Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 JAN, 2024 | 11:29 AM
image

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை (27) திருகோணமலையில் இடம்பெறுகின்றன.

அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை  தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர்.

அதன் பின்னர், பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை இன்று பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைவதை தொடர்ந்து, நாளை (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. 

20230225223836_IMG_2439.JPG

20230225223714_IMG_2438.JPG

https://www.virakesari.lk/article/174902

  • கருத்துக்கள உறவுகள்

ilangai-thamilarasu-katchi.jpg?resize=51

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்கூட்டம் இன்று : செயலாளர் பதவிக்கு கடும் போட்டி.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை உப்புவெளியிலுள்ள பீச் ஹொட்டலில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடைபெறும். இதன்போது,புதிய நிர்வாக தெரிவு குறித்து கலந்துரையாடப்படும்.

அதனடிப்படையில், செயலாளர், நிர்வாக செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி – இணக்கப்பாடு ஏற்பட்டால், மத்தியகுழுவிலேயே புதிய நியமனங்கள் இறுதியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2024/1367292

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-mikrofon-bild-0014.gif animiertes-mikrofon-bild-0040.gif animiertes-mikrofon-bild-0029.gif

அப்படியே... ஊடக பேச்சாளர் பதவிக்கும் ஒருத்தரை தெரிவு செய்து விடுங்கள். 🙂

கண்டவன், நிண்டவன் எல்லாம்.... "மைக்கை" கண்டவுடன் உளறிக் கொட்டிக் 
கொண்டிருக்கின்ற தொல்லை இனியும் வேண்டாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரா திருகோணமலையை சேர்ந்த குகதாசன் தெரிவு?

Vhg ஜனவரி 27, 2024
Photo_1706342544256.jpg

இலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று (27-01-2024)காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Photo_1706342543095.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

இந்த பதவிகளுக்கு. ஏன் அடிபடுகிறீர்கள்.  மக்கள் நேரடியாக தெரிவு செய்ய சந்தர்ப்பங்களை வழங்கலாம் அதாவது கிராமிய மட்டத்திலான வாக்குப்பதியும். பொறிமுறையின்  மூலம்  தெரிவு செய்யலாம் இதை ஒழுங்காக செய்ய முடியவில்லை என்றால் சுயாட்சி எப்படி பெறப் போகிறீர்கள்??  சிங்களவர்களுடன் எப்படி ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும்?? மேலும் மற்றைய தமிழ் கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது?? 

  • கருத்துக்கள உறவுகள்

ilangai-thamilarasu-katchi-1.jpg?resize=

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக தெரிவு கூட்டத்தில் குழப்பம்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரை தெரிவுசெய்தது.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பின்னர் கூடிய பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது. அப்போது, கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பான மத்திய குழுவின் தீர்மானத்தை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து, ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று (27) திருகோணமலை-முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் தெரிவுகளுக்காக பொதுச்சபையை கூட்டுவதற்கு முன்னதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆலோசித்திருந்தது.

மத்தியகுழுவின் ஆலோசனைக்கமைய, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் குகதாசன், சிரேஷ்ட உபதலைவராக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இணை பொருளாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கனகசபாபதி, துணைத் தலைவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இணை செயலாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் என 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் பொதுச்சபையைக் கூட்டி மத்திய குழு எடுத்த தீர்மானங்கள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் பொதுச்சபையில் அங்கம் வகிக்கின்ற சில உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவின் இந்த முடிவை ஏற்க மறுத்ததுடன், பொதுச்சபையில் வாக்கெடுப்பை நடாத்தி பதவிகளுக்கான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாகத் தெரிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1367323

  • கருத்துக்கள உறவுகள்

சண்முகம் குகதாசன் நல்ல தெரிவு. கடந்த தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளை பெற்றவர் என நினைக்கிறேன். கனடா, ஐரோப்பிய தமிழ் மாணவர்களுக்கு  தமிழ் கற்பித்தலில் முதன்மையாக நின்று அளப்பெரிய சேவை செய்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பத்தில் முடிந்த செயலாளர் தெரிவு நடந்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இந்த பதவிகளுக்கு. ஏன் அடிபடுகிறீர்கள்.  மக்கள் நேரடியாக தெரிவு செய்ய சந்தர்ப்பங்களை வழங்கலாம் அதாவது கிராமிய மட்டத்திலான வாக்குப்பதியும். பொறிமுறையின்  மூலம்  தெரிவு செய்யலாம் இதை ஒழுங்காக செய்ய முடியவில்லை என்றால் சுயாட்சி எப்படி பெறப் போகிறீர்கள்??  சிங்களவர்களுடன் எப்படி ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும்?? மேலும் மற்றைய தமிழ் கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது?? 

கந்தையர் எப்பவுமே சாத்தியப்படாததை  மட்டும்தான் கதைப்பார் 😁

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல் கட்சிகள்  தோற்றன,....🤣

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுச்சபைக் கூட்டத்தில் அமளிதுமளி : தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு ஒத்திவைப்பு

27 JAN, 2024 | 07:12 PM
image
 
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் இடையே இணக்கப்பாட்டுடன் தீர்மானங்களை எட்ட முடியாமையின் காரணமாக அவ்விதமான முடிவுக்கு தான் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய நிருவாகத்தினை அங்கீகரிப்பது தொடர்பில் பொதுச்சபைக்குள் ஏற்பட்ட குழப்பித்தினை அடுத்து நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும்ரூபவ் எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் முதல்நாள் இன்றைய தினம் திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது முற்பகல் மத்தியகுழு கூட்டமும், பிற்பகலில் பொதுச்சபைக் கூட்டமும் நடைபெற்றது.

மத்திய செயற்குழுக் கூட்டம் 

அதனடிப்படையில் மத்திய செயற்குழு கூட்டம் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமானது. இதன்போது முதலில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதன்போது, ஞானமுத்து சிறிநேசன், குலநாயகம் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் அப்பதவியை வகிப்பதற்கு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினார்கள்.

எனினும் அதன் பின்னர் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும் துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்பின்னர் மதிய போசனத்துக்கான இடைவேளை விடப்பட்டதோடு தொடர்ந்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வு ஆரம்பமானது.

பொதுச்சபைக் கூட்டம்

பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியதும் மீண்டும் பொதுச்செயலாளர் நியமனம் சம்பந்தமாக சர்ச்சைகள் ஏற்பட்டன. உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் அதிகரித்து கைகலப்பில் ஈடுபடுமளவிற்கு நிலைமைகள் மோசமாகின. இதனையடுத்து பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான முன்மொழிகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்களில் சிலர் நிருவாகத்தெரிவினை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, பொதுச்செயலாளராக குகதாசனை நியமிப்பதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதனால், பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பொதுச்செயலாளர் தெரிவிக்கான பகிரங்கமான வாக்கெடுப்பினை நடத்துமாறு கோரினார்கள்.

எனினும், குறித்த நிருவாகத்தெரிவுக்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் தனியொரு பதவிநிலைக்காக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தவிர்ந்த புதிய நிருவகத்தினருக்கான அனுமதியை கோரும் பிரேரணையை கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்தார். அதனையடுத்து, பீற்றர் இளஞ்செழியர் அதனை வழிமொழிந்தார்.

தொடர்ந்து, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் தங்களது கைகளை உயர்த்தி ஆதரவினையும் எதிர்ப்பினையும் வெளியிட்ட நிலையில் அதனடிப்படையில் எண்ணிக்கை கணிக்கப்பட்டது. அந்த வகையில் பிரேரணை எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கமுடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஏனெனில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே நிருவாகத்தெரிவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பங்கேற்பின்றியே பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் வாக்கெடுப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. எனினும் உறுப்பினர்களிடையே சார்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்தன.

இந்த நிலைமையை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டிருந்த மாவை.சோ.சேனாதிராஜா உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்தார். அனைவரும் ஒற்றுமையாக நாளை நடைபெறவுள்ள பகிரங்க தேசிய மாநாட்டை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியபோதும் நிலைமைகள் சுமூகமடைந்திருக்கவில்லை.

இதனையடுத்து மாவை.சோ.சேனாதிராஜா ஒலிவாங்கியைப் பெற்று 17ஆவது தேசிய மாநாட்டை தான் ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு கூட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174918

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

இந்த பதவிகளுக்கு. ஏன் அடிபடுகிறீர்கள்.  மக்கள் நேரடியாக தெரிவு செய்ய சந்தர்ப்பங்களை வழங்கலாம் அதாவது கிராமிய மட்டத்திலான வாக்குப்பதியும். பொறிமுறையின்  மூலம்  தெரிவு செய்யலாம் இதை ஒழுங்காக செய்ய முடியவில்லை என்றால் சுயாட்சி எப்படி பெறப் போகிறீர்கள்??  சிங்களவர்களுடன் எப்படி ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும்?? மேலும் மற்றைய தமிழ் கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது?? 

ஓர் அரசியல் கட்சியின் பதவிகளிக்கு மக்கள் வாக்களிப்பதா?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

ஓர் அரசியல் கட்சியின் பதவிகளிக்கு மக்கள் வாக்களிப்பதா?

ஆமாம்  ஒட்டு மொத்த மக்களும் இல்லை  ஒவ்வொரு கிராமத்தில் இருந்து  ஐந்து அல்லது பத்து பேர் வாக்களிக்கும் பொறிமுறை   உதாரணமாக உங்கள் கிராமத்தில் தமிழரசு கட்சியின் கிளை இருக்க வேணடும். அதில் உள்ள தலைவர் பொருளாளர்   செயலாளர்  உபதலைவர்.......இப்படியானவர்கள். வாக்கு அளிக்க முடியும் இலங்கையில் தலைவர்கள் தான்  கட்சியின் தலைவர் தெரிவு செய்கிறார்கள் அல்லது கூடிபேசி  அவர்களுக்கு விருப்பமானவரகளை தெரிவு செய்கிறார்கள்  இந்த முறையில் ஒரு அடிமட்ட தொண்டன். திறமைசாலிகள்……………… தலைவர் ஆக முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

பொதுச்சபைக் கூட்டத்தில் அமளிதுமளி : தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு ஒத்திவைப்பு

27 JAN, 2024 | 07:12 PM
image
 
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் இடையே இணக்கப்பாட்டுடன் தீர்மானங்களை எட்ட முடியாமையின் காரணமாக அவ்விதமான முடிவுக்கு தான் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய நிருவாகத்தினை அங்கீகரிப்பது தொடர்பில் பொதுச்சபைக்குள் ஏற்பட்ட குழப்பித்தினை அடுத்து நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும்ரூபவ் எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் முதல்நாள் இன்றைய தினம் திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது முற்பகல் மத்தியகுழு கூட்டமும், பிற்பகலில் பொதுச்சபைக் கூட்டமும் நடைபெற்றது.

மத்திய செயற்குழுக் கூட்டம் 

அதனடிப்படையில் மத்திய செயற்குழு கூட்டம் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமானது. இதன்போது முதலில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதன்போது, ஞானமுத்து சிறிநேசன், குலநாயகம் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் அப்பதவியை வகிப்பதற்கு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினார்கள்.

எனினும் அதன் பின்னர் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும் துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்பின்னர் மதிய போசனத்துக்கான இடைவேளை விடப்பட்டதோடு தொடர்ந்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வு ஆரம்பமானது.

பொதுச்சபைக் கூட்டம்

பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியதும் மீண்டும் பொதுச்செயலாளர் நியமனம் சம்பந்தமாக சர்ச்சைகள் ஏற்பட்டன. உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் அதிகரித்து கைகலப்பில் ஈடுபடுமளவிற்கு நிலைமைகள் மோசமாகின. இதனையடுத்து பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான முன்மொழிகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்களில் சிலர் நிருவாகத்தெரிவினை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, பொதுச்செயலாளராக குகதாசனை நியமிப்பதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதனால், பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பொதுச்செயலாளர் தெரிவிக்கான பகிரங்கமான வாக்கெடுப்பினை நடத்துமாறு கோரினார்கள்.

எனினும், குறித்த நிருவாகத்தெரிவுக்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் தனியொரு பதவிநிலைக்காக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தவிர்ந்த புதிய நிருவகத்தினருக்கான அனுமதியை கோரும் பிரேரணையை கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்தார். அதனையடுத்து, பீற்றர் இளஞ்செழியர் அதனை வழிமொழிந்தார்.

தொடர்ந்து, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் தங்களது கைகளை உயர்த்தி ஆதரவினையும் எதிர்ப்பினையும் வெளியிட்ட நிலையில் அதனடிப்படையில் எண்ணிக்கை கணிக்கப்பட்டது. அந்த வகையில் பிரேரணை எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கமுடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஏனெனில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே நிருவாகத்தெரிவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பங்கேற்பின்றியே பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் வாக்கெடுப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. எனினும் உறுப்பினர்களிடையே சார்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்தன.

இந்த நிலைமையை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டிருந்த மாவை.சோ.சேனாதிராஜா உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்தார். அனைவரும் ஒற்றுமையாக நாளை நடைபெறவுள்ள பகிரங்க தேசிய மாநாட்டை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியபோதும் நிலைமைகள் சுமூகமடைந்திருக்கவில்லை.

இதனையடுத்து மாவை.சோ.சேனாதிராஜா ஒலிவாங்கியைப் பெற்று 17ஆவது தேசிய மாநாட்டை தான் ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு கூட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174918

மீண்டும் சுமந்திரன், ஸ்ரீதரன் கோஷ்ட்டி மோதல்போலத்தெரிகின்றது. இப்படியே போனால் நல்ல வருவம். எப்படியோ இந்தியாதான் தீர்மானிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

https://pagetamil.com/2024/01/27/செயலாளர்-பதவிக்கு-களமிறங/

https://pagetamil.com/2024/01/28/தமிழ்-அரசு-கட்சி-பொதுக்க/?fbclid=IwAR0DHmRcW_BizevBUpOuD365qymZHsiRDoFWVFv4hV3QGC_eGIySfjeM_7I

சுமத்தரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து தூக்கா விட்டால் கட்சிக்கு விமோசனம் இல்லை. சிறிதரன் கட்சியைக் கொண்டு நடத்துவது சிரமமாக இருக்கும் சமத்திரன் குழப்பிக் கொண்டே இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பம் ஊர் தாயகம் கட்சி எதுவாயினும் முன்னுதாரணமான தலைமை அமையவில்லை என்றால் இப்படித்தான் உலகமே சிரிக்கும். 

நாம் என்று சிந்திக்காதவரை எந்த விமோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் குழப்பம்- நடந்தது என்ன?

Vhg ஜனவரி 27, 2024
Photo_1706372181146.jpg
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நடந்த தேசிய மாநாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இன்று (27-01-2024)காலையில் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, கூட்டத்தின் ஆரம்பத்தில், மட்டக்களப்பு முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் எழுந்து, ஞா.சிறிநேசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தார்.

இதையடுத்து, குகதாசன் எழுந்து- தான் 1965ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் இருப்பதாகவும், இம்முறை செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனே எழுந்த எம்.ஏ.சுமந்திரன், நேற்றிரவு சிறிதரன் தன்னுடன் தொலைபேசியில் தன்னுடன் பேசியதாகவும், தான் அந்த பதவியை ஏற்கவில்லையென்றும், செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

தலைமை பதவிக்கு போட்டியிட்ட சிறிதரன் தலைவராகி விட்டார், தோல்வியடைந்த நான் செயலாளராக வருவதே பொருத்தம், அப்படியானாலே இரண்டு அணிகளும் சமபலமாக இருக்கும் என்றார்.

இதையடுத்து, வடக்கை சேர்ந்தவரே தலைவர், அந்த பகுதியை சேர்ந்தவரே செயலாளராக நியமிக்கப்பட முடியாது என எதிர்ப்பு எழுந்தது.

இதன்போது, கொழும்பு கிளையை சேர்ந்த இரட்ணவேல் என்பவர், சாணக்கியனை செயலாளராக நியமிக்கலாமென பரிந்துரைத்தார்.

உடனே எழுந்த சுமந்திரன், அம்பாறை மாவட்ட தலைவர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியவர்களில் ஒருவர் செயலாளரானால், தான் போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார்.

Photo_1706372180408.jpg

இதை தொடர்ந்து, சிறிதரன்- சுமந்திரனுக்கு இடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன்போது, குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கலாமென இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

அத்துடன், ஏனைய பதவிகள் குறித்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

பொதுச் செயலாளர்- குகதாசன்

சிரேஷ்ட உப தலைவர்- சீ.வீ.கே.சிவஞானம்

இணை பொருளாளர்கள்- ஞா.சிறிநேசன், கனகசபாபதி

துணைத் தலைவர்கள்- கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், பா.அரியநேந்திரன், பா.சத்தியலிங்கம்

இணை செயலாளர்கள்- சாந்தி, சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், சி.சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த முடிவு மத்தியகுழு கூட்டத்தில் வெளியிட்ட போது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவை பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் மாத்திரமே குகதாசன் செயலாளராக அங்கீகரிக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது.

சிறிதரன் தனது அணியை சேர்ந்த சிறிநேசனிடம் வந்து, ஒரு வருடத்துக்கு அவர்களுக்கு விட்டுக்கொடுக்கலாம் என சமசரம் செய்தார்.

இதை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதன்போது, இந்த பதவிகள் விபரம்முன்மொழியப்பட்டபோது, கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீங்களே இப்படி தீர்மானிப்பதெனில் எதற்கு பொதுச்சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என எகிறினர்.

இதன்போது, சுமந்திரன் கூட்டத்தை சமரசம் செய்ய முயன்றார். இப்படியான சந்தர்ப்பங்களில் போட்டிகளை தவிர்த்து, ஒருவருக்கு விட்டுக்கொடுத்து நடப்பது சிறந்தது, அதை பொதுக்குழு ஏற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அப்போது கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவர்- அப்படியானால் தலைவர் தெரிவில் நீங்கள் ஏன் போட்டியிட்டீர்கள்? சிறிதரனுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? என கேட்டார்.

அத்துடன், சிரேஸ்ட உப தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஒரு சாரர் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து, நீண்ட வாய்த்தர்க்கம், கருத்து மோதல் ஏற்பட்டது.

நீண்ட இழுபறியின் பின்னர், செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பை நாளை (28-01-2024) நடத்தலாம் என தலைவர் மாவை அறிவித்தார். இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து பலர் எழுந்து செல்லத் தொடங்கினர்.

இந்த சமயத்தில் எம்.ஏ.சுமந்திரன் திடீரென எழுந்து வந்து, தானே பதில் செயலாளர் என குறிப்பிட்டு, குகதாசனை செயலாளராக நியமிக்கலாமென்ற மத்தியகுழுவின் பரிந்துரையை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள், ஆதரிப்பவர்கள் கையை உயர்த்தலாம் என்றார்.

அந்த பரிந்துரைக்கு ஆதரவாக 112 பேர் கையை உயர்த்தினர்.

குகதாசனை செயலாளராக நியமிக்கும் பரிந்துரையை எத்தனை பேர் எதிர்க்கிறீர்கள் என சுமந்திரன் கேட்டார். 104 பேர் கையை உயர்த்தினர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழுவில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 341 பேர் என்றும், வாக்களிப்பு நாளை என்பதால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள் என்றும் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்தனர். குகதாசனை ஆதரித்து கையை உயர்த்தியவர்களில், அவர் அழைத்து வந்த பணியாளர்கள், வாகன சாரதிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் அல்லவென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

சுமந்திரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது என்றும் விமர்சித்தனர்.

இந்த பின்னணியில், நாளை நடக்கவிருந்த கட்சியின் தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாகவும், கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவையும் ஒத்திவைப்பதாக தலைவர்கள் மாவை அறிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார்.

விரைவில் மத்தியகுழு கூட்டத்தை நடத்தி, மாநாட்டு திகதியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தின் பின்னரும், வெளியில் சூடான நிலைமை காணப்பட்டது. சுமந்திரன் அணியில் இணைந்துள்ள- முல்லைத்தீவு முஸ்லிம் சுயேட்சைக்குழுவில் தேர்தலில் போட்டியிட்ட பீற்றர் இளம்செழியன் போன்ற- அரசியல் அனுபவமற்ற இளையவர்கள் அங்கு வாய்ச்சவடால் விட்டபடியிருந்தனர். செயலாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார், அதை நிராகரிக்கும் கட்சியின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமென சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் நின்றார்.

24-65b4bd1ba5598-md.webp.webp

அங்கு வந்த புதிய தலைவர் சி.சிறிதரன் இதை கேட்டு ஆத்திரமடைந்தார். “நீங்கள் யாரும் வழக்கு போடுவதெனில் போடலாம்… கட்சியை விட்டு போவதெனிலும் போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை“ என கோபமாக கூறினார்.

https://www.battinatham.com/2024/01/blog-post_140.html

தமிழரசுக் கட்சியின் உச்சக்கட்ட ஜனநாயகம்!!

Vhg ஜனவரி 28, 2024
 
தமிழரசுக் கட்சியில் பொதுச் செயலாளர் தெரிவின் போது பொதுக்குழுவிடம் கைகளைத் தூக்கி வாக்களிக்கும்படி சுமந்திரன் கோரிக்கை விட்டதும், உறுப்பினர்கள் தமது கரங்களை உயர்த்தி அளித்த வாக்குகளின் அடிப்படையில் குகதாசன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்ததே.
இந்த விடயம் பற்றி கட்சியின் தலைவரிடம் சில கேள்விகளை ஒரு ஊடகமாக எழுப்ப விரும்புகின்றோம்
Photo_1706442611440.jpg

பொதுச்சபை முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 இற்கும் அதிகமானவர்கள் வெளியேறிய பின்னர்தான் கைதூக்கி வாக்களிப்பதற்கான கோரிக்கையை சுமந்திரன் விடுத்திருந்தார் என்று கூறப்படுகின்றதே.. இது உண்மையா?

கைதூக்கி வாக்களிக்கும் முறையை சுமந்திரன் கோரியதில் கட்சியின் தலைவராக நீங்கள் உடன்பட்டீர்களா?

கைதூக்கி அளிக்கப்பட்ட வாக்குக்கள்தான் எண்ணப்பட்டன என்பது உண்மையானால், யார் அதனை எண்ணியது?

குகதாசன் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றோ அல்லது அவர் வரக்கூடாது என்றோ வாக்களித்த பொதுச்சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டனவா?

பொதுச்செயலாளர் தெரிவின் போது கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் அல்லாதவர்கள் வாக்களித்தார்கள் என்பது உண்மையா?

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் பிரமுகர் ஒருவர் தனது இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்தார் என்று கூறப்படுகின்றதே அது உண்மையா?

அவரது வாக்குகள் இரண்டாகக் கணக்கு வைக்கப்பட்டதா அல்லது ஒரு வாக்குத்தான் கணக்கில் எடுக்கப்பட்டதா?

அப்படி அவரது வாக்கை கணக்கில் எடுத்தவர் யார்?

மேலே உள்ள புகைப்படத்தில் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்த உங்கள் கட்சி உறுப்பினரின் செயல் சரியானதா?

பிழை என்றால் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படுமா?

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்ததாகக் கூறப்படுகின்றதே உண்மையா?

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு நியாயமாக நடந்தது என்று உறுதியாக நம்புகின்றீர்களா?

இல்லை என்றால் அடுத்து என்னசெய்யப்போகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தமிழரசுக் கட்சி சர்ச்சைக்கு காரணம் என்ன? இரகசியத்தை போட்டு உடைத்த சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புலவர் said:

https://pagetamil.com/2024/01/27/செயலாளர்-பதவிக்கு-களமிறங/

https://pagetamil.com/2024/01/28/தமிழ்-அரசு-கட்சி-பொதுக்க/?fbclid=IwAR0DHmRcW_BizevBUpOuD365qymZHsiRDoFWVFv4hV3QGC_eGIySfjeM_7I

சுமத்தரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து தூக்கா விட்டால் கட்சிக்கு விமோசனம் இல்லை. சிறிதரன் கட்சியைக் கொண்டு நடத்துவது சிரமமாக இருக்கும் சமத்திரன் குழப்பிக் கொண்டே இருப்பார்.

அது இலகுவாக இருக்காது. சிங்கள பத்திரிகைகள் ஸ்ரீதரனை பற்றி எங்களுக்கு தெரியாத விடயங்களும் எழுதுகின்றன. ஸ்ரீதரனின் மனைவியின் சகோதரன் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்றும் அவர் புலிகளின் கொள்கையையே பின் பற்றுவதாகவும் எழுதிகின்றன.

சுமந்திரனை அகற்றினால் பாதிப்பு இதை விட அதிகமாக இருப்பதுடன் ஸ்ரீதரனின் கருத்தை விட அவரின் கருதுக்குத்தான் அதிக பெறுமதி இருக்கும் என்பதை மறந்து விட கூடாது. எப்படி இருந்த போதும் கட்சியில் பிளவு என்பது வெளிப்படை. 

பாராளுமன்றம் செல்வதென்றால் அவருக்கு இந்த கட்சியில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி விவகாரம்: ”விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை”

வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுச் செயலாளர் தெரிவின் போது வாக்களிப்புக்கு அழைக்கப்படாதவர்கள், அங்கு உணவு பரிமாறியவர்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளார்கள். ஆகவே அந்த வாக்களிப்பு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.

எனவே மீண்டும் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
-(3)
 
http://www.samakalam.com/தமிழரசுக்-கட்சி-விவகாரம்/

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

இந்திய ஆதரவு சங்கிகளுக்கும் , சங்கிகளல்லாதோருக்குமான போராட்டம். அதாவது கட்சியில் பதவி போராட்டம். இவர்களும் சாதாரண படடம் பதவிக்காக போராடும் அரசியல்வாதிகள்தான். எப்படியோ , இலங்கை அரசு கிராம சபைகளுக்கு மேலாக எதுவும் தர போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2024 at 13:48, கிருபன் said:

மேலே உள்ள புகைப்படத்தில் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்த உங்கள் கட்சி உறுப்பினரின் செயல் சரியானதா?

பிழை என்றால் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படுமா?

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கைகளையும் தூக்கி வாக்களித்ததாகக் கூறப்படுகின்றதே உண்மையா?

spacer.png

spacer.png

இரண்டு கைகளையும் உயர்த்தி வாக்குப் போட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2024 at 20:00, Cruso said:

அது இலகுவாக இருக்காது. சிங்கள பத்திரிகைகள் ஸ்ரீதரனை பற்றி எங்களுக்கு தெரியாத விடயங்களும் எழுதுகின்றன. ஸ்ரீதரனின் மனைவியின் சகோதரன் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்றும் அவர் புலிகளின் கொள்கையையே பின் பற்றுவதாகவும் எழுதிகின்றன.

இனவாதம் இல்லாத சிங்கள பத்திரிகைகள் எவை?
 
On 28/1/2024 at 20:00, Cruso said:

சுமந்திரனை அகற்றினால் பாதிப்பு இதை விட அதிகமாக இருப்பதுடன் ஸ்ரீதரனின் கருத்தை விட அவரின் கருதுக்குத்தான் அதிக பெறுமதி இருக்கும் என்பதை மறந்து விட கூடாது. எப்படி இருந்த போதும் கட்சியில் பிளவு என்பது வெளிப்படை.

அதெப்படி. சுமந்திரன் சிங்களவரா? 

On 28/1/2024 at 20:00, Cruso said:

பாராளுமன்றம் செல்வதென்றால் அவருக்கு இந்த கட்சியில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

ஏன் தமிழ் மக்கள் சுமந்திரனை இழுத்து பிடிக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

இரண்டு கைகளையும் உயர்த்தி வாக்குப் போட்டவர்கள்.

இவர் இரண்டு கைகளையும் தூக்கிற மாதிரி தெரியலையே?

இரண்டு கைகளையும் கண்ணாடியில் வைத்து உள்ளே நடப்பதை விடுப்பு பார்ப்பவர் போலல்லவா இருக்கிறது.

5 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

இந்தப் படத்தில் எல்லோரும் கைய கால தூக்கி மும்மரமாக நிற்க 

என்னைப் போன்ற ஒருவர் மட்டும் சாப்பாட்டிலேயே கண்ணாயிருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.