Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rajnathsingh_1200x768-750x375.jpeg

இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார்.

இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகளுக்கு நாம் நினைவுட்டுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1372633

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!

அது... போன மாசம், இது... இந்த மாசம்.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

அது... போன மாசம், இது... இந்த மாசம்.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

ஒவ்வொரு மாதமும் அடி வேணுமா??     சீனா சிங்களவனை ஆதரிக்காமால்.  தமிழனை ஆதரித்து இருக்கலாம்  இந்தியா அடக்க ஒடுக்கமாக. இருந்து இருக்கும்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்ப சீனாக்காரனிட்ட அடி வாங்கி சாகாட்டால் கிந்தியனுக்கு பத்தியப்படுறேல்லை போல கிடக்கு...🤣

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ்நாத் சிங் அவர்கள் இந்இராணுவத்தின் மேல் ஏதோ கோபம் இருக்கு. அதுதான் சீனனிடம்  போட்டுக் கொடுக்கிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

ராஜ்நாத் சிங் அவர்கள் இந்இராணுவத்தின் மேல் ஏதோ கோபம் இருக்கு. அதுதான் சீனனிடம்  போட்டுக் கொடுக்கிறார். 🤣

சத்தம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு. 🤣

சீனனும் எங்காவது பச்சோந்தி கிடைக்காதா பலத்தை காட்ட என்று தவம் கிடக்கும் இந்த நேரத்தில்...?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சத்தம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு. 🤣

சீனனும் எங்காவது பச்சோந்தி கிடைக்காதா பலத்தை காட்ட என்று தவம் கிடக்கும் இந்த நேரத்தில்...?😂

Election வருகிறது அல்லவா, தென்நாடு எங்கேனும் குண்டு வெடிக்கலாம், பாகிஸ்தான் ஊடுருவலாம், கல்வான் பள்ளத்தாக்கு போன்று வேறேனும் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்தியா  அடிவாங்கலாம், காஸ்மீரில் குண்டு வெடிக்கலாம் அல்லது சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கலாம், அதன் தொடர்ச்சியாக, அப்படியே மோடி நெஞ்சைப் பிளந்து இராமனைக் காட்டும் அனுமானாக நோஞ்சான் இந்தியாவிற்கு காட்டப்படுவார். தேர்தலிலும் வெல்ல வைக்கப்படுவார்  😁

 

  • கருத்துக்கள உறவுகள்

Suggest Ideas": Rajnath Singh To Indian Private Firms In Defence Sector

NDTV Defence Summit 2024: Rajnath Singh said India's private sector in defence manufacturing has grown tremendously in recent years

Mr Singh said the nation's armed forces are always prepared for war and ready to respond strongly to any challenge, against the backdrop of a border row with China and concerns over Chinese aggression in the Indian Ocean Region.

 

"We have to be ready for war at all times... even in "We have to be ready for war at all times... even in peacetime. We have to be ready," he added

ADVERTISEMENT

"We have to be ready for war at all times... even in peacetime. We have to be ready," he added.

https://www.ndtv.com/india-news/ndtv-defence-summit-2024-suggest-ideas-rajnath-singh-to-indian-private-firms-in-defence-sector-5199248/amp/1

உண்மையில் ராஜ்நாத் சிங் அவரது சீனாவுக்கு எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக எந்த ஒரு பாதுகாப்பு ஐச்சரும் வழமையாகக் கூறும் பொதுவான செயற்பாட்டையே கூறியுள்ளார். 

அதை ஊதிப் பெரிப்பித்தது நம்ம ஆதவன்ஸ்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

ஊதிப் பெரிப்பித்தது நம்ம ஆதவன்ஸ்தான் 

ஏதோ நாம சிரித்தோம் அல்லவா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

ஏதோ நாம சிரித்தோம் அல்லவா? 🤣

யே யே,...யே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சத்தம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு. 🤣

சீனனும் எங்காவது பச்சோந்தி கிடைக்காதா பலத்தை காட்ட என்று தவம் கிடக்கும் இந்த நேரத்தில்...?😂

நாங்கள் நினைக்கிறது போல் அடிபடமாட்டார்கள். காரணம் மீளவே முடியாத அழிவு நிச்சயம் என்பது சீனா இந்தியா அமெரிக்கா,......போன்ற நாடுகளுக்கு நன்றாக தெரியும். .....வசதியும் சந்தர்ப்பமும். அமையும் பட்சத்தில் மற்ற நாடுகளை ஒன்றுடனொன்று. அடிபடும்படி செய்வார்கள்,...காசு ஆயுதம்,  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பார்கள்   🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

. .....வசதியும் சந்தர்ப்பமும். அமையும் பட்சத்தில் மற்ற நாடுகளை ஒன்றுடனொன்று. அடிபடும்படி செய்வார்கள்,...காசு ஆயுதம்,  எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பார்கள்   🤣😂

உக்ரேனுக்குக் கொடுப்பதுபோல,.. 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருந்தா எப்படி?

இரண்டு தட்டுதட்டி இது தாண்டா இந்தியா என்று காட்ட வேண்டாமோ?

2 hours ago, Kapithan said:
2 hours ago, விசுகு said:

ஏதோ நாம சிரித்தோம் அல்லவா? 🤣

யே யே,...யே

நீங்க இருவரும். ஒற்றுமையா சிரிக்கிறதைப் பார்க்க எங்களுக்கும் சிரிப்பு வருது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அது... போன மாசம், இது... இந்த மாசம்.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

சீன‌ன் கார‌னுக்கு க‌ட்ட‌ம் சரி இல்லை ந‌ம்ம‌ கூட‌ விளையாடுற‌தே வேலையா போச்சு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁..................

  • கருத்துக்கள உறவுகள்

||இந்தியா பலவீனமான||

 

மாலைதீவை விட்டு வெளியேறும் போதே தெரிந்து கொண்டோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவேன்ட‌ வீர‌ம் பாக்கிஸ்தானோட‌ 

சீன‌ன் கூட‌ எடுப‌டாது...............சீன‌ன்ட‌ தொழிநுட்ப்ப‌ வ‌ள‌ர்ச்சி எங்கை இந்தியாவின்  வளர்ச்சி 0 பூச்சிய‌ம்............... 

இப்ப‌ இருக்கும் விஜேப்பி அர‌சு சில‌ யூடுப்ப‌ர‌ விலைக்கு வாங்கி
இந்தியாவை புக‌ழ் பாட‌ சொல்லி அம‌ர்த்தி இருக்கின‌ம் அவ‌ங்க‌ளும் வேண்டுற‌ காசுக்கு க‌ண்ட‌ ப‌டி கூவ‌ வேண்டிய‌து..............அதை எல்லாம் உண்மை என்று ந‌ம்ம‌ சில‌ கூட்ட‌ம் இருக்குதுக‌ள்.................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க இருவரும். ஒற்றுமையா சிரிக்கிறதைப் பார்க்க எங்களுக்கும் சிரிப்பு வருது.

சிரிக்க தானே வருகிறோம்

ஆனால் சிலவற்றை தொடக்கூடாது. அது பொதுநலன் சார்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

சிரிக்க தானே வருகிறோம்

சிறந்த இலவசமான மருந்து

அனுபவிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

rajnathsingh_1200x768-750x375.jpeg

இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார்.

இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகளுக்கு நாம் நினைவுட்டுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1372633

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள், சுடுகலன்கள் எடுத்துச் செல்ல முடியாத ஒரு நடுநிலையான பகுதி இருக்கின்றது. இரு தரப்பும் ஆயுதங்கள் இன்றி அங்கே போய் தங்க முடியும்.
 
ஒரு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் என்று நினைக்கின்றேன். அந்தப் பகுதியில் நித்திரையில் இருந்த இந்திய வீரர்களை சீனா வீரர்கள் பேஸ்பால் துடுப்பாட்ட மட்டைகள் போன்ற ஒன்றில் ஆணிகளைப் பதித்து அவற்றால் தாக்கி கொன்றுவிட்டனர். பல இந்திய வீரர்கள் இதில் இறந்தனர்.
 
இந்தியா என்ன பதிலடி கொடுத்தது? ஒன்றுமில்லை. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை ஒன்று மட்டுமே நடந்தது.
 
இந்தியாவின் ஜனநாயகம் எங்களூர் கோவில் திருவிழாவில் விற்கும் இழுக்கும் முட்டாசி போன்றது. அப்படியே இழுத்து இழுத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். எதையும் நேரத்திற்கு செய்ய மாட்டார்கள், செய்யவும் முடியாது.  
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள், சுடுகலன்கள் எடுத்துச் செல்ல முடியாத ஒரு நடுநிலையான பகுதி இருக்கின்றது. இரு தரப்பும் ஆயுதங்கள் இன்றி அங்கே போய் தங்க முடியும்.

 

ஆயுதங்களோடு இருந்த ராணுவ வீரர்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை?

எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு,  இந்தியா-சீனா துருப்புகளுக்கு இடையே நடத்த கைகலப்பு சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் "இந்திய துருப்புக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை" என்று தெரிவித்தார்.

 

ஜெய்ஷங்கர் தனது ட்விட்டரில், " உண்மைகளை நேராகப் பெறுவோம். எல்லைப் பணியில் உள்ள வீரர்கள்  ஆயுதங்களை எப்போதும் ஏந்தி செல்கின்றன. குறிப்பாக இந்திய நிலையில் இருந்து வெளியேறும்போது. ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இருந்த வீரர்களும் ஆயுதங்கள் வைத்திருந்தனர். எல்லை மோதல்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நீண்டகால நடைமுறை (1996 & 2005 ஒப்பந்தங்களின்படி) உள்ளது" என்று பதிவு செய்தார்.

1996 மற்றும் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த நெறிமுறைகளை ஜெய்சங்கர் குறிப்பிடுகிறார்.

1996 வருட ஒப்பந்தம் இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைதியை உறுதி செய்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றியது.

1996 வருட ஒப்பந்தத்தின் பிரிவு VI (1)ன் கீழ், "இந்தியா-சீனா எல்லைகட்டுப்பாட்டு கோட்டின் இரண்டு கிலோமீட்டர் வரம்புக்குள் ... இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு , உயிரியல் சீரழிவு, அபாயகரமான இரசாயனம், குண்டு வெடிப்பு போன்ற ஆபத்து விளைவிக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஈடுபட கூடாது.  இருப்பினும், வழக்கமான எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்கு தேவைப்படும் சிறியரக துப்பாக்கிகளுக்கு இந்த தடை பொருந்தாது ”என்று 1996 ஒப்பந்தத்தின் பிரிவு VI (1) கூறுகிறது.

எவ்வாறாயினும், ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளா பிரிவு VI (4) தற்போதைய சூழலில் மிகவும் பொருந்த கூடியாதாக உள்ளது: பிரிவு VI (4)ல்  “ எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் நிலைமை அதிகரிப்பதைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். பதட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும்  இராஜதந்திர பிரிவு  மூலம் உடனடி ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பிரிவு X (1) ல், “ இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் ஏற்படும்  பொதுவான புரிதல் சார்ந்து, தற்போதைய ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தப்படும். இரு தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை   உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் செயல்முறையை   ஒப்புக்கொள்கின்றன ” என்று தெரிவிக்கப்பட்டது.

2005 வருட ஒப்பந்தத்தின் பிரிவு 1 இல்,“இரு தரப்பினரும் எல்லைத் தொடர்பான கேள்வியை அமைதியான மற்றும் நட்புரீதியான ஆலோசனைகள் மூலம் தீர்ப்பார்கள்.

எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 2013 ஒப்பந்தத்தில் எந்தவொரு தரப்பும் அதன் இராணுவ திறனை மற்றொன்றுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று தெரிவித்தது.

இருப்பினும், மேற்கூறிய ஒப்பந்த விதிகள், கடந்த திங்களன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலுக்கு நேரடியாக பொருந்தாது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் பேசிய இராணுவ அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் மோதிய பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் வெடிமருந்து உட்பட ஆயுதங்களுடன் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தினர். துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தாலும், தற்செயலான துப்பாக்கிச் சூடு (அ) தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காக ஆயுதத்தின் முனைகள் தரையை நோக்கி இருக்கும்" என்று தெரிவித்தனர்.

இந்த நடைமுறைகள் குறிப்பிட்ட காலத்தில் உருவானது. உதாரணமாக,1962 வருடத்திற்குப் பிறகு லடாக்கில் உள்ள சீன-இந்தியா எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதில்லை. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு தீர்வின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தகைய சூழலில், துப்பாக்கிச் சூடு அல்லாத பிற ஆயுதங்கலைப் பயன்படுத்த ராணுவப்  படையினர் பழகிவிட்டனர். முந்தைய காலங்களில் பாறை கற்கள்,  மட்டைகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திருந்தாலும் யாரும் இறக்கவில்லை. எவ்வாறாயினும், இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள மூர்க்கத்தனம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த மே 5/6 அன்று பாங்காங் த்சோ ஏரிக்கரையில்  நடந்த மோதலின் போது 70 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் காயமடைந்தனர்.

சமீபத்தில், இந்திய இராணுவம் கூட லடாக் எல்லைப்பகுதியில்  நிறுத்தப்பட்டுள்ள தனது வீரர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கூட்டத்தை கலைக்கும் பாதுகாப்பு கருவிகள் வழங்க கட்டளையிட்டதாக சில தகவல்கள் தெரிவிகின்றன.

மணிநேரங்களாக நீடித்த ஒரு மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து ஏன் எந்த அதிகாரியும் நினைக்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட பல பகுதிகளில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது.   இதுபோன்ற சூழ்நிலையில், பீரங்கித் தாக்குதல்கள் கூட நியாயப்படுத்தப்பட்டிருக்கும்  என்று  சில இராணுவ வீரர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், இந்திய மற்றும் சீன வீரர்கள்  ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் ஆட்களில் ஒருவரைத் தாக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது மிகவும் கடினம் ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது

https://tamil.indianexpress.com/india/why-not-open-fire-even-soldiers-on-lac-were-carrying-arms-200727/

  • கருத்துக்கள உறவுகள்

මනුස්සකම ගැන සිංහල බල්ලෝ දන්නවද? 2009 අපි කටු කටවල් වලට මැදිවෙලා මැරෙනකොට එයාලගේ ප්‍රධාන උන්වහන් ක්‍රිපාට් එක සහෝදර සිංහලයන්ට දීලා පිපිරුම් ගහලා සැමරුවා.දැන් කොහොමද?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

මනුස්සකම ගැන සිංහල බල්ලෝ දන්නවද? 2009 අපි කටු කටවල් වලට මැදිවෙලා මැරෙනකොට එයාලගේ ප්‍රධාන උන්වහන් ක්‍රිපාට් එක සහෝදර සිංහලයන්ට දීලා පිපිරුම් ගහලා සැමරුවා.දැන් කොහොමද?

இது சிங்க‌ள‌ மொழியோ பெருமாள் அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

இது சிங்க‌ள‌ மொழியோ பெருமாள் அண்ணா...............

சிங்கள நாய்களுக்கு மனிதாபிமானம் தெரியுமா? 2009-ல் நாங்கள் முட்களின் வாயில் சிக்கி இறந்தபோது, அவர்கள் தங்களுடைய முக்கிய உன்வஹன் கிருபாத்தை சக சிங்களவர்களிடம் கொடுத்து வெடி வைத்து கொண்டாடினார்கள்.இப்போது எப்படி?

கூகிள் மொழிபெயர்ப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.