Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது??

36 members have voted

  1. 1. புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது??

    • ஐந்திற்கு மேல்!
      8
    • ஐந்து!
      3
    • நான்கு!
      3
    • மூன்று!
      8
    • இரண்டு!
      9
    • ஒன்று!
      1
    • குழந்தைகள் தேவையில்லை!
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு, எமது வாழ்வு பற்றிய ஓர் கருத்தாடல். இங்கு கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இது ஒரு மிகவும் சீரியசான விடயம். பலருக்கு இதன் நேரடியான, மறைமுகமான தாக்கங்கள் தெரிந்து இருக்காது. எனது நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களின் குடும்பங்களை அவதானித்து அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய, எதிர்கால வாழ்க்கை பற்றி சிறிதளவு சிந்தித்து பார்த்தமையே நான் இந்த தலைப்பை ஆரம்பிக்க முக்கிய காரணம்.

இனி பிரச்சனைக்கு வருவோம்.

புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது??

மற்றவர்களிற்கு நான் கூறக்கூடிய பதில்:

உங்களால் எத்தனை பிள்ளைகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியுமோ அந்தளவு பெற்றுக்கொள்ள வேண்டும். :P

எனக்கு நான் கூறக்கூடிய பதில்:

(ஒரு காலத்தில் திருமணம் செய்தால்) ஆகக்குறைந்தது மூன்று, ஆகக்கூடியது நான்கு. வருபவளும் பச்சைக்கொடி காட்டினால் ஐந்து :lol::lol:

காரணங்கள்:

ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ள புலத்தில் வாழும் குடும்பங்களில் குழந்தைகள் பல்வேறு உளவியல் நெருக்கடிகளில் சிக்கித்தவிப்பதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். பல குழந்தைகள் பாரதூரமான உளவியல் நெருக்கடிகளிற்கு உள்ளாகியுள்ளனர். :lol: இதுபற்றி யாராவது ஏதாவது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உள்ளார்களோ தெரியாது. புலத்தில் சமூகவியல் கற்கும் மாணவர்கள் யாராவது முயற்சி செய்து இதன் உண்மை நிலையை கண்டுபிடிக்க முயன்று பார்க்கலாம்.

ஊரில் வழமையாக எல்லா குடும்பங்களிலும் மூன்று பிள்ளைகளாவது இருப்பார்கள். அக்காவிற்கு தங்கையும், தங்கைக்கு அக்காவும் துணையாக இருப்ப்பார்கள். தம்பிக்கு அண்ணாவும் அண்ணாவுக்கு தம்பியும் துணையாக இருப்பார்கள். அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கும்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பெற்றோருடன், வேறு அந்நியர்களுடன் மனம்விட்டுப் பேசமுடியாத விடயங்களை தமது சகோதர, சகோதரிகளுடன் பேசிக்கொள்ள முடிகின்றது. படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என சகல அம்சங்களிலும் அவர்கள் கால்பதித்து சந்தோசமாக இருக்க முடிகின்றது.

ஆனால், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களில் நிலமை தலைகீழாக உள்ளது. பிள்ளைகள் ஒரு ஒற்றைப்போக்கில் செல்பவர்களாக உள்ளார்கள். மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதற்கு தயங்குகின்றார்கள். தமது பிரச்சனைகளை மனம்விட்டு பேசுவதற்கு, தமது சுமைகளை இறக்கிக்கொள்ள தெரியாது அவதிப்படுகின்றார்கள். என்னதான் நண்பன், உறவினன் இருந்தாலும் கூடப்பிறந்த ஒரு சகோதரம் அல்லது சகோதரி போல் இன்னொரு உறவு இவர்களிற்கு கிடைக்குமா?

எனது வீட்டில் ஐந்துபேர். எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மனம்விட்டுப்பேச நான் எனது அம்மா, அப்பாவை விட நான்கு பேருக்கு தொலைபேசி எடுக்கமுடியும். எனது அம்மாவை நான் சிலவேளைகளில் கேட்பேன், ஏன் ஐந்து பிள்ளைகளை பெற்றீர்கள் என்று. ஒன்று, இரண்டுடன் நிற்பாட்டி இருந்தால் அந்த இரண்டு குழந்தைகளையும் இன்னும் நன்றாக வளர்த்து, படிக்க வைத்து சந்தோசமாக இருந்து இருக்கலாம் தானே என்று! அதற்கு அவர் கூறும் பதில் முதலில் பிறந்த அக்காவிற்கு ஓர் ஆண் துணை வேண்டும் என்றும், மற்றும் அண்ணாவுக்கு ஒரு துணை (தம்பி) வேண்டும் என்று என்னை பெற்றதாகவும் கூறுவா. இது சிரிப்பாக இருந்தாலும், இதனுள் நிறைய அர்த்தம் புதைந்து உள்ளது.

நீங்கள் நான்கு, ஐந்து, ஆறு சகோதர, சகோதரிகளுடன் பிறந்து இப்போது புலத்தில் வாழ்பவராக இருந்தால் இதன் தாற்பரியத்தை, உண்மையை, இதன்மூலம் நீங்கள் பெற்றுள்ள நன்மைகளை இப்போது புலத்தில் வாழும்போது உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.

பல குழந்தைகள் இருந்தால் பணச்சிக்கல்கள், வேறு பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழமை. ஆனால், புலத்தில் பல்வேறு வசதிகள், சலுகைகள் உள்ளன. எனவே, அதிக பிள்ளைகள் பெறுவதால் அவர்களை வளர்த்து எடுப்பது கடினம் என்று கூறமுடியாது. பெரும்பாலான அரசாங்கங்கள் புலத்தில் பிள்ளைகளிற்கு விதம்விதமான வசதிகளை செய்து கொடுக்கின்றன. :lol:

இதைவிட, நிச்சயமாக எமது இனத்தை பெருக்கவேண்டிய காலகட்டத்திலும் நாம் இருக்கின்றோம். உலக சனத்தொகை பெருகிச்செல்கின்றது, எனவே, சனத்தொகையை குறைக்க ஒன்று, இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெறவேண்டும் என்ற அறிவுரைகள் எமது இனத்திற்கு பொருந்தாது. புலத்தில் மக்கள் - மக்கள் தொகை என்பது எமது ஒரு பலம். குழந்தைகள் எமது பலம். எனவே, குழந்தைகளை அதிகளவில் பெறுவது வரவேற்கத்தக்கது என நான் நினைக்கின்றேன்.

இங்கு ஒரு சிக்கல் என்னவென்றால் நாம் பல பிள்ளைகளை பெறும்போது ஒரு மிகப்பெரும் சுமையை பெண்கள் தலையில் கொடுக்கின்றோம் என்பது உண்மை. ஆனால், இது தவிர்க்கமுடியாத, தவிர்க்கப்படமுடியாத காலத்தின் தேவை. ஆண்கள் தமது துணைக்கு - மனைவிக்கு பல்வேறு வழிகளில் உதவுவதன் மூலம் பெண்கள் கூடுதலான பிள்ளைகள் பெறுவதால் அடையும் துன்பங்களை குறைத்துக்கொள்ள முடியும். ஆண்களும் பிள்ளைகளை, வீட்டு பொறுப்புக்களை கவனித்தால், மனைவியருடன் சரிசமமாக வேலைகளை பகிர்ந்துகொண்டால் அவர்கள் மனைவியரும் தமது வேலை, படிப்பை தொடரக்கூடியதாக இருக்கும்.

இதற்காக அடுத்தடுத்து ஒவ்வொரு வருடமும் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. மூன்று வருட இடைவெளிகளில் முயற்சிசெய்தாலே பலருக்கு மூன்று குழந்தைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். :P இதைவிட நவீன விஞ்ஞான வசதிகளை, வாய்ப்புக்களையும் பயன்படுத்தி கொள்ளமுடியும்.

நீங்கள் உங்கள் பெற்றோர் இல்லாதகாலத்தில் எப்படி வாழ்வீர்கள், இதேபோல் நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் குழந்தைகள் எப்படி வாழ்வார்கள் என்று சிறிதளவு கற்பனை செய்து பாருங்கள். உங்களிற்கு பெற்றோர் இருக்கும்போது உங்கள் வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் உதவக்கூடும். உங்களிற்கு மன ஆறுதல் ஏற்பட அவர்கள் உதவக்கூடும். ஆனால், பெற்றோர் இல்லாத நிலையில் நீங்கள் இவற்றை உங்கள் துணை, மற்றும் உங்கள் சகோதர, சகோதரிகளிடமே எதிர்பார்க்க முடியும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு சகோதர, சகோதரிகளும் இல்லையானால் உங்கள் நிலமை கவலைக்கிடமாகிவிடும். இவ்வாறே நீங்கள் இல்லாத ஒரு காலத்தில் உங்கள் குழந்தைகள் தனித்துவிடப்படப் போகின்றார்கள். அவர்களிற்கு சகோதர, சகோதரிகள் இல்லாவிட்டால் பல்வேறு மன உளைச்சல்களுடன் அவர்கள் வாழவேண்டி வரலாம். மனக்கஸ்டங்கள் வரும்போது அவற்றை, மனப்பாரத்தை இறக்க வழிதெரியாது உங்கள் குழந்தைகள் சிக்கித் தவிக்கவேண்டி வரலாம்.

பல குழந்தைகள் உள்ள வீட்டில் எப்போதும் கலகலப்பு, சந்தோசம் இருக்கும். ஒன்று, இரண்டு குழந்தைகள் உள்ள வீடு பெரும்பாலும் மயான அமைதியுடன் காட்சி அளிக்கும்.

எனது சிறிய மூளையில் இவ்வளவு விசயங்கள் தான் இப்போதைக்கு தட்டுப்படுகின்றது. இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு கூறவும்..

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நிறைய பிள்ளைகள் பெத்துக்கனும் .

  • கருத்துக்கள உறவுகள்

5 க்கு மேல பெத்தா தான்பா நல்லது எமது..அதாவது தமிழ் ஜனத்தொகைய கூட்டலாம் ரு வீட்டுக்கு 5 வாக்கிக்கு மேல இருந்தா அரசியல்லையும் செல்வாக்கு செலுத்தலாம்..மற்றது இங்க அவுஸ்திரேலியால ரு குழந்தைக்கு பிறந்த உடண 8000 டாலர்கள் கொடுக்கின்றார்கள் சோ 5 பெத்தா 40.000 டொலர்கள் கிடைக்கும் அவுஸ்திரேலியா வாழ கள உறவுகளே 5 க்கு மேல் பெறுவீர் வாழ்ககையில் வளம் காண்பீர்..........

//பல குழந்தைகள் இருந்தால் பணச்சிக்கல்கள், வேறு பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழமை. ஆனால், புலத்தில் பல்வேறு வசதிகள், சலுகைகள் உள்ளன. எனவே, அதிக பிள்ளைகள் பெறுவதால் அவர்களை வளர்த்து எடுப்பது கடினம் என்று கூறமுடியாது. பெரும்பாலான அரசாங்கங்கள் புலத்தில் பிள்ளைகளிற்கு விதம்விதமான வசதிகளை செய்து கொடுக்கின்றன. icon_idea.gif //

இது செலவை மட்டும் நினைத்து சொன்னதா??

3500 தான் குடுக்கிறார்கள் என அறிந்தேன். பம்பர் பேபிக்கு(மூன்றாவது குழந்தைக்கு) 8000 எனவும் அறிந்தேன்

அக்காவிற்கு தங்கையும், தங்கைக்கு அக்காவும் துணையாக இருப்ப்பார்கள். தம்பிக்கு அண்ணாவும் அண்ணாவுக்கு தம்பியும் துணையாக இருப்பார்கள். அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கும்போது

அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கும்போது

கலைஞன் பெரிய துணைக்கு துணை ஏதும்? :lol::lol::lol::lol:

Edited by நளன்

கலைஞனுக்கு புலம் என்ற வார்த்தையின் அர்த்தம் இன்னும் புரியவில்லை போலுள்ளது. தலையங்கத்தை புலம் பெயர்ந்து வாழும் என்று மாற்றிவிடுங்கள்.

புலத்தில் வாழும்போது அப்பா, அம்மா, மாமா, மாமி என பல உறவுகள் உடனிருப்பதால் எத்தனை பெற்றாலும் வளர்ப்பதற்கு அவர்கள் துணையுண்டு. ஆனால் புலம்பெயர் வாழ்வில் எத்தனை பெற்றாலும் அவர்களை நல்லமுறையில் வளர்த்தெடுக்கும் பொறுப்பும் எமக்கேயுண்டு. அத்துடன் அநேகமான புலம்பெயர்ந்தவர்கள் ஆண், பெண் இருபாலாரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளுடன் செலவிடும் நேரமும் குறைகின்றது. அதனால் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் பாதிப்புகளேற்பட வாய்புண்டு. இப்படியான நிலைகளில் தான் இன்று எமது பல இளஞ்சிறார்கள் திருடர்களாகவும், போதைப்பொருள் பாவிப்பவர்களாகவும், ரௌடிகளாகவும் மாறி வருவது வேதனையளிக்கின்றது. எனவே எத்தனை பெற்றோம் என்பது முக்கியமல்ல எப்படி வளர்த்தோம் என்பது தான் முக்கியம். எது முக்கியம் எனபதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 க்கு மேல பெத்தா தான்பா நல்லது எமது..அதாவது தமிழ் ஜனத்தொகைய கூட்டலாம் ரு வீட்டுக்கு 5 வாக்கிக்கு மேல இருந்தா அரசியல்லையும் செல்வாக்கு செலுத்தலாம்..மற்றது இங்க அவுஸ்திரேலியால ரு குழந்தைக்கு பிறந்த உடண 8000 டாலர்கள் கொடுக்கின்றார்கள் சோ 5 பெத்தா 40.000 டொலர்கள் கிடைக்கும் அவுஸ்திரேலியா வாழ கள உறவுகளே 5 க்கு மேல் பெறுவீர் வாழ்ககையில் வளம் காண்பீர்..........

உண்மையா உப்படி கதை இருக்குதோ? உந்தக் கதை எனக்குத் தெரியாமல் போச்சே! நான் ஒண்டோட நிறுத்திப் போட்டு நிற்கின்றன். :lol::lol:

*********

Edited by harikalan

ஜெனரல்!!

பேபிகளை பற்றி கதைக்கிற மாதிரி இருக்கு நானும் பேபி தான் ஆனா எனக்கு வளர்ந்தா பிறகு திருமணம் நடந்தா ஒரு 4 காணும் என்று நினைகிறேன் :P அனா நாலும் பொம்மிளை பிள்ளை இருக்க வேண்டும் எனக்கு பொம்பிளை பிள்ளை தான் விருப்பம் அது தான் :lol: ...........ஆனா வாறவா என்ன சொல்லுறா என்று கேட்டு போட்டு மிச்சம் பிறகு எழுதுறன் சரியா......... :P

புலத்தில நாம் எத்தனை பிள்ளைகளையும் பெறலாம் அரசாங்கம் பிள்ளைகளுக்கு தேவையான சலுகை எல்லாவற்றையும் கொடுகிறது ஆகவே பயப்பிட தேவையில்லை பிள்ளையின் எதிர்காலத்தை பற்றி :lol: ...........ஆனா பிள்ளைகளை கூடவாக பெற்றுவிட்டு சிறப்பாக வளர்க்காம விட்டா தான் பிரச்சினையே தொடங்கிறது.........ஜெனரல் சொன்ன மாதிரி 3 வருச காலம் விட்டு பிள்ளை பெற்றா ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு வகுப்பில் படிபார்கள் அவர்கள் எல்லாரையும் சிறந்த வழியில் கொண்டு செல்வது என்றா கொஞ்சம் கஷ்டம் ஏனெனின் மனைவி மற்றும் கணவர் வேலைக்கு போய் கொண்டு அவர்களையும் கண்காணிப்பது இலகுவான காரியமில்லை. :lol: ......இதனால் பிள்ளைகள் தாங்கள் நினைத்த வழியில் சென்று கேடுபவர்களும் உள்ளனர் ஆகவே இந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்!! ;)

மற்றும்படி எல்லோரும் ஒருவிற்கு ஒருவர் துணையாக இருப்பார்கள் என்று வைத்து கொண்டாலும் வளர இங்கே உள்ள பிள்ளைகள் தங்கள் நண்பர்கள் என்று தான் இருப்பார்கள் தவிர அக்கா,தங்கை என்று எல்லாம் இருப்பது மிகவும் குறைவாகவே தான் காணபடுகிறது ஆகவே இது பெரிதாக சாத்தியபடும் அதுவும் புலத்தில் என்று என்னால் எடுத்து கொள்ள முடியாது!! :lol:

மற்றது சுண்டல் அண்ணா கூறிய மாதிரி பணம் கிடைக்கும் என்று பிள்ளைகளை பெறுவது அவுஸ்ரெலியாவில் லெபனிஸ் இனத்தவர்கள் பெருக்கி கொண்டே போகிறார்கள் ஆனால் பிள்ளைகளை கவனிப்பதில்லை பிள்ளைகள் செய்யும் அட்டுழியங்கள் அதிகரித்து செல்கிறதை காணகூடியதாக இருகிறது ஆகவே எத்தனை பிள்ளைகளையும் பெறலாம் அவுஸ்ரெலிய அரசாங்கம் பிள்ளைகளை பெறும்படி சொல்கிறது சனத்தொகை குறைவு என்பதிற்காக அதற்காக பணமும் கொடுகிறது :D .....ஆகவே எத்தனை பிள்ளைகள் பெறுகிறோம் என்பது முக்கியமில்லை எவ்வாறு அவர்களை வளர்க்க போகிறோம் இந்த இயந்திரவாழ்வில் என்பது தான் முக்கியம்......... :)

ஏதோ பேபிக்கு தெரிந்தளவு செப்பினேன் சென்று வருவா ஜெனரலே!!

ஜம்மு பேபி பஞ்-

எத்தனை பிள்ளைகள் பெறுகிறோம் என்பது முக்கியமில்லை அத்தனையும் எப்படி வளர்கிறோம் என்பது தான் முக்கியம்!! :D

அப்ப நான் வரட்டா!!!

  • தொடங்கியவர்

தூயா, பலருக்கு செலவும் ஒரு பிரச்சனை தானே?

நளன் நீங்கள் கேட்பது விளங்கவில்லை. :lol:

வசம்பு, எனக்கு தமிழ் சொல்லிதந்தவர்கள் யாழில் நெடுக்காலபோவான், குறுக்காலபோவான், சபேசன் மாமா போன்றோர். :lol: புலம் என்றால் வெளிநாடு என்பதை நான் யாழுக்கு வந்தபின்பே அறிந்துகொண்டேன். எனவே, இதை இங்குள்ளவர்களிடம் தான் கேட்கவேண்டும் சரியா, பிழையா என்று.

யமுனா, நீங்கள் நண்பர்களுடன் தான் குழந்தைகள் கூடுதலாக பழகுவார்கள், தமது சகோதர, சகோதரிகளுடன் பழகமாட்டார்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள கூடியதாய் இல்லை. இது எந்தவயதில் பொருந்தும்? வாழ்க்கையில் இந்த வயதுக்காலம் எத்தனை சதவீதம்? நான் குழந்தையின் முழு ஆயுளையும் நிலைநிறுத்தி பார்த்து இந்த கருத்தை சொன்னேன்.

எத்தனை பெற்றோம் என்பதை விட எப்படி வளர்த்தோம் என்பது முக்கியமே. இது ஐந்து குழந்தைகளிற்கு மட்டும் அல்ல, ஒரு குழந்தையை உடைய பெற்றோருக்கும் பொருந்தும். ஒரு குழந்தையாக வீட்டில் செல்லப்பிள்ளையாக வளர்ந்து பின் ஊரில் அட்டகாசங்கள் செய்யும் பிள்ளைகள் பற்றி உங்களுக்கு தெரியாதா?

எனக்கும், பெண் பிள்ளைகளே விருப்பம். ஆனால், எல்லாம் பெண்பிள்ளைகள் என்றால் பிறகு வீட்டுக்கு செக்கியூரிட்டி கமரா பூட்டவேண்டி வருமே?

குருவே நான் பார்ததிலே ஒரு 10- 15 வயசு வரை சகோதரர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் தங்கள் விசயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை கவனிக்க கூடியதாக இருகிறது!!ஆனால் ஒரு 18 வயசிற்கு அப்பால் போக அவர்கள் தாங்கள் தங்கள் நண்பர்கள் என்பதோடு நிறுத்துவதோடு தங்கைக்கு ஒரு பாய் தான் :lol: .........இதை நான் பல சந்தர்பங்களிளும் அவதானித்தேன் அது தான் கூறினேன்.......வெவ்வெறுபட்ட அவதானங்கள் போல இருக்கு மறுபடி நாளை விரிவாக ஆராய்கிறேன்.............யாரிட்ட அடி வாங்கிறேனோ தெரியாது!! :lol:

நிச்சயமாக ஒரு குழந்தை இல்லை 5 பிள்ளை பெற்றவர்களுக்கும் பொருந்தும் குருவே ஆனாலும் நாம் வாழும் இந்த புல வாழ்வில் எல்லாரையும் கவனிகிறது கஷ்டம் என்பதில் சொன்னேன் :lol: .........உதாரணதிற்கு எம் பெற்றோர் எங்களுடன் இருந்தால் எங்கள் பிள்ளைகளை பார்பார்கள் இல்லாவிடில் நானும் வேலைக்கு போய் மனைவிக்கும் வேலைக்கும் போகும் சந்தர்பத்தில் அந்த 5 பிள்ளைகளையும் பார்கிறது என்பது சற்று கடினம் தானே!! B)

ஓ உங்களுக்கும் பெண் பிள்ளைகள் விருப்பமா!!செக்ரியூட்டி கமரா இப்ப ஆம்பிளை பிள்ளைகளுக்கு தான் தேவை!! ;)

  • தொடங்கியவர்

செக்ரியூட்டி கமரா இப்ப ஆம்பிளை பிள்ளைகளுக்கு தான் தேவையா? :lol::lol: ஏன் ஓசியில ஏதாவது பிரச்சனையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் அவர்களே உங்கட கேள்விக்கு சரியான பதில் எது என்டு எனக்கு தெரியாது ஆனா என்னை பொறுத்த வரையில் நாமிருவர் நமக்கிருவர் தான்.

பிள்ளைகளை பெறுவதை விட அவைகளை நல்ல மாதிரி வளைக்க வேணும் நாளைக்கு அவங்கள் எங்களை பார்த்து நானா பெறச்சொல்லி கேட்டன் என்டு கேட்கிற நிலமையில வைக்க கூடாது. அதனால எங்கட வேலையளுக்கு மத்தியில் அவர்களுடனும் காணுமான அளவு நேரம் செலவளிக்க வேணுமெண்டா 2 தான் சரி கன பிள்ளையள் இருந்தா இது கஷ்டம் என நினைக்கிறன்.

அதனால நம்ம வோட்டு 2 பிள்ளையளுக்கு தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரெலியாவின் இருக்கும் ஈழதமிழர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் 2 மிஞ்சி பெறமாட்டார்கள் காரணம் இங்கு குழந்தை வளர்தெடுப்பது என்பது இலகுவான விடயம் இல்லை காரணம் இங்கு பணிபெண்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்களுக்கு அதிக சலுகைகளும் பணமும் கொடுக்க வேண்டும் அதனால் இதை பெரிதும் விரும்பமாட்டார்கள்,பெற்றோர்

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பெற்றுகிறது பெண்கள். அவங்களே (தூயா பொம்மியைத் தவிர.. கறுப்பி அக்காவ விடுங்க.. அவா கரை கண்ட ஆள் போல தெரியுது. :icon_mrgreen: ) எதுவும் சொல்லேல்ல. ஆண்களைப் பாருங்க... லைன் கட்டி நிக்கிறதை..! :lol:

கலியாணம் செய்யுறது விடுறது.. குழந்தை பெற்றுகிறது..விடுறது.. எத்தனை பெத்துக்கிறது.. இதெல்லாம் தீர்மானிக்க வேண்டியது.. அம்மணிகள். ஆண்களுக்கு என்ன வேலை... சாப்பிட்டு சாப்பிட்டு காரியத்தை முடிச்சிட்டு.. தூங்க வேண்டியதுதான். வேதனையும் வலியும்.. யாருக்கோ சொந்தமாக.. இவை கொண்டாடுவினம்.

பெண்களுக்கு திடீர் சப்போட்டில்ல.. உண்மையைச் சொல்ல முனைஞ்சன். :D:unsure:

நான் இப்ப காடு வாவா என்றிருக்கிற தனிக்கட்டை. சோ.. குழந்தையென்ன குட்டியென்ன... குடும்பமென்ன... சிவனே என்றிருக்கிறன். பாசக் கயிறு எப்ப வரும் எண்டு காத்திட்டு. அதால வாக்குப் போடல்ல. :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலேயே பெரியசெல்வம் பிள்ளைச்செல்வந்தான்.4,5 பிள்ளைகள் இருந்தால் அவர்களது பிற்காலவாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே பெரியசெல்வம் பிள்ளைச்செல்வந்தான்.4,5 பிள்ளைகள் இருந்தால் அவர்களது பிற்காலவாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

தென்னைய நட்டா இளநீரு பிள்ளையை பெற்றா.. கண்ணீரு. இப்படியும் சொல்லுறாங்க கு.சா :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப காடு வாவா என்றிருக்கிற தனிக்கட்டை. சோ.. குழந்தையென்ன குட்டியென்ன... குடும்பமென்ன... சிவனே என்றிருக்கிறன். பாசக் கயிறு எப்ப வரும் எண்டு காத்திட்டு. அதால வாக்குப் போடல்ல. :P

பாத்து.. பாசக்கயித்தைப் பாத்துக்கொண்டிருக்கெக்குள்

நாம் இருவர் நமக்கு மூவர்

கனடாவில் தமிழர் தகவல் சஞ்சிகை ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்

" 2005 ஆண்டு ஐனவரி 01 திகதிக்கு பின்னர் திருமணம் புரிந்த அல்லது புரியும் தம்பதியினர் திருமணத்திகதியில் இருந்து 6 வருடங்களுக்குள் 3 குழந்தைகளைப் பெறுவார்களானால் $5000.00 கனடிய டாலர்களை ஊக்குவிப்பு பணமாக பெறுவர்."

விரிவான விபரங்களைப் பெற 416 920 9250

ஹீ ஹீ இந்த தகவல் உண்மையோ?? :D:lol::lol:

:icon_mrgreen::lol::unsure::o

Edited by Rasikai


ஹீ ஹீ இந்த தகவல் உண்மையோ??	



5000 ஆயிரம் வாங்ககிற பிளான்போல கிடக்கு

ஹீ ஹீ இந்த தகவல் உண்மையோ?? :D:lol::lol:

:icon_mrgreen::lol::unsure::o

ஏன் மீண்டும் அங்கை போகவா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தை பெற்றுகிறது பெண்கள். அவங்களே (தூயா பொம்மியைத் தவிர.. :icon_mrgreen: ) எதுவும் சொல்லேல்ல. ஆண்களைப் பாருங்க... லைன் கட்டி நிக்கிறதை..! :lol:

கலியாணம் செய்யுறது விடுறது.. குழந்தை பெற்றுகிறது..விடுறது.. எத்தனை பெத்துக்கிறது.. இதெல்லாம் தீர்மானிக்க வேண்டியது.. அம்மணிகள். ஆண்களுக்கு என்ன வேலை... சாப்பிட்டு சாப்பிட்டு காரியத்தை முடிச்சிட்டு.. தூங்க வேண்டியதுதான். வேதனையும் வலியும்.. யாருக்கோ சொந்தமாக.. இவை கொண்டாடுவினம்.

பெண்களுக்கு திடீர் சப்போட்டில்ல.. உண்மையைச் சொல்ல முனைஞ்சன். :D:unsure:

நெடுக்ஸ் அண்ணை உண்மையோ பொய்யோ இப்படிச்சொல்லி நெஞ்சைத் தொட்டிட்டியள்!!

குழந்தைகள் பெற்றுக்கொள்வது நல்லதா? அல்லது அங்கு போரினால் பெற்றோரை இழந்து நிற்கும் பாலகர்களைத் தத்தெடுத்துக்கொள்வது நல்லதா? என்று யோசிக்கிறேன். கல்யாணம் கட்டாமல் தனியாக இருந்தால் நிச்சயம் என் முடிவை நிறைவேற்றுவேன்! ஆனால் நமக்கு வந்து சேருவதும் நம்மைப்போலவே நினைக்கணுமே!!..

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னிசை அக்கா உங்களுக்கு 2?

சா 40000 உங்களுக்கு கிடைக்காம போக போதே..

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே சகோதர சகோதரிகளே சிங்களவன் திட்டம் போட்டு எமது இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறான்.குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவும்.இது எமது நாட்டுக்கு நீங்கள் செய்யும் உதவியாக நினையுங்கள்.இதில் நான்கு ஐந்து என்றெல்லாம் கதைக்க கேட்க நன்றாகத் தான் இருக்கு.ஆனால் நடை முறையில் திருமணம் செய்ய முன்னரே கர்ப்பத் தடையைப் பற்றி நன்கு ஆராய்ந்து ஐந்து ஆறு வருடங்களுக்கு குழந்தையே பெறக் கூடாதென முடிவெடுக்கிறார்கள்.பின்னர் குழந்தை வேணும் என்கிற போது குழந்தைப் பாக்கியம் இல்லாமல் டாக்டர்கள் கோவில் குளம் என்று கண்ணீரும் கம்பலையுமாக பணத்தை செலவு செய்து அலைகிறாங்க.

முக்கியமாக குழந்தை பெறுபவர்களுக்கு

கூடுதலான இடைவெளியில்லாமல் பெற்றால் நண்பர்களாக படிப்பு சாப்பாடு எல்லாவற்றிலும் போட்டியாக வளருவார்கள்.பெரிய இடைவெளி வந்தால் ஆளக்காள் அன்னியர் போலவே வளருவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.