Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

இதில் எற்றுகொள்ளக்கூடிய கருத்துகள் உண்டு”  அப்படியென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் போருக்கு உதவியாக இருக்கவில்லை  புலிகள் போரில் வென்று தங்களுடைய பகுதிகளை தொடர்ந்து நிர்வாகம் செய்து வந்தால்????

நீங்கள் கூறியது போல் ஒரு பிரதேசத்தை கட்டுப்பாட்டுல் கொண்டுவந்து நிர்வாகம் செய்வதானால்: 

சர்வதேச தொடர்புகள் இன்றி அவர்களின் அங்கீகாரம் இன்றி புலிகளால் ஒரு எல்லைக்கு மேல் அவ்வாறான நிர்வாகத்தை செய்ய முடியாது. முன்பு கூட    புலிகளது நிர்வாகப் பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச ஊழியர்கள்களுக்குமான  சம்பளம் ஶ்ரீலங்கா அரசாலேயே தொடர்ச்சியாக  வழங்கங்கப்பட்டு வந்தது.  அரச வர்ததமானி அறிவித்தல்கள் புலிகளின்  கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் செல்லுபடியானது. ஊழியர்களுக்கான இடமாற்றங்களை ஶ்ரீலங்கா அரசே செய்தது. 

தனயே  முழுமையாக  நிர்வாகம் செய்வதென்றால் அனைத்துலக அங்கீகாரம்  இல்லாமல் செய்ய முடியாது.  சர்வதேச பணப்பரிவர்ததனை,  தொலைத்தொடர்பு, சுகாதார சேவைகள், போக்குவரத்து, இறக்குமதி ஏற்றுமதி வர்ததகம் ஆகியவற்றை சுயாதீனமாக  செய்ய வேண்டுமானால் உலக அங்கீகாரம் தேவை. 

  • Like 1
  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

Kapithan

சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

island

நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் எண்ணம் தவறு.

எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன.

நான் நினைக்கிறேன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களை அல்லது இன்னமும் புலிகளின் பயணம் இருக்கு என்றபடியாலோ என்னவோ யாருமே வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

நீங்கள் கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அது உங்களது விருப்பம் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, island said:

நீங்கள் கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அது உங்களது விருப்பம் மட்டுமே

அமெரிக்கா யாருடைய நாடு? அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா யாருடைய நாடு? அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? 😎

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா யாருடைய நாடு? அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? 😎

எல்லைகள் உண்டு”  எவருமே விசா இன்றி உள்புக. முடியாது அமெரிக்கர்களின் நாடு   சுருக்கமாகச் சொன்னால்  ஈழப்பிரியன்.  யஸ்ரின்.  மருதன்கேணி.  நூணாவிலன்.  ..   நில்மினி    ...  போன்றோருடைய.  நாடு 🤣.  மேலும்  சீனா ரஷ்யா   பிரித்தானியா,.  போன்ற உலக நாடுகள் அமெரிக்காவை எற்றுக்கொண்டு உள்ளன     இது ஆதாரம் இல்லையா??? 

1 hour ago, Kapithan said:

தனது நான்கு பிள்ளைகளை கரும்புலிகளாகக் கொடுத்த ஒரு தாயை எனக்குத் தெரியும். அவர் நிதானமாகத்தான் இருக்கிறார். 

😏

எவரும் கதைக்காவிடில். பேசாமல் தானே இருக்க வேண்டும்   ...நீங்கள் கதைக்காவிடில். விசுகர். பேசாமல் இருப்பார்   🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, Kandiah57 said:

எவரும் கதைக்காவிடில். பேசாமல் தானே இருக்க வேண்டும்   ...நீங்கள் கதைக்காவிடில். விசுகர். பேசாமல் இருப்பார்   🤣

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.......சுத்தம்.

🙏

Edited by Kapithan
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

1) உங்கள் எழுத்து எல்லாம் விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள்அட்டுமே உரிமை கோர முடியும் என்பதாய்த்தான் இருக்கிறது 

2) இங்கே ஒருவரும் போராளிகளைத் தூற்றவில்லை. சரி பிழைகளை ஆய்வு செய்ய முற்படும் எல்லோரையும் காயடித்தே விரட்டிவிடுகிறீர்கள். இதனால் உண்மைபற்றாளர்கள் எல்லோரும் ஓடி ஒழிகிறார்கள். 

3) பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்? உங்களுக்குத் தரப்படும் மரியாதை என்பது உங்கள் பங்களிப்புக்கான அங்கீகாரம். அதை உங்களுக்கான அதிகாரமாக  நினைப்பீர்களானால் அது தவறு. உங்களைப்போலவே பிறருக்கும் பதிலளிக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்

4) உங்கள் வாழ்த்துக்காகவும் Like ற்காகவும் நற்சொல்லுக்காகவும்   யாழ் களத்தில் ஒரு சிலரே உள்ளனர் . அந்த வட்டத்திற்குள் நான் இல்லை. உங்கள் நற்சொல்லுக்காக எனது கருத்தை மாற்றிக்கொள்ள முடியாது. 

1 - தவறான புரிதல் மற்றும் குற்றச்சாட்டு

செயலற்ற எவரும் என் மனதில் இடம் பிடிப்பதில்லை. ஆனால் அவர்களை துரோகிகள் என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை எழுதியதுமில்லை

2 - உண்மையானவர்கள் செய்தவர்கள் இங்கே இருக்கிறார்கள் பார்க்கிறார்கள். எல்லை மீறும் போது வருவார்கள். உங்களுக்கும் பலமுறை வாங்கிக் கட்டிய அனுபவத்தை யாழ் களம் அறியும். 

3 - எங்களைப் போன்ற சிலர் இன்றும் இவ்வாறு இருப்பதால் தான் புலிகள் போராளிகளாகவாவது இருக்கிறார்கள். இல்லையெனில் சும்மா இருந்தபடி செய்பவனை பயங்கரவாதிகளாக்க சிலரின் நாக்குகள் நன்றாக வளையும். 

4 - செயற்பாட்டார்களை இவ்வுலகம் போற்றும் பின்பற்றவும் செய்யும். பல கோடி உங்கள் எழுத்துருக்களை விட ஓர் செயல் பெறுமதியானது என்பது தான் அதற்கு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

1) அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உங்கள் சிந்தனை எழுத்தில் மிளிருகிறது. செயற்படுபவர்கள் பிறர் மனதில் இடம்பிடிக்க முயற்சிப்பதில்லை 

2) எனது எழுத்துக்களில் பயம் தெரிகிறதா ? சும்மா  பகிடி விடாதேயுங்கோ விசுகர். யாழ் களத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும். அதற்காக கோபப்பட முடியுமா? 

3)  தனி ஒருவனுக்காக இந்த உலகம் காத்திருப்பதில்லை.

4) 200%

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 16/1/2024 at 18:13, Justin said:

த காலப் பகுதியில், "தீர்வுக்கு உடன்படா விட்டால் புலிகளை அழித்து விடுவது" என்ற மேற்கின் முடிவை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகவும் பதிவுகள், பகிர்வுகள் இருக்கின்றன (யாழில் கூட இருக்கலாம்). இதை எதிர் கொள்ள என்ன மாதிரியான திட்டம் (Plan B) புலிகளின் தலைமையிடம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் குறிப்பிடுங்கள்.

ஏனெனில், பேச்சுவார்த்தை முறிந்தால் புலிகளின் அடுத்த நகர்வு மேற்கின் எச்சரிக்கையின் பின்னணியில் என்ன என்ற தெளிவு இருந்திருக்கா விட்டால், புலிகள் செய்தது நிச்சயம் தற்கொலை என்று தான் நான் கருதுகிறேன்.

இது தொடர்பான ஒரு தகவல்:

 புலிகள் தம்மை பகுதி பகுதியாக துண்டாடி அழிப்பதற்கான அனைத்துலகின் திட்டத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

2005 ம் ஆண்டே சமராய்வு மையத்தின் பொறுப்பாளர் யோ.யோகி அவர்கள் இது தொடர்பில் புலம்பெயர் சமூகத்திற்கு அறிவித்திருந்தார்; Project Beacon

அந்தக் காணொளி கூட இருக்கிறது என்னிடம். 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிலிருந்து போராட்டத்தையும் மக்களையும்  காப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன  என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

What is Project Beacon? - a Lesson for Ages!

It is a must read an article that was written by Dr. C.P.Thiagarajah on Nov 1, 2007. If Dr. T can know about these things - Project Beacon - in 3 years advance, why not LTTE hierarchy? It shows that Co-Chairs played the game to perfection with Tamils. For full article, please go to the below Link 

------------------------------------------------------------
World Democracies Wake up: Stop Sri-Lankan Terror

By: Dr C P Thiagarajah
Courtesy: TamilCanadian - November 1, 2007

There is consensus in world opinion for a political solution based on the UN accepted ‘traditional homelands of Ethnic minorities principle’. However the co-chairs of the aid giving nations appeared to swim against the tide. If as reported in the Tamil Editors.com the involvement of the co-chairs in the 'Three Year Plan' of GSL military solution were true it would be the biggest fraud of the IC. It would be a stab in the back for the Tamil polity. The co-chairs were killing the foetus of Tamil Eelam in the womb. It was alleged that this plan code-named ‘Project Beacon’ was first presented to the Co-Chairs to the peace process in Sri Lanka, namely United States; European Union; Norway and Japan, during December 2005 in the Norwegian capital Oslo. The initiative was to have started on May Day 2006. According to the proposal, the project would be completed by May Day 2009, and an additional two years would be required thereafter for 'mopping up' operations.

Project Beacon divided LTTE administered areas as at December 2005 into three coastal sections. The basic plan was to 'softening up' of sections by means of air raids and multi-barrel rockets; diversionary 'mini-offensives' in parts of other sections, and virtual siege of the area concerned for up to twelve months if necessary.

Project Beacon warned the co-chairs that there may be 'significant' civilian casualties during 'softening up' activities and 'apparent humanitarian crises' during sieges. Consequently, it was feared that the Tamil Diaspora would take to the streets of their host nations highlighting Tamil civilian casualty and genocide. The plan provided the co-chairs with the names of key Tamil activists who may lead such mass demonstrations in some 12 countries. The plan requested that these individuals be arrested on 'charges of terrorism', thus 'giving a clear warning to the Diaspora on the consequences of demonstrating against the government of Sri Lanka'.
 
Castro head of LTTE International Activities Final war speech 2008

https://www.marines.mil/Portals/1/Publications/Sri Lanka Study_6.pdf

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை புலிகளின் 40 வருட செயல் பாடுகளை தோல்வியில் முடிந்ததை போல திரைக்கதை வசனம் அமைக்கும் மாக்கள் கூட்டம் இதையும் தான் கொஞ்சம் கேட்கலாமே. 
தலைவர் கணிப்பின்படி ஒரு இளைய சமூகம் சரியாகவே சிந்திக்கிறது. 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, island said:

நீங்கள் கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அது உங்களது விருப்பம் மட்டுமே

அவர் சீரியசாகவே சொன்னாரா 🤔

எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
40 minutes ago, Sasi_varnam said:

விடுதலை புலிகளின் 40 வருட செயல் பாடுகளை தோல்வியில் முடிந்ததை போல திரைக்கதை வசனம் அமைக்கும் மாக்கள் கூட்டம் இதையும் தான் கொஞ்சம் கேட்கலாமே. 
தலைவர் கணிப்பின்படி ஒரு இளைய சமூகம் சரியாகவே சிந்திக்கிறது. 

தலைவரின் ஒவ்வொரு மாவீரர் நாள் உரை மற்றும் அவரது வார்த்தைகளை கேட்டிருந்தால் தோல்வி என்று சொல்லவே வராது.

அந்தாள் தன் காலத்தில் தமிழீழம் எடுத்து தருவேன் அல்லது கிடைக்கும் என்று ஒருபோதும் சொன்னதில்லை. எனது கடமையை நான் செய்துவிட்டு போகிறேன் மற்றவர்கள் தொடரணும் என்றும் போராட விட்டாலும் அழிப்பான் போராடினாலும் அழிப்பான் போராடி பார்க்கலாமே என்று தான் சொன்னார் செய்தார். ஆனால் இவர்கள் தான் சொன்னதை அவர் செய்து காட்டிய பின்னரும் அவர் நீங்கள் தொடருங்கள் என்பதை மறந்து அல்லது மறைக்க இவ்வாறு முட்டையில்  உரோமம் புடுங்கிக்கொண்டு திரிகிறார்கள். ஆயுதத்துக்கு தான் மௌனம் செருப்புக்கு இல்லை.

நன்றி தம்பி சசி இணைப்புக்கும் வருகைக்கும் 

உங்களுடைய இந்த காணொளி மூலம் தெரியவருவது:

செயல்படுபவர்கள் எவ்வாறு புலிகளை தலைவரை எடுத்து கொள்கிறார்கள் என்றும் செயற்பாடாதவர்கள் எப்படி நாக்கு வளைக்கிறார்கள் என்றும் ஆணித்தரமாக உணர்த்துகிறது. மீண்டும் நன்றி.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, விசுகு said:

அவர் செய்து காட்டிய பின்னரும் அவர் நீங்கள் தொடருங்கள் என்பதை மறந்து அல்லது மறைக்க இவ்வாறு முட்டையில்  உரோமம் புடுங்கிக்கொண்டு திரிகிறார்கள். ஆயுதத்துக்கு தான் மௌனம் செருப்புக்கு இல்லை.

இப்படியான சிந்தனைப்போக்கு கொண்ட ஆட்களை நம்பியபடியால்தான் எங்கள்  போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. 

பாதுகாப்பாக இருந்துகொண்டு உண்டியல் குலுக்கியதுதான் உங்களுக்கு இத்தனை ஆணவத்தையும் அகங்காரத்தையும் தந்திருப்பதாக தாங்கள் நினைத்தால் அந்த  நினைப்புத் தவறு விசுகர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

இப்படியான சிந்தனைப்போக்கு கொண்ட ஆட்களை நம்பியபடியால்தான் எங்கள்  போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. 

பாதுகாப்பாக இருந்துகொண்டு உண்டியல் குலுக்கியதுதான் உங்களுக்கு இத்தனை ஆணவத்தையும் அகங்காரத்தையும் தந்திருப்பதாக தாங்கள் நினைத்தால் அந்த  நினைப்புத் தவறு விசுகர். 

நான் பாதுகாப்பாக இருந்தேனே??

முரளிதரன் தொடக்கம் தமிழ்ச்செல்வன் வரை பிரான்ஸ் வந்த போது அவர்களுக்கான முழுப்பாதுகாப்பையும் செய்தவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்??? 

உண்டியல் குலுக்க பணித்தவர் இல்லை என்ற திமிர் வேண்டாம் 

இனத்துக்காக கைகள் கட்டப்பட்டு இருக்கு என்பது மட்டுமே இன்றைய நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, விசுகு said:

1) உண்டியல் குலுக்க பணித்தவர் இல்லை என்ற திமிர் வேண்டாம் 

2) இனத்துக்காக கைகள் கட்டப்பட்டு இருக்கு என்பது மட்டுமே இன்றைய நிலை. 

1) தலைவர் இருந்தால்  இப்படிக் கதைக்க உங்களுக்குத் தைரியம்  வந்திருக்குமா?  அவர் இல்லை என்றவுடன்  உங்கள் இயல்பான  குணங்கள் வெளிவருகின்றன. 

😏

2)  அதுபோலவே  உங்கள் எழுத்துக்களையும் பண்போடு வைத்திருங்கள் புண்ணியமாகப் போகும். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Kapithan said:

1) தலைவர் இருந்தால் உங்களால் இப்படிக் கதைக்க உங்களுக்குத் தைரியம்  வந்திருக்குமா?  அவர் இல்லை என்றவுடன்  உங்கள் இயல்பான  குணங்கள் வெளிவருகின்றன. 

😏

2)  அதுபோலவே  உங்கள் எழுத்துக்களையும் பண்போடு வைத்திருங்கள் புண்ணியமாகப் போகும். 

இன்னும் கொஞ்சம் எழுதுங்கள் அடுத்த பக்கம் வரட்டும. அதாவது 8 ஆவது பக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Kandiah57 said:

இன்னும் கொஞ்சம் எழுதுங்கள் அடுத்த பக்கம் வரட்டும. அதாவது 8 ஆவது பக்கம் 

தனி ஒருவனாக நின்று 8வது பக்கத்திற்கு கொண்டு செல்லுதல் என்ன லேசுப்பட்ட விசயமா கந்தையர்? அந்த 8 பக்கங்களில் 6 பக்கம் எனக்கு அர்ச்சனை செய்யப்பட்டவைதான். நின்றுபிடிக்கிறேன் என்றால் பாருங்கோவன்,.... 🤣

Edited by Kapithan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நன்னிச் சோழன் said:

இது தொடர்பான ஒரு தகவல்:

 புலிகள் தம்மை பகுதி பகுதியாக துண்டாடி அழிப்பதற்கான அனைத்துலகின் திட்டத்தை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

2005 ம் ஆண்டே சமராய்வு மையத்தின் பொறுப்பாளர் யோ.யோகி அவர்கள் இது தொடர்பில் புலம்பெயர் சமூகத்திற்கு அறிவித்திருந்தார்; Project Beacon

அந்தக் காணொளி கூட இருக்கிறது என்னிடம். 

7 hours ago, நன்னிச் சோழன் said:

நன்றி, நான் விசுகரிடம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான  விடையும் இதில் இருக்கிறது. எதையும் தரா விட்டால் இராணுவ வழி தான் என்று திட்டம் வைத்திருந்திருக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

1) தலைவர் இருந்தால்  இப்படிக் கதைக்க உங்களுக்குத் தைரியம்  வந்திருக்குமா?  அவர் இல்லை என்றவுடன்  உங்கள் இயல்பான  குணங்கள் வெளிவருகின்றன. 

😏

2)  அதுபோலவே  உங்கள் எழுத்துக்களையும் பண்போடு வைத்திருங்கள் புண்ணியமாகப் போகும். 

1 - தலைவர் இருந்தால் அவரது பிள்ளைகளை இப்படி எழுத கை வந்திருக்குமா உங்களுக்கு?

முன்பென்றால் இவ்வாறு எவராவது சொன்னால் உரிய இடத்தில் சொல்லி விட்டு நாங்கள் எங்களுக்கு தந்த கடமையை செய்ய போய் விடுவோம். அதற்கான பதில் விரைவில் எமது காதுக்கு எட்டும் 

இப்பவும் எனக்கு தலைவர் மேல் சின்ன வருத்தம் இருக்கு. எங்களையும் யோசித்து இருக்கலாமே என்று 😭  

2 - 2009 க்கு பின்னர் என்னை தேடி வந்த  எந்த அரசியல் விடயங்களிலும் அல்லது பொறுப்புகளிலும் சேர்வதை முற்றிலுமாக மறுத்து விட்டேன். காரணம் இது தான். என்னால் அந்த குணத்தை அந்த முகத்தை காட்டாமல் இருக்க முடியாது. ஒரு அளவுக்கு மேல் அது தானாக வந்து விடும். இங்கே அந்த முகம் தான் அனைவருக்கும் தெரியும். (என் சொந்த வாழ்க்கை உட்பட)

எனவே அந்த முகத்தை அல்லது அந்த முத்திரையை முன் நிறுத்தி எந்த அரசியல் வேலையையும் செய்யக்கூடாது என்று தான் விலகி இருக்கிறேன். இது பற்றி முன்பே இங்கே எழுதி இருக்கிறேன்.

இதற்குள் அது விடயமாக கொஞ்சம் விரிவாக எழுதி விட்டேன் அல்லது எழுத வைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். (ஒரு அளவுக்கு மேல் சிலரது கேள்வி என்னை உசார் படுத்திவிடும். தெரிந்து தான் சில விடயங்களை எழுதினேன். ஊரில் உள்ள அத்தனை அரச வருடிகளையும் பகைத்து வைத்து இருப்பதால் இது ஒன்றும் ஆபத்தல்ல)

நன்றி. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வாழ்க நலமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, Justin said:

நன்றி, நான் விசுகரிடம் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான  விடையும் இதில் இருக்கிறது. எதையும் தரா விட்டால் இராணுவ வழி தான் என்று திட்டம் வைத்திருந்திருக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் தான்.

இதில் இரகசியம் ஒன்றும் இல்லை. 2002 ல் சமாதான காலம் ஆரம்பித்த போது மிகுந்த மன மகிழ்வுடன் உற்சாகமாக அதை வரவேற்ற சாதாரண பொது மக்கள்,  காலங்செல்ல செல்ல இருபகுதியினிடமும்  அரசியல் தீர்வுக்கான விருப்பம் குறைந்து மீண்டும் ஒரு யுத்ததை நோக்கிய நகர்வு மெதுவாக சென்று கொண்டிருப்பதை கவலையுடன் பார்ததுக்கொண்டிருந்தார்கள். 

அரசியல் தீர்வு வெற்றியளித்தால் தமிழ் மக்களுக்கு காத்திரமான உயர்ந்தபட்ச  சுயாட்சியை வழங்ககவேண்டிவரலாம் என்று அஞ்சிய சிங்கள இனவாதிகள் பேச்சுவார்ததைகளுக்கு  முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளை செய்ய, இப் பேச்சுவார்ததையை மூலம் தமிழீழம் அல்லது அதற்கு இணையான தீர்வை அடைய முடியாததால் மீண்டும் யுத்தமே வழி என்ற ரீதியிலேயே விடுதலைப்புலிகளும் தமது  மெல்ல மெல்ல யுத்தத்தை நோக்கிய  நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தனர்.    

மறு புறத்தில் இந்திய ரோ பிரிவினரும் தமது பங்கிற்கு இந்த எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினர். விடுதலைப்புலிகள் கடும்போக்கில் இருப்பர் ஆகவே பேச்சுவார்ததை குழம்பும் என்று ஆரம்பத்தில் கணித்திருந்த இந்திய ரோ புலிகள் ஜதார்த்தபூர்வமாக  சமஸ்டித்தீர்வை பரிசீலிக்க இணங்கியதும் பதட்டப்பட்டு  அதை குழப்ப தம்மால் ஆனது எல்லாவற்றையும் செய்தார்கள். 

புலம் பெயர் நாடுகளில் அரசியல் செய்தோரும்  யுத்த விரும்பிகளாகவே இருந்தனர். தமது அரசியல்ப் பலத்தை ஒன்று திரட்டி தமிழ் மக்களுக்கு ஒரு  அரசியல் அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல்/ ராஜதந்திர நகர்வுகளை நோக்கிய அரசியலை செய்வதற்கு பதிலாக யுத்தம் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்பபுடனேயே தமது செயற்பாடுகளை நடத்தினர்.   

எழுக தமிழ் பகை விரட்ட, எழுக தமிழ் படை திரட்ட, இறுதி போரின் முடிவெடுக்க எழுக தமிழ் எழுகவே” என்ற  பாடல் அன்று மிகப்பிரபலம்.  ஐரோப்பா எங்கும் நடந்த பல பொது நிகழ்வுகளில் இப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு உசுப்பேற்றப்பட்டது. மிக மோசமான ராஜதந்திரமற்ற பேதைத்தனமான நடவடிக்கையாக  இந்த பாடல் ஜநா முன்றலில் நடந்த பேரணியில் கூட ஒலிக்க விடப்பட்டு மக்கள் அதற்கு நடனமாட தூண்டப்பட்டது  மிகக் கவலையான விடயம். அதே ஜநா முன்றலில் பின்னர் யுத்த நிறுத்தம் கோரி திரண்டிருந்தோம்.  

யுத்தம் எமது மக்களின் மாபெரும்  சக்தியை வீண்டித்ததால் இன்று  ஶ்ரீலஙகா இனவாத அரசுகளின் இன ஒடுக்கு முறைக்கு  எதிராக சிறிய போராட்டங்களில் கூட ஒன்று திரண்டு போராட  வலுவற்ற நிலையில் எமது மக்கள் உள்ளனர்.  இன்றைய நிலையில்  கல்வி போருளாதாரம் ஆகிய விடயங்களில் பலப்படுத்துவதன் மூலம் எமது இருப்பை தக்க வைத்து  இனவாதத்தைக்கு எதிராக போராட சற்று காலமெடுக்கும்.  அது கடந்த காலங்களைப் போலன்றி அறிவு பூர்வமாக இருக்க வேண்டும். அது எதிர்கால தலைமுறையின் தலையில் எம்மால் சுமத்தப்பட்ட சுமை என்பதே உண்மை.  

Edited by island
எழுத்துப்பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, island said:

இதில் சில விடயங்களில் உடன் படுகிறேன். நன்றி 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

1 - தலைவர் இருந்தால் அவரது பிள்ளைகளை இப்படி எழுத கை வந்திருக்குமா உங்களுக்கு?

முன்பென்றால் இவ்வாறு எவராவது சொன்னால் உரிய இடத்தில் சொல்லி விட்டு நாங்கள் எங்களுக்கு தந்த கடமையை செய்ய போய் விடுவோம். அதற்கான பதில் விரைவில் எமது காதுக்கு எட்டும் 

இப்பவும் எனக்கு தலைவர் மேல் சின்ன வருத்தம் இருக்கு. எங்களையும் யோசித்து இருக்கலாமே என்று 😭  

2 - 2009 க்கு பின்னர் என்னை தேடி வந்த  எந்த அரசியல் விடயங்களிலும் அல்லது பொறுப்புகளிலும் சேர்வதை முற்றிலுமாக மறுத்து விட்டேன். காரணம் இது தான். என்னால் அந்த குணத்தை அந்த முகத்தை காட்டாமல் இருக்க முடியாது. ஒரு அளவுக்கு மேல் அது தானாக வந்து விடும். இங்கே அந்த முகம் தான் அனைவருக்கும் தெரியும். (என் சொந்த வாழ்க்கை உட்பட)

எனவே அந்த முகத்தை அல்லது அந்த முத்திரையை முன் நிறுத்தி எந்த அரசியல் வேலையையும் செய்யக்கூடாது என்று தான் விலகி இருக்கிறேன். இது பற்றி முன்பே இங்கே எழுதி இருக்கிறேன்.

இதற்குள் அது விடயமாக கொஞ்சம் விரிவாக எழுதி விட்டேன் அல்லது எழுத வைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். (ஒரு அளவுக்கு மேல் சிலரது கேள்வி என்னை உசார் படுத்திவிடும். தெரிந்து தான் சில விடயங்களை எழுதினேன். ஊரில் உள்ள அத்தனை அரச வருடிகளையும் பகைத்து வைத்து இருப்பதால் இது ஒன்றும் ஆபத்தல்ல)

நன்றி. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வாழ்க நலமுடன்.

1)  போராளிகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை  என்பதை திரும்பவும் உறுதியாகக் கூறுகிறேன். சரி பிழைகளை ஆராய்வது மட்டும்தான் எனது நோக்கம். 

2)  உங்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதாக உணர்கிறேன். அதற்காக எனது ஆழ்ந்த மன  வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.  🙏

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.