Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

44 நிமிடங்களுக்கு முன்னர்

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் இறுதி செய்து வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.

திமுக 21 இடங்களில், அதிமுக 33 இடங்களில், பாஜக 20 இடங்களில் தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அறிவிக்கப்படுள்ள வேட்பாளர்களில் தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் 10 வேட்பாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

கே. அண்ணாமலை

பட மூலாதாரம்,FACEBOOK

தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த சில மாதங்களாகவே, பேச்சு அடிபட்டு வந்தது. நான் போட்டியிட மாட்டேன் என முதலில் கூறிய அண்ணாமலை, தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.

அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் கோவையில்தான் நடைபெற்றது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை.

கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக கருதுகிறது.

சிங்கை ராமச்சந்திரன்

கோவையில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் இவர், முதல் முறை வேட்பாளர். தேர்தல் களத்துக்குப் புதிது என்றாலும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

அதிமுகவின் இளைஞர் அணி முகங்களில் பிரபலமான இவர், கோவை அதிமுக வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.

கோவையில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “ஐ அம் வெயிட்டிங்” என்று பதிவிட்ட அவர், சமூக ஊடக தளங்களில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டு பிரபலமானவர்.

பாஜகவிலிருந்து களமிறங்கும் இளம் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட இவரே சரியானவர் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகக் குறிப்பாக இருந்தது. எனவே அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித் தலைமை.

சென்னை, அவர் ஏற்கெனவே போட்டியிட்டுள்ள நகரம். பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, சென்னை நகர மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

தடாலடியான அரசியல் பாணி இல்லாதவர், சாதி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவிக்காதவர்.

மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் நகர்ப்புற மக்களுக்கான சரியான வேட்பாளராக இருப்பார் என்று பாஜக கருதியதால் தென் சென்னை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய பிரபாகர்

பட மூலாதாரம்,DMDK

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் இருந்து தேமுதிக சார்பாகப் போட்டியிடுகிறார்.

விஜயகாந்த் மறைந்த சில மாதங்களில் நடைபெறும் தேர்தலில், அவர் பிறந்த ஊரான ராமானுஜபுரம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏ சி சண்முகம்

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடுகிறார்.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த அவர், தன்னை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதிமுகவில் இருந்து பாஜக அணிக்கு வந்த அவருக்கு இந்த முறை சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்திருப்பது பாஜகவுக்கு வெற்றி தோல்வியைத் தாண்டி சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள் நடத்தி வரும் ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

கனிமொழி

கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆதரவுடன், தூத்துக்குடிக்கான திட்டங்கள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில், வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி டெல்லி வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.

கடந்த தேர்தலில் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். அவர் தாயாரது சமூகமும் தூத்துக்குடியில் அவர் நிறுத்தப்படுவதற்கு ஒரு காரணம்.

நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன்.

பாஜகவுக்கு மாநிலத்தில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரில் இவரும் ஒருவர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்திருந்தாலும், நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற முடிந்தது.

இதற்கு தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்கு முக்கியக் காரணம்.

ஆ. ராசா

தனித்தொகுதியான நீலகிரியில் ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.ராசா தற்போது மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்ற ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டத்தில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

பாஜக அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடும் என்பதும் அந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே.

தனது கோட்டையாக இருக்கும் நீலகிரியில் பாஜக வேட்பாளர் ஒருவரை வீழ்த்துவது கடினமானதாக இருக்காது என்பதால், அங்கு நன்கு பரீட்சயமான ஆ.ராசாவையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திமுக.

செல்வ கணபதி

இவர் 1991இல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின் 1999இல் அதிமுகவின் சார்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2008ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கட்சியின் முதல் கட்டத் தலைவர்கள் பட்டியலில் இவர் இல்லாதபோதும், சேலம் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர்.

அவர் மீதிருந்த ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வ கணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து சேலத்தில் அதிமுக சார்பாக 31 வயது புதுமுகமான விக்னேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி தொகுதியில் 1998இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தத் தொகுதியில் சமூக செல்வாக்கையும் பெற்றுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகி ஆவார்.

https://www.bbc.com/tamil/articles/cyez76dzw08o

  • Replies 437
  • Views 27.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வைரவன்
    வைரவன்

    நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

  • ரசோதரன்
    ரசோதரன்

    Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

  • நிழலி
    நிழலி

    மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்

பாமக கட்சி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த வேட்பாளரை மாற்றி விட்டு, இப்பொழுது அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணியை புதிய வேட்பாளராக அறிவித்திருக்கின்றார்கள்.

பாஜக கட்சியினரின் அழுத்தமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. பாஜக தரப்பிலிருந்து அவர்களின் தமிழ்நாட்டு தலைவர்களும், பிரபலமானவர்களும் போட்டியிடும் அதே வேளையில் பாமக தரப்பிலிருந்து பாமக தலைவர்கள் எவரும் போட்டியிடாதது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்று பாஜக நினைத்திருக்கக்கூடும்.

வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று காங்கிரஸையும், திமுகவையும் பாஜக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. பாஜகவின் கூட்டணியும் இன்று அதே பாதையில் தான்...........

2 hours ago, ஏராளன் said:

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்
44 நிமிடங்களுக்கு முன்னர்

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் இறுதி செய்து வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.

திமுக 21 இடங்களில், அதிமுக 33 இடங்களில், பாஜக 20 இடங்களில் தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அறிவிக்கப்படுள்ள வேட்பாளர்களில் தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் 10 வேட்பாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

கே. அண்ணாமலை

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த சில மாதங்களாகவே, பேச்சு அடிபட்டு வந்தது. நான் போட்டியிட மாட்டேன் என முதலில் கூறிய அண்ணாமலை, தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.

அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் கோவையில்தான் நடைபெற்றது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை.

கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக கருதுகிறது.

சிங்கை ராமச்சந்திரன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

கோவையில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் இவர், முதல் முறை வேட்பாளர். தேர்தல் களத்துக்குப் புதிது என்றாலும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

அதிமுகவின் இளைஞர் அணி முகங்களில் பிரபலமான இவர், கோவை அதிமுக வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.

கோவையில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “ஐ அம் வெயிட்டிங்” என்று பதிவிட்ட அவர், சமூக ஊடக தளங்களில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டு பிரபலமானவர்.

பாஜகவிலிருந்து களமிறங்கும் இளம் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட இவரே சரியானவர் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

தமிழிசை சௌந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகக் குறிப்பாக இருந்தது. எனவே அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித் தலைமை.

சென்னை, அவர் ஏற்கெனவே போட்டியிட்டுள்ள நகரம். பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, சென்னை நகர மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

தடாலடியான அரசியல் பாணி இல்லாதவர், சாதி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவிக்காதவர்.

மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் நகர்ப்புற மக்களுக்கான சரியான வேட்பாளராக இருப்பார் என்று பாஜக கருதியதால் தென் சென்னை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய பிரபாகர்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,DMDK

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் இருந்து தேமுதிக சார்பாகப் போட்டியிடுகிறார்.

விஜயகாந்த் மறைந்த சில மாதங்களில் நடைபெறும் தேர்தலில், அவர் பிறந்த ஊரான ராமானுஜபுரம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏ சி சண்முகம்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடுகிறார்.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த அவர், தன்னை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதிமுகவில் இருந்து பாஜக அணிக்கு வந்த அவருக்கு இந்த முறை சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்திருப்பது பாஜகவுக்கு வெற்றி தோல்வியைத் தாண்டி சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள் நடத்தி வரும் ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

கனிமொழி

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆதரவுடன், தூத்துக்குடிக்கான திட்டங்கள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில், வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி டெல்லி வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.

கடந்த தேர்தலில் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். அவர் தாயாரது சமூகமும் தூத்துக்குடியில் அவர் நிறுத்தப்படுவதற்கு ஒரு காரணம்.

நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன்.

பாஜகவுக்கு மாநிலத்தில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரில் இவரும் ஒருவர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்திருந்தாலும், நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற முடிந்தது.

இதற்கு தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்கு முக்கியக் காரணம்.

ஆ. ராசா

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

தனித்தொகுதியான நீலகிரியில் ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.ராசா தற்போது மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்ற ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டத்தில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

பாஜக அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடும் என்பதும் அந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே.

தனது கோட்டையாக இருக்கும் நீலகிரியில் பாஜக வேட்பாளர் ஒருவரை வீழ்த்துவது கடினமானதாக இருக்காது என்பதால், அங்கு நன்கு பரீட்சயமான ஆ.ராசாவையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திமுக.

செல்வ கணபதி

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

இவர் 1991இல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின் 1999இல் அதிமுகவின் சார்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2008ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கட்சியின் முதல் கட்டத் தலைவர்கள் பட்டியலில் இவர் இல்லாதபோதும், சேலம் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர்.

அவர் மீதிருந்த ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வ கணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து சேலத்தில் அதிமுக சார்பாக 31 வயது புதுமுகமான விக்னேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி தொகுதியில் 1998இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தத் தொகுதியில் சமூக செல்வாக்கையும் பெற்றுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகி ஆவார்.

https://www.bbc.com/tamil/articles/cyez76dzw08o

இதில் கனிமொழி, ஆ.ராசா, செல்வ கணபதி ஆகியோருக்கு தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.  மிகுதி பேரில் யார் டெபாசிட் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவலாம்.

... விஜயகாந்தின் மகனைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

... விஜயகாந்தின் மகனைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கு. 

என‌து விருப்ப‌ம் அவ‌ர் வெல்ல‌னும் என்று.............தேமுதிக ஒரு இட‌ங்க‌ளில் த‌ன்னும் வெல்ல‌னும் க‌ப்ட‌னின் முக‌த்துக்காக‌ அவ‌ரின் ந‌ல்ல‌ குன‌த்துக்காக‌........................

  • கருத்துக்கள உறவுகள்

04-5-750x375.jpg

நடிகை ராதிகாவை விருதுநகர் தொகுதியில் களமிறக்கும் பாஜக…

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.

ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே, விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் நடிகர் சரத்குமார், 2007 இல் ஆரம்பத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நடிகர் சரத்குமார், இம்முறை பாஜகவுடன் இணைத்து போட்டியிடுகின்றார்.

கடந்த 12 ஆம் திகதி சமத்துவ மக்கள் கட்சியை, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என கூறி அவர் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1374411

  • கருத்துக்கள உறவுகள்

11 minutes ago, தமிழ் சிறி said:

ஹா ஹா ம‌க‌ளின் வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து இர‌வோடு இர‌வாக‌ பாஜ‌க்காவிட‌ம் க‌ட்சியை ஒப்ப‌டைச்ச‌ கூட்ட‌ம்.............ச‌ர‌த்குமார் 2019க‌ளில் சொன்ன‌தை இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ம‌று ப‌டியும் போட்டு காட்டின‌ம்

பாஜ‌க்கா கூட்ட‌னி வைக்கும் எந்த‌ க‌ட்சியாய் இருந்தாலும் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி கூட்ட‌னி வைக்காது..............இவை எல்லாம் க‌ட்சி வைச்சு இருக்கின‌ம் என்று தேர்த‌ல் நேர‌ம் தான் தெரியும்..............இந்த‌ தேர்த‌ல் ஓட‌ இவ‌ர்க‌ள் காண‌ம‌ போக‌ட்டும் அது தான் த‌மிழ் நாட்டுக்கும் நாட்டு ம‌க்க‌ளுக்கும் ந‌ல்ல‌து............................

Edited by பையன்26

14 minutes ago, பையன்26 said:

என‌து விருப்ப‌ம் அவ‌ர் வெல்ல‌னும் என்று.............தேமுதிக ஒரு இட‌ங்க‌ளில் த‌ன்னும் வெல்ல‌னும் க‌ப்ட‌னின் முக‌த்துக்காக‌ அவ‌ரின் ந‌ல்ல‌ குன‌த்துக்காக‌........................

இவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. தந்தையைப் போல், ஏழைகளின் மனதில் நிலைக்க கூடிய வழிகளில்  வாழ்ந்தாராயின் சாதிப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

இவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. தந்தையைப் போல், ஏழைகளின் மனதில் நிலைக்க கூடிய வழிகளில்  வாழ்ந்தாராயின் சாதிப்பார். 

இவ‌ர்க‌ள் பாசிச‌ பாஜ‌க்கா கூட‌ கூட்ட‌னி வைக்காத‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து................உண்மை நீங்க‌ள் சொல்வ‌து க‌ப்ட‌னை போல் ம‌க்க‌ளுக்கு நிறைய‌ ந‌ல்ல‌து செய்ய‌னும் ம‌க்க‌ளுக்கு ஒரு பிர‌ச்ச‌னை என்றால் முன்னுக்கு போய் நிக்க‌னும்.............இப்ப‌டியே போனால் இவ‌ருக்கு அர‌சிய‌லில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு............த‌டிச்ச‌ வார்த்தை பாவிக்காம‌ ம‌க்க‌ள் ம‌ன‌தில் இட‌ம் பிடிக்கும் அள‌வுக்கு அன்பை பெற‌னும்..............

என‌து ஆத‌ர‌வு எப்ப‌வும் அண்ண‌ன் சீமானுக்கு

க‌ப்ட‌ன் ஈழ‌ ம‌க்க‌ளுக்கு செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை நினைத்து அவ‌ரின் க‌ட்சி அழிந்து போகாம‌ உயிர்ப்போடு இருக்க‌னும் எப்ப‌வும் அது தான் என‌து விருப்ப‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

04-5-750x375.jpg

நடிகை ராதிகாவை விருதுநகர் தொகுதியில் களமிறக்கும் பாஜக…

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.

ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே, விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் நடிகர் சரத்குமார், 2007 இல் ஆரம்பத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நடிகர் சரத்குமார், இம்முறை பாஜகவுடன் இணைத்து போட்டியிடுகின்றார்.

கடந்த 12 ஆம் திகதி சமத்துவ மக்கள் கட்சியை, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என கூறி அவர் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1374411

நிர்மலா சீதாராமன், குஷ்பு என்று இன்னும் சில பிரபலங்களும் இருக்கின்றனர். அவர்களையும் தமிழ்நாட்டில் இறக்கி விட முயற்சிப்பார்கள். தேர்தலில் தொகுதிகளை வெல்ல முடியா விட்டாலும், இரண்டாவது இடத்தில் வந்தால் இப்போதைக்கு அதுவே பெரிய வெற்றி என்று பாஜக நினைக்கின்றது போல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பையன்26 said:

இவ‌ர்க‌ள் பாசிச‌ பாஜ‌க்கா கூட‌ கூட்ட‌னி வைக்காத‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து................உண்மை நீங்க‌ள் சொல்வ‌து க‌ப்ட‌னை போல் ம‌க்க‌ளுக்கு நிறைய‌ ந‌ல்ல‌து செய்ய‌னும் ம‌க்க‌ளுக்கு ஒரு பிர‌ச்ச‌னை என்றால் முன்னுக்கு போய் நிக்க‌னும்.............இப்ப‌டியே போனால் இவ‌ருக்கு அர‌சிய‌லில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு............த‌டிச்ச‌ வார்த்தை பாவிக்காம‌ ம‌க்க‌ள் ம‌ன‌தில் இட‌ம் பிடிக்கும் அள‌வுக்கு அன்பை பெற‌னும்..............

என‌து ஆத‌ர‌வு எப்ப‌வும் அண்ண‌ன் சீமானுக்கு

க‌ப்ட‌ன் ஈழ‌ ம‌க்க‌ளுக்கு செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை நினைத்து அவ‌ரின் க‌ட்சி அழிந்து போகாம‌ உயிர்ப்போடு இருக்க‌னும் எப்ப‌வும் அது தான் என‌து விருப்ப‌ம்..........................

திராவிடம் என்றால் என்ன அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவருக்கு இன்னும் காலம் இருக்கின்றது. தந்தையைப் போல், ஏழைகளின் மனதில் நிலைக்க கூடிய வழிகளில்  வாழ்ந்தாராயின் சாதிப்பார். 

அவருடைய தாயின் வளர்ப்பு வேறு. பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் என்றால் என்ன அர்த்தம்?

ஊழ‌ல் கொள்ளை மோச‌டி

 தேர்த‌ல் நேர‌ம் பொய்யான வாக்குறுதி

இயற்கை வளங்களை ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளுக்கு வித்து 

கோடி கோடியா அதில் கொள்ளை அடிச்சு குடும்ப‌த்துக்கு சொத்து சேர்ப்ப‌து தான் என‌க்கு தெரிந்த‌ திராவிட‌ம்.............

தேமுதிக்க‌ அதுவும் திராவிட‌ க‌ட்சி.......... ஆனால் திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்கா போல் அவ‌ர்க‌ள் ஊழ‌ல் ப‌ண்ணி நாட்டை கெடுக்க‌ வில்லை................க‌ப்ட‌ன் ந‌ல்ல‌ ம‌னித‌ர் 2004ஈழ‌த்தில் சுனாமி வ‌ந்த‌ போது ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌வின‌ ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ ம‌னித‌ர்.............அத‌னால் அன்று தொட்டு  என‌க்கு க‌ப்ட‌னை பிடிக்கும்.................அவ‌ரின் அர‌சிய‌லை அழித்த‌து திமுக்கா...........ஊட‌க‌த்தை கையில் வைத்து கொண்டு கோமாளி போல் க‌ப்ட‌னை சித்த‌ரித்து அவ‌ரின் அர‌சிய‌லை நாச‌ம் ஆக்கின‌து திமுக்க‌ ம‌ற்றும் ஆதிமுக்கா...............க‌ப்ட‌ன் ஊழ‌ல் செய்யாத‌ ம‌னித‌ர் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ப‌ல‌ தியாக‌ங்க‌ளை செய்த‌வ‌ர்...................................................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் வாக்குச் சாவடி 9 மணிக்கு பூட்டினால் பெரும் போட்டி இல்லை என்றால் 15 நிமிடத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.

அமெரிக்காவில் 50மானில‌த்தில் தேர்த‌ல‌ ஒரேய‌டியா ந‌ட‌த்திற‌வையா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா................க‌லிபோனியா ம‌ற்றும் ரெக்செஸ் இந்த‌ இர‌ண்டு மானில‌த்திலும் தான் அதிக‌ ம‌க்க‌ள்..........ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் ம‌க்க‌ள் தொகை மிக‌ குறைவு................

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் என்றால் என்ன அர்த்தம்?

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது...

திராவிடம் என்றால் என்ன?
திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல்.

திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை.

அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல்.

ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார்.

அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை.

மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது.

நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர்.

பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது.

திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன.

ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார்.

இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார்.

திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே !

திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல்.

தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம்.

சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது?

ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது.

ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ?

அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை ,

தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை!

தமிழன் தமிழனே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ரசோதரன் said:

திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை.

உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼

எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்......
இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா?

திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

ச‌ரியான‌ பார்வை🙏👍ந‌ன்றி.....................

1 minute ago, குமாரசாமி said:

உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼

எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்......
இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா?

திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽

கால‌ நீர் ஓட்ட‌த்தில் திராவிட‌ம் அழிந்து போகும் 

திமுக்கா தான் திராவிட‌த்தை தூக்கி பிடிக்கின‌ம்

இன்னொரு திராவிட‌ க‌ட்சியான‌ ஆதிமுக்கா திராவிட‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை..........................................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, விசுகு said:

அவருடைய தாயின் வளர்ப்பு வேறு. பார்க்கலாம்.

உண்மைதான்.

விஜயகாந்த் அவர்களை போல் திறந்த மனதுடன்  அவர் அரசியலை முன்னெடுப்பார்கள் என்றால் தமிழ்நாட்டிற்கும் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

விஜயகாந்த் ஒரு யதார்த்த அரசியல்வாதியாக இருந்தார். அழிந்தார் என்பதை விட அழிக்கப்பட்டார் என்றே என்மனம் சொல்கின்றது.

20 minutes ago, பையன்26 said:

கால‌ நீர் ஓட்ட‌த்தில் திராவிட‌ம் அழிந்து போகும் 

அப்படித்தான் நானும் நினைக்கின்றேன்.
தமிழ் நாடு  தமிழர் நாடாக இருந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼

எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்......
இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா?

திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽

கீழடியும், வேங்கை வயலும் அருகருகே தான் இருக்கின்றன. பேசும் பெருமையும், செய்யும் கொடுமையும் ஒன்றாக இருப்பது தான் அங்கே யதார்த்தம் போலும்.

'சமூக நீதி' தான் தங்களின் பெரும் சாதனை என்று சொல்வார்கள். ஒரு மாதத்திற்கு முன் கூட அங்கே வயலில் வேலை செய்தவர்களுக்கு சிரட்டையில் தேநீர் கொடுத்ததாக ஒரு பிரச்சனை பேசப்பட்டது.

தனிப்பட்ட ரீதியிலும் இவர்கள் பலருடன் எனக்கு ஓரளவு நல்ல பழக்கம் இருக்கின்றது. நீண்ட காலமாக இவர்களுடன் வேலை செய்கின்றேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் எதையும் கை விட்டு, புது உலகம் ஒன்றை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

அநேகமான நேரங்களில் நான் யார், என்ன ஆள் என்று அறியவே முயல்கின்றனர்.....🫣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ரசோதரன் said:

தமிழ்நாடு  மேலோட்டமாக முன்னேறி இருக்கின்றது.  இது  நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கமே தவிர வேறு எதுவுமில்லை. ஆனால் தமிழ்நாட்டு பாமர மக்களின் வளர்ச்சியோ அல்லது  அந்த நாட்டின் மூட நம்பிக்கைளை இந்த திராவிடத்தால் எதுவுமே செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இன்றுமே அந்த திராவிட கொள்கையாளர்கள் வீபூதி பொட்டு பிறை அர்ச்சனை தட்டு சகிதம் கோவில் கோவில்களாக ஏறிவருகின்றார்கள் என்பதே வெளிப்படையாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

அமெரிக்காவில் 50மானில‌த்தில் தேர்த‌ல‌ ஒரேய‌டியா ந‌ட‌த்திற‌வையா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா................க‌லிபோனியா ம‌ற்றும் ரெக்செஸ் இந்த‌ இர‌ண்டு மானில‌த்திலும் தான் அதிக‌ ம‌க்க‌ள்..........ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் ம‌க்க‌ள் தொகை மிக‌ குறைவு................

ஒரே நாளாளில் சகல மாநிலங்களிலும் நடக்கும்.

9 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாடு  மேலோட்டமாக முன்னேறி இருக்கின்றது.  இது  நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கமே தவிர வேறு எதுவுமில்லை. 

எந்த ஆதாரமும் இல்லாத எழுந்தமான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரே நாளாளில் சகல மாநிலங்களிலும் நடக்கும்.

த‌கவ‌லுக்கு ந‌ன்றி ஈழ‌ப்பிடிய‌ன் அண்ணா.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, இணையவன் said:

எந்த ஆதாரமும் இல்லாத எழுந்தமான கருத்து.

நானும் தமிழ்நாடு முன்னேறி  இருக்கின்றது என்றுதான் சொல்கின்றேன். 
ஆனால் எந்த வகையில் என்பதை நீங்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

கொஞ்சம் பொருளாதார ரீதியாக முன்னேறினாலும் பாமரமக்களும் சாதாரண பொது மக்களும்  இன்னும் 100 வருடங்கள் பின்னோக்கித்தான் இருக்கின்றார்கள் என்பதை கண்கூடாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

திராவிடம் திராவிடம் என கூவிக்கொண்டு சாமிகளுக்கு பின்னால் திரிவதும்.... சாதிக்கொரு கட்சிகளை வைத்துக்கொண்டு திராவிடம் என பினாத்துவதும் நாட்டின் வளர்ச்சி அல்ல.

7 hours ago, குமாரசாமி said:

பாமரமக்களும் சாதாரண பொது மக்களும்  இன்னும் 100 வருடங்கள் பின்னோக்கித்தான் இருக்கின்றார்கள் என்பதை கண்கூடாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம்  என்று நினைத்து எழுதுகிறீர்கள்.

மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, இணையவன் said:

உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம்  என்று நினைத்து எழுதுகிறீர்கள்.

மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.

எனக்கு ஏன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு வரவேண்டும். நான் திராவிடனுமல்ல ஆரியனும் அல்ல. நான் ஒரு தமிழன். நாடு முன்னேறி என்ன பயன். எல்லாம் சாதிவாரியாக இருக்கும் போது திராவிடம் ஏன் என்றுதான் கேட்கின்றேன்.
உங்களுக்கு நேரம் இருந்தால் திராவிட  கொள்கைகள் என்னவென்பதை பத்து வரியில் எழுதிவிடுங்கள். பலருக்கு உதவியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.