Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

article_image1

Poonam pandey

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

article_image2

கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றதால், இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட கோவா சென்றிருந்த பூனம் பாண்டே, அங்கு தன் கணவர் தன்னை அடித்து துன்புறித்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருமணமான இரண்டே வாரத்தில் பூனம் பாண்டேவின் கணவர் சாம் மும்பை போலீசாரான் கைது செய்யப்பட்டார்.

 

article_image3

 

பின்னர் சில தினங்களிலேயே தன்னுடைய கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பூனம் பாண்டே அறிவித்ததை பார்த்த நெட்டிசன்கள் அவர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்துவருவதாக விமர்சித்தனர். இதுதவிர நிர்வாண படங்களிலும் நடித்து வந்த பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

article_image4

 

அவர் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் "இன்று காலை எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். பூனம் பாண்டேவின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

https://tamil.asianetnews.com/gallery/gallery/poonam-pandey-died-at-the-age-of-32-due-to-cervical-cancer-gan-s87u2c#image3

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

32 வயதியில் மரணம்! மிக இளம் வயதிலேயே இறந்து விட்டார்.

அஞ்சலி 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இறக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. 

https://m.dinamalar.com/detail-amp.php?id=3541931

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cn0njqnde39o

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உங்கள்  இதய அஞ்சலியை வாபஸ்  பெறுங்கள்...  அம்மணி தான் உயிருடன் இருப்பதாக அறிக்கை விட்டுள்ளார்...விழிப்புணர்வுக்காக தன் உயிர் போனதாக  சொன்னவராம்...விழிபுணர்வுக்கு விலை தன் உயிர்...உலகம் எங்கடாசாமி போகுது

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வாயில் வரும் வார்த்தைகளை எழுத முடியவில்லை.😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் இந்தியா வென்றால் உடை இல்லாமல் உலகுக்கு காட்சி தருவேன் என கூறியவர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”உயிருடன் தான் இருக்கிறேன்” நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

ManjulaFeb 03, 2024 13:45PM
bollywood actress poonam pandey

தான் உயிருடன் இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) ‘நஷா’ என்ற படத்தின் மூலமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்தி தவிர கன்னடம், போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பூனம் நடித்திருக்கிறார். பூனம் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ‘ஜர்னி ஆஃப் கர்மா’ பாலிவுட் படம் வெளியானது. அதற்குப்பின் அவர் நடிப்பில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

bollywood actress poonam pandey

கடந்த 2௦11-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர், 2௦2௦-ம் ஆண்டு தன்னுடைய காதலன் சாம் பாபே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நேற்று(பிப்ரவரி 2) திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நன்றாக இருந்த பூனம் திடீரென எப்படி இறந்தார்? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர். மேலும் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

bollywood actress poonam pandey

இந்த நிலையில் தான் இறக்கவில்லை என இன்று(பிப்ரவரி 3) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ”நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள்,”விழிப்புணர்வு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” என கடுமையாக பூனம் பாண்டேவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

https://minnambalam.com/cinema/bollywood-actress-poonam-pandey-apologises-for-shocking-everyone/

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

விழிப்புணர்வு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?


இவரது செய்தியை யாழ்களத்தில் படித்து நானும் கேன்சர் பற்றி பயந்தேன். இப்போது பொய் செய்தி என்பதால் பயமே இல்லை ஆகவே இது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யபட்டது இல்லை. தன்னை விளம்படுத்த செய்த மோசமான செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

 poonam-pandey--8-_300x533xt.jpg  Poonam-Pandey2-1706855162476_300x399xt.j

நல்ல கவர்ச்ச்ச்ச்சீ  நடிகை போலுள்ளது. 😋 🤪 😍
இவர் உயிருடன் இருந்தால்.... இவரின்
திறமையை!!! தமிழ் திரையுலகம் பயன் படுத்த வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.