Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்

1709350973-IMG-20240301-WA0052.jpg

யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர்,  துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். 

அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி  துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
 
இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

17093509730.png17093509731.png17093509732.png17093509733.png17093509734.png17093509735.png

https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல்.
இதில் பங்குபற்றியவர் உறவினர் மூலம் அறிந்தேன். சிங்கலவர்களும், அவுஸ்ரெலியா, கனடா, பிரான்ஸ் தமிழர்களும்  பங்கபற்றி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் ஓடினம் சரி.. எவ்வளவு காசு எப்படி வசூல் பண்ணினம்..??! வெளிநாட்டில் இருந்து போய் உள்ளுர் மக்களிடம் வசூல் பண்ணினமா.. இல்லை உதவி செய்யுறம் என்பதற்கு விளம்பரமா..??! இல்லை ஆல் இன் ஒன்னா. 

உண்டியல் குலுக்கினதாகவும் தெரியல்ல. போஸ் கொடுக்கிறது தான் தெரியுது. 

என்ன சைக்கிளில் சொறீலங்கா ரூர். அமேசிங். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதில் பங்குபற்றியவர் உறவினர் மூலம் அறிந்தேன். சிங்கலவர்களும், அவுஸ்ரெலியா, கனடா, பிரான்ஸ் தமிழர்களும்  பங்கபற்றி உள்ளார்கள்.

ஆக புலம் பெயர்ந்தவர்கள், இப்பொழுது வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

சைக்கிள் ஓடினம் சரி.. எவ்வளவு காசு எப்படி வசூல் பண்ணினம்..??! வெளிநாட்டில் இருந்து போய் உள்ளுர் மக்களிடம் வசூல் பண்ணினமா.. இல்லை உதவி செய்யுறம் என்பதற்கு விளம்பரமா..??! இல்லை ஆல் இன் ஒன்னா. 

உண்டியல் குலுக்கினதாகவும் தெரியல்ல. போஸ் கொடுக்கிறது தான் தெரியுது. 

என்ன சைக்கிளில் சொறீலங்கா ரூர். அமேசிங். 

தேசிய நல்லிணக்கம் என்ற சிறிலங்காவின் கொள்கையை ஐ/நாசொல்லுவதற்கு....சிங்கள தமிழ் புலம்பெயர் உறவுகள்  தெரிந்தோ தெரியாமலோ உதவுகிறார்கள் ...10 , வருடங்களாக
நடை பெறுகிறது,,,
இது ஒர் தனியார் மருத்துவ மனை.....
இவ்வளவு பேருக்கும் விமான டிக்கட்,சைக்கிள்கள் மற்றும், ஏனய செலவுகளை கொடுத்தாலே மருத்துவ மனை க்கு நல்ல பணம் வரும்.....ஆனால் அதை விட நல்லிணக்கம்  என்ற படம் காட்ட இது முக்கியம் கண்டியளோ.....
எதோ தேனும் பாலும் ஒடுகிற நாட்டில் சைக்கிள் ஒடுவது போல காட்சி படுத்துகிறார்கள் ...

கிழக்கிலிருந்து வடக்கிற்கு  சைக்கிள் ஒட சொல்லுங்கோ ....செய்ய மாட்டினம்...
அமெரிக்கா சொல்லிச்சோ தெரியவில்லை நல்லிணக்க சைக்கிளை நீங்கள் ஒடுங்கோ ,எங்க‌ன்ட மிசனரி பணத்தை அள்ளி தரும் என்று.....
ஆண் குதிரைகள் என்ற கிரிக்கட் குழுவை உருவாக்கிய ஜாம்பவான்கள் இதிலிருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

வெள்ளைக்கு எங்க போனாலும் பன் னுக்கு ஆக்கள் தேவை. இப்படியான எங்கட வெங்காயங்களுக்கு தங்கட மேக்ப் மூஞ்சிக்கு விளம்பரம் தேவை. அப்புறம் என்ன.. மருத்துவமனையில் பெயரால்.. கிளப்படா கிளியப்பட்ரோ என்றிருப்பாங்கள். கிளப்பியாச்சு. அதிலும் நம்ம ஊடகங்கள் இருக்கே.. ஊரில எதை சுட்டிக்காட்டி சமூகத்தை நாட்டை வழிநடத்தனும் என்ற விவஸ்தை இல்லை. அதுகளும் மேக்கப் பின்னாடியும் தோல் கலருக்கு பின்னாடியும் திரியுதுங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

ஆக புலம் பெயர்ந்தவர்கள், இப்பொழுது வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்

இப்படியும் தலையங்கம் போடுகிறார்கள்....
 
"யாழ் மக்களை பார்க்க   பொலிஸ் பாதுகாப்புடன் வந்த புலம்பெயர் தமிழர்கள்" ...இந்த தலையங்கம் எப்படி? யூ டியுப்பரின் தலையங்கம்

7 minutes ago, nedukkalapoovan said:

வெள்ளைக்கு எங்க போனாலும் பன் னுக்கு ஆக்கள் தேவை. இப்படியான எங்கட வெங்காயங்களுக்கு தங்கட மேக்ப் மூஞ்சிக்கு விளம்பரம் தேவை. அப்புறம் என்ன.. மருத்துவமனையில் பெயரால்.. கிளப்படா கிளியப்பட்ரோ என்றிருப்பாங்கள். கிளப்பியாச்சு. அதிலும் நம்ம ஊடகங்கள் இருக்கே.. ஊரில எதை சுட்டிக்காட்டி சமூகத்தை நாட்டை வழிநடத்தனும் என்ற விவஸ்தை இல்லை. அதுகளும் மேக்கப் பின்னாடியும் தோல் கலருக்கு பின்னாடியும் திரியுதுங்க. 

எனக்கு தமிழ் தெரியும் என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாதுதுது...என மேட்டுக்குடி டமிழ் பெண்மணி சொல்கின்றார்...

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் சிவப்பு வர்ணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் கொடி கட்டவில்லை. இல்லாவிட்டால் கருத்துக்கள் கூறும் சிலருக்கு புகையாது. சிலவேளைளில் தம்மைவிட கற்றவர்கள், முன்னேறியவர்கள் ஏதும் நல்லது செய்து பெயர் எடுக்கின்றார்கள் என்று புகையிதோ தெரியாது. இளனி குடித்து பார்க்கலாமே.  

மானிப்பாய் வைத்தியசாலை மீது ஒரு காலத்தில் விமான குண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்ட சில தினங்களில் அழிவை பார்த்தேன்.  மீண்டும் நல்ல நிலைக்கு வர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரி....
.இந்த வைத்தியசாலை போருக்கு முன்னே பாழடைய தொடங்கி இருந்தது 50 வருடங்களுக்கு முன்பே நான் சிறுவனாக இருக்கும் பொழுதே இதன் கட்டிடங்கள் யாவும் இடியும் நிலையில் தான் இருந்தது....
இப்பொழுது குஞ்சம் கட்ட தொடங்கியுள்ளனர் .....

இங்கு பணம் செலுத்தி தான் சிகிச்சை பெற வேண்டும்....இலவச மருத்துவ மனை அல்ல ...
 புலம்பெயர்ந்த் புண்ணியவான் கள் தங்கள் பெற்றோரை இறுதி காலத்தில் அங்கு அனும்திக்க்கோ அல்லது தாங்கள் அங்கு போய் வச்தியாக இறுதி காலத்தை கழிக்க இப்படி  செய்கின்றனரோ தெரியவில்லை ....

ஏதோ நல்லது நடந்தால் சரி....

மஞ்சள் சிவப்பு கொடி பறந்திருந்தால் சிறப்பாக‌ இருந்திருக்கும் ...அவர்களின்  safty first ஆடைகளுக்கு அமைய இன்னும் வர்ண‌மாக ஜொலித்திருக்கும் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

சைக்கிள் ஓடினம் சரி.. எவ்வளவு காசு எப்படி வசூல் பண்ணினம்..??! வெளிநாட்டில் இருந்து போய் உள்ளுர் மக்களிடம் வசூல் பண்ணினமா.. இல்லை உதவி செய்யுறம் என்பதற்கு விளம்பரமா..??! இல்லை ஆல் இன் ஒன்னா. 

நல்ல கேள்வி!

விடை கிடைக்கும் வரை பொறுமை காக்கலாமே, 

அல்லது விடை தெரிந்து வைத்துக்கொண்டுதான் திட்டத் தொடங்குகிறீர்கள் என்றால், அதை எங்களுக்கும் சொல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

சைக்கிள் ஓடினம் சரி.. எவ்வளவு காசு எப்படி வசூல் பண்ணினம்..??! வெளிநாட்டில் இருந்து போய் உள்ளுர் மக்களிடம் வசூல் பண்ணினமா.. இல்லை உதவி செய்யுறம் என்பதற்கு விளம்பரமா..??! இல்லை ஆல் இன் ஒன்னா. 

நம்ம நண்பர்கள் (அவுஸ், கனடா, இங்கிலாந்து) ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சைக்கிள் ஓடினார்கள். Online மூலமாக பணம் சேர்த்தார்கள்.

http://www.ride4ceylon.com

இந்தமுறை கண்டியில் இருந்து மானிப்பாய் வந்திருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kavi arunasalam said:

ஆக புலம் பெயர்ந்தவர்கள், இப்பொழுது வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்

உண்மை அது தானே அய்யா
யாழ்களத்தை எடுத்து கொள்ளுங்கள் ஈழத்தில் உள்ள தனிஒருவன், குருஸ்சோ ,இந்திய தமிழ் உறவுகள் ராசவன்னியன் அண்ணா, சோமசுந்தரம் அய்யா, புரச்சிதேசிகன் மற்றும் இலங்கை எப்போதும் தமிழன் ,அக்னியஷ்த்ரா ,கொழும்பான்   இவர்களை தவிர மற்றவர்கள்  மேட்டுகுடி வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மற்றவர்கள் மேட்டுகுடி வெளிநாட்டவர்கள் ஆகிவிட்டார்கள்.

ஆக்கிவிட்டார்கள்

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நம்ம நண்பர்கள் (அவுஸ், கனடா, இங்கிலாந்து) ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சைக்கிள் ஓடினார்கள். Online மூலமாக பணம் சேர்த்தார்கள்.

http://www.ride4ceylon.com

இந்தமுறை கண்டியில் இருந்து மானிப்பாய் வந்திருக்கின்றனர்.

சேர்த்தார்கள் சரி. எவ்வளவு சேர்த்தார்கள். எவ்வளவை கையளித்தார்கள்.. என்ன வேலைத்திட்டம். இதே தனியார் வைத்தியசாலைக்குத் தானோ?. ஆனால் சமூகம் ஏதோ மானிப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு செய்வது போன்ற சாயலில்.. நூல் விட்டிருந்தது அதுதான்.

ஏதோ நன்மைக்கு நடந்தால் சரி. ஆனால்.. மக்களிடம் மருத்துவச் செலவுக்கு என்று தனியார் மருத்துவமனைகளும் அங்கு விசிட் அடிக்கும் வைத்தியர்களும் அடிக்கும் கொள்ளைக்கு யார் தான் முடிவெழுதுவதோ..??!

ஒரு வைத்தியரை காண...5000 என்றால்.. அவர் சொல்லுற சோதனைகளை உடன செய்து முடிக்க ஒரு 20,000 பின் மீண்டும் அந்த றிப்போட்டோடு வைத்தியரை காண.. மீள ஒரு 5000 அதன் பின் அவர் எழுதும் மருந்துகள்.. இஸ்தியாதிகள்.. அதுவும் அங்க அந்த மருத்துவனை மருந்தகத்தில் தான் வாங்கனும்.. அதுக்கு தனிய ஒரு 20,000

அதில வைத்திசாலை அன்ட்மின் காசு வேற.. 5000 ஆக.. சிங்கிள் விசிட்டில.. 55,000 காலி .  இது பருமட்டானது. இதில ஸ்பெசலிஸ்டு.. கென்சல்ட்டனு.. இன்னும்.. பிசி டாக்டரு.. இவைக்கு விலை தலைக்கு மேல.. விலை வைச்சுத்தான் அழைக்கனும். 

இவ்வளவு செலவு செய்து.. உள்ளூர் மக்கள் எப்படி நோயை குணமாக்க நினைப்பாங்க. நோயை புறக்கணிச்சு வாழ நினைப்பாங்களா.. இல்லை.. கடன உடன வாங்கி.. காசைக் கொட்டிட்டு.. பின் உடல் நோயோடு மன அழுத்தத்தையும் வாங்கிக்குவாங்களா..??!

வெளிநாட்டில் இருந்து விட்டு... போற கொலிடேயோட... சைக்கிள் ஓடி பணம் சேர்த்து ஒரு வைத்தியசாலையை தரமுயற்திறது நல்ல விசயம் தான். ஆனால்.. அதனை நாம் சரியான மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகைக்கு செய்யுறமா என்று சிந்திக்க மாட்டினமோ இவை..?! அந்தளவுக்கு மூளை இல்லை. வெளிநாட்டில.. ஒரு பவுன் முதலீடு என்றாலும் ஆயிரம் யோசிக்கிற வெள்ளை உதெல்லாம் உவைக்கு கற்றுக் கொடுக்காமலா விட்டான்..??!

குறைந்தது... வருமானம் குறைந்த மக்களுக்காவது இலவச மருத்துவ சிகிச்சை.. ஆலோசனை.. வழங்குவினமா..???! மானிப்பாய் ஒன்றும் சிட்னி.. ரொரான்டொ.. லண்டன்.. நியோர்க்கில் இல்லை தானே.. என்று நம்புறம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நிறைய சந்தர்ப்பங்களில் சரிட்டி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறோம். வழமையா நிகழ்வின் முடிவில் அன்பளிப்புத் தொகை.. இவ்வளவு இன்ன வைத்தியசாலைக்கு.. இன்ன பகுதிக்கு வழங்குறம் என்று ஒரு அன்பளிப்பு செக் வடிவில்.. காண்பித்து..  பொதுவெளிக்கும் அறிவிக்க செய்து தான் கொடுப்பது. ஏனெனில்.. ஆன்லைனில் காசு கொடுத்தது.. பப்ளிக். அவனுக்கு/அவளுக்கு தெரியனும்.. தனது பங்களிப்பு சரியாத் தான் போய் சேர்ந்திருக்கான்னு. அதை தெரிந்து கொள்வது அவர்களின் உரிமை. வெள்ளைகளும் அப்படித்தான் பெரும்பாலும் செய்யினம். இங்க சைக்கிள் ஓடினவைக்கு ஏதோ ரேஸ் ஓடின கணக்கா பதக்கம்.. மண்ணாங்கட்டி.. உந்த அநாவசிய செலவுகளை குறைச்சு அதனையும் சேர்த்து வைத்தியசாலையை தரமுயற்த்த வழங்கலாம் தானே.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஒருபகுதி ஒவ்வொன்றாய்  கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழர் பகுதியில் பத்து பத்தாய்  தகர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது,

தமிழர் பிரதேசங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் எதுவும் செய்யபோவதில்லை, சிங்கள அரசியலும் பெரிதாய் கண்டுகொள்ள போவதுமில்லை, கையில் காசு உள்ளவர்கள் அவரவர் தனிப்பட்ட முறையில் தமது வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்,

இடிந்து தகர்ந்து போயிருந்து படிப்படியாக உருப்பெற முனையும் எம் மண்ணுக்கு எவர் வந்து உதவி பண்ணினாலும் நன்றியுடன் கைப்பற்றுவோம்.

வெளிநாட்டிலிருந்து வந்து கல்கிசை பீச்சிலும், கண்டி தெப்ப குள பக்கமும் திரியாமல் எம் தாயக பிரதேசத்திற்கு தம்மால் முடிந்ததை செய்த இவர்கள்  நன்றிக்குரியவர்கள்.

இது உதவி என்ற ஒரு கோணத்தை விட்டு மறு கோணத்தில் பார்த்தால், இவர்களுக்குள்ள தொடர்புகளும் சர்வதேச ஊடக பார்வையும் நாம் ஆயிரம் செய்தாலும் கவன ஈர்ப்பை பெறாத இலங்கையின் வடபுலத்தின் மீதான சர்வதேச விழிப்புணர்வு.

எமக்குள் நாமே வசனங்கள் விவாதங்கள் கண்ணீர் அஞ்சலிகள் நடத்தியதால்தான் இறுதிபோர்வரை சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியவில்லை, அந்நாளில் சிறு அளவுகூட எமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை, 

முடிந்ததெல்லாம் முடிந்தாயிற்று இதுபோன்ற நிகழ்வுகளால் சிறுதுளியாயினும் எதாச்சும் நாம் கவனம் பெற்றால் மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

எமக்குள் நாமே வசனங்கள் விவாதங்கள் கண்ணீர் அஞ்சலிகள் நடத்தியதால்தான் இறுதிபோர்வரை சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியவில்லை, அந்நாளில் சிறு அளவுகூட எமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை, 

அதாவது உங்கள் பார்வையில் இறுதிப் போர் வரை சர்வதேச கவனத்தை யாரும் இழுக்கல்லை..?????!

அல்லது இழுத்த கவனம் காணாதா..??!

அல்லது கண்டும் காணாமலும் விட்டவையா..??!

invitation.jpeg

1848 ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க - சிலோன் மிசன்.. இவை போர் காலத்தில் எல்லாம் எங்க இருந்தவை. ஓ... கவனை ஈர்ப்புக் காணாமல் இருந்திருப்பினம். ம்ம்ம்.

நம்ம தவறுதான்.

நீங்க லைக் போட்டு மகிழுங்கண்ணே.

தாயக மக்கள்.. காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வசதி இல்லாமல் அடிப்படை உடற்பரிசோதனை செய்ய வசதி இல்லாமல்.. சாவது தெரியாது. நீங்க இப்படியே.. மகிழ்ந்திருங்கள். கவனையீர்ப்பு குறைவு. 

ஏன்னா.. மானிப்பாய்.. செவ்வாய்க் கிரகத்தில் தானே இருந்தது. ஈழப் போர் நடந்தது புளுட்டோவில். 

நாங்கள் கேட்பது.. நீங்கள் சைக்கிளை ஓடுங்க.. தலையால நடவுங்க.. அடிப்படை வசதி அற்ற.. மற்றும் அதிமுக்கிய தேவையுள்ள... மக்களுக்கு இலவச மருத்துவத்துக்கு உறுதி செய்யுங்கள் என்பது மட்டுமே......!!! ஏன்னா அந்தளவுக்கு மருத்துவச் செலவுகள் சிகரம் எட்டியுள்ளது தாயக மண்ணில். தென்னிலங்கை உட்பட. 

ஒரு சிங்களத் தாய் பிழைப்புக்கு வைச்சிருந்த கணவரின் ஓட்டோவை வித்து கிட்னி சம்பந்தப்பட்ட பரிசோதனைக்கு செய்த காசைக் கட்டிட்டு அழுது கொண்டு போனதையும் அந்த தாய்க்கு ஆறுதலாய் நாலு வார்த்தை தான் சொல்ல முடிந்ததையும் உள்ளடக்குகிறேன். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை புலம்பெயர் தமிழர்களின் தாயகத்துக்கான உதவி புதிதோ.. புதினமோ.. சாதனையோ அல்ல. அது ஒரு தேவை. அதை செய்ய வேண்டியது விருப்பின் கடமை. ஆனால்.. அந்த உதவிகள் சரியான மக்களை சேர்ந்தடைய வேண்டும். பணக்கார வைத்தியசாலை முதலாளிகளுக்கு வருமானமாக மட்டும் இருக்கக் கூடாது. மிசனரிகளுக்கு பணமீட்டுவதாக இருந்தால்.. அந்த பணம் அல்லது அதற்கான சேவை அந்த மக்களை மீண்டும் இலவசமாக.. போய் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

அதாவது உங்கள் பார்வையில் இறுதிப் போர் வரை சர்வதேச கவனத்தை யாரும் இழுக்கல்லை..?????!

அல்லது இழுத்த கவனம் காணாதா..??!

அல்லது கண்டும் காணாமலும் விட்டவையா..??!

invitation.jpeg

1848 ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க - சிலோன் மிசன்.. இவை போர் காலத்தில் எல்லாம் எங்க இருந்தவை. ஓ... கவனை ஈர்ப்புக் காணாமல் இருந்திருப்பினம். ம்ம்ம்.

நம்ம தவறுதான்.

நீங்க லைக் போட்டு மகிழுங்கண்ணே.

தாயக மக்கள்.. காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வசதி இல்லாமல் அடிப்படை உடற்பரிசோதனை செய்ய வசதி இல்லாமல்.. சாவது தெரியாது. நீங்க இப்படியே.. மகிழ்ந்திருங்கள். கவனையீர்ப்பு குறைவு. 

ஏன்னா.. மானிப்பாய்.. செவ்வாய்க் கிரகத்தில் தானே இருந்தது. ஈழப் போர் நடந்தது புளுட்டோவில். 

நாங்கள் கேட்பது.. நீங்கள் சைக்கிளை ஓடுங்க.. தலையால நடவுங்க.. அடிப்படை வசதி அற்ற.. மற்றும் அதிமுக்கிய தேவையுள்ள... மக்களுக்கு இலவச மருத்துவத்துக்கு உறுதி செய்யுங்கள் என்பது மட்டுமே......!!! ஏன்னா அந்தளவுக்கு மருத்துவச் செலவுகள் சிகரம் எட்டியுள்ளது தாயக மண்ணில். தென்னிலங்கை உட்பட. 

ஒரு சிங்களத் தாய் பிழைப்புக்கு வைச்சிருந்த கணவரின் ஓட்டோவை வித்து கிட்னி சம்பந்தப்பட்ட பரிசோதனைக்கு செய்த காசைக் கட்டிட்டு அழுது கொண்டு போனதையும் அந்த தாய்க்கு ஆறுதலாய் நாலு வார்த்தை தான் சொல்ல முடிந்ததையும் உள்ளடக்குகிறேன். 

நீங்கள் உங்கள் கருத்துக்களில் உறுதியாக தொடர்ந்து நில்லுங்கள் அது உங்களின் தனிமனித உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரி....
.இந்த வைத்தியசாலை போருக்கு முன்னே பாழடைய தொடங்கி இருந்தது 50 வருடங்களுக்கு முன்பே நான் சிறுவனாக இருக்கும் பொழுதே இதன் கட்டிடங்கள் யாவும் இடியும் நிலையில் தான் இருந்தது....
இப்பொழுது குஞ்சம் கட்ட தொடங்கியுள்ளனர் .....

இங்கு பணம் செலுத்தி தான் சிகிச்சை பெற வேண்டும்....இலவச மருத்துவ மனை அல்ல ...
 புலம்பெயர்ந்த் புண்ணியவான் கள் தங்கள் பெற்றோரை இறுதி காலத்தில் அங்கு அனும்திக்க்கோ அல்லது தாங்கள் அங்கு போய் வச்தியாக இறுதி காலத்தை கழிக்க இப்படி  செய்கின்றனரோ தெரியவில்லை ....

ஏதோ நல்லது நடந்தால் சரி....

மஞ்சள் சிவப்பு கொடி பறந்திருந்தால் சிறப்பாக‌ இருந்திருக்கும் ...அவர்களின்  safty first ஆடைகளுக்கு அமைய இன்னும் வர்ண‌மாக ஜொலித்திருக்கும் என்பது என் கருத்து

தவறான தகவல் புத்தன். இது தனியார் மருத்துவ மனை அல்ல. தொண்டு (charity) அடிப்படையில் இயங்கும் மிசனரி மருத்துவமனை. பணம் இருப்போர் போனால் நன்கொடை கொடுக்க வலியுறுத்துவர். பணம் இல்லாத நோயாளிகளிடம் பணம் அறவிடப் படுவதில்லை. இது அமெரிக்க மிஷன். கத்தோலிக்க திருச்சபையும் இதே போன்ற ஒரு மருத்துவ மனையை திருச்சிலுவை மருத்துவ மனை என்ற பெயரில் கொழும்புத் துறையில் நடத்தி வருகிறது. நன்கொடை கொடுக்கலாம், ஆனால் நோயாளிகளிடம் வலியுறுத்தி கட்டணம் வசூலிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அதாவது உங்கள் பார்வையில் இறுதிப் போர் வரை சர்வதேச கவனத்தை யாரும் இழுக்கல்லை..?????!

அல்லது இழுத்த கவனம் காணாதா..??!

அல்லது கண்டும் காணாமலும் விட்டவையா..??!

invitation.jpeg

1848 ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க - சிலோன் மிசன்.. இவை போர் காலத்தில் எல்லாம் எங்க இருந்தவை. ஓ... கவனை ஈர்ப்புக் காணாமல் இருந்திருப்பினம். ம்ம்ம்.

நம்ம தவறுதான்.

நீங்க லைக் போட்டு மகிழுங்கண்ணே.

தாயக மக்கள்.. காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வசதி இல்லாமல் அடிப்படை உடற்பரிசோதனை செய்ய வசதி இல்லாமல்.. சாவது தெரியாது. நீங்க இப்படியே.. மகிழ்ந்திருங்கள். கவனையீர்ப்பு குறைவு. 

ஏன்னா.. மானிப்பாய்.. செவ்வாய்க் கிரகத்தில் தானே இருந்தது. ஈழப் போர் நடந்தது புளுட்டோவில். 

நாங்கள் கேட்பது.. நீங்கள் சைக்கிளை ஓடுங்க.. தலையால நடவுங்க.. அடிப்படை வசதி அற்ற.. மற்றும் அதிமுக்கிய தேவையுள்ள... மக்களுக்கு இலவச மருத்துவத்துக்கு உறுதி செய்யுங்கள் என்பது மட்டுமே......!!! ஏன்னா அந்தளவுக்கு மருத்துவச் செலவுகள் சிகரம் எட்டியுள்ளது தாயக மண்ணில். தென்னிலங்கை உட்பட. 

ஒரு சிங்களத் தாய் பிழைப்புக்கு வைச்சிருந்த கணவரின் ஓட்டோவை வித்து கிட்னி சம்பந்தப்பட்ட பரிசோதனைக்கு செய்த காசைக் கட்டிட்டு அழுது கொண்டு போனதையும் அந்த தாய்க்கு ஆறுதலாய் நாலு வார்த்தை தான் சொல்ல முடிந்ததையும் உள்ளடக்குகிறேன். 

புறோ..இப்போ நீங்கள் எழுதும் தமிழை வேறு நாட்டவரிடம் கடன் வாங்கிறீர்களா என்று தெரியாமல் இருக்கிறது..புரிந்து கொள்ள கஸ்ரமாக இருக்கிறது. (ஏன்னா)எந்த ஊர் தமிழ்...? அனேக இடங்களில் உங்களின் எழுத்தை இப்படித் தான் காணக் கூடியதாக இருக்கிறது..இப்படியே போனால் நாங்களே எங்கள் மொழியை காணாமல் ஆக்கி விடுவோம்..கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் புறோ....
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

நாங்களும் நிறைய சந்தர்ப்பங்களில் சரிட்டி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறோம். வழமையா நிகழ்வின் முடிவில் அன்பளிப்புத் தொகை.. இவ்வளவு இன்ன வைத்தியசாலைக்கு.. இன்ன பகுதிக்கு வழங்குறம் என்று ஒரு அன்பளிப்பு செக் வடிவில்.. காண்பித்து..  பொதுவெளிக்கும் அறிவிக்க செய்து தான் கொடுப்பது. ஏனெனில்.. ஆன்லைனில் காசு கொடுத்தது.. பப்ளிக். அவனுக்கு/அவளுக்கு தெரியனும்.. தனது பங்களிப்பு சரியாத் தான் போய் சேர்ந்திருக்கான்னு. அதை தெரிந்து கொள்வது அவர்களின் உரிமை. வெள்ளைகளும் அப்படித்தான் பெரும்பாலும் செய்யினம். இங்க சைக்கிள் ஓடினவைக்கு ஏதோ ரேஸ் ஓடின கணக்கா பதக்கம்.. மண்ணாங்கட்டி.. உந்த அநாவசிய செலவுகளை குறைச்சு அதனையும் சேர்த்து வைத்தியசாலையை தரமுயற்த்த வழங்கலாம் தானே.

தேசிய நல்லிணக்கம் .....அதற்கு இவ்வளவு செலவு ..இங்கும் நீங்கள் பார்தா புரியும்..
இது இலவச மருத்துவ மனை அல்ல....

6 hours ago, Justin said:

தவறான தகவல் புத்தன். இது தனியார் மருத்துவ மனை அல்ல. தொண்டு (charity) அடிப்படையில் இயங்கும் மிசனரி மருத்துவமனை. பணம் இருப்போர் போனால் நன்கொடை கொடுக்க வலியுறுத்துவர். பணம் இல்லாத நோயாளிகளிடம் பணம் அறவிடப் படுவதில்லை. இது அமெரிக்க மிஷன். கத்தோலிக்க திருச்சபையும் இதே போன்ற ஒரு மருத்துவ மனையை திருச்சிலுவை மருத்துவ மனை என்ற பெயரில் கொழும்புத் துறையில் நடத்தி வருகிறது. நன்கொடை கொடுக்கலாம், ஆனால் நோயாளிகளிடம் வலியுறுத்தி கட்டணம் வசூலிப்பதில்லை.

கட்டணம் உண்டு யஸ்டின்.... நான் அங்கு இருக்கும் காலத்தில் கூட பணம் செலுத்தி தான் சிகிச்சை செய்தார்கள்....

நிச்சமாக அரச மருத்துவமனை அல்ல ...

தகவலை சரி பார்த்து அறியத்தருகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

பணம் இருப்போர் போனால் நன்கொடை கொடுக்க வலியுறுத்துவர்.

இதன் காரணமாக ஏழைகள் அங்கு செல்ல தயங்குவார்கள்...

20 கட்டில் இருந்தால் அந்த 20 கட்டிலயும் பணம் படைத்தவர்கள் ஆக்கிரமித்தால்  ஏழைக்கு கட்டில் கிடைக்காது........
வசதி படைத்தவர்களுக்கு வரப்பிரதாசம் ...என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

இதன் காரணமாக ஏழைகள் அங்கு செல்ல தயங்குவார்கள்...

20 கட்டில் இருந்தால் அந்த 20 கட்டிலயும் பணம் படைத்தவர்கள் ஆக்கிரமித்தால்  ஏழைக்கு கட்டில் கிடைக்காது........
வசதி படைத்தவர்களுக்கு வரப்பிரதாசம் ...என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை 

மிசனரிகள் ஈழ மண்ணில் தோற்றுப் போனதிற்கு இந்த வேடதாரித்தனம் தான் முக்கிய காரணம்.

அதனால் தான்.. சிலதை இங்கு அழுத்தம் திருத்தமாகவும் கூற முனைந்தது.

அதனை புரிந்து கொள்ள முடியாத சிலர்.. வழமை போல்.

அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி புத்தா. மக்களுக்கு வழிகாட்டும். 

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.