Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

பலஸ்தீன மனங்களை தலைமுறை தலைமுறையாக இறுகிப் போகும்படி ஆக்காதீர்கள். இஸ்ரேலின் அணுகுமுறையை மிதமாக கண்டிக்கிறார் ஒபாமா.

https://www.breitbart.com/middle-east/2023/10/23/obama-criticizes-israel-over-gaza-dont-harden-palestinian-attitudes-for-generations/

(இது ஒரு மோசமான அதி தீவிர வலதுசாரி தளம் என்பதை கருத்தில் கொள்க).

ஓம், இத்தளத்தை நான் "breitfart"என்று பகிடியாக அழைப்பதுண்டு. கீழ் வரும் பந்தியை வாசித்த போது அமெரிக்காவின் பிரபல நையாண்டிப் பத்திரிகையான The Onion வாசிக்கிறேனோ என்ற குழப்பம் வந்தது:

  "...Obama ignored Israel’s long record as one of the best, if not the best, countries in the world in upholding human rights and international humanitarian law in war against a ruthless, terrorist enemy"😂

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

 அமெரிக்காவின் பிரபல நையாண்டிப் பத்திரிகையான The Onion

இதே போல் இங்கே private eye என ஒரு சஞ்சிகை வரும்.

இப்படி தமிழில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2023 at 12:24, நன்னிச் சோழன் said:

நல்ல கருத்துக்கள்....
ஆனால், இதில் இவர் கூறுகிறார், ஈழத் தமிழர்கள் 1970களில் நடந்த இஸ்ரேலியப் போரில் ஈழ்தமிழர்கள் பாலஸ்தீனம்/லெபனான் ஓடு சேர்ந்து நின்று போராடி உயிர்த்தியாகம் செய்தார்கள் என்று. இது எவ்வளவு தூரம் உண்மை. நான் இப்படியொரு தகவல் அறிந்ததில்லை, அதனால்தான் கேட்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்.

பலஸ்த்தீனத்திலும், லெபனனிலும் பயிற்சிக்காக பல ஆயிரங்களைக் கொடுத்து  இயக்கங்கள் உறுப்பினர்களை அனுப்பி வைத்தன என்று நினைக்கிறேன். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும்,  ஈரோஸும் தான் அவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமக்கு சரியான ஆயுதங்களைக் கூடத் தர பலஸ்த்தீனர்கள் விரும்பவில்லையென்றும், தமது நேரத்தை முகாம்களிலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கழித்தோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலுடனான போர்க்களத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள், ஆனால் வெகு சில சந்தர்ப்பங்களிலேயே நேரடிச் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டார்களாம். 

பலஸ்த்தீனர்களுடனான தமிழ்ப் போராளிகளின் நெருக்கம் ஜெயவர்த்தனவை இஸ்ரேலுடன் நெருக்கமாக்கியதாகவும், இதன்மூலமே இஸ்ரேலினை தமிழருக்கெதிராக பல தசாப்த்தங்களாக திருப்பிவிட சிங்களவர்களால் முடிந்தது என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

நான் அறிந்தவரையில் இஸ்ரேல் சிங்கள அரசுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றிருக்கிறது. ஆனால், இலங்கை அரசுக்கான அதன் ஆயுத வியாபாரம் தமிழருக்கான ஆயுத விற்பனையினைக் காட்டிலும் பலநூறு மடங்கு என்பதும் கவனிக்கத் தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, ரஞ்சித் said:

நேரடிச் சமரிலா?.... அதுவும் இஸ்ரேலோடா?🤡

பயிற்சிக்குப் போனால் பயிற்சியை மட்டும் முடித்துவிட்டு திரும்புங்களேன்டா... ஏன் இந்தத் தேவையில்லா வேலை என்று கேட்கத் தோன்றுகிறது.

தகவலுக்கு நன்றி ஐயனே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

பலஸ்த்தீனத்திலும், லெபனனிலும் பயிற்சிக்காக பல ஆயிரங்களைக் கொடுத்து  இயக்கங்கள் உறுப்பினர்களை அனுப்பி வைத்தன என்று நினைக்கிறேன். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும்,  ஈரோஸும் தான் அவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமக்கு சரியான ஆயுதங்களைக் கூடத் தர பலஸ்த்தீனர்கள் விரும்பவில்லையென்றும், தமது நேரத்தை முகாம்களிலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கழித்தோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலுடனான போர்க்களத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள், ஆனால் வெகு சில சந்தர்ப்பங்களிலேயே நேரடிச் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டார்களாம். 

பலஸ்த்தீனர்களுடனான தமிழ்ப் போராளிகளின் நெருக்கம் ஜெயவர்த்தனவை இஸ்ரேலுடன் நெருக்கமாக்கியதாகவும், இதன்மூலமே இஸ்ரேலினை தமிழருக்கெதிராக பல தசாப்த்தங்களாக திருப்பிவிட சிங்களவர்களால் முடிந்தது என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

நான் அறிந்தவரையில் இஸ்ரேல் சிங்கள அரசுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றிருக்கிறது. ஆனால், இலங்கை அரசுக்கான அதன் ஆயுத வியாபாரம் தமிழருக்கான ஆயுத விற்பனையினைக் காட்டிலும் பலநூறு மடங்கு என்பதும் கவனிக்கத் தக்கது. 

இந்த சோடா புட்டி கண்ணாடிய மாட்டி கொண்டு, சிவப்பு அரசியல் பேசிய ஈபி, ஈரோஸ் வகையறாக்கள்தான் முதன் முதலில் ஈழத்தமிழர் நம் நட்பு சக்தி இல்லை என்ற கருத்தை மேற்கில் ஆழ ஊண்ட காரணமானவர்கள்.

அது மட்டும் இல்லாமல் மேற்குக்கு உவப்பல்லாதா குழுக்களோடு தொடர்புகளை வைத்து, சோசலிச தனி நாட்டை அமைப்போம் என அறை கூவி,  முதன் முதலில் இலங்கையின் பால் மேற்கை திருப்பிய புண்ணியவான்களும் இவர்களே.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக கடைசி வரை தமிழர் போராட்டதின் மீது மேற்கு கொண்ட இந்த சந்தேகம் அகலவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பிரதிநிதிகள் மொஸ்கோ வந்துள்ளனர். 

ரஸ்ய துணை வெளிவிவகார அமைச்சருடன் பேசுவார்களாம்.

ஈரான் குழு ஒன்றும் மொஸ்கோவில் நிற்கிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணத்தியாலம் முன்னதாக இஸ்ரேல் நோக்கி கடும் ராக்கெட் தாக்குதலாம்.

அதில் சில ராக்கெட்டுகளை இஸ்ரேலின் அயர்ன் டோம் தடுக்க முடியவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

நேரடிச் சமரிலா?.... அதுவும் இஸ்ரேலோடா?🤡

இவர்கள் பலஸ்தீன் போனார்களா என்பதே சந்தேகம். இவர்கள் லெபனானில்தான் இறக்கப்பட்டர்கள் எனவும் அங்கே முஸ்லிம்களுடன் இருந்து, கிறிஸ்தவ குழுக்களுக்கு எதிரான போரில் அடிப்படை பயிற்ச்சியை எடுத்தார்கள் என்பதே நான் அறிந்தது.

இவர்கள் இலங்கை வந்து கொக்கு கூட சுடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் சக தமிழர்களை சுட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, ரஞ்சித் said:

பலஸ்த்தீனத்திலும், லெபனனிலும் பயிற்சிக்காக பல ஆயிரங்களைக் கொடுத்து  இயக்கங்கள் உறுப்பினர்களை அனுப்பி வைத்தன என்று நினைக்கிறேன். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும்,  ஈரோஸும் தான் அவை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமக்கு சரியான ஆயுதங்களைக் கூடத் தர பலஸ்த்தீனர்கள் விரும்பவில்லையென்றும், தமது நேரத்தை முகாம்களிலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கழித்தோம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலுடனான போர்க்களத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள், ஆனால் வெகு சில சந்தர்ப்பங்களிலேயே நேரடிச் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டார்களாம். 

பலஸ்த்தீனர்களுடனான தமிழ்ப் போராளிகளின் நெருக்கம் ஜெயவர்த்தனவை இஸ்ரேலுடன் நெருக்கமாக்கியதாகவும், இதன்மூலமே இஸ்ரேலினை தமிழருக்கெதிராக பல தசாப்த்தங்களாக திருப்பிவிட சிங்களவர்களால் முடிந்தது என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

நான் அறிந்தவரையில் இஸ்ரேல் சிங்கள அரசுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றிருக்கிறது. ஆனால், இலங்கை அரசுக்கான அதன் ஆயுத வியாபாரம் தமிழருக்கான ஆயுத விற்பனையினைக் காட்டிலும் பலநூறு மடங்கு என்பதும் கவனிக்கத் தக்கது. 

உண்மையிலேயே ஆரேனும் செத்தவங்களோ அடிபாட்டிலை?

1 hour ago, goshan_che said:

இந்த சோடா புட்டி கண்ணாடிய மாட்டி கொண்டு, சிவப்பு அரசியல் பேசிய ஈபி, ஈரோஸ் வகையறாக்கள்தான் முதன் முதலில் ஈழத்தமிழர் நம் நட்பு சக்தி இல்லை என்ற கருத்தை மேற்கில் ஆழ ஊண்ட காரணமானவர்கள்.

அது மட்டும் இல்லாமல் மேற்குக்கு உவப்பல்லாதா குழுக்களோடு தொடர்புகளை வைத்து, சோசலிச தனி நாட்டை அமைப்போம் என அறை கூவி,  முதன் முதலில் இலங்கையின் பால் மேற்கை திருப்பிய புண்ணியவான்களும் இவர்களே.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதாக கடைசி வரை தமிழர் போராட்டதின் மீது மேற்கு கொண்ட இந்த சந்தேகம் அகலவே இல்லை.

கேட்கவே சோகமாக உள்ளது... 

16 minutes ago, goshan_che said:

இவர்கள் பலஸ்தீன் போனார்களா என்பதே சந்தேகம். இவர்கள் லெபனானில்தான் இறக்கப்பட்டர்கள் எனவும் அங்கே முஸ்லிம்களுடன் இருந்து, கிறிஸ்தவ குழுக்களுக்கு எதிரான போரில் அடிப்படை பயிற்ச்சியை எடுத்தார்கள் என்பதே நான் அறிந்தது.

இவர்கள் இலங்கை வந்து கொக்கு கூட சுடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் சக தமிழர்களை சுட்டார்கள்.

தகவலுக்கு நன்றி...

அப்படிச் சண்டையிட்டு நிராஜ் டேவிட் அவர்கள் சொல்வது போன்று ஆரேனும் செத்தவங்களோ?

நல்லது செய்யாவிடிலும் தூர நோக்கில் நாசம் செய்யாமல் இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு கரை நோக்கி இஸ்ரேல் படை நகர்வாம்.

23 minutes ago, நன்னிச் சோழன் said:

அப்படிச் சண்டையிட்டு நிராஜ் டேவிட் அவர்கள் சொல்வது போன்று ஆரேனும் செத்தவங்களோ?

சண்டையில் செத்ததாக நான் அறியவில்லை. ஆனால் போனவர்களில் ஓரிருவர் அங்கே இறந்தார்கள் எனவும் வேறு சிலர் அப்படியே ஐரோப்பாவுக்கு கிளம்பினார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, goshan_che said:

மேற்கு கரை நோக்கி இஸ்ரேல் படை நகர்வாம்.

சண்டையில் செத்ததாக நான் அறியவில்லை. ஆனால் போனவர்களில் ஓரிருவர் அங்கே இறந்தார்கள் எனவும் வேறு சிலர் அப்படியே ஐரோப்பாவுக்கு கிளம்பினார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.

2) தகவலுக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

சண்டையில் செத்ததாக நான் அறியவில்லை. ஆனால் போனவர்களில் ஓரிருவர் அங்கே இறந்தார்கள் எனவும் வேறு சிலர் அப்படியே ஐரோப்பாவுக்கு கிளம்பினார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.

அப்படி என்றால் ஐரோப்பாவில் உள்ளவர்களில் அநேகமானோர் அவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்+

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

May be an image of text that says 'ATOMIC BOMB GAZA HIROSHIMA Paddura'

May be an illustration of text that says 'N. KOREA UKRAINE TAIWAN GAZA IRAN moir'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யா விஜயம் - பணயக்கைதிகள் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை

Published By: RAJEEBAN    27 OCT, 2023 | 06:09 AM

image

பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது.

நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக  மொஸ்கோ தெரிவித்துள்ளது.

ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/167830

  • கருத்துக்கள உறவுகள்

போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை கேலிசெய்யும் இஸ்ரேலியர்கள்; வைரலாகும் வீடியோ

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே தீவிரமாகப் போர் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலால்  பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை கேலிசெய்யும் வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த இணையவாசிகள் சிலர்  சமூகவலைத்தளத்தில் வீடியோக்ளைப்  பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக போரில் உயிரிழந்தவர்களைப்  போன்றும், படுகாயமடைந்தவர்களைப் போன்றும் வேடமிட்டு பாலஸ்தீனியர்களை கேலி செய்வதோடு, அம்மக்கள் நீர், உணவு, மின்சாரமின்றி தவிப்பதையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளனர்.

அது மாத்திரமல்லாது குறித்த காணொளிகளில்  சிறுவர்களையும் இணையவாசிகள் பயன்படுத்தியுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில்  குறித்த காணொளிகளைத்  தொகுத்து  சர்வதேச ஊடகமொன்று இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில் அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ மூலம்-Al Jazeera English

https://athavannews.com/2023/1355959

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும்வரை பணயக்கைதிகளை விடுதலை செய்ய முடியாது - ரஸ்யாவில் ஹமாஸ் பிரதிநிதிகள்

Published By: RAJEEBAN    27 OCT, 2023 | 02:23 PM

image

யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் வரை பணயக்கைதிகள் எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை என ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் எங்கிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு காலம் தேவை என ஹமாஸ் பிரதிநிதியொருவர் ரஸ்ய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உறுப்பினர்கள் பெருமளவானவர்களை கைதுசெய்தனர் அவர்களை காசா பள்ளத்தாக்கில் தேடிக்கண்டுபிடித்து விடுதலை செய்வதற்கு கால அவகாசம் தேவை என  ஹமாஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது.

நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக  மொஸ்கோ தெரிவித்துள்ளது.

ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/167876

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாசின் முக்கிய தளபதிகள் 2 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ கொமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கொமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்ஜ் தபா பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/278929

  • கருத்துக்கள உறவுகள்

@நன்னிச் சோழன் 👇. இதுதான் லெபனான் டிரெயினிங்கில் சொல்லி கொடுத்துள்ளார்கள் போல இருக்கிறது.

ஈபி, ஈரோஸ் ஏன் ஒரு தபால் பெட்டியை கூட ஒழுங்காக தகர்கவில்லை என்பது இப்போ விளங்குது🤣.

  • கருத்துக்கள உறவுகள்+
13 minutes ago, goshan_che said:

@நன்னிச் சோழன் 👇. இதுதான் லெபனான் டிரெயினிங்கில் சொல்லி கொடுத்துள்ளார்கள் போல இருக்கிறது.

ஈபி, ஈரோஸ் ஏன் ஒரு தபால் பெட்டியை கூட ஒழுங்காக தகர்கவில்லை என்பது இப்போ விளங்குது🤣.

ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலும் உதே மாதிரித்தான் போஸ் கொடுத்திருக்கிறாங்கள்... அப்ப அங்க போஸ் குடுக்கத்தான் பயிற்சி போல!

4 hours ago, தமிழ் சிறி said:

போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை கேலிசெய்யும் இஸ்ரேலியர்கள்; வைரலாகும் வீடியோ

போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை கேலிசெய்யும் இஸ்ரேலியர்கள்; வைரலாகும் வீடியோ

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே தீவிரமாகப் போர் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலால்  பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை கேலிசெய்யும் வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த இணையவாசிகள் சிலர்  சமூகவலைத்தளத்தில் வீடியோக்ளைப்  பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக போரில் உயிரிழந்தவர்களைப்  போன்றும், படுகாயமடைந்தவர்களைப் போன்றும் வேடமிட்டு பாலஸ்தீனியர்களை கேலி செய்வதோடு, அம்மக்கள் நீர், உணவு, மின்சாரமின்றி தவிப்பதையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளனர்.

அது மாத்திரமல்லாது குறித்த காணொளிகளில்  சிறுவர்களையும் இணையவாசிகள் பயன்படுத்தியுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில்  குறித்த காணொளிகளைத்  தொகுத்து  சர்வதேச ஊடகமொன்று இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில் அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ மூலம்-Al Jazeera English

https://athavannews.com/2023/1355959

இதில் சிறுவர்களையும் ஈடுபடுத்தி எடுத்து இருக்கின்றார்கள் இந்த ஈவு இரக்கமற்ற அரக்கர்கள்.

சில வருடங்களுக்கு முன், இஸ்ரேல் வான்வெளித்தாக்குதலையும்,ஏவுகணைத்தாக்குதல்களையும் பாலஸ்தீனத்தின் மீது ஏவி பல நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்து கொண்டு இருக்கும் போது, இந்த தாக்குதல்களுக்காக இஸ்ரேல் மண்ணில் இருந்து கிளம்பும் ஏவுகணைகளையும், தாக்குதல் விமானங்களையும்  வேடிக்கை பார்ப்பதற்காக beach chair  இல் அமர்ந்து கடற்கரை ஒன்றில் திரள் திரளாக கண்டு களித்த காணொளிகள் பரவியது ஞாபகத்தில் உள்ளது. ஒவ்வொரு குண்டும் வெடித்த ஓசை எழும்போதெல்லாம், ஆரவாரம் செய்து களிப்புற்று இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

முள்ளிவாய்க்காலை நக்கலடித்து எள்ளி நகையாடிய இன்றும் அதை சொல்லி சமூகவலைத்தளங்களில் நக்கல்டிக்கும் சிங்களவர்கள் மற்றும் இலங்கை முஸ்லீம்களை ஞாபகப்படுத்துகின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இதற்கெல்லாம் சேர்த்து ஒருநாள் நல்ல பாடம் படிப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

இதில் சிறுவர்களையும் ஈடுபடுத்தி எடுத்து இருக்கின்றார்கள் இந்த ஈவு இரக்கமற்ற அரக்கர்கள்.

சில வருடங்களுக்கு முன், இஸ்ரேல் வான்வெளித்தாக்குதலையும்,ஏவுகணைத்தாக்குதல்களையும் பாலஸ்தீனத்தின் மீது ஏவி பல நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்து கொண்டு இருக்கும் போது, இந்த தாக்குதல்களுக்காக இஸ்ரேல் மண்ணில் இருந்து கிளம்பும் ஏவுகணைகளையும், தாக்குதல் விமானங்களையும்  வேடிக்கை பார்ப்பதற்காக beach chair  இல் அமர்ந்து கடற்கரை ஒன்றில் திரள் திரளாக கண்டு களித்த காணொளிகள் பரவியது ஞாபகத்தில் உள்ளது. ஒவ்வொரு குண்டும் வெடித்த ஓசை எழும்போதெல்லாம், ஆரவாரம் செய்து களிப்புற்று இருந்தனர்.

42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

முள்ளிவாய்க்காலை நக்கலடித்து எள்ளி நகையாடிய இன்றும் அதை சொல்லி சமூகவலைத்தளங்களில் நக்கல்டிக்கும் சிங்களவர்கள் மற்றும் இலங்கை முஸ்லீம்களை ஞாபகப்படுத்துகின்றனர்..

அங்கு மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஸ்ரப்  பட 
இவர்கள் பைப்  தண்ணீரை திறந்து குடித்துக் காட்டுகிறார்கள். 😥

  • கருத்துக்கள உறவுகள்+

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.