Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல்
26 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்துள்ளனர்.

ஜாபர் சாதிக் எங்கே? டெல்லியில் கைதான 3 பேருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் கூறுவது எனன? திமுகவில் அவர் என்ன பொறுப்பு வகித்து வந்தார்?

டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

டெல்லியில் ஒரு குடோன் வைத்து இயங்கிக்கொண்டிருந்த கும்பலை சமீபத்தில் டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தக்கடத்தல் கும்பல், சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பிபிசியிடம் பேசிய ஒரு அதிகாரி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளே தங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறினார்.

“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இருந்து சூடோபெட்ரைன்(pseudoephedrine) என்ற போதைப்பொருள் கிலோக்கணக்கில் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப்படுவதாகக் கூறினர். அதுவும் சத்து மாவு, தேங்காய் பொடி உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து இந்த போதைப்பொருளை அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் டெல்லியில் இருந்து அனுப்புவதாகத் தகவல் கொடுத்தனர்,”என்றார் அந்த அதிகாரி.

தகவலின் பேரில், சுமார் 30 நாட்களுக்கும் மேலாக, விமான நிலையத்திற்கு வந்து செல்வோர், பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மற்றும் அவர்களின் சந்தேகிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணித்து வந்ததாகக் கூறினார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அந்த அதிகாரி.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

பட மூலாதாரம்,HANDOUT

அப்படி கண்காணித்து வந்தபோது, மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் இருந்து போதைப்பொருள்கள் கலவை தயார் செய்யப்பட்டு, உணவுப்பொருள்கள், சத்துமாவு உள்ளிட்டவையுடன் கலந்து ஏற்றுமதி செய்வது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

“சுமார் ஒரு மாதம் கண்காணித்ததில், உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த குடோனை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சோதனை செய்தோம். சோதனையின்போது, போதைப்பொருளை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்,”என்றார் அந்த அதிகாரி

கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் மற்றும் முஜ்பீர் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அசோக் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சூடோபெட்ரைன் என்ற இரசாயனம், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படக் கூடியது.

உலகளவில், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைபொருளுக்கு சந்தை மதிப்பு மிகவும் அதிகம். போலீசாரின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டாரா ஜாபர் சாதிக்?

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

படக்குறிப்பு,

ஜாபர் சாதிக்

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது,”என்றார்.

இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்? அவர் எங்கே?

ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்

ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு, அந்த வீட்டை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர்.

தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்கை திமுக நீக்க என்ன காரணம்?

ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் கட்சிக்கு என்ன அவப்பெயர் ஏற்படுத்தினார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, திமுக,வைப் பொறுத்தவரையில், எப்போதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது, முதலில் தற்காலிகமாக நீக்கிவிட்டு, உரிய கால அவகாசத்திற்கு பிறகு, நிரந்தரமாக நீக்கப்படுவர். அரிதாகவே, இவ்வாறு முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவார்கள்.

“அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க, பிபிசி சார்பில் ஜாபர் சாதிக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

திரைத்துறையில் ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக் இயக்கிய படங்கள்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

ஐஎம்டிபி அளிக்கும் தகவலின்படி, ஜாபர் சாதிக், வெற்றிமாறன் எழுதி, அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தவிர, இந்திரா, மங்கை மற்றும் மாயவலை ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் ஜாபர் சாதிக் தயாரித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cjrkr9xq7pwo

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க வின் அயலக அணி.....இவையளுக்கு ஒர் நாடு கடந்த அமைப்பு தேவைப்பட்டிருக்கு ? 
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒர் கும்பல் பல வசதிகளுடன் செயல் பட்டிருக்கு அதை அரசு கண்டு கொள்ளவில்லை....இந்த கும்பல் திருச்சி தடுப்பு முகாமிலிருந்து சிறிலங்காவில் சில கொலைகளை செய்துள்ளனர்....

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்த போதை பொருளை இவர்கள் கடத்தியுள்ளனர்...

  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 09:24, ஏராளன் said:

ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடிபடும் வரை ஆகோ ஓகோ என்று வாங்கி பாக்கெட்டில் போட்டிட்டு.. போதைவஸ்து மாபியா.. தி மு க வை தமிழகத்தில் இருந்தே விரட்டாமல்..போதையை கட்டுப்படுத்த முடியாது. இதில சொறீலங்காவுக்கு பாலம் வேற. 

எல்லாம்..ஹராம் ஹராம் என்று கொண்டு இந்த தாடிக்கும்பல் செய்யுற கூத்தே.. தாங்க முடியவில்லை.  அதுகள் உலகம் பூரா வியாபித்திட்டு.. எனி கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 04:24, ஏராளன் said:

அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்

நேர்மையான    கட்சிக்கு  ஜாபர் சாதிக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார். 🙃

  • கருத்துக்கள உறவுகள்
On 29/2/2024 at 01:24, ஏராளன் said:
ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல்
26 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்துள்ளனர்.

ஜாபர் சாதிக் எங்கே? டெல்லியில் கைதான 3 பேருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் கூறுவது எனன? திமுகவில் அவர் என்ன பொறுப்பு வகித்து வந்தார்?

டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

டெல்லியில் ஒரு குடோன் வைத்து இயங்கிக்கொண்டிருந்த கும்பலை சமீபத்தில் டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தக்கடத்தல் கும்பல், சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பிபிசியிடம் பேசிய ஒரு அதிகாரி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளே தங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறினார்.

“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இருந்து சூடோபெட்ரைன்(pseudoephedrine) என்ற போதைப்பொருள் கிலோக்கணக்கில் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப்படுவதாகக் கூறினர். அதுவும் சத்து மாவு, தேங்காய் பொடி உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து இந்த போதைப்பொருளை அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் டெல்லியில் இருந்து அனுப்புவதாகத் தகவல் கொடுத்தனர்,”என்றார் அந்த அதிகாரி.

தகவலின் பேரில், சுமார் 30 நாட்களுக்கும் மேலாக, விமான நிலையத்திற்கு வந்து செல்வோர், பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மற்றும் அவர்களின் சந்தேகிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணித்து வந்ததாகக் கூறினார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அந்த அதிகாரி.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்

பட மூலாதாரம்,HANDOUT

அப்படி கண்காணித்து வந்தபோது, மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் இருந்து போதைப்பொருள்கள் கலவை தயார் செய்யப்பட்டு, உணவுப்பொருள்கள், சத்துமாவு உள்ளிட்டவையுடன் கலந்து ஏற்றுமதி செய்வது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

“சுமார் ஒரு மாதம் கண்காணித்ததில், உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த குடோனை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சோதனை செய்தோம். சோதனையின்போது, போதைப்பொருளை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்,”என்றார் அந்த அதிகாரி

கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் மற்றும் முஜ்பீர் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அசோக் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சூடோபெட்ரைன் என்ற இரசாயனம், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படக் கூடியது.

உலகளவில், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைபொருளுக்கு சந்தை மதிப்பு மிகவும் அதிகம். போலீசாரின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டாரா ஜாபர் சாதிக்?

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

படக்குறிப்பு,

ஜாபர் சாதிக்

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது,”என்றார்.

இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்? அவர் எங்கே?

ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்

ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு, அந்த வீட்டை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர்.

தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்கை திமுக நீக்க என்ன காரணம்?

ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் கட்சிக்கு என்ன அவப்பெயர் ஏற்படுத்தினார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, திமுக,வைப் பொறுத்தவரையில், எப்போதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது, முதலில் தற்காலிகமாக நீக்கிவிட்டு, உரிய கால அவகாசத்திற்கு பிறகு, நிரந்தரமாக நீக்கப்படுவர். அரிதாகவே, இவ்வாறு முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவார்கள்.

“அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க, பிபிசி சார்பில் ஜாபர் சாதிக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

திரைத்துறையில் ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக் இயக்கிய படங்கள்

பட மூலாதாரம்,ARJAFFERSADIQ/X

ஐஎம்டிபி அளிக்கும் தகவலின்படி, ஜாபர் சாதிக், வெற்றிமாறன் எழுதி, அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தவிர, இந்திரா, மங்கை மற்றும் மாயவலை ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் ஜாபர் சாதிக் தயாரித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cjrkr9xq7pwo

சினிமாவில் போதைப்பொருள் கடத்துவார்கள். ஆனால், போதைப்பொருள் கடத்தி சினிமா எடுப்பது இது தான் முதல் தடவை என்று எங்கோ ஒரு பகிடி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

உஷ் உஷ்.....

எனக்கு என்னவோ ஒர் சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கு ....தமிழ் சினிமாவில் பெண்கள் ,ஆண்கள் போதைப்பொருள்,சிகர‌ட் மதுபாணம் போன்றவற்றை பாவிக்கும் காட்சிகள் சர்வசாதார‌ணமாக காட்டுகின்றனர்...இது கடந்த சில வருடங்களாக அதிகமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது .....

தமிழ் நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் குக்கிராமங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது என ஊடகங்கள் கூறுகின்றன....
பஞ்சாப் மாநிலமும் போதை பொருள் அதிகமாக பாவனையுள்ள மாநிலம் என செய்திகள் கூறுகின்றன..

தனி நபர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள செய்கின்றனரா அல்லது சில இனங்களை,சமுகங்களை திட்டமிட்டு அழிக்க செய்யப்படுகின்றதா  ?

  • கருத்துக்கள உறவுகள்

DMK ஆதரவில் போதைப்பொருள் புழங்குகிறது..! - Modi |

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

எல்லாம்..ஹராம் ஹராம் என்று கொண்டு இந்த தாடிக்கும்பல் செய்யுற கூத்தே.. தாங்க முடியவில்லை.  அதுகள் உலகம் பூரா வியாபித்திட்டு.. எனி கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல.

அமெரிக்க உளவு நிறுவனம் தனது நடவடிக்கைகளுக்காக (ஆட்சி கவிழ்ப்பு, அரச எதிர்ப்பு போராட்டங்கள்) ஆசிய நாடுகளில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டது, அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானினூடாக தற்போதும் பெரியளவில் போதைபொருள் இந்தியா இலங்கை போன்ற நாடுக்ளுக்கு கடத்தப்பட்டு வருகிறது, இதற்கு ஏற்ற தொடர்பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் காணப்படுவதால் இந்த நிலை காணப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட சிலரின் செயலுக்கு ஒட்டுமொத்த சமூகத்தினை எவ்வாறு குறை கூறமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

எனக்கு என்னவோ ஒர் சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கு ....தமிழ் சினிமாவில் பெண்கள் ,ஆண்கள் போதைப்பொருள்,சிகர‌ட் மதுபாணம் போன்றவற்றை பாவிக்கும் காட்சிகள் சர்வசாதார‌ணமாக காட்டுகின்றனர்...இது கடந்த சில வருடங்களாக அதிகமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது .....

தமிழ் சினிமா மற்றவர்கள் வீட்டில் பார்த்து கொண்டிருக்கும் போது நானும் ஒரு 10 நிமிடம் இருந்துவிட்டு பொறுமையில்லை (நேரமும் இல்லை )வந்துவிடுவேன். நான் கவனித்த அளவில் மது சிகர‌ட் குடிக்கும் காட்சிகள் படத்தில் அதிக நேரம் எடுத்து காட்டுவது போல இருந்தது. முக்கியம் கொண்டது போன்று இருந்தது. இப்படி குடித்தால் எப்படி வேலைக்கு போவார்கள் என்று நினைத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

உஷ் உஷ்.....

எனக்கு என்னவோ ஒர் சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கு ....தமிழ் சினிமாவில் பெண்கள் ,ஆண்கள் போதைப்பொருள்,சிகர‌ட் மதுபாணம் போன்றவற்றை பாவிக்கும் காட்சிகள் சர்வசாதார‌ணமாக காட்டுகின்றனர்...இது கடந்த சில வருடங்களாக அதிகமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது .....

தமிழ் நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் குக்கிராமங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது என ஊடகங்கள் கூறுகின்றன....
பஞ்சாப் மாநிலமும் போதை பொருள் அதிகமாக பாவனையுள்ள மாநிலம் என செய்திகள் கூறுகின்றன..

தனி நபர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள செய்கின்றனரா அல்லது சில இனங்களை,சமுகங்களை திட்டமிட்டு அழிக்க செய்யப்படுகின்றதா  ?

போராட்ட குணமுள்ள சமூகங்களிலெல்லாம் திட்டமிடப்பட்ட வகையில் போதைப்பொருள் பவனையும் வன்முறையும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு தனிநபர்களைப் பாவிக்கின்றனர். இது வரலாறு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

ஒரு குறிப்பிட்ட சிலரின் செயலுக்கு ஒட்டுமொத்த சமூகத்தினை எவ்வாறு குறை கூறமுடியும்?

சிலர் சேர்ந்து பலராகி இப்ப ஒரு தெளிவான பல்கோண நெட்வேர்கையே கட்டமைச்சிருக்கிறாங்கள். அதன் வருமானம்.. அமெரிக்கப் பொருளாதாரத்தையும் எகிறுது.

நீங்கள் இன்னும்.. கண்ணை மூடிக்கொண்டு பால் குடியுங்க. அது தான் விதிப்பு. அவங்களுக்கு வசதி. 

அவங்க டேட்டி மனியை எப்படி சினிமா மூலம்.. வைட் பண்ணுறாங்க (இப்படி பல மார்க்கங்கள் உண்டு) என்பது கூட விளங்கல்லையன்னா.. நீங்க இன்னும் அந்த குறுகிய சிலருக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருப்பது வியப்பல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் சினிமா மற்றவர்கள் வீட்டில் பார்த்து கொண்டிருக்கும் போது நானும் ஒரு 10 நிமிடம் இருந்துவிட்டு பொறுமையில்லை (நேரமும் இல்லை )வந்துவிடுவேன். நான் கவனித்த அளவில் மது சிகர‌ட் குடிக்கும் காட்சிகள் படத்தில் அதிக நேரம் எடுத்து காட்டுவது போல இருந்தது. முக்கியம் கொண்டது போன்று இருந்தது. இப்படி குடித்தால் எப்படி வேலைக்கு போவார்கள் என்று நினைத்திருக்கிறேன்.

ரஜனி சிகரட்டை எறிந்து வாயினுள் போடுவதை எமது காலத்தில் பார்த்து ரசித்து பழகியவர்களும் உண்டு... ...சில சமயங்களில் இப்படியான காட்சிகள்   தேவைய‌ற்றதாக இருந்தாலும் ஒளிபரப்புகின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

சிலர் சேர்ந்து பலராகி இப்ப ஒரு தெளிவான பல்கோண நெட்வேர்கையே கட்டமைச்சிருக்கிறாங்கள். அதன் வருமானம்.. அமெரிக்கப் பொருளாதாரத்தையும் எகிறுது.

நீங்கள் இன்னும்.. கண்ணை மூடிக்கொண்டு பால் குடியுங்க. அது தான் விதிப்பு. அவங்களுக்கு வசதி. 

அவங்க டேட்டி மனியை எப்படி சினிமா மூலம்.. வைட் பண்ணுறாங்க (இப்படி பல மார்க்கங்கள் உண்டு) என்பது கூட விளங்கல்லையன்னா.. நீங்க இன்னும் அந்த குறுகிய சிலருக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருப்பது வியப்பல்ல. 

ஒரு சமுகத்தை குறை கூறமுடியாது என கூறுவது யாழ் கள உறவுகளின் உன்னத மனம்பான்மையை காட்டுகிறது ....
ஆனால் அந்த சமுகத்தில் (சமுகம் X என வைத்து கொள்வோம்)90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் .அந்த போதனையை மறுபரிசீலனை
செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர்...

அண்மையில் கூத்தி தீவிரவாதிகள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கப்பலை கடத்தும் பொழுது  சமுகம் X தங்களது இறைவனின் பெயரை சொல்லி தான் கடத்துகிறார்கள்...இதிலிருந்து தெரிய வருவது  சமுகம் X தங்களது கொள்கையை உலகம் 
பூராவும் பறப்ப எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று ...இன்று சமுகம் X இன் தூர நோக்கு உலகை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவது ....முதலில் இந்தியாவை சமுகம் X தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர வேணும்....அதிலும் மன்னார் ,ராமேஸ்வரம் ,யாழ்ப்பாணம் பகுதிகளை  (golden triangle).....அதிக அக்கறை உண்டு....

 யாவும் கற்பனையல்ல

11 hours ago, Kapithan said:

போராட்ட குணமுள்ள சமூகங்களிலெல்லாம் திட்டமிடப்பட்ட வகையில் போதைப்பொருள் பவனையும் வன்முறையும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு தனிநபர்களைப் பாவிக்கின்றனர். இது வரலாறு. 

அந்த தனிநபர்கள் தங்கள் சமுகத்தை பாதுகாத்து ஏனைய சமுகத்தை சீரழிக்க தயங்குவதில்லை அது அவர்களது போதனைகளில் ஒன்று 

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசும் பங்காளியா?பலியாகப் போவது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

ஒரு சமுகத்தை குறை கூறமுடியாது என கூறுவது யாழ் கள உறவுகளின் உன்னத மனம்பான்மையை காட்டுகிறது ....
ஆனால் அந்த சமுகத்தில் (சமுகம் X என வைத்து கொள்வோம்)90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர் .அந்த போதனையை மறுபரிசீலனை
செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர்...

அண்மையில் கூத்தி தீவிரவாதிகள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கப்பலை கடத்தும் பொழுது  சமுகம் X தங்களது இறைவனின் பெயரை சொல்லி தான் கடத்துகிறார்கள்...இதிலிருந்து தெரிய வருவது  சமுகம் X தங்களது கொள்கையை உலகம் 
பூராவும் பறப்ப எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று ...இன்று சமுகம் X இன் தூர நோக்கு உலகை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவது ....முதலில் இந்தியாவை சமுகம் X தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர வேணும்...

உண்மைகளை தவிர வேறு இல்லை.
அது ஏன் அண்ணா அது ஏன் அண்ணா முஸ்லிம் மதத்தை மட்டும் X  என்று சொல்ல வேண்டும்?
இந்துக்கள் கெட்டது செய்தால் இந்துக்கள் செய்துவிட்டார்கள் என்று தாராளமாக சொல்லலாம் ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம் மதபோதனைபடி தீமைகள் செய்தால் மட்டும் அவர்களாக செய்யவில்லை அமெரிக்கா வந்து சதி வேலை செய்து அந்த மதத்தில் உள்ள சிலரை தவறு செய்ய வைத்துவிட்டனர்.அதற்கு முஸ்லிம் மதத்தை குறைசொல்ல கூடாது.அது தான் அமைதியான ஒரே ஒரு மதம்.எல்லோரும் சேர வேண்டிய மதம் 🙆‍♂️

[90 வீதமானவர்கள் மத போதனைகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்  அந்த போதனையை மறுபரிசீலனை செய்வதையோ அல்லது மாத்தி யோசிப்பதையோ மகாபாதக செயலாக கருதுகின்றனர் ]

அந்த முஸ்லிம் மதத்தில் கூட நான் இதை எல்லாம் பின்பற்ற மாட்டேன்  ஏற்று கொள்ள மாட்டேன்
அவசியம் காலத்திற்கு ஏற்ப முஸ்லிம்மத போதனைகள் மறுபாசீலனை செய்யபட வேண்டும்
என்று சொல்லும்  நல்வர்கள் உள்ளனர்.   இந்த வெள்ளை அடிக்கும்  உன்னதமானவர்கள் அந்த நல்ல முஸ்லிம்களுக்கும் தீமை செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி அடிக்கடி கென்யா சென்ற Jaffar Sadhik ? - Major Madhan Kumar

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமகாலத்தில் ( பனிப்போர் காலம்) இந்த பிராந்தியம் தவிர தென் கிழக்காசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே போன்ற  சம்பவம் நிகழ்ந்தேறியது, ஆனால் அங்கு வேறு வேறு மதங்கள் இருந்தன அதற்காக குறித்த மதங்களை யாரும் குற்றம் சாட்டவில்லை, அதே போல் எந்த மதத்திலும் போதை பொருள் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை.

ஆனால் அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது, இந்த வட்டத்திற்குள் நின்று எந்த மதத்தினையும் குறை கூறுவது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவது போலாகும்.

ஒரு பெரும்பான்மையினத்தவர் சிவலிங்கத்தினை பற்றி கேவலமாக கூறினார் (அதனை சைவர்கள் உலகின் படைப்பாக கூறுவர் என நினைக்கிறேன்), அவரிடம் அதற்கான அறியும் ஆர்வம் இருக்கவில்லை, அவரது நோக்கம் கேவலப்படுத்துவதுதான், அவரவர் தாமாக  ஒரு நிலைப்பாடாட்டினை எடுத்து அதற்கு கூறும் காரணங்களை அவர்கள் தம்முடனேயே பொருத்தி பார்க்க தவறுவதாலேயே இவ்வாறான கருத்துகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கும் அவர்கள் குற்றம் சாட்டபடுவர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர்க‌ள‌ல் தான் யாழ்பாண‌ம் எங்கும் இப்ப‌த்த‌ பெடிய‌ங்க‌ள் போதையில் மித‌க்கின‌ம்

2009க‌ளில் எம் இன‌த்தை அழிக்க‌ துணை போனார்க‌ள் 

இப்போது க‌ஞ்சா மூல‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் எதிர் கால‌த்தை நாச‌ம் செய்கின‌ம்................திராவிட‌ மாட‌ல் ஆட்சி சும்மா சொல்ல‌க் கூடாது அந்த‌ மாதிரி ந‌ட‌க்குது

முகா ஸ்ரேலின் ஜ‌யாவுக்கு எல்லாரும் ஜோரா கைத‌ட்டுங்கோ...................

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, இருந்து வருகின்றது மறுக்க முடியாதது. மற்றய மதங்கள் சில சில மாற்றங்கள் செய்து கொஞ்சம் சீர்படுத்தி வருகிறார்கள்.ஆனால் முஸ்லிம் மதம் மட்டும் இன்னும் பழைய காட்டு சட்டங்களை இறைவன் அருளியவை என்றும் உலக அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டியவை என்று சொல்லி வருகின்றது. அதை அந்த மதத்தை சேர்ந்த 90 வீதமானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட மதகட்டளையாக பின்பற்றுகின்றனர். மற்றய மதங்களில் அப்படி இல்லை. கிறிஸ்தவ நாடுகளில் வசித்தபடி கிறிஸ்தவ மதத்தை சுதந்திரமாக விமர்சிக்கலாம் இந்தியாவில் கூட இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள் ஆனால் முஸ்லிம் நாடுகளில் அந்த மதத்தை விமர்சித்த முஸ்லிம்களுக்கு நடந்த நிலை அதிர்ச்சி தருவதாக உள்ளது.இந்து கிறிஸ்தவ புராண கற்பனை கதைகளை நம்பாதவர்கள் அந்த மதங்களில் இருக்கின்றனர்.அவர்களை கொன்றால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று அந்த மதங்களை சேர்ந்தவர்கள் அவர்களை கொலை செய்வது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்ப்பூரில் சிக்கிய ஜாபர் சாதிக் - பல கோடி போதை வர்த்தகம் - ஒப்புதல் வாக்குமூலம் - Major Madhan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த pseudoephedrine பிடிபட்டது சரி அது எங்கிருந்து வந்தது ? தமிழ்நாட்டில் இருந்துதான் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் ? என்ற விபரங்களை இந்த மழைக்கு  முளைத்த காளான் யுடிப்பர் கூட்டம் கூட ஏன்  மறைக்கின்றனர்?

தமிழ்நாட்டில் டெண்டர் விட்டார்கள் அதை யார் எடுத்தார்கள் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள்  தற்போது இதைப்பற்றி எல்லாம் ஏன் சொல்ல மறைக்கிறார்கள் ?

ஜாபர் கைது  பேருக்கு நாலு  பேர் கைது அத்துடன் இந்த செய்தியை விட்டு வேறு செய்திக்கு மாறி விடுவார்கள் காரணம் இங்கு எழுதமுடியாது பல ரில்லியன் புழங்கும் அரசியல் சதுரங்கம் .

கூகிளில் கிண்டுபவர்களால் உண்மையை கொண்டுவர முடியும் முடிந்தால் கிண்டுங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜாபர் சாதிக் கைதை அரசியலாக்குகிறதா போதைப் பொருள் தடுப்பு பிரிவு? - முன்னாள் அதிகாரிகள் சொல்வது என்ன?

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

அவர் கைதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அவற்றில், முக்கியமாக, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார், அவர் அந்தப் பணத்தில்தான் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொது வெளியில் பகிர்ந்து கொண்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், இதற்கு முன் இத்தகைய வழக்குகள் இப்படியாகக் கையாளப்படவில்லை என்றும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் செயல் சட்டத்திற்கு உட்பட்டதா? இதில், அரசியல் நோக்கம் உள்ளது எனும் வாதத்தை முன்னாள் காவல்துறை அதிகாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

போதைப் பொருள் தடுப்பு பிரிவு

பட மூலாதாரம்,HANDOUT

என்ன நடந்தது?

போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்களில் ஒன்றான சூடோபெட்ரைன் (pseudoephedrine), வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து., திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின், டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டினர்.

ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராகாததை எடுத்து, ஜாபர் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டுக்கு சீல் வைத்தனர்.

ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய அவரது வீட்டில் இருந்த சிசிடிவி தொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் டெல்லி கொண்டு ஆய்வு நடத்தினர்.

இதனிடையே, ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர்.

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,HANDOUT

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியது என்ன?

ஜாபர் சாதிக் கைது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக்கின் முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழ்நாடு போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

"சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது.

"அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர்.

"போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது.

"சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (மார்ச் 9) கைது செய்துள்ளோம். போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

"உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது.

"போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

போதைப் பாெருள் தடுப்பு பிரிவு அதிகாரி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங்

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பேசியது சரியா?

ஆனால், ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அந்த வழக்கு குறித்த தகவல்களை வெளியிடுவது சட்டப்படி சரியா, இது இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து முன்னாள் ஏடிஜிபி-யான திலகவதி ஐபிஎஸ்-இடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அப்போது, அவர் இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை என்றாலும், அது அறம் இல்லை என்றார்.

“இந்த விவகாரத்தில் சட்டப்படி அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு இல்லை. ஏனென்றால், இதை சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என சட்டத்தில் எதுவும் இல்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு என்று உள்ள அறம் இங்கு மீறப்பட்டிருக்கிறது. தகவல் சொன்னவர் குறித்தும், அவர் என்ன என்ன விஷயங்களை சொல்லியிருக்கிறார் என்பது குறித்தும் பொது வெளியில் பகிரக்கூடாது,” என்றார் திலகவதி.

அப்படி பகிர்வதில் என்ன தவறு எனக் கேட்டபோது, “பிடிபட்ட நபர் ஒரு போதைப் பொருள் கடத்தியவர் மட்டுமே. ஆனால், இவருக்கு பின்னால் ஒரு பெரிய விநியோகச் சங்கிலி இருக்கும்.இவருக்கு கொடுக்கிறவர்கள் யார், இவர் யாருக்கெல்லாம் கொடுக்கிறார்கள் உள்ளிட்ட தகவல்களை முழுமையாகப் பெறாமல், அவர்களை பிடிக்காமல், இப்படி அனைத்து தகவல்களையும் வெளியிடுவது, வழக்கைத்தான் பாதிக்கும்,” என்றார்.

மேலும், இந்த வழக்கின் நோக்கமே கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும் திலகவதி கூறினார்.

“இவர் ஒரு சிறு வியாபாரி தான். இவர் குறித்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இந்த வழக்கின் நோக்கமே கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்கள் நோக்கம் போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பிடிப்பதா, அல்லது அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதா, எனத் தெரியவில்லை,” என்றார் திலகவதி.

இந்தியா முழுவதும் இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு அரசியல் பின்புலங்கள் இருப்பதாகக் கூறும் திலகவதி, “இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. இதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியையும் குற்றம்சாட்ட முடியாது. ஒவ்வொருவர் குறித்தும் முழுமையாக விசாரித்து கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்,” என்றார்.

ஆனால், ஜாபர் சாதிக் விஷயத்தில், வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு தங்களின் பொறுப்பில் இருந்து முற்றிலுமாக தவறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் காவல்துறை டிஜிபி ஒருவர் கூறினார்.

“எல்லா புலனாய்வு அமைப்புகளும் வெளிப்படையாக பொது மக்களிடம் வந்த என்ன நடந்தது என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை. சில அமைப்புகள் ரகசியமாகத்தான் செயல்பட வேண்டும்.

"அப்படிப்பட அமைப்புகளில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும் ஒன்று. இதுநாள் வரை, வெகுஜன மக்களுக்கு இப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாமல் இருந்திருக்கும். இப்போது, ஜாபர் சாதிக் விஷயத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதில் இருக்கும் அதிகாரிகளையும் தெரிந்துவிட்டது. இது ஒரு தவறான முன் உதாரணம்,” என்றார்.

சட்டம் மற்றும் ஒழுக்கு போலீசார் மட்டும் பொது மக்களிடம் ஒரு வழக்கு குறித்து என்ன நடந்தது என்று பேசுவதற்கான தேவை உள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் டிஜிபி, “அது பொது மக்கள் அச்சமின்றி இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாக உத்தரவாதம் அளிப்பதற்கும் செய்யும் செயல். ஆனால், அனைத்து விசாரணை அமைப்புகளும் அப்படி இருக்க வேண்டியதில்லை,” என்றார்.

ஜாபர் சாதிக்

பட மூலாதாரம்,ANI

திமுக என்ன சொல்கிறது?

இந்த வழக்கில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டியது. மேலும், திமுக மற்றும் திமுக தலைவர் மீது போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புப்படுத்தி ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தால், குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி வில்சனும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறினர்.

“வழக்கு விசாரணையில் இருக்கும்போதே வழக்கு தொடர்பான தகவல்களை ஊடகங்கள் முன் வெளியிட்டது பாஜக அரசியல் ஆதாயம் அடைவதற்காகத்தான்,” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.

மேலும், ஜாபர் சாதிக் திமுக,வில் பொறுப்பில் இருந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கட்சியில் உள்ள இரண்டு கோடி உறுப்பினர்களின் பின்புலன்களை சரி பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது, என்றார்.

இதேபோல, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி அதிமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையில், வழக்கு தொடர்பான தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் கேட்டபோது, வழக்கு தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எதுவும் கேட்கவில்லை என்றும், கேட்டால், அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு காவல்துறை தர தயாராக உள்ளோம், என்றார்.

“மத்திய ஏஜென்சிகள் போதைப் பொருட்கள் பறிமுதலை விட, தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம். மொத்தம் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்கு சென்னையில் உள்ளது. முதல் வழக்கு 2013ஆம் ஆண்டு எம்.கே.பி. நகர், ஆர்.கே.நகரில் உள்ளது,” என்றார்.

மேலும், ரூ.2,000 கோடி அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் குறித்து கேட்டபோது, வழக்கு தொடர்பாக பேச மறுத்த சங்கர் ஜிவால், இந்த போதைப் பொருள் எடை மற்றும் அவற்றின் மதிப்பை கணக்கிடுவதில் தவறிருப்பதாகக் கூறினார்.

“பிடிபட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடியாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, கடத்திய பொருட்களின் மதிப்பும் ரூ.2,000 கோடியாக இருக்க வாய்ப்பில்லை. இங்கிருந்து கடத்திய மூலப்பொருட்களைக் கொண்டு, வேறு நாட்டில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பொருளின் மதிப்புதான் ரூ.2,000 கோடியாக இருக்கும். அந்த மதிப்பை கணக்கிடுவதில்தான் தவறு உள்ளது,” என்றார் சங்கர் ஜிவால்.

https://www.bbc.com/tamil/articles/cv2ypnx4m2mo

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2024 at 10:12, பெருமாள் said:

இந்த pseudoephedrine பிடிபட்டது சரி அது எங்கிருந்து வந்தது ? தமிழ்நாட்டில் இருந்துதான் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் ? என்ற விபரங்களை இந்த மழைக்கு  முளைத்த காளான் யுடிப்பர் கூட்டம் கூட ஏன்  மறைக்கின்றனர்?

தமிழ்நாட்டில் டெண்டர் விட்டார்கள் அதை யார் எடுத்தார்கள் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள்  தற்போது இதைப்பற்றி எல்லாம் ஏன் சொல்ல மறைக்கிறார்கள் ?

ஜாபர் கைது  பேருக்கு நாலு  பேர் கைது அத்துடன் இந்த செய்தியை விட்டு வேறு செய்திக்கு மாறி விடுவார்கள் காரணம் இங்கு எழுதமுடியாது பல ரில்லியன் புழங்கும் அரசியல் சதுரங்கம் .

கூகிளில் கிண்டுபவர்களால் உண்மையை கொண்டுவர முடியும் முடிந்தால் கிண்டுங்கள் .

போதைப் பொருள் வியாபாரத்தைத் தடை செய்யும் நோக்கம் இல்லை.

மாறாக இதை வைத்து எதிராக செயல்படும் கட்சிகளை எப்படி தடை செய்யலாம் என்பதே அடிபடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

போதைப் பொருள் வியாபாரத்தைத் தடை செய்யும் நோக்கம் இல்லை.

மாறாக இதை வைத்து எதிராக செயல்படும் கட்சிகளை எப்படி தடை செய்யலாம் என்பதே அடிபடுகிறது.

நீங்கள் சொல்வ‌து போல் தான் நானும் அறிந்தேன்.............இது முற்றிலும் திமுக்காவை பாதிக்கும்.............உத‌ய‌நிதிக்கு இதில் ப‌ங்கு உண்டு.............ஊமை குத்து குத்தினால் எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும்............

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

நீங்கள் சொல்வ‌து போல் தான் நானும் அறிந்தேன்.............இது முற்றிலும் திமுக்காவை பாதிக்கும்.............உத‌ய‌நிதிக்கு இதில் ப‌ங்கு உண்டு.............ஊமை குத்து குத்தினால் எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும்............

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய தண்டனை 10 வருடங்கள் தானாமே.

பத்து வருடமென்றால் கூட்டிக் கழித்து 8 வருடத்தில் ஆள் வெளியே வந்து சேர்த்த பணத்தில் ஆட்டம் போடலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.