Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கனது இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

திருகோணமலை மாவட்ட நீதிமன்றம்

கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவிருந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இம்மாநாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறிப்பித்தது.

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு | Interim Restraining Order Issued Against Tna

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 15.02.2024 முதல் எதிர்வரும் 27.02.2024 ஆம் திகதி வரை குறித்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் சந்திரசேகரம் பரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் அதிபர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு | Interim Restraining Order Issued Against Tna

இதன்போது கடந்த 21.01.2024மற்றும் 27.01.2024ஆம் திகதிகளில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டங்ளும், குறித்த இரண்டு கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளும் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றம்

அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச்சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு | Interim Restraining Order Issued Against Tna

குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்தது.

மேலும், இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி. ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் பீற்றர் இளஞ்செழியனால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி தமிழரசுகக் கட்சிக்கு எதிராக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ளவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிப்பினர் மாவை சேனாதிராஜா உறுதியளித்துள்ளார் கிளிநொச்சியில் கடந்த 23.02.2024 அன்று இடம்பெற்ற கட்சியின் கலந்துரையாடளில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஒற்றுமையாக எதிர்கொண்டு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வகையிலான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, கட்சியின் சிரேஷ்ட வழக்கறிஞ்சர்களுடன் கலந்துரையாடி இந்த வழக்கு தொடர்பில் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள மற்றும் நீதிமன்றினை அணுகுதல் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம் என்றார்.

https://tamilwin.com/article/interim-restraining-order-issued-against-tna-1709183990#google_vignette

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம்(29.02.2024) திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதிமன்றில் வழக்கு தாக்கல்

மேலும், '' கடந்தமாதம் 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம்.

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி | Election Of The President Of The Canceled Tna

இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனை. இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.

இதன்படி வழக்கானது எதிர்வரும் ஏப்ரல்,05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாவில்லை. அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து மேலதிக முடிவை எடுப்போம்." என்றார்.

கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு

மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி | Election Of The President Of The Canceled Tna

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 

 

https://tamilwin.com/article/election-of-the-president-of-the-canceled-tna-1709187542

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம்(29.02.2024) திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதிமன்றில் வழக்கு தாக்கல்

 

மேலும், '' கடந்தமாதம் 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம்.

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி | Election Of The President Of The Canceled Tna

 

இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனை. இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.

இதன்படி வழக்கானது எதிர்வரும் ஏப்ரல்,05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாவில்லை. அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து மேலதிக முடிவை எடுப்போம்." என்றார்.

கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு

மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைவர் தெரிவை இரத்து செய்ய உடன்பட்ட தமிழரசுக் கட்சி | Election Of The President Of The Canceled Tna

 

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

https://tamilwin.com/article/election-of-the-president-of-the-canceled-tna-1709187542

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கட்சித் தலைவர் தேர்தலில் செய்தது சுத்த முள்ளமாரித்தனம். அதில ஒருத்தர் சனாதிபதி சட்டத்தரணி வேற… 

இப்ப உடன்பட்டு என்ன பிரயோசனம்…

சட்டம் தெரிந்ததே தேர்தலில் குளறுபடி செய்து போட்டியிட்டமைக்காக தண்டிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

கட்சித் தலைவர் தேர்தலில் செய்தது சுத்த முள்ளமாரித்தனம். அதில ஒருத்தர் சனாதிபதி சட்டத்தரணி வேற… 

இப்ப உடன்பட்டு என்ன பிரயோசனம்…

சட்டம் தெரிந்ததே தேர்தலில் குளறுபடி செய்து போட்டியிட்டமைக்காக தண்டிக்கப்பட வேண்டும்.

யாப்பு மீறல் என்று தெரிந்தும் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களையும் தண்டிக்க வேண்டுமல்லவா? இங்கே சட்டம் எங்கே வருகிறது? கட்சி யாப்பு மீறல் என்றல்லவா வழக்கில் இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்டியினை யாப்பினடைப்படையில், ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சனநாயக அரசியல் நிறுவனமாக, வெற்றிகரமாக இயங்க வைப்பதற்கான அரிதாகக் கிடைத்த ஒரு சந்தர்பம் இது. 

பயன்படுத்துவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

யாப்பு மீறல் என்று தெரிந்தும் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களையும் தண்டிக்க வேண்டுமல்லவா? இங்கே சட்டம் எங்கே வருகிறது? கட்சி யாப்பு மீறல் என்றல்லவா வழக்கில் இருக்கிறது?

ஐயோ தம்பி jut in… நீங்க எப்பவுமே இப்படித்தான்… 

நீதிமன்றில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ….?

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக.பல சந்தர்ப்பங்களில் யாப்பு மீறல் நடை பெற்றுள்ளது....சுமத்திரன் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்த பொழுதும்  சட்ட மீறல் நடை பெற்றுள்ளது,,,அதை ஏனைய உறுப்பினர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை....தமிழ் தேசியம் சிதைந்து போகாமல் இருக்க அந்த முடிவை எடுத்திருக்லாம்...

இப்பொழுது நீதி மன்றத்திற்கு இந்த வழக்கு சென்ற காரணத்தால் ....நீதி மன்ற தீர்புக்கு ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்து தமிழரசுகட்சி மீண்டும் தனது அத்திவாரத்தை உறுதியாக போட்டு,சுவர்,கூரை போன்றவற்றை கட்டியெழுப்ப வேணும்....தமிழ் தேசியத்திலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் யாப்பு மீறல் என்ற காரணத்தை வைத்து  வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தமிழரசுக்கட்சி நீண்டகாலமாகவே யாப்பு மீறலைச் செய்திருக்கிறது. மாவை தொடச்சியாக பல வருடங்கள் தலைவராக இருந்தமை. சுமத்திரன்,சம்பந்தரது தன்னிச்சையான செயற்பாடுகள் என பல விடயங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஐயோ தம்பி jut in… நீங்க எப்பவுமே இப்படித்தான்… 

நீதிமன்றில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது ….?

இது தெரியாமலா கருத்து தெரிவித்தீர்கள்😂?

யாப்புக்கு முரணாக செய்த தேர்வுகளை இடை நிறுத்த வேண்டுமென்று தானே?

"பிரதிவாதிகள் கட்சி யாப்பை மீறினர்" இந்த வாக்கியத்தில் பயனிலை எதுவென்று கண்டு பிடியுங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இது தெரியாமலா கருத்து தெரிவித்தீர்கள்😂?

யாப்புக்கு முரணாக செய்த தேர்வுகளை இடை நிறுத்த வேண்டுமென்று தானே?

"பிரதிவாதிகள் கட்சி யாப்பை மீறினர்" இந்த வாக்கியத்தில் பயனிலை எதுவென்று கண்டு பிடியுங்கள்😎!

அரை குறைகள் எல்லாம் இப்படித்தான் கருத்து எழுதுவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசுக் கட்சி; மாநாட்டுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

1523375905.jpeg

புகழேந்தி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கு (25. 024. 2024)  யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா;

இந்த வழக்குகள் சுருக்கமாக முடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பது இரண்டு தரப்பினரதும் பொதுவான நிலைப்பாடாக இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சட்ட விதிகளுக்கு அமைவாக இன்றைய தினம் நாங்கள் மறுமொழி தாக்கல் செய்வதற்கு திகதி குறிப்பிடுமாறு நான் கேட்டிருந்தேன்.

அந்த அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு மறுமொழி தாக்கல் செய்யுமாறு வழக்குத் தவணை இடப்பட்டு  இருக்கிறது.  அத்தோடு ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசனுக்கு மீண்டும் அழைப்புக் கட்டளை அனுப்பப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

முதலாவது மற்றும் மூன்றாவது எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகிய இருவர் சார்பிலும் நாங்கள் சட்டத்தரணி நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்து அந்த அடிப்படையில் எங்களுடைய நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டு இருந்தோம்.

ஏனைய இரண்டு எதிராளிகள் சார்பிலும் வேறு சட்டத்தரணிகள் தங்களுடைய நியமனப் பத்திரத்தை சமர்ப்பித்தார்கள். ஐந்தாவது எதிராளி சண்முகம் குகதாஸ் சார்பில் எவரும் ஆஜராகி இருக்க வில்லை. அவருக்கான அழைப்புக் கட்டளை இதுவரையில் அவரிடம் கையளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்காளியான தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கு. குருபரன், ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மேலும் நீடிக்குமாறு தான் கோரவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் கட்டாணை தொடர்பாக எந்தவித நீடிப்பும் இன்று வழங்கப்படவில்லை. அவர் அவ்விதம் தெரிவித்ததற்கான காரணம் கட்டாணை கடந்த 19 ஆம் திகதி நடைபெற இருந்த மாநாடு தொடர்பாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த திகதி கடந்து போய்விட்ட நிலையில் ஜதார்த்த ரீதியாக அதை நீடிக்குமாறு கூற முடியாது. அந்த வகையில் தான் அவருடைய விண்ணப்பம் அமைந்திருந்தது.

எங்களுடைய தரப்பில் இந்த வழக்கு சுருக்கமாக முடிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டினோம். இதே நேரத்தில் திருகோணமலை நீதிமன்றிலும் சமாந்தரமாக ஒரே நேரத்தில் இன்றைய தினம் இதே எதிராளிகளும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.  சுமந்திரனையும் சேர்த்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கூப்பிடப்படுகிறது என்பதையும் தெரிவித்தோம்.

ஆகவே, இந்த வழக்குகள் சுருக்கமாக முடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது இரண்டு தரப்பினருடைய பொதுவான நிலைப்பாடாக இன்றைக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றிலே தெரிவிக்கப்பட்டது என்றார் சட்டத்தரணி சிறிகாந்தா.(க)  
 

https://newuthayan.com/article/தமிழ்_அரசுக்_கட்சி;_மாநாட்டுக்கு_எதிரான_வழக்கு_ஒத்திவைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

https://arangamnews.com/?p=10517

  •     சுமந்திரன் சொன்னதுதான் சரி என்பது உறுதியாகின்றதா?

    — கருணாகரன் —

    தமிழரசுக் கட்சியின் அதிகாரப் போட்டிகள் சந்திக்கு வந்தது மட்டுமல்ல, அதை நீதிமன்றம் வரையில் கொண்டு வந்து விட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகி விட்டன. ஒரு வழக்குக்கு எதிர்வரும் 2024 மார்ச் 05 இல் அடுத்த கட்ட விசாரணை என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது. இன்னொரு வழக்கு மார்ச் 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கட்சிக்கு இதெல்லாம் கசப்பான அனுபவம்தான். சோதனைதான். உள்ளே நெடுங்காலமாகச் சீழ்ப்பிடித்துக் குமைந்து கொண்டிருந்த விசயங்கள் இப்பொழுது வெளியே வந்துள்ளன. சீழ்ப்பிடித்திருந்தால் அது என்றாவது வெளியே வந்துதான் தீரும். 

    குறுகிய நோக்கங்களும் பதவி ஆசையும் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. இது முடிவுக்கு வருவது கடினம். அப்படி இந்தத் துயர நிலை முடிவுக்கு வர வேண்டுமானால் கட்சியின் அரசியல் சிந்தனையும் செயற்பாடும் (உள்ளடக்கம்) மாற்றமடைய வேண்டும். அவ்வாறே அரசியற் பண்பாடும் உருவாக வேண்டும். இது நிகழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை.

    தற்போதைய சிக்கல்களுக்கு யாப்பு மீறல், ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம். தலைவர், செயலாளர் தெரிவுக்குப் பிறகு எழுந்திருந்த சர்ச்சையின்போது இதைச் சுமந்திரன் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். அது கூட மென்மையாகத்தான். ஏனென்றால் யாப்புக்கு முரணான முறையிலேயே தலைவர் தெரிவு நடந்தது. இருந்தும் அதில் சுமந்திரனும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்ற காரணத்தினால் யாப்பைப் பற்றிக் கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்தார் சுமந்திரன். அப்படி விமர்சித்தால் அதில் தன்னுடைய தவறுகளும் உட்படும் என்பதால் அதைத் தவிர்த்தார். பதிலாக நடந்த தெரிவுகளை தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால், யாப்பை மீறி எவரும் எதையும் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்றும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார். 

    அந்த அழுத்தம் இப்பொழுது வேலை செய்கிறது.

    முதற்கட்ட நீதிமன்ற விசாரணையின் போது தலைவர் தெரிவு உள்பட அனைத்துத் தெரிவுகளையும் மறுபடி நடத்துவதற்கு சிறிதரன் உள்பட முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வரை பொறுப்பானவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். முக்கியமாக யாப்பு மீறல்களைப் பகிரங்கமாக  ஏற்றுள்ளனர். இனி யாப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

    அப்படியென்றால் நடந்தவை அனைத்தும் தவறு என்று பொருள். இந்தத்  தவறுகளைச் சிறிதரன் – மாவை தரப்பு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளது. கட்சிக்குள்ளே இதைச் சுட்டிக்காட்டியபோது அதற்கு மதிப்பளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீர்ப்படுத்தியிருந்தால் இப்படியான தோல்வி நிலை ஏற்பட்டிருக்காது.

    இப்பொழுது சிறிதரன் கொண்டாடிய வெற்றி வடியத் தொடங்கி விட்டது.

    பதிலாக இதில் முதற்கட்டமாக சுமந்திரன்  வெற்றியடைந்துள்ளார். 

    அதாவது நீதி மன்றத்தீர்ப்புக்கு முன்னரே சுமந்திரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களும் வலியுறுத்துவதற்கு விரும்பிய விடயங்களும் நிறைவேறியுள்ளன. 

    எல்லாவற்றுக்கும் நாம் யாப்பைப் பின்பற்றத் தேவையில்லை என்ற முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவும் மாவையின் ஆலோசனையைத் தொடர்ந்த சிறிதரன் தரப்பும் தலைகுனிந்துள்ளன. 

    இப்பொழுது யாப்புப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் தமிழரசுக் கட்சியினருக்கும் அதன் அனுதாபிகளுக்கும் கொஞ்சமாவது நிகழ்ந்திருக்கும் என நம்பலாம். ஆகவே இனிமேல் அவர்கள் இதைக்குறித்து கொஞ்சமாவது எச்சரிக்கையோடு நடந்து கொள்வர். இல்லையென்றால் மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். 

    பொறுப்பற்ற தனமாக, எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டிருக்கும் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா நீதிமன்றப்படியேறியே இதைப் படிக்க வேண்டிய நிலை வந்தது வரலாற்றின் சோகம். 

    தமிழரசுக் கட்சிக்குள் துலக்கமாக இரண்டு தரப்புகள் (இரு அணிகள்) அதற்குள் உண்டென்று வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. ஒன்று சிவஞானம் சிறிதரன் – மாவை தரப்பு. அடுத்தது ஆபிரகாம் சுமந்திரன் தரப்பு. 

    இது கட்சியின் விசுவாசிகளுக்கு கவலையளிப்பதே. ஆனால், இந்தக் கவலையைப் பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. இந்தக் கவலை யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடகங்களுக்கும் ஊடகப் பொறுப்பாளிகளுக்கும் உண்டு. அவர்களும் தங்களால் முடிந்தளவுக்குப் பாறைகளை உடைக்க முயற்சித்தனர். அதுவும் உரிய பயனைத் தரவில்லை. சம்மட்டிகள் உடைந்ததுதான் மிச்சம். 

    இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த இரண்டு அணியும் ஒன்றிணையச் சாத்தியமுண்டா? அப்படியென்றால் அது எப்படியாக – எந்த அடிப்படையில் – அமையும்? அப்படி ஒன்றிணைய முடியவில்லையென்றால் அடுத்த கட்டம் என்ன? 

    சுமந்திரன் தனியொரு தரப்பாகவும் சிறிதரன் தனியொரு தரப்பாகவும் இனியும் ஒரு கட்சிக்குள் நீடிக்க முடியாத நிலையில் சுமந்திரன் தனித்துச் செல்வாரா? அப்படியாயின் அவரை ஆதரித்தோரின் நிலை என்ன? அல்லது அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள தலைவர் தெரிவில் யாருக்கு வெற்றி வாய்ப்புண்டு? அதில் சுமந்திரன் வெற்றியடைந்தால் சிறிதரன் தரப்பின் கதியென்ன? சிறிதரன் வெற்றியடைந்தால் சுமந்திரனின் நிலை என்ன? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்துள்ளன.  

    வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் அதற்கு வெளியே இரு அணிகளையும் இணைத்துச் சமரசம் செய்வதற்கு சில மதத்தலைவர்களும்(?) ஊடகப் பொறுப்பாளிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். அது எந்தளவுக்குச் சாத்தியங்களை உண்டாக்கும் என்று தெரியவில்லை.

    ஏனென்றால் இந்த முரண்பாடு தனியே யாப்பு மீறல், ஜனநாயக விரோதம், பதவிப் போட்டி என்பதற்கு அப்பால், அரசியல் நோக்கின் அடிப்படையிலானதுமாகும். 

    சுமந்திரன் தரப்பின் அரசியல் அணுகுமுறை வேறு. சிறிதரன் தரப்பின் அரசியல் நிலைப்பாடும் அணுகுமுறையும் வேறு. அதுவே இங்கே அடிப்படையான முரண்பாடாகும்.

    ஆகவே இதைச் சமரசத்துக்குட்படுத்துவது எளிதானதல்ல. தற்போது சில விட்டுக் கொடுப்புகள், நிபந்தனைகளின் அடிப்படையில் சமரசத்தை எட்டினாலும் எதிர்காலத்தில், அது உடைந்தே தீரும். அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள், ஆட் தேர்வுகள் போன்றவற்றில் நிச்சயமாக மீண்டும் முரண்பாடுகள் எழுந்தே தீரும். 

    அவற்றை எளிதாகத் தீர்த்து விட முடியாது. 

    ஏனென்றால் இந்தப் பிரச்சினை (முரண்பாடு) எழுந்தபோது சிறிதரன் தன்னுடைய வழமையான பாணியில் (அவருடைய விசேட குணவியல்பின்படி) சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்லாமல் வழக்கை எதிர்கொள்ளவே தீர்மானித்தார். அதாவது சவாலை எதிர்கொள்ள முடிவெடுத்தார். என்பதால்தான் “தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்” எனத் தன்னுடைய முகப்புத்தகத்தில் சிறிதரன் பதிவிட வேண்டியிருந்ததும்.

    மேலும் இதற்காகவே அவர் கொடிகாமத்தில் கடந்த வாரம் தமிழ்த்தேசிய மாநாடு என்ற வகையில் தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டித் தன்னுடைய பலத்தைக் காட்ட முயற்சித்தார். இதில் கடும்போக்காளர்கள் ஒன்று திரண்டனர். 

    இவர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் முஸ்டியை உயர்த்திக் காட்டினார்கள். சுமந்திரன் தோற்றுப் பின்னடைவதாக ஒரு தோற்றம் பொதுவெளியில் உருவாக்கப்பட்டது. 

    இது கத்திக்குக் கத்தி. சவாலுக்குச் சவால் என்ற மாதிரியானது. ஆனால், அரசியலில் இத்தகைய அணுகுமுறை பயன்தராது. அதன் பயனையே இப்பொழுது அவர்கள் அறுவடை செய்கிறார்கள்.  

    ஏற்கனவே சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் தரப்பின் முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற தன்மையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதைந்தது. கிளிநொச்சி உட்பட பல இடங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை இயங்க விடாமல் அவற்றுக்கு முட்டுக்கை இட்டார் சிறிதரன். இறுதியில் தமிழரசுக் கட்சியே அந்த நிலைக்குள்ளாகியுள்ளது. ஆனாலும் அவர்கள் எதையும் பட்டறிந்து கொள்வதாக இல்லை. 

    வழக்கு முடிவுகளுக்குப் பிறகு புதிய தெரிவின் மூலம் எல்லாவற்றையும் சீர் செய்து விடலாம் என்று சிறிதரனோ மாவையோ ஏன் அந்தத் தரப்பிலுள்ள ஏனையோரே கருதலாம். அதொன்றும் அப்படி எளிதானதாக இருக்கப்போவதில்லை. 

    ஏனென்றால், இது கட்சிக்குள் நிலவுகின்ற வேறுபாடுகளின் பிரச்சினை. அரசியல் நிலைப்பாடு, அணுகுமுறை, ஜனநாயக விழுமியத்தின் மீதான  கரிசனை எனப் பல அடிப்படைகளுடன் தொடர்புடையது. 

    சுமந்திரனோ மென்போக்கைக் கடைப்பிடித்து, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பவர். அதற்கமைய சிங்கள, முஸ்லிம், மலையத் தரப்புகளோடு உறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவர். சர்வதேச சமூகத்துடனும் அவர் கொண்டுள்ள உறவு இந்த அடிப்படையிலானதே. குறிப்பாக வெளியுலகத்தின்  உளநிலையை (அரசியலை) புரிந்து கொண்டு அவற்றோடு உறவை ஏற்படுத்தியிருப்பவர். இதனை தலைவர் தெரிவின் பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியுப் நேர்காணலில் சுமந்திரனே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

    சிறிதரன் இதற்கு மாறாக தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர். அவருடைய அரசியல் யுத்தத்துக்கு முந்தியது. 1970 களில் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரகடனப்படுத்திய சொல்லரசியல். அதற்கு எந்தச் செயற்பாட்டு வடிவமும் கிடையாது. எந்த அணுமுறையும் இல்லை. சமூகத்தை உணர்ச்சிக்  கொந்தளிப்பில் வைத்திருக்கும் பேச்சே அதனுடைய அடிப்படை. இதற்கு ஏனைய சமூகங்களோடு ஊடாட வேண்டிய அவசியமில்லை. என்பதால்தான் அவர் தலைவர் தெரிவை அடுத்து கிளிநொச்சிக்குச் சென்று துயிலும் இல்லத்தில் தன்னை வெளிப்படுத்தியது. மட்டுமல்ல, யாப்பு, ஜனநாயக விழுமியம், அரசியற் பண்பாடு, புத்தாக்க உணர்வு என எதையும் பொருட்படுத்தாமல் அணிப் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பது. 

    இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அதன் நிமித்தமாகப் பரிகாரம் (மாற்றங்களை) செய்தால்தான் தமிழரசுக் கட்சி மீளுயிர்ப்படையும். இல்லையெனில் அது தன்னுடைய வழியை ஒடுக்கிக் கொள்ளும். அந்த வழியை வரலாற்றுக் காடு மூடிவிடும். 

    கடந்த வாரங்களில் இருந்ததைப்போன்று இப்போதைய நிலை இல்லை. கட்சியில் போட்டியற்ற விதமாகத் தெரிவுகளை மேற்கொள்ளும் முடிவொன்று ஏற்படுமானால் ஓரளவுக்குச் சுமுக நிலை ஏற்படும். அப்படியென்றால் மறுபடியும் யார் தலைவர் என்ற கேள்வி எழும். சுமந்திரன் மறுபடியும் தலைமைத்துவத்தைக் கோருவாரா என்று தெரியவில்லை. ஆனால், சிறிதரன் தலைமைக்கான குறியை விட்டுவிடப்போவதில்லை. 

    அவ்வாறே செயலாளர் குறித்த தேர்வும். அவற்றில் எத்தகைய உடன்பாடுகள் எட்டப்படப்போகின்றன என்பது கேள்வியே. குகதாசனும் எளிதில் விட்டுக்  கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கட்சியின் நலனைக் குறித்து எல்லோரும் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்றால் சிறிதரன் – சுமந்திரன் அணிகளுக்கு அப்பாலான ஒரு தலைமையையே தேர்வு செய்ய வேண்டும். அது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. 

    ஆகவே வழக்குத் தீர்ப்புக் கிடைத்தாலும் நடைமுறையில் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையே தொடர்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஏற்கனவே சம்மந்தன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் தரப்பின் முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற தன்மையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதைந்தது. கிளிநொச்சி உட்பட பல இடங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை இயங்க விடாமல் அவற்றுக்கு முட்டுக்கை இட்டார் சிறிதரன். இறுதியில் தமிழரசுக் கட்சியே அந்த நிலைக்குள்ளாகியுள்ளது. ஆனாலும் அவர்கள் எதையும் பட்டறிந்து கொள்வதாக இல்லை. 

இந்த பந்தி ரொம்பவும் பிடித்திருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.