Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 MAR, 2024 | 10:03 PM
image

வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.

IMG-20240306-WA0012.jpg

IMG-20240306-WA0014.jpg

IMG-20240306-WA0017.jpg

IMG-20240306-WA0015.jpg

https://www.virakesari.lk/article/178106

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளைகளுக்கு தெரியுமா.. இவர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல.. எங்கோ இருக்க வேண்டியவர்கள்.. இந்த வானூர்திகளில் வந்தே எங்கள் நிலங்களை அபகரித்தார்கள்.. இல்லங்களை தகர்த்தார்கள்.. பல சந்ததிகளை சொந்த நிலத்தை விட்டு ஓடச் செய்தார்கள்.. எம் தாத்தா பாட்டி.. அம்மா அப்பா... சித்தப்பா.. சித்தி.. பெரியப்பா.. பெரியம்மா... மாமன்... மாமி.. மச்சான்.. மச்சாள்.. இப்படி எம் சொந்தங்களை எல்லாம் 1986 முதல் கொக்குவிலில் ஆரம்பிச்சு.. 2009 மே வரை..முள்ளிவாய்க்கால்வரை வானில் இருந்து கொண்டு போட்டும்.. அதற்கு முன் ஹெலிகளில் இருந்து கலிபர்களால் சுட்டும்.. கிரேனேட் வீசியும் கொன்றார்கள் என்று.

நான் நினைக்கிறேன்.. 1986.. கோப்பாய் வெளியில் வைச்சு.. 4 யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களை இதே சொறீலங்கா  விமானப்படை தாழப்பறந்து சுட்டுக்கொன்றிருந்து. அதுவும் மாணவர் சீருடையில்.

இதே விமானப்படை நாகர்கோவிலில் பாடசாலை மீது குண்டு வீசி.. 19 குழந்தைகளைக் கொன்றிருந்தது.

அதேபோல்.. வன்னியில்..வள்ளிபுனம் செஞ்சோலை மாணவர்கள்...65 பேரை குண்டு போட்டுக் கொன்றது. 

திருமலையில்.. கடற்படையுடன் இணைந்து 5 தமிழ் மாணவர்களை வேட்டையாடியது. 

அவர்கள் எல்லாம் இந்த பிள்ளைகளின் சொந்தம் என்று தெரியுமா..?! தெரியாது என்றால்.. அது பெற்றோரினதும்.. குறித்த பாடசாலைகளினதும் அறியாமையின் வெளிப்பாடு.

இந்த நிகழ்வை யாழ் இந்துக்கல்லூரி தனது மைதானத்தை பயன்படுத்த அனுமதித்திருக்கக் கூடாது. சொறீலங்கா விமானப்படை கடந்த காலத்தில் படுகொலை செய்த சீருடை அணிந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் படுகொலைக்கு எழுத்து மூல.. பகிரங்க மன்னிப்புக் கோராத வரை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கம் .....இது போல பல இனி வரும் காலங்களில் நடை பெறும் சகித்து கொள்ள வேணும் ...

விமானப்படையில் பத்து வட மாகாண  மாணவர்களை சேர்ப்பார்களா இவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி  என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு  எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். 
சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி  அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம்   உடல் உழைப்புக்கு தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
ஆகா....
 
நாம எல்லாரும் சிறிலங்கா ஏர் லைன்ஸ்ல ஜாப்னாக்கு டூர் போவம். 
 
மூல ஊர் சிறிலங்கா என்டுவம் (போருக்கு முன்னும் பின்பும்). வாயிலை தப்பியும் பிறந்த இடம் தமிழீழம் என்ட மாட்டம், பிள்ளையளுக்கும் சொல்லித் தர மாட்டம்! 😎
 
ஆனால், அங்க இருக்கிற பொடியள் எல்லாரும் மட்டும் எதுவும் செய்யப் படாது. என்ன?!
 
ஏனெண்டால் நாங்கள் மட்டும் தான் லெவல் காட்டனும்.
 
எங்கட பிள்ளையள் மட்டும் தான் நல்லா இருக்கோனும்!
 
செக்கில ஆட்டின சுத்தமான சிறிலங்கன் 😎🥲😉
 
பி.கு: யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. உறைச்சால் நிறுவனம் பொறுப்பல்ல!

images?q=tbn:ANd9GcRyVhJKAjgcPSpE1wAyHjA

images?q=tbn:ANd9GcQ7cHK92jR5VBefPYGw6ag

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி  என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு  எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். 
சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி  அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம்   உடல் உழைப்புக்கு தயாரில்லை.

அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும்  போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, யாயினி said:

அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும்  போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?

இப்போது யாழ்ப்பாண வெளிநாட்டு..உழைப்பென்றால் ...இதுதான்..பரவாயில்லை ஆச்சி அம்மா ,அக்கா தங்கை,அண்ணன் தம்பி..எல்லோரையும் அம்மணமாகக் கட்டியும் காசு சம்பாரிக்க காத்திருக்கும் கூட்டம்..அதாவது காட்டிக்கொடுக்கும் கூட்டம்...இதை ரசித்து லைக்கு போட இன்னொரு கூடாம் புலம் பெயர்ந்து. இருக்குது...கடவுள்௹ஆஆண் ..இவர்களைக்காப்பாற்ற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்+

யூட்டியூப்பர்கள் அனைவருக்கும் பொதுவாக:

நீங்கள் எல்லோரும் செய்வது நல்ல விடையம் தான். நாட்டு நடப்பை, மக்கள் வாழ்வியலை தொடர்ந்து வெளியுலகிற்கும் அணுக்கமற்றோருக்கும் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். 

இவ்விடையத்தில், யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாத ஆனால் பார்க்க ஆசையுள்ள மக்கள் தம் வீடுகளிலிருந்தே இதனை அறிந்து/ பார்த்துக் கொள்ள வசதி செய்துள்ளீர்கள். 

குறிப்பாக, இது போன்ற அறிவியல் கண்காட்சிகளை மக்களுக்கு காட்டுவது நல்ல விடையமே. எமது மக்களுக்கும் இது போன்ற வானூர்திகளை நேரில் கண்ட அனுபவமும் சிறார்களுக்கு இத்துறை மீதான ஆர்வத்தையும் இது அதிகரிக்கும்.

தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். எல்லைக்கு வாவென்ற போது எல்லை கடந்தவர்கள் தான் இன்று உங்களை தூற்றுபவர்களின் வரிசையில் முன்னிற்பவர்கள்! இவர்கள் எல்லாம் கூலிங் கிளாசோடு சொறிலங்கா ஏர்லைன்சில் ஏறி நல்ல ஹைஃவையாக ஊருக்கு வருவினம்.  வெளிநாட்டவர்களிடம் கேளுங்கள், தாய்நாடு எதுவென்று. ஒரு ஈ-காக்கா தாய் நாடு "தமிழீழம்" என்று போரின் போதோ இல்லை போருக்கு பின்போ வெளிநாட்டில் சொன்னதில்லை, 99.99 வீதமானோர். கேட்டால் நல்ல ஸ்ரைலாக "சிறிலங்கா" என்பர். இந்த இரட்டை வேடதாரிகளை/ போலிகளின் கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்.

நாற்பது நல்லது செய்யும் போது பொறாமையால் நாலு கல்லடி விழுவது பரவலானதே. எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது தான். ஆகையால் தொடர்ந்து மக்கள் வாழ்வியலை படம்பிடியுங்கள்.

உங்கள் மூலம் நான் பல நன்மை அடைந்திருக்கிறேன்.

மனதார வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரின் பணியும் தொடரட்டும்.

Edited by நன்னிச் சோழன்
Resentenced

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

உலங்கு வானுர்தி  பயணம் செய்தவர்களில் பலர் யுத்தம் நிறைவடைந்தபின் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் இதிலிருந்து புலப்படுவது யாதெனில் எது பற்றியும் கவலைப்படாத அவர்கள் அவர்களுக்கான வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள், நாம் கண் முன்னே அனைத்தையும் ரத்தமும் சதையுமாக பார்த்துவிட்டு வந்தும் எது பற்றியும் கவலைப்படாது வானுர்த்தியில் சென்று இலங்கை அரசுக்கு அந்நிய செலவாணி அதிகரிக்க செய்யும்போது, இலங்கை அரசுக்கு  எந்த அந்நிய செலாவணி வருமானமும் கொடுக்காமல்  அவர்கள் பயணம் செய்வது எந்த வகையிலும் தப்பில்லை இன துரோகமும் இல்லை  வாழ்த்துக்கள் மாணவர்களே 

Edited by valavan
’இல்லை’ சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி எமது மக்கள் முன்னேறுவதே தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது.. சில ஆக்களின் கொள்கை...

உல்லாசப் பயணம் போக.. சொறீலங்கா விமான சேவையை தருவதால்.. தமிழர் தாயகத்தில்.. தமிழர் தலையில் குண்டு போடலாம். கொல்லலாம். குடிமனைகளை அழிக்கலாம். வாழ்வாதாரங்களை அழிக்கலாம்.. சொறீலங்கா வான்படைக்கு நில அபகரிப்புச் செய்யலாம். 

புலம்பெயர் தமிழர்கள்.. சொறீலங்கா விமான சேவையை பயன்படுத்துவதற்கும்..

இனப்படுகொலை நடந்த இடத்தில்.. நீதிக்கான கோரிக்கைகள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி தேடப்படும் நிலையில்... போர்க்குற்றவாளிகள்.. தமக்கு வெள்ளையடிக்கும் கைங்கரியத்தில்.. திட்டமிட்டு.. செய்யும் காரியங்களுக்கு துணை போவதென்பது... எப்படி சமன்படும்.. எப்படி சமன்பாடுகளை போடினம்..??!

காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் தான் இஸ்ரேலின் அநியாயத்தைச் சொல்ல முடியும். வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் அல்ல. வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் தார்மீக ஆதரவளிக்கலாம்.

ஒரு தனியார் ஹெலிக்கொப்டரை வாடகைக்கு அமர்த்தி இதை செய்ய பாடசாலைகளால்.. அல்லது பழைய மாணவர் சங்கங்களால் முடியாதா..?! சாமத்திய வீட்டுக்கு ஹெலில பறக்கினம்..????!

தன் குடும்பத்தை.. இனத்தை கொன்று வாழ்விடத்தை ஆக்கிரமிச்சு நிக்கிறவனிடம்.. போய்.. கேடயம் வாங்கனும் என்ற நிலைக்கு ஒரு மாணவனை தள்ளுவது போல் இழி நிலைமை எதுவுமில்லை. அதனை வரவேற்பதிலும் தூக்கில் தொங்கலாம். 

என்ன..

இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது. 

அப்ப இந்த புலி ஆராய்ச்சியெல்லாம்..புண்ணுக்கு புனுகு தடவுவதைப் போன்றதா கோபாலு..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

தன் குடும்பத்தை.. இனத்தை கொன்று வாழ்விடத்தை ஆக்கிரமிச்சு நிக்கிறவனிடம்.. போய்.. கேடயம் வாங்கனும் என்ற நிலைக்கு ஒரு மாணவனை தள்ளுவது போல் இழி நிலைமை எதுவுமில்லை. அதனை வரவேற்பதிலும் தூக்கில் தொங்கலாம். 

இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎?

நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்

ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின்,

யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம்  குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை.

சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும்  அதே மக்களும் மாணவர்களும்  மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும்  போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது.

அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள்  என வந்தால்   இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎?

நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?

இதில் ஏதாவது சொறீலங்கா இனப்படுகொலை இயந்திரத்திற்கு ஆக்கிரமிப்பு சக்திக்கு.. வெள்ளையடிப்பதாக இருக்குதா..??!

ஆனால்.. சொறீலங்கா விமானப்படையின் 73ம் ஆண்டு கால நினைவேந்தலோடு.. அது நிகழ்த்தி வரும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்தும் போர்க்குற்றச் சாட்டில் இருந்துமான வெள்ளை அடிப்புக்கு உதவக் கூடிய செயல்களை தான் தவிர்க்கலாமே என்கிறோம்.

சொறீலங்கா விமானப்படை சேவை.. புலிகளை வன்னிக்காட்டில் ஏற்றி இறக்கவும் பயன்பட்டிருக்குது. அதற்காக.. அது செய்த இனப்படுகொலை கைங்கரியங்களுக்காக புலிகள் அவர்களோடு மோதாமல்.. விட்டார்களா..???!

ஹிந்திய படை ஹெலிகளும் புலிகளை சுமந்திருக்குது. அதற்காக யுத்தம் என்று வந்த போது மக்களை தாக்க வந்த போது எதிர்த்து தாக்கினார்களா இல்லையா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சிறிலங்காவில் உங்கள் வளர்ச்சியும் கல்வியும் சிங்களவருக்கு வெள்ளையடித்தன என நினைக்கவில்லை.

உங்கள் முன்னைய கருத்தும் (தூங்கில் தொங்கலாம்) அல்வையான் மேலே பூடகமாகச் சொல்லியிருக்கும் "உறவுகளின் நிர்வாணப் படத்தை விற்றுப் பிழைப்போர்" என்ற கருத்தும் நீங்கள்  இருவரும் நீங்கள் வந்த பாதையையும், இருக்கும் நிலைமைகளையும் யோசிக்காமல் உணர்ச்சி மயமாகக் கருத்து வைப்பதாகக் காட்டுகிறது. கருத்து சுதந்திரம் என்ற வகையில் இவற்றைச் சொல்லலாம், ஆனால் moral humility என்றொன்று இருக்கிறதல்லவா? அதைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன்.

புலிகளே யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏறிப் பறந்த இராணுவ ஹெலிகளில் யுத்தம் இல்லாத இந்த நாட்களில் சிறியோர் இளையோர் ஏறிப்பறப்பது அவ்வளவு கண்டனத்திற்குரியது என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின்,

யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம்  குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை.

சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும்  அதே மக்களும் மாணவர்களும்  மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும்  போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது.

அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள்  என வந்தால்   இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.

நீங்கள் கூறுவதில் 100% உண்மை உண்டு....நாங்கள் இங்கிருந்து (புலம் பெயர்ந்த) சொல்வதை விட ...தாயகத்தில் இருக்கும் இளைஞர்கள் ஈழம்,தமிழன் எனற பொருள் பட பேசுகிறார்கள் ..அத்துடன் இந்த விமான படையினர் வட மாகாணம் என்று சொல்கின்றனர் அது நல்ல விடயம்...

ஜப்பான் காரன் அணுகுண்டு போட்டவனுடன் உறவை வளர்த்து தான் முன்னேறினான்...ஆனால் இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் அதை மறக்கவில்லை...
ஆகவே நாமும் தமிழ் தேசியத்துடன்  முன்னேறுவோம் 

தமிழ் தேசியம் பேசினால் கோபமடைவார்கள் சிங்கள தேசியவாதிகள் என்ற சில சட்டத்தரனிகளின் ஆலோசனைகளை புறம்தள்ளி தமிழ் தேசியத்துடன் பயணிப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சிறிலங்காவில் உங்கள் வளர்ச்சியும் கல்வியும் சிங்களவருக்கு வெள்ளையடித்தன என நினைக்கவில்லை.

உங்கள் முன்னைய கருத்தும் (தூங்கில் தொங்கலாம்) அல்வையான் மேலே பூடகமாகச் சொல்லியிருக்கும் "உறவுகளின் நிர்வாணப் படத்தை விற்றுப் பிழைப்போர்" என்ற கருத்தும் நீங்கள்  இருவரும் நீங்கள் வந்த பாதையையும், இருக்கும் நிலைமைகளையும் யோசிக்காமல் உணர்ச்சி மயமாகக் கருத்து வைப்பதாகக் காட்டுகிறது. கருத்து சுதந்திரம் என்ற வகையில் இவற்றைச் சொல்லலாம், ஆனால் moral humility என்றொன்று இருக்கிறதல்லவா? அதைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன்.

புலிகளே யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஏறிப் பறந்த இராணுவ ஹெலிகளில் யுத்தம் இல்லாத இந்த நாட்களில் சிறியோர் இளையோர் ஏறிப்பறப்பது அவ்வளவு கண்டனத்திற்குரியது என்கிறீர்களா?

காணாமல் போன உறவுகளும் அதே மண்ணில் தான்.. இன்னும் இந்த ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் அடிக்கப்பட்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்கக் கோரிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே மண்ணில் தான் சக மாணவிகள்.. மாணவர்கள்.. படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களால்.

அதே மண்ணில் தான் இன்னும் இவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு ஒழுங்காக நினைவஞ்சலி செய்ய முடியாது மக்கள் குமுறினம்.

அதே மண்ணில் தான் இவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை விடுவிக்க கோரினம்..

அவற்றிற்கு ஒரு நீதியும் இல்லை. ஏன் மன்னிப்புக் கூட கோரவில்லை.

அப்படியாப்பட்ட ஒரு சிங்கள.. விமானப்படையின் 73 வருடத்தை சிறப்பிக்கும் வகையிலும்.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமது இருப்புக்கும் செயற்பாட்டிற்கும் ஆதரவும் வெள்ளைத்தன்மையும் உள்ளது போன்று காட்ட.. வேண்டும் என்றே முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்விற்கு.. மாணவர்களை பயன்படுத்த அனுமதிப்பது நிறைய பாதிக்கப்பட்ட மக்களின் அவர் சார்ந்த மாணவ சொந்தங்களின் மனங்களை எவ்வளவு பாதிக்கும்..??!

அதுகுறித்து எந்த moral humility இல்லாத போது..?!

புலிகள்.. சொறீலங்கா வான்படைக்கு வெள்ளையடிக்கப் பறக்கவில்லை. புலிகள்.. பேச்சுத் தூதுக்குழுவாக.. பிற மேற்பார்வைகளால்.. ஏற்பாடு செய்யப்பட்ட பறப்புக்களில் ஈடுபட்டனரே தவிர.. புலிகள் சொறீலங்கா விமானப்படை நிகழ்த்திய அதன் சேவைக்கால நிறைவு.. நிகழ்வுளை கெளரவிக்க.. சொறீலங்கா விமானப்படைக்கு அதன் போர்க்குற்றங்களில் இருந்து வெள்ளையடிக்க.. பறப்பில் ஈடுபடவில்லை. மேலும்.. புலிகள் சொறீலங்கா விமானப்படை ஹெலிதான் தேவை என்றும் சொல்லவில்லை. சொறீலங்கா அரசு வழங்கியது.. சொறீலங்கா விமானப்படையினதாக இருந்தமை சொறீலங்கா அரசின பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தீர்மானமே அன்றி.. புலிகள் கேட்டதல்ல. இதுவும் முக்கியம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம்  குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை.

உங்கட கணக்குப்படி பார்த்தால்.. சொறீலங்கா பொருளாதாரம்.. இப்ப ரெம்பச் செழிப்பா இருக்கனுமே...?!

அண்ணே உருட்டிறதிற்கும் ஒரு அளவு வேண்டும். 

அதுமட்டுமன்றி அப்பவே புறக்கணி சொறீலங்காவை கொண்டு வந்து கத்தின யாழ் உறவுகள் இருக்கினம். 

என்னைப் பொறுத்தவரை நான் இதுகாள் வரை சொறீலங்கா எயார்லைஸ் பாவிச்சதில்லை. பாவிக்கப் போறதும் இல்லை. புறக்கணிப்பில் அப்ப இருந்து இப்ப வரை தெளிவாகத்தான் இருக்கிறேன். எம் மக்களுக்கு இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கிடைக்கும் வரை..இது தொடரும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

காணாமல் போன உறவுகளும் அதே மண்ணில் தான்.. இன்னும் இந்த ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் அடிக்கப்பட்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்கக் கோரிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே மண்ணில் தான் சக மாணவிகள்.. மாணவர்கள்.. படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களால்.

அதே மண்ணில் தான் இன்னும் இவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு ஒழுங்காக நினைவஞ்சலி செய்ய முடியாது மக்கள் குமுறினம்.

அதே மண்ணில் தான் இவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை விடுவிக்க கோரினம்..

அவற்றிற்கு ஒரு நீதியும் இல்லை. ஏன் மன்னிப்புக் கூட கோரவில்லை.

அப்படியாப்பட்ட ஒரு சிங்கள.. விமானப்படையின் 73 வருடத்தை சிறப்பிக்கும் வகையிலும்.. தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமது இருப்புக்கும் செயற்பாட்டிற்கும் ஆதரவும் வெள்ளைத்தன்மையும் உள்ளது போன்று காட்ட.. வேண்டும் என்றே முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்விற்கு.. மாணவர்களை பயன்படுத்த அனுமதிப்பது நிறைய பாதிக்கப்பட்ட மக்களின் அவர் சார்ந்த மாணவ சொந்தங்களின் மனங்களை எவ்வளவு பாதிக்கும்..??!

அதுகுறித்து எந்த moral humility இல்லாத போது..?!

புலிகள்.. சொறீலங்கா வான்படைக்கு வெள்ளையடிக்கப் பறக்கவில்லை. புலிகள்.. பேச்சுத் தூதுக்குழுவாக.. பிற மேற்பார்வைகளால்.. ஏற்பாடு செய்யப்பட்ட பறப்புக்களில் ஈடுபட்டனரே தவிர.. புலிகள் சொறீலங்கா விமானப்படை நிகழ்த்திய அதன் சேவைக்கால நிறைவு.. நிகழ்வுளை கெளரவிக்க.. சொறீலங்கா விமானப்படைக்கு அதன் போர்க்குற்றங்களில் இருந்து வெள்ளையடிக்க.. பறப்பில் ஈடுபடவில்லை. மேலும்.. புலிகள் சொறீலங்கா விமானப்படை ஹெலிதான் தேவை என்றும் சொல்லவில்லை. சொறீலங்கா அரசு வழங்கியது.. சொறீலங்கா விமானப்படையினதாக இருந்தமை சொறீலங்கா அரசின பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தீர்மானமே அன்றி.. புலிகள் கேட்டதல்ல. இதுவும் முக்கியம். 

இந்தப் பறப்புப் பற்றி, அங்கே இருக்கும் உறவுகள் உங்களைப் போல காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்களா ?

"அறம் சார் பணிவு-moral humility" என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.  விடயங்களைச் சுட்டிக் காட்டும் போது எந்த இடத்தில் இருந்து நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்ற புரிதலும், அதனால் தொனியில் அடக்கமும் வருவதையே அறம் சார் பணிவு என்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவர்கள் தான் விளக்கம்  கொடுக்கின்றனர் ..

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2024 at 13:46, nedukkalapoovan said:

இந்த நிகழ்வை யாழ் இந்துக்கல்லூரி தனது மைதானத்தை பயன்படுத்த அனுமதித்திருக்கக் கூடாது. சொறீலங்கா விமானப்படை கடந்த காலத்தில் படுகொலை செய்த சீருடை அணிந்த யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் படுகொலைக்கு எழுத்து மூல.. பகிரங்க மன்னிப்புக் கோராத வரை. 

உகோபம் புரிகிறது. ஆனால் அதற்காக நீங்கள் மாணவர்களிடமும் பெற்றோரிடமும்  காட்டும் கோபம் நியாயமற்றது. 

19 hours ago, putthan said:

நல்லிணக்கம் .....இது போல பல இனி வரும் காலங்களில் நடை பெறும் சகித்து கொள்ள வேணும் ...

விமானப்படையில் பத்து வட மாகாண  மாணவர்களை சேர்ப்பார்களா இவர்கள்?

ஐயாவுக்கு real world நிகழ் உலகம் தெரியாது என்பது புரிகிறது. 

19 hours ago, நிலாமதி said:

இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி  என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு  எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். 
சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி  அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம்   உடல் உழைப்புக்கு தயாரில்லை.

17 hours ago, யாயினி said:

அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும்  போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?

உங்கள் இருவருக்கும் உந்தப் பிள்ளைகளுடன் என்னதான்  பிரச்சனை? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தப் பறப்புப் பற்றி, அங்கே இருக்கும் உறவுகள் உங்களைப் போல காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்களா ?

"அறம் சார் பணிவு-moral humility" என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.  விடயங்களைச் சுட்டிக் காட்டும் போது எந்த இடத்தில் இருந்து நாம் சுட்டிக் காட்டுகிறோம் என்ற புரிதலும், அதனால் தொனியில் அடக்கமும் வருவதையே அறம் சார் பணிவு என்கிறார்கள். 

தவறாக புரிய கொண்டு சொல்லவில்லை. அது நியாயமில்லை என்றால்.. பின்னையது எப்படி நியாயம்..??! இந்த 20 மாணவர்களை இனப்படுகொலை சொறீலங்கா விமானப்படை விமானத்துக்கு வெள்ளையடிக்க பறப்பில் ஈடுபடுத்தியவர்களுக்கு.. ??

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

ஐயாவுக்கு real world நிகழ் உலகம் தெரியாது என்பது புரிகிறது. 

😏

எதை வைத்து சொல்கின்றீர்கள்

சுட்டிக் காட்டினால் திருந்தலாம் அல்லது விளக்கமாவது கொடுக்கலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.