Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2024 at 20:24, Justin said:

சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல்  தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂?

அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை.

எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள்.

சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல  "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!

எனது -1 ஏனைய கருத்தாளர்களை மட்டம் தட்டி எழுதுவதற்கு. 

  • Replies 379
  • Views 35.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, கிருபன் said:

நல்லது நன்னி. மிகவும் ஆழமாகவே ஆராய்ந்துள்ளீர்கள். நீலன் மிளிர்வான வரைபை உருவாக்குவதற்கு உதவினார். எனினும் நீர்த்துப்போகச் செய்தது சிங்கள அரசியல் கட்சிகளினது செயற்பாடு. பொதி தீர்வாக வந்திருக்கும் என அந்தக் காலத்திலேயே நம்பவில்லை. ஆனால் எழுத்து மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க உதவியது கொலை செய்யவேண்டிய அளவுக்கு துரோகமான செயல் இல்லை. புலிகள் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருந்த காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்குக் குறைவான தீர்வு ஒன்றை அவர்களின் அனுமதி இல்லாமல் வரைய உதவியதுதான் நீலன் கொல்லப்பட்டதற்கான காரணம்.

 இன்றைய காலகட்டத்தில் “மிளிர்வான” பொதியையோ அல்லது நீர்த்துப்போன அதன் மறுவரைபுகளையோ கூட ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லமுடியாத அரசியல் வலிமையற்ற இடத்தில்தான் தமிழர்கள் நிற்கின்றார்கள். 

புலிகள் தொடக்கத்திலேயே இத்தீர்வை ஏற்காததிற்கு தலையான காரணம்: இத்தீர்வு ஒரு அலுவல்சார் அறிவிப்பாக வெளியாகும் முன்னரே, தேரர்களின் புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சந்திரிக்கா அம்மையார் செவி சாய்த்து உறுதியளித்தமையும் அவர்களை போரில் தோற்கடித்து மண்டியிட வைத்த பின்னரேதான் இத்தீர்வை நடைமுறைப்படுத்துவேன் என்றும் உறுதியளித்தமையுமாகும். அதனால்தான் புலிகள் இத்தீர்வை மறுத்தனர்.
-----------------------

1) இல்லை,

எழுத்து மூலம் தயாரிக்கப்பட்டது என்று ஒரு தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்வொன்றை மிகச் சாதாரணமாக எடைபோட்டுக் கூறியுள்ளீர்கள். 
 
என்னைப் பொறுத்த வரை, 

இவர் சாக்கொல்லப்பட்டது இவர் உருவாக்கிய தீர்வுப் பொதிக்காக அல்ல. இதற்காக கொல்லப்பட வேண்டுமெனில் இவர் அவ்வளவு காலம் விட்டுவைக்கப்பட்டிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். தீர்வு அரசாங்கத்தால் அலுவல்சாராக வெளியிடப்பட்டது ஓகஸ்ட், 1995ம் ஆண்டு. இவர் கொல்லப்பட்டது சூலை, 1999 ஆம் ஆண்டு. நான்காண்டுகள் வேறுபாடுள்ளது.

இவர் ஒழுங்கான தீர்வொன்றைத் தான் தயாரித்தார். ஆனால், முடிவில் இவர் செய்தது யாதெனில் அத்தீர்வை தன் கண்முன்னே சிங்களவர் மிகவும் மலினப்படுத்தி மெல்லியதாக்கி பயனற்ற ஒன்றாக மாற்றிய பின்னரும் (1996இலேயே நடந்துவிட்டது) அத்தீர்வை இவர் ஒரு சட்ட திருத்தமாக மாற்றி ஒன்றுமே இல்லாத ஒரு வெற்றுச் சட்டத்தைத் தமிழர் தலையில் தீர்வென்ற போர்வையில் கட்டிவிட முயன்றதாகும், 1999 இல். 

நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும். 

அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்!

புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர்.

இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது.

2) தமிழர் வலுவாக இருந்த போதே சிங்களவரின் செல்லப்பிள்ளையாக அவர்களின் மேல் செல்வாக்குக்கொண்ட நீலன் கொண்டுவந்த பொதியையே சிங்களவர் நீர்த்துப்போகச் செய்துவிட்டனர். இதில் தரையோடு கிடக்கும் தமிழர் நாம் எங்கு ஒன்றைக் கொண்டுவருவது?
 
Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

அப்படியே கந்தயரையும் ரியுனை மாத்தச் சொல்லுங்கோ!

நீலனை யார் கொன்றார்கள் என்பது பற்றி நான் ஆராய்வு செய்யவில்லை ....ஆனால் நீலனின். வரைபு தீர்வு என்பது தவறு ஆகும்  அது சதி திட்டம்  என்று உறுதியாக சொல்லுகிறேன் இனி பேச முடியாது  தமிழ் ஈழம் தீர்வு  ஆயுதப் போராட்டம் தான் சரி என்றவர்கள் ....இதனை நம்பி இளைஞர்கள் ஆயுதம் எடுத்து விட்டார்கள்   ஏன் பேசினார்?? யாரை கேட்டு பேசினார்?? ஆயுதம் எடுத்தவர்கள் எதிர்காலம் என்ன?? பெரிய பல்கலைகழகத்தில்  சட்டம் படித்தவருக்கு  இந்த கேள்விகள் எழவில்லைய?? இவரது தீர்வு இன்னமும் ஏன் நடைமுறைக்கு வரவில்லை?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

நீலனின். வரைபு தீர்வு என்பது தவறு ஆகும்  அது சதி திட்டம்  என்று உறுதியாக சொல்லுகிறேன்

அதனால்தான் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் முதல் வரைபை சிலாகித்திருந்தார்😃

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நன்னிச் சோழன் said:

புலிகள் தொடக்கத்திலேயே இத்தீர்வை ஏற்காததிற்கு தலையான காரணம்: இத்தீர்வு ஒரு அலுவல்சார் அறிவிப்பாக வெளியாகும் முன்னரே, தேரர்களின் புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு சந்திரிக்கா அம்மையார் செவி சாய்த்து உறுதியளித்தமையும் அவர்களை போரில் தோற்கடித்து மண்டியிட வைத்த பின்னரேதான் இத்தீர்வை நடைமுறைப்படுத்துவேன் என்றும் உறுதியளித்தமையுமாகும். அதனால்தான் புலிகள் இத்தீர்வை மறுத்தனர்.
-----------------------

ஆதாரம்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

ஆதாரம்? 

🤣

எதற்கு ஆதாரம்?? மூடிய அறைக்குள் ஒரு இனத்துக்கான தீர்வை இருவர் (பீரிஸ், நீலன்) எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

இவர் எழுதியது  ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது  புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால்  அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது  நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான்  காரணம் போராடுவோர் இல்லை    தீர்வு திட்டங்கள் எழுதுவது  தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை  எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும்   இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது   இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும்  அதுவும் இனி பேசி பலனில்லை  தமிழ் ஈழம் தான் முடிவு   அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான்  என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது  தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது    அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு   மேலும் போராடியவர்களுக்கு  எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு  இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே   

ஒரு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரும்போது போராடியவர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி இல்லாவிடடாள் அது தீர்வாக இருக்காது. 

அவர் எதை , எந்த தீர்வு பொதியை கொண்டு வந்தார் என்பதோ பிரச்சினையில்லை. அதட்காக மண்டையில் போடுவதுதான் தீர்வு என்றால் அது நடக்காது. இப்போது எங்கே நிட்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

அதனால்தான் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் முதல் வரைபை சிலாகித்திருந்தார்😃

வரைவு எப்படி நல்லாதாக இருந்தாலும்  அமுல் படுத்தப்படும்  என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ...வரைவு நல்லது என்பதும் நடைமுறையில் அமுல் செய்வதும்  வெவ்வேறு விடயங்கள்  வரைவு நல்லது என்றால் மட்டும் போதுமா??  அமுல் படுத்த தேவையில்லையா?? போராடி கொண்டிருக்கும் போது இவர் இப்படி ஒரு வரைபை எழுதியது  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்    இவங்கள் பெடியாள். தேவையில்லாமல் அடிபடுகிறார்கள். என்ற மாய தோறறத்தை உருவாக்கிவிட்டது   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

தவறுகளை சுட்டி காட்டுவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்க போகும் நன்மை ஒன்றுமில்லை என நான் நினைக்கிறேன் ...

ஆயுதம் ஏந்தியவர்களிடம் நாம் அகிம்சையை எதிர் பார்க்க முடியாது 

நிச்சயமாக.

நல்லவர்களை கெடடவர்களாகவும், கெடடவர்களை நல்லவர்களாகவும் வெள்ளையடிக்கும்போதுதான் இங்கு பிரச்சினை உருவாகின்றது. 

22 minutes ago, கிருபன் said:

அதனால்தான் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் முதல் வரைபை சிலாகித்திருந்தார்😃

நீலன்  திருச்செல்வமில்லை, குறைந்தது புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துக்கு செவிகொடுத்திருந்தால் கூட பிரச்சினை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Cruso said:

ஒரு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரும்போது போராடியவர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி இல்லாவிடடாள் அது தீர்வாக இருக்காது. 

அவர் எதை , எந்த தீர்வு பொதியை கொண்டு வந்தார் என்பதோ பிரச்சினையில்லை. அதட்காக மண்டையில் போடுவதுதான் தீர்வு என்றால் அது நடக்காது. இப்போது எங்கே நிட்கிறோம்?

இவரை மட்டும் மண்டையில் போடவில்லை  1981 ஆண்டளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்  அடிக்கடி பார்த்து உள்ளேன்  காரணங்களும். பெரிய பேப்பரில் எழுதியிருக்கும். அவ்வளவு காலம் கதைக்காத நீங்கள்  இவருக்கு மட்டுமே முக்கியம் கொடுப்பது ஏன்  இவருடைய உயிர்  மென்மையானாதா??  எல்லா உயிர்களும் சமன் இல்லையா?? இதை செய்தது என்று கூறப்படும் புலிகள் இல்லாத நிலையில் கதைப்பது வீண் வேலை  தேவையற்றதும் கூட 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய போதே(வன்மம்) நீங்கள் யாரென்று புரிந்து விட்டது. அக்கருத்தை காணவில்லை. நிர்வாகம் தூக்கி விட்டது போல.  
இப்போ பத்தோடு பதினொன்றாக ...........................

நிர்வாகம் தூக்கி விட்ட்தா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஒருதரம் எழுதியதை மீண்டும் போய் தேவையில்லாமல் பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் பிரபாகரனை விமர்சித்தால் இங்கு அந்த கருத்து காணாமல் போகுமென்கிறீர்கள்.

நீங்கள் விளங்கினதையும் எழுதினால் நல்லது. நீங்கள் யார் , நான் யார் என்பதல்ல பிரச்சினை. நீங்களும் எழுதுகிறீர்கள், நானும் எழுதுகிறேன். அதனை ஏற்று கொள்ளுவதும், ஏற்று கொள்ளாததும் ஒவ்வொருவரை பொறுத்தது. 

Just now, Kandiah57 said:

இவரை மட்டும் மண்டையில் போடவில்லை  1981 ஆண்டளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்  அடிக்கடி பார்த்து உள்ளேன்  காரணங்களும். பெரிய பேப்பரில் எழுதியிருக்கும். அவ்வளவு காலம் கதைக்காத நீங்கள்  இவருக்கு மட்டுமே முக்கியம் கொடுப்பது ஏன்  இவருடைய உயிர்  மென்மையானாதா??  எல்லா உயிர்களும் சமன் இல்லையா?? இதை செய்தது என்று கூறப்படும் புலிகள் இல்லாத நிலையில் கதைப்பது வீண் வேலை  தேவையற்றதும் கூட 

ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதட்காக கொலை செய்வதட்கு எவருக்கும் உரிமை இல்லை. நிச்சயமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை அவர்களது இரத்தம் பழி வாங்கும். எவருமே தப்ப முடியாது.

எல்லோரயும் எழுதும்போது நீலனின் பெயரும் இங்கு வந்ததன் அடிப்படையில் எழுதினேன். மடற்ப்படி நீலனுக்காக மட்டும் நான் இங்கு எழுதவில்லை. 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, kalyani said:

எதற்கு ஆதாரம்?? மூடிய அறைக்குள் ஒரு இனத்துக்கான தீர்வை இருவர் (பீரிஸ், நீலன்) எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?

புலிகள் இல்லாத வெற்றிடத்தில், (தன்னைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாக பீற்றும் ஒருவர்) எந்த  அடிப்படையில் கருத்து வெளியிடுவார்? 

அடிப்படை அறிவு வேண்டாமா இந்த முட்டாள்களுக்கு ? 

இந்த முட்டாள்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு அவப்பெயரை சேர்க்கின்றனர் என்று உங்களுக்குப் புரியவில்லையா? 

இத்தனை தியாகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு போராட்டத்தில், தவறுகளை அடையாளம் கண்டு, அவகற்றைக்  களைந்து, எல்லோரையும் ஒன்று சேர்த்து பயணிக்க  வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? 

புலிகளுக்கு நிதி சேகரித்த காரணத்தால் ஒருவர் விடுதலைப் போருக்கு உரிமை கொண்டாடுகிறார். இன்னொருவர் பல்வேறு தளங்களிலுமிருந்து தகவல்களை ஒன்று சேர்க்கும் காரணத்தால் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாகப் பீற்றுகிறார். மற்றும் சிலரோ  ஊரில் விபு க்களின் காலத்தில் சைக்கிள் பார்க்கிங்கில் ரிக்கற் கிழித்தவர்கள் எல்லோரும் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு நிகராக தங்களை கருதிக் கொண்டதுபோல தற்போது கருத்துக் கூறுகின்றனர்.

தனி மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? 

16 hours ago, Cruso said:

நல்லவர்களை கெடடவர்களாகவும், கெடடவர்களை நல்லவர்களாகவும் வெள்ளையடிக்கும்போதுதான் இங்கு பிரச்சினை உருவாகின்றது. 

நீலன்  திருச்செல்வமில்லை, குறைந்தது புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துக்கு செவிகொடுத்திருந்தால் கூட பிரச்சினை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்காது. 

சரியாகச் சொன்னீர்கள. 

***

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

புலிகள் இல்லாத வெற்றிடத்தில், (தன்னைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாக பீற்றும் ஒருவர்) எந்த  அடிப்படையில் கருத்து வெளியிடுவார்? 

அடிப்படை அறிவு வேண்டாமா இந்த முட்டாள்களுக்கு ? 

இந்த முட்டாள்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு அவப்பெயரை சேர்க்கின்றனர் என்று உங்களுக்குப் புரியவில்லையா? 

இத்தனை தியாகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு போராட்டத்தில், தவறுகளை அடையாளம் கண்டு, அவகற்றைக்  களைந்து, எல்லோரையும் ஒன்று சேர்த்து பயணிக்க  வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? 

புலிகளுக்கு நிதி சேகரித்த காரணத்தால் ஒருவர் விடுதலைப் போருக்கு உரிமை கொண்டாடுகிறார். இன்னொருவர் பல்வேறு தளங்களிலுமிருந்து தகவல்களை ஒன்று சேர்க்கும் காரணத்தால் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாகப் பீற்றுகிறார். மற்றும் சிலரோ  ஊரில் விபு க்களின் காலத்தில் சைக்கிள் பார்க்கிங்கில் ரிக்கற் கிழித்தவர்கள் எல்லோரும் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு நிகராக தங்களை கருதிக் கொண்டதுபோல தற்போது கருத்துக் கூறுகின்றனர்.

தனி மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? 

தனிமனித கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஒரு பெண் போராளியை தற்கொலை போராளியாக்கி சிறிலங்கா அரசின் கப்பலை தகர்த்து மாவீரர் ஆகும் போது ஒரு படித்த நீலன் திருச்செல்வம் (ஒரு தமிழர்) புலிகளுடன் இப்படி ஒரு வரைபு செய்யபோகிறேன் என்றோ அல்லது தினமும் குண்டடி பட்டு இறக்கும் தமிழ் மக்களிடமாவது பகிர்ந்தாரா என்பது தான் எனது ஆதங்கம்? 
இதற்குள் ஏனைய குப்பைகளை கலந்து சாம்பார் ஆக்காதீர்கள்.

16 hours ago, Cruso said:

நிர்வாகம் தூக்கி விட்ட்தா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஒருதரம் எழுதியதை மீண்டும் போய் தேவையில்லாமல் பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் பிரபாகரனை விமர்சித்தால் இங்கு அந்த கருத்து காணாமல் போகுமென்கிறீர்கள்.

நீங்கள் விளங்கினதையும் எழுதினால் நல்லது. நீங்கள் யார் , நான் யார் என்பதல்ல பிரச்சினை. நீங்களும் எழுதுகிறீர்கள், நானும் எழுதுகிறேன். அதனை ஏற்று கொள்ளுவதும், ஏற்று கொள்ளாததும் ஒவ்வொருவரை பொறுத்தது. 

ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதட்காக கொலை செய்வதட்கு எவருக்கும் உரிமை இல்லை. நிச்சயமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை அவர்களது இரத்தம் பழி வாங்கும். எவருமே தப்ப முடியாது.

எல்லோரயும் எழுதும்போது நீலனின் பெயரும் இங்கு வந்ததன் அடிப்படையில் எழுதினேன். மடற்ப்படி நீலனுக்காக மட்டும் நான் இங்கு எழுதவில்லை. 

உங்கள் வெறுப்பு கருத்து உங்கள் மண்டையில் இருந்து வந்ததாக கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, kalyani said:

உங்கள் வெறுப்பு கருத்து உங்கள் மண்டையில் இருந்து வந்ததாக கருதுகிறேன்.

மண்டையில் இருந்து வராமல் இடுப்புக்கு கிழே இருந்தா வரும்? உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து? அதையும் எழுதுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

மண்டையில் இருந்து வராமல் இடுப்புக்கு கிழே இருந்தா வரும்? உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து? அதையும் எழுதுங்கள். 

உங்களின் அன்றைய வெறுப்பு கருத்தில் இருந்து பிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

புலிகள் இல்லாத வெற்றிடத்தில், (தன்னைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாக பீற்றும் ஒருவர்) எந்த  அடிப்படையில் கருத்து வெளியிடுவார்? 

அடிப்படை அறிவு வேண்டாமா இந்த முட்டாள்களுக்கு ? 

இந்த முட்டாள்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு அவப்பெயரை சேர்க்கின்றனர் என்று உங்களுக்குப் புரியவில்லையா? 

இத்தனை தியாகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு போராட்டத்தில், தவறுகளை அடையாளம் கண்டு, அவகற்றைக்  களைந்து, எல்லோரையும் ஒன்று சேர்த்து பயணிக்க  வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? 

புலிகளுக்கு நிதி சேகரித்த காரணத்தால் ஒருவர் விடுதலைப் போருக்கு உரிமை கொண்டாடுகிறார். இன்னொருவர் பல்வேறு தளங்களிலுமிருந்து தகவல்களை ஒன்று சேர்க்கும் காரணத்தால் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாகப் பீற்றுகிறார். மற்றும் சிலரோ  ஊரில் விபு க்களின் காலத்தில் சைக்கிள் பார்க்கிங்கில் ரிக்கற் கிழித்தவர்கள் எல்லோரும் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு நிகராக தங்களை கருதிக் கொண்டதுபோல தற்போது கருத்துக் கூறுகின்றனர்.

தனி மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? 

சரியாகச் சொன்னீர்கள. 

மற்றவர்களை இழுக்காமல் கருத்துகள் எழுதுங்கள்…  புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டு விட்டார்கள். மறக்க வேண்டாம் புலிகள் இல்லை  நீங்கள் பிழைகளின்றி போராடுங்கள்.  நான்  உண்டியல் குலுக்கி உதவி செய்கிறேன் 🤪🙏🙏. இந்த உலகில்……………  பிழைகளின்றி போராடிய  விடுதலை அமைப்பு உண்டா?? இல்லையே??   இனிமேல் தமிழருக்குகாக எவரும்  மானமுள்ள எவரும் போராடமாட்டார்கள். ஆகவே பிழை விட சந்தர்ப்பம் இல்லை  அதேநேரம் திருந்தவும் சந்தர்ப்பமில்லை  நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Just now, kalyani said:

உங்களின் அன்றைய வெறுப்பு கருத்தில் இருந்து பிறந்தது.

அதையும் குறிப்பிட்டு எழுதுங்கள். பின்னர் அதை பார்த்து வெறுப்பா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். சும்மா சும்மா எழுதக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

மற்றவர்களை இழுக்காமல் கருத்துகள் எழுதுங்கள்…  புலிகள் இல்லை 2009 அழிக்க பட்டு விட்டார்கள். மறக்க வேண்டாம் புலிகள் இல்லை  நீங்கள் பிழைகளின்றி போராடுங்கள்.  நான்  உண்டியல் குலுக்கி உதவி செய்கிறேன் 🤪🙏🙏. இந்த உலகில்……………  பிழைகளின்றி போராடிய  விடுதலை அமைப்பு உண்டா?? இல்லையே??   இனிமேல் தமிழருக்குகாக எவரும்  மானமுள்ள எவரும் போராடமாட்டார்கள். ஆகவே பிழை விட சந்தர்ப்பம் இல்லை  அதேநேரம் திருந்தவும் சந்தர்ப்பமில்லை  நன்றி வணக்கம் 🙏🙏🙏

முதலில் நாம் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சரியான பாதையில் பயணிப்பதற்கு அதுதான் முதற்படி.

***

  • கருத்துக்கள உறவுகள்

உந்த முட்டாள் கூட்டத்தின் அடாவடித்தனங்களால்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது இறுதிக் காலத்தில் போராட்டக் களத்தில் இருந்து வெளியேறி கவலையுடன் மரணத்தைத் தழுவியதாக நான் உணர்கிறேன். 

தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று  SJV கூறியது எம் மந்தைக் கூட்டத்தின் இழி நிலையை உணர்ந்துதான் . அதை இப்போது நான் உணர்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று  SJV கூறியது எம் மந்தைக் கூட்டத்தின் இழி நிலையை உணர்ந்துதான் . அதை இப்போது நான் உணர்கிறேன். 

IMG-5880.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் முதல் தடவையாக மக்கள் மனம் கவர்ந்த ஒரு அரசியல் வாதி தேர்தலில் போட்டியிடடார், மக்களுக்கு அவர் ஒளியமயமான எதிர்காலத்தினை தனது வாக்குறுதியாக வழங்கினார், மக்கள் தேர்தலில் அவருக்கு போட்டி  போட்டுக்கொண்டு வாக்களித்தனர்,

அந்த அரசியல்வாதி அதிக பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.

மக்கள் தமது ஒளி மயமான எதிர்கால கனவுடன் காத்திருந்தனர்,  நாட்கள் மாதங்களானது எந்த  ஏற்படவில்லை பொறுமையிழந்த மக்கள் அரசியல்வாதியிடம் முறையிட சென்றனர்,

மக்களை பார்த்து சிரித்துக்கொண்டு அனைத்து சவுகரியங்களுடன்  கொண்டிருந்த அரசியல்வாதி சொன்னார் உங்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மக்களுக்கு உண்மை புரிந்தது, தாம் ஏமாற்றப்பட்டு விடடோம் என ஆனால் யதார்த்தத்தினை புரிந்து கொண்டார்கள்.

வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் காலடியில் வந்து விழும், கடந்த காலத்தில் கூட பல தீர்வு திட்ட்ங்கள் தானாக வந்தது, எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழும் நம்புங்கள் மக்களே.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் இல்லை.

சிங்கள அரசினை முழுமையாக நம்புங்கள் அவர்கள் சரியான தீர்வினை தருவார்கள்.

அது எவ்வாறென்றால் திரோபதை சபையில் தனக்கு நிகழ இருந்த அவமானத்தினை தடுக்க அந்த அவையில் இருந்த தனக்கு வேண்டப்படடவர்கள், வேண்டப்படாதவர்கள் என எல்லோரையும் கேட்டு முடியாமல் கடைசியாக கண்ணனிடமும் வேண்டியும் எதுவும் நிகழவில்லை.

இறுதியாக தனது கைகளை ஆடையில் இருந்து விட்டு இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி (முழு சரணாகதி) கேட்டு நிகழ இருந்த அசம்பாவிதத்தில் இருந்து தப்பிக்க கொண்டார்.

இந்த சரணாகதி அரசியல் மூலம் இதுவரை எந்த மக்களும் உரிமைகள் பெற்றதாக நான் அறியவிலலை, ஆனால் முதல் தடவையாக இலங்கை மண்ணில் நிகழ உள்ளது, இதில் கண்ணனாகவும் துச்சாதனகவும் இருப்பது சிங்கள இனவாத அரசு, இந்த புதிய வகை போராடடத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் கல்விமான்களுக்கும் எமது மக்கள் நன்றி கடன்பட்டவர்கள்.

இது கத்தியின்றி இரத்தம் சிந்தா புதிய புரட்சி, இதற்கு உரிய கால அவகாசத்தினை மக்கள் பொறுமையுடன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

புதிய சரித்திரம் படைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

நல்ல புரட்சிகரமான வசனங்கள் வசி.  1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட  இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

நன்றி ஐலன்ட், இப்படித்தான் கடந்தகால அழிவுகளை தொடர்ந்தும் எமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை விழிப்பில் வைத்திருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

 1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட  இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம். 

தகவல்களுக்கு நன்றி Island
இந்த புரட்சி எமாற்றுகளை விபரிக்கும் முற்காலத்தில் எழுதபட்ட சிறந்த நாவல் ஒன்று உள்ளது Animal Farm.  வசதி நேரம் கிடைத்தால் படித்துபாருங்கள்.

----------------------

7 hours ago, Cruso said:

உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து?

படித்த சித்தாந்த புத்தகத்தில் இருந்து பெற்றுகொண்டார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தகவல்களுக்கு நன்றி Island
இந்த புரட்சி எமாற்றுகளை விபரிக்கும் முற்காலத்தில் எழுதபட்ட சிறந்த நாவல் ஒன்று உள்ளது Animal Farm.  வசதி நேரம் கிடைத்தால் படித்துபாருங்கள்.

தகவலுக்கு நன்றி விளங்க நினைப்பவன். 

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.