Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழரைச்சனி முதலே போய் உட்காந்துட்டுதோ?

அவர் என்னுடன்  எப்பவும் கூடவே இருக்கிறார்.

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வ

மெசொபொத்தேமியா சுமேரியர்

எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன்

மெசொபொத்தேமியா சுமேரியர்

ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிது நேரம் யாருமே பேசவில்லை.

ஓட்டோ ஓட்டுனர் :  கீளாம்பாக்கம் தானே?

கணவர்:  ஓம்

  : எங்க போறீங்க

கணவர்: மதுரை

நான்: அந்த இடம் தெரியும்தானே?

  ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா?

கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே.

  ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது.

நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார்

கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ?

  ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன்.

அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. 

அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும்.

மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ  எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார்.

எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை  விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது.

பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர்.

மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார்.

இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை  என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன்.

இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது.

சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற  இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். 

உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். 

 

சனி தொடரும்  

 

 

  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாற  இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன்.

முதலே 157 ரூபாக்கள் என்று ஊபர்காரன் சொல்லிப் போட்டானே.

அப்புறம் எப்படி கூடுதலாக கொடுக்க மனம் வரும்?

39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சனி தொடரும்  

 

 

ஏழரை என்று தெளிவா எழுதுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ஒரு பத்து நிமிட ஓட்டத்தில் கோயில் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூற இறங்குகிறோம். முன்னர் தூர நின்று பார்த்தாலே கோபுரம் தெரியும். இது தெற்கு வாசலோ மேற்கு வாசலோ என்று ஓட்டுனர் கூறியதும் மறந்துவிட்டது. ஒரே திருவிழாக் கூட்டம். கட்டடங்களும் வீதியோரக் கடைகளுமாக முன்னர் பார்த்த கோயில் வீதி இல்லை அது. எனக்கு சந்தேகமாக இருக்க மீனாட்சி அம்மன் கோவில் தானே என்று பக்கத்தில் நின்ற ஒருவரைக் கேட்க, அவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நடந்து போங்கம்மா வரும் என்கிறார். காலை ஒன்பதுக்கே வெயில் கொழுத்துகிறது.

செருப்புகளை கழற்றி விடும் இடத்தில் கொடுத்துவிட்டு அதற்குரிய அட்டையை வாங்கிக்கொண்டு திரும்பினால் உங்கள் போன் ஒன்றும் கொண்டுபோக முடியாது. அங்கே கொடுத்து ரிசீட் வாங்கிக்கங்க என்கிறார் ஒருவர். கொடுத்து றிசீற் வாங்கிக்கொண்டு வாசலைத் தேடினால் எல்லாப் பக்கமும் மூடி அடைத்து ஆட்கள் கோவிலுக்கு உள்ளே போவதற்கு பாதுகாப்புப் பரிசோதனை வேறு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வரிசை. ஆண்கள் வரிசையில் ஒன்று இரண்டு பேர்தான். பெண்கள் வரிசையைப் பார்த்தால் நீண்டதாக இருக்க போய் நிற்கிறேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் முறை வந்தால் அந்த டிவைஸ் கீ கீ என்கிறது. என் கைப்பையை வாங்கி திறந்து உள்ளே கைவிட முயல நான் எடுத்துக் காட்டுகிறேன் என்று தடுக்க, சரி எல்லாவற்றையும் வெளியே எடுக்கச் சொல்கிறார் அந்தப் பொலீஸ்காறி. 

நான் கைவிட்டுக் கிளறினால் என் போர்ட்டபிள் சார்ஜர் வருகிறது. இதை ஏன் கொடுக்கவில்லை என்கிறா இன்னொரு போலீஸ்காறி. போனைத்தானே கொண்டுபோகக் கூடாது என்றார்கள் என்கிறேன். சரி சரி படம் எடுத்துடாதீங்க என்கிறா மற்றவ. இதில் எப்பிடிப் படம் எடுக்க முடியும் என்று கூறியபடி வெளியே வந்த பொருட்களை உள்ளே வைத்து என்  கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றால் அங்கும் வாசலில் டிக்கற் கவுண்டர்.

ஒருபக்கம் இலவசமாக வணங்கும் மக்களுக்கான வரிசை. மறு பக்கம் 50, 100, மற்றும் சிறப்புத் தரிசனத்துக்கான வழி. சிறப்புத் தரிசனத்துக்குப் போனால் விரைவில் போய்விடலாம் என்கிறேன். போய் என்ன செய்யப் போறாய்? இன்று முழுவதும் இதுதான் வேலை என்று சொல்லும் மனிசனுடன் 100 ரூபாய் டிக்கற் எடுத்து வரிசையில் நிற்கிறோம். சில அகலமான இடங்களில் எம்மை முந்திக்கொண்டு போகிறார்கள். உள்ளே செல்லச் செல்ல காற்றோட்டமே இன்றி வியர்க்கிறது. தண்ணீர்ப் போத்தலையும் கணவர் தன் பையுடன் கொடுத்துவிட்டார். சில்வர் அண்டா போன்ற ஒன்றில் நீரைக் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பலரும் எடுத்துக் குடிப்பதனால் அதைக் குடிக்கவே தோன்றவில்லை. கற்பக்கிரகம் இருக்கும் இடத்துக்கு போவதற்குள் சீ என்று போய் விட்டது. ஐயர்மார் இருவர்தான் தெரிக்கிறார்கள்.

போங்கம்மா போங்கம்மா என்று ஐயர் ஒருவர் கூற போகாமல் இங்கேயா நிற்கப்போறம் என்கிறேன். என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறார். மீனாட்சியையோ சுந்தரேசரையோ பார்க்காமல் வெள்ளியே வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால் அங்கே பொங்கல்,கேசரி, ஆப்பம் என்று விற்கிறார்கள். ஆங்காங்கே வேறு சிலரும் நிலத்தில் சப்பாணி கட்டியபடி அமர்ந்திருக்க அதில் வாங்கு போல இருந்த ஒன்றில் நானும் கணவரும் அமர்கிறோம். போவோர் வருவோரைப் புதினம் பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருக்க ஒரு வயதுபோன பெண் வந்து சுவாமியை வைக்கும் இடத்தில் இருக்கிறீங்களே. எந்திரிங்க என்று கூற சிரித்தபடி எழுந்து வர தாமரைப்பூக்கள் அற்ற பொற்றாமரைக் குளம் பச்சை நிறத்தில் தெரிகிறது.

அதன் கரையில் அமர்ந்தபோது முன்னர் வந்த நினைவுகள் எழுகின்றன. முன்னர் கீழே சென்று காலை நனைத்துவிட்டுத்தான் கோவிலின் உள்ளே சென்றோம். இப்போ கீழே செல்ல முடியாதவாறு கம்பி வேலி போட்டிருந்தார்கள். கோயில் தொன்மையானதாக இருந்தாலும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாக கோயில் என்று உணரவே முடியாததாக இருக்க மனதில் ஒரு ஏமாற்றமும் தோன்றியது. கணவர் வாங்கிவந்த பொங்கலும் கேசரியும் கூடச் சுவையாக இல்லை.

வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம். மனிசன் மீண்டும் ஊபர் அப்பில் ஓட்டோவை அழைக்க ஓட்டோ அகப்படுதே இல்லை. பின் வீதியில் சென்று மறித்தாலும் நிற்கவில்லை. அன்று சனிக்கிழமை ஆதலால் சரியான கூட்டம். தமிழர்கள் மட்டுமன்றித் தெலுங்கு மக்களும் நிறையப்பேர் வந்திருந்தனர்.

அருகில் ஒருவரிடம் ஓட்டோ எங்கே பிடிப்பது என்றதுக்கு எதிர்ப்பக்கம் போனா ஓட்டோ ஸ்டாண்ட் வரும் என்று கூற அந்த மதிய வெயில் எதையும் இரசிக்க முடியாது செய்கிறது. மறுபடியும் ஓட்டோக்காரர் அறுநூறு சொல்லி ஐநூறுக்கு சம்மதித்து கோட்டலுக்குப் போய் இறங்க பசியே இல்லாது இருக்க போய் சாப்பிட மனமின்றி முகம் கைகால்  கழுவிவிட்டு கட்டிலில் போய் விழுகிறோம்.

எழுந்தால் மணி மூன்று என்கிறது போன். எங்கே போகலாம் என்று யோசித்தாலும் போக மனமின்றி இருக்கிறது. சரி வெளியே போய் நல்ல கோட்டலில் உண்போம் என்றுவிட்டு சென்று உண்டுவிட்டு தெப்பக்குளம் பார்க்கப் போவோம் என்று முடிவெடுத்துப் போய் பாத்துவிட்டு - முன்னர் பார்த்ததை விட குளமும் கோவிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்டிருக்க மனம் சிறிது நிம்மதியடைகிறது. வைகை அணை, திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோவில் எல்லாம் பலதடவை பார்த்து அலுத்துப்போயிருந்ததால் போகாது சமணர் மலையைப் போய் பார்ப்பமோ என எண்ணினால் மாலை ஐந்துமணிக்கு போய் பார்க்க நேரம் போதாது என எண்ணி சினிமா ஒன்றுக்குப் போலக்காம் என முடிவெடுத்து ஓட்டோக்காரரிடம் கேட்டால் இப்ப ஆறரை சோ இருக்கு. வெற்றி சினிமா நன்றாக இருக்கும் என்று கூற அங்கு செல்கிறோம். இந்தியாவில் சினிமாத் தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியானதுதான். ஆனாலும் அன்று பார்த்த படம் என்ன என்று இன்றுவரை எனக்கு ஞாபகம் வரவில்லை என்பது வேறு.

அடுத்தநாள் காலை எழுந்து காலை உணவை அங்கேயே உண்டுவிட்டு கோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு ஓட்டோ ஒன்றை 1000 ரூபாய்க்குப் பேசி திருப்பரங்குன்றம் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்து சொல்லும்படியான கோட்டல் ஒன்றுகூட இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு தங்குமிடம் தேடினால் ஒன்றுகூட நன்றாக இல்லை. அங்கிருந்து கீழடி ஒரு 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் வெயில் தணியச் செல்லலாம் என்று கிடைத்த ஓரளவு சுத்தமான கோட்டலில் இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஊபர் காரில் கீழடிக்குச் சென்றால் ஏமாற்றம்தான்.

ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார். அதிலிருந்து ஒரு பத்து நிமிட நேரத் தூரத்தில் ஒரு மியூசியம் ஒன்று அமைத்து சில பொருட்களையும் அங்கு வைத்துள்ளார்கள். அதைக் கூட அங்கு அமைப்பதற்கு மத்திய அரசு முதலில் தடை போட்டதாம். அதன் பின் கனத்த மனதுடன் பேருந்து நிலையம் வந்து படுத்துத் தூங்கியபடி சென்னை வந்து சேர்கிறோம்.

 

இனி தாஜ்மகால் வரும்  

 

 

 

 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரட்டும்.  படங்கள் எங்கே??   முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார்.

தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள்.......தொடருகின்றோம்........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி தாஜ்மகால் வரும்  

அப்ப இனி ஏழரை வராதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Kandiah57 said:

வரட்டும்.  படங்கள் எங்கே??   முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” 

படங்கள் பலதை இடமின்றி அழித்துவிட்டேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படம் போட விடுகுதில்லை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள்.......தொடர்தொடர எனது வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/3/2024 at 22:48, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என்  வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம்.

ஏன்? ஆரும் தூக்கிக்கொண்டு போடுவாங்கள் எண்டு பயமோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம் போட விடுகுதில்லை

https://postimages.org/

மேலுள்ள இணைப்பில் இணைத்து அதில் வரும் Direct linkஐ யாழில் இணைக்க உங்கள் படங்கள் காட்சி தரும் அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

kee1.jpg

 

kee.jpg

 

keeladi-2.jpg

 

keeladi-1.jpg

 

keeladi5.jpg

 

keeladi-4.jpg

keeladi-3.jpg

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

kee-5.jpg

 

keeladi7.jpg

 

kee8.jpg

மேலே உள்ளது கூட உண்மையான அகழ்வாய்வுப் பொருள்  இல்லை என்று நினைக்கிறேன். மாதிரிக்காகச் செய்து வைத்துள்ளனர்.

On 23/3/2024 at 22:25, Kandiah57 said:

வரட்டும்.  படங்கள் எங்கே??   முடியும் என்றால் இணைத்து விடுங்கள்” 

நன்றி வருகைக்கு

 

19 hours ago, குமாரசாமி said:

ஏன்? ஆரும் தூக்கிக்கொண்டு போடுவாங்கள் எண்டு பயமோ? 😎

பின்னை என்ன

8 hours ago, ஏராளன் said:

https://postimages.org/

மேலுள்ள இணைப்பில் இணைத்து அதில் வரும் Direct linkஐ யாழில் இணைக்க உங்கள் படங்கள் காட்சி தரும் அக்கா.

மிக்க நன்றி ஏராளன்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி ஏழரை வராதா?

எப்பிடி வராமல் இருக்கும்???

On 24/3/2024 at 00:10, பெருமாள் said:

தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் .

அப்படி அல்ல. தமிழர்கள் எதையும் அலட்சியமாய் நோக்குவதுதான் காரணம். தடைகள் வந்தால் எல்லோரும் சேர்ந்து நிற்பதில்லை. அகழ்வாய்வாளர்களை  இடம்மாற்றும் மத்திய அரசைக் கண்டிப்பதில்லை.

On 24/3/2024 at 09:03, suvy said:

தொடருங்கள்.......தொடருகின்றோம்........!   👍

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார்.

அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார்.

சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம்.

சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது.

அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச்  சொல்லும்படியாக இல்லை.   

ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம்.

அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன்.

கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம்.

எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன்.

ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது.

இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள்.

தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை.

 

வரும்     

 

 

  • Like 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/3/2024 at 23:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம்

இரண்டுதரம் வெளியே வந்து விட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kavi arunasalam said:

இரண்டுதரம் வெளியே வந்து விட்டீர்கள். 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறு காசுக்கு குதிரையும் வேணும்

ஆறு கடக்க பாயவும் வேணும்.

இது தான் நினைவு வருகுது.

இதில ஏழரை எட்டிப் பார்க்கலைப் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/3/2024 at 05:50, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார்.

 

அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார்.

 

சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம்.

 

சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது.

 

அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச்  சொல்லும்படியாக இல்லை.   

 

ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம்.

 

அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன்.

 

கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம்.

 

எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன்.

 

ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது.

 

இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள்.

 

தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை.

 

 

 

வரும்     

 

 

 

 

 

பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. 

தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆறு காசுக்கு குதிரையும் வேணும்

ஆறு கடக்க பாயவும் வேணும்.

இது தான் நினைவு வருகுது.

இதில ஏழரை எட்டிப் பார்க்கலைப் போல.

நான் சனீஸ்வரரை வணங்குவதனால் அப்பப்ப கருணை காட்டுவதை நிறுத்தவில்லை.

1 hour ago, ரசோதரன் said:

பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. 

தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀

காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

தொடருந்து நின்றதும் நான் முன்னால் இறங்கி நடக்கிறேன். குளிர்வதுபோல் இருக்க அப்போதுதான் ஏன் எல்லோரும் குளிராயடைகளை அணிந்திருந்தனர் என்று புரிகிறது. எல்லாம் பார்த்த நாங்கள் வெதரையும் பாத்திருக்கவேணும் என்கிறார் கணவர். முன் வாசலுக்கு வந்து சேரந்தவுடன் கம் வித் மீ மடம் என்று என்னருகில் ஒரு குரல் கேட்கிறது. நான் திரும்பி அவனை ஒருவாறு பார்த்துவிட்டு இல்லை நாம் டாக்ஸியில் தான் போகப் போகிறோம் என்கிறேன். என்னிடம் டாக்ஸி இருக்கு என்றுகூற, இல்லை நான் ஸ்டாண்டில் போய் பிடிக்கிறேன் என்கிறேன். கணவர் அருகில் வந்து உவன் நீ இறங்கின நேரம் தொடக்கம் உன்னை மற்றவர் அண்டாமல் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தவன் என்கிறார் சிரித்தபடி.

மடம் அங்க தான் டாக்ஸி ஆபீஸ் இருக்கு. என்கூட வாங்க என்றுவிட்டு அங்கு போய் ஏதோ இந்தியில் கதைத்துவிட்டு இந்தாங்க மடம் றிசீற். 200 ரூபா முதல் கட்டணும் என்று கூறக் கணவர் 200 ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறார். பின் எம்மை அழைத்துக்கொண்டு சென்றால் நடப்பதற்கு இடமின்றி அடுக்கியபடி டாக்ஸிகள். நாம் ஏறி அமர்ந்து எவ்வளவு நேரம் இங்கிருந்து தாஜ்மகால் போக என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிறான். தாஜ்மகாலுக்குப் பக்கமாக ஒரு நல்ல ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டிப் போகும்படி கேட்க, பக்கத்திலே எந்த கோட்டலும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நல்ல கோட்டல் எல்லாம் இருக்கு மடம் என்கிறான்.

அவன் காட்டியதில் அருகருகே இரண்டு கோட்டல்கள் இருக்க ஒன்றைத்தெரிவு செய்கிறோம். கீற்றர் இருக்கா, சுடுதண்ணீர் வருகிறதா என்று கேட்டதற்கு ஓம் ஓம் என்றார்கள். 3200 ரூபாய்களுக்கு அறை நன்றாகத்தான் இருக்க வந்த பயணக் களைப்புப்போகக் குளிப்போம் என்றால் தண்ணீர் கடுங்க குளிர். பைப்பில் சுடுநீரே வரவில்லை. அவர்களுக்குப் போன் செய்தால் பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். ஒரு பதினைந்து நிமிடமாவது உள்ளே நின்று ஏதோ செய்து சுடுநீரை வரச் செய்துவிட்டுப் போக குளித்து வெளியே வந்தால் குளிர். கீற்றர் வேலை செய்யவே இல்லை. மணி ஏளாகி இருட்டி விட்டதால் வெளியே செல்லவும் மனமின்றி பசியும் இன்றி கட்டிலுக்குப் போனால் போர்வை குளிருக்கு ஏற்றதாக இல்லை. மீண்டும் போனடித்தால் அவர்கள் எடுக்கிறார்களே இல்லை. இரவு முழுவதும் தூங்காது புரண்டு படுத்து காலை ஆறு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு ஏழுமணிவரை நடுங்கிக்கொண்டு இருந்துவிட்டு காலை ஏழுக்குத்தான் தங்கள் உணவகம் திறப்பார்கள் என்று கூறியதால் உணவகத்தைத் தேடிச் செல்கிறோம். 

அங்கு சென்றால் யாரையுமே காணவில்லை. பழைய காலத்துத் தளபாடங்களுடன் தூசிகள் நிறைந்ததுபோல் காணப்படுகிறது அந்த உணவகம். இன்னும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வெளியே செல்வோம் என்று எண்ண ஒரு முப்பது மதிக்கத்தக்க ஒருவன் வருகிறான். காலை உணவு உண்ண வேண்டும் என்றதற்கு ஒரு மெனு காட்டைத் தருகிறான். அதில் சான்விச் ஒன்றுதான் தெரிந்த பெயராக இருக்க முட்டை ஒம் லெற்றும் ரோஸ்ற் உம் உண்டு கோப்பியும் குடித்துவிட்டு அறைக்கு வந்து அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து கடைக்குப் போகவேண்டும் என்கிறோம்.  

கடைகள் ஒன்பதுக்குத்தான் திறக்கும் என்று கூற மீண்டும் கட்டிலில் அமர்கிறோம். சாதாரணமாக இருக்க முடியாதவாறு குளிர். நிலத்தில் வெறுங் காலை வைக்கவே முடியவில்லை. டாக்ஸி ஓட்டுனர் 8.45 இக்கு வர அவருடன் சென்றால் நாம் நினைத்ததுபோல் ஒரு கடைக்கூடத் தென்படவில்லை. வீதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரையும் காணவில்லை. முக்கியமாகப் பெண்களை.

கடையின் உள்ளே சென்றால் பழங்கடை போன்ற தோற்றம். வேறு பெரிய கடைகள் இல்லையா என்று கேட்க இதை விட்டால் 20 கிலோ மீற்றர் போகவேண்டும் என்கிறான். வேறு வழியின்றி எனக்கும் கணவருக்கும் யம்பர் மற்றும் சொக்ஸ், சோல் என்பவற்றை வாங்கி வந்து அணிந்துகொண்டு எமது பயணப் பொதியையும் எடுத்துக்கொண்டு கோட்டலை விட்டுப் போகிறோம் என்று சொல்லித் திறப்பைக் கொடுத்துவிட்டு வந்து டாக்ஸியில் ஏற, ஏன் மடம் வக்கேட் செய்திடீங்களா என்கிறார். கடுங் குளிர் என்கிறேன். மடம் வேறு கோட்டல் காட்டவா என்று கூற நாமே பார்த்துவிட்டோம் என்று கூறி தாஜ்மகாலுக்கு நடந்து போகும் தூரத்தில் இருக்கிறது என்கிறேன். அவனுக்கு போனைக் காட்ட இந்த இடத்துக்கு கார் போகாது மடம் என்கிறான். சரி நீ இறக்கிவிடும் தூரத்தில் இருந்து ஓட்டோ பிடிக்கிறோம் என்று கூற கார் பத்து நிமிட ஓட்டத்தில் ஒரு பெரிய வீதியில் நிற்க, பக்கத்தில் நின்ற சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி வந்து வாருங்கள் என்கிறான். நாம் டாக்ஸி ஓட்டுனரைப் பார்க்க, பயப்பிடாமல் போங்க என்கிறார்.

அதில் இருந்து ஒரு ஐந்து நிமிடத்தில் நாம் சொன்ன கோட்டல் சித்தார்த்தா வருகிறது. பார்க்க நல்லதாக இருக்க அங்கும் போய் அறையைப் பார்த்தபின் வரவேற்புக்குச் சென்று விபரங்களைக் கொடுத்துவிட்டு எமது கடவுச் சீட்டுகளை வாங்கிப் படம் எடுத்துவிட்டு அறைக்குப் போக எமது பயணப் பொதிகளைத் தூக்குகிறான் ஒருவன். பே பண்ணவேண்டும் என்று சொல்ல கணவர் வங்கி அட்டையை எடுக்க, காட் பேமெண்ட் நாம் எடுப்பதில்லை என்கிறான். உடனே நான் எனது கைப்பையில் இருந்து 3000 ரூபாய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்கிறோம்.

அறையில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு அதிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் தாஜ்மகாலைப் பார்க்கக் கிளம்புகிறோம். பெண்களும் ஆண்களுமாய் அந்தக் காலையிலேயே நிறையப் பேர் வந்தவண்ணம் இருக்க நிறையப்பேர் காலையில் வெள்ளனவே வந்து சூரிய உதயம் பார்த்துவிட்டுக் கிளம்புகின்றனர். நான் ஏற்கனவே எத்தனையோ இடங்களில் சூரிய உதயம் பார்த்ததனாலும் குளிராடைகள் வாங்காததனாலும் அதிகாலை செல்ல முடியவில்லை.

இந்தியர்களுக்கு 200 ரூபாய்கள். எமக்கு 1250 ரூபாய்கள். உள்ளே செல்ல சனம் கும்பல் கும்பலாக நின்று படம் எடுப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். எம்மிடமும் ஒருவர் வந்து படம் எடுக்கக் கேட்கிறார். 15  படங்கள் எடுக்க 1500 ரூபாய்கள். அவர்களே எம்மை ஆங்காங்கே நிற்கவைத்துப் படம் எடுக்கிறார். நாம் எனக்கு தங்கி இருக்கிறோம் என்று கேட்டு அதற்குப் பக்கத்தில் தான் தனது ஸ்டூடியோ. தான் மகன் படங்களைக் கொண்டுவந்து தருவான். அப்போது பணத்தைக் கொடுங்கள் என்கிறார். எப்பிடி ஒரு காசும் வாங்காமல் விட்டார் என்கிறேன் கணவரிடம். எங்கட படத்தை விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார்.

படங்களில் டிவி இல் பார்த்த சுற்றுப்புறம் நேரில் பார்த்ததிலும் அழகாய் இருந்ததாக எனக்குத் தெரிகிறது. படிகளில் ஏறி மேலே செல்ல அங்கு ஒரு பாதுகாப்புப் பிரிவு. எம்மை ஸ்கான் செய்தே விடுகின்றனர். போதாததற்கு காலில் அணிந்து செல்வதற்கு பொலிதீனும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று அருகில் செல்கிறோம். காவலுக்கு துப்பாக்கியுடனும் ஆட்கள் நிற்கின்றனர். அழகாய்த்தான் இருக்கிறது பளிங்குக் கட்டடம். பின் பக்கம் சென்று யமுனா நதியைப் பார்த்தால் அது தன் பாட்டுக்கு வெட்டவெளியில் ஓடிக்கொண்டிருக்கு. பெரு மரங்களோ அல்லது செழிப்போ இல்லாத ஆறும் கரையும் என்னை எந்தவிதத்திலும் கவரவே இல்லை.

சுற்றி வந்து உள்ளே செல்கிறோம். நான் வேறுவிதமாகக் கற்பனைசெய்து வைத்ததனாலோ என்னவோ என்னை எதுவும் பெரிதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. உள்ளே இரு சமாதிக்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக நேரம் நிற்க அவர்கள் விடவில்லை. படம் எடுப்பதும் தடை என்று, போட்டிருக்க சுற்றிவரப் பார்க்கிறேன். மேலே கமரா ஒன்று எம்மைப் பார்த்துக்கொண்டிருக்க படம் ஒன்றும் எடுக்காது வெளியே வருகிறோம்.

பகல் 11 மணிக்கே வெயில் கொழுத்துகிறது. ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் கீழே இறங்கி வர மரங்கள் இருப்பதனால் சிறிது ஆறுதலாக இருக்க மர நிழலில் நடக்கிறோம். பின் மீண்டும் திரும்பி தாஜ்மகாலை வடிவாகப் பார்த்துவிட்டு வெளியே வர இவ்வளவுதானா என்னும் எண்ணம் மனதில் எழாமல்இல்லை.

 

வரும்      

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளியே ஒரு அரை மணி நேரம் சுற்றிவிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லாததனால் மீண்டும் நாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கிருந்த உணவகத்துக்குச் சென்றால் அங்கும் ஒரே ஒருவர் மட்டும் எதையோ உண்டுகொண்டிருக்கிறார். மெனுவில் இருந்த பரோட்டாவும் மட்டன் கறியும் கணவர் ஓடர் செய்ய நான் எனக்கும் அதையே கொண்டுவரும்படி சொல்கிறேன். அரைவாசி எலும்புகளுடன் கறி ஏதோ சுவையுடன் இருக்க, ஆட்டிறைச்சியை இப்படியா இவர்கள் உண்கின்றனர் என்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி. குறை சொல்லாமல் சாப்பிடு என்கிறார். மனிசன். நல்லதை நல்லதென்று நான் சொல்வதே இல்லையா என்கிறேன்.

சாப்பிட்டு முடிய ஒரு மணிநேர ஓய்வின் பின் மீண்டும் டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து  Fatehpur Sikri, Agra fort, Anguri Bagh போன்றவற்றைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறோம். தான் எம்மை இறக்கிய இடத்துக்கு வரும்படி கூற பொடி நடையாய் நடந்து செல்கிறோம் மிகச் சிறிய கடைகளும் அதன் அருகிலே சிறிய வீடுகளும் சுத்தமற்ற இடங்களும் முகம் சுழிக்க வைக்க பிரதான சாலை வந்ததும் டாக்ஸி எங்கே நிற்கிறது என்று பார்க்க, தூரத்தில் இருந்து அவர் கையசைக்க அங்கு செல்கிறோம்.

ஒரு நாற்பது நிமிடங்களின் பின் Fatehpur Sikri என்னும் 16 ம் நூற்றாண்டில் தன் மூன்றாவது இந்து மனைவிக்காக இஸ்லாமிய மன்னன் கட்டிய ஜோர்டா பாயின் அரண்மனைக்கு செல்ல என ஓரிடத்தில் இறக்கிவிட அது காடு போல இருக்கிறது. இவர்கள் உங்களை இனி அழைத்துச் செல்வார்கள் என்று கூற ஏன் நீ வரவில்லையா என்று கேட்கிறேன். இவன் உன்னை அழைத்துச் செல்வான் என்று கூறி ஒரு பெடியனைக்  கைகாட்டுகிறார் ஓட்டுனர். பான்பராக் போட்டபடி திருடன் போல தெரிய என் முகத்தின் நம்பிக்கையின்மையைக் கண்டு, பயப்பிட வேண்டாம் என்கிறார்.

அங்கிருந்து ஒரு சிறிய பஸ் போன்றதில் எம்மைக் கொண்டுபோய் ஏறும்படி கூற எனக்கு இவன் எம்மைக் கடத்திக்கொண்டு சென்றால் என்ன செய்வது என்னும் எண்ணமும் எழ, பஸ்சையும் எம்முடன் வந்தவனையும் படம் எடுக்கிறேன்.

டோன்ட் வொறி மடம் என்று கூறி அவன் சிரிக்க, புது இடம் அதுதான் என்று சமாளித்தபடி வண்டியில் ஏறி அமர்கிறேன். ஒரு பத்து நிமிடத்தில் அரண்மனைக்கு அருகில் வண்டி நிற்க நடந்து அரண்மனைக்குள் செல்கிறோம். கட்டடங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அழகாகத் தெரிய அங்கு ஒரு மணிநேரம் செலவிட முடிகிறது. அதன் பின் அதற்கு அருகிலுள்ள இன்னொரு அரண்மனையின் உள்ளே முஸ்லிம் வழிபாட்டுத்தலம் இருக்க அங்கு எம்மைக் கரிசனையாய் கூட்டிச் செல்கின்றனர். அது மதசார்பற்ற வழிபாட்டுத் தலம் என்றும் குழந்தைகள் இல்லாத அக்பரை மூன்றாவதாக இந்து இளவரசியைத் திருமணம் செய்தால் குழந்தை கிடைக்கும் என்று கூறியவருக்காக மன்னன் அமைத்துக் கொடுத்தது என்றும் கூறப் போய் பார்ப்போம் என்கிறேன்.

உள்ளே தொட்டம் தொட்டமாக சாதாரண துணிகள், பட்டுத்துணிகள் விலைக்கு ஏற்றபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்க, எம்மை ஒருவரிடம் அழைத்துச் சென்று இங்கக்கு விற்கும் துணிகள் ஏழைக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்றுவிட்டு எம்மையும் ஒரு துணியை வாங்கிக் கொடுக்கும்படி கூற நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறேன். தலையைக் குனி தலையைக் குனி என்று கூற எதற்கு என்கிறேன்.

உன்னை துணி விற்பவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்கிறான் எம்மைக் கூட்டி வந்தவன். எனக்கு வேண்டாம் என்று நான் குனிய மறுக்க, என்ன மடம்?உன்னை ஒருவன் மதித்தால் அவனை நீயும் மதிக்க வேண்டாமா என்கிறான். குனியப்பா என்றபடி மனிசன் குனிய நானும் குனிய ஒரு பாத்திரம்போல் இருந்ததை எந்தலையிலும் கணவர் தலையிலும் வைத்து முணுமுணுக்கிறான்.

இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என மனதுக்குப் படுகிறது. நான் வேறு வழியின்றி ஒரு துணியை எடுக்க, 2000 ரூபாய்கள் என்கிறான். சென்னையில் 300 ரூபாவுக்கு அதை வாங்க முடியும். உது வேண்டாம் வேறு எடுக்கிறேன் என்று கூற, மடம் எடுத்ததை வைக்காதே என்று துணியை வைக்கவிடாது பிடிக்க என்னிடம் பணம் இல்லை என்கிறேன். காட் இருக்கா என்று கேட்க நான் இல்லை என்று கூறுமுன் கணவர் ஊம் என்கிறார். ஏன் ஓம் எண்டு சொன்னீங்கள் என்று மனிசனை முறைக்க, நாங்கள் தனிய வந்திருக்கிறம். தெரியாத ஊர். உன்ர வீரம் ஒண்டும் இங்க எடுபடாது. பேசாமல் காசைக் குடுத்து துணியை வாங்கிக் குடுத்துட்டுப் போவம் என்கிறார். நான் இல்லை எண்டு சொல்லீற்றன். நீங்கள் காட்டில குடுங்கள் என்கிறேன்.

சரிகாட்டால் பே பண்ணுகிறோம் என்றதும் ஒருவன் காட் மிசினைக் கொண்டு வருகிறான். நாம் கொண்டு சென்றது மொன்சோ என்னும் காட். போனில் அளவளவாக பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன் அதற்குக் குறைவான கட்டணமே வெளிநாடுகளில் செலவிடும்போது எடுப்பார்கள் என்பதனால் வரும்போது அதைத்தான் கொண்டுவந்தோம். கணவர் காட்டைப் போட்டு பின் நம்பரை அழுத்தினால் சுற்றிக்கொண்டே இருக்க, நெற் கிடைக்கவில்லை என்று இன்னொருவனைக் கூப்பிட அந்த மெசினும் சுற்ற, இவங்கள் காசை இரண்டுதரம் எடுத்தால் என்னப்பா செய்யிறது என்கிறேன். பயப்பிடாதை. அதில கனக்க இல்லை என்கிறார். நான் முதலே சொன்னேனே வேண்டாம் என்று என்கிறேன் அவனைப் பார்த்து. அவனோ விடுவதாய் இல்லை. மடம் நீங்கள் உள்ளே சென்று துணியைக் கொடுத்து வணங்கிவிட்டு வாருங்கள். கீழே சென்றால் நெட் வேலை செய்யும் என்கிறான். உள்ளே சென்று பார்த்தால் ஆட்களிடம் வாங்கும் துணிகளை அங்காங்கே அடுக்கியும் நடுவில் உள்ள வழிபாட்டுத் தளம் போல இருந்த ஒன்றின் மேல் விரித்தும் போட்டிருக்கிறார்கள்.

அங்கு நின்ற ஒருவர் இது உங்கள் பெயரால் ஒரு ஏழைக்குச் செல்கிறது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவிட்டு ஏழைகளுக்கு டொனேஷன் ஏதும் தர விரும்பினால் அங்கு சென்று செலுத்தும்படி கூற நாம் எதுவும் சொல்லாது வெளியே வருகிறோம். நேரத்தைப் பார்க்கிறேன். மாலை நான்காகிவிட இனி வேறு இடம் ஒன்றுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்து மனிசனிடமும் சொல்ல அவரும் சம்மதிக்கிறார்.

வெளியே வந்தவுடன் அவன் எமக்காகக் காத்திருக்கிறான். இனிப் போவோம் என்கிறேன் நான். சரி என்று கீழே நடந்துசெல்லும்போது இன்னொருவன் எமக்குக் கிட்டவாக உந்துருளியைக் கொண்டுவந்து நிறுத்த, இவன் அவன் கொண்டுவந்த மிசினை வாங்கி மனிசனிடம் நீட்ட மனிசன் மீண்டும் காட்டைப் போட்டு இலக்கங்களை அழுத்த மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்க, காசைத் தூக்கிக் குடு என்கிறார் மனிசன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்கிறேன் நான். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

மீண்டும் வந்து பஸ்சில் ஏறிய பின் எம்முடன் வந்தவனும் வந்து ஏறுகிறான். பஸ்சை விட்டு இறங்கியபின் நாம் வந்து ஏறிய இடத்துக்குக் கிட்ட வந்துவிட்டோம் என்று புரிகிறது. எமது டாக்ஸி ஓட்டுனரிடம் பணத்தைக் வாங்கிவிட்டு எம்மைக் கொடுக்கச் சொல்கிறான் என்று பார்த்ததால் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு காட் வேலை செய்கிறது. அதன்பின் நாம் அவனுக்குக் கொடுக்க வேண்டிய 1000 ரூபாய்களை என் பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறேன்.

எமது டாக்ஸியில் ஏற இனி எங்கே என்கிறார் அவர். வேறு இடம் செல்ல விருப்பம் இல்லை. நேரே கோட்டலுக்கு போகலாம் என்கிறார் கணவர். முன்னர் போலவே நாம் செல்ல போகும் வழியில் பெரிய உணவகம் ஒன்று தென்பட அங்கே நிறுத்தச் சொல்கிறோம். நாண் உடன் கோழிப் பிரட்டல் ஒன்றும் மரக்கறி ஒன்றும் எடுக்கிறோம். நாணும் கோழியும் நன்றாக இருக்க கணவர் தேனீரும் நான் கோப்பியும் எடுக்கிறோம் . ஓரளவு நன்றாக இருக்கிறது உணவும் பானமும். ஓட்டுனரை உண்ண வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. பணத்தைத் தாருங்கள். தான் பின்னர் உண்பதாகக் கூற கணவர் அவருக்குப் பணத்தைக் கொடுக்கிறார்.

தங்குவிடுதிக்குச் செல்ல மாலை ஆறுமணியாகிறது. களைப்புடன் சென்று கட்டிலில் விழுந்ததுதான். அடுத்தநாள் காலை ஆறுமணிவரை நல்ல தூக்கம் தூங்கி எழுந்து காலை ஏழுமணிக்கு உணவகம் வந்தால் அப்போதும் நாம் மட்டும்தான். பத்து மணிக்கு எமது டெல்லி போகும் தொடருந்து. ஆகவே வெள்ளனவே எழுந்து தயாராகிவிட்டோம். என்ன உண்ணலாம் என்று யோசித்து காலையில் ரொட்டி உண்ண விருப்பமின்றி தோசை என்று ஒன்று இருக்க அதை ஓடர் செய்கிறோம்.

ஒரு பதினைந்து நிமிடங்களின் பின் வெள்ளையாகத் தோசை வருகிறது. அத்துடன் சாம்பார் என்னும் பெயரில் எதுவோ வருகிறது. இரண்டு நிறங்களில் சட்னி வைத்திருக்க தோசையைப் பிய்த்து சடனியைத் தொட்டால் குளிர்ந்துபோய் இருக்கிறது. வெறும் தோசையை உண்டுவிட்டு வெளியே வந்து எமது டாக்ஸியை வரும்படி கூறிவிட்டு பயணப் பொதியை எடுத்துக்கொண்டு வந்து வரவேற்பில் நாம் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுத் திரும்ப, மடம் நீங்கள் இன்னும் பே பண்ணவில்லை என்கிறான் ஒருவன்.

நேற்றே கொடுத்துவிட்டோமே என்கிறேன். நாம் எப்போதும் போகும்போதுதான் பணத்தைப் பெற்றுக்கொள்வோம் என்கிறான். நேற்று நின்றவரைக் கூப்பிடு என்கிறேன். அவர் இன்று மாலைதான் வருவார் என்கிறான். நான் நிமிர்ந்து பார்க்கக் கமரா தெரிகிறது. கமராவில் பார் நான் நேற்றுத் தந்துவிட்டேன். காட்டில் பே பண்ணுகிறோம் என்று என் கணவர் சொல்ல காட்டில் எடுப்பதில்லை என்று கூறிப் பணமாக வாங்கினார்களே என்கிறேன். இருக்காது மேடம் பொறு உனக்கு கமராவைப் காட்டுகிறேன் என்று உள்ளே சென்றவன் பத்து நிமிடத்தின்பின் வந்து என்னையும் கணவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கமராவை ஓட  விடுகிறான். நானும் கண்ணை வெட்டாமல் பார்க்கிறேன். நான் பணம் குடுத்தது பற்றிய எதுவுமே இல்லை. மீண்டும் சுற்றி சத்தத்தைப் போடச் சொல்கிறேன். சத்தத்தைத் தாம் பதிவு செய்வதில்லை என்கிறான்.

இவங்கள் வீடியோவை எடிட் செய்து விட்டார்கள். அதை நின்று பார்த்து சண்டை போட்டால் எம் தொடருந்தையும் விமானத்தையும் விடவேண்டிவரும் என்கிறார். போலீசைக் கூப்பிடுவோமா என்கிறேன் நான். உன்னிடம் ரிசீட் இல்லை. அவர்கள் ஒரே இனத்தவர். உனக்காகவா கதைக்கப்போகின்றனர் என்கிறார். கணவரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு வேறு வழியற்று மீண்டும் 3000 ரூபாயைக் கொடுத்துவிட்டு ரிசீற்றைத்தா என்கிறேன் கடுப்புடன். ரிசீற் கொடுப்பதில்லை என்கிறான் அவன். நீங்கள் எம்மை ஏமாற்றுகிறீர்கள். எனக்கு நேரம் இல்லாமையால் உன்னை ஒன்றும் செய்யாமல் போகிறேன். நீ ரோட்டில் நின்று பிச்சை எடுக்கலாம் என்று கூற, பேசாமல் வா என்று கணவர் என்னை இழுத்துக்கொண்டு போகிறார்.

டாக்ஸி ஓட்டுனருக்குக் கூற ஏன் நீங்கள் ரிசீட் வாங்கவில்லை என்கிறார். கோட்டல்களில் ரிசீட் கொடுப்பதில்லை. எத்தனை கோட்டல்களில் நின்றிருப்போம். ஒருவரும் ஏமாறவில்லை. உங்கள் ஆட்கள் தான் சீட் பண்ணி விட்டார்கள் என்று கூற அவர் ஒன்றும் சொல்லாமல் வருகிறார். மூண்டும் இரண்டும் ஐயாயிரம் கோட்டை விட்டுவிட்டோம் என்கிறார் கணவர். 

பின் நாம் தொடருந்தில் நிஜாமுதீன் வந்து அங்கிருந்து இன்னொரு டாக்ஸி பிடித்து டெல்லி வந்து விமானம் சென்னையில் இறங்கியதும் தான் மனம் நிம்மதியடைந்தது.

       

 

  • Like 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்......உங்களின் கட்டுரை பல தகவல்களை சொல்கின்றது......! 😴

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான்  நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான்  நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து  நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை    நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான்  நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான்   நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!"  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகாரப் பரவலாக்கத்தில் அதன் நிலைப்பாடும் Veeragathy Thanabalasingham  on December 9, 2024 Photo, SOUTH ASIAN VOICES தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாளடைவில் வரக்கூடிய சவால்கள் பிரதானமாக இனவாத அரசியல் சக்திகளிடமிருந்தே வரக்கூடும் என்று அதன் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும். புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நவம்பர் 21 சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார். தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக நாடு நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகவும் உறுதியான சந்தர்ப்பம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாடாளுமன்ற தேர்தல் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் எங்களுக்கு இடையில் வேறுபட்ட அரசியல் கோட்பாடுகள் இருந்தாலும், இனவாத அரசியலுக்கு மீண்டும் இடம்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். அதை தொடர்ந்து கடந்தவாரம் ஜனாதிபதியின் உரை மீதான நாடாளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இன, மத வேறுபாடுகளைக் கடந்து முன்னேறுவதற்கு மக்களுக்கு முன்னாலுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை பாழ்படுத்தக்கூடியதாக தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் அரசியல் அனுகூலத்துக்காக இனவாதத்தையும் பிளவுகளையும் தூண்டுவதற்கு மேற்கொள்ளக்கூடிய எந்த முயற்சியையும் ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்று எச்சரிக்கை செய்தார். அதே போன்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உட்பட பல அமைச்சர்களும் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளும் இனவாத அரசியலுக்கு இனிமேல் நாட்டில் இடமில்லை என்று கூறினர். அவர்களைப் பொறுத்தவரை, “இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இனவாதமும் மதத்தீவிரவாதமும் பயன்டுத்தப்படுவதைத் தடுக்கவேண்டியது  அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு” இலங்கைக்கு சாபக்கேடாக இருந்துவரும் இனவாதத்துக்கும் மதத் தீவிரவாதத்துக்கும் எதிரான ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இந்த உறுதியான நிலைப்பாடு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. வடக்கு, கிழக்கில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டும் நோக்குடன் சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்தவர்களுக்கு எதிராக உடனடியாகவே சட்ட நடவடிக்கை எடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. முன்னைய தேர்தல்களைப் போலன்றி இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் இனவாத அரசியல் முனைப்புப் பெறவில்லை. அதே சூழ்நிலையை தொடர்ந்தும் உறுதி செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் தங்களுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை தேசிய ஐக்கியத்துக்காக தரப்பட்ட ஒரு ஆணையாக தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நோக்குகிறார்கள். இனவாதம் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் உருப்படியானதுமான  தீர்வுகளைக் காண்பதில் அரசாங்கத் தலைவர்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார்கள் என்பதிலும் அந்த நோக்கத்துக்காக அவர்களால் பெரும்பான்மையின சிங்கள மக்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு வென்றெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதிலேயே இனவாதத்துக்கு எதிராக அரசாங்கம் “பிரகடனம் செய்திருக்கும் போரின்” வெற்றி தங்கியிருக்கிறது. அதேவேளை, தாங்கள் மீண்டும் தலையெடுப்பதற்கு வாய்ப்பான சந்தர்ப்பங்களுக்காக இனவாத சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மகத்தான தேர்தல் வெற்றியையும் குறிப்பிட்ட சில கடும்போக்கு தேசியவாத அரசியல்வாதிகளுக்கு கிடைத்த தோல்வியையும் இனவாதத்தின் தோல்வியாகக் கருதவும் முடியாது. இலங்கையின் இனவாத அரசியலின் தன்மையையும் அதன் வரலாற்றையும் நன்கு விளங்கிக் கொண்டவர்களுக்கு இது விடயத்தில் எந்த குழப்பமும் இருக்காது. மாவீரர் தினத்தில் நினைவேந்தல்களைச் செய்வதற்கு அரசாங்கம் தமிழ் மக்களை அனுமதித்தைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் தென்னிலங்கை சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் கண்டனம் செய்தார்கள். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் சில இராணுவ முகாம்களை அகற்றி அந்த நிலங்களை அவற்றின் உரிமையாளர்களான குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது தேசிய பாதுகாப்பில் தாங்கள் மாத்திரமே அங்கறை கொண்டவர்கள் என்ற நினைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ போன்றவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் குறிப்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால போன்றவர்கள் போரில் இறந்த தங்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறி அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்கள். இவ்வாறாக அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனநிலை மாற்றம் படிப்படியாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்றைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பான அணுகுமுறைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பம் என்று அரசாங்கத் தலைவர்கள் வர்ணிக்கின்ற தற்போதைய சூழ்நிலையை சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிராக தென்னிலங்கையில் நிலவும் ஆழமான எதிர்ப்புணர்வுகளை படிப்படியாக அகற்றுவதற்கும் பயன்படுத்த வேண்டும். 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகளை அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் 37 வருடகாலமாக நாட்டின் அரசியலமைப்பில் இருந்துவருகின்ற போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் மாத்திரமல்ல, சிங்கள மக்கள் மத்தியில் பேசுவதற்கே தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகளிடம் ஒரு மனத்தடை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தொடக்கத்தில் இருந்தே 13ஆவது திருத்தத்தை எதிர்த்துவந்த போதிலும் காலப்போக்கில் மாகாண சபைகளில் அங்கம் வகித்தது. மாகாண சபைகள் முறைமை இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்பது  தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடாக  இருக்கின்ற போதிலும், அதை அரைகுறையாகவேனும் நடைமுறைப்படுத்துவதை அரசாங்கங்களினால் தவிர்க்க முடியவில்லை. இந்தியாவுடனான உடன்படிக்கை ஒன்றின் விளைவாக மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் இலங்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு  உருப்படியான  அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாட்டை எம்மால் காணக்கூடியதாக இருந்திருக்குமா? தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் கடந்த காலத்தில் அரசாங்கங்களுடன் தமிழ்த் தலைவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகள் எல்லாமே தென்னிலங்கை இனவாத சக்திகளின் எதிர்ப்பின் காரணமாகவே கிழித்தெறியப்பட்டன. இந்தியாவின் தலையீட்டின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்தினால் மாத்திரமே மாகாண சபைகள் முறை இன்று வரை விட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதானே உண்மை. தங்களது பிரச்சினைகளுக்கு மாகாண சபைகள் முறையை ஒரு தீர்வாக தமிழ் மக்கள் விரும்புவார்களாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஜனாதிபதியாக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூறியதை அநுர குமார திசாநாயக்க  மறந்திருக்கமாட்டார். உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களை நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான பாதையில் வழிநடத்தத் தவறிய தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அரசாங்கம் இனிமேலும் கருத்தில் எடுக்கத் தேவையில்லை. இந்தத் தமிழ்க் கட்சிகள் இதுகாலவரையான தங்களது அரசியல் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ் மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படும் ஆபத்தே அவர்களைக் காத்திருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வொன்றை நோக்கிய பயணத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மாகாண சபை தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கொழும்பில் அரசாங்கத் தலைவர்களுடனும் இந்திய இராஜதந்திரிகளுடனும் பேசும்போது கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அந்த விடயத்தில் அதற்கு அப்பால் எதுவும் செய்வதில்லை. தமிழ் மக்களிடம் ஒரு கற்பனாவாத தமிழ்த் தேசியவாதம் பற்றியே அவர்கள் பேசுவார்கள். இந்த தடவை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக அவர்கள் எந்த படிப்பினையையாவது பெற்றிருக்கிறார்களா என்பது சந்தேகமே. மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் ஊடக நேர்காணல்களில் தெரிவித்த கருத்துக்களை அடுத்து தோன்றிய சர்ச்சைக்குப் பிறகு அது தொடர்பில் விளக்கம் அளித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை மாகாண சபைகள் தற்போதுள்ளதைப் போன்று அப்படியே இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், கடந்த ஆறு வருடங்களாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படாமல் அவை ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழேயே இருந்துவருகின்றன. அடுத்தவருட இறுதியில் மாகாண சபை தேர்தல்களை நடத்தப் போவதாக கடந்த வாரம் தன்னைச் சந்தித்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவிடம் ஜனாதிபதி திசாநாயக்க கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகத் தெரியவரவில்லை. சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்திய அவர்களிடம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடங்கும்போது அதைப் பற்றி பரிசீலிக்கலாம் என்று  ஜனாதிபதி மேலோட்டமாக  கூறியிருக்கிறார். ஆனால், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் என்றும் அப்போது மாகாண சபைகள் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் உட்பட முக்கியமான விவகாரங்கள் குறித்து பொதுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கும் என்றும்  அமைச்சரவைப் பேச்சாளரான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். மாகாண சபைகள் தொடர்பில் உறுதியான தீர்மானம் எதையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்று வருடங்கள் என்பது அரசியலைப் பொறுத்தவரை ஒரு நீண்டகாலமாகும். அந்த இடைப்பட்ட காலத்திற்குள் அரசியல் நிலைவரங்களில் மாற்றங்கள் கூட ஏற்பட்டு விடலாம். இலங்கையில் புதிய அரசியலமைப்பை கொண்டுவந்த எந்த அரசாங்கமும் இவ்வளவு நீண்டகாலம் தாமதித்ததில்லை. முதலாவது குடியரசு அரசியலமைப்பை 1972 மே மாதம் கொண்டுவந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி இல்லாவிட்டால் முன்கூட்டியே அந்த அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியிருக்கும். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன  தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்கும் சற்று அதிகமான காலத்திற்குள் இரண்டாவது அரசியலமைப்பை கொண்டுவந்தது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் முன்னெடுத்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை நான்கு வருடங்கள் (2015 – 19) நீடித்து இடைக்கால அறிக்கையுடன் முடிவுக்கு வந்தது. அந்த செயன்முறையை நிறைவுசெய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தார். தனது போட்டி வேட்பாளர்களான  ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தங்களது விஞ்ஞாபனங்களில் உறுதியளித்ததை போலன்றி திசாநாயக்க 13ஆவது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை திட்டமிட்டே தவிர்த்துக்கொண்டார். புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தை பொறுத்தவரை, ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய திசாநாயக்கவும் அந்த பதவியில் மூன்று வருடங்கள் நீடிக்கப் போகிறார் என்பதாகும். புதிய அரசியலமைப்பில் புதிய தீர்வுத் திட்டத்தை முனவைக்கப்போவதாகக் கூறும் அரசாங்கம் அந்த இடைப்பட்ட மூன்று வருட காலத்திற்குள் தற்போதுள்ள அதிகாரங்களுடனாவது மாகாண சபைகளை இயங்கவைக்குமா? அடுத்த வருட இறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழரசு கட்சி நாடாளுமன்ற குழுவிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார். உண்மையிலேயே உள்ளூராட்சி தேர்தல்களையும் விட முன்கூட்டியே நடத்தப்பட வேண்டியவை மாகாண சபை தேர்தல்களே. ஆறு வருடங்களாக அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரமே சாத்தியமானளவு விரைவாக உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரியில் அல்லது பெப்ரவரியில் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மாகாண சபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் கூட நீதிமன்றத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை. உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த வருட இறுதிவரை காத்திருக்காமல் அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும். அரசியலமைப்பில் புதிய தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னதாக தற்போது கைவசம் இருக்கும் மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்க வைப்பதே முக்கியமானதாகும். ஏனென்றால், 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களையே 37 வருடங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் அதில் உள்ளதையும் விட கூடுதலான அதிகாரங்கள் கொண்ட ஏற்பாட்டை எவ்வாறு புதிய அரசியலமைப்பில் எதிர்பார்க்கமுடியும்? 13ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களாவது முழுமையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமா என்று கிளம்புகின்ற சந்தேகத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அடுத்த வாரம் ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியில் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் விவகாரத்தை இந்தியத் தலைவர்கள் அவரின் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று புதுடில்லியில் ஒன்றையும் கொழும்பில் வேறு ஒன்றையும் கூறாமல் திசாநாயக்க வித்தியாசமாக நடந்துகொள்வார் என்று நம்புவோமாக. சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கலுக்கும் எதிராக தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திடமும் மக்களிடமும் இருக்கின்ற ஆழமான வெறுப்புணர்வை அகற்றுவதற்கு தனக்கும் அரசாங்கத்துக்கும் தற்போது இருக்கும் பேராதரவைப் பயன்படுத்தி ஜனாதிபதி திசாநாயக்க  துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்காமல் இனவாதத்துக்கு எதிராக பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் தேசிய மக்கள் சக்தி தன்னிடம் இருக்கும் மனத்தடையை முழுமையாக அகற்ற வேண்டும். வீரகத்தி தனபாலசிங்கம்   https://maatram.org/articles/11888
    • “என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை! KaviDec 12, 2024 08:14AM இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பேசுப்பொருளாகி உள்ளது.. இலங்கை தமிழரான 37 வயது ஜாய், தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, நேற்று (டிசம்பர் 11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர். அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன். தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர். எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன். இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார். அதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் இளைஞர் ஜாயை அழைத்துச் சென்று அறிவுரைகள் கூறி, கியூ பிரிவு போலீஸாரை அணுகுமாறு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர் ஜாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/tamil-nadu/sri-lankan-tamil-kneel-and-cry-in-protest-at-the-ramanathapuram-collectorate/
    • கிழக்கில் அருணின் அரசியல் முக்கியத்துவம்……! December 11, 2024 — அழகு குணசீலன் — “நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு தேவை. அந்த அரசியல் அமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்……. புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும் அல்ல பழைய அரசியல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள இருபத்தியிரண்டு திருத்தங்களும் இல்லாமல் போகும்….”  . இது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தர்க்க ரீதியான குழப்பங்களை தவிர்த்த கருத்து.       அண்மையில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினால்  கூறப்பட்டு, பின்னர்  மறுக்கப்பட்ட/திருத்தப்பட்ட தெளிவற்ற கருத்தை சொல்லாடல் அரசியலுக்குள் சிக்காமல் தர்க்கரீதியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் பிரதி அமைச்சர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் என்.பி.பி. அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக  அருண் ஹேமச்சந்திர அதிக முக்கியத்துவத்தையும், மக்களின் கவனஈர்ப்பையும் பெற்ற ஒருவராக உள்ளார். அருண் ஜே.வி.பி./என்.பி.பி. யின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்ற வகையிலும் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியும், கட்சிதலைமைத்துவத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவருமாகும். திருகோணமலை மாவட்டத்தில் என்.பி.பி.யில் அதிகூடிய 38,368 விருப்புவக்குகளை பெற்றவர். இரண்டாவது நிலையில் வந்த ரொஷான் அக்மீமன 25, 814 விருப்புவாக்குளையே பெற்றிருந்தார்.  இதற்கு மூன்று சமூகங்களும் அருணுக்கு விருப்பு வாக்குகளை அளித்ததே காரணம். இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதியினால்  சர்வதேச உறவுகளைக்கொண்ட வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூகோள அரசியல், பொருளாதார கேந்திர முக்கியத்துவம் கொண்டதும், பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் கழுகுப்பார்வைக்கு உட்பட்டதுமான திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பங்களிப்பு செய்து கணிசமான அந்நியச் செலாவணியை இலங்கைக்கு பெற்றுத்தரும் ஒரு மாகாணம் என்ற அடிப்படையிலும் ஜனாதிபதியின் இந்த தேர்வு மிகவும் பொருத்தமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வெளியுறவு அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு பின்னர் வெளியுறவுத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள  ஒரு தமிழர் இவர். அதேவேளை அவரது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப அவர் பற்றிய தகவல் விபரத்தில், தேசியம்: “இலங்கையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கத்தில்  சர்வதேச, உள்நாட்டு ஊடகப்பதிவுகள் இதற்கு முரணாக அவரை “இலங்கை”அரசியல்வாதி என்று அடையாளம் காண்பதற்கு பதிலாக “தமிழ்”அரசியல்வாதி என்று அடையாளப்படுத்துகின்ற போக்கே முதன்மை பெறுகிறது என்பதையும் இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். இந்த இரண்டு அடையாளங்களையும் சமத்துவமாக, சமாந்தரமாக,சமகாலத்தில் பேணுவதே பன்மைத்துவ சமூக கட்டமைப்பின் அடிப்படை  சமூக, ஜனநாயக, அரசியல் உரிமையாக இருக்கமுடியும். இல்லையேல் கடந்த காலங்கள் போன்று அரசாங்க ஆதரவு தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளை” சிங்களவர்களாக” பார்க்கின்ற இனவாத நோக்கே மேலோங்குமேயன்றி அரசாங்கம் எதிர்பார்க்கின்ற “இனவாதம்” அற்ற இலங்கை சமூகங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை  அது வழங்காது. அருண் ஹேமச்சந்திரவின்  முக்கிய அரசியல் நியமனங்களின் பின்னணியில் ஜனாதிபதிக்கும், அவரது கட்சிக்கும் “கிழக்கு” குறித்து சில இலக்குகள் இல்லாமல் இவை ஒன்றும் இடம்பெறவில்லை. 1.  ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் பலமாகவும், தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் பலவீனமாகவும் உள்ள என்.பி.பி./ஜே.வி.பி.யை கிழக்கில் கட்டி எழுப்புதல். 2.  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இடம்பெற்ற “அநாகரீக  சண்டை  அரசியலை” முடிவுக்கு கொண்டு வருதல். 3. அருண் ஹேமச்சந்திராவை கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தயார் படுத்துதலில் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை ஏற்படுத்துதல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  என்.பி.பி. கிழக்கு மாகாணத்திற்கான 16  நாடாளுமன்ற உறுப்பினர்களில் (திருகோணமலை:4, மட்டக்களப்பு:5, அம்பாறை:7)  7 உறுப்பினர்களை (  முறையே 2+1+4) பெற்றுள்ளது. அடுத்த இரண்டாவது நிலையில் தமிழரசுக்கட்சி (முறையே (1+3+1) 5 உறுப்பினர்களை பெற்றுள்ள சூழலில் மற்றைய கட்சிகள் 4 உறுப்பினர்களை பெற்றுள்ளன.  இந்த 7:5:4 என்ற நிலையானது இன்றைய நிலையில் என்.பி.பி.க்கு திருப்பி அளிப்பதாக இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவில் என்.பி.பி. திருப்தி அடையவில்லை.  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 7:9 என்ற அடிப்படையில் வாக்குகளை பார்த்தால்  கிழக்குமாகாண சபையை என்.பி.பி. கைப்பற்றுவது உறுதியாக இல்லை. இதை சீர்செய்வதற்கான பணி பிரதியமைச்சர் அருணுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஜே.வி.பி.  வட்டாரங்களிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.  இந்த காய் நகர்வின் ஒரு பகுதியே அம்பாறையில்  தேசிய பட்டியலில் முஸ்லீம் பிரதிநிதி ஒருவரை உள்வாங்கி இருப்பது . வடக்கு, கிழக்கில் கிழக்கு மாகாணசபையை கைப்பற்றும் இலக்கையும், வடக்கில் எதிர்க்கட்சி நிலையை எட்டும்  இலக்கையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசியல் அமைப்பு திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும் போது இந்த “இலங்கையர்” அங்கீகாரம் சர்வஜன வாக்கெடுப்புக்கு அப்பால்  வடக்கு கிழக்கின் இரண்டாவது – துணை அங்கீகாரமாக காட்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அத்துடன் பாரம்பரிய தாயகக்கோட்பாட்டை அது நொண்டியாக்கும். கிழக்கு மாகாணத்தில் என்.பி.பி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் சற்று குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி ஏறக்குறைய 1,67,000 வாக்குகளை பெற்றுள்ளது. எனினும் மற்றைய பிரதான எதிர்க்கட்சிகள் பெற்ற மிகுதி வாக்குகளோடு ஒப்பிடுகையில் என்.பி.பி.யின் வாக்குகள் குறைவானவை. இதனால் கிழக்கில் இந்த கட்சிப்பணி அவசியமாகிறது. கிழக்கில் சிங்கள,தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குபெறுகையை அதிகரித்தால் வடக்கு, கிழக்கு துண்டாடலின் அரசியல் பயனை ஜே.வி.பி. அனுபவிக்க கூடியதாக இருக்கும். எனினும் இது இனப்பிரச்சினை தீர்வினால், தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாஷைகளினால்  நிர்ணயிக்கப்படுகின்ற ஒரு விடயமாக அமையப் போகிறது என்பதால்  “இலங்கையர்” கோஷத்தோடு இந்த இலக்கை அருண் ஹேமச்சந்திர ஊடாக  அடைவது அவ்வளவு இலகுவானதல்ல. அதே வேளை இவரைத் தவிர மூவினமக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம்  என்.பி.பி.க்கு கிழக்கில் இல்லை. “கிழக்கு மாகாண சபைக்கு சிங்கள முதலமைச்சரா?” என்று கேட்கின்ற சாணக்கியனுக்கு அருண் மூலம் பதிலளித்து இருக்கிறார் அநுர. இந்த மாகாணசபை குறி பார்த்து சுடும் அரசியலில் என்.பி.பி.மட்டும் அல்ல  முஸ்லீம் காங்கிரஸும்  இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தேசியப்பட்டியல் நியமனம்  ஏறாவூர் நளீம் ஹாயியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூலம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஊர்ச்சண்டை பிளவுகளுக்கு ஒட்டுப் போட்டுள்ளார் ஹக்கீம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிதறும் முஸ்லீம் வாக்குகளை மாகாணசபை அதிகாரத்தை நோக்கி இணைப்பதற்கான மற்றொரு முயற்சி இது. இந்த தந்திரோபாய நகர்வுகள்  எதுவும் இன்றி தமிழரசுக்கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தில் மற்றொரு பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது. “பிரிந்தவர் கூடினால் கேட்கவும் வேண்டுமா ?” என்று பொசிட்டிவாக கேட்பதற்கு இங்கு எதுவும் இல்லை.   யாழ்ப்பாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மாகாணசபைகள் தொடர்பான தனிநபர் பிரேரணையை, சாணக்கியன் எம்.பி. தொடரப்போவதாகவும் அதனூடாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கப் போவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. 159 உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்தரப்புக்கு இந்த அழுத்தம் எப்படி அமையும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். சஜீத், ஹக்கீம் அணிகளை நம்பி அதில் தொங்குகிறது தமிழரசுக்கட்சி. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரமும் இதில் தன்பங்கை செலுத்த தவறப்போவதில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிக இடத்தை பிடித்திருந்தன. கூட்டங்களை  கௌரவமான அரசியல், அதிகாரிகள் கூட்டமாக விடயதானம் சார்ந்து  ஒழுங்காக நடாத்த முடியாத நிலையே இருந்தது. அபிவிருத்திக்குழுக் கூட்டங்களை நடாத்தி முடித்தல் என்பதைவிடவும் குழப்பி முடித்தல்  என்பது ஒருதரப்பு அரசியல் இலக்காக இருந்தது.  தற்போது அடையாள அரசியல் பேசும் கட்சிகளான தமிழரசுக்கட்சி மூன்று உறுப்பினர்களையும்,  முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும் (தேசிய பட்டியல் ஒருவர்)  கொண்டுள்ள நிலையில், அரசியல் அனுபவமேயற்ற, பலவீனமான என்.பி.பி. உறுப்பினர் ஒருவருடன்  அரசாங்க தரப்பு செயற்படுவது கருத்து முரண்பாடான சந்தர்ப்பங்களில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். இதற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொழும்பு தேசிய அரசியலில் அவருக்குள்ள வேலைப்பளுவுக்கு மத்தியிலும் திருகோணமலக்கு மட்டும் அல்ல மட்டக்களப்புக்கும் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பு குழுகூட்ட கேள்விகள் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்கின்ற பந்தும் நேரடியாக அவரிடமே இருக்கிறது. மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு கூட்டங்களில் ஆரம்பத்தில் கட்சி அரசியலில் ஜனா சாணக்கியனோடு ஒத்துழைத்தார்.  வியாழேந்திரன் பிள்ளையானோடு ஒத்துழைத்தார்.  பின்னர் இந்த ஒத்துழைப்பு இரு தரப்பிலும் நீடிக்கவில்லை. அப்போது  குழப்பும் வேகம் குறைந்து காணப்பட்டது. கச்சேரிக்கு வெளியே வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு  முன்னாள் மட்டக்களப்பு மேயரும்,  அன்றைய முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சாணக்கியனின் முதுகை பலப்படுத்தினர்.  இப்போது அவர்களில் ஒருவரான சிறிநேசன் எம்.பி.யாகியுள்ளபோதும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன், சிறிதரன் அணி அரசியல் இவர்களுக்கு இடையே குறுக்கே நிற்கிறது. ஜனாதிபதியுடனான  சந்திப்பு  கேள்விகளும், பதில்களும்  பாஸ்ட்பேப்பர்   மீட்டல் வகுப்பாக  ஊடகங்களில்  திருப்பி திருப்பி அரைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களின்  ஒத்துழைப்பை தமிழரசுக்கட்சி பெறமுடியாத சூழலில் அருண் ஹேமச்சந்திராவுக்கு கூட்டங்களை கொண்டு நடாத்துவதற்கான சூழலை இது  இலகு படுத்துகிறது.  கிழக்கு மாகாண சபை அதிகாத்தை கைப்பற்றுதல்  மூன்று சமூகங்களினதும் அரசியல் எதிர்காலத்தை -திசையை நிர்ணயிப்பதில்  மிகவும் முக்கியமானது.  தேசிய ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் இருந்து  பிராந்திய அடிப்படையிலும், அதிகாரப்பகிர்விலும் இது வேறுபட்டது என்பதால் பிராந்திய கட்சிகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவது வழமைக்கு மாறானது அல்ல. எனினும் தேசியக்கட்சி ஒன்று தென்னிலங்கைக்கு  வெளியே பிராந்திய மட்டத்தில் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் இது அவசியமாகிறது. அதுவும் அநுர அலை நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர திசைகளை  கடந்த என்.பி.பி.க்கு இது இன்னும் முக்கியமானது.     https://arangamnews.com/?p=11527
    • இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் December 12, 2024 11:44 am இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை உத்தியோகத்தர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். மனித வளத்தை மேம்படுத்தாவிட்டால் மக்களுக்கான சேவைகளைச்  சிறப்பாக வழங்க முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். ஐரெக் திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள தரமான கல்வி நிலையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்தப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சிறந்த சேவைகளை எமது மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். “இந்தியா எமக்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அது தொடர வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் முக்கியமானது. விவசாயத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.” – என்றும் ஆளுநர் தனது உரையில் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறி.சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.   https://oruvan.com/indias-help-is-always-needed-northern-governor-vedanayagan/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.