Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தமிழரசுக்கட்சியை பக்குவமாக வழிநடத்தக்கூடிய தலைவர் சிறிதரன் - இரா.சம்பந்தன் தெரிவித்தார்

வாற தீபாவளி மட்டும் பொறுத்திருந்து பாப்பம்.

  • Replies 69
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று

  • அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்? ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக

  • உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ  மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன். எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அபிலாசைகளை ஆங்காங்கே பேசுவதற்கு தமிழர்களின் பெயரில் ,பெயரளவிலாவது ஒரு கட்சி தேவைதான்......!  😴

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தமிழர்களின் அபிலாசைகளை ஆங்காங்கே பேசுவதற்கு தமிழர்களின் பெயரில் ,பெயரளவிலாவது ஒரு கட்சி தேவைதான்......!  😴

அப்பரோ இப்போது இருக்கிற மற்ற மற்ற மற்ற கட்சிகளெல்லாம் என்ன? தமிழ் ஈழ கட்சிகளே இருக்கின்றன, இவை போதாதா?😜

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2024 at 10:55, MEERA said:

முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது.

தயவு செய்து இது போன்ற சொற் பிரயோகங்களை தவிருங்கள். கடைசியில் அது தமிழ் கிறிஸ்தவர்களை தமிழ் சைவர்களில் இருந்து தூர விலகி நிற்கவே இது போன்ற பதிவுகள் உதவும்.

தமிழ் கிறிஸ்தவர்கள் + தமிழ் சோனாகர்கள் என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதே எங்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ( அப்படி ஒரு நிலைமை ஏற்பட தமிழ் கிறிஸ்தவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டினம் என்பது எனது நிலைப்பாடு ) இல்லையேல் இங்கே தமிழ் சைவர்கள் சிறுபான்மை ஆகி விடுவோம் 

  • கருத்துக்கள உறவுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=377385954880206&id=1089976618

சிறீதரன் இப்படி கூறியது உண்மையா? 
 
  • கருத்துக்கள உறவுகள்

இனி சிறீதரன் இலங்கை பாராளுமன்றத்தில் நல்ல உணர்ச்சிகரமான  உரைநிகழ்த்துகின்ற பேச்சுக்கள் கொண்ட  யுரியுப் வீடியோக்களை கண்டுகளிக்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்+

நிர்வாகத்தினர், இந்தத் திரியில் முன்வைக்கப்பட்ட கடைந்தெடுத்த இழிந்த மதவாதக் கருத்துக்களை நீக்கிமாறு கோரிக்கை வைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

தயவு செய்து இது போன்ற சொற் பிரயோகங்களை தவிருங்கள். கடைசியில் அது தமிழ் கிறிஸ்தவர்களை தமிழ் சைவர்களில் இருந்து தூர விலகி நிற்கவே இது போன்ற பதிவுகள் உதவும்.

தமிழ் கிறிஸ்தவர்கள் + தமிழ் சோனாகர்கள் என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்பதே எங்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும். ( அப்படி ஒரு நிலைமை ஏற்பட தமிழ் கிறிஸ்தவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டினம் என்பது எனது நிலைப்பாடு ) இல்லையேல் இங்கே தமிழ் சைவர்கள் சிறுபான்மை ஆகி விடுவோம் 

உங்கள் கண்களுக்கு இவை தென்படவில்லையா?

“சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. “

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

https://m.facebook.com/story.php?story_fbid=377385954880206&id=1089976618

சிறீதரன் இப்படி கூறியது உண்மையா? 
 
முகநூல் கருத்துக்களை யாழ் ஆதராமாக எடுத்துகொள்வது இல்லை .

33 minutes ago, நன்னிச் சோழன் said:

நிர்வாகத்தினர், இந்தத் திரியில் முன்வைக்கப்பட்ட கடைந்தெடுத்த இழிந்த மதவாதக் கருத்துக்களை நீக்கிமாறு கோரிக்கை வைக்கிறேன்.

எனது கோரிக்கையும் அதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

உங்கள் கண்களுக்கு இவை தென்படவில்லையா?

“சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. “

அவர் எதட்காக இதை எழுதினார் என்று கூறினால் நன்றாக இருக்கும். நீங்கள் இந்து தமிழரை முன்னிறுத்தியதால்தான் அப்படி எழுதியதாக அறிய கிடைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அவர் எதட்காக இதை எழுதினார் என்று கூறினால் நன்றாக இருக்கும். நீங்கள் இந்து தமிழரை முன்னிறுத்தியதால்தான் அப்படி எழுதியதாக அறிய கிடைக்கிறது. 

சிறீதரன் வெற்றிபெற்றதையிட்டு சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தங்களின் கவனத்திற்கு வரவில்லையா? 

தேடி இணைத்துவிடுங்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

அவர் எதட்காக இதை எழுதினார் என்று கூறினால் நன்றாக இருக்கும். நீங்கள் இந்து தமிழரை முன்னிறுத்தியதால்தான் அப்படி எழுதியதாக அறிய கிடைக்கிறது. 

நான் ஒருபோதும் சிறீதரனை ஆதரித்தோ அல்லது சுமந்திரனை எதிர்த்தோ இந்த திரியில் எழுதவில்லை. 

மேலும் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள்.

4 hours ago, Kapithan said:

சிறீதரன் வெற்றிபெற்றதையிட்டு சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தங்களின் கவனத்திற்கு வரவில்லையா? 

தேடி இணைத்துவிடுங்கள் . 

அது எனக்கு தேவையற்றது….

பிகு : ஒரே பெயரில் வாருங்கள்…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நான் ஒருபோதும் சிறீதரனை ஆதரித்தோ அல்லது சுமந்திரனை எதிர்த்தோ இந்த திரியில் எழுதவில்லை. 

மேலும் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள்.

அது எனக்கு தேவையற்றது….

பிகு : ஒரே பெயரில் வாருங்கள்…

ஆள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரண்டு பேர் ஒரே பெயரில் எப்படி எழுத முடியும்? இதெல்லாம் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

அது எனக்கு தேவையற்றது….

பிகு : ஒரே பெயரில் வாருங்கள்…

வேலியில் போகும் ஓணாணை பிடித்து ஏன் உங்கள் வேட்டிக்குள் விடுகிறீர்கள் ?

😁

1 hour ago, Cruso said:

ஆள் மாறாட்டம் செய்யக்கூடாது. இரண்டு பேர் ஒரே பெயரில் எப்படி எழுத முடியும்? இதெல்லாம் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

அவரை பொருட்படுத்தாதீர்கள்.

"வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது " என்பது போல திரும்பவும் சுற்றிக்இதே விடயத்துடன் மீண்டும் வருவார். 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2024 at 00:12, கிருபன் said:

வாட்ஸபில் இருந்து

1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்:00

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:42

தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்

இது உண்மையானால் 10% க்கும் அதிகமானோருக்கு வாக்களிக்கத் தெரியாது?

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2024 at 16:05, MEERA said:

உங்கள் கண்களுக்கு இவை தென்படவில்லையா?

“சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. “

வணக்கம்

@Cruso வின் சொற் பிரயோகங்கள் தவறு தான், உணர்ச்சி வசப்படும் பொழுது  வார்த்தைகளை அவதானமாகக் கையாள வேண்டும்.

ஆனால் நான் குறிப்பாக உங்களுக்கு @MEERA பதில் அளித்ததன் நோக்கம், பெரும்பான்மை சைவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் அச்ச உணர்வை விளங்கி அவர்களை விட கொஞ்சம் பக்குவமாக இருந்தல் வேண்டும் என்பதால்த் தான். ( ஜனநாயக சமூக அமைப்பில் பெரும்பான்மையோரிடம் அது வேண்டப்படும் ).இதன் பொருள் சிறு பான்மை கிறிஸ்தவர்கள் நினைத்தபடி வாள் சுழற்றலாம் என்பதல்ல.

2010-2011 வாக்கில் நான் ஒரு முறை தற்போதைய இந்திய மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை இன்னொருவர் சகிதம் சந்திக்கக் கிடைத்தது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி. கொமான்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல் என்று காங்கிரஸ் ஆட்சிக்கு போதாத காலம். நிர்மலா இரண்டோரு வருடங்களுக்கு முன் தான் பிஜேபி இல் இணைந்து இருந்தார்.அப்பொழுது அவர் BJP இன் உத்தியோக பூர்வ ஊடகப் பேச்சாளர்.

(சந்திப்பின் நோக்கம் அது எவ்வாறு அமைந்தது போன்ற விபரங்களுக்குள் போக விரும்பவில்லை)

 அவர் அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு விஷ(ய)த்தை  இங்க சொல்வது சாலப் பொருத்தம்.

ஸ்ரீலங்கன் ஹிந்துத் தமிழர்கள் தமது தலைவர்களாக ஹிந்துத் தலைவர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும், western Agenda வை ஸ்ரீலங்காவில் நடைமுறைப் படுத்த விளையும் கிறிஸ்தவ தலைவர்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 சில காலத்துக்குப் பின்னர் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்  ஒரு செவ்வியில் ஏன் யுத்தம் முடிந்து இவ்வளவு காலம் போன பின்பும் இன்னமும் இந்திய அரசு 13ம் அரசியல் அமைப்புச் சட்டத்தை அமுல் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை தமிழர்களின் முடிவெடுக்கும் இடத்தில் கிறிஸ்தவர் ஒருவர் இருக்கும் வரைக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்றும், கிறிஸ்தவ தமிழர்களுடன் பேசுவதில்லை என்பதே மத்திய அரசின் நிலை என்றும் பட்டவர்த்தனமாக தெரிவித்தார். அர்ஜுன் சம்பத் ஒரு ஜோக்கர் என்ற போதிலும் அவரின் தகவலை நாம் கடந்து சென்று விட முடியாது.

இப்பொழுது சீனிதம்பி ஜோகேஸ்வரன், சச்சிதானந்தம், போன்றவர்கள் முலம் இந்தியா நடப்பிக்கும் அரசியலைக் கவனியுங்கள், ரணில் போன்ற  மிதவாத சிங்களர்வர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று துடிக்கும் இந்தியாவைக் கவனியுங்கள்.

மைத்திரி ரணில் அரசுடன் தமிழ் அரசுக் கட்சி நடத்திய பேச்சு வார்த்தை ஓரளவு முன்னேற்றம் அடைந்த பொழுது யார் ஈஸ்டர் குண்டு வெடிப்பை நாடாத்தி குழப்பதை ஏற்படுத்தி இருக்க முடியும் என ஊகியுங்கள்

இரண்டு வருடம் முன்பாக எதற்க்காக இங்கிலாந்து திடீர் என்று இலங்கையில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கலாம் என்று அறிவித்தது என்று யோசியுங்கள் 

விக்னேஸ்வரன் எதற்காக அர்ஜுன மூர்த்தியை சந்தித்தார் என்று கேளுங்கள் 

இப்பொழுது சுமத்திரனை ஓரம் கட்ட காட்டப்படும் முனைப்பினைப் பாருங்கள்

எனக்கு சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பது பிரச்னை இல்லை, ஆனால் அவர் மிதவாதி, அதி தீவிரத் தன்மை அற்றவர், இப்போது இருக்கும் தமிழர் நிலையை ஒரு படியேனும் மேலே தூக்கி விட வேண்டும் என்று யோசிப்பதால் அவர் இப்போதைக்கு அடைய முடியாத் தமிழ் கனவைக் காண்பதில்லை.முக்கியமாக இந்தியாவிடம் இருந்து தூர விலகி இலங்கைத் தமிழர் இருக்க வேண்டும் என்று விரும்பவர் ( அப்படி நினைக்க அவரின் கிறிஸ்தவ மன நிலையும் ஒரு காரணம் எனினும் அந்த நிலைப்பாடு எல்லாத் தமிழர்க்கும் பலன் அளிக்கும் )

அதனால் நாம் இலங்கை தமிழர் அரசியலுக்குள் இந்தியா புகுந்து எப்படி அரசியல் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்க இந்தியாவால் ஆட்டுவிக்கப் படாதவராக தமிழ் அரசுக் கட்சி தலைவர் இருத்தல் வேண்டும். அவர் எந்த மதம் என்பது பிரச்னை ஆக இருக்கக்கூடாது. இல்லையேல் எமது நிலைமை ஆப்பிழுத்த குரங்கின் நிலை தான்.

ஆனால் நிலைமை நாம் எதிர் பார்ப்பது போல் அமையாமல் திரும்பத் திரும்ப தமிழர் அரசியல் இந்தியாவின் கால்களையே சுற்றிக்கொண்டு இருக்கும் என்றால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவ இந்து சண்டை வந்து நாம் மேலும் சீழ் பிடித்த இன்னும் septic ஆகி விட்ட இனமாக போய் விடுவோம். இங்கே யாழில் சிலர் கதைக்கும் கதைகள் நாம் பயப்படும் படி காரியங்கள் நடைபெறுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2024 at 10:57, பிரபா said:

இது உண்மையானால் 10% க்கும் அதிகமானோருக்கு வாக்களிக்கத் தெரியாது?

சுமந்திரனே வழிச்சு துடைச்சு போட்டு மிக்சர் சாப்பிடுகிறார் நீங்கள் அங்கு உள்ளவர்களுக்கு வாக்களிக்கத் தெரியாது என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2024 at 15:38, பகிடி said:

 அவர் அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு விஷ(ய)த்தை  இங்க சொல்வது சாலப் பொருத்தம்.

ஸ்ரீலங்கன் ஹிந்துத் தமிழர்கள் தமது தலைவர்களாக ஹிந்துத் தலைவர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும், western Agenda வை ஸ்ரீலங்காவில் நடைமுறைப் படுத்த விளையும் கிறிஸ்தவ தலைவர்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சில காலத்துக்குப் பின்னர் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்  ஒரு செவ்வியில் ஏன் யுத்தம் முடிந்து இவ்வளவு காலம் போன பின்பும் இன்னமும் இந்திய அரசு 13ம் அரசியல் அமைப்புச் சட்டத்தை அமுல் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை தமிழர்களின் முடிவெடுக்கும் இடத்தில் கிறிஸ்தவர் ஒருவர் இருக்கும் வரைக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்றும், கிறிஸ்தவ தமிழர்களுடன் பேசுவதில்லை என்பதே மத்திய அரசின் நிலை என்றும் பட்டவர்த்தனமாக தெரிவித்தார்.

கடந்த முறை நடைபெற்ற (?) நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பதிவுகளில் "இந்திய உளவு அமைப்பான RAW கிறீஸ்தவ அரசியல் தலைவர்களை தமிழர் அரசியலில் இருந்து வெளியேற்ற/ஓரங்கட்ட பகீரதப் பிரயத்தனம் செய்கிறது" என்று கூறியபோது கப்பித்தானை மறுத்து, மிகக் கடுமையாக  விமர்சனம் செய்த தலைகள் எல்லாம் வெளியே வரும்படி வினயமுடன் (அச்சுறுத்தி 😁) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கடந்த முறை நடைபெற்ற (?) நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பதிவுகளில் "இந்திய உளவு அமைப்பான RAW கிறீஸ்தவ அரசியல் தலைவர்களை தமிழர் அரசியலில் இருந்து வெளியேற்ற/ஓரங்கட்ட பகீரதப் பிரயத்தனம் செய்கிறது" என்று கூறியபோது கப்பித்தானை மறுத்து, மிகக் கடுமையாக  விமர்சனம் செய்த தலைகள் எல்லாம் வெளியே வரும்படி வினயமுடன் (அச்சுறுத்தி 😁) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

😉

Kapithan, இவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும். இந்த இந பிரச்சினை தொடங்கிய நாட்களிலிருந்து  தமிழ் கிறிஸ்தவர்கள் ஒரு நாளும் கிறிஸ்தவ மக்களுக்காக போராடியது கிடையாது. அவர்கள் தமிழரகளுக்காகவே போராடினார்கள்.

எமது குருமார் எத்தனையோ பேர் மக்களுடன் சேர்ந்து போராடி தங்கள் இன்னுயிரையே நீர்த்தார்கள். வேறு எவரும் இப்படி செய்ததில்லை. வேறு எந்த மத குருமாரும் வீதிக்கு மக்களுடன் இறங்கியதில்லை. எமது குருவான பஸ்தி அவர்களும் கொலை செய்யப்படடார்.

இவர்கள் எல்லாவற்றையும் மறந்து இந்தியாவின் ஆட்ட்துக்கு ஆடுவார்களாக இருந்தால் அந்த கனவு பலிக்காது. அது இலவு காத்த கிளியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு புரிந்தால் சரி. 😗

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.