Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை!

adminDecember 18, 2023
Selvarajah-Kajenthiran-MP.jpg?fit=1024%2

உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைமுகமாக பாத்திரத்தை ஏற்று ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்றதுடன் ரணில் விக்கிரம சிங்கவை தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடிய ஒரு லிபரர் வாதியாக காட்டி உலக நாடுகளில் இருந்து ரணிலுக்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு ஏமாற்று நாடகமாகும்.

இந்த உலகத்தமிழ் பேரவையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கடந்த 14 வருடங்களில் குறைந்தது 12 வருடங்கள் ஒன்றாக ஜ.நா மனித உரிமைகள் பேரவையிலும் மற்றும் பல இராஜதந்திர மட்டங்களுக்கும் சென்று தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் பல காரியங்களை செய்து இருக்கின்றனர்.

குறிப்பாக சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்குகின்ற சுமந்திரனது செயற்பாடுகளுக்கு இந்த உலக தழிழர் பேரவை முழுமையாக பக்கபலமாக இருக்கின்றது.

அதேபோன்று 2015 ஆம் ஆண்டிலே ரணில் மைத்திரியோடு இணைந்திருந்தபோது அவர்களுடன் இணைந்து ஒற்றையாட்சிக்குள் ‘ஏக்கராஜ்சிய’ என்ற ஆட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற முழு சதிமுயற்சிகளுக்கும் சுமந்திரனுடன் ஒன்றாக சேர்ந்து பயணித்தவர்கள்தான் இவர்கள்.

ஒருபுறம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தமிழர்களுடைய பிரச்சனையை தீர்ப்பார்கள் என சர்வதேசத்திற்கு ஏற்படுத்தி நிதிகளை பெற்றுக் கொடுப்பதை செய்து கொண்டு மறுபுறம் தமிழ் தேசிய உணர்வுடன் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என ஒற்றையாட்சியை புறக்கனித்து சமஸ்டி தீர்வு தேவை என்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கோபத்தை தணிப்பதற்காக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் ரணிலை விமர்சிக்கின்ற பாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சந்தர்பத்தில் உலகத்தமிழர் பேரவையுடன் தாங்கள் ஒன்றாக இருந்து செயற்படுவதை காட்டிக் கொள்ளாமல் அவர்கள் தன்பாட்டில் வந்தது போலவும் அவர்களை தாங்கள் சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல மூன்று நான்கு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கின்ற பன்முக நாடகங்களில் ஒன்று தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை இவர்களது சதிகள் துரோகங்கள் எல்லாம் இன்று அம்பலமாகி முழுமையாக நிராகரிக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே உலகத்தமிழர் பேரவையின் ஆரம்ப கோரிக்கையே தமிழர்களை குழிதோண்டி புதைப்பதாகும் அதனை அடியோடு நிராகரிக்கின்றோம். புலம் பெயர்ந்த மக்கள் இந்த உலகத்தமிழ் பேரவையின் துரோகங்கள் சதிகளை வெளிப்படுத்த வேண்டும் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2023/198716/

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அவர்களே,   நிராகரிப்பதோடு நின்று விடாது   உடனடியாக உங்கள் ஒரு நாடு இரு தேசம் என்ற project ஐ உடனடியாக activate பண்ணி அந்த project இன்   CEO ஆக  உங்களை நியமித்து   இவ்வறான சதிகளை முடியடிக்கலாம்.  

எதிர் காலத்தில் இவ்வாறான சதிகள் வரும்போது உங்கள் project இன் தானியங்கி உடனடியாக இயங்கி அதனை தடுக்க கூடிய வகையிலான ஏற்பாட்டை செய்யலாம்.

ஆகவே காலம் தாமதிக்காது அதனைச் செய்யவும்.  

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஏற்கனவே இணைத்த ஒரு திரியில் நிக்சன் விரிவாக கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்


 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 90 வயது.. இயக்கமற்ற நபரின் தோற்றுப்போன அரசியலுக்கு மாற்று அரசியலை முன்வைத்து மக்களுக்காக உழைக்க முடியாதவர்களின் புலம்பல் இது.

எல்லாரும் எங்கள் சிந்தனைகளோடு பயணிக்க வேண்டும் என்பதிலும்.. அவரவர் சிந்தனைகளில் அவரவர் பயணிக்கட்டும்.. ஆனால் எல்லாரும் மக்கள் மண்ணின் நலனை முன்னிறுத்தி சோரம் போகாது பயணிக்க வேண்டும்.. என்பதுவே தற்காலத்துக்கான செயலுக்குரிய.. பொருந்தமான சிந்தனையாக இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கிருபன் ஏற்கனவே இணைத்த ஒரு திரியில் நிக்சன் விரிவாக கூறியுள்ளார்.

நிக்சனின் கட்டுரையை வாசித்தேன். சில ஊகங்களை வைத்து  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக சுமந்திரன், இரகசியப் பேச்சுக்களில் கலந்து கொண்டதாக (அந்த இரகசியம் நிக்சனுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதென நினைக்கிறேன்😎!), 2015 இல் இருந்து சதி நடப்பதாக முடிவுக்கு வந்திருக்கிறார்.

அவர் குறிப்பிட்ட எதிர்வீரசிங்கம் அரசியல் சார்பு இல்லாத  ஒரு நபர் என அறிவேன். இப்போது அவர் இலங்கையில் வசிக்கவும் இந்த தமிழ் தேசிய அரசியல் சார்பில்லாத, அபிவிருத்தி நோக்கிய பார்வை தான் காரணம். இப்படி பலர் இருக்கிறார்கள். அமெரிக்காவில் காங்கிரஸ் விருது பெற்ற பௌதீகவியலாளர், தொழிலதிபர் சிவானந்தன் கூட தமிழ் தேசிய அரசியல் கலப்பில்லாத "இலங்கை அபிவிருத்தி" என்ற திசையில் செயல் படும் ஒருவர். இப்படித் தமிழ் புலம் பெயர் பிரபலங்கள் சத்தமின்றி தீவிர தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி நடக்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது எஞ்சியிருப்பது "இரு தேசம், ஒரு நாடு" போன்ற தியரியின் படி கூட விளக்க இயலாத கொள்கைகளைப் பேசும் பேச்சாளர்கள் மட்டும் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

அவர் குறிப்பிட்ட எதிர்வீரசிங்கம் அரசியல் சார்பு இல்லாத  ஒரு நபர் என அறிவேன்.

USTAG தொடக்கத்தின் தலைவர் இவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

நிக்சனின் கட்டுரையை வாசித்தேன்

நிக்சனுக்கு எவ்வளவு தூரம் அரசியல்வாதிளுடன் தொடர்பிருக்கிறதோ

அதே மாதிரி மேற்கு ராஜதந்திரிகளுடனும் தொடர்பிருக்கிறது.

எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் தெரிந்திருக்காது என்பதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

.

.

35 minutes ago, ஈழப்பிரியன் said:

USTAG தொடக்கத்தின் தலைவர் இவர் தான்.

இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என புலம்புவினம் பிறகு ,விவசாய நிலம் மேய்ச்சல் நிலத்தை கூட சிங்கள மயமாக்க துடிப்பினம்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

நிக்சனுக்கு எவ்வளவு தூரம் அரசியல்வாதிளுடன் தொடர்பிருக்கிறதோ

அதே மாதிரி மேற்கு ராஜதந்திரிகளுடனும் தொடர்பிருக்கிறது.

எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் தெரிந்திருக்காது என்பதற்கில்லை.

இருக்கலாம், அப்படி இல்லாமலும் இருக்கலாம் - நிக்சனுக்கே அவரது தகவல் மூலங்கள் வெளிச்சம்!

ஆனால், நான் அவதானித்த வரையில் நிக்சன், யோதிலிங்கம் ஆகியோரின் எழுத்துக்கள் அவர்களுடைய உணர்வு ரீதியான நிலைப்பாட்டினால் வரும் கருத்துக்கள், அதிகம் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதில்லை. இதனை யாரும் எழுதி விட்டுப் போகலாம், இதற்கு ஆய்வு, ஆழம் எதுவும் தேவையில்லை.

கூட்டமைப்பினரைப் போட்டுத் தாக்க பல காரணங்கள், கொள்கைத் தவறுகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் தொட்டு முடிந்து விட்டதால், இப்போது எங்கே எது நடந்தாலும் "இது கூட்டமைப்பின் விளையாட்டு" என்று ஒரே காலைத் தூக்குவது சரியல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, putthan said:

.

இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என புலம்புவினம் பிறகு ,விவசாய நிலம் மேய்ச்சல் நிலத்தை கூட சிங்கள மயமாக்க துடிப்பினம்...

சிங்களம் இவர்களை எப்படியாவது உள்வாங்கி விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிங்களம் இவர்களை எப்படியாவது உள்வாங்கி விடுகிறது.

இப்படியே போனால் இன்னும் 10 வருடங்கள் கழித்து நிலைமை எப்படி இருக்கும் எனச் சற்றுச் சிந்தித்தால்,

மூழ்குபவனுக்கு கிடைக்கும் சிரு துரும்பையும் பற்றிப்பிடித்துக் கரையேறுவான். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

கஜேந்திரன் அவர்களே,   நிராகரிப்பதோடு நின்று விடாது   உடனடியாக உங்கள் ஒரு நாடு இரு தேசம் என்ற project ஐ உடனடியாக activate பண்ணி அந்த project இன்   CEO ஆக  உங்களை நியமித்து   இவ்வறான சதிகளை முடியடிக்கலாம்.  

எதிர் காலத்தில் இவ்வாறான சதிகள் வரும்போது உங்கள் project இன் தானியங்கி உடனடியாக இயங்கி அதனை தடுக்க கூடிய வகையிலான ஏற்பாட்டை செய்யலாம்.

ஆகவே காலம் தாமதிக்காது அதனைச் செய்யவும்.  

உண்மையாகவே இவர்களது கட்சி கொள்கை என்னவென்று யாருக்குமே விளங்குவதில்லை. ஈழம்  கேக்கிறார்களா, சுயாட்சி கேட்க்கிறார்களா, வட கிழக்கு இணைந்த தாயகம் கேட்க்கிறார்களா, அல்லது என்னமாதிரியான கடடமைப்பை கேட்க்கிறார்கள் என்று சரியாக சொல்வதாக தெரிவதில்லை.

எல்லோரையும் குற்றம் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே ஒழிய கிடைக்கக்கூடிய தீர்வைப்பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. அல்லது தங்கள் நினைத்திருக்கிற தீர்வை எப்படி பெறப்போகிறார்கள் என்று ஒரு ஐடியாவும் கிடையாது.

இப்படியே வாய் சவாடல்கள் விட்டுக்கொண்டு திரிய வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

உண்மையாகவே இவர்களது கட்சி கொள்கை என்னவென்று யாருக்குமே விளங்குவதில்லை. ஈழம்  கேக்கிறார்களா, சுயாட்சி கேட்க்கிறார்களா, வட கிழக்கு இணைந்த தாயகம் கேட்க்கிறார்களா, அல்லது என்னமாதிரியான கடடமைப்பை கேட்க்கிறார்கள் என்று சரியாக சொல்வதாக தெரிவதில்லை.

எல்லோரையும் குற்றம் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே ஒழிய கிடைக்கக்கூடிய தீர்வைப்பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. அல்லது தங்கள் நினைத்திருக்கிற தீர்வை எப்படி பெறப்போகிறார்கள் என்று ஒரு ஐடியாவும் கிடையாது.

இப்படியே வாய் சவாடல்கள் விட்டுக்கொண்டு திரிய வேண்டியதுதான். 

இப்படி எல்லாம் வாய் சவாடல்கள் விட்டுக்கொண்டு திரிந்தால் தன் அடுத்த தேர்தலில் தமிழர்களின் பிரதேசங்களில் வெற்றி பெற்று 16 எம்பிக்களையும் தாங்கள் பெற்று கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள் போலும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.