Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநில சட்டமன்றத் தேர்தலில் மோடி வென்ற கதை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடி வென்ற கதை!

23-6569cf5d432cf.jpeg

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநில முடிவுகள் வெளிவந்துவிட்டன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானது? இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?

தேர்தல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 88 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கினர், இந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்காளர்கள். ஆகவே, ஐந்து மாநில தேர்தல் என்பது ஒரு மினி நாடாளுமன்றத் தேர்தல் மாதிரிதான் என்பது சில அரசியல் நோக்கர்களின் கருத்து.

பரபரப்புடன் நடந்து முடிந்த இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை பாரதிய ஜனதா எதிர்கொண்ட விதமே தனி. எந்தவித பதற்றமோ, பயமோ இன்றி பாரதிய ஜனதா இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 4,033 சட்டமன்றத் தொகுதிகள். தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் உள்ள மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 679. இந்த 679 தொகுதிகளில் 306 தொகுதிகள் காங்கிரஸ் கட்சி, கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற தொகுதிகள்.

தவிர, இந்த ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும்தான் பாரதிய ஜனதா ஆட்சி.

‘அப்படியானால் காங்கிரஸ் கட்சி இந்தமுறை 2 மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்தாக வேண்டும். ஏற்கெனவே வென்ற 306 தொகுதிகளை விட இந்தமுறை அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆகவே, தேர்தல் பதற்றம் காங்கிரசுக்குத்தான், தனக்கு இல்லை’ என்று பாரதிய ஜனதா கருதியது.

ஆகவே, பயமோ, பதற்றமோ இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டு, முடிவு வெளியான நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா  முடி சூட்டிக் கொண்டுள்ளது.

இருவேறு வியூகங்கள்

ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இருவேறு வியூகங்களுடன் செயல்பட்டன. முதல்வர் வேட்பாளர் யார்  என்று அறிவிக்காமல் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சி, முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்து களமிறங்கியது.

vasunda.png வசுந்தரா ராஜே

எடுத்துக்காட்டாக ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தவில்லை. மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தி பரப்புரை செய்தது.

K6LQbXnS-download-1.jpeg கமல்நாத்

ஆளும் அரசுக்கு எதிராக மக்களிடம் இருந்த அதிருப்தியை சமாளிக்க, பாரதிய ஜனதா, அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.  காங்கிரஸ் கட்சியோ புதுமுக வேட்பாளர்களை இறக்கிவிட்டு மக்களின் அதிருப்தியை சமாளிக்க முயற்சித்தது.

மணிமணியான தேர்தல் வாக்குறுதிகள், சாதிவாரி கணக்கெடுப்பு என்ற துருப்புச் சீட்டு, அந்தந்த மாநிலங்களில் மாநிலத் தலைவரை சுதந்திரமாகச் செயல்பட விடும் நடைமுறை. இப்படி சரியாகத்தான் களமாடியது காங்கிரஸ் கட்சி.

பாரதிய ஜனதாவோ உள்ளூர் தலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரங்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் புடை சூழ பிரசாரம் செய்தது.

பாரதிய ஜனதா வழக்கமாக கையில் எடுக்கும் இந்துத்துவா என்ற சீட்டை இந்த முறை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டது. இருந்தும்கூட தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளன.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் கரன்பூர் தொகுதி தவிர 199 தொகுதிகள் தேர்தலைச் சந்தித்தன. 75.45% வாக்குகள் பதிவாகின. கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் மாறிமாறி ஆட்சிக்கு வருவதுதான் வரலாறு. இந்தமுறையும் அதுபோலவே நடந்திருக்கிறது.

ராஜஸ்தானில் ஏறத்தாழ 114 தொகுதிகளில் வென்று பாரதிய ஜனதா ஆட்சியமைக்க உள்ளது. காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்.

raakkkkk.jpg-768x448.jpg

ராஜஸ்தானில் காங்கிரசுக்கு நேர்ந்த சறுக்கலுக்கு இரண்டு காரணங்களை அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள்.

1. முதல்வர்  இடையே இருந்த முறுகல்

2. ராஜஸ்தான் பழங்குடியின மக்களை காங்கிரஸ் சரிவர கையாளத் தவறியது.

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக பாரதிய ஜனதாவின் ஆட்சி நடந்து வந்திருக்கிறது. முதல்வர் சிவராஜ்சிங்  சௌகானுக்கு மக்கள் இந்தமுறை இறுதியாகவும், உறுதியாகவும் விடை கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ‘காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வரே’ என்று கமல்நாத்துக்கு வாழ்த்துப் பதாகைகள் கூட தயாராக வைக்கப்பட்டிருந்தது.

ashol.jpg அசோக் கெலாட், சச்சின் பைலட்

இருந்தும், மத்திய பிரதேசத்தில் ஏறத்தாழ 160 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா, ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த வெற்றிக்கு 3 காரணங்களைச் சொல் கிறார்கள் பாரதிய ஜனதாவினர்.

‘பா.ஜ.க.வின் நலத்திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டிருக்கின்றன’ என்று கூறியிருக்கிறார் முதல்வர் சிவராஜ்சிங்  சௌகான். ‘லட்லி பெஹ்னா  (அன்பு சகோதரி) திட்டம், ஆட்டத்தின் போக்கையே எங்களுக்கு சாதகமாக மாற்றி விட்டது’ என்றிருக்கிறார் ஜோதிராதித்ய சிந்தியா.

‘பூத் அளவிலான பா.ஜ.க தொண்டர்கள் ஒவ்வொரு பூத்திலும் 51% வாக்குப் பதிவை உறுதி செய்ததுதான் இந்த வெற்றிக்குக் காரணம்’ என்கிறார்கள் இன்னும் சிலர்.

மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் படேல், பக்கன்சிங் குலாஸ்தே, பாரதிய ஜனதாவின் தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய வர்கியா ஆகியோரது கூட்டு தேர்தல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான கமல்நாத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதித்திருந்தது. ஆனால், அதுவே காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்குக் காரணமாகவும் கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும் மாநிலம் சத்தீஸ்கர்தான். முதல்வர் பூபேஷ் பாகேல் ஆட்சியை மீண்டும் தக்கவைப்பார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 50 தொகுதிகளைத் தாண்டி பாரதிய ஜனதா வெற்றிநடை போட்டுள்ளது.

7wr4a5in-tile-1700976598.jpg பூபேஷ் பாகேல்

‘சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு ஊழல் குற்றச்சாட்டு கள்தான் காரணம்’ என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க. முன்னாள் முதல்வர் ராமன்சிங்.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்கு ஆறுதல் பரிசாக கிடைத்திருப்பது தெலங்கானா மட்டுமே. 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் நிலையில் உள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.

1. காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவரான ரேவந்த் ரெட்டியை, காங்கிரஸ் கட்சி, சுதந்திரமாகச் செயல்பட விட்டது. (இந்த வியூகம், மத்திய பிர தேசத்தில் வேலை செய்யவில்லை. ஆனால், தெலங்கானாவில் வேலை செய் திருக்கிறது)

2. சுனில் கனுகொலு. பிரசாந்த் கிஷோர் போல சுனில் கனுகொலுவும் தேர்தல் வியூக வகுப்பாளர். கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு காரணம் இவர் தான். இந்தமுறை தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இவர் வகுத்த வியூகங்களும் ஒரு காரணம் என்கிறார்கள்.

நான்கு மாநில தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா பெற்ற வெற்றியை ‘மோடி மேஜிக்’ என்று ஸ்மிர்தி இரானி பாராட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் நான்கு மாநிலத் தேர்தல்களில் தனித்தனியாகவே களம் கண்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

சரி. கடைசியாக முடிவுரைக்கு வருவோம். ‘ஐந்து மாநில தேர்தலையோ, நான்கு மாநில தேர்தல் முடிவுகளையோ, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குரிய முன்னோட்டமாகவோ, இறுதிப் போட்டிக்கு முன்னதான அரை இறுதிப் போட்டியாகவோ கருத முடியாது’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

‘காரணம். சட்டமன்றத் தேர்தல் வேறு. மக்களவைத் தேர்தல் வேறு. இரண்டும் இருவேறு வகையான தேர்தல்கள்’ என்கிறார்கள் அவர்கள்.

 

https://minnambalam.com/political-news/4-state-election-results-story-of-modi-victory/

  • கருத்துக்கள உறவுகள்

இலத்திரனியல் ஓட்டு மிசின் இருக்கும்மட்டும் யார் அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களை வெல்வது குதிரை கொம்பு .

அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

காங்கிரஸ் கட்சி

இலங்கை தமிழரை படுகொலை செய்ததோடு காங்கிரஸ் கட்வியின் சாம்ராஜ்யமும் முடிவுக்கு வந்துவிட்டது.

எப்படி?ஏன்?என்பதையெல்லாம் தாண்டி எனக்கு மனதுக்கு இதமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இலத்திரனியல் ஓட்டு மிசின் இருக்கும்மட்டும் யார் அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களை வெல்வது குதிரை கொம்பு .

அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் .

இதை தான் நானும் நினைச்சேன் நீங்க‌ள் சொல்லி விட்டீங்க‌ள்.....ஏவிம் மிசினில் குள‌றுப‌டி சிம்பில்..........தேர்த‌ல் ஆனைய‌மும் ம‌த்தியில் ஆள்ப‌வ‌ர்க‌ளும் ஒன்னுக்கு ஒன்னு பெருமாள் அண்ணா...........இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண் துடைப்பு நாட‌க‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ங்கி கூட்ட‌ம் இதை கொண்டாடுங்க‌ள்😁.................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை தமிழரை படுகொலை செய்ததோடு காங்கிரஸ் கட்வியின் சாம்ராஜ்யமும் முடிவுக்கு வந்துவிட்டது.

எப்படி?ஏன்?என்பதையெல்லாம் தாண்டி எனக்கு மனதுக்கு இதமாக உள்ளது.

இந்த  ராகுலு நடை நடையா நடந்தாரே...என்னாச்சு...எதிர்கால இந்திரா என்னு  ஒரு  பொம்பள மிகப்பெரும் ஊழ்ல்வாதியின் மனைவி பிரியங்கா பிரச்சாரம் என்னாச்சு...ஜெயிலி நளினியை சந்த்திதபின்னர் எம் இன அழிப்புக்கு ஆர்டர் போட்டவராச்சே....  இப்ப என்ன செய்வாராம்...

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, alvayan said:

இந்த  ராகுலு நடை நடையா நடந்தாரே...என்னாச்சு...எதிர்கால இந்திரா என்னு  ஒரு  பொம்பள மிகப்பெரும் ஊழ்ல்வாதியின் மனைவி பிரியங்கா பிரச்சாரம் என்னாச்சு...ஜெயிலி நளினியை சந்த்திதபின்னர் எம் இன அழிப்புக்கு ஆர்டர் போட்டவராச்சே....  இப்ப என்ன செய்வாராம்...

செய்த பாவத்துக்கு இலங்கையில் வந்து நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் இமாலய வெற்றி 2024 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க எப்படி உதவும்?

4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் இமாயல வெற்றி 2024 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க எப்படி உதவும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 டிசம்பர் 2023

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோரம் தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ளன.

இவற்றில் இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஏற்கெனவே கைவசம் இருந்த மாநிலங்களை இழந்துள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது பாஜக 12 மாநிலங்களிலும், காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றன.

எனவே இந்த முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதியாக பார்க்கப்படுகின்றன. பாஜக அடைந்துள்ள வெற்றி அந்தக் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

இந்தத் தேர்தல் ஏன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி?

அடுத்த ஆண்டு (2024) மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதாலும், இந்த மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகள் இருப்பதாலும் இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகள் மக்களவை தேர்தல்களுக்கான அரையிறுதி என அழைக்கப்படுகின்றன.

நாட்டின் பிரதான கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் 230 இடங்களிலும், ராஜஸ்தானில் 199 இடங்களிலும், சத்தீஸ்கரில் 90 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவியது.

தெலங்கானாவில் 119 இடங்களில் காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே நேரடி போட்டி இருந்தது.

நாடாளுமன்ற தொகுதிகளைப் பொருத்தமட்டில், மத்திய பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளும், ராஜஸ்தானில் 25 இடங்களும், சத்தீஸ்கரில் 11 இடங்களும், தெலங்கானாவில் 17 இடங்களும், மிசோரமில் ஒரே ஒரு தொகுதியும் என இந்த ஐந்து மாநிலங்களில் மொத்தம் 83 தொகுதிகள் உள்ளன.

எனவே, இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாய்ப்புகளை பிரகாசிக்கச் செய்யும் என இரு கட்சிகளுமே நம்பின.

 
ஐந்து மாநிலத் தேர்தல்கள்

பட மூலாதாரம்,REUTERS/ANUVAR HASARIKA

எனவே பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே அதை மனதில் கொண்டே ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தை வடிவமைத்தன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் குஜராத் மற்றும் திரிபுராவில் வெற்றி பெற்ற பாஜக, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தோல்வியைத் தழுவியது.

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவான அலையை உருவாக்குவதற்கு பாஜக இந்த ஐந்து மாநில தேர்தல் வெற்றிகளில் கூடுதல் கவனம் குவித்தது. அதே போன்று, காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம், இந்தியா கூட்டணியில் பிற கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டின் போது தனக்கு கூடுதலான இடங்களை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்த்தது.

முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?

இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த கால தேர்தல்களைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே மக்களவை தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என உறுதி செய்ய்ஹம் வகையில் இல்லை.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பாக அதிகபட்சம் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன.

அப்போதும் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில், ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே கால அவகாசம் இருந்துள்ளன. தற்போதும் அதே நிலைதான் இருக்கிறது.

 

மத்திய பிரதேசத்தின் நிலை என்ன?

ஐந்து மாநிலத் தேர்தல்கள்

பட மூலாதாரம்,ANI

காங்கிரஸ் கட்சி 1998இல் மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்களைப் பிடித்தது.

பிறகு, 2003-04இல் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதோடு, 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கைப்பற்றியது.

கடந்த 2013ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 27 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சி அமைப்பதில் கமல்நாத் வெற்றி பெற்றாலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு நாடாளுமன்ற இடத்தை மட்டுமே பெற முடிந்தது.

காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 2019இல் வாக்கு வித்தியாசம் தோராயமாக 25 சதவீதமாக இருந்தது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியின் மாநில அரசு 20 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இப்போது மத்திய பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 

ராஜஸ்தானில் நடந்தது என்ன?

ஐந்து மாநிலத் தேர்தல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தானில் 1998ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. அசோக் கெலாட் முதல்வரானார். ஆனால், ஓராண்டுக்குள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தலில், பா.ஜ.கவே அதிக நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், 2003இல் இருந்து 2014ஆம் ஆண்டு வரை நிலைமைகள் வேறாக இருந்தன. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே, மக்களவை தேர்தலில் இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 2018ஆம் ஆண்டில் இந்த நிலைமை மாறியது.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 இடங்களை வென்றது, ஆர்.எல்.பி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை.

ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, ஆனால் பாஜகவுடனான வாக்கு வித்தியாசம் 0.5 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியால் களத்தில் தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவோ, வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவோ முடியவில்லை என்பது இந்தத் தேர்தல் முடிவுகளில் புலனாகிறது.

 

சத்தீஸ்கர் நிலை என்ன?

ஐந்து மாநிலத் தேர்தல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சத்தீஸ்கர் மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2003 முதல், சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இருப்பினும் கடந்த 2013ஆம் ஆண்டு 41 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2018இல் 32 சதவீதமாகக் குறைந்தது.

அந்த ஆண்டு சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இப்போது தனது வாக்கு சதவீதத்தை மீட்டெடுத்துள்ள பாஜக, சத்தீஸ்கர் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியுள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி

ஐந்து மாநிலத் தேர்தல்கள்

பட மூலாதாரம்,ANI

தெலங்கானா மாநிலம் 2013ஆம் ஆண்டு உருவானது முதல் நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பிஆர்எஸ் (முன்னதாக டிஆர்எஸ்) மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. அதே நேரம் நாடாளுமன்றத் தேர்தலில் கலவையான முடிவுகள் கிடைத்தன.

இந்தியா கூட்டணியில் அங்கமாக இல்லாத பி.ஆர்.எஸ். பாஜகவையும் கடுமையாக எதிர்த்து வருகிறது. இப்போது காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றியின் மூலம், தென்னகத்தில் பாஜக கால் ஊன்றவிடாமல் செய்து விட்டது என்ற ஆறுதலை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் இந்த வெற்றி பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிராகவே பெறப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றிபெமா?

பாஜக அடைந்துள்ள இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் தொடரும் என்கிறார் பத்திரிக்கையாளர் மாலன்.

பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, “மோதி என்ற காரணி இப்போதும் பலன் கொடுக்கிறது. அதையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி, இந்தியா கூட்டணிக்குள் அவர்களைப் பலவீனப்படுத்தும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக மற்ற கட்சிகள் ஏற்க மாட்டார்கள். அந்த சூழலும் நரேந்திர மோதிக்கு சாதகமாக முடியும்,” என்றார்.

பிரதமர் மோதியை தனிப்பட்ட முறையில், தாக்குவது காங்கிரஸுக்கு பலனளிக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“பிரதமர் மோதிக்கு மக்களிடையே ஒரு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ராகுல் காந்தியே மேற்கொள்கிறார். மோதியை 'மரண வியாபாரி' என்று பேசிய ராகுல் காந்தி சமீபத்தில் 'ராசியில்லாதவர்' என்ற பொருளில் தாக்கிப் பேசினார். இதுபோன்ற தாக்குதல்கள் மக்களின் ஏற்பைப் பெறாது,” என்றார்.

“மென்மையான இந்துத்துவா என்ற கொள்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. இந்த போலியான வேடத்தை மக்கள் விரும்பவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுவின் சானத்தை அரசே வாங்கும் என உறுதி கொடுத்தார்கள். ஆனால் மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள். கள நிலைமை என்ன என்பதையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை,” என்கிறார் பத்திரிகையாளர் மாலன்.

 

மிசோரம் முடிவுகள் நாளை வெளியாகும்

மிசோரமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கும் (எம்என்எஃப்) காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அதேநேரம் ஜோரம் மக்கள் இயக்கம் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ளது.

மிசோரமில் 1998 முதல் 2008 வரை மிசோ தேசிய முன்னணி அரசாங்கம் இருந்தது, 1999 முதல் 2004 வரை மிசோ தேசிய முன்னணியின் ஆதரவு வேட்பாளர் மட்டுமே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்.

மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி 2008 முதல் 2018 வரை இருந்தபோது, ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் வேட்பாளர் மிசோரம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தார். 2018இல் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2019 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

https://www.bbc.com/tamil/articles/czr28gdn3lvo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமூக வலைத்தளங்களில் இப்படி சொல்கிறார்கள்.

தமிழினத் துரோகத்திற்கு பிறகு  எப்படி கருணாநிதியால் பதவியை அடையமுடியவில்லையோ ,அதே நிலை தான் சோனியா குடும்பத்திற்கும்.

GAbO9A9XEAAi-6r?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2023 at 17:52, பெருமாள் said:

இலத்திரனியல் ஓட்டு மிசின் இருக்கும்மட்டும் யார் அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களை வெல்வது குதிரை கொம்பு .

அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் .

இலத்திரனியல் ஓட்டு மெசின் இந்தியாவில் எப்போ அறிமுகமானது?

On 3/12/2023 at 19:01, பையன்26 said:

இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண் துடைப்பு நாட‌க‌ம்............

இந்த கண்துடைப்பு நாடகத்தில் நாமும் ஒரு நாள் வெல்லுவோம், அதிகாரத்கை பிடிப்போம் என பிரச்சாரம் செய்யும், போட்டி போடும் கட்சிகள், தலைவர்கள்  மக்களை தெரிந்தே ஏமாற்றும் கள்வர்கள் தானே?

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இலத்திரனியல் ஓட்டு மெசின் இந்தியாவில் எப்போ அறிமுகமானது?

இந்த கண்துடைப்பு நாடகத்தில் நாமும் ஒரு நாள் வெல்லுவோம், அதிகாரத்கை பிடிப்போம் என பிரச்சாரம் செய்யும், போட்டி போடும் கட்சிகள், தலைவர்கள்  மக்களை தெரிந்தே ஏமாற்றும் கள்வர்கள் தானே?

 

உங்க‌ளுட‌ன் அல‌ம்ப‌ல் செய்ய‌ என‌க்கு நேர‌ம் இல்லை...........

  • கருத்துக்கள உறவுகள்

@ நந்தன் அதிசய பம்மலை கண்டீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இந்த கண்துடைப்பு நாடகத்தில் நாமும் ஒரு நாள் வெல்லுவோம், அதிகாரத்கை பிடிப்போம் என பிரச்சாரம் செய்யும், போட்டி போடும் கட்சிகள், தலைவர்கள்  மக்களை தெரிந்தே ஏமாற்றும் கள்வர்கள் தானே?

நல்லதொரு கேள்வி.
பிடிக்காதவர்கள் வெற்றியடையும் போது இந்தியாவின் ஓட்டு மெசின் மீது பழி போட்டு திருப்தி அடைவது பற்றி Tulpen , ஜஸ்டின் அண்ணா யாழ்களத்தில் முன்பு எழுதி படித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2023 at 03:15, பையன்26 said:

ச‌ங்கி கூட்ட‌ம் இதை கொண்டாடுங்க‌ள்😁.................

பையா, நீங்கள் சங்கிக்கு எதிரானவரா? அப்போ எப்படி உங்கள் ஈழ கனவு நிறைவேற போகின்றது? 😜இல்லை நம்மட ஆட்கள் இந்தியாவுக்கு போய் அவர்களைத்தான் சந்திக்கிறார்கள், நம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

பையா, நீங்கள் சங்கிக்கு எதிரானவரா? அப்போ எப்படி உங்கள் ஈழ கனவு நிறைவேற போகின்றது? 😜இல்லை நம்மட ஆட்கள் இந்தியாவுக்கு போய் அவர்களைத்தான் சந்திக்கிறார்கள், நம்புகிறார்கள்.

நேர்மையா செய‌ல் ப‌ட்டால் எப்ப‌வும் ஆத‌ரிப்போம்............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.