Jump to content

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம்

Published By: DIGITAL DESK 3    11 MAR, 2024 | 03:51 PM

image

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும்; போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வான நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

431876205_446265171096676_41562772758911

431810923_1176453556673117_7722880029904

429559213_1464632500845032_1116211136890

https://www.virakesari.lk/article/178439

போதிய பயிற்சிகள் எடுக்காது போட்டியில் கலந்து கொண்டாரோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. 😥
விதுர்ஷனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2024-03-11-at-03.41.57-75

மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி, மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய போக்கே காரணம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டமையால் அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1373099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

போதிய பயிற்சிகள் எடுக்காது போட்டியில் கலந்து கொண்டாரோ?!

சென்றகிழமை லிவமோர் (Livermore)என்ற இடத்தில் நடந்த அரைமரதான்(13 மைல்கள் 21 கிலோமீட்டர்கள்)ஓடி முடித்தார்கள்.

இவர்களும் கூடுதலான தூரம் ஓடி பயிற்சி எடுப்பதில்லை.கிழமையில் 2-3 நாட்களுக்கு 1 1/2-2 மைல்கள் தான் ஓடுவார்கள்.

@இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த  மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன்.

இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம்.

இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம்.

மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.

  • Like 6
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த  மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன்.

இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம்.

இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம்.

மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.

உப்புப் போட்டு தேசிப்பழச் சாறு குடிக்கச் சொல்வதும் இதற்காக தானோ அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

உப்புப் போட்டு தேசிப்பழச் சாறு குடிக்கச் சொல்வதும் இதற்காக தானோ அண்ணை?

ஓம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைத்து தண்ணீரைக் கூடக் குடிக்கலாம். Gatorade தான் குடிக்க வேண்டுமென்றில்லை. தேசிப்பழச்சாறும் நல்லது.

முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சென்றகிழமை லிவமோர் (Livermore)என்ற இடத்தில் நடந்த அரைமரதான்(13 மைல்கள் 21 கிலோமீட்டர்கள்)ஓடி முடித்தார்கள்.

இவர்களும் கூடுதலான தூரம் ஓடி பயிற்சி எடுப்பதில்லை.கிழமையில் 2-3 நாட்களுக்கு 1 1/2-2 மைல்கள் தான் ஓடுவார்கள்.

@இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.

நீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம்.
 
நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர்.
 
வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.
 
   
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:
நீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம்.
 
நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர்.
 
வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.
 
   

இப்போது இலங்கையிலும் தண்ணீரைக் குடியுங்கோ குளிக்கும் போது வழமையைவிட கூடுதலான நேரம் குளியுங்கோ என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.

பணக்கார நாடுகளில் மரதன் ஓடும்போது இடைஇடை தேவையான தண்ணீர் சிறிய பைக்கற்றுக்குள் தேவையான எனேர்ஜி இனிப்பு போன்றவை முடியும் போது வாழைப்பழம் இளநீர் என்று கொடுப்பார்கள்.

எமது ஊரில் எதுவுமே இருக்காது.

யாராவது வீதிகளில் தண்ணீர் வைத்திருப்பார்கள்.

முடிவிலும் ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை.

பாவம் பையன் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாவம் அந்த மாணவன். ஆழ்ந்த அனுதாபங்கள். மாணவனின் வகுப்பினர், நட்பு வட்டம், பெற்றோர், பாடசாலை சமூகம், ஊரவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவம் இது. 

இப்போது பல்வேறு பாடசாலைகளில் தட, கள/மெய்வல்லுனர் போட்டி நடைபெறும் காலம். அதேசமயம் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்பநிலை/காலநிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளியில் செல்லும்போது தற்போதைய காலநிலைக்குரிய எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள்/நடைமுறைகள் பற்றி சுகாதார/மருத்துவ பிரிவினால் விழிப்புணர்வு கொடுக்கப்படுகின்றது. 

பொதுவாக காலை எட்டு மணிக்கு முன்னதாக மரதன் ஓட்ட போட்டி நிறைவடையும் வகையில் பாடசாலைகள் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கின்றன. அத்துடன் மாணவர் ஒருவர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். 

முதலில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியை எப்படி ஒழுங்கமைத்தது என அறியப்பட வேண்டும். 

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றும் வரக்கூடாது தானே. 

Edited by நியாயம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு – கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு

news-02-6.jpg

அம்பாறை  திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இன்றைய தினம் அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வைத்தியசாலை  நிர்வாகத்தின் அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் வழியாக வைத்தியசாலைக்குள் பிரவேசித்தனர்.

எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/295269

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

18 hours ago, ஈழப்பிரியன் said:

@இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.

மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம்.

வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும்.

போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது.

விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

  • Like 5
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மரணம் குறித்த பூரண அறிக்கை

இது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவனின் மரணம் குறித்த பூரண அறிக்கையே இவ்வாறு திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம் | Thirukkovil Hospital Development Committee

மேலும் கடிதத்தில் , மாணவனின் மரணத்திற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறந்த மாணவனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலை அபிவிருத்தி குழு  இந்த கடித்தை அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் ஈப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/thirukkovil-hospital-development-committee-1710239822

Link to comment
Share on other sites

On 11/3/2024 at 12:15, Justin said:

ஓம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைத்து தண்ணீரைக் கூடக் குடிக்கலாம். Gatorade தான் குடிக்க வேண்டுமென்றில்லை. தேசிப்பழச்சாறும் நல்லது.

முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.

கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். 

உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். 

உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.

இப்போது முடியும் இந்த வட அமெரிக்க குளிர் கால சீசனில், இன்புழுவன்சா வைரஸ் கொஞ்சம் கூடுதலாக ஆட்களைத் தாக்கியிருக்கிறது, பல இளம் வயதினருக்கு நுரையீரல் அழற்சி வந்திருக்கிறது. எனக்கு, post-viral cough என்ற தொண்டை அழற்சி ஒரு மாதம் வரை இருந்தது. உங்களுக்கும் இன்புழுவன்சா தான் படுத்தியிருக்கிறதென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இப்போது முடியும் இந்த வட அமெரிக்க குளிர் கால சீசனில், இன்புழுவன்சா வைரஸ் கொஞ்சம் கூடுதலாக ஆட்களைத் தாக்கியிருக்கிறது, பல இளம் வயதினருக்கு நுரையீரல் அழற்சி வந்திருக்கிறது. எனக்கு, post-viral cough என்ற தொண்டை அழற்சி ஒரு மாதம் வரை இருந்தது. உங்களுக்கும் இன்புழுவன்சா தான் படுத்தியிருக்கிறதென நினைக்கிறேன்.

இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் இல்லை தானே அண்ணை?
எனக்கும் தம்பிக்கும் நிமோனியா வராதிருக்க தடுப்பூசி போடவேணும் என எமது வைத்தியர் கூறியிருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் இல்லை தானே அண்ணை?
எனக்கும் தம்பிக்கும் நிமோனியா வராதிருக்க தடுப்பூசி போடவேணும் என எமது வைத்தியர் கூறியிருந்தார். 

ஏராளன், இன்புழுவன்சா வைரசுக்கெதிராக தடுப்பூசி (flu shot) இருக்கிறது, மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்க முதல் இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புவோருக்கு வழங்குவர். தொற்றிலிருந்து 50% பாதுகாப்புக் கிடைக்கும் இந்த தடுப்பூசியால். மிச்ச 50% பேருக்கு தீவிரம் குறைந்த தொற்று ஏற்படும், எனவே உயிர்காக்கும், நோய்த்தீவிரம் குறைக்கும் தடுப்பூசியாக இன்புழுவன்சா தடுப்பூசி விளங்குகிறது. இலங்கையில் இது பயன்படுத்தப் படுகிறதா எனத் தெரியவில்லை.

உங்கள் மருத்துவர் சொன்ன தடுப்பூசி Streptococcus pneumoniae என்ற பக்ரீரியாவின் தொற்றினால் ஏற்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். இதுவா எனக் கேட்டுப் பாருங்கள்.

https://www.cdc.gov/pneumococcal/index.html

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later.
 

நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀

 
வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம்.
 
சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர்  LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார்.
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later.
 

நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀

 
வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம்.
 
சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர்  LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார்.
 

வெளித்தெரியாமல் இருக்கும் இதயக் கோளாறுகள் சிலரில் உடற்பயிற்சி, உடல் உழைப்பின் போது வெளிப்படுவதுண்டு. இந்தக் காரணத்தினால் தான், முதல் எப்பொழுதும் கடின உடற்பயிற்சி செய்யாதோர், ஒரு மருத்துவ பரிசோதனை , இதய பரிசோதனை செய்த பின்னர் கடின உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மருத்துவ ஆலோசனை இருக்கிறது. சாதாரணமாக இதயத்தின் இரத்தக் கலன்களில் இருக்கும் அடைப்புக் (atheroma) கூட, உடற்பயிற்சி கடினமாகும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம். இதற்கு ஒரு வழி, stress test செய்து இதய இயக்கம் சரியாக இருக்கிறதா என்று கண்டறிவது.

மேல் செய்தியில் இருப்பது, atrial flutter எனப்படும் பிறப்பிலேயே இருக்கக் கூடிய ஒரு நிலை. இதயப் பரிசோதனையில் கண்டறியலாம். சிகிச்சைகள் இருக்கின்றன.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனையை குற்றம் சாட்டும் தாயார் - என்ன நடந்தது?

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், யூ.எல். மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.

இதனால், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி மாணவர் மரணித்த தினத்தன்று வைத்தியசாலையின் உள்ளே சிலர் உட்புகுந்து - அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாக வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.

எனவே, அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை வைத்தியசாலையைத் திறக்க முடியாது என வைத்தியசாலை நிர்வாகமும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் கூறுகின்றன.

இது இவ்வாறிருக்க, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அலட்சியமே தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என பிபிசி தமிழிடம் உயிரிழந்த மாணவரின் தாய் கவிதா கூறுகின்றார்.

 
இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

இலங்கையில் நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்ட மாணவரே உயிரிழந்தாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இன்னொருபுறம், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் – உயிரிழந்த மாணவரிடம் பெறப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், மாணவரின் மரணத்துடன் தொடர்பான விஷயங்களை ஆராயும் பொருட்டு பிபிசி தமிழ் களத்தில் இறங்கி, அந்த விஷயத்துடன் தொடர்பான தரப்பினரைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது.

 

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட விதுஜன்

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. விதுஜன் 2007ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தனது ஊரிலுள்ள மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலிருந்தே விதுஜன் விளையாட்டில் ஆர்வமுள்ளவர் என்று அவரின் அம்மா கூறுகின்றார்.

திருக்கோவிலில் உள்ள பிரபல விளையாட்டுக்கழகம் ஒன்றின் கிரிக்கெட் அணியில் விளையாடும் விதுஜன், தினமும் மைதானத்தில் அதிக தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டவர் என அறிய முடிகிறது. மேலும், விதுஜனுக்கு எந்தவிதமான நோய்களும் இருக்கவில்லை என்றும் அவரின் தாயார் கூறுகின்றார்.

இந்த நிலையில்தான் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் ‘இல்ல விளையாட்டுப் போட்டிகள்’ கடந்த 11ஆம் தேதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தன.

அதன் ஆரம்பப் போட்டியாக காலை 6.50 மணியளவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் 33 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், 6.5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாக இந்தப் போட்டி அமைந்திருந்ததாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி ஜி.கே. தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதில் ஓடிய விதுஜன் 6ஆம் இடத்தைப் பெற்றார்.

மேற்படி மாரத்தான் போட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை, அதில் கலந்துகொண்ட தனது மகனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டியவாறே தான் சென்றதாக விதுஜனின் தாய் கூறினார்.

 

'மருத்துவச் சான்றிதழ் பெற்றோம்'

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

குறித்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்ட பின்னரே, அவர்களைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதித்ததாக, விதுஜனின் பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறியதோடு, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் தெரிவித்த மருத்துவச் சான்றிதழையும் காட்டினார்.

குறித்த மாரத்தான் போட்டியின் தூரத்தை முழுவதுமாக ஓடி முடித்த விதுஜன், அசாதாரண உடல் நிலையை உணர்ந்தாகவும், அவர் பாடசாலையில் இருந்து நபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் அவரின் பாடசாலை பிரதியதிபர் எஸ். உதய தர்ஷன் கூறுகின்றார்.

மேலும், மேற்படி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்திருந்த மாணவர்கள் இருவர் மருத்துவச் சான்றிதழ்களின் படி, அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றும், அதனால் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பிரதியதிபர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, ‘அதிக வெப்பம் நிலவுகின்றமையால் வெளி நிகழ்வுகளை நடத்த வேண்டாம்’ என அறிவுறுத்தும் வகையில், கல்வியமைச்சின் அறிவித்தல் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறிய அதிபர், வெயில் நேரத்துக்கு முன்னதாக காலை வேளையிலேயே மாரத்தான் போட்டியைத் தாங்கள் நடத்தி முடித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

 

மருத்துவமனையில் என்ன நடந்தது?

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

இந்த நிலையில், திருக்கோவில் வைத்தியசாலை தரப்பினரின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்தாக விதுஜனின் தாய் கவிதா பிபிசி தமிழிடம் கூறினார்.

”எனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நிமிடங்களில் நான் அங்கு சென்றுவிட்டேன். ஆனால் எனது மகனைப் பார்ப்பதற்கு முக்கால் மணிநேரம் வரை என்னை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு பலவந்தமாக நான் உள்ளே சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது.

எனது மகன் கட்டிலில் படுத்திருந்தார், ஒரு வைத்தியர் தனது இரண்டு முழங்கால்களையும் எனது மகனின் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவரின் கைகளால் எனது மகனின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தார்.

‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கேட்டேன். உங்கள் பிள்ளையின் உயிருக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள்,” என்று கூறினார் விதுஜனின் தாய்.

மேலும், “எனது மகனின் உயிர் அந்த வைத்தியசாலையிலேயே பிரிந்து விட்டது. ஆனாலும், அதைக் கூறாமல், மேலதிக சிகிச்சைக்காக எனக் கூறி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டார்கள்,” என்றார்.

வைத்தியசாலையிலுள்ள ஆக்சிஜன் இயந்திரத்துக்கு மின்சாரத்தை வழங்குவதற்குப் பொருத்தமான வட்ட வடிவ ‘பிளக்’ (plug) வைத்தியசாலையில் இருக்கவில்லை என்றும், அதனால் அருகிலிருந்த பாடசாலையில் இருந்து அதைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறிய விதுஜனின் தாய், “அதன் பின்னரே எனது மகனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது” என்றார்.

இப்படி 3 மணிநேரத்துக்கும் அதிகமாகத் தனது மகனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திருந்ததாகவும், அவர் மரணித்துவிட்ட பிறகுதான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைக்கு எனக் கூறி, திருக்கோவில் வைத்தியசாலையினர் உடலை அனுப்பி வைத்ததாகவும் விதுஜனின் தாய் குறிப்பிட்டார்.

”திருக்கோவில் வைத்தியசாலையில் ஆம்பியுலன்ஸ் இருக்கிறது. ஆனால் அதனை ஓட்டுவதற்கான சாரதி இல்லை என்றும், நோயாளியை கொண்டு செல்வதற்காக வசதிகள் ஆம்புலன்ஸில் இல்லை என்றும் கூறினார்கள். அதன் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸை அழைத்து, அதில்தான் எனது மகனைக் கொண்டு சென்றார்கள்,” எனவும் கவிதா கூறினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு தனது மகன் அனுப்பப்பட்ட பின்னர் தாம் அங்கு சென்றதாகவும், அங்குள்ள வைத்தியர் ஒருவர் தனது மகன் ஒரு மணிநேரம் முன்பாகவே இறந்துவிட்டார் என்று கூறியதாகவும் விதுஜனின் தாய் பிசிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

 

வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?
படக்குறிப்பு,

டாக்டர் அன்பாஸ் பாறூக்

விதுஜன் இறந்த செய்தியை அடுத்து, அவர் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக அன்றைய தினம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்தியசாலையின் வெளியில் இருந்த பெயர் பதாகை உடைக்கப்பட்டதோடு, வைத்தியசாலை மீது கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விதுஜன் படித்த பாடசாலையின் மாணவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சீருடைகளுடன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு போலீசாரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வைத்தியசாலை நிர்வாகம் கூறுவது என்ன?

இந்த நிலையில், விதுஜனின் மரணம் தொடர்பில் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரப்பு மறுக்கிறது. விதுஜன் வைத்தியசாலைக்கு வரும்போதே அவரின் இதயத்துடிப்பு மிகவும் குறைந்திருந்ததாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

பின்னர் அவருக்குப் பல தடவை இதயச் செயலிழப்பு (cardiac arrest) ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவர் தாங்கக் கூடிய அளவை விடவும் அதிகளவான உடல் வேலையில் ஈடுபடும்போது இவ்வாறு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விதுஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலையில் இருந்த அனைத்துத் தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் மருத்துவ சான்றிதழ், சாதாரண உடல் ஆரோக்கியம் தொடர்பில் வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழ் என்றும், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வோருக்கென தனியான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக விதுஜனின் பாடசாலை நிர்வாகத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.

இதன் காரணமாக, திட்டமிட்டிருந்த தேதியில் மாரத்தான் போட்டியை நடத்த வேண்டாம் என திருக்கோவில் வயலக் கல்வி அலுவலகத்தின் அதிகாரி ஒருவருக்கு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியசட்சகர் தொலைபேசி ஊடாக அறிவித்ததாகவும் பிபிசி தமிழிடம் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.

 
இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

இந்நிலையிலேயே திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன்போது சிலர் வைத்தியசாலையின் அவசர சிசிச்சைப் பிரிவுக்குள் புகுந்து அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பிரிவு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ் பாறூக் பிபிசிக்கு தெரிவித்தார். இதை நிரூபிப்பதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எனவே, "வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், வைத்தியர்களை அச்சுறுத்தியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நிபந்தனை விதித்துள்ளனர்," எனக் கூறும் டாக்டர் அன்பாஸ் அவை நடந்தால் மட்டுமே அங்கு வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களை வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையிலேயே, மேற்படி பாடசாலையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக டாக்டர் அன்பாஸ் சுட்டிக்காட்டினார்.

காலையிலும் இரவு வேளையிலும்கூட, தற்காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதாகவும் கூறினார். எனவே, கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு மாற்றாக அந்தப் பாடசாலை நடந்துள்ளதாகவும் அன்பாஸ் குற்றஞ்சாட்டினார்.

அதிக வெப்பம் நாட்டில் நிலவுகின்றமையால் மாணவர்களை வெளிக்களச் செயற்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியில் இருந்தே கல்வியமைச்சு பல தடவை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cp307nyrnv4o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.