Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடுவது நன்றி கெட்டத்தனம் – இதனை ஏற்றுக் கொள்ள முடியாது ; ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் கடும் சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை என்று சோமாலியா என்ற நிலையில் தான் இருந்திருக்கும். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் இருந்திருக்காது. 

ஆகவே நன்றி கெட்டத்தனமாக இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. என்றார் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்.

https://www.madawalaenews.com/2023/11/i_183.html

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, colomban said:

ஆமாம் எற்றுகொள்ள வேண்டும் ..தேவையற்ற பகைமை வளர்த்து எடுக்க கூடாது   மற்றும் முக்கியமாக  தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் கவலைப்பட வாய்ப்புகள் நிறைய உண்டு  அவர்களை நாங்கள் பகைக்கலாமா.??  

  • கருத்துக்கள உறவுகள்

இராசதந்திரிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டது,......🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

விளையாட்டென்றால் இரு அணிகளுக்கும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.

வெல்லும் அணிக்கு ஆதரவாக கொண்டாடத் தான் செய்வார்கள்.

2 hours ago, Kapithan said:

இராசதந்திரிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டது,......🤣

அங்கேயுள்ள சொத்துப்பத்துக்கு விசுவாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

ஆமாம் எற்றுகொள்ள வேண்டும் ..தேவையற்ற பகைமை வளர்த்து எடுக்க கூடாது   மற்றும் முக்கியமாக  தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் கவலைப்பட வாய்ப்புகள் நிறைய உண்டு  அவர்களை நாங்கள் பகைக்கலாமா.??  

15 hours ago, colomban said:

ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரவிந்தகுமார் கூறியதைப்போல அவுஸ்திரேலியா வென்றதைவிட இந்தியா தோற்றது உண்மையாகவே சந்தோசமாக இருந்தது. இல்லாவிட்ட்தால் இந்த மோடி தனது வெற்றியாகவே கொண்டாடி தேர்தலிலும் பயன்படுத்தி இருப்பார். இந்த அரசு தமிழ் நாட்டு தமிழனின் முன்னேற்றத்துக்கு எதிராக இருக்கும் அரசு. இந்த தோல்வியுடன் மோடி அரங்கின் பெயரை நேரு அரங்கு என்று மோடி அரசு மாற்றி விடடதாம். தோற்றால் நேரு, வென்றால் மோடி. இந்திய அணியின் பெருமைக்கு விழுந்த பலத்த அடி.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போனால் பிறகு  பரிசளிப்பு வைபவத்தை ஆரம்பித்தல், மோதி கம்மிக்ஸை அவமானப்படுத்தல் இப்படியான  பழக்க வழக்கங்களுக்கு இந்தியா போட்டிகளை நடாத்த தகுதியானதா தெரியவில்லை.
தனக்கு விருப்பமான குழுவுக்கு வெடி கொழுத்த மக்களுக்கு சகல உரிமையும் உண்டு.

On 20/11/2023 at 06:17, Kapithan said:

இராசதந்திரிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டது,......🤣

பல்கி பெருகி விட்டது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

தனக்கு விருப்பமான குழுவுக்கு வெடி கொழுத்த மக்களுக்கு சகல உரிமையும் உண்டு.

நீங்கள் சொன்ன மாதிரி  சொந்த நாட்டில் உள்ள தனக்கு விருப்பமான  குழுவுக்கு வெடி கொழுத்தி கொண்டா மக்களுக்கு சகல உரிமையும் உண்டு. ஆனால் இரண்டு வெளிநாடுகள் விளயாடும் போது ஒரு நாட்டை வெறுப்பேற்றுவதற்காக இலங்கையில் உள்ளவர்கள் செய்யலாமா. பாக்கிஸ்தான் வெற்றி பெற்றால் மதம் என்ற காரணத்திற்காக முஸ்லிம்கள் வெடி கொழுத்தி கொண்டாடுவதை ஏற்று கொள்ள முடியுமா. தமிழர்கள் கொல்லபட்ட போது முஸ்லிம்கள் வெடி கொழுத்தி கொண்டாடியதற்காக நாம் கவலைபட்டோம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொஞ்சகாலம் முதல் இலங்கையில் நடந்த போட்டியில் அரையிறுதியில் இலங்கையும் பங்களாதேசும் விளையாடி இலங்கை தோல்வியுற்றது.

இறுதிப் போட்டியில் இந்தியாவும் பங்காளதேசும் விளையாடிய போது இலங்கை ஆதரவாளர்களும் வீரர்களும் பங்காளதேஸ் தங்களுக்கு அடித்து விட்டதென்பதற்காக இந்தியாவுக்கு ஆதரவாக கத்தி குளறி ஆர்ப்பாட்டம் பண்ணி விளையாடவிடாமல் எவ்வளவோ சேட்டைகள் செய்தார்கள்.

இதை என்னவென்று சொல்வது?

இரண்டுமே வெளிநாட்டினர்.அப்ப அணி வீரர்களோ ஆதரவாளர்களோ பொம்மையாட்டம் பேசாமல் இருந்திருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இதுதான் போட்டியின் கடைசி நிமிடங்கள்.

பங்களாதேஸ் தோற்றதற்காக இலங்கை எவ்வளவு கொண்டாடுகிறது.

இதில் இந்தியா தோற்க வேண்டியது  One man Army கார்த்திக்கால் வென்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மாதிரி  சொந்த நாட்டில் உள்ள தனக்கு விருப்பமான  குழுவுக்கு வெடி கொழுத்தி கொண்டா மக்களுக்கு சகல உரிமையும் உண்டு. ஆனால் இரண்டு வெளிநாடுகள் விளயாடும் போது ஒரு நாட்டை வெறுப்பேற்றுவதற்காக இலங்கையில் உள்ளவர்கள் செய்யலாமா. பாக்கிஸ்தான் வெற்றி பெற்றால் மதம் என்ற காரணத்திற்காக முஸ்லிம்கள் வெடி கொழுத்தி கொண்டாடுவதை ஏற்று கொள்ள முடியுமா. தமிழர்கள் கொல்லபட்ட போது முஸ்லிம்கள் வெடி கொழுத்தி கொண்டாடியதற்காக நாம் கவலைபட்டோம் தானே

இங்கு கிறிக்கட்டை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். யாரும் எந்த  கிறிக்கட் குழுவுக்கும் ஆதரவு தெரிவிக்க முடியும். வெடி கொழுத்துவது வெறுப்பேற்றல் சிலருக்கு ஆகலாம். கை தட்டுவது சிலருக்கு வெறுப்பேற்றலாம். விசிலடிப்பது இன்னும் சிலருக்கு வெறுப்பேற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மாதிரி  சொந்த நாட்டில் உள்ள தனக்கு விருப்பமான  குழுவுக்கு வெடி கொழுத்தி கொண்டா மக்களுக்கு சகல உரிமையும் உண்டு. ஆனால் இரண்டு வெளிநாடுகள் விளயாடும் போது ஒரு நாட்டை வெறுப்பேற்றுவதற்காக இலங்கையில் உள்ளவர்கள் செய்யலாமா. பாக்கிஸ்தான் வெற்றி பெற்றால் மதம் என்ற காரணத்திற்காக முஸ்லிம்கள் வெடி கொழுத்தி கொண்டாடுவதை ஏற்று கொள்ள முடியுமா. தமிழர்கள் கொல்லபட்ட போது முஸ்லிம்கள் வெடி கொழுத்தி கொண்டாடியதற்காக நாம் கவலைபட்டோம் தானே

என்ன சுருதி மாறுது,..? 

  • கருத்துக்கள உறவுகள்

திரு. அரவிந்த குமார் அவர்களின் கருத்து சரியாக இருக்கலாம் - அந்த 'நன்றி கெட்டதனம்' குறிப்பைத் தவிர.

        அதேசமயம் இது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி, இந்தியாவில் சிலர் நாட்டுப்பற்றையும் விளையாட்டில் வெற்றி பெறும் ஆசையையும் முடிச்சுப் போடுவது அற்பத்தனம். உண்மையான விளையாட்டு ரசிகர்கள் இந்தியராயிருப்பினும், ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தையும் ரசித்துப் பாராட்டியிருக்க வேண்டும். அந்த விவேகம் இந்தியத் திருநாட்டின் பிரதமருக்குக் கூட இல்லை. இந்தியா வெற்றி பெற்றிருந்தால், கோப்பையை அயோத்தி இராமர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூசை செய்து உலகளவில் கேவலப்படுத்தி இருப்பார்கள். ஆடுகளத்தில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் முதலானவை கீழ்த்தரமான அரசியல் முன்னெடுப்பெடுப்பாகத் தோன்றுகின்றன (ஈழ விவகாரம், பாலஸ்தீன அண்மை நிலைப்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் முதிர்ச்சியின்மை இவையெல்லாம் தனிக்கதைகள்).

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

திரு. அரவிந்த குமார் அவர்களின் கருத்து சரியாக இருக்கலாம்.

        அதேசமயம் இது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி, இந்தியாவில் சிலர் நாட்டுப்பற்றையும் விளையாட்டில் வெற்றி பெறும் ஆசையையும் முடிச்சுப் போடுவது அற்பத்தனம். உண்மையான விளையாட்டு ரசிகர்கள் இந்தியராயிருப்பினும், ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தையும் ரசித்துப் பாராட்டியிருக்க வேண்டும். அந்த விவேகம் இந்தியத் திருநாட்டின் பிரதமருக்குக் கூட இல்லை. இந்தியா வெற்றி பெற்றிருந்தால், கோப்பையை அயோத்தி இராமர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூசை செய்து உலகளவில் கேவலப்படுத்தி இருப்பார்கள். ஆடுகளத்தில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் முதலானவை கீழ்த்தரமான அரசியல் முன்னெடுப்பெடுப்பாகத் தோன்றுகின்றன (ஈழ விவகாரம், பாலஸ்தீன அண்மை நிலைப்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் முதிர்ச்சியின்மை இவையெல்லாம் தனிக்கதைகள்).

மிகச்சரியான கருத்து.

இலங்கையில் இன்று கிரிக்கெற்றின் சீரழிவுக்கு காரணமே அரசியல் உள்ளே புகுந்து கொண்டது தான்.

அதுவே இந்தியாவிலும் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2023 at 12:17, Kapithan said:

இராசதந்திரிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டது,......🤣

இதில் எந்தவொரு கருத்தையும்  நான் காணவில்லை   ஆனால் மேற்படி பதில்   ஆனது இந்தியா நடந்த  நடந்து கொள்ளும்  முறைமை மிகச்சிறந்த சரியானது என்று உறுதி செய்கிறது   அது மட்டுமல்ல அவ்வாறே எதிர்காலத்திலும் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2023 at 15:08, ஈழப்பிரியன் said:

வெல்லும் அணிக்கு ஆதரவாக கொண்டாடத் தான் செய்வார்கள்.

ஆமாம் சரியான கருத்து   இந்தியா தோல்வியாகையால்.  தோல்விக்கு கொண்டாட்டம்   அதுவும் இலங்கை தமிழரின் ஒரு பகுதியினர் மட்டுமே   அவ்வளவு ஒற்றுமை     இலங்கை தமிழரின் ஒரு பகுதியினர். இந்தியாவுக்கு எதிராக செய்யும் கொண்டாட்டம் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது செய்ய போவதுமில்லை   ஆனால் ஒவ்வொரு கொண்டாட்டமும் இலங்கை தமிழருக்கு ஆன தீர்வை  ஒவ்வொரு பத்து ஆண்டுகள் பின்னேக்கி தள்ளும்.  இந்தியாவுக்கு எதிராக போராடினால் இலங்கை தமிழரின் தீர்வுக்கு எதிராக போரடுவது ஆகும்,...இந்தியா தோல்வி என்று கொண்டாட்டம் போட்டால்   இலங்கை தமிழருக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கொண்டாட்டம் போடுவது ஆகும் உலக நாடுகளை பார்த்து இந்தியா பயப்படவில்லை  உதாரணமாக கனடா    நாடே இல்லாத  வெறும்  25 இலட்சம் இலங்கை தமிழனை பார்த்த பயப்படும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இதில் எந்தவொரு கருத்தையும்  நான் காணவில்லை   ஆனால் மேற்படி பதில்   ஆனது இந்தியா நடந்த  நடந்து கொள்ளும்  முறைமை மிகச்சிறந்த சரியானது என்று உறுதி செய்கிறது   அது மட்டுமல்ல அவ்வாறே எதிர்காலத்திலும் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது 

ஐயா சவுத் புளக்கோ 😁

  • கருத்துக்கள உறவுகள்

வெடி கொளுத்தி கொண்டாடியது சிங்களவர்கள். 

தமிழர்கள் அல்ல. ஆனால் கண்டனம் தெரிவித்தது தமிழர். ஆகவே. தமிழர்களோயென்று நினைக்க வைக்கிறது. 

கன்னடம் வைத்த அமைச்சர், யாருக்கு என்றும் சொல்லி இருக்கலாம். சொல்லி இருந்தால், ஆளுக்கு திட்டு விழுந்திருக்கும். ஆக... வடிவேலு ஸ்டைலியே, நான் உங்களை சொல்வதில்லை, என்பது போல... சொல்லி இருக்கிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஐயா சவுத் புளக்கோ 😁

இது கருத்துகள் இல்லை   எனவேதான் என்னால் கருத்துகள் எழுத முடியவில்லை எனபதை மிகுந்த கவலையுடன் தெரியப்படுத்துகிறேன். 

முக்கிய குறிப்பு,.இது யாழ் கருத்து களம். மாறாக ஊர் வாசிகசாலையிலுளள கரும்பலகை இல்லை  கன்னா பின்னா. என்று மனம் போன போக்கில்  கிறு’க்க 🙏🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

இது கருத்துகள் இல்லை   எனவேதான் என்னால் கருத்துகள் எழுத முடியவில்லை எனபதை மிகுந்த கவலையுடன் தெரியப்படுத்துகிறேன். 

முக்கிய குறிப்பு,.இது யாழ் கருத்து களம். மாறாக ஊர் வாசிகசாலையிலுளள கரும்பலகை இல்லை  கன்னா பின்னா. என்று மனம் போன போக்கில்  கிறு’க்க 🙏🤣😂

இடைக்கிடை மனம்விட்டு  சிரிக்கவும் வேண்டும் கண்டியளோ🤣

1 hour ago, Nathamuni said:

வெடி கொளுத்தி கொண்டாடியது சிங்களவர்கள். 

தமிழர்கள் அல்ல. ஆனால் கண்டனம் தெரிவித்தது தமிழர். ஆகவே. தமிழர்களோயென்று நினைக்க வைக்கிறது. 

கன்னடம் வைத்த அமைச்சர், யாருக்கு என்றும் சொல்லி இருக்கலாம். சொல்லி இருந்தால், ஆளுக்கு திட்டு விழுந்திருக்கும். ஆக... வடிவேலு ஸ்டைலியே, நான் உங்களை சொல்வதில்லை, என்பது போல... சொல்லி இருக்கிறார். 🤣

அவர் 

1) இந்தியாவுக்கு தனது நன்றி விசுவாசத்தைக் காட்ட விளைகிறார.

2) இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கச் சொல்கிறார். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

அவர் 

1) இந்தியாவுக்கு தனது நன்றி விசுவாசத்தைக் காட்ட விளைகிறார.

2) இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கச் சொல்கிறார். 

😁

யாரை எண்டது முக்கியம்.

பிச்சை எடுத்த காலத்தில் ஓடி வந்து உதவினது இந்தியா என்று சொல்வது, சிங்களவருக்கு.

ஆனால், சிங்களவர்களே இப்படி வெடி கொளுத்தி கொண்டாடுவது சரியல்ல என்று சொல்ல தயிரியம் இல்லை பாருங்கோ.

பொத்தாம், பொதுவா சொல்லுறாராம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2023 at 07:22, சுப.சோமசுந்தரம் said:

இந்தியாவில் சிலர் நாட்டுப்பற்றையும் விளையாட்டில் வெற்றி பெறும் ஆசையையும் முடிச்சுப் போடுவது அற்பத்தனம். உண்மையான விளையாட்டு ரசிகர்கள் இந்தியராயிருப்பினும், ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தையும் ரசித்துப் பாராட்டியிருக்க வேண்டும். அந்த விவேகம் இந்தியத் திருநாட்டின் பிரதமருக்குக் கூட இல்லை.

ஈழதமிழ் விளையாட்டு இரசிகர்களில் பலர் இந்திய விளையாட்டு இரசிகர்களின் அதே மனநிலை கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன் அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழதமிழ் விளையாட்டு இரசிகர்களில் பலர் இந்திய விளையாட்டு இரசிகர்களின் அதே மனநிலை கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன் அய்யா.

உண்மை. பிரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் கால்பந்து இரசிகர்கள் என்பதைத் தாண்டி வெறியர்கள் அதிகம் உண்டு. மக்கள் பண்பட வேண்டும்; பண்படுத்தப்பட வேண்டும்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.