Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான  அல்பிரட் துரையப்பாவின் மருமகனான கொழும்பில் பிறந்த நிஷான் துரையப்பா, தற்போது கனடாவின் பீல் கோட்டத்தின் காவல்துறையின் தலைமையராக இருந்து இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார். 

02.jpg

அவர் இங்கு காவல்துறை தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் உண்ணோட்டமிட்டார். பின்னர் அவர் துணை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

திரு நிசான் துரையப்பா தான் பிறந்த வீட்டிற்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

https://www.sundaytimes.lk/231231/news/duraiappahs-nephew-glad-to-be-back-home-543904.html

Edited by நிழலி
தலைப்பு திருத்தம்
  • நன்னிச் சோழன் changed the title to கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரோகி துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

Alfred Duraiappah’s son proud of Sri Lanka’s development

1-3-9.jpg

Chief of Police of the Peel Regional Police in Canada, Nishan Duraiappah said that he is extremely happy as a person of Sri Lankan origin to witness the development of Sri Lanka.

He said this while participating in a press conference held yesterday (29) after meeting Acting Inspector General of Police Deshbandu Tennakoon.

Nishan Duraiappah is a grandson of Alfred Duraiappah who was killed when he was Mayor of Jaffna. He has come to Sri Lanka for a visit and met the Acting Inspector General of Police yesterday (29).

He was brought to the Police Headquarters in a horse-drawn procession amid police salutes. A reception was also held for him at the Police Headquarters.

Duraiappah said that he left the country with his parents in 1974 when he was a nine-month-old child and returned in 2003 and it is a matter of happiness that Sri Lanka has achieved great development in the past 20 years. “I was born in Colombo, Sri Lanka. I am very happy to be a Sri Lankan. I was nine months old when my parents and I moved to Canada.

There were about 70 families there. Today, a large number of Sri Lankan families are residing there. A large number of people have obtained citizenship.

Professionals from various fields of education are working in big positions there,” he said.

“Sri Lanka has achieved a lot of development compared to that time. Roads are developed. Like the tourism industry, other industries have developed. I saw a large group of tourists coming to this country,” he said.

https://www.dailynews.lk/2023/12/30/local/320993/alfred-duraiappahs-son-proud-of-sri-lankas-development/

  • நிழலி changed the title to கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நன்னிச் சோழன் said:

அல்பிரட் துரையப்பாவின் மருமகனான கொழும்பில் பிறந்த நிஷான் துரையப்பா

இவருக்கு வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைப்பில பேரப்பிள்ளைன்னு போட்டிருக்கு. உள்ள மருமகன் என்று போட்டிருக்கு.

ஆங்கில ஊடகம் ஒரு படி மேல போய் மகன் என்றும் பேரப்பிள்ளை என்றும் எழுதி இருக்குது.

உண்மையில்.. செய்தியை வடிக்கிறாங்களா.. இல்ல.. தங்களுக்கு ஏற்றமாதிரிக்கு வகுக்கிறாங்களா..??!

சரி.. கனடாவில் இருந்து உல்லாசப் பயணம் வாறவை.. இப்படி சொறீலங்கா அரச.. அரசு சார் விடயங்களில்.. பங்கேற்க.. சொறீலங்கா உல்லாச விசா அனுமதிக்காதே..???!

ஆமாம் ஆமாம்.. சொறீலங்காவின் டெவலப்மென்ட் ட பார்த்து அவர் பிரமிப்பது ஒன்றும் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த கால கொழும்பு போல் இல்லை இப்ப கொழும்பு.

ஆனால்.. நாடு.. கட்டட ரீதியா எழும்பி நின்றாலும்.. பொருண்மிய ரீதியா வீழ்ந்து கிடக்குது. இதையும் கவனிக்கனும். அதுசரி.. காவல்துறை ஆளுக்கு நாட்டின் பொருண்மியம் பற்றி தெரிய லாக்கில்லை தானே. பேரன் துரையப்பாவுக்கு.. சொந்த மக்களின் தாகம் புரியவில்லை.. தன் பதவி சுகம் மட்டுமே தெரிந்தது.. அந்த வகையில்.. இவருக்கு வளர்ந்து நிற்கும் கட்டடங்கள்.. தெரியுது.. நாட்டின் மோசமான பொருண்மிய சமூக நிலை தெரியவில்லை. பாவம்.. ஜீன் அப்படி. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழின துரோகிகளுக்கு இனவாத சிங்களம் செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதை வரவேற்புகளும் கொடுப்பது ஒன்றும் புதிதல்லவே.

ஈழத்தமிழர்களே இனியாவது உங்களை சுதாகரிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.சிங்களம் தீயாய் வேலை செய்கின்றது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழின துரோகிகளுக்கு இனவாத சிங்களம் செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதை வரவேற்புகளும் கொடுப்பது ஒன்றும் புதிதல்லவே.

ஈழத்தமிழர்களே இனியாவது உங்களை சுதாகரிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.சிங்களம் தீயாய் வேலை செய்கின்றது.

அவர் துரையப்பாவின் பேரன் என்பதற்காக நாம் அவரையும் துரோகப்பட்டியலில் இடுவது முறையல்ல. 

இவரது நடவடிக்கைகள் மட்டுமே அதை தீர்மானிக்க வேண்டும். கனடா உறவுகள் இவர் பற்றி அறியத் தாருங்கள். நன்றி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா நாட்டில் காவல் துறை உயர் பதவியில் இருக்கும் ரோஷான் துரையப்பாவுக்கு வாழ்த்துகள்.   

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

இவருக்கு வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்ல. 

யாருக்கானது ?  சிறிய விளக்கம் தேவை? 

1 hour ago, nedukkalapoovan said:

தலைப்பில பேரப்பிள்ளைன்னு போட்டிருக்கு. உள்ள மருமகன் என்று போட்டிருக்கு.

ஆங்கில ஊடகம் ஒரு படி மேல போய் மகன் என்றும் பேரப்பிள்ளை என்றும் எழுதி இருக்குது.

உண்மையில்.. செய்தியை வடிக்கிறாங்களா.. இல்ல.. தங்களுக்கு ஏற்றமாதிரிக்கு வகுக்கிறாங்களா..??!

சரி.. கனடாவில் இருந்து உல்லாசப் பயணம் வாறவை.. இப்படி சொறீலங்கா அரச.. அரசு சார் விடயங்களில்.. பங்கேற்க.. சொறீலங்கா உல்லாச விசா அனுமதிக்காதே..???!

ஆமாம் ஆமாம்.. சொறீலங்காவின் டெவலப்மென்ட் ட பார்த்து அவர் பிரமிப்பது ஒன்றும் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த கால கொழும்பு போல் இல்லை இப்ப கொழும்பு.

ஆனால்.. நாடு.. கட்டட ரீதியா எழும்பி நின்றாலும்.. பொருண்மிய ரீதியா வீழ்ந்து கிடக்குது. இதையும் கவனிக்கனும். அதுசரி.. காவல்துறை ஆளுக்கு நாட்டின் பொருண்மியம் பற்றி தெரிய லாக்கில்லை தானே. பேரன் துரையப்பாவுக்கு.. சொந்த மக்களின் தாகம் புரியவில்லை.. தன் பதவி சுகம் மட்டுமே தெரிந்தது.. அந்த வகையில்.. இவருக்கு வளர்ந்து நிற்கும் கட்டடங்கள்.. தெரியுது.. நாட்டின் மோசமான பொருண்மிய சமூக நிலை தெரியவில்லை. பாவம்.. ஜீன் அப்படி. 

""சொந்த மக்களின் தாகம் புரியவில்லை.. தன் பதவி சுகம் மட்டுமே தெரிந்தது.. அந்த வகையில்.. இவருக்கு வளர்ந்து நிற்கும் கட்டடங்கள்.. தெரியுது.. நாட்டின் மோசமான பொருண்மிய சமூக நிலை தெரியவில்லை""

சொந்த மக்களின் தாகம் புரியவில்லை என எதை வைத்துக் கூறுகிறீர்கள்? 

1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழின துரோகிகளுக்கு இனவாத சிங்களம் செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதை வரவேற்புகளும் கொடுப்பது ஒன்றும் புதிதல்லவே.

ஈழத்தமிழர்களே இனியாவது உங்களை சுதாகரிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.சிங்களம் தீயாய் வேலை செய்கின்றது.

இவர் எப்படி துரோகியானார்? புரியவில்லை? 

அவர் ஏன் இலங்கை போனார் எந்த அடிப்படையில் போனார் என்கிற விடயம் தெரியாமல் முடிவெடுக்க முடியுமா? 

Posted
1 hour ago, விசுகு said:

அவர் துரையப்பாவின் பேரன் என்பதற்காக நாம் அவரையும் துரோகப்பட்டியலில் இடுவது முறையல்ல. 

இவரது நடவடிக்கைகள் மட்டுமே அதை தீர்மானிக்க வேண்டும். கனடா உறவுகள் இவர் பற்றி அறியத் தாருங்கள். நன்றி. 

அப்படி அவர் தமிழருக்கு எதிராக செயற்பட்டதாக தெரியவில்லை.

பஞ்சாபிகள்,சீனர் பலர் பல காலமாக  காவல்துறையில் இருந்தும் இவர் தெரிவானது ஆச்சரியமளித்தாலும்  இவரின் திறமையாக இருக்கலாம் என நினைக்கிறேன். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்களே துரோகிகளை உருகவித்து, உருவாக்கி, அதை அழிப்பதாக நினைத்து  அதனாலேயே  அழிந்தோம்............

மீண்டுமா.....

  • Like 7
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kapithan said:

யாருக்கானது ?  சிறிய விளக்கம் தேவை? 

1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான  அல்பிரட் துரையப்பா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அவர் துரையப்பாவின் பேரன் என்பதற்காக நாம் அவரையும் துரோகப்பட்டியலில் இடுவது முறையல்ல. 

இவரது நடவடிக்கைகள் மட்டுமே அதை தீர்மானிக்க வேண்டும். கனடா உறவுகள் இவர் பற்றி அறியத் தாருங்கள். நன்றி. 

துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம்.

ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

அப்படி அவர் தமிழருக்கு எதிராக செயற்பட்டதாக தெரியவில்லை.

பஞ்சாபிகள்,சீனர் பலர் பல காலமாக  காவல்துறையில் இருந்தும் இவர் தெரிவானது ஆச்சரியமளித்தாலும்  இவரின் திறமையாக இருக்கலாம் என நினைக்கிறேன். 

இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. 

இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

1975 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் சாவொறுப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தின் மேயரான  அல்பிரட் துரையப்பா

இவருக்கு வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்ல. 
👆

வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்லவென்றால் யாருக்கு இந்த மரியாதை? 

2 hours ago, மலையான் said:

துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம்.

ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".

தமிழரசுக்கட்சிக்கு சவாலாக இருந்த எல்லோருக்கும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டதுதான் வரலாறு. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

இவர் எப்படி துரோகியானார்? புரியவில்லை? 

அவர் ஏன் இலங்கை போனார் எந்த அடிப்படையில் போனார் என்கிற விடயம் தெரியாமல் முடிவெடுக்க முடியுமா? 

இவர் இவ்வளவு காலமும் ஏன் அடைகாத்துக்கொண்டு இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, Kapithan said:

சொந்த மக்களின் தாகம் புரியவில்லை என எதை வைத்துக் கூறுகிறீர்கள்? 

இவர் காலத்தில் எங்கள் உறவினர்கள் உட்பட பலர் சொறீலங்கா பொலிஸ் சேவையில் இருந்து சுயமாக விலகிச் சென்றார்கள். சொறீலங்கா பொலிஸின் தமிழர் விரோத.. தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரலை.. தவறாகக் கையாள ஆரம்பித்ததற்காக.

ஆனால் அல்பிரட் துரையப்பா செய்தது... பேரினவாத.. அதிகார சிங்களத்தின் கட்டளைக்கு அமைய தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

இப்ப புரியுதா.. மக்களின் தாகம் எது என்று அறியாதவன்.. எப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்கலாம். சொந்த மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால்.. ஒரு பொலிஸ் அதிகாரி தானாக பதவி விலகும் போது.. ஒரு மக்கள் பிரதிநிதி என்ன செய்திருக்க வேண்டும்..??! அந்த மக்களை அதே பொலிஸை ஏவி அடக்குவதா..???!

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, நியாயம் said:

இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. 

இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.

ஒரு இனப்படுகொலையில் (தமிழாராட்சி மாநாடு உட்பட) நேரடியாக பங்களித்த..பங்களிக்கின்ற.. சொறீலங்கா பொலிஸின் மரியாதைக்கு அலைவதை.. இன்ரபோலின் தலைமை பதவியில் இருந்து கொண்டு ஒரு தமிழன் செய்தால் கூட.... மெச்சக்கூடிய விடயம் அல்ல. அது விமர்சிக்கப்பட வேண்டியதே. கண்டிக்கத்தக்கதே.

spacer.png

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. 

தகவலுக்கு நன்றி சகோ. 

1 hour ago, nedukkalapoovan said:

இவர் காலத்தில் எங்கள் உறவினர்கள் உட்பட பலர் சொறீலங்கா பொலிஸ் சேவையில் இருந்து சுயமாக விலகிச் சென்றார்கள். சொறீலங்கா பொலிஸின் தமிழர் விரோத.. தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரலை.. தவறாகக் கையாள ஆரம்பித்ததற்காக.

ஆனால் அல்பிரட் துரையப்பா செய்தது... பேரினவாத.. அதிகார சிங்களத்தின் கட்டளைக்கு அமைய தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

இப்ப புரியுதா.. மக்களின் தாகம் எது என்று அறியாதவன்.. எப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்கலாம். சொந்த மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால்.. ஒரு பொலிஸ் அதிகாரி தானாக பதவி விலகும் போது.. ஒரு மக்கள் பிரதிநிதி என்ன செய்திருக்க வேண்டும்..??! அந்த மக்களை அதே பொலிஸை ஏவி அடக்குவதா..???!

வரலாற்று பதிவிற்கு நன்றி. 

கனேடியரான அவரது  பேரனுக்கும்  இதற்கும் என்ன தொடர்பு? 

புரியவில்லை? 

2 hours ago, குமாரசாமி said:

இவர் இவ்வளவு காலமும் ஏன் அடைகாத்துக்கொண்டு இருந்தார்?

குசா, 

அவர் என்ன அடிப்படையில் அங்கு சென்றார் என்கிற விபரம்  எதுவும் தெளிவாகத்  தெரியாத  நிலையில் நாங்கள் ஒரு பெட்டிச் செய்தியை வைத்து முடிவெடுப்பது சரியான செயலா? 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Strengthening community Police Units in SL receives accoladessharethis sharing button

police.jpg

Chief of Canada’s Peel Regional Police, Nishan Duraiappah participated in a special discussion with Minister of Public Security Tiran Alles at Police Headquarters in Colombo.

During the discussion, which covered various topics related to the security of both countries, programme aimed at strengthening community Police Units, implemented under advice and guidance of Minister Alles received special appreciation from the Canadian Police Chief.

Nishan Duraiappah pledged the full support of the Canadian Police to further enhance the programme.

Several critical issues concerning security in both countries were also addressed.

Born in Sri Lanka in 1973, Nishan Duraiappah is the nephew of the late Jaffna Mayor Alfred Duraiappah who was tragically killed by the LTTE in 1975.

He is a graduate of the University of Toronto, Canada.

Minister Alles said Nishan being born in Sri Lanka and now serving as the head of the Canadian Peel Region Police Service was a source of great pride to the nation.

A Special Police salute was accorded to Duraiappah on his visit to Police Headquarters and a memento was presented to mark the occasion.

Acting IGP Deshabandu Tennakoon, along with a group of senior officers from the Police Department were present at the event.

https://english.theleader.lk/news/7166-strengthening-community-police-units-in-sl-receives-accolades

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, Kapithan said:

Born in Sri Lanka in 1973, Nishan Duraiappah is the nephew of the late Jaffna Mayor Alfred Duraiappah who was tragically killed by the LTTE in 1975.

40 minutes ago, Kapithan said:

கனேடியரான அவரது  பேரனுக்கும்  இதற்கும் என்ன தொடர்பு? 

புரியவில்லை? 

இதுக்க எதுக்கு எல் ரி ரி ஈ புகுத்தினம்..???! துரையப்பா சொந்த இனப்படுகொலை ஏஜென்ட்.. சிங்கள அரச பயங்கரவாத விசுவாசி என்பதற்காகவா.. இவருக்கு.. இந்த அங்கீகாரம்..?!

அல்லது கனடா அரசு பரிந்துரையில் வந்திருந்தால்.. ஏன் துரையப்பா.. எல் ரி ரி ஈ.. இதற்குள்..???!

அப்படி என்றால்.. துரையப்பாவின் கண் முன்னால்.. 1974 இல்.. உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில்.. இதே சிங்களப் பொலிஸ் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததை.. ஏன் சொல்லினம் இல்லை மறைக்கினம். தமிழ் இனப்படுகொலையின் ஒரு அங்கமான சொறீலங்கா பொலிஸூக்கு இவர் எதற்கு வெள்ளையடிக்கனும்.

அல்லது கனடாவின் மேற்குலகின் வழமையான.. இரட்டை கோரமுகத்தை இது இனங்காட்டுகிறதா..????!

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, Kapithan said:

During the discussion, which covered various topics related to the security of both countries, programme aimed at strengthening community Police Units, implemented under advice and guidance of Minister Alles received special appreciation from the Canadian Police Chief.

Nishan Duraiappah pledged the full support of the Canadian Police to further enhance the programme.

சொறீலங்கா.. பொலிஸ் செய்த போர்க்குற்றங்களுக்கான அங்கீகார ஊக்குவிப்பா.. இது..???! அண்மையில் கூட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை அடித்தே கொன்றது.. இதே பொலிஸ். இப்படி எத்தனையோ ஆயிரம் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் மனித இனத்துக்கு எதிரான கடும் உடல் சித்திரவதைகளையும் உளச் சித்திரவதைகளையும் செய்த செய்து கொண்டிருக்கும் சொறீலங்கா பொலிஸுக்கு எதற்கு இந்த வெள்ளையடிப்பு.. வெற்றுப் புகழ்ச்சிக்காகவா...???!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Sri Lanka: Police Abuses Surge Amid Covid-19 Pandemic

https://www.hrw.org/news/2021/08/06/sri-lanka-police-abuses-surge-amid-covid-19-pandemic

Sri Lanka: Grave Abuses Under Discredited Law

https://www.hrw.org/news/2022/02/07/sri-lanka-grave-abuses-under-discredited-law

Sri Lanka’s former president must be investigated for war crimes

https://www.hrw.org/news/2022/07/22/sri-lankas-former-president-must-be-investigated-war-crimes

Excessive use of force

There were multiple instances of excessive and unnecessary force being used against people queuing for fuel. In May, the Ministry of Defence authorized the armed forces to open fire on looters or “anyone causing harm to others”. The army was mobilized to police civilian protests on multiple occasions.

https://www.amnesty.org/en/location/asia-and-the-pacific/south-asia/sri-lanka/report-sri-lanka/

இவை எல்லாம் (சில உதாரணங்களே இணைக்கப்பட்டுள்ளது இங்கு. இப்படிப் பல ரிப்போட் வெளியிடப்பட்டுள்ளது.) போருக்குப் பின்னான சம காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சொறீலங்கா பொலிஸுக்கு எதிரான சொறீலங்கா படை மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிரான.. குற்றச்சாட்டுக்கள். இவை எல்லாத்தையும் கனடா பொலிஸ் அங்கீகரிக்கிறதா.. இந்த நபரின் செயலின் மூலம்.. அதையா அர்த்தப்படுத்துகிறார்கள்..???!

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, மலையான் said:

துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம்.

ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".

நீங்கள் கூறியது உண்மை. யாழ்பாணத் தேர்தல் தொகுதியில் வாழ்ந்தவர்களுக்கு உண்மை தெரியும். 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.