Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா🙏...........

  • Replies 154
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, பையன்26 said:

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா🙏...........

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

உண்மைதான். @பெருமாள்க்கும் ஆளை தெரியும் என நினைக்கிறேன். ஒரு தமிழ் ஆள், அவரின் வியாபார இலண்டனில் உள்ள சின்ன சின்ன கடைகளில் fruit machine எனும் லொத்தர் மிசின் வைத்து காசு பார்ப்பது. ஆள் பெரிய லெவலில் வந்து விட்டார்.

அவரிடமும் எங்கட ஆக்கள் சிலர் போய் அண்ணை உது கறுமம் எல்லோ எண்டு கேட்டிருக்கினை.

அவரும் சொன்னாராம்…அது அவரவர் தனிப்பட்ட விருப்பில் விளையாடுவது. அவரின் சொந்த பிரச்சனை, உமெக்கேன் தம்பி எரியுது எண்டு.

அவர் மட்டத்தில் அவருக்கு பசிக்கும் எனும் போது, அது அவரின் தொழில்தர்மம், நியாயம் என்பது சரிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, குமாரசாமி said:

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

 ஜேர்மனியில் ஒரு சில தகவல் மற்றும் பிரச்சார கூட்டங்களில் நடைபெறும் உரையாடல்களை களவாக பதிவு செய்து அதை அரச நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

3 minutes ago, goshan_che said:

மேலை நாடுகளில் அரச/பண தொழில் தரவுகளை பகிரங்கமாக வெளியிட்டால் 12 வருடம் சிறைத்தண்டனை. கவனமாக இருக்க வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 ஜேர்மனியில் ஒரு சில தகவல் மற்றும் பிரச்சார கூட்டங்களில் நடைபெறும் உரையாடல்களை களவாக பதிவு செய்து அதை அரச நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

ஒமாம் கேள்வி பட்டனான். இலண்டனில் 2009 க்கு முதலே அவர்கள் சொத்தை தைரியமா ஆட்டையை போட்ட ஆட்களும் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

 அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

சில‌ ம‌னித‌ர்க‌ளுக்கு தாத்தா துரோக‌ம் அவ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தில் ஊரிய‌து.........இப்ப‌டியான‌ ஆட்க‌ளை அடையால‌ம் க‌ண்டு வில‌கி நிக்க‌னும்................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

ஒமாம் கேள்வி பட்டனான். இலண்டனில் 2009 க்கு முதலே அவர்கள் சொத்தை தைரியமா ஆட்டையை போட்ட ஆட்களும் இருந்தார்கள்.

ஆட்களை தெரிந்தால் வெளியே சொல்லுங்கள்.உங்களுக்கு மடியில் கனமில்லாமல் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

சில‌ ம‌னித‌ர்க‌ளுக்கு தாத்தா துரோக‌ம் அவ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தில் ஊரிய‌து.........இப்ப‌டியான‌ ஆட்க‌ளை அடையால‌ம் க‌ண்டு வில‌கி நிக்க‌னும்................

விலகி நிற்பதும் மட்டும் இல்லை அடையாளம் காட்டவும் வேணும்.

ஆனால் பகிடி என்ன எண்டால் கையும் களவுமா ஆதாரத்தோடு பிடித்து காட்டினாலும், பல பழுத்த கொள்கைவாதிகள் என காட்டி கொள்வோர் கூட அப்படியான துரோக கும்பல்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்கள்.

இது என் வாழ்நாளில் நான் கற்ற பாடம்.

தியாகிகள் எல்லாம் 2009 ஓடு போய்விட்டார்கள் பையா.

இப்ப மிஞ்சி இருப்போர் எல்லாம் வெறும் தருணம் தப்பிகள் மட்டும்தான்.

11 hours ago, குமாரசாமி said:

ஆட்களை தெரிந்தால் வெளியே சொல்லுங்கள்.உங்களுக்கு மடியில் கனமில்லாமல் இருக்கும்

ஆட்களை தெரியாது. ஆனால் ஒரு வழக்கு நடந்து தீர்ப்பும் வந்தது. ஒருவர் அல்லது இருவர் சிறை போனார்கள்.

இலண்டன் ஆட்கள் யார் என நான் உட்பட யாழில் ஏலவே பலர், அப்போதும், இப்போதும் பல திரிகளில் எழுதி உள்ளார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தியாகிகள் எல்லாம் 2009 ஓடு போய்விட்டார்கள் பையா.

இப்ப மிஞ்சி இருப்போர் எல்லாம் வெறும் தருணம் தப்பிகள் மட்டும்தான்.

தியாகிகள் இனி வரமாட்டார்கள்  இருப்பவர்களும் ஏதோ ஒரு வழியில் சாக்குக்குள் போட்டு மூடி துவைக்கப்படுவார்கள்😭

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தியாகிகள் இனி வரமாட்டார்கள்  இருப்பவர்களும் ஏதோ ஒரு வழியில் சாக்குக்குள் போட்டு மூடி துவைக்கப்படுவார்கள்😭

இப்படியாக கிடைக்கும் சந்தர்பங்களை வைத்து, ஏதோ ஒரு வகையில் ஏமாற்றத்துக்கு ஆளாகிய, ஆனால் இதய சுத்தியாக தேசியத்தை நேசிக்கும் ஆட்களை சாக்குக்குள் போட்டு முக்கும் ஆட்கள்தான், நான் கீழே சொல்லி உள்ள நபர்களுடன் கூட்டு சேர்ந்து கும்மி அடிப்பது.

கும்மி அடிப்பது மட்டும் இல்லை - நீங்கள் உங்களுக்கு விரும்பாத கருத்தை சொன்னதால் அவரை குறிவைக்கிறீர்கள் என எம்மையே குற்றமும் சொல்வார்கள்.

2009 க்கு பின் பலரில் பல மாற்றம்.

யாழிலும்.

11 hours ago, goshan_che said:

ஆனால் பகிடி என்ன எண்டால் கையும் களவுமா ஆதாரத்தோடு பிடித்து காட்டினாலும், பல பழுத்த கொள்கைவாதிகள் என காட்டி கொள்வோர் கூட அப்படியான துரோக கும்பல்களுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்படியாக கிடைக்கும் சந்தர்பங்களை வைத்து, ஏதோ ஒரு வகையில் ஏமாற்றத்துக்கு ஆளாகிய, ஆனால் இதய சுத்தியாக தேசியத்தை நேசிக்கும் ஆட்களை சாக்குக்குள் போட்டு முக்கும் ஆட்கள்தான், நான் கீழே சொல்லி உள்ள நபர்களுடன் கூட்டு சேர்ந்து கும்மி அடிப்பது.

கும்மி அடிப்பது மட்டும் இல்லை - நீங்கள் உங்களுக்கு விரும்பாத கருத்தை சொன்னதால் அவரை குறிவைக்கிறீர்கள் என எம்மையே குற்றமும் சொல்வார்கள்.

2009 க்கு பின் பலரில் பல மாற்றம்.

யாழிலும்.

நீங‌கள் யாழில் இணைந்த‌தே 2013க‌ளில்.............ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மாற்ற‌ம் எப்ப‌டி தெரிந்த‌து😜.............

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பையன்26 said:

நீங‌கள் யாழில் இணைந்த‌தே 2013க‌ளில்.............ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மாற்ற‌ம் எப்ப‌டி தெரிந்த‌து😜.............

உங்களுக்கு மறுபிறவி கோட்பாட்டில் நம்பிக்கை இல்லையா🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

நீங‌கள் யாழில் இணைந்த‌தே 2013க‌ளில்.............ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மாற்ற‌ம் எப்ப‌டி தெரிந்த‌து😜.............

இனிமேல் உப்புடி குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது எண்டதுக்காக ரெட் லேபல் அடிச்சு விட்டிருக்கிறன் 🤣😂😁

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்துக்கு காசு சேர்க்கும்போது இரண்டு விதமாக சம்பவங்கள் நிகழ்ந்தன..

இயக்கத்துக்கு என்று சொல்லி சேர்த்த காசு இயக்கத்திடமே கொடுக்கப்பட்டது.. இப்படி செய்யப்பட்டதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.. ஏனெனில் இயக்கத்துக்குதான் காசு போகின்றது அதற்குதான் நாமும் கொடுக்கிறோம் என்ற தெளிவுடன் கொடுக்கப்பட்ட காசு அது எதை சொல்லி சேர்க்கப்பட்டதோ எதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதோ அதை சென்றடைந்தது.. அதனால் இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை கேட்கவும் எந்த நியாயமும் இல்லை.. இது கொடுப்பவர்களால் விரும்பி கொடுக்கப்பட்டு அது சேரவேண்டிய இடத்தை போய் சேர்ந்தது..

இரண்டாவது சந்தர்ப்பம் இயக்கத்துக்கு என்று கேட்டு இயக்கத்துக்கு கொடு என்று கொடுக்கப்பட்டு அது இயக்கத்தை சென்றடையாமல் இடையில் உள்ளவர்களால் ஆட்டய போடப்பட்டது.. இதுவே விமர்சனத்துக்கும் கேள்விக்கும் இன்று வரை உள்ளாகி இருக்கிறது.. இதை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது..

——-

நாம் தமிழர் கட்சிக்கு என்று ஈழத்தமிழர்களிடம் நிதி சேர்க்கப்படுவதாக நான் எங்குமே அறியவுமில்லை கண்ணால் பார்த்ததும் இல்லை நண்பர்கள் உறவினர்கள் என்று யாரும் இதுவரை சொன்னதும் இல்லை..

இங்கு சிலர் சொல்வதுபோல் நிதி சேர்க்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்..

அந்த நிதி நாம் தமிழர் கட்சிக்கு என்று கேட்கப்பட்டு கொடுத்தவரும் சுயநினைவுடன் நாம் தமிழர் கட்சிக்கு கொடு என்று கொடுத்து அது நாம் தமிழர் கட்சியை சென்றடைந்தால் அதை இடையில் இருக்கும் யாரும் கேட்க எந்த அருகதையும் இல்லை அதற்கு நாம் தமிழர் கட்சியோ அதன் உறுப்பினர்களோ பதில் சொல்லி நேரம் விரயமாக்கவேண்டிய அவசியமும் இல்லை..

அப்படி நாம் தமிழர் கட்சிக்கு என்று கொடுக்கப்பட்ட காசு அந்த கட்சியை சென்றடையாமல் இடையில் இருப்பவர்களால் ஆட்டையை போடப்பட்டால் கண்டிப்பாக அதை கேட்க அனைவருக்கும் அருகதை உண்டு.. அப்படி நிகழ்ந்த சம்பவங்கள் இருந்தால் எழுதுவதில் நியாயம் உண்டு..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இரண்டாவது சந்தர்ப்பம் இயக்கத்துக்கு என்று கேட்டு இயக்கத்துக்கு கொடு என்று கொடுக்கப்பட்டு அது இயக்கத்தை சென்றடையாமல் இடையில் உள்ளவர்களால் ஆட்டய போடப்பட்டது.. இதுவே விமர்சனத்துக்கும் கேள்விக்கும் இன்று வரை உள்ளாகி இருக்கிறது.. இதை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது..

ஜனவரி 2009 வரை இப்படி நடந்தது அரிதிலும் அரிது. அப்படி நடந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சிக்கு என்று ஈழத்தமிழர்களிடம் நிதி சேர்க்கப்படுவதாக நான் எங்குமே அறியவுமில்லை கண்ணால் பார்த்ததும் இல்லை நண்பர்கள் உறவினர்கள் என்று யாரும் இதுவரை சொன்னதும் இல்லை..

இங்கு சிலர் சொல்வதுபோல் நிதி சேர்க்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்..

அந்த நிதி நாம் தமிழர் கட்சிக்கு என்று கேட்கப்பட்டு கொடுத்தவரும் சுயநினைவுடன் நாம் தமிழர் கட்சிக்கு கொடு என்று கொடுத்து அது நாம் தமிழர் கட்சியை சென்றடைந்தால் அதை இடையில் இருக்கும் யாரும் கேட்க எந்த அருகதையும் இல்லை அதற்கு நாம் தமிழர் கட்சியோ அதன் உறுப்பினர்களோ பதில் சொல்லி நேரம் விரயமாக்கவேண்டிய அவசியமும் இல்லை..

அப்படி நாம் தமிழர் கட்சிக்கு என்று கொடுக்கப்பட்ட காசு அந்த கட்சியை சென்றடையாமல் இடையில் இருப்பவர்களால் ஆட்டையை போடப்பட்டால் கண்டிப்பாக அதை கேட்க அனைவருக்கும் அருகதை உண்டு.. அப்படி நிகழ்ந்த சம்பவங்கள் இருந்தால் எழுதுவதில் நியாயம் உண்டு..

எம்மை சுற்றி இருக்கும் சூழலில்தான் எமது அனுபவமும் அமைகிறது. 

எனது நண்பர் கொடுப்பதால் - அது என் அனுபவம். அதே போல் போஸ்ட் ஆபிசில் சர்வதேச நாணய மாற்றில் வேலை செய்த @மெசொபொத்தேமியா சுமேரியர்அன்ரியின் அனுபவம். உங்களுக்கு அனுபவம் இல்லை என்பதால் இதை மறுதலிக்க முடியாதே.

சுய நினைவில் கொடுப்தால் அது அவரவர் விருப்பம் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

ஒருவர் சிறுவர் இல்லத்துக்கு அல்லது ஊரில் இயங்கும் பல அறக்கட்டளைகளுக்கு காசு அனுப்புவதை எவரும் விமர்சிப்பதில்லை. ஆனால் அறக்கட்டளை எனும் பெயரில் கொள்ளை அடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கு சுய விருப்பில் அனுப்பினாலும் அதை விமர்சனம் செய்யலாம்.

ஜாக்கிகள் ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, அரசியலிலும் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஜனவரி 2009 வரை இப்படி நடந்தது அரிதிலும் அரிது. அப்படி நடந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டனர்.

எனக்கு நான்கு பிள்ளைகள் அவர்களை படிப்பிக்கணும் தகப்பனாக என் கடமையை செய்யணும் என்று சொல்லி நான் 2004இல் நன்றி வணக்கம் சொல்லி வெளியே வந்தேன். (அவர்கள் என் வெளியேறுதலை விரும்பாதபோதும்?). 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனிமேல் உப்புடி குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது எண்டதுக்காக ரெட் லேபல் அடிச்சு விட்டிருக்கிறன் 🤣😂😁

குறுக்கு கேள்விக்கான பதில் அதை விட குறுக்கால போனதை கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பிகு

நான் ஜீனியஸ் குறுக்ஸ் அல்ல. அவரின் ஏகலைவன். 2013 க்கு முன் யாழில் பல வருட வாசகன். அதனால் எழுதிய அனைவரும் எனக்கு பழக்கம். அவர்களுக்கு என்னை தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒருவர் சிறுவர் இல்லத்துக்கு அல்லது ஊரில் இயங்கும் பல அறக்கட்டளைகளுக்கு காசு அனுப்புவதை எவரும் விமர்சிப்பதில்லை. ஆனால் அறக்கட்டளை எனும் பெயரில் கொள்ளை அடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கு சுய விருப்பில் அனுப்பினாலும் அதை விமர்சனம் செய்யலாம்.

ஜாக்கிகள் ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, அரசியலிலும் உள்ளார்கள்.

அறக்கட்டளை பொதுசேவைக்கு என்று நிதி சேர்ப்பது.. அதை விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் உலகத்தில் கட்சிக்கு என்று சேர்த்த நிதியை பொதுமக்கள் கேள்விகேக்கலாம் என்று நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.. உலகத்தில் அப்படி ஏதும் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை.. அப்படி ஏதும் இருந்தால் அறியத்தாருங்கள்..

உதாரணத்துக்கு திமுக கட்சியின் நிதி சம்பந்தமா செயற்குழு அல்லது கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் சண்டை பிடிப்பார்கள்.. அதை எதிர்க்கட்சிகள் கூட கேட்பதில்லை.. சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள்.. இதுவே மற்றையகட்சிகளுக்கு நிகழ்ந்தாலும் அதன் எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.. இதுவே வெளிநாடுகளில் லிபரல் என்றால் என்ன கென்சர்வேட்டிவ் என்றால் என்ன நடுநிலை நக்கிகள் என்றால் என்ன..    ஏனெனில் கட்சிக்கு என்று சேர்த்த நிதி பொதுச்சொத்து அல்ல.. அது அந்தக்கட்சிக்கு உரியது.. அதை எப்படி செலவளிப்பது என்பதை அந்த கட்சிதான் தீர்மானிக்கும்..

இதுவே திமுக கட்சி அரசு அரசநிதியில் ஆட்டைய போட்டால் ஊரே கேட்கும் ஏனென்றால் அரச நிதி பொதுச்சொத்து..

அறக்கட்டளைக்கும் அரசியல் கட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இதை எழுதவில்லை.. உங்கட பிரச்சினை வார்டன்னா அடிக்கனும்..

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 
 
20 hours ago, goshan_che said:

இப்பவும் ஒரு கிழகைக்கு 3 தரமாவது டெலிபோனில் என்னிடம் கதைக்கும் என் நெருங்கிய சினேகிதர் ஒருவரும் சந்தா போல அனுப்பி கொண்டுதான் இருக்கிறார்.

பெரிய கருணாநிதி மட்டும் அல்ல, சின்ன கருணாநிதியும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கில்லாடிகள்தான்.

உங்கள் நண்பரிடம் அதிகம் பணமிருந்தால், ஊரில் எத்தனையோ பிள்ளைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அனுப்பி ஒரு புத்தி சார்ந்த சமூகத்தை உருவாக்க சொல்லுங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 

உண்மை சரியாக சொன்னீர்கள்  தங்களும்  தங்களது நண்பர்களும்  சீமானுக்கு பணம் அனுப்புவதில்லை என்கிறார்கள்  அதனை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால்  எப்படி மற்றவர்கள் அனுப்புவதில்லை என்று கூற முடியும்???? சீமானின். கோரிக்கையையோ மறை முகமாக சொல்லுகிறது  நான் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்று. என்ன ??? இப்ப கொஞ்சம் கூட எதிர்பார்கிறார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

இதை முதலே நானும் எழுத இருந்தேன்...இங்கிருக்கும் சிலருடன் மாரடிக்க விருப்பமில்லாததால் எழுதவில்லை ....முதல் புலம் பேர் நாட்டில் இருந்து ஈழத் தமிழர்கள் ஒருவருமே காசு அனுப்புவத்தில்லை என்று எழுதினார்கள் .இப்ப விரும்புறவர்கள் அனுப்புறார்கள் என்று எழுதுகிறார்கள்😀 
 
உங்கள் நண்பரிடம் அதிகம் பணமிருந்தால், ஊரில் எத்தனையோ பிள்ளைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அனுப்பி ஒரு புத்தி சார்ந்த சமூகத்தை உருவாக்க சொல்லுங்கள்  

அக்கா அவ‌ர் இர‌ண்டு மூன்று ப‌டம் எடுத்தாலே அந்த‌க் கால‌த்தில் காசோட‌ மித‌ந்து இருப்பார்............எம‌க்காக‌ குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கி அந்த‌ ம‌னுஷ‌ன் ப‌டும் அவ‌மான‌ம் இருக்கே அதை ச‌கித்துகொள்ள‌ ஏலாது.............2009க‌ளில் கொள்ளை கூட்ட‌ம் அடிச்ச‌தை விட‌ அவ‌ர் மாவீர‌ நாளுக்கு வெளிப்ப‌டையாய் கேக்கிறார்..........விருப்ப‌ம் இருக்கிற‌வ‌ர்க‌ள் கொடுக்க‌ட்டுமேன் அக்கா.............ஆனால் மேல‌ நாதாமுனி எழுதி இருக்கிறார்.........இந்த‌ முறை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளே மாவீர‌ நாள் செய்ய‌ காசு கொடுத்தார்க‌ளாம்..............

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்பத்தில் அனுப்புவார்கள். அது அவர்கள் சொந்தப்பிரச்சனை.

சீமான் கோரிக்கை வைத்துள்ளார் அனைத்து தமிழர்களிடமும்.  எனவே  தமிழர்கள் அனைவரும் கருத்துகள் வைக்க முடியும் எழுதலாம்   பணம் அனுப்பதாவனும். கருத்து உரைக்க முடியும்   நீங்கள் பணம் அனுப்பவில்லை கருத்துகள் கூறுகிறீர்கள். கூற முடியும்    மற்றும் சீமானின் கோரிக்கையிலிருந்து அறிவது யாதுவெனில். அவர் தொடர்ந்து பணம் பெற்றுகொண்டிருக்கிறார்  என்பது தெளிவுபடுத்துகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் உலகத்தில் கட்சிக்கு என்று சேர்த்த நிதியை பொதுமக்கள் கேள்விகேக்கலாம் என்று நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.. உலகத்தில் அப்படி ஏதும் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை.. அப்படி ஏதும் இருந்தால் அறியத்தாருங்கள்..

என்ன ஓணாண்டி லண்டன் ரிட்டர்ன் ஆக இருந்த படி இப்படி கேட்கிறீர்கள். எத்தனை தடவைகள் இங்கே conservatives donors காசை கொடுத்து காரியம் செய்கிறார்கள் என பல வேறு பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.

உங்கள் பழைய பொஸ் லைக்கா கூட இப்படி என கார்டியன் எழுதியதே?

இந்த லிங்கில் சென்று பாருங்கள். பொதுமக்கள் சார்பில் கேள்வி மட்டும் இல்லை, ஏகபட்ட கெடுபிடியான கட்டுப்பாடுகளும் உள்ளன.

ஒரு அறக்கட்ளை அளவுக்கு அரசியல் கட்சியின் நிதி சேகரிப்பும் பொதுமக்கள் சார் விடயமே.

https://www.instituteforgovernment.org.uk/explainer/rules-funding-political-parties

👆🏼இதே மாதிரியான கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் உண்டு. அதை மேலே நாதம், பையன் சொல்லியிம் உள்ளார்கள்.

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதாரணத்துக்கு திமுக கட்சியின் நிதி சம்பந்தமா செயற்குழு அல்லது கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் சண்டை பிடிப்பார்கள்.. அதை எதிர்க்கட்சிகள் கூட கேட்பதில்லை.. சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள்.. இதுவே மற்றையகட்சிகளுக்கு நிகழ்ந்தாலும் அதன் எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.. இதுவே வெளிநாடுகளில் லிபரல் என்றால் என்ன கென்சர்வேட்டிவ் என்றால் என்ன நடுநிலை நக்கிகள் என்றால் என்ன..    ஏனெனில் கட்சிக்கு என்று சேர்த்த நிதி பொதுச்சொத்து அல்ல.. அது அந்தக்கட்சிக்கு உரியது.. அதை எப்படி செலவளிப்பது என்பதை அந்த கட்சிதான் தீர்மானிக்கும்..

இதுவே திமுக கட்சி அரசு அரசநிதியில் ஆட்டைய போட்டால் ஊரே கேட்கும் ஏனென்றால் அரச நிதி பொதுச்சொத்து..

அறக்கட்டளைக்கும் அரசியல் கட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இதை எழுதவில்லை.. உங்கட பிரச்சினை வார்டன்னா அடிக்கனும்..

இதை நீங்கள் விபரம் தெரியாமல் எழுதினீர்கள் என்றே நினைக்கிறேன்.

தயவு செய்து மேலே நான் தந்த இணைப்பை முழுவதுமாக வாசித்து - அதன் பின்னும் நீங்கள் மேலே எழுதியது ஒவ்வொரு சொல்லும் பிழை என புரியவில்லை எனில் சொல்லுங்கள் மேலும் பல உதாரணங்களோடு விளக்குகிறேன்.

***

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

என்ன ஓணாண்டி லண்டன் ரிட்டர்ன் ஆக இருந்த படி இப்படி கேட்கிறீர்கள். எத்தனை தடவைகள் இங்கே conservatives donors காசை கொடுத்து காரியம் செய்கிறார்கள் என பல வேறு பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.

உங்கள் பழைய பொஸ் லைக்கா கூட இப்படி என கார்டியன் எழுதியதே?

இந்த லிங்கில் சென்று பாருங்கள். பொதுமக்கள் சார்பில் கேள்வி மட்டும் இல்லை, ஏகபட்ட கெடுபிடியான கட்டுப்பாடுகளும் உள்ளன.

ஒரு அறக்கட்ளை அளவுக்கு அரசியல் கட்சியின் நிதி சேகரிப்பும் பொதுமக்கள் சார் விடயமே.

https://www.instituteforgovernment.org.uk/explainer/rules-funding-political-parties

👆🏼இதே மாதிரியான கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் உண்டு. அதை மேலே நாதம், பையன் சொல்லியிம் உள்ளார்கள்.

இதை நீங்கள் விபரம் தெரியாமல் எழுதினீர்கள் என்றே நினைக்கிறேன்.

தயவு செய்து மேலே நான் தந்த இணைப்பை முழுவதுமாக வாசித்து - அதன் பின்னும் நீங்கள் மேலே எழுதியது ஒவ்வொரு சொல்லும் பிழை என புரியவில்லை எனில் சொல்லுங்கள் மேலும் பல உதாரணங்களோடு விளக்குகிறேன்.

***

அப்படி ஒண்டும் இல்லை.. கறுப்பு பணம் மற்றும் இலீகல் வழிகளில் பணம் பெறமுடியாது கட்சிக்கு.. அதுகுறித்த வரண்முறைகள்தான்.. இது பிறைவேட் கம்பனிகளுக்கும் பொருந்தும்.. இதற்கும் கட்சிக்கு ஏன் காசு சேர்க்கிறாய் மக்களிடம் அப்படி சேர்க்காதே என்று சொல்வதற்கும் சம்பந்தமில்லை..

லைக்கா குடுத்தது லஞ்சம்.. ரக்ஸ் கட்டாமல் ஏமாற்றிய பணம்.. ரக்ஸ் அரசுக்கு சேரவேண்டிய பொதுச்சொத்து.. கேள்வி வரத்தான் செய்யும்.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.