Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!

snake_29092007.jpg

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09...-intestine.html

இது விஷ பாம்பு இல்லையா ஏனேனின் அந்த பெண்ணின் உடம்பினுள் இருக்கும் போது பெண்ணுக்கு ஒன்றும் ஆகவில்லையே?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதைப் படித்த பின், வயிற்றுக்குள் ஏதோ கிண்டுது. :lol::lol:

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியந்தான் நெடுக்ஸ்! அதுசரி, இப்போ தாயும் சேயும் நலமா? :lol::lol:

ஜம்முவும் நாளொரு மேனியும் பொழுதொரு அவதாருமாக (வண்ணமுமாக) வளர்ந்து வாறமாதிரித் தெரிகிறது! :lol::lol:

ஜம்முவும் நாளொரு மேனியும் பொழுதொரு அவதாருமாக (வண்ணமுமாக) வளர்ந்து வாறமாதிரித் தெரிகிறது! :lol::lol:

ஆமாம் சுவி பெரியப்பா பேபி கூட வளருது தான் ஆனா பாம்பு எல்லாம் வளரவில்லை ஆக்கும்........ :lol:

உதைப் படித்த பின், வயிற்றுக்குள் ஏதோ கிண்டுது. :):lol:

என்ன தூயவன் நானா வயித்தை ஒருக்கா ஸ்கான் பண்ணி பார்த்தா எதுக்கும் நல்லது தானே!! :lol:

காளைமாட்டுகக்கா :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உதைப் படித்த பின், வயிற்றுக்குள் ஏதோ கிண்டுது. :(:(

ஆஆஆஆஆஆ........உங்கட வயித்துக்குள்ளேயும் பாம்பா :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆ........உங்கட வயித்துக்குள்ளேயும் பாம்பா :wub:

வயிற்றுக்குள் பாம்பு சகஜம் தானே.

இது எந்த வகை பாம்பு என்பதுதான் பிரச்சனையே. வழமையா வயிற்றுக்குள்.. Phylum: Nematoda மற்றும் Phylum: Platyhelminthes வுக்குரிய புழுக்கள்.. பேச்சு வழக்கில்"பாம்புகள்" இருப்பது வழமை. அதிலும் Taenia solium எனும் தட்டைப் புழு சில மீற்றர்கள் நீளம் வளரக் கூடியது. பன்றி இறைச்சி மூலம் பரவுவது.

tapeworm.jpg

சரியான முறையில் சமைக்கப்படாத பன்றி இறைச்சி மூலம் பரவும் ரீனியா சோலியம் எனும் தட்டைப் புழு.

நாம் சாதாரணமாகச் சொல்லும் பாம்பு Phylum: Chordata; Class: Reptilia வகைக்குள் அடங்குவது. முன்னைய இரண்டுக்கும் முள்ளந்தண்டு கிடையாது. ஆனால் இந்த Reptilia வகுப்புக்குள் அடங்குவதற்கு முள்ளந்தண்டு உண்டு.

முன்னைய இரண்டும் மனிதனில் அக ஒட்டுண்ணியாக வாழக் கூடிய இனங்களைக் கொண்டுள்ளன. ஆனால் சாதாரண பாம்புகள் மனிதனில் அக ஒட்டுண்ணியாக வாழும் இயல்பற்றவையாகவே பெரிதும் உள்ளன. அதனால்.. இந்தப் பாம்பு... எந்த வகையினது என்ற வினா எழுகிறது..???! சாதாரண பாம்பென்றால்.. அதற்குரிய உடற்செயற்பாட்டுக்கு அவசியமான காற்று.. உணவு எப்படிக் கிடைத்தது.. இந்தப் பாம்பு மனித உடலினுள் தப்பிப் பிழைக்க... வளர...???! (படத்தைப் பார்க்கும் போது.. சாதாரண பாம்பு போலவே தென்படுகிறது... இசைவாக்கம் கண்டிருக்குமோ... வயிற்றுக்குள் தப்பிபிழைக்க..?? :wub: ) :(:(:icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலென்ன அதிசயம்.பூமாதேவியை ராகுவும்கேதுவுந்தானே ஆண்டுகொண்டிருக்கின்றார்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சீரும் பாம்பை நம்பிhஷனாலும் சிரிக்கும் பொண்ண நம்பாதே சோ இதுல இன்னா மாட்டானா பாம்ப பாத்து பயப்பிடவே தேவைல நீங்க பயப்பிட வேண்டயதெல்லாம் ஒன்னை பாத்த தான் அது வந்து..............

இதிலென்ன அதிசயம்.பூமாதேவியை ராகுவும்கேதுவுந்தானே ஆண்டுகொண்டிருக்கின்றார்கள் :wub:

ஓ அப்படியா நான் நினைத்தேன் ஜம்மு பேபி தான் பூமாதேவியை ஆண்டு கொண்டிருகிறது என்று வெறி சாறி தாத்தா..... :icon_mrgreen: !!

சீரும் பாம்பை நம்பிhஷனாலும் சிரிக்கும் பொண்ண நம்பாதே சோ இதுல இன்னா மாட்டானா பாம்ப பாத்து பயப்பிடவே தேவைல நீங்க பயப்பிட வேண்டயதெல்லாம் ஒன்னை பாத்த தான் அது வந்து..............

சுண்டல் அண்ணா சிரிக்கும் பெண் எல்லாரையும் ஒரே கட்டகரிகுள் கொண்டு வர கூடாது நல்லா இல்லை சொல்லிட்டேன். :wub: .........எத்தனை நல்ல பெண்கள் இருக்கீனம் சுண்டல் அண்ணா :( .......என்னத்தை பார்த்து பயப்பிட வேண்டும் என்று சொல்லாம போயிட்டீங்க சுண்டல் அண்ணா.......... :( !!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பொண்ண நம்பாதே சோ இதுல இன்னா மாட்டானா பாம்ப பாத்து பயப்பிடவே தேவைல நீங்க பயப்பிட வேண்டயதெல்லாம் ஒன்னை பாத்த தான் அது வந்து..............

சிரிக்கும் பெண்ணைத்தானே நம்பக் கூடாது என்றீங்க. உண்மைதான்.

பாம்பையும் பெண்களையும் (அம்மா என்பவரை பெண்ணாக நான் கருதுவதில்ல எப்பவும். என் உயிராகவே கருதி வருகிறேன்) தூர வைச்சிட்டால் ஆபத்தில்ல. நெருங்கி வர இடமளிச்சீங்க.. பால் வார்த்து பாசம் கொட்டினீங்க.. இரண்டும் நன்றி கெட்டதனமா நடக்க நேரம் எடுக்காது. அதலாதான் பாம்புக்கு பல்லைப் பிடிங்குவாங்க..! பெண்களுக்கு... எதையும் பிடுங்கி வேலை இல்ல என்றுதான் எச்சரிக்கிறாங்க பொதுவா..!

அதனால் தான் சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாத என்று சொல்லி வைச்சாங்க போல..! :icon_mrgreen:

நான் புதுமொழியாச் சொல்லுவன்.. சீறும் பாம்பையும் நம்பக் கூடாது.. சிரிச்சும், சிரிக்காமலும் இருக்கும் பெண்களையும் நம்பக் கூடாது. இரண்டும் ஆபத்துத்தான். :(

Edited by nedukkalapoovan

ஐயோ உப்படியும் நடக்குமா? எனக்கும் வயிறு நோகுற போல இருக்குது

பாவம் அந்த பொண்ணு.

ஐயோ உப்படியும் நடக்குமா? எனக்கும் வயிறு நோகுற போல இருக்குது

பாவம் அந்த பொண்ணு.

அக்காவிற்கு வயிறு நோகுதா ஆனா பாம்பு எல்லாம் இருகாது என்று நினைக்கிறேன் அக்கா......... :(

அக்காவிற்கு வயிறு நோகுதா ஆனா பாம்பு எல்லாம் இருகாது என்று நினைக்கிறேன் அக்கா......... :(

:lol: அக்காவின் வயித்துக்கை குடல் தான் இருக்கும் னு சொல்லுறியள் போல.

ஆனால் பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என சொல்லும் காலத்தில் வயிற்றுக்கூல் பாம்பெனில் எவ்வளவு அபாயம் . :)

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அவன் பாம்ப பொரிச்சு எல்லாம் சாப்பிறான் இதக்குள்ள படை நடுங்கும் பாம்பு சிரிக்கும் என்டுகொண்டு..

அக்காவிற்கு வயிறு நோகுதா ஆனா பாம்பு எல்லாம் இருகாது என்று நினைக்கிறேன் அக்கா......... :(

இவள் சின்னப்பெட்டை யமுனா சரியான குறும்புக்காறி... பாவம்வெண்ணிலா அப்பாவி.

இதனை எப்படி ஏற்றுக்கொள்ளவது? ஒருவர் ஒரு உணவையோ அல்லது ஒரு பொருளையோ உட்கொண்டால் அது ஒன்றில் ஜீரணமாகும் அல்லது வாந்தி மூலம் வெளிவரும் அல்லது மலத்தோடு வெளியேறும் ஏதாவது ஒட்டக்ககூடிய பொருள் என்றால் குடலோடு ஒட்டிக்கொள்ளும் ஆனால் இங்கு இப்படி பாம்பு இருந்தது என்றால் அதை யார் தான் நம்புவார்கள்? இருந்தும் இங்கு வாசகர்கள் நிறைய யோசித்து தங்கள் கருத்துகளை முன் வைத்திருக்கின்றனர். கேட்கிறவன் கேணையன் என்றால் எருதும் ஏறோப்பிளேன் ஓட்டுமாம் என்ற கதை மாதிரி அல்லவா இருக்கிறது.

:lol: அக்காவின் வயித்துக்கை குடல் தான் இருக்கும் னு சொல்லுறியள் போல.

ஆனால் பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என சொல்லும் காலத்தில் வயிற்றுக்கூல் பாம்பெனில் எவ்வளவு அபாயம் . :unsure:

ஆமாம் குடல் இருக்குது என்று தான் சொன்னேன் நிலா அக்கா வெரிகுட் கண்டு பிடித்து விட்டீங்க அக்கா...... :( !!பாம்பை கண்டா படையும் அஞ்சும் அது அந்த காலம் நிலா அக்கா...........நம்மளை கண்டா பாம்பே அஞ்சும் இது இந்தகாலம் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

அவன் அவன் பாம்ப பொரிச்சு எல்லாம் சாப்பிறான் இதக்குள்ள படை நடுங்கும் பாம்பு சிரிக்கும் என்டுகொண்டு..

சுண்டல் அண்ணா கூல்டவுன் இதுக்கு போய் டென்சன் ஆகி கொண்டு பாவம் நிலா அக்கா......!! :lol:

இவள் சின்னப்பெட்டை யமுனா சரியான குறும்புக்காறி... பாவம்வெண்ணிலா அப்பாவி.

ஆமாம் நிலா அக்கா சரியான அப்பாவி ..!! :unsure:

பாவம் அந்த பாம்பு.. அந்தமனிசி என்ன கறுமத்தை சாப்பிட்டாலும் அதைதானே பாம்பும் சாப்பிட்டு இருக்கும்... :wub::lol::lol:

Edited by தயா

பாவம் அந்த பாம்பு.. அந்தமனிசி என்ன கறுமத்தை சாப்பிட்டாலும் அதைதானே பாம்பும் சாப்பிட்டு இருக்கும்... :lol::lol::lol:

அட பாம்பிற்காக வருத்தபட்ட ஒரே ஆள் நீங்க தான் நீங்க ரொம்ப நல்லவர் போல இருகிறீங்க! :wub: !

அட பாம்பிற்காக வருத்தபட்ட ஒரே ஆள் நீங்க தான் நீங்க ரொம்ப நல்லவர் போல இருகிறீங்க! :lol: !

நல்லவர் போலையா...?? :wub::lol: உண்மையிலேயே நல்லவர்தானுங்கோ... :lol:

போன முறை கூட என்னை பாம்பு கடிக்க துரத்தீச்சுது... நான் அதை திருப்பி துரத்தி கடிக்கவே இல்லை எண்டா பாருங்கோவன்... ! அதை அடிக்க சொல்லி சிலர் சொல்லிச்சினம்... நான் அடிக்க இல்லை... ஏன் எண்டா பாம்புக்கு திருப்பி அடிக்க தெரியாது.....!

நான் பயத்திலைதான் அடிக்க இல்லை எண்டு சொல்லிச்சினம்... நான் எப்பவும் உண்மை பேசினா திருப்பி கதைக்கிற்றது இல்லை எண்டதாலை பேசாமல் வந்திட்டன்...

இது எப்பிடி... :(

( யாரப்பா அது சுயபுராணம் எண்டுறது...??? )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A Huge Striped Reptile Took Up Residence In My Tummy

http://message.snopes.com/showthread.php?t=14935

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் தயா அண்ணை

உதுவும் மேற்கோளாக வந்திடப் போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.