Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு

29 DEC, 2023 | 12:35 AM
image
 
(நெவில் அன்தனி)

இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார்.

உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார்.

1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார்.

அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், 'அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள்,   கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்' என்றார்.

தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில்  பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார்.

'கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி' என அமு தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/172664

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

இவர் யாழ் செஞ் ஜோன்ஸ் கல்லூரி அணி வீரரும் 90ஆம் ஆண்டு சென்ரல்- சென் ஜோன்ஸ் போட்டியில் சதம் அடித்தவருமான சுரேன்குமாரின் மகளாவார். 

  • கருத்துக்கள உறவுகள்

அமுருதாவிற்கு வாழ்த்துக்கள்.
அடுத்த சந்ததி ஒன்று.. புலம்பெயர் தேசத்தில் பல்வேறு துறைகளில் 
மெதுவாக சாதனைகளை செய்ய ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அம்ருதா ........விளையாட்டில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்......!  👍

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid021A2TiGuLUU867cB5FEGPX6c9k9jgcT1UKN4TXkhQsX2kmnQvCCwbcVp3TxdeuZzjl&id=100032758071236&mibextid=gkx3sN

அம்ருதா விக்கெட்டுகள் எடுக்கும் போது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்க‌ள்..........

  • கருத்துக்கள உறவுகள்

ஐ பி எல் எல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமோ எதிர்காலத்தில். 

முன்னாள் யாழ் கிரிக்கெட் வீரர்களின் புதல்வர்கள் தந்தையின் சுவடை பின்பற்றியுள்ளார்கள். பெண் பிள்ளைகள் அப்பா போல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.  

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க கிடைத்தது பெரும் பாக்கியமாகும் - பிரித்தானிய தமிழ் யுவதி அமுருதா கூறுகிறார்

Published By: VISHNU    10 APR, 2024 | 08:09 PM

image

(நெவில் அன்தனி)

எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கக் கிடைத்ததை ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும்  கருதுகிறேன் என வீரகேசரிக்கு 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி வீராங்கனை அமுருதா சுரேன்குமார் தெரிவித்தார்.

Copy_of_Amu_Surenkumar_Bowling.jpg

இலங்கையில் இன்னொரு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தனது தந்தையிடம் கோரவுள்ளதாகவும் சகலதுறை வீராங்கனையான அமுருதா குறிப்பிட்டார்.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (09) நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் ஒருநாள் மும்முனை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் வீரகேசரிக்கு அளித்த பேட்டியின்போதே அமு என எல்லோராலும் பாசமாக அழைக்கப்படும் அமுருதா தனது கருத்தை வெளியிட்டார்.

கேள்வி: தந்தை கிரிக்கெட் விளையாடியதால் நீங்களும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தீர்களா?

பதில்  (அமுருதா): 'எனது பெற்றோர் இருவருமே கிரிக்கெட்டின்பால் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எனது தந்தை (சுரேன்குமார்) இலங்கையில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாடி இருந்தார். எனது தாயார் (லோஜினி) இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியதுடன் வலைபந்தாட்டத்திலும் ஈடுபட்டார். அவர்கள் அளித்துவரும் ஆக்கமும் ஊக்கமுமே என்னை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வைத்தது.

'நான் ஆறு வயதாக இருந்தபோது கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். சிறு பராயத்தில் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தேன். எனக்கு 7 வயதானபோது நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகத்தில் இணைந்தேன். அங்குதான் எனது கிரிக்கெட் வளர்ச்சி அடையத் தொடங்கியது. படிப்படியாக எனது கிரிக்கெட் ஆற்றல் முன்னேற்றம் அடைந்தது. எனக்கு 16 வயதானபோது சன்ரைசர்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அணியில் விiளாயாட வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் மிட்ல்செக்ஸ் அணிக்காக பிராந்திய கிரிக்கெட் விளையாடியதுடன்  இப்போது இசெக்ஸ்  அணிக்காக   விiளையாடுகிறேன். இவை அனைத்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததுடன், என்னிடம் இருந்த கிரிக்கெட் ஆர்வம், பேரார்வமாக மாறியது.'

கேள்வி: 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடக் கிடைத்தைப் பற்றி என்ன கூற விரும்பகிறீர்கள்?

பதில் : 'உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் திறமையை வெளிப்படுத்தி வந்ததன் பலனாக 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சிக் குழாத்தில் என்னை இணைத்துக் கொண்டனர். இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தை முன்னிட்டே இந்த குழாம் தெரிவுசெய்யப்பட்டது. அப்போது, இலங்கைக்கு பயணம் செய்து இங்கிலாந்து யுவதிகள் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னில் இயல்பாகவே புகுந்துகொண்டது.

'ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவுடான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு விளையாடக் கிடைத்தது. அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஏனேனில் எனது தந்தை பிறந்த, கிரிக்கெட் விளையாடிய இலங்கை மண்ணில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக் கிடைத்ததை நான் ஓர் அற்புதமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

'இங்கிலாந்திலிருந்து வருகை தந்த எனது பெற்றொரும் இளைய சகோதரிகளும் அந்தப் போட்டியை நேரடியாக கண்டு களித்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள எமது உறவினர்கள் சிலரும் அந்தப் போட்டியைக் கண்டு களித்தனர். காலியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு எனது தந்தையின் சகாக்கள் சிலர் வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தியதை நான் மறக்க மாட்டேன்.'

கேள்வி: இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியதன் மூலம் என்ன அனுபவத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்?

பதில்: 'இலங்கையில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் விளையாடக் கிடைத்தை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கடும் உஷ்ணத்துக்கு மத்தியிலும் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கிரிக்கெட் விளையாடுவது பெரும் சவாலாக இருந்தது. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் விளையாடியதன் மூலம் மறக்க முடியாத சிறந்த அனுவங்களை நானும் எனது சக வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டோம். போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எங்களது கிரிக்கெட் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகுகிறது. நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். இங்கும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டோம்  . இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை என்னால் மறக்க முடியாது.'

கேள்வி: இலங்கையின் இளம் வீராங்கனைகளுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்: 'இலங்கை யுவதிகளிடம் திறமை இருக்கிறது. மனதை தளரவிடாமல் விடா முயற்சியுடன் தொடர்ந்து விளையாடினால் உயரிய நிலையை அடைய முடியும். அவர்கள் ஒருநாள் அதனை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறேன்.'

கேள்வி: உங்களது எதிர்கால இலட்சியம் என்ன?

பதில்: 'எல்லா இளையோரையும் போன்று இங்கிலாந்து தேசிய மகளிர் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த இலக்கை அடைய நான் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும். அத்துடன் எத்தனையோ படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. எனது பெற்றோர், பயிற்றுநர் ஆகியோரின் ஆசியுடன் அந்த இலக்கை அடைந்தே தீருவேன்.'

அமுருதாவின் தந்தை எஸ். சுரேன்குமார், வடக்கின் கிரிக்கெட் சமரில் துடுப்பாட்டத்துக்கான சாதனையை நிலைநாட்டியவராவார். 1990இல் நடைபெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பரி. யோவான் அணி சார்பாக சுரேன்குமார் குவித்த 145 ஓட்டங்களே வடக்கின் சமரில் தனி நபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இன்றும் இருந்துவருகிறது.

அமுருதாவின் இளைய சகோதரிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/180936

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலங்கையில் விளையாடிய போட்டியில் பந்துவீச்சு/ஓட்ட விபரங்கள்/காணொளி கிடைத்தால் பகிருங்கள், பார்ப்போம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயம் said:

இலங்கையில் விளையாடிய போட்டியில் பந்துவீச்சு/ஓட்ட விபரங்கள்/காணொளி கிடைத்தால் பகிருங்கள், பார்ப்போம். 

https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/sri-lanka-women-under-19s-vs-england-women-under-19s-3rd-match-1427800/full-scorecard

https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/australia-women-under-19s-vs-england-women-under-19s-2nd-match-1427799/full-scorecard

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு + மகிழ்ச்சி ........பாராட்டுக்கள்.......!  👍

என்ன ஒரு சந்தேகம்......நியாயமா இனிமேல் நியாயம் காணொளி கேட்பாரெண்டு நான் நினைக்கேல்ல ...... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய போட்டியில் அம்மு நன்றாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து படுதோல்வி.

Result
SL-WMN U19 vs ENG-WMN U19, 3rd Match
Sri Lanka Tri-Nation Women's Under-19s ODI Tournament

SL-W 226
ENG-W 118
SL-WMN U19 won by 108 runs

Click here to view more @espncricinfo :

https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/sri-lanka-women-under-19s-vs-england-women-under-19s-3rd-match-1427800/full-scorecard

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க கிடைத்தது பெரும் பாக்கியமாகும் - பிரித்தானிய தமிழ் யுவதி அமுருதா கூறுகிறார்

வாழ்த்துக்க‌ள்..........

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2023 at 10:58, goshan_che said:

வாழ்த்துக்கள்.

இவர் யாழ் செஞ் ஜோன்ஸ் கல்லூரி அணி வீரரும் 90ஆம் ஆண்டு சென்ரல்- சென் ஜோன்ஸ் போட்டியில் சதம் அடித்தவருமான சுரேன்குமாரின் மகளாவார். 

இவாக்கு திற‌மை இருந்தா க‌ண்டிப்பாய் இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் கிடைக்கும் ஆனால் இவா திற‌மையை வெளிக்காட்ட‌ க‌டினாம‌ ப‌யிற்ச்சி செய்ய‌னும்......................இங்லாந் ம‌க‌ளிர் அணியில் திற‌மையான‌ ப‌ல‌ ம‌க‌ளிர் இருக்கின‌ம் அவைய‌ முந்தி இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் பிடிச்சா இந்த‌ ச‌கோத‌ரிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் உண்டு

இங்லாந்தில் யார் திற‌மைய‌ வெளி காட்டின‌மோ அவைக்கு இங்லாந் தேர்வுக்குழு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும்

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் இவா காட்டும் திற‌மை தான் தேர்வுக்குழுவின் பார்வைக்கு போகும்🙏.........................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நேற்றைய போட்டியில் அம்மு நன்றாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து படுதோல்வி.

Result
SL-WMN U19 vs ENG-WMN U19, 3rd Match
Sri Lanka Tri-Nation Women's Under-19s ODI Tournament

SL-W 226
ENG-W 118
SL-WMN U19 won by 108 runs

Click here to view more @espncricinfo :

https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/sri-lanka-women-under-19s-vs-england-women-under-19s-3rd-match-1427800/full-scorecard

முக்கிய‌மான‌ விளையாட்டில் தோல்வி அடைவ‌து வ‌ருத்த‌ம் அளிக்குது

போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ 20 ஓவ‌ர் விளையாட்டில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணிய‌ இங்லாந் ம‌க‌ளிர் அணி சிம்பிலா வென்று விட்டின‌ம்.................................................

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

இவாக்கு திற‌மை இருந்தா க‌ண்டிப்பாய் இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் கிடைக்கும் ஆனால் இவா திற‌மையை வெளிக்காட்ட‌ க‌டினாம‌ ப‌யிற்ச்சி செய்ய‌னும்......................இங்லாந் ம‌க‌ளிர் அணியில் திற‌மையான‌ ப‌ல‌ ம‌க‌ளிர் இருக்கின‌ம் அவைய‌ முந்தி இங்லாந் ம‌க‌ளிர் அணியில் இட‌ம் பிடிச்சா இந்த‌ ச‌கோத‌ரிக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் உண்டு

இங்லாந்தில் யார் திற‌மைய‌ வெளி காட்டின‌மோ அவைக்கு இங்லாந் தேர்வுக்குழு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும்

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் இவா காட்டும் திற‌மை தான் தேர்வுக்குழுவின் பார்வைக்கு போகும்🙏.........................................

அம்மு  சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். 

அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார்.

ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான்.

@வாலி உங்கள் கவனத்துக்கும்.

நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள் @MEERA

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அம்மு  சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். 

இது த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்
ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ இவா தெரிவாக‌ வில்லை....................
ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ க‌ருணாநிதி குடும்ப‌ம் ஒரு அணிய‌ கூட‌ வாங்க‌ வில்லை.....................

ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ மொத்த‌ம் 5அணிக‌ள்.............................

Screenshot-20240410-222513-Chrome.jpg

இதில் நீங்க‌ள் சொன்ன‌ அணியின் பெய‌ர் இல்லை.................Sunrisers இங்லாந் ம‌க‌ளிர் உள்ளூர் கில‌ப்பின் பெய‌ர்..................அந்த‌ கில‌ப்பில் தான் இவான்ட‌ கிரிக்கேட் விளையாட்டு  தொட‌ங்கின‌து..............................இங்லாந் ம‌க‌ளிர் தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்காத‌ இவ‌ங்க‌ளை ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ எப்ப‌டி வேண்டுவின‌ம்................ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ ஏல‌த்தில் வேண்டின‌ ப‌ல‌ருக்கு விளையாடும் வாய்ப்பு பெரிசா கிடைக்க‌ வில்லை

இந்த‌ பிள்ளை இப்ப‌ தான் கிரிக்கேட்டில் கால் அடி எடுத்து வைச்சு இருக்கிறா

இன்னும் ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு.................................

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

ஓ அப்படியா? தகவலுக்கு நன்றி.

எனக்கு மகளிர் கிரிகெட், ஐ பி எல் இரெண்டும் சுத்தம்🤣. அதுதான் நினைக்கிறேன் என எழுதினேன்.

எங்கோ இவர் சன்ரைசர்ஸ் எண்டு தலையங்கம் வாசித்தேன்.  

———

ஆனால் வியாஸ்காந்தை வாங்கியது ஹைதரபாத் என்பது சரிதானே?

வேறு ஏதாவது ஐபிஎல் அணி ஈழ தமிழருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஓ அப்படியா? தகவலுக்கு நன்றி.

எனக்கு மகளிர் கிரிகெட், ஐ பி எல் இரெண்டும் சுத்தம்🤣. அதுதான் நினைக்கிறேன் என எழுதினேன்.

எங்கோ இவர் சன்ரைசர்ஸ் எண்டு தலையங்கம் வாசித்தேன்.  

———

ஆனால் வியாஸ்காந்தை வாங்கியது ஹைதரபாத் என்பது சரிதானே?

வேறு ஏதாவது ஐபிஎல் அணி ஈழ தமிழருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதா?

நானும் உங்க‌ளை மாதிரி தான் ஜ‌பிஎல்ல‌ மேல் ஓட்ட‌மாய் பார்ப்பேன்...............இப்ப‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌தால் என‌து நேர‌ம் அதோடையே போகுது

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி 
ஈழ‌ த‌மிழ‌னை ஏதோ ஒரு ஜ‌பிஎல் அணி வேண்டின‌வையாய் ஆனால் அவ‌ர் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ விளையாட்டில் விளையாட‌ விட‌ வில்லை என்று நினைக்கிறேன்.............................

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2024 at 21:08, goshan_che said:

அம்மு  சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். 

அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார்.

ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான்.

@வாலி உங்கள் கவனத்துக்கும்.

நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள் @MEERA

எல்லாம் உங்க விருப்பம் எசமான்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.