற்று கருத்துமில்லை. இவ்வளவு தெரிந்த ஒருவர் ஒரு வஞ்சிக்கப்பட்ட இனத்திற்காக போராடும் ஒரு குழுவை இப்படி விமர்சிப்பதுதான் மனதை நெருடியது!

எழுதிவிட்டு, பதியுமுன் அதை சரிபார்க்க பழகவும். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்டகால யுத்தத்திற்கு தயார் - இஸ்ரேல் இராணுவம் ஒரு காகித புலி - பணயக்கைதிகளை பயன்படுத்தி சிறையில் உள்ள எங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்ய முயல்வோம் - ஹமாஸ்

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 11:30 AM
image
 

இஸ்ரேலுடன் நீண்ட யுத்தத்திற்கு தயார் என தெரிவித்துள்ள ஹமாஸ் தன்னுடன் பணயக்கைதிகளாக உள்ளவர்களை  பயன்படுத்தி இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் சிறையில் உள்ள தனது அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அசோசியேட்டட் பிரசிற்கு கருத்து தெரிவித்துள்ள பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே நீண்டகாலத்திற்கு பயன்படுத்தக்கூடிய அளவிற்கு எங்களிடம் ரொக்கட்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த யுத்ததிற்கும் எல்லா சூழ்நிலைகளைஎதிர்கொள்ளவும்  எங்களை நன்றாக தயார்படுத்தியுள்ளோம், நீண்ட கால யுத்தத்திற்கும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

hamaz2.jpg

இஸ்ரேலிய சிறையில் உள்ள அமெரிக்க சிறையில் உள்ள எங்கள் உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு தற்போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களை பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள முக்கிய தளபதிகள் சிலருக்கு மாத்திரம் இந்த தாக்குதல் குறித்து தெரிந்திருந்தது ஹமாசின் நெருங்கிய சகாக்களிற்கு கூட தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் ஈரானின் பாதுகாப்பு படையினர் தாக்குதலிற்கு உதவினார்கள்  என தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார்.

காசா மீது நீண்டகால யுத்தம் திணிக்கப்பட்டால் ஹமாசின் சகாக்களாக ஹெஸ்புல்லா, ஈரான் போன்றவர்கள் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்பது ஹமாசிற்கே ஆச்சரியமளித்துள்ளது என தெரிவித்துள்ள பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் உறுப்பினர் அலி பரேகே இஸ்ரேல் தாக்குதலை தடுக்கும் கட்டுப்படுத்தும் என எதிர்பார்த்தோம்; அவர்களின் பெரும் வீழ்ச்சி குறித்து நாங்களே பெரும் ஆச்சரியமடைந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறிய வெற்றியை பெற்று பணயக்கைதிகளை பிடிக்க திட்டமிட்டிருநதோம் இந்த இராணுவம் ஒரு காகிதப்புலி எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/166532

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'என் மனைவியையும் குழந்தைகளையும் ஹமாஸ் பிடித்துச் சென்றுவிட்டனர்’

இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ்

பட மூலாதாரம்,YONI ASHER

படக்குறிப்பு,

யோனி ஆஷரின் மனைவி டோரன் (மத்தி) மற்றும் மகள்கள் அவிவ் (இடது) மற்றும் ராஸ் (வலது) ஆகியோர் ஒரு டிரக்கில் ஏற்றப்படும் வீடியோ வெளியானது

27 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) தாக்குதல் நடத்தி சுமார் 100 மக்களைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், அவர்களில் தங்கள் அன்புக்குரியவர்களும் இருக்கலாம் என்பதை அறிந்து குடும்பங்கள் பெரும் பீதி அடைந்திருக்கின்றனர்.

வெளிநாட்டு பிரஜைகள் உட்பட பல டஜன் மக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

அவர்களின் சில கதைகள் இங்கே.

 

‘அந்த வீடியோவில் என் குடும்பத்தினர் இருந்தனர்’

யோனி ஆஷர், தனது மனைவியின் கைபேசியை டிராக் செய்ததன் மூலம் அவரது குடும்பத்தினர் காஸாவில் இருப்பதைக் கண்டறிந்தார்.

ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது அவரது மனைவி டோரன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ராஸ் (5) மற்றும் அவிவ் (3) காசா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் தங்கியிருந்தனர்.

யோனி பிபிசியிடம் பேசுகையில், "சனிக்கிழமை, காலை 10:30 மணியளவில், நான் என் மனைவியுடன் கடைசியாகத் தொலைபேசியில் பேசினேன். ஹமாஸ் குழுவினர் வீட்டிற்குள் நுழைந்ததாக அவர் என்னிடம் கூறினார்,” என்றார்.

"அவர்கள் பாதுகாப்பான ஒரு அறையில் இருந்தனர். பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின், நான் அவரது மொபைல் ஃபோன் இருந்த இடத்தை டிராக் செய்தேன். அது காசாவிற்குள் இருந்தது," என்றார்.

அதே நாளின் பிற்பகுதியில் வெளியான ஒரு வீடியோவில், ஹமாஸ் குழுவினர் ஒரு டிரக்கில் ஆட்களை ஏற்றிச் செல்லும் காட்சிகளில், அவரது குடும்பத்தினரும் இருந்ததை அவர் அடையாளம் கண்டபோது, அவர் பயந்த விஷயம் உறுதிப்படுத்தப்பட்டது.

"அந்த வீடியோவில் என் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், எனது இரண்டு குழந்தைகளை நான் அடையாளம் கண்டேன்," என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அவர்கள் எந்த நிபந்தனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது,” என்றார்.

இப்போதைக்கு, யோனி செய்யக்கூடியது நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மட்டுமே. "நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். இராஜதந்திரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அல்லது ஏதாவது தொடர்பு இருப்பதாக நான் நம்ப விரும்புகிறேன். ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியாது, அதுதான் கஷ்டமான விஷயம்," என்கிறார்.

 
இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ்

பட மூலாதாரம்,IDO DAN

படக்குறிப்பு,

காணாமல் போன இடோவின் குடும்ப உறுப்பினர்களில் ஹடாஸின் இரு குழந்தைகளான எரேஸ் (இடது) மற்றும் சஹர் (வலது) ஆகியோர் அடங்குவர்

‘அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம்’

இடோ டான், சனிக்கிழமை நடந்த பயங்கரமான நிகழ்வுகளை தனது குடும்பத்தின் வாட்ஸப் குழுவில் நேரடியாக அறிந்துகொண்டார்.

"வாட்ஸப் குழுவில் அவள் ‘குட்பை’ மெசேஜ் அனுப்பினாள். அவள் ஒரு இதயத்தின் எமோஜியை அனுப்பினாள். 'ஐ லவ் யூ. நான் இதிலிருந்து தப்பிப் பிழைப்பேனா என்று தெரியவில்லை’ என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்," என்று இடோ கூறுகிறார். அந்த வாட்ஸப் குறுஞ்செய்திகளைத் திரும்பிப் பார்த்தபடி அழுகிறார்.

காசாவிற்கு அடுத்துள்ள ஒரு சிறு காலனியான ‘நிர் ஓஸ்’ அனும் பகுதியில் வசிக்கும் அவரது அத்தை மகள் ஹடாஸ், விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்தபடி, அங்கு நடப்பவற்றைத் தனது குடும்பத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

ராக்கெட் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததும் அவர் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். அதிகாலையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் அரபி மொழியில் சத்தம் போடுவது கேட்பதாகச் சொல்லியிருந்தார்.

‘இங்கே நடப்பவற்றைப் பார்த்தால் பயமாக இருக்கிறது,’ என்று அவர் குடும்ப வாட்ஸப் குழுவில் கூறினார். “அவர்கள் அனைவரையும் கொல்வதாக அவள் கூறினாள்,” என்று இடோ கூறுகிறார். "பின்னர் 09:00 மணிக்கு அவளது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடைய கைப்பேசியின் பேட்டரி தீர்ந்துவிட்டது," என்றார்.

அந்தத் தாக்குதலின்போது, தனது மறைவிடத்தில் ஒளிந்துகொண்டு ஹடாஸ் உயிர்தப்பினார். ஆனால், அன்றிரவு அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதை அறிந்தார். அவரது இரண்டு குழந்தைகள், அவரது முன்னாள் கணவர், அவரது சகோதரியின் மகள், மற்றும் அவரது 80 வயது தாயார்.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், ஹடாஸின் 12 வயது மகன் எரெஸ், துப்பாக்கி ஏந்தியவர்களால் காசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதுபோன்ற காட்சிகளைக் கொண்டிருந்தது.

டெல் அவிவ் அருகே வசிக்கும் இடோ, "அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம்,” என்கிறார். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருக்கிறார். "என் அத்தையின் மருந்துகள் தீர்ந்துவிட்டன. குழந்தைகள் எப்படிக் கழிவறைக்குச் செல்கிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது," என்கிறார்.

இடோ தனது குடும்பத்தினர் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளால் பெரிதாக உதவமுடியவில்லை. "நான் யாரையும் குறை கூறவில்லை, ஏனெனில் இது உண்மையில் ஒரு சிக்கலான சூழ்நிலை" என்கிறார் இடோ.

இடோ ஹமாஸுக்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறார்: "குழந்தைகளையும், வயதானவர்களையும் விடுவியுங்கள். இந்த மோதல் அவர்களுக்கானது அல்ல. போரில்கூட விதிகளும் நெறிமுறைகளும் உள்ளன." 

 
இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ்

பட மூலாதாரம்,NOAM SAGI

‘ஒரு திகில் படம் போல இருந்தது'

காசாவின் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள தனது 74 வயதான தனது தாயாரின் அடா சாகியின் வீட்டிற்கு முன்பாக இருந்து பாலத்தீனிய ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பத் தொடங்கியபோது தனது இதயம் நொறுங்கிப் போனதாகக் கூறினார் நோம் சாகி.

சனிக்கிழமை பிற்பகல், இஸ்ரேலிய ராணுவம் அடா சாகியின் வீட்டுக்குள் நுழைந்த போது ரத்தக் கறைகளைக் கண்டது. ஆனால் அந்த வயதான பெண் அங்கு இல்லை என்று அவர் கூறுகிறார்.

பிபிசி ரேடியோ 4-இடம் லண்டனில் வசிக்கும் சாகி பேசினார். கடத்தப்பட்டவர்களில் அரபு மொழி கற்பிக்கும் அவரது தாயும் ஒருவர் என்பது அவரது அனுமானம் என்றார்.

“74 வயதான என் தாயார் ஒரு பாதுகாப்பான அறைக்குள் சென்றார். இப்போது, அவர் அங்கு இல்லை," என்றார் அவர்.

"இறந்தவர்களின் பட்டியலில் அவர் இல்லை, காயமடைந்தவர்களின் பட்டியலிலும் இல்லை. அது ஒரு சிறிய சமூகம். அதிகபட்சம் 350 பேர் தான். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்கிறார் அவர்.

முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. சாகியின் கூற்றுப்படி, அவரது தாயார் எங்கிருக்கிறார் என்பது குறித்து முறையான அல்லது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.

"இது ஒரு திகில் படம் போல இருக்கிறது," என்கிறார் சாகி. மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் தனது தாயை நினத்துக் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார்.

தனது தாயை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையோடு இருக்கும் சாகி, அவரது 75-ஆவது பிறந்த நாளுக்காக அடுத்த வாரம் லண்டனில் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

 
இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ்
படக்குறிப்பு,

லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்

'இப்போது அங்கு எதுவும் மிச்சமில்லை'

லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்.

ஹமாஸ் குழுவினர் மக்களை பயமுறுத்துவதற்காக வீடுகளை எரித்ததாகவும் அவர் கூறுகிறார். “மக்கள் ஒரு பாதுகாப்பான அறையில் தஞ்சம் அடைய முயன்றனர்,” என்கிறார்.

"அந்த இடம் மொத்தமாக அழிந்து போயிருக்கிறது. எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார்.

அடா சாகியைப் போலவே, லிஃப்ஷிட்ஸின் தந்தையும் அரபு மொழி பேசுபவர். தனது ஓய்வு நேரத்தில், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்.

"அவர் மனிதநேயத்தை நம்பினார். எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதை நம்பினார்," என்கிறார்.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பிளவு இருப்பதை உறுதிப்படுத்த ‘நிறைய சக்திகள்’ முயற்சிப்பதாகவும், மற்றவரும் மனிதர்கள் தான் என்பதை இரு தரப்பினரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் லிஃப்ஷிட்ஸ் கூறுகிறார்.

 
இஸ்ரேல், பாலத்தீன், ஹமாஸ்

பட மூலாதாரம்,SHANI LOUK'S INSTAGRAM

படக்குறிப்பு,

ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத்திருவிழாவில் கலந்துகொண்டபோது சிறைபிடிக்கப்பட்டார்

‘வீடியோவில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருந்தார்’

ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹமாஸ் போராளிகள் அப்பகுதியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பயந்த மக்கள் பாலைவனத்தின் வழியாக ஓடினர்.

ஷானி சிறைபிடிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்த்ததாக அவரது தாயார் ரிக்கார்டா கூறுகிறார்.

"எங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டது. அதில் பாலத்தீனர்களுடன் ஒரு காரில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருப்பதையும், அந்தல் கார் காசா பகுதியில் பயணம் செய்வதையும் நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பலர், ஹமாஸ் போராளிகளால் தாக்கப்பட்ட காசா எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் பணிபுரியும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

தாய்லாந்தின் 11 குடிமக்களைக் காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckre3dykpmpo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. இஸ்ரேலுக்குள் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு - காசா-இஸ்ரேல் எல்லை மீள பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு.

2. காசாவில் கண்மூடித்தனமாக இஸ்ரேல் குண்டு வீசுகிறது. சில இடங்களில் அப்பட்டமாக குடியிருப்பு என தெரியும் கட்டிடங்கள் அப்படியே நொருக்கப்படுகிறன.

இவை நிச்சயம் போர்குற்றங்கள்தான். ஆனால் மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ வாய் திறாவா.

3. தண்ணீரை மூடி விட்டதாக வீடியோக்கள் வருகிறது.

4. எகிப்து தன் காசா எல்லையை இறுக மூடிவைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எப்படிப்பட்ட மோசடி பேர்வழி தமிழர்கள் எல்லாம் உள்ளார்கள்.

தமிழர்களில் மோசடி பேர்வழிகள் உள்ளார்கள் தான் 😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சில மேதாவிகள் யூத இனத்தவராகவே தம்மை எண்ணி இங்கு கருத்துக்கள் பதிகின்றார்கள். யூதர்களின் உரிமை பற்றி பேசுவதற்கு ஆதாம் ஏவாள் காலம் வரை செல்வார்கள். 

ஒரு நிலப்பரப்பில் ஒரு இனத்தின் தொன்மை பற்றிய உண்மையை எடுத்து சொல்ல அந்த இனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதை பற்றிய அறிவு இருந்தாலே போதுமானது.

நான் வக்காலத்து வாங்கித்தான் யூதர்கள் வாழவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை.

ஆனால் - ஈழத்தமிழர் மத்தியில் நெடுங்காலமாகவே யூதர்கள் இன்னொருவன் நிலத்தை அபகரித்து வாழ்கிறார்கள் என்ற பொய், மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பொய்யை - பொய் என்று சுட்டுவது மட்டுமே நான் செய்வது.

தவிர என்னிடம் இஸ்லாமிய விரோதம் துளியும் இல்லை. யூதரின் நில உரிமையை நான் எடுத்து சொல்வது எனது இஸ்லாமிய வெறுப்பாலும் அல்ல.

இலங்கை முஸ்லிம்கள் -  1948 இல் அவர்கள் எத்தனை வீதமாக இருந்தாலும், 2023 இல் அவர்கள் கிழக்கின் 1/3 மக்கள் - ஆகவே அவர்களுக்கு எமக்கு நிகரான நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகை கொடுக்க நாம் முன்வரவேண்டும் என யாழில் எழுதும் ஒரே கருத்தாளர் நான் என நினைக்கிறேன்.

இதே அணுகுமுறையைத்தான் நான் இஸ்ரேல்- பலஸ்தீன முரணிலும் எடுக்கிறேன்.

ஆபிரகாம் கால வரலாறையும் விடுங்கள்,

2000-1942 ஐயும் விடுங்கள்,

1942-2022 ஐ விட்டு விடுங்கள்.

2023 இல் அங்கே இரு இனக்குழுக்கள் வாழ்கிறன - ஆகவே சமனான இரு நாடுகளை உருவாக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

பிகு

காசாவில் நடப்பவை உங்களை பாதித்துள்ளமை புரிந்துகொள்ள கூடியதே….

ஆனால் அதற்காக நீங்கள் இலங்கையில் ஒரு அப்பாவி இஸ்லாமிய பெண்ணின் அபாயாவை வலுகட்டாயமாக காடையர்கள் நீக்கியதை ஆதரித்து வரவேற்ற ஆட்களிடம் எல்லாம் நீதி கேட்டு எழுதுவது - கோவம் உங்கள் கண்களை மறைத்து விட்டதோ என எண்ண வைக்கிறது.

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் - ஈரானின் ஆன்மீக தலைவர்

Published By: RAJEEBAN

10 OCT, 2023 | 02:22 PM
image
 

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என  ஆன்மீக தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானிற்கு தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.

எனினும் சியோனிச ஆட்சியாளர்களிற்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் என அவர் தெரிவித்தார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166555

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்: இஷ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன – இஸ்ரேல் இராணுவம்.

இஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 

காசா பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இஸ்ரேலியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

இதேநேரம் காசாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனியர்களுக்கு திறக்கப்பட்டிருந்த எகிப்து வழியான பாதை தற்போது மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1353197

 

##################    ####################   ##############

 

குறைந்தது 770 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

குறைந்தது 770 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 770 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மேலும் கடந்த சனிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலில் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறந்தவர்களில் 140 குழந்தைகள் மற்றும் 120 பெண்கள் அடங்குவதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1353294

 

##############   ################   ################

 

ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேல் இராணுவம்

தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு பணயக் கைதிகள் உயிரிழப்பார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை

பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

 

இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றுள்ளனர்.

இவ்வாறு பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை எவ்வித முன்னறிவிப்புகளும் இன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பாரிய தாக்குதலில் 1500 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள அதேநேரம் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஹமாஸுக்கு எதிராகப் போரிடுவதற்காக இஸ்ரேல் இராணுவத்திலிருந்து வெளியேறிய சுமார் 300,000 பேர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மொஸ்கோவிற்கு விஜயம் செய்வதற்கான முயற்சிகளை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1353158

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா எல்லையை மீள கைப்பற்றியுள்ளோம் - இஸ்ரேல் இராணுவம்

10 OCT, 2023 | 12:04 PM
image
 

காசாவில் உள்ள தனது எல்லைகளை மீள கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று  எல்லை ஊடாக ஊடுருவல் எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அழிக்கப்பட்ட எல்லைபகுதிகளில்  கண்ணிவெடிகளை புதைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உறுப்பினர்களின் 1500 உடல்கள் காணப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166539




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.