Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதைய HAMASன் தாக்குதலால் பலனடையப்போவது யார் ? 

1) நிச்சயமாக பலஸ்தீனர்கள் இல்லை. 

2) அடித்த சில வாரங்களில் Israel மேற்கொள்ளும் போகும் இராணுவ  நடவடிக்கையின் பின்னர், இஸ்ரேல் கைப்பற்றப்போகும் Gaza வின் நிலப்பரப்பு யார் பலனடைந்தனர் என்பதைக் கூறும்.  

3) தற்போதைய நிலையில் உலகத்தை தனக்கு ஆதரவாகத் திருப்பும் வேலைகளை இஸ்ரேல் செய்யும். அதன் விளைவாக உலகின் அனுதாபத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும். அப்போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகில் யாருமே இருக்கப்போவதில்லை, ஈரானையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தவிர. 

4) காசாவினை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர் இஸ்ரேல் Gazaவின் பெரும்பகுதியையும், அதன் கடற்பரப்பையும் தனது ழுமையான கட்டுப்பாட்டில்  கொண்டுவரும். 

5) இவற்றைப் பார்க்கும்போது, இப்படி ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய தேவை யாருக்கு எழுகிறது? 

6) மேற்கூறியவற்றை நோக்கும்போது, இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்குத் தெரியாமல் இப்படி ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான தயாரிப்புக்களில் ஹமாஸ் ஈடுபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது.  

ஏனெனில், இஸ்ரேல் தனது நீண்ட கால நோக்கத்தை எட்டுவதற்காக திட்டமிடும் நாடே தவிர, குறுகிய நலன்களுக்காக தன்னை பலிகொடுப்பதில்லை.  இங்கே இந்த இராணுவ நடவடிக்கையால் குறுகிய நலனை (publicity) யை பெற்றது மட்டுமே ஹமாஸ் கண்ட வெற்றி. 

☹️

 

  • Like 2
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

காபிர் பெண்களை கைதிகளாக பிடித்து அல்லாஹு அக்பர் கோசத்துடன் என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு மதரீதியாக அறிவுறுத்தபட்டுள்ளது.

கொல்லப்படட இஸ்லாமிய பயங்கரவாதிகள் யாவரும் அவர்களது மத கோட்ப்பாட்டின்படி சொர்க்கத்தில் ஏழு கன்னிப்பெண்களுடன் ஜாலியாக இருப்பார்கள். ஐயோ ஐயோ.  

1 hour ago, goshan_che said:

1. ஹமாஸ் தம்வசமுள்ள இஸ்ரேலியர்களை கழுத்தை வெட்டும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாம்.

2. ஹிஸ்புல்லா இறங்கினால் - ஈரானின் 4 எண்ணை ஆலைகளையும் தாக்கி, ஈரான் எண்ணை ஏற்றுமதியை இல்லாமல் ஆக்குவோம் என செனேட்டர் லிண்ட்சே கிராம் கூற்றாம்.

3. யூ எஸ் எஸ் ஜெரால்ட் போர்ட் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளதாம்.

மூன்றால் உலக யுத்தத்தை எதிர்பார்க்கலாம் போல தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

உலக அதிகார வர்க்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத இனம் அமைதியாக வாழ முடியாமல் அல்லாடுவது சாபமா ? 

ஆமாம் அது அவர்களது சாபம்தான். பரிசுத்த வேதகாமத்தின்படி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அந்த சாபத்தை தேடினார்கள். இயேசுவை சிலுவையில் அறையும்படி கொண்டு சென்றபோது அவருக்கு பின்சென்ற அநேகர் அழுது புலம்பிக்கொண்டு போனார்கள். அப்பொழுது இயேசு கூறியது எனக்காக அழ வேண்டாம் , உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். அந்த சாபம் வந்து பலித்தது. பின்னர் நடந்தது எல்லாமே சரித்திரம்.

எப்படி இருந்தாலும் வேதத்தின்படி மீண்டும் அவர்கள் தங்கள் ராஜ்யத்தில் குடியேறி ஆட்சி  செய்ய வேண்டும். இப்போது அது நிறைவேறிக்கொண்டு வருகின்றது. வனாந்திர பூமியை செழிப்புள்ள நிலமாக மாற்றியவர்கள் அவர்கள். அவர்களை இப்போதைக்கு யாரும் நினைப்பதை போல அவர்களை அழிக்க முடியாது. எல்லா அரபு நாடுகளும், ருசியா , சீன வந்தாலும் அழிக்க முடியாது.

இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் முழுவதும் ஒரு அமைதி உருவாகி அவர்களது தேவாலயம் கடடப்படும். அப்போது 666 இலக்கம் யாவருக்கும் தயாரிக்கப்படும். அதன் பின்னர் யூதர்களுக்கு அழிவு உருவாகும். யாரும் அதனை தடுக்க முடியாது. அது யூதருக்கு இக்கட்டு காலம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் நடப்பது மிகவும் அதிசயமானதாக இருக்கும்.

சில வேளைகளில் நான் எழுதுவது சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இது நடக்கும். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் இஸ்ரேலுக்கு செய்த தீமை என்ன.. எம்மை அவன் ஆயுதமும் மொசாட் பயிற்சியும் கொடுத்து அழிக்க..??!

அப்படி என்றால் தமிழர்கள் இந்தியாவுக்கு செய்த தீமை என்ன? உளவு தகவல்களை  இந்தியா  இலங்கைக்கு வழங்கி  போராளிகளைஅழித்தார்கள். குறிப்பிடட அளவு ஆயுதம், பயிட்சிகளை அரசுக்கு வழங்கினார்கள். ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக இருக்குமோ?

பாலஸ்தீனர்கள் இலங்கையை ஆதரித்தார்கள். அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகள் இலங்கையை  ஆதரித்ததுடன் ஆயுத உதவியும் வழங்கினாரக்ள். தமிழர்கள் அவர்களுக்கு செய்த அநியாயம் என்ன? காத்தான்குடியில் முஸ்லிம்களை  கொலை செய்ததாக இருக்குமோ?

ராஜிவ் காந்தி, முஸ்லிம்கள் விடயத்தில் அப்படி நடக்க காரணம் என்ன? ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிரும் சமமுமான தாக்கம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

பா... எப்படிக் கதைக்கிறார் இந்தாள்.... 

 

சாத்தான்களை வேட்டையாட சமர்க்களம் செல்ல முன் தம் நாட்டு வீரர்களுக்கு இறுதிவிடை கொடுத்து அனுப்பும் இஸ்ரேலிய மக்கள்...

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

எங்கட கொடியையும் இஸ்ரேலின்ர கொடியையும் எடிட் பண்ணி கோரா & ரெட்டிட்ல போடட்டோ? 

என்ன சொல்லுறியள் உறவுகளே?

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பலஸ்தீனியர்களுடன் நொருங்கி பழகியவர்கள் என்னும் அனுபவத்தில் சொல்கின்றேன். இவர்கள் சக மனிதர்களை, விசேடமாக எம்போன்ற ஆசியர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கஷ்டம். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் குண்டு மழை; 200 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் குண்டு மழை; 200 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுவுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வரும் நிலையில், ரொக்கெட் மற்றும் விமான தாக்குதல்களில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதேவேளை காயமடைந்தவர்களில் 70 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹமாஸ் போராளிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு , பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரேன் , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள போராளிகுழுக்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு இருப்பினும் இரு தரப்பும் மோதலை கைவிடுமாறு ரஷ்ய ஜனாதிபதி  புடின்  கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் போரில் காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படுவதாகவும், மக்கள் இரத்ததானம் செய்ய முன்வருமாரு இஸ்ரேல் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் ஒரு வருடம் கடந்து நீடித்து வரும் நிலையில் , இஸ்ரேலுக்கும் பாலிஸ்தீனத்துக்கும் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2023/1352866

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நன்னிச் சோழன் said:

 

எங்கட கொடியையும் இஸ்ரேலின்ர கொடியையும் எடிட் பண்ணி கோரா & ரெட்டிட்ல போடட்டோ? 

என்ன சொல்லுறியள் உறவுகளே?

 

 

நன்னி!!

இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா?

இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். 
 

போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. 

இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

Edited by P.S.பிரபா
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 8
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, P.S.பிரபா said:

நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? 

 

இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. 

பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள்.

 

எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. 

மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து. 

 

5 hours ago, goshan_che said:

அது மட்டும் அல்ல, 2ம் உலக போரின் பின் புலம் திரும்பிய யூதரை அரபிகள் அப்படி ஒன்றும் வரவேற்கவில்லை. 

யூதர் அமெரிக்கா, யூகே யோடு போட்ட டீலின் அடிப்படையில் கெட்டித்தனாமாக தம் பூர்வீக நிலத்தை படிப்படியாக மீட்டு எடுத்தார்கள்.

 

யாராவது கூட வேலை செய்யும் ரஸ்ய தோழர் சொல்லி இருப்பார். அண்ணை அதை அப்படியே வந்து அடிச்சு விடுகிறார்.

பாஸ் - இஸ்ரேலில் ஒவ்வொரு பிரஜைக்கும் இராணுவ சேவை கட்டாயம். இது உங்களுக்கும் தெரியும்.

ஆனால் ஒரு இராணுவ உடையில் சண்டையில் மாட்டுபட்ட சிப்பாயை கூட இப்படி நடத்த கூடாது.

சுற்றி எல்லா வளைக்கவில்லை.

இசை பிரியா இறந்து கிடந்த போட்டோவை பரப்பி நியாயம் கேட்ட போதெல்லாம் - இனவாதிகள் அவர் புலிச்சீருடையில் நிற்கும் போட்டோவை பதிலாக போட்டார்கள்.

உங்கள் பதிவும் அதே வழியையே பின்பற்றுகிறது.

தயவு செய்து கருத்துக்களை வாசித்து அதற்கு பதில் எழுதுங்கள் 
இவர் இறந்ததே  கோசன் எழுதித்தான் நான் வாசித்து அறிந்தேன் 

எப்படி இறந்தார் என்பதை இன்னமும் நான் பார்க்கவில்லை 

உணர்ச்சிப்பூர்வமாகவும் / யார் எழுதுகிறார் என்பதை பார்த்தும் எழுதிக்கொண்டு 
இருப்பதாலேயே யாழில் எழுதுவது வருவது என்பவற்றை தவிர்த்து வருகிறேன் 

அவரது இறப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு நீங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் கேள்விகளை அடுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் 
அதற்கு ஏன் என்னை மேற்கோள் காட்டுகிறீர்கள்? 

சமாதான சங்கீத கச்சேரி நடத்திக்கொண்டு இருந்தார் என்றார்கள் 
(அது உண்மையாகவும் இருக்கலாம்) இஸ்திரேல் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் 
"சமாதானம் பலஸ்தீனத்துக்கு" என்று இஸ்திரேலின் ஆக்கிரமத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள் 
அதிலும் மொசாட் உறுப்பினர்கள் இல்லாமல் இல்லை. 

ஆனால் அவர் ஒரு இஸ்தியரேலிய இராணுவ பயிற்சி முடித்து அதை பெருமையாக தானே டீவீட்டாரில் பதிந்து உள்ளார்  என்பது (ஒரு தகவல்) அதைத்தான் நான் மேலே எழுதி இருக்கிறேன்.

இப்போது அவர் உண்மையிலேயே ஒரு சமாதான விரும்பி என்று நீங்கள் நம்பி இருப்பின் அல்லது அதுதான்   
உண்மை என்பதுக்கு உங்களிடம் ஆதாரம் இருப்பின். அதை நீங்கள் இங்கு பதியும் பொருட்டு நான் அவரை பற்றி மேலும் ஒரு தகவல் அறிந்துவிட்டு போகிறேன். 

இதுக்குள் ஏன் இசைப்பிரியா எங்கள் பிரச்சனை எல்லாம் வரவேண்டும் ?   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Maruthankerny said:

நாம் எழுதுவது எல்லாம் கூட கண்காணிக்க படுகிறது

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

வரலாறுகளின் படி´பலஸ்தீனியர்கள் கேட்கும் பகுதி யாருக்குரியது?

யூதர்களுக்கு. இதில் மாற்று கருத்தே இல்லை. கீழே பார்க்கவும்👇

 

7 hours ago, goshan_che said:

 

Time immemorial எனப்படும் மனித குலத்தின் கூட்டு நினைவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இஸ்ரேல் யூத மண்.

இஸ்லாத்தின் முதல் நபி என மொகமட் ஏற்று கொண்ட ஆபிரகாம் ஒரு யூதன்.

இவர்கள் அவர்களை வந்தேறிகள் என்கிறார்கள்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள்

ஹமாஸ், இஸ்ரேல், பாலஸ்தீனம்

பட மூலாதாரம்,PA MEDIA

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது.

முன்னர், தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அமெரிக்க அதிபர் பிடன் ‘இதுவரை நடந்திராத பயங்கரமான தாக்குதல்’ என்று வர்ணித்திருந்தார்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் அடங்குவர் என்று வெளியாகியிருக்கும் அறிக்கைகளைச் அமெரிக்கா சரிபார்த்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.

இத்தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

காஸாவில், பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

‘தாக்குதலுக்கு இரான் உதவியது’

வரும் நாட்களில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற விமானம் தாங்கிக் கப்பல், ஒரு ஏவுகணைக் கப்பல் மற்றும் நான்கு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இப்பகுதியை நோக்கிச் செல்லும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். அமெரிக்க போர் விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு மேலும் ராணுவ உதவி அனுப்பப்படும் என்று கூறியிருக்கும் அமெரிக்க அசராங்கம், இஸ்ரேலின் எதிரிகள் இந்தச் சூழ்நிலையில் இருந்து ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா செயல்படுவதாகக் கூறியது.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து, பாலஸ்தீனப் பகுத்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தங்களது தாக்குதலை நடத்த இரானின் உதவி பெரிதும் பயன்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுவினர், ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் பாராகிளைடர்களின் மூலம், காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய எல்லைக் கோட்டைகளை உடைத்து தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், இரானின் நேரடி தலையீட்டிற்கான ஆதாரங்களை அமெரிக்கா காணவில்லையெனினும், காஸாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் குழுவிற்கு இரான் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது என்றார்.

“இரான் பல ஆண்டுகளாக அளித்துவரும் ஆதரவு இல்லாமல் ஹமாஸ் குழுவல் இயங்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட தாக்குதலுக்குப் பின்னால் இரான் இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஹமாஸிற்கு இரான் பல ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வருவது உறுதி," என்று அவர் அமெரிக்கத் தொலைகாட்சியில் தெரிவித்தார்.

 
ஹமாஸ், இஸ்ரேல், பாலஸ்தீனம், அமெரிக்கா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

இஸ்ரேலின் ஐ.நா தூதர் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் படத்தைக் காட்டுகிறார்

அமெரிக்கக் குடிமக்கள் சிக்கியுள்ளனரா?

இந்தத் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் சிக்கியுள்ளனர் என்று வெளிவரும் தகவல்கள் பற்றி அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக பிளிங்கன் கூறினார்.

"இறந்தவர்களில் பல அமெரிக்கர்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகளை சரிபார்க்க நாங்கள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். இங்கிலாந்து, பிரான்ஸ், யுக்ரேன் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் தங்கள் குடிமக்கள் இந்தத் தாக்குதலில் இறந்திருப்பதாகப் பதிவு செய்துள்ளன.

மேலும் பேசிய பிளிங்கன், "இது ஒரு மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல். இதில் இஸ்ரேலிய குடிமக்கள் அவர்களின் நகரங்களில், அவர்களின் வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காசாவின் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். உலகம் இதைக்கண்டு அதிர்ச்சியடைய வேண்டும்,” என்றார்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 23 வயதான அமெரிக்க-இஸ்ரேலியர் ஹெர்ஷ் கோல்பெர்க்-பொலின் ஒருவர். அவர் ஒரு இசைவிழாவில் பங்கேற்ற போது ஹமாஸ் குழுவினர் அங்கு தாக்குதல் நடத்தினர். அவரிடமிருந்து ‘ஐ லவ் யூ’ மற்றும் ‘என்னை மன்னிக்கவும்’ என்ற இரண்டு குறுஞ்செய்திகள் வந்ததாக அவரது பெற்றோர் ‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழிடம் தெரிவித்தனர்.

 
ஹமாஸ், இஸ்ரேல், பாலஸ்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸின் திடீர் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் பதிலடியைத் தொடர்ந்து இரு தரப்பிலும் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் ராணுவ உதவிகள்

அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஹெர்சாக், தெற்கு இஸ்ரேலில் கடத்தப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்களில் அமெரிக்கர்களும் இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் ஆனால் அதுபற்றி மேற்படி விவரங்கள் இல்லை என்றும் கூறினார்.

அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டாலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸா வன்முறைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் நியூயார்க்கில் கூட உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c6pjgqeg399o

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
2 hours ago, P.S.பிரபா said:

நன்னி!!

இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா?

இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். 
 

போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. 

இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

சரி அப்ப கைவிடுகிறேன்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலில்இசைநிகழ்வு இடம்பெற்ற பகுதியில் 260 உடல்கள் - மீட்பு பணியாளர்கள்

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 06:29 AM
image
 

இஸ்ரேலின் இசை நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் 260க்கும் மேற்பட்ட உடல்கள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள பகுதியில் இந்த இசைநிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை தாக்குதல் இடம்பெறும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள்  தப்பியோடுவதை வீடியோக்கள் காண்பிக்கின்றன-

திறந்தவெளிகள் ஊடாக பலர் ஒடுவதையும் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காணமுடிகின்றது.

நிலத்தில் விழுபவர்கள் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக நிலத்தில் விழுந்து படுக்கின்றார்களா அல்லது  துப்பாக்கி சூட்டினால் விழுகின்றார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

மக்களுடன் தப்பியோட முயலும் வாகனங்கள் மீது போராளிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட பதற்றத்தை  உயிர்தப்பிய ஓர்டெல் என்பவர் வர்ணித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166417

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் தாக்குதல்

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 06:41 AM
image
 

இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.

இஸ்ரேலியின் பிரதான விமான நிலையமான பென்குரியன் விமானதளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

100க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166418

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றது - ஹமாஸ்

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 10:16 AM
image
 

அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம்  பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் ஆக்கிரமிப்பில்  தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலை மத்தியகிழக்கிற்கு அமெரிக்கா அனுப்புவதன் மூலம்  அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது என தெரிவித்துள்ள ஹமாஸ் இவ்வாறான நடவடிக்கைகள் எங்கள் மக்களுக்கு  அச்சத்தினை ஏற்படுத்துவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர் போர்ட் அணுவாயுத கப்பல் ஏவுகணை கப்பல்கள் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு புறப்பட்டுள்ளன.

அமெரிக்கா மத்திய கிழக்கை நோக்கி தனது போர்விமானங்களையும் தயார்படுத்தியுள்ளது.ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்பார்த்தே அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது.

https://www.virakesari.lk/article/166429

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, P.S.பிரபா said:

நன்னி!!

இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா?

இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். 
 

போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. 

இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

பிரபா, நானும் நன்னியை எதோ ஒரு உயரத்தில் வைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அமெரிக்கா, மேற்கிற்கு செம்புத்தூக்கும் கனவான்கள் என்று.

நன்னி, ஆனானப்பட்ட புலிகளுக்கே சாதாரண பொதுமக்களின் இழப்புகள் எப்படி இருக்கும் என்று சிங்களத்திற்கு காட்ட ஒரு அனுராதபுர தாக்குதல் தேவைப்பட்டது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

பொதுமக்களுக்கு அடிப்பதன்மூலம்தான் போராளிகளை வலுவிழக்க செய்ய முடியும் என்பதை சிங்களத்திற்கு சொல்லிக்கொடுத்ததே இந்த இஸ்ரேல் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Maruthankerny said:

 

தயவு செய்து கருத்துக்களை வாசித்து அதற்கு பதில் எழுதுங்கள் 
இவர் இறந்ததே  கோசன் எழுதித்தான் நான் வாசித்து அறிந்தேன் 

எப்படி இறந்தார் என்பதை இன்னமும் நான் பார்க்கவில்லை 

உணர்ச்சிப்பூர்வமாகவும் / யார் எழுதுகிறார் என்பதை பார்த்தும் எழுதிக்கொண்டு 
இருப்பதாலேயே யாழில் எழுதுவது வருவது என்பவற்றை தவிர்த்து வருகிறேன் 

அவரது இறப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு நீங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் கேள்விகளை அடுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் 
அதற்கு ஏன் என்னை மேற்கோள் காட்டுகிறீர்கள்? 

சமாதான சங்கீத கச்சேரி நடத்திக்கொண்டு இருந்தார் என்றார்கள் 
(அது உண்மையாகவும் இருக்கலாம்) இஸ்திரேல் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் 
"சமாதானம் பலஸ்தீனத்துக்கு" என்று இஸ்திரேலின் ஆக்கிரமத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள் 
அதிலும் மொசாட் உறுப்பினர்கள் இல்லாமல் இல்லை. 

ஆனால் அவர் ஒரு இஸ்தியரேலிய இராணுவ பயிற்சி முடித்து அதை பெருமையாக தானே டீவீட்டாரில் பதிந்து உள்ளார்  என்பது (ஒரு தகவல்) அதைத்தான் நான் மேலே எழுதி இருக்கிறேன்.

இப்போது அவர் உண்மையிலேயே ஒரு சமாதான விரும்பி என்று நீங்கள் நம்பி இருப்பின் அல்லது அதுதான்   
உண்மை என்பதுக்கு உங்களிடம் ஆதாரம் இருப்பின். அதை நீங்கள் இங்கு பதியும் பொருட்டு நான் அவரை பற்றி மேலும் ஒரு தகவல் அறிந்துவிட்டு போகிறேன். 

இதுக்குள் ஏன் இசைப்பிரியா எங்கள் பிரச்சனை எல்லாம் வரவேண்டும் ?   

மருதர் நான் மேலே தெளிவாக கூறியுள்ளேன். இருவரும் ஒருவர் இல்லாமல் இருக்கலாம் என.

இந்த இசை நிகழ்ச்சியில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இளம் பெண்களை கமாஸ் கடத்தி போயுள்ளது.

ஆனால் ஒரு கால்கள் முறிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை ஹாமாஸ் காசாவில் ஊர்வலமாமக டபிள் கப்பில் எடுத்து போனது உண்மை.

அவர் இராணுவ சிப்பாயாக இருந்தாலும் அது கொடுமையே.

 இசைபிரியாவும், புலிச்சீருடை அணிந்த பெண்புலியாகவே இருந்தாலும் (இலங்கை சொன்னது) அவரை அப்படி இலங்கை கொடுமை செய்திருக்கக்கூடாது. சரிதானே?

இங்கேதான் ஒப்பீடு வந்தது. இதை விளங்கிகொள்ள முடியாத ஆள் இல்லை நீங்கள்.

 

2 hours ago, Maruthankerny said:

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை

நிச்சயமாக. இதை யாரும் மறுத்து எழுதியதாக தெரியவில்லை.

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை நானே பலமுறை யாழில் விமர்சித்து எழுதியுள்ளேன்.

ஆனால் பலஸ்தீன விடுதலை வீரர்கள் என ஹமாசை கூறும் போதுதான் அவர்கள் இஸ்ரேலுக்கு துளியும் சளைக்காத மிலேச்சர் என்பதை எழுதவேண்டியதாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, P.S.பிரபா said:

இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று

@நன்னிச் சோழன்

சொந்த நிலத்தை மீட்கப்போராடும் யூதருக்கும் எமக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

இவர்கள் இப்போ பலஸ்தீனம் என்று அழைப்பது….எமது மண்ணில் புத்தளம் மாவட்டம், பதவிக்குளம், கந்தளாய் போல ஒரு காலத்தில் யூதர்களின் பாரம்பரிய பூமியாக இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையே.

அதே போல் எதிரிகளையும், நண்பர்களையும் நினைவில் வைத்திருப்பவர்கள் யூதர்கள்.

உயர் மட்டத்தில் யூத-தமிழ் ஒன்றிணைப்பு ஏற்படுமாயின் நாம் பெரிய அனுகூலங்களை அடையலாம்.

இதை நீங்கள் செய்வது grassroots மட்டத்தில் ஆரம்பிப்பதாக இருக்கலாம்.

இந்த வகையில் உங்கள் சிந்தனை, அற்புதமானது. Strategic masterstroke.

ஆனால் strategy யா? கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில்தான் ஈழத்தமிழர் இருக்கிறோம்.

இப்படி நீங்கள் செய்வதற்கு பாரிய எதிர்ப்பு எம்மத்தியிலேயே இருக்கும்.

இப்பவே உங்களை வெள்ளைகார-கைக்கூலி என எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

உங்கள் யோசனை ஒரு புத்திசாலி இனக்கூட்டத்துக்குரியது.  எமக்கானது அல்ல.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

@நன்னிச் சோழன்

சொந்த நிலத்தை மீட்கப்போராடும் யூதருக்கும் எமக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

இவர்கள் இப்போ பலஸ்தீனம் என்று அழைப்பது….எமது மண்ணில் புத்தளம் மாவட்டம், பதவிக்குளம், கந்தளாய் போல ஒரு காலத்தில் யூதர்களின் பாரம்பரிய பூமியாக இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையே.

அதே போல் எதிரிகளையும், நண்பர்களையும் நினைவில் வைத்திருப்பவர்கள் யூதர்கள்.

உயர் மட்டத்தில் யூத-தமிழ் ஒன்றிணைப்பு ஏற்படுமாயின் நாம் பெரிய அனுகூலங்களை அடையலாம்.

இதை நீங்கள் செய்வது grassroots மட்டத்தில் ஆரம்பிப்பதாக இருக்கலாம்.

இந்த வகையில் உங்கள் சிந்தனை, அற்புதமானது. Strategic masterstroke.

ஆனால் strategy யா? கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில்தான் ஈழத்தமிழர் இருக்கிறோம்.

இப்படி நீங்கள் செய்வதற்கு பாரிய எதிர்ப்பு எம்மத்தியிலேயே இருக்கும்.

இப்பவே உங்களை வெள்ளைகார-கைக்கூலி என எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

உங்கள் யோசனை ஒரு புத்திசாலி இனக்கூட்டத்துக்குரியது.  எமக்கானது அல்ல.

 

 

 

ஓம், ஓம். இஸ்ரேல் கொடியோடை புலிக்கொடியை சேர்த்துவிட்டால் நாளைக்கே வந்து தமிழர்களின் பிரச்சைனைகளை எல்லாம் தீர்த்துவிட்டுத்தான் யூதன் மறுவேலை பார்ப்பான்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Eppothum Thamizhan said:

ஓம், ஓம். இஸ்ரேல் கொடியோடை புலிக்கொடியை சேர்த்துவிட்டால் நாளைக்கே வந்து தமிழர்களின் பிரச்சைனைகளை எல்லாம் தீர்த்துவிட்டுத்தான் யூதன் மறுவேலை பார்ப்பான்!!

சொன்னேந்தானே எப்போ…இது நமக்கான சிந்தனை அல்ல.

 

@Maruthankerny இது உங்களுக்கு.

இவர் ஜேர்மன் மொழி பேசுகிறார் என நினைக்கிறேன்.

யாராவது கள உறவுகள் சாராம்சத்தை மொழி பெயர்த்தால் நல்லம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, goshan_che said:

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை நானே பலமுறை யாழில் விமர்சித்து எழுதியுள்ளேன்.

இஸ்ரேல் தன் சொந்த நிலத்திற்காக  போராடுகின்றது போல் எழுதிக்கொண்டு மிலேச்சத்தனத்தை பற்றியும் விளாசுகின்றீர்கள்...பலே 👍🏼  🤣




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.