Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சட்டங்கள் என்ன சர்வாதிகாரத்துக்கா...??

Featured Replies

தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள் - என்கிற தலைப்பின் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது - வலிந்து திணிக்கப்பட்ட கருத்து என்பதால்
http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173

இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்...

அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு...

அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...

Edited by தயா

ஆரம்பம் முதலே இந்த கருத்துக்களத்தில் "நடுவுநிலமை" என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதனை வாசகர்கள்தான் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நான் இங்கு எழுத ஆரம்பிக்கும் போது இருந்த எனது கருத்துகளும் இப்போது இருக்கும் கருத்து நிலைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சில கருத்துக்களை தவறு என்று உணர்ந்து கைவிட்டிருக்கிறேன். சிலது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

இங்கு பல்வேறு பட்டவர்கள், வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள், பல்வேறு துறைசார் நிபுணர்கள், வயதானவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என பலர் வருகின்றனர். இதில் அவர்களில் கருத்துக்களுக்குள் நாட்டாண்மை பண்ணுவது சாத்தியமற்றது. அது முற்றும் உணர்ந்த ஒருவரால்தான் முடியும், அல்லது இந்த நடைமுறை ஆரம்பப்பள்ளிக் கூடத்தில் தான் சாத்தியம். பல்கலைக் கழகத்தையும், நாட்டின் எல்லைகளையும் தாண்டிய ஒரு சமுகத்தில் அப்படி நடக்க முயல்வது நகைப்பிற்கிடமாகவே முடியும். மேலும் கருத்துப்பகிரும் ஆர்வத்தையும் குறைக்கும் (உ+ம் நான்).

எனவே பொதுவான சில வரையறைகளுக்குள் (எ.கா.: துர்வசனப்பாவனை, குறித்த வகைகளுக்குள் கருத்துகளை இடுவது போன்றவை) மட்டுறுத்துனர் பணி மட்டுப்படுவது சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நல்லதொரு கருத்தாளர் வடிவேல் அவர்களை 3 நாட்களுக்கு தடை செய்தமை மிகவும் வருத்தத்தை தருகிறது.

அன்புடன்,

Edited by சாணக்கியன்

என்னது என்ட அண்ணண் வடிவேலை 3 நாட்கள் தடை செய்திட்டாங்களா :lol: !!அண்ணா உங்களுக்கு இந்த நிலைமையா :lol: !!எத்தனை வெட்டு வாங்கினாலும் அழமாட்டீங்களே!!உங்களை ரொம்ப நல்லவர் என்று எல்லாரும் சொல்லுவாங்களே உங்களுக்கு இந்த நிலைமையா!!முடியலப்பா இப்பவே கண்ணை கட்டுது!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வலைஞன்

உங்களுக்கு கருத்துக்களை வெட்ட மட்டும் தான் தெரியும் போல. தடை செய்தாலோ, அல்லது எச்சரிக்கை செய்தாலோ தனிமடல் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று போட்டிருந்தேனே, படிக்கவில்லையா?

முதலில் கருத்துக்களை கண் மண் தெரியாமல் வெட்ட முன்பு, என்ன எழுதியிருக்கின்றது என்பதைப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் உங்களுக்குத் தோன்றுகின்ற 100 சட்டங்கள் எழுதுவீர்கள். அதை எல்லாம் யார் கேட்டது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173

இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்...

அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு...

அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...

தயா,

அவரவர் கருத்து அவரவர்க்கு சரியானதே. குறிப்பாக, எழுதும் போது தமக்கு சரியெனப்படுவதையே பலரும் எழுதுகிறார்கள். அந்தவகையில் நீங்கள் எழுதிய கருத்து உங்களுக்கு சரியானதே. நாம் உங்கள் கருத்துத் தொடர்பில் அந்தக் கருத்து சரியா தவறா என விவாதம் நடத்தவில்லை. உங்கள் கருத்து அந்தத் தலைப்பின் கீழ் வலிந்து திணிக்கப்பட்ட கருத்தாகவே இருந்தது. தலைப்பு இது தான்: தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள். நீங்கள் உங்கள் கருத்தை எழுதும்போது தலைப்புக்கு பொருத்தமில்லாத - சீண்டும் நோக்கில் - எழுதப்படும் கருத்து என்பதை அறிந்தே எழுதியிருக்கிறீர்கள். பின்வரும் உங்கள் கருத்தே அதற்கு சான்று:

மட்டுறுத்துனர் கண்களில் சம்பந்தம் இல்லாத கருத்தாக தெரியாமல் இருக்க ஒரு கவர்

நீங்கள் ஈ.வே.ராமசாமியை தலைப்புக்குள் கொண்டுவருவீர்கள். அடுத்து வருபவர் பாரதியாரை கொண்டுவருவார். இன்னொருவர் விவேகானந்தரைக் கொண்டுவருவார். அதற்கு பின்னால் இந்து மதம் வரும். தொடர்ந்து திராவிடம், ஆரியம், பார்ப்பனர் என்று வரும். அனைத்தும் வந்து முடிந்ததும், தலைப்பு என்ன என்பதை எல்லோரும் மறந்து போய்விடுவார்கள். தனிப்பட்ட தாக்குதல் கருத்துகள் வரும். மற்றவரை சீண்டவேண்டும் என்று கருத்துக்கள் வரும். எல்லா கருத்துக்களையும் ஒன்றுவிடாமல் வாசித்து தணிக்கை செய்ய வேண்டி ஏற்படும். அதற்கு ஒரு நாள் செலவாகும். இறுதியில் கருத்துக்கள நிர்வாகத்தை மாறி மாறி ஒவ்வொருவரும் விமர்சிப்பார்கள். பிறகு யாழ் உறவோசை பகுதியில் கருத்துக்கள நிர்வாகம் இந்து மதத்துக்கு சார்பாக நடக்கிறது ஒன்று ஒருவர் தலைப்புத் தொடங்குவார். இன்னொருவர் கருத்துக்களம் இராமசாமிக்கு வால் பிடிக்கிறது என்று தலைப்புத் தொடங்குவார். இப்படியாக ஒரு தலைப்பின் பிரச்சனை முடியும் (?!).

இதன் பின்னர் இன்னொரு தலைப்புத் தொடங்கப்படும். தலைப்புக்குத் தொடர்பிருக்கிறதோ இல்லையோ, அதன் கீழ் முடிந்த தலைப்பின் முரண்பாடுகள் வலிந்து இழுத்து வரப்படும். பிறகு வழமைபோல அதுவும் தொடரும்.

நாம் கருத்துக்களம் என்ற பெயர் வைத்தது தனிப்பட்ட நபர்கள் தமது தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்வதற்கல்ல - தனிப்பட்ட நபர்கள் மோதிக் கொள்வதற்கு அல்ல. ஆக்கபூர்வமான கருத்து மோதல்களைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். அப்போது தான் புதிய கருத்துக்கள் உருவாகும். விதண்டாவாதங்களாலும், வீதிச்சண்டை செய்வதுபோல் எழுதுவதாலும் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளமுடியாது. மாறாக, மன உளைச்சல்கள் மட்டுமே வந்து சேரும்.

நாம் ஏற்கனவே பலதடவைகள் இதுபற்றி அறிவுறுத்தியிருக்கிறோம். அத்தோடு இத்தால் சகலரும் அறிவது என்கிற தலைப்பிலும் இது தொடர்பாக எழுதியுள்ளோம்.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=344988

நன்றி.

என்ன வலைஞன்

உங்களுக்கு கருத்துக்களை வெட்ட மட்டும் தான் தெரியும் போல. தடை செய்தாலோ, அல்லது எச்சரிக்கை செய்தாலோ தனிமடல் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று போட்டிருந்தேனே, படிக்கவில்லையா?

முதலில் கருத்துக்களை கண் மண் தெரியாமல் வெட்ட முன்பு, என்ன எழுதியிருக்கின்றது என்பதைப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் உங்களுக்குத் தோன்றுகின்ற 100 சட்டங்கள் எழுதுவீர்கள். அதை எல்லாம் யார் கேட்டது.

தூயவன்,

நீங்கள் விரும்புகிறீர்களோ, விரும்பவில்லையோ எச்சரிக்கை வழங்கும்போது தனிமடல் அல்லது மின்னஞ்சல் அனுப்பவேண்டியது அவசியம். நாம் பயன்படுத்தும் கருத்துக்கள மென்பொருளிலும் விளக்கம் கொடுக்காமல் எச்சரிக்கை வழங்கமுடியாது. அத்தோடு, கருத்துக்கள நிர்வாக - மட்டுறுத்தல் செயற்பாடுகளின் பொருட்டு கருத்துக்கள உறுப்பினர்களோடு கருத்துக்கள நிர்வாகம் தொடர்புகொள்ளும். அதனைத் தொந்தரவு என்று நீங்கள் கருதின் நாம் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், இது கருத்துக்கள நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டிருக்கிற செயற்பாடு.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது- தூயவன்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

"ஆரம்பம் முதலே இந்த கருத்துக்களத்தில் "நடுவுநிலமை" என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதனை வாசகர்கள்தான் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நான் இங்கு எழுத ஆரம்பிக்கும் போது இருந்த எனது கருத்துகளும் இப்போது இருக்கும் கருத்து நிலைகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சில கருத்துக்களை தவறு என்று உணர்ந்து கைவிட்டிருக்கிறேன். சிலது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

மிகவும் கவலக்குரிய விடயம் தான் விரும்பிய நல்ல கருத்தை கூட எழுத முடியவில்லை என்பது.ஒவ்வொருவரின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ,அல்லது ஒருவரை எழுத விடாமல் தடுப்பதன் மூலம்.அல்லது ஒருவரின் கருத்தை வெட்டி எறிவதன் மூலம் யாழ் என்னத்தை தான் சாதித்து விட்டது அல்லது என்னத்தை தான் சாதிக்கப்போகின்றது?.நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்றைப்பற்றி வேறு வேறு அபிப்பிராயங்கள் இருக்கும்,இருக்க வேண்டும்.ஆகவே இதனை பற்றி யாழ் நிர்வாகம் துணிவுடன் யாழ் கள உறுப்பினர்களுடன் விவாதிக்க தயாரா? முக்கியமாக மோகன் அண்னாவிடம் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.நேரத்துக்கு நேரம் யாரோ ஒரு உறுப்பினர் எதோ ஒரு உறுப்பினர் பாதித்த வண்ணமே உள்ளதே வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"நேரத்துக்கு நேரம் யாரோ ஒரு உறுப்பினர் எதோ ஒரு உறுப்பினர் பாதித்த வண்ணமே உள்ளதே வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை."

உண்மைதான்.. என்ன செய்யலாம்... கத்தி, துவக்கு என்று ஏதாவது தூக்க வைக்கப் போகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

"உண்மைதான்.. என்ன செய்யலாம்... கத்தி, துவக்கு என்று ஏதாவது தூக்க வைக்கப் போகின்றார்கள்!"

நல்ல காலம் கள நிர்வாகம் சிங்களவர்கள் இல்லை. இல்லாவிட்டால் கிருபனின் ஐடியா வேலை செய்திருக்கும்.

  • தொடங்கியவர்

தயா,

அவரவர் கருத்து அவரவர்க்கு சரியானதே. குறிப்பாக, எழுதும் போது தமக்கு சரியெனப்படுவதையே பலரும் எழுதுகிறார்கள். அந்தவகையில் நீங்கள் எழுதிய கருத்து உங்களுக்கு சரியானதே. நாம் உங்கள் கருத்துத் தொடர்பில் அந்தக் கருத்து சரியா தவறா என விவாதம் நடத்தவில்லை. உங்கள் கருத்து அந்தத் தலைப்பின் கீழ் வலிந்து திணிக்கப்பட்ட கருத்தாகவே இருந்தது. தலைப்பு இது தான்: தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள். நீங்கள் உங்கள் கருத்தை எழுதும்போது தலைப்புக்கு பொருத்தமில்லாத - சீண்டும் நோக்கில் - எழுதப்படும் கருத்து என்பதை அறிந்தே எழுதியிருக்கிறீர்கள். பின்வரும் உங்கள் கருத்தே அதற்கு சான்று:

அதாவது அந்த தலைப்புக்கு பொருத்தமானதாக இருந்தாலும்... வலிந்து ஒரு கருத்து திணிக்க பட்டது என்கிறீர்கள்( நான் அதை இல்லை என்கிறேன்)

யாழ் கள சட்டத்தில் வலிந்து ஒரு கருத்து திணித்தல் தவறு எண்று எந்த சரத்தில் இருக்கிறது... ??? நான் தேடி களைத்து விட்டே... கருத்து கள விதியில் இல்லாத முறையில் நீங்கள் வெட்டுவது தான் உங்களின் விதியோ...

எனது கருத்துக்களை பலமுறை ஓடி ஓடி வெட்டி எறிந்தமையையும் உங்களது ஒரு பக்க சார்பு நிலையையும் கருத்தில் கொண்டுதான்... உங்களுக்காக ( வலைஞன் என்பவருக்காக ) அப்படி ஒரு உள்ளூட்டு கருத்தை அடைப்பு குறிக்குள் எழுதி இருந்தேன்...!! (தாங்கள் மேற்கோள் காட்டிய கருத்து)... அதாவது உங்களின் செயற்பாடு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து... அதுமாதிரியே செயற்பட்டு எனது நம்பிக்கையை பூர்த்தி செய்தீர்கள்...

அந்த கருத்தில் கள உறுப்பினரை நான் தாக்கவில்லை , பாலியல் வக்கிரதையும் தூண்டவில்லை... ஆகவே அந்த கருத்தை மற்றவர்களும் பார்த்து தங்களின் நடுநிலமையை பற்றி அறிந்து கொள்ள இங்கு இணைக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா..??

நீங்கள் ஈ.வே.ராமசாமியை தலைப்புக்குள் கொண்டுவருவீர்கள். அடுத்து வருபவர் பாரதியாரை கொண்டுவருவார். இன்னொருவர் விவேகானந்தரைக் கொண்டுவருவார். அதற்கு பின்னால் இந்து மதம் வரும். தொடர்ந்து திராவிடம், ஆரியம், பார்ப்பனர் என்று வரும். அனைத்தும் வந்து முடிந்ததும், தலைப்பு என்ன என்பதை எல்லோரும் மறந்து போய்விடுவார்கள். தனிப்பட்ட தாக்குதல் கருத்துகள் வரும். மற்றவரை சீண்டவேண்டும் என்று கருத்துக்கள் வரும். எல்லா கருத்துக்களையும் ஒன்றுவிடாமல் வாசித்து தணிக்கை செய்ய வேண்டி ஏற்படும். அதற்கு ஒரு நாள் செலவாகும். இறுதியில் கருத்துக்கள நிர்வாகத்தை மாறி மாறி ஒவ்வொருவரும் விமர்சிப்பார்கள். பிறகு யாழ் உறவோசை பகுதியில் கருத்துக்கள நிர்வாகம் இந்து மதத்துக்கு சார்பாக நடக்கிறது ஒன்று ஒருவர் தலைப்புத் தொடங்குவார். இன்னொருவர் கருத்துக்களம் இராமசாமிக்கு வால் பிடிக்கிறது என்று தலைப்புத் தொடங்குவார். இப்படியாக ஒரு தலைப்பின் பிரச்சனை முடியும் (?!).

அப்படி வருவதால் யாரும் நன்மை அடையவில்லை என்று சொல்கிறீர்களா..?? இங்கு நீங்கள் தலைப்பிட்ட கருத்தை மட்டும் பற்றி சுவாரசியமான தகவல்களுடன் உரையாடிய இடங்களை எனக்கு காட்ட முடியுமா..??

தமிழர் தேசியம் சார்த்த பிரச்சினைகளின் போது தேசிய தலைவர், புலிகள் எப்படி தவிர்க்க முடியாதவர்களோ.. அப்படித்தான் தமிழர் வரலாற்றை எடுத்தால் ஈவேரா, பாரதி , சைவம், தமிழ் எல்லாமே தமிழர் வரலாற்றோடு இணைந்து இருக்கிறது..... அதை விளங்கி கொள்ளாத உங்களுக்கு விளங்கப்படுத்துவது எனக்கு தேவை இல்லாத்தது....!

இதன் பின்னர் இன்னொரு தலைப்புத் தொடங்கப்படும். தலைப்புக்குத் தொடர்பிருக்கிறதோ இல்லையோ, அதன் கீழ் முடிந்த தலைப்பின் முரண்பாடுகள் வலிந்து இழுத்து வரப்படும். பிறகு வழமைபோல அதுவும் தொடரும்.

நாம் கருத்துக்களம் என்ற பெயர் வைத்தது தனிப்பட்ட நபர்கள் தமது தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்வதற்கல்ல - தனிப்பட்ட நபர்கள் மோதிக் கொள்வதற்கு அல்ல. ஆக்கபூர்வமான கருத்து மோதல்களைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். அப்போது தான் புதிய கருத்துக்கள் உருவாகும். விதண்டாவாதங்களாலும், வீதிச்சண்டை செய்வதுபோல் எழுதுவதாலும் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளமுடியாது. மாறாக, மன உளைச்சல்கள் மட்டுமே வந்து சேரும்.

தனிப்பட்ட பகைமை என்பது உங்களால் ( மட்டுறுத்தினர் ஆகிய வலைஞனால் ) மட்டுமே வளர்க்க படுகிறது... சார்பு நிலை எடுத்து ஓர வஞ்சக செயற்பாடுகளை மட்டுறுத்தல் எனும் பெயரில் செய்து கொண்டு.. ஒருவருக்கு ஒருவர் சிண்டு முடியும் வேலைதான் செய்ய படுகிறது... கருத்துக்களை வெட்டுகிரேன் பேர்வளி எண்று ஒருவரின் கருத்துக்களை மட்டும் வெட்டி அடக்குவதும், மற்றவருக்கு ஊக்கம் கொடுப்பதும் உங்களது செயல்...

இப்படி எல்லாம் செய்து கொண்டு களத்தை வளர்க்கிறேன் எண்று கூறிக்கொண்டு இருங்கள்...

இதற்கு முன்னர் தனிமடலில் அது சம்பந்தமாக விளக்கமாக எழுதியும் இருக்கிறேன்...

நாம் ஏற்கனவே பலதடவைகள் இதுபற்றி அறிவுறுத்தியிருக்கிறோம். அத்தோடு இத்தால் சகலரும் அறிவது என்கிற தலைப்பிலும் இது தொடர்பாக எழுதியுள்ளோம்.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=344988

நன்றி.

புதிதாக சட்டங்களையும் கொள்கை பிரகடனங்களையும் செய்வது திறமை அல்ல... அவை அடக்கு முறைகளாகவும்... வஞ்சகங்களாகவும் உருவெடுக்காமல் பார்த்து கொள்வதுதான் திறமை... நடு நிலை என்பது கருத்து கள மட்டுறுத்தலுக்கு மிக அவசியம்... அதை உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது... தெரியாத வேலையை செய்யாமல் இருபது நலம்.... அதுவே யாழ்களத்தை வழர்க்க நீங்கள் நினைத்தால் செய்ய கூடியதும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி

நாட்டான்மை தீர்பு: என்ன தான் வெட்டினாலும் கொத்தினாலும் யாழ் களத்திற்க்கு எல்லாரும் கண்டிப்பா வரனும்...

நாட்டாண்மையின் இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் :icon_mrgreen: !!அட அரசியலில நிரந்தர எதிரியும் இல்லை நண்பணும் இல்லை இன்றைக்கு அடித்து கொள்ளுவோம் நாளைக்கு கையை கொடுபோம் சரி தானே நான் சொல்லுறது சுண்டல் அண்ணா!! :(

அப்ப நான் வரட்டா!! :(

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் கருத்து அவரவர்க்கு சரியானதே. குறிப்பாக, எழுதும் போது தமக்கு சரியெனப்படுவதையே பலரும் எழுதுகிறார்கள். அந்தவகையில் நீங்கள் எழுதிய கருத்து உங்களுக்கு சரியானதே. நாம் உங்கள் கருத்துத் தொடர்பில் அந்தக் கருத்து சரியா தவறா என விவாதம் நடத்தவில்லை. உங்கள் கருத்து அந்தத் தலைப்பின் கீழ் வலிந்து திணிக்கப்பட்ட கருத்தாகவே இருந்தது.

இந்த திரியிலையும் நெடுக்ஸ் அண்ணா பாம்மை பற்றி கதைக்க, சுண்டல் அண்ணா பெண்ணைப்பற்றி கதைச்சு தனது கருத்தை திணிக்கிறார். அதைத்தொடர்ந்து ஜம்மு பேபி நெடுக்ஸ் அண்ணாவைச் சீண்டி கருத்தை திசை திருப்பிறார்.

  • தொடங்கியவர்

இந்த திரியிலையும் நெடுக்ஸ் அண்ணா பாம்மை பற்றி கதைக்க, சுண்டல் அண்ணா பெண்ணைப்பற்றி கதைச்சு தனது கருத்தை திணிக்கிறார். அதைத்தொடர்ந்து ஜம்மு பேபி நெடுக்ஸ் அண்ணாவைச் சீண்டி கருத்தை திசை திருப்பிறார்.

இது அங்கை மட்டும் இல்லை களம் பூரா இருக்குது கண்டியளோ...! அங்கை கருத்து எழுதுறவையை விட வெட்டுறவை தொகை அதிகம்... காலப்போக்கிலை இன்னும் அதிகரிக்கலாம்.... எழுதுறவை தொகை குறைவதை ஊக்குவிக்கிறதுதானே மட்டுறுத்துறவையோட அடிப்படை வேலை...

யாழ்களம் எதை சாதிக்க நினைக்கிறது எழுதுகிறவர்கள் தொகையை குறைப்பதையா இல்லை இளைப்பாறு களத்தில் மட்டும் எழுதுவதை ஊக்குவிப்பதா...??? எனக்கு உண்மையாக இது புரியவில்லை... !

எனக்கு இனிமேல் பெரிசாக எதையும் இங்கை சாதிக்கலாம் எண்ட எண்ணமே இல்லை... வந்தமா எல்லரோடையும் சேந்து பம்பல் அடிச்சமா போனமா எண்டு இருப்பம்( இளைப்பாறு களத்திலையும் , உறவுகள் பகுதிலையும் மட்டும்தான்) .... அதை மட்டுறுத்துறவை வேணும் எண்டால் வெட்டி விளையாடட்டுமே.....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுவீங்க சொல்லுவீங்க ...இப்ப என்ன நீங்க நினைச்சதை எல்லாம் சுதந்திரமாக எழுதவேனும் அப்படித்தானே? அது சரியான கருத்தா பிழையான கருத்தா? அல்லது நாம் யாரை வேனும் என்றாலும் எப்படியும் எழுதலாம் அதை ஒருத்தரும் தட்டடிக்கேட்கக்கூடாது.

இதுதானா உங்களது கருத்துச்சுதந்திரம்? ஜயா மீடியாவுக்கு என்றொரு வரைபிலக்கிணம் இருக்கு அதைக்கடைப்பிடிக்க வேண்டியதுதான் நிர்வாகத்தினரின் பொறுப்பு.

கேள்விகளை யார் வேனுமென்றாலும் கேட்கலாம் ஆனால் அது உருப்படியானதா என்பதை முதலில் உறுதிப்படுத்தவேனும்.

  • தொடங்கியவர்

சொல்லுவீங்க சொல்லுவீங்க ...இப்ப என்ன நீங்க நினைச்சதை எல்லாம் சுதந்திரமாக எழுதவேனும் அப்படித்தானே? அது சரியான கருத்தா பிழையான கருத்தா? அல்லது நாம் யாரை வேனும் என்றாலும் எப்படியும் எழுதலாம் அதை ஒருத்தரும் தட்டடிக்கேட்கக்கூடாது.

தட்டி கேட்பியள்...!! யாராவது இளைச்சவன் கிடைச்சால் ஏறியும் மிதிப்பியள்.... பிரச்சினை பிழை பிடிப்பது இல்லை ஒரு பக்க சார்ப்பாக நடப்பது பற்றி... ஒரு சிலரின் கருத்துக்கள் மட்டும் எப்படி அடிக்கடி வெட்டி எறிய படுகிறது என்பது பற்றியது...

இப்போ நீங்களும் கூடத்தான்... களவுறவை மேலே தாக்கி எழுதி இருக்கிறீயள்... இல்லையா..?? ( அதை வெட்ட வேண்டும் என்பது அல்ல எனது வாதம்) அதை எப்படி தாக்கப்பட்டதா இல்லையா எண்று முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினையே...! வலைஞனுக்கு உங்களை பிடித்து இருந்தால் உங்களின் கருத்து கடாச பட மாட்டது... ஆனால் இப்படி தூயவனோ இல்லை நானோ எழுதி இருந்தால் கட்டாயம் வெட்டப்பட்டு இருக்கும்... ( அதாவது நீங்கள் மேலே எழுதிய தாக்குதல் போல ஒண்றை நாங்கள் எழுதி இருந்தால்) இதுக்கான உதாரனங்களை நான் களம் பூராக காட்ட முடியும்...!

ஏதாவது புரிந்தமாதிரி இருக்கிறதா...??? இல்லையா..??

இதுதானா உங்களது கருத்துச்சுதந்திரம்? ஜயா மீடியாவுக்கு என்றொரு வரைபிலக்கிணம் இருக்கு அதைக்கடைப்பிடிக்க வேண்டியதுதான் நிர்வாகத்தினரின் பொறுப்பு.

கேள்விகளை யார் வேனுமென்றாலும் கேட்கலாம் ஆனால் அது உருப்படியானதா என்பதை முதலில் உறுதிப்படுத்தவேனும்.

மீடியாவுக்கு வரைபிலக்கணம் எனபது ஒரு பக்க சார்பு கருத்துக்கள் தானா..??

இந்து சமயத்த பிரச்சாரம் செய்ய கூடாது என்பது களவிதி, ஆனால் அந்த மதத்தை கேவலப்படுத்த கூடாது என்பது களவிதி கிடையாது... ஏன் இப்படி... ??? நான் கிறிஸ்தவர்களையும் , இஸ்லாமியர்களின் நடவடிக்கைகள்ளையும் சாடி இங்கை கருத்து வைக்கும் சுதந்திரம் எனக்கு கிடையாது... அது எதனால்...??? இங்கை நிர்வாகம் என்ன சொல்ல வருகிறது...??? இந்துக்களின் நம்பிக்கை என்பது என்ன கேவலமானதா...?? இதுதான் மீடியா வரைபிலக்கணமோ...??

எல்லாம் புரிந்தவர் போல இங்கு வியாக்கியானம் செய்யும் நீங்களே பதில் சொல்லுங்களேன் பார்க்கலாம்...

Edited by தயா

எனக்கு இனிமேல் பெரிசாக எதையும் இங்கை சாதிக்கலாம் எண்ட எண்ணமே இல்லை... வந்தமா எல்லரோடையும் சேந்து பம்பல் அடிச்சமா போனமா எண்டு இருப்பம்( இளைப்பாறு களத்திலையும் , உறவுகள் பகுதிலையும் மட்டும்தான்) .... அதை மட்டுறுத்துறவை வேணும் எண்டால் வெட்டி விளையாடட்டுமே.....!

தயா அண்ணாவின் இறுதி முடிவை யாழ்கள மெம்பர்ஸ் சார்பாக பொன்னாடை போர்த்தி வரவேற்கிறேன். :) .........!!இன்றிலிருந்து எங்கள் அமைப்பின் பிரதிநிதியாக தயா அண்ணாவும் தனது சேவையை செய்வார் என எல்லோருக்கும் இத்தால் அறிய தருகிறேன் :lol: !!தயா அண்ணா சத்தியபிரமாணம் எடுக்க ரெடியோ!! :(

அப்ப நான் வரட்டே!!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுவீங்க சொல்லுவீங்க ...இப்ப என்ன நீங்க நினைச்சதை எல்லாம் சுதந்திரமாக எழுதவேனும் அப்படித்தானே? அது சரியான கருத்தா பிழையான கருத்தா? அல்லது நாம் யாரை வேனும் என்றாலும் எப்படியும் எழுதலாம் அதை ஒருத்தரும் தட்டடிக்கேட்கக்கூடாது.

இதுதானா உங்களது கருத்துச்சுதந்திரம்? ஜயா மீடியாவுக்கு என்றொரு வரைபிலக்கிணம் இருக்கு அதைக்கடைப்பிடிக்க வேண்டியதுதான் நிர்வாகத்தினரின் பொறுப்பு.

கேள்விகளை யார் வேனுமென்றாலும் கேட்கலாம் ஆனால் அது உருப்படியானதா என்பதை முதலில் உறுதிப்படுத்தவேனும்.

நண்பரே

***

இங்கே நாங்கள் சரியாக விவாதிக்கின்றோம் என்று சொல்லவரவில்லை. பிழையாகவும் இருக்கலாம். சிலவேளை நிர்வாகத்திற்குப் பண்பற்ற விதமாகவும் தேணலாம். ஆனால் எமக்குப் பதிலளிக்கின்ற அல்லது, யாருக்குப் பதில் எழுதினமோ அந்தக் கருத்தை விட்டு வைத்து விட்டு, எம் கருத்தை மட்டும் தூக்குவது எவ்வகை நியாயம் என்பது தான் புரியவில்லை. ராமசாமியைப் பற்றி எழுதினால் தூக்கப்படுகின்றது. ஆனால் ஆதாரம் ஏதும் இணைக்கமால் சிவன் கெட்டவன், இராமன் பொறுக்கி என யாரும் எழுதினால் அது விட்டு வைக்கப்படுகின்றது.

ராமசாமி தாசியிடம் போனவர் என்றோ, அல்லது மனைவியை அப்படிச் சொன்னவர் என்றோ திராவிடம் பற்றிக் கதைக்கின்றவர்கள் ஏற்கனவே இங்கே ஒப்புக்கொண்ட ஒன்று தான். ஆனால் அதைப் பற்றி எழுதினால் உடனே தூக்கப்படுகின்றது. ஆதாரம் வையுங்கள் என்கின்றார். இதே கேள்வியை எம்மை நோக்கி, எம் நம்பிக்கை நோக்கி எழுதுபவர்கள் மீது கேட்பதில்லை. சொல்லப் போனால் வலைஞனும் சரி, மோகன் அண்ணாவும் சரி கடவுள் பக்தியில் தற்போது நாட்டமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அல்லது காட்டிக் கொள்கின்றார்கள்.

எனவே இச் சந்தர்ப்பத்தில் அவர்களிடம் அறிய விரும்புவது என்னவென்றால் தாங்கள் யாழ்களத்தில் ராமசாமி என்ற மேல்குலத்து நாயக்கரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதைத் தான் அனுமதிக்க விரும்புகின்றீர்களா? என்பது பற்றித் தான்.

ஏன் என்றால் கடவுள் பற்றிய பரப்புரை செய்யக்கூடாது, அது பற்றி எழுதக் கூடாது என்று சொன்னவர்கள், ராமசாமியின் பிறந்ததினத்துக்கு வாழ்த்துப் போட்டு ஐமாய்கின்றார்கள். இதற்காக ராமசாமியும், கடவுளும் ஒன்று என்று நான் வாதிடுவதாகச் சிலர் பெருமிதமடையக்கூடும். இந்து மதத்தில் ஒரு கோட்பாடு உண்டு. ஒருவன் மரித்தால் அச் சவம் சிவமாகின்றது என்று. அதனால் தான் வருடாவருடம் அந்தநாளை அந்தியெட்டிக் கிரிகை செய்து வணங்குகின்றோம்.

ராமசாமி சிவமாகியிருப்பாரோ என்பது எனக்குச் சந்தேகமே.***

********************

வலைஞனின் கட்டுப்பாடு, இறுக்கமான செயற்பாடு, போன்றவற்றில் நன்மதிப்பு இருக்கின்றது. ஆனால் நடுநிலமையில் தான் நம்பிக்கையில்லை.

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

மதம் சார்ந்த விடயங்களில் யாழ் கள நிர்வாகம் நடுநிலைமையோடு நடப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

பார்ப்பனியத்தை எதிர்க்கின்ற பூனைக்குட்டியும் கருத்தாடல் பண்பை மீறினார் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டு, இரண்டு நாட்கள் தடை செய்யப்பட்டிருந்தார்.

மதப் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என்பது சரியான ஒரு முடிவுதான். இந்த முடிவு அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

அதே வேளை மதங்களை ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்துவதும் சரியானதே. மதம் பற்றிய விவாதங்கள் நடைபெறுவது ஒரு கருத்துக் களத்தில் தவிர்க்க முடியாதது.

தந்தை பெரியார் பற்றி விவாதிப்பதையும் யாழ் களம் அனுமதித்துள்ளது. யாழ் களத்தில் தந்தை பெரியாரை விமர்சித்து எழுதப்பட்ட பல கட்டுரைகள் உள்ளன. அது பற்றி எங்களுடைய கருத்துக்களையும் நாங்களும் கூறி உள்ளோம்.

ராமனைப் பற்றியோ, சிவனைப் பற்றியோ நாம் ஒரு போதும் இல்லாது பொல்லாததை கூறவில்லை. இந்து மதத்தின் புராணங்கள் சொல்வதைக் கூறித்தான் நாம் விவாதிக்கிறோம். அவைகள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படுகின்றன

அதே போன்று தந்தை பெரியார் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீங்கள் தரும் போது அவைகளும் யாழ் களத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

நீங்கள் மதம் சார்ந்த நாட்களை கொண்டாடி வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள்: நாம் பெரியார் பிறந்தநாளை நினைவு கூருகிறோம்.

இரண்டுமே யாழ் களத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

பண்பற்ற முறையில் கருத்துக்களை தருவதும், பொய்யான அவதூறுகளை எழுதுவதுமே யாழ் களத்தில் அனுமதிக்கப்படவில்லை.

என்னுடைய பார்வையில் யாழ் கள நிர்வாகம் சரியான முறையில்தான் மதம் சார்ந்த விவாதங்களில் நடந்து கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சபேசன்

உங்களுக்குச் சார்பாக வருகின்ற கருத்துக்களுக்கு நீங்கள் ஆமாம் போடலாம். அல்லது அதை ஆதரிக்கலாம். அது உங்களின் பிரச்சனை.

ராமசாமி தாசி வீட்டிற்குப் போவதாகச் சொன்னது பெரியார் பற்றிய படம். ராமசாமி தன் மனைவியைத் தாசி என்று சொன்னதை ஒத்துக் கொண்டது தாங்கள். அந்தக் கருத்துக்கள் இப்போதும் யாழ்களத்தில் இருக்கின்றன. ஆனால் இங்கே நான் எழுதியவுடன் வலைஞன் ஓடி வந்து தணிக்கை செய்கின்றார். இது தான் அவரின் நடுநிலமையா? இதையும் அவர் தணிக்கை செய்யக் கூடும். அது அவரின் திறமைப் பட்டியலுக்கள் இட வேண்டியது.

சபேசனே, ராமசாமி தன் மனைவியைத் தாசியாக நண்பர்களை வைத்து அவமானப்படுத்தியதை ஒத்துக் கொண்டது.

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

தாங்கள் சிவனையோ, விஸ்ணுவையோ அல்லது இதர இந்து மதத்தைப் பற்றிச் சொன்ன எந்த விடயங்களுக்கு ஆதாரம் காட்டிச் சொன்னீர்கள். நீங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் காட்டினீர்களா? ஆனால் நீங்கள் களத்தில் சொன்ன ஒருவிடயத்தை நாம் திருப்பிச் சொல்லுகின்றபோது அதை ஆதாரமில்லை எனத் தணிக்கை செய்கின்றார்கள்.

சமீபத்தில் தாங்கள் முஸ்லீம்மக்கள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் நண்பர் இளங்கோ இந்து மதம் பார்்ப்பானி என்று ஏதோ வந்து சம்பந்தமில்லாமல் எல்லாம் எழுதினார். அதற்கு இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இப்போதும் அக்கருத்து இருக்கின்றது. அதை வேறு நான் சுட்டிக்காட்டியபோது என் கருத்தை வலைஞன் தணிக்கையும் செய்து கொண்டார்.

அவ்வாறே பூனைக்குட்டிக்கு 3 நாள் தடை பற்றிச் சொன்னீர்கள். பூனைக்குட்டி மீது தடை நடவடிக்கை எடுப்பது இது ஒன்றும் முதல் தடவையல்ல. எனவே அது பொருத்தமான விளக்கம் இல்லை.

சபேசனாகிய தாங்கள் எழுதிய பல கருத்துக்கள் ஆதரமற்ற பண்பற்ற கருத்துக்கள் நிறையவே களம் முழுக்க உள்ளன. எனவே பண்பற்ற என்ற வசனத்தை நீங்கள் சுயபரிசேதனைக்குப் பாவிப்பது சாலச் சிறந்தது.

Edited by தூயவன்

நான் பண்பற்ற முறையில் கருத்துக்கள் எழுதியதாக எனக்கு நினைவில்லை.

கருத்துக்களை காட்டமாக தெரிவிப்பது வேறு. பண்பற்ற முறையில் தெரிவிப்பது வேறு.

நான் இங்கே எந்த ஒரு பொய்யான கற்பனையான தகவல்களை தந்ததும் இல்லை.

என்னுடைய சொந்தக் கருத்துக்களுக்கு ஆதாரம் தேவையில்லை. காரணம்தான் தேவை. நான் என்னுடைய கருத்துக்களை காரணங்களோடுதான் தந்திருக்கிறேன்.

செய்திகளையோ தகவல்களையோ தருகின்ற போது, அவைகளுக்கான ஆதரங்களையோ அல்லது தர்க்கரீதியான காரணங்களையோ தந்திருக்கிறேன்.

அத்துடன் ஒரே கருத்தை பண்பான முறையிலும் தெரிவிக்க முடியும். பண்பற்ற முறையிலும் தெரிவிக்க முடியும்.

இங்கே நீக்கப்பட்ட உங்களுடைய கருத்துக்களை நீங்கள் வேறு வார்த்தைகளில் எழுதி இங்கே நீக்கப்படாது இடம்பெறச் செய்ய முடியும். அந்த யுக்தி உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்பிடித்தான் தலைகீழாநிண்டு கத்தினாலும் ஒண்டும் பலிக்கப்போறதில்லை ஏனெண்டால் எங்கடை பெரிசுகள்(நிர்வாகம்)கொஞ்ச பதில் கருத்துக்களை கைவசம் வைச்சுக்கொண்டு ஆக்களோடை :wub: ஆக்களாய்த்திரியினம் பண்ணியில் பண்ணிப்பாருமன்.

Edited by குமாரசாமி

சமீபத்தில் தாங்கள் முஸ்லீம்மக்கள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் நண்பர் இளங்கோ இந்து மதம் பார்்ப்பானி என்று ஏதோ வந்து சம்பந்தமில்லாமல் எல்லாம் எழுதினார்.

தூயவன் சொன்ன தலைப்புக்கான இணைப்பு இதாகத்தான் இருக்கவேண்டும்:

http://www.yarl.com/forum3/index.php?showt...ம்கள்

இத் தலைப்பின் கீழ் இளங்கோ எழுதியது தலைப்புக்கும், தலைப்பின் நோக்கத்துக்கும் அவசியமற்ற கருத்துத்தான் - வலிந்த திணிப்பு. அதனை உடனேயே நீங்கள் கருத்துக்கள நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்திருக்கலாம். மட்டுறுத்துனர்கள் இதுபற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இருந்தாலும், இத்தலைப்பைத் தவறவிட்டது எமது தவறுதான்.

நாம் முன்னரே குறிப்பிட்டதுதான் - அனைத்துக் கருத்துக்களையும் மட்டுறுத்துனர்கள் படிக்க முடிவதில்லை. முடிந்தளவு அனைத்தையும் வாசித்து மட்டுறுத்தவே முயற்சிக்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் கருத்துக்கள உறவுகள் உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாக கருத்துக்கள்/பதிவுகள்/ஆக்கங்கள் வருகிறபோது அதை கருத்துக்கள நிர்வாகத்துக்கு முறைப்பாடு (report) முறை மூலம் அறியத்தரலாம். அப்படி அறியத் தருகிறபோது அந்தத் தலைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

அதேநேரத்தில் கருத்துக்கள உறவுகளால் சுட்டிக்காட்டப்படுகிற அனைத்து கருத்துக்களையும் கண்ணை மூடிக்கொண்டு மட்டுறுத்தல் செய்யப்படமாட்டாது. அவை உண்மையில் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணானவையா என்பதை ஆராய்ந்தே மட்டுறுத்தல் செய்யப்படும். அப்படி மட்டுறுத்தல் செய்யவேண்டியதில்லை என்கிறபோது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்த கருத்துக்கள உறவுகளுக்கு தனிமடலில் காரணம் சொல்லப்படுவதுண்டு.

இப்படித்தான் பல தலைப்புகளை நாம் உடனுக்குடன் தணிக்கை செய்யமுடிகிறது. கருத்துக்களத்தில் சில உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்தவகையில் கருத்துக்கள நிர்வாகத்துக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு நாம் இந்த நேரத்தில் கருத்துக்கள நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறோம்.

கருத்துக்களத்தில் குறிப்பிட்ட காலகட்டங்களில் சில தலைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதுண்டு. குறிப்பாக, இப்்போது இராமர்பாலம், திராவிடம் (பெரியார்) தொடர்பான தலைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும், அந்தந்தக் காலகட்டங்களில் எது அதிகம் விவாதிக்கப்படுகிறதோ அது தொடர்பான தலைப்புகளில் கருத்துக்கள நிர்வாகத்தின் கவனம் அதிகம் இருக்கும். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டது போன்ற தலைப்புகள் தவறவிடப்படுகின்றன. எனவே, இவற்றை நீங்கள் உடனுக்குடன் முறைப்பாடு முறை மூலம் சுட்டிக்காட்டலாம்.

அதேபோல், சில கருத்துக்கள உறவுகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் காணப்படுவார்கள். அவர்கள் எழுதும் கருத்துக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். காரணம், கருத்துக்கள உறவுகளில் பலர் பல சந்தர்ப்பங்களில், குறிப்பாக சர்ச்சையான தலைப்புகளில் கருத்தை மேலோட்டமாக வாசித்து உணர்ச்சிவசப்பட்டு கருத்து வைப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு தலைப்பில் தொடங்கும் இந்தத் தன்மை பிறகு எல்லாத் தலைப்புக்கும் பரவும் நிலைதான் அதிகம் காணப்படுகிறது. அதனால், அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களாகிறார்கள். உதாரணத்துக்கு, இந்தத் தலைப்பில் கூட உணர்ச்சிவசப்பட்டே பல கருத்துக்கள வைக்கப்பட்டிருக்கின்றன.

தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் (நேரடியாக, மறைமுகமாக), சீண்டல் கருத்துக்கள் (நேரடியாக, மறைமுகமாக) என்பவற்றை கருத்துக்களத்தின் அன்றாட கருத்துக்களையும், விவாதங்களையும், கருத்துக்கள உறுப்பினர்களிடையேயான கருத்தாடல் முறைகளையும் விளங்கிக்கொண்டதன் அடிப்படையிலேயே இனங்காண்கிறோம். சிலநேரங்களில் சிலவற்றை (மறைமுகமாக சொல்லப்படுபவற்றை) எளிதில் வகைப்படுத்த முடியாது. மற்றும், தலைப்பு திசைமாறிச் செல்வதற்கும், ஒரு தலைப்புள் வலிந்து ஒரு விடயத்தை திணிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. தலைப்பு திசைமாறிச் செல்கிற பல சந்தர்ப்பங்களில், கருத்துக்கள நிர்வாகம் அறிவுறுத்தலை மட்டுமே செய்துள்ளது - கருத்துக்களை நீக்குவதில்லை.

தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பு தொடர்பாக ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிற போதே கருத்துக்கள நிர்வாகம் ஆதாரத்தை (முக்கியமாக) வேண்டிநிற்கிறது.

அதேபோல தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த தலைவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கிறபோது மேலோட்டமாக - எழுந்தமானமாக கருத்துக்களை முன்வைக்காமல், சரியான தகவலுடன் முன்வைப்பதே சிறந்தது. மதங்களைப் பொறுத்தவரையில் (அது எந்த மதமாகவும் இருக்கலாம்) அவற்றை விமர்சிக்கிற போதும் கண்ணியத்தோடு விமர்சிப்பதே வரவேற்கத்தக்கது. இவற்றை பொறுத்தவரையில் கருத்துக்கள நிர்வாகத்துக்கு ஆதாரங்கள் தேவையில்லை - அது உங்கள் கருத்தாடலுக்கு வலுச்சேர்ப்பதற்கு உங்களுக்குத் தேவையானது. கருத்துக்களத்தைப் பொறுத்தவரை கண்ணியமான கருத்தாடலே தேவை.

கருத்துக்கள நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கக்கூடாது என்று இல்லைத்தானே. அவர்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அவை கருத்துக்கள மட்டுறுத்தலின் போது வெளிப்படுவதில்லை. அப்படி அவை வெளிப்பட்டிருந்தால், யாழ் கருத்துக்களத்தில் பல கருத்தாடல்கள் நிகழ்ந்திருக்க முடியாது.

உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை மறுத்துக் கருத்துச் சொல்ல மற்றையவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அதேபோல, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் கருத்துக்களை தணிக்கை செய்யவும் நீக்கவும் கருத்துக்கள நிர்வாகத்துக்கு உரிமை இருக்கிறது.

கருத்துக்கள நிர்வாகத்தின் மீது (தணிக்கை தொடர்பில்) குறைகளை முன்வைப்பவர்களில் பலர் தமது கருத்து தணிக்கை செய்யப்படுகிறபோதோ அல்லது நீக்கப்படுகிறபோதோ மட்டும் தான் குறைகளை முன்வைக்கிறார்கள். அதேபோல, என்னுடைய கருத்து நீக்கப்பட்டது என்பதைவிட, என்னை எழுதத் தூண்டிய கருத்து நீக்கப்படவில்லை என்பதே ஆதங்கமாக இருக்கிறது. உண்மையில் கருத்துக்கள நிர்வாகத்தின் பக்கசார்பு தொடர்பில் அக்கறை உள்ளவர்கள் எதிர்க் கருத்தாளரின் கருத்து தணிக்கை செய்யப்படுகிறபோதும் அல்லது நீக்கப்படுகிறபோதும் குரல் தரலாம். எதிர்க்கருத்தாளரின் கருத்து நீக்கப்பட்டால் அமைதியாக இருப்பதும், எனது கருத்து நீக்கப்பட்டால் கோபப்படுவதும் வழமையாக நடக்கிற ஒன்றுதான்.

உங்கள் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவது அல்லது நீக்கப்படுவது தொடர்பில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படுகிறபோது தனிமடலில் நட்போடு தொடர்புகொள்ளுங்கள். விளக்கம் தருகிறோம். பண்பற்ற முறையில் தனிமடலில் எம்மை அணுகுகிறபோதும், கருத்துக்கள நிர்வாகம் விளக்கம் தருகிறபோது அதை உதாசீனப்படுத்துவது போல் பதிலனுப்புகிறபோதும் - எம்மாலும் (கருத்துக்கள நிர்வாகத்தாலும்) ஒன்றும் செய்யமுடியாது.

அடுத்து, முகக்குறிகள் (Emoticons) தொடர்பில் தயா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முன்பும் சில உறுப்பினர்கள் எமக்கு அறியத்தந்திருந்தார்கள். முகக்குறிகள் எமது கருத்துக்கு உணர்வையூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அதுவே சில நேரங்களில் கருத்தை மேவியாக இருக்கிறது. குறிப்பான தீவிரமாக விவாதம் நடக்கிற ஒரு தலைப்பில் சில முகக்குறிகள் எதிர்க்கருத்தாளரை சீண்டுவதற்காகவும், நக்கல் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை காலமும் இந்தவகை முகக்குறிகளை நாம் தணிக்கை செய்ததில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பலர் கவனித்திருப்பீர்கள் சில முகக்குறிகள் காணாமல் போயிருக்கும். இன்னும் சில முகக்குறிகளை சரியான வழிகாட்டலுடன் நீக்குவதற்கும், புதியவற்றை சேர்ப்பதற்கும் முயற்சிக்கிறோம். இது தொடர்பில் கருத்துக்கள உறவுகளின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.

வேறு சிலவற்றையும் குறிப்பிட எண்ணியிருந்தேன். நேரம் ஒத்துழையாததால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன். தொடர்ந்தும், கருத்துக்கள நிர்வாகம் தொடர்பாக குறைகளை முன்வைக்க விரும்புகிற கருத்துக்கள உறவுகள், தயவுசெய்து உணர்ச்சிவசப்படாமல் - கருத்துக்களை உள்வாங்கிவிட்டு - கண்ணியமான முறையில் முன்வையுங்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கதைச்சு பிரயோசனமில்லை. Take it or leave it தான் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.