Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 FEB, 2024 | 06:12 PM
image

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது.

இன்றளவில் நியூசிலாந்து வட அமெரிக்கா வரையில் இலங்கை உலகின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.  

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களுக்கான நிதியம், அலுவலகம், அலுவலகச் சட்டமூலம் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.  

அதற்கமைய வெளிநாடு வாழ். இலங்கையர்களுக்கான அலுவலகம் கடந்த வருடத்தின் இறுதியில் கொழும்பு பழைய சார்டட் கட்டடத்தில் அமைச்சரவை அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையர்கள் இதுவரையில் 5 அலையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2.5 - 3 மில்லியன் வரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதாக அண்ணளவாக கணக்கிட்டுள்ளோம். அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர்.  

தொழிலாளர்கள் பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன. ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சரியான வகையில் இல்லை. ஆனால், விரைவில் மற்றைய தூதரங்களைத் தொடர்பு கொண்டு இவர்கள் பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க முயற்சிக்கிறோம்.

அதற்காக அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் சில அடிப்படை தகவல்களை மாத்திரம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.  

இந்த தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதோடு, இந்த அலுவலகம் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களையும் தாயகத்தையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயற்படும் என்று தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177149

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு வேலைகள் மிக அவசரமாக மக்களுக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த கணக்கெடுப்பை விழுந்தடித்து செய்வதின் அவசியம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

எவ்வளவு வேலைகள் மிக அவசரமாக மக்களுக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த கணக்கெடுப்பை விழுந்தடித்து செய்வதின் அவசியம் என்ன?

காணமல் போனோர் அனைவரும்  வெளிநாட்டில் உள்ளனர்..இதே..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

IMG-5893.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களையும் கணக்கெடுப்பினமோ ...அவர்களின் பிள்ளை குட்டி,பேரப்பிள்ளை எல்லாரையும் சேர்த்தோ.....
அறிக்கை விடும் பொழுது விளக்கமாக விட வேண்டும் புலம்பெயர்ந்தவர் என்று போட்டு மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்புக்கு போனவையும் புலம் பெயர்ந்தவன் என்று சொல்லினம் ...அவன் 3 வருசத்தில் திரும்பி வருவான் தானே..

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, putthan said:

மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்புக்கு போனவையும் புலம் பெயர்ந்தவன் என்று சொல்லினம் ...அவன் 3 வருசத்தில் திரும்பி வருவான் தானே..

செய்தியில் விளக்கமாக இருக்கே....

7 hours ago, ஏராளன் said:

2.5 - 3 மில்லியன் வரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதாக அண்ணளவாக கணக்கிட்டுள்ளோம். அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர்.  

தொழிலாளர்கள் பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன. ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சரியான வகையில் இல்லை.

Edited by மலையான்

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா உருட்டு….

சிறீலங்கா கடவுச்சீட்டுடன் ( இரட்டைக் குடியுரிமையும்) மாத்திரமே உள்ளக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

காணமல் போனோர் அனைவரும்  வெளிநாட்டில் உள்ளனர்..இதே..

2009 ல் வன்னியில் உள்ள சனத்தொகையை பிழையாக சொன்னது அரசு. இப்போ வெளிநாட்டில் உள்ளவர்களை கணக்கெடுத்து எப்படி சமப்படுத்துவார்கள்?(காணாமல் போனோரை)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

2009 ல் வன்னியில் உள்ள சனத்தொகையை பிழையாக சொன்னது அரசு. இப்போ வெளிநாட்டில் உள்ளவர்களை கணக்கெடுத்து எப்படி சமப்படுத்துவார்கள்?(காணாமல் போனோரை)

சாட்டுச் சொல்லித் தப்புறவனுக்கு ..இதெல்லாம் சகஜமப்பா...அதுதானே பிரகடனம் வருகுது....சடைஞ்சுவிட்டால் போச்சு..😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

2009 ல் வன்னியில் உள்ள சனத்தொகையை பிழையாக சொன்னது அரசு. இப்போ வெளிநாட்டில் உள்ளவர்களை கணக்கெடுத்து எப்படி சமப்படுத்துவார்கள்?(காணாமல் போனோரை)

நீங்கள் முதலில் உங்களை பதிவு செய்யுங்கள். உங்கள்கேள்விக்கும் பதில் கிடைக்கும்.

 உங்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்கிடைக்கும். நிச்சயமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதன்மூலம் எமது தமிழர்களின் போராட்டத்தில் ஒரு முன்னேற்றம் ஏட்படும்தானே.

இலங்கை அரசசு ஒரு நல்ல நோக்கத்தில் செய்யும் வேலைக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம். இதட்கு ஒரு தமிழரைதான் பொறுப்பாக நியமித்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

நாங்கள் பதிவு செய்யவில்லை என்றால் எப்படி கண்க்கு எடுப்பார்கள்?? மேலும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத நாங்கள்  எப்படி வாக்கு அள்ளிக்க முடியும்?? வெளிநாட்டில் இறந்துபோனவர்களையும் பதிய வேண்டுமா?? மாகாண சபை தேர்தல் வைக்க பணம் இல்லை  ஆனால் இப்படி ஒரு சதத்திற்கும் பிரயோஜனம் அற்ற தேவையில்லாத வேலைகள் செய்ய பணம் உண்டு   இன்னும் சில மாதங்களில் ஒரு யூரோ   500 ருபாய் வரலாம்” 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில்.. இலங்கை பிரஜைகள் அல்லாதோரிடம் இலங்கையில் பிறந்தார்கள் என்ற ஒற்றைக்காரணத்தை காட்டி தகவல் திரட்ட சொறீலங்கா அதிகாரிகளுக்கு வளர்ந்த நாட்டு தகவல் பாதுகாப்புச் சட்டங்கள் இடமளிக்காது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிக நுட்பமாக முற்றாக புலம்பெயர்ந்தோரின் காணிகள்,  பிறர் பெயரில் அவர்கள் இலங்கையில் வைப்பிட்டிருக்கும் பணம் போன்றவற்றை குறி வைக்க போகிறார்கள் போல இருக்கிறது.

இங்கிருந்தபடி அங்கிருப்பவர்கள் மூலம் சொத்துக்களை பராமரிப்பவர்களிடமிருந்து சுவீகரிக்கும் நிலை வரலாம் என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

இந்த திட்டம் இலங்கை பிரசைகள் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு என்று நினைக்கிறேன்.
தங்கள் நாட்டு பிரசைகள் வேறுநாட்டில் பணம் சொத்துக்கள் வைத்திருப்பதை, சொந்த நாட்டிலேயே அரசுக்கு தெரியாமல் பணம் வைத்திருப்பதை எல்லாம்  பல வருடங்களுக்கு முன்பே பல நாடுகள்  கட்டுபடுத்த தொடங்கி விட்டன.  யுகே மற்றும் ஒரு சில நாடுகளில் ஒருவர் இரண்டு வேலை செய்தால் (உதாரணத்திற்கு) ஒரு வேலை வருமானத்தை அரசுக்கு கணக்குகாட்டாமல் இன்னொரு வங்கிகணக்கில் வைத்திருக்க முடியும் என்றார்கள்.  இது உண்மையா என்பது தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

நாங்கள் பதிவு செய்யவில்லை என்றால் எப்படி கண்க்கு எடுப்பார்கள்?? மேலும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத நாங்கள்  எப்படி வாக்கு அள்ளிக்க முடியும்?? வெளிநாட்டில் இறந்துபோனவர்களையும் பதிய வேண்டுமா?? மாகாண சபை தேர்தல் வைக்க பணம் இல்லை  ஆனால் இப்படி ஒரு சதத்திற்கும் பிரயோஜனம் அற்ற தேவையில்லாத வேலைகள் செய்ய பணம் உண்டு   இன்னும் சில மாதங்களில் ஒரு யூரோ   500 ருபாய் வரலாம்” 🤣🤣

அதட்குத்தான் உங்களை பதிவு செய்ய சொல்லுகிறார்கள்.

நீங்கள் ரெட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளலாம். அல்லது இலங்கையில் பிறந்தவர் என்பதை ஆதாரமாக வைத்து உங்கள் ஆலோசனையை கூறலாம் .

இறந்தவர்களை பற்றி பேசவேண்டிய அவசியம் இருக்காது.

விரைவில் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் வர இருக்கின்றன. பணமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

அந்தளவுக்கு யூரோ அதிகரிக்க சந்தர்ப்பமில்லை. 
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.