Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
23 hours ago, ரசோதரன் said:

பொதுவாகவே ஆந்திராவின் மேல் எல்லையைத் தாண்டி மேலே போக ஆரம்பித்தால் அது வேறு ஒரு இந்தியா என்று சொல்வார்கள். நீங்கள் எழுதுவதும் அதையே உறுதிப்படுத்துகின்றது. 

தென்னகம் தாண்டி நான் இன்னமும் போகவில்லை. ஒரு தடவை காசிக்கு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு........😀

காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான்

பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ?

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வ

மெசொபொத்தேமியா சுமேரியர்

எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன்

மெசொபொத்தேமியா சுமேரியர்

ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூ

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, ஈழப்பிரியன் said:

பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ?

🤣....

தனியார் நிறுவனங்களிலேயே வேலை செய்யும் எங்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பது தான் பென்சன்.....

சோசல் வரும், இன்னும் 10 அல்லது 12 வருடங்கள் இருக்குது. அது வரும் போது சேடமும் இழுத்துக் கொண்டு இருக்குமோ தெரியவில்லை....😀

சமீபத்தில் ஜெயமோகன் காசி போய் வந்து ஒரு பயணக் கட்டுரை எழுதியிருந்தார். அதை வாசித்த பின் தான் அப்படி ஒரு எண்ணம் வந்தது.

அதே வாரம் தமிழில் மொழி மாற்றப்பட்ட ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். கதையே ஒரு குடும்பம் காசிக்கு போவதைப் பற்றியது. அழகான படம்.

பின்னர், வே.நி. சூர்யாவின் காசி பற்றிய கவிதை ஒன்று. எல்லாமே காசி, காசி என்று ஏன் சொல்லுதோ தெரியவில்லை.............🤣  

***********

தொலைவிலிருந்து பார்த்தல் (வே.நி. சூர்யா)
-----------------------------------------------------------------
கல்லூரி படிக்கையில் அவன் காசிக்கு ஓடிப்போனான்

இனி திரும்பிவரக்கூடாது என 

படித்துறைகள் தகித்தன 

கங்கை நீர் ஊசியாகத் துளைத்தது

ஊருக்குத் திரும்பும்போது

முதியவரொருவர் தன் நண்பரிடம்

ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான்

விரக்தியான குரலில் பேச்சுக்கிடையே 

காசியைச் சுற்றிப்பார்க்க வந்தவரை

காசி சுற்றிப்பார்த்துவிட்டது என அவர் உரைத்தது

இன்னும் உக்கிரமான மெளனத்தினுள் அவனை வீசியெறிந்தது

மறுநாள் ஊரில்

வாரணாசித் தெருக்களைக் கண்டான்

மாலைநேரப் படிக்கட்டுகளில் அமர்ந்து

மணிகர்ணிகாவின் படித்துறையில்

விறகுகளோடு விறகாகத்

தன் சடலம் எரிந்துகொண்டிருப்பதைப்

பார்த்தான்.

Edited by ரசோதரன்
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.

😀...

இதைக் கேள்விப்பட்டால் ஜெயமோகனை எதிர்ப்பவர்கள் சந்தோசப்படுவார்கள்....🤣.. அவர் இப்ப ஒரு தடவை அங்கு போய் வந்தார். அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருக்கின்றது.

எனது மாமா மற்றும் மாமி, மனைவியின் பெற்றோர்கள், பல வருடங்களின் முன் போய் வந்தனர். இன்றும் சுகமாக இருக்கின்றார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:

எனது மாமா மற்றும் மாமி, மனைவியின் பெற்றோர்கள், பல வருடங்களின் முன் போய் வந்தனர். இன்றும் சுகமாக இருக்கின்றார்கள்.

ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள்   

ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி   சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:

😀...

இதைக் கேள்விப்பட்டால் ஜெயமோகனை எதிர்ப்பவர்கள் சந்தோசப்படுவார்கள்....🤣.. அவர் இப்ப ஒரு தடவை அங்கு போய் வந்தார். அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருக்கின்றது.

எனது மாமா மற்றும் மாமி, மனைவியின் பெற்றோர்கள், பல வருடங்களின் முன் போய் வந்தனர். இன்றும் சுகமாக இருக்கின்றார்கள்.

 

எனக்கும் போக ஆசை இருந்தாலும் பயத்தில் போகவில்லை. 😃

11 hours ago, Kandiah57 said:

ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள்   

ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி   சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று   

உண்மைதான்  இந்தியாவில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொருமாதிரி. ஒரு ஆண்டுகள் போதாது இந்தியா பார்க்க. என கணவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லாததால் என்னால் போக முடியவில்லை.

On 27/3/2024 at 11:10, suvy said:

இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்......உங்களின் கட்டுரை பல தகவல்களை சொல்கின்றது......! 😴

வரவுக்கு நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

ஆமாம் எனக்கு தெரிந்தவர்களும். பல வருடங்களுக்கு முன் போய் வந்து நலமே உள்ளார்கள்   

ஆனால் கலிலோய ஆனந்த குமாரசாமி   சொல்லி உள்ளார் இந்தியாவை சுற்றி பார்ப்பது உலகத்தை பார்த்ததுக்கு சரி என்று   

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍

நல்லது எழுதுங்கள் வாசிப்போம்,..அவரைப் பற்றி அல்லது அவர் எழுதிய புத்தகம்   வாசித்து 20 வருடங்கள் வரும்  ....நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்   நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 25/3/2024 at 08:50, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார்.

 

அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார்.

 

சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம்.

 

சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது.

 

அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச்  சொல்லும்படியாக இல்லை.   

 

ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம்.

 

அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன்.

 

கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம்.

 

எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன்.

 

ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது.

 

இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள்.

 

தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை.

 

 

 

வரும்     

 

 

 

 

 

 

 

வட இந்தியா பற்றி பார்க்கும் காணொளிகள் எல்லாம் உண்மை தான் அப்ப.

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 27/3/2024 at 06:44, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளியே ஒரு அரை மணி நேரம் சுற்றிவிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லாததனால் மீண்டும் நாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கிருந்த உணவகத்துக்குச் சென்றால் அங்கும் ஒரே ஒருவர் மட்டும் எதையோ உண்டுகொண்டிருக்கிறார். மெனுவில் இருந்த பரோட்டாவும் மட்டன் கறியும் கணவர் ஓடர் செய்ய நான் எனக்கும் அதையே கொண்டுவரும்படி சொல்கிறேன். அரைவாசி எலும்புகளுடன் கறி ஏதோ சுவையுடன் இருக்க, ஆட்டிறைச்சியை இப்படியா இவர்கள் உண்கின்றனர் என்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி. குறை சொல்லாமல் சாப்பிடு என்கிறார். மனிசன். நல்லதை நல்லதென்று நான் சொல்வதே இல்லையா என்கிறேன்.

 

சாப்பிட்டு முடிய ஒரு மணிநேர ஓய்வின் பின் மீண்டும் டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து  Fatehpur Sikri, Agra fort, Anguri Bagh போன்றவற்றைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறோம். தான் எம்மை இறக்கிய இடத்துக்கு வரும்படி கூற பொடி நடையாய் நடந்து செல்கிறோம் மிகச் சிறிய கடைகளும் அதன் அருகிலே சிறிய வீடுகளும் சுத்தமற்ற இடங்களும் முகம் சுழிக்க வைக்க பிரதான சாலை வந்ததும் டாக்ஸி எங்கே நிற்கிறது என்று பார்க்க, தூரத்தில் இருந்து அவர் கையசைக்க அங்கு செல்கிறோம்.

 

ஒரு நாற்பது நிமிடங்களின் பின் Fatehpur Sikri என்னும் 16 ம் நூற்றாண்டில் தன் மூன்றாவது இந்து மனைவிக்காக இஸ்லாமிய மன்னன் கட்டிய ஜோர்டா பாயின் அரண்மனைக்கு செல்ல என ஓரிடத்தில் இறக்கிவிட அது காடு போல இருக்கிறது. இவர்கள் உங்களை இனி அழைத்துச் செல்வார்கள் என்று கூற ஏன் நீ வரவில்லையா என்று கேட்கிறேன். இவன் உன்னை அழைத்துச் செல்வான் என்று கூறி ஒரு பெடியனைக்  கைகாட்டுகிறார் ஓட்டுனர். பான்பராக் போட்டபடி திருடன் போல தெரிய என் முகத்தின் நம்பிக்கையின்மையைக் கண்டு, பயப்பிட வேண்டாம் என்கிறார்.

 

அங்கிருந்து ஒரு சிறிய பஸ் போன்றதில் எம்மைக் கொண்டுபோய் ஏறும்படி கூற எனக்கு இவன் எம்மைக் கடத்திக்கொண்டு சென்றால் என்ன செய்வது என்னும் எண்ணமும் எழ, பஸ்சையும் எம்முடன் வந்தவனையும் படம் எடுக்கிறேன்.

 

டோன்ட் வொறி மடம் என்று கூறி அவன் சிரிக்க, புது இடம் அதுதான் என்று சமாளித்தபடி வண்டியில் ஏறி அமர்கிறேன். ஒரு பத்து நிமிடத்தில் அரண்மனைக்கு அருகில் வண்டி நிற்க நடந்து அரண்மனைக்குள் செல்கிறோம். கட்டடங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அழகாகத் தெரிய அங்கு ஒரு மணிநேரம் செலவிட முடிகிறது. அதன் பின் அதற்கு அருகிலுள்ள இன்னொரு அரண்மனையின் உள்ளே முஸ்லிம் வழிபாட்டுத்தலம் இருக்க அங்கு எம்மைக் கரிசனையாய் கூட்டிச் செல்கின்றனர். அது மதசார்பற்ற வழிபாட்டுத் தலம் என்றும் குழந்தைகள் இல்லாத அக்பரை மூன்றாவதாக இந்து இளவரசியைத் திருமணம் செய்தால் குழந்தை கிடைக்கும் என்று கூறியவருக்காக மன்னன் அமைத்துக் கொடுத்தது என்றும் கூறப் போய் பார்ப்போம் என்கிறேன்.

 

உள்ளே தொட்டம் தொட்டமாக சாதாரண துணிகள், பட்டுத்துணிகள் விலைக்கு ஏற்றபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்க, எம்மை ஒருவரிடம் அழைத்துச் சென்று இங்கக்கு விற்கும் துணிகள் ஏழைக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்றுவிட்டு எம்மையும் ஒரு துணியை வாங்கிக் கொடுக்கும்படி கூற நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறேன். தலையைக் குனி தலையைக் குனி என்று கூற எதற்கு என்கிறேன்.

 

உன்னை துணி விற்பவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்கிறான் எம்மைக் கூட்டி வந்தவன். எனக்கு வேண்டாம் என்று நான் குனிய மறுக்க, என்ன மடம்?உன்னை ஒருவன் மதித்தால் அவனை நீயும் மதிக்க வேண்டாமா என்கிறான். குனியப்பா என்றபடி மனிசன் குனிய நானும் குனிய ஒரு பாத்திரம்போல் இருந்ததை எந்தலையிலும் கணவர் தலையிலும் வைத்து முணுமுணுக்கிறான்.

 

இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என மனதுக்குப் படுகிறது. நான் வேறு வழியின்றி ஒரு துணியை எடுக்க, 2000 ரூபாய்கள் என்கிறான். சென்னையில் 300 ரூபாவுக்கு அதை வாங்க முடியும். உது வேண்டாம் வேறு எடுக்கிறேன் என்று கூற, மடம் எடுத்ததை வைக்காதே என்று துணியை வைக்கவிடாது பிடிக்க என்னிடம் பணம் இல்லை என்கிறேன். காட் இருக்கா என்று கேட்க நான் இல்லை என்று கூறுமுன் கணவர் ஊம் என்கிறார். ஏன் ஓம் எண்டு சொன்னீங்கள் என்று மனிசனை முறைக்க, நாங்கள் தனிய வந்திருக்கிறம். தெரியாத ஊர். உன்ர வீரம் ஒண்டும் இங்க எடுபடாது. பேசாமல் காசைக் குடுத்து துணியை வாங்கிக் குடுத்துட்டுப் போவம் என்கிறார். நான் இல்லை எண்டு சொல்லீற்றன். நீங்கள் காட்டில குடுங்கள் என்கிறேன்.

 

சரிகாட்டால் பே பண்ணுகிறோம் என்றதும் ஒருவன் காட் மிசினைக் கொண்டு வருகிறான். நாம் கொண்டு சென்றது மொன்சோ என்னும் காட். போனில் அளவளவாக பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன் அதற்குக் குறைவான கட்டணமே வெளிநாடுகளில் செலவிடும்போது எடுப்பார்கள் என்பதனால் வரும்போது அதைத்தான் கொண்டுவந்தோம். கணவர் காட்டைப் போட்டு பின் நம்பரை அழுத்தினால் சுற்றிக்கொண்டே இருக்க, நெற் கிடைக்கவில்லை என்று இன்னொருவனைக் கூப்பிட அந்த மெசினும் சுற்ற, இவங்கள் காசை இரண்டுதரம் எடுத்தால் என்னப்பா செய்யிறது என்கிறேன். பயப்பிடாதை. அதில கனக்க இல்லை என்கிறார். நான் முதலே சொன்னேனே வேண்டாம் என்று என்கிறேன் அவனைப் பார்த்து. அவனோ விடுவதாய் இல்லை. மடம் நீங்கள் உள்ளே சென்று துணியைக் கொடுத்து வணங்கிவிட்டு வாருங்கள். கீழே சென்றால் நெட் வேலை செய்யும் என்கிறான். உள்ளே சென்று பார்த்தால் ஆட்களிடம் வாங்கும் துணிகளை அங்காங்கே அடுக்கியும் நடுவில் உள்ள வழிபாட்டுத் தளம் போல இருந்த ஒன்றின் மேல் விரித்தும் போட்டிருக்கிறார்கள்.

 

அங்கு நின்ற ஒருவர் இது உங்கள் பெயரால் ஒரு ஏழைக்குச் செல்கிறது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவிட்டு ஏழைகளுக்கு டொனேஷன் ஏதும் தர விரும்பினால் அங்கு சென்று செலுத்தும்படி கூற நாம் எதுவும் சொல்லாது வெளியே வருகிறோம். நேரத்தைப் பார்க்கிறேன். மாலை நான்காகிவிட இனி வேறு இடம் ஒன்றுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்து மனிசனிடமும் சொல்ல அவரும் சம்மதிக்கிறார்.

 

வெளியே வந்தவுடன் அவன் எமக்காகக் காத்திருக்கிறான். இனிப் போவோம் என்கிறேன் நான். சரி என்று கீழே நடந்துசெல்லும்போது இன்னொருவன் எமக்குக் கிட்டவாக உந்துருளியைக் கொண்டுவந்து நிறுத்த, இவன் அவன் கொண்டுவந்த மிசினை வாங்கி மனிசனிடம் நீட்ட மனிசன் மீண்டும் காட்டைப் போட்டு இலக்கங்களை அழுத்த மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்க, காசைத் தூக்கிக் குடு என்கிறார் மனிசன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்கிறேன் நான். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

மீண்டும் வந்து பஸ்சில் ஏறிய பின் எம்முடன் வந்தவனும் வந்து ஏறுகிறான். பஸ்சை விட்டு இறங்கியபின் நாம் வந்து ஏறிய இடத்துக்குக் கிட்ட வந்துவிட்டோம் என்று புரிகிறது. எமது டாக்ஸி ஓட்டுனரிடம் பணத்தைக் வாங்கிவிட்டு எம்மைக் கொடுக்கச் சொல்கிறான் என்று பார்த்ததால் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு காட் வேலை செய்கிறது. அதன்பின் நாம் அவனுக்குக் கொடுக்க வேண்டிய 1000 ரூபாய்களை என் பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறேன்.

 

எமது டாக்ஸியில் ஏற இனி எங்கே என்கிறார் அவர். வேறு இடம் செல்ல விருப்பம் இல்லை. நேரே கோட்டலுக்கு போகலாம் என்கிறார் கணவர். முன்னர் போலவே நாம் செல்ல போகும் வழியில் பெரிய உணவகம் ஒன்று தென்பட அங்கே நிறுத்தச் சொல்கிறோம். நாண் உடன் கோழிப் பிரட்டல் ஒன்றும் மரக்கறி ஒன்றும் எடுக்கிறோம். நாணும் கோழியும் நன்றாக இருக்க கணவர் தேனீரும் நான் கோப்பியும் எடுக்கிறோம் . ஓரளவு நன்றாக இருக்கிறது உணவும் பானமும். ஓட்டுனரை உண்ண வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. பணத்தைத் தாருங்கள். தான் பின்னர் உண்பதாகக் கூற கணவர் அவருக்குப் பணத்தைக் கொடுக்கிறார்.

 

தங்குவிடுதிக்குச் செல்ல மாலை ஆறுமணியாகிறது. களைப்புடன் சென்று கட்டிலில் விழுந்ததுதான். அடுத்தநாள் காலை ஆறுமணிவரை நல்ல தூக்கம் தூங்கி எழுந்து காலை ஏழுமணிக்கு உணவகம் வந்தால் அப்போதும் நாம் மட்டும்தான். பத்து மணிக்கு எமது டெல்லி போகும் தொடருந்து. ஆகவே வெள்ளனவே எழுந்து தயாராகிவிட்டோம். என்ன உண்ணலாம் என்று யோசித்து காலையில் ரொட்டி உண்ண விருப்பமின்றி தோசை என்று ஒன்று இருக்க அதை ஓடர் செய்கிறோம்.

 

ஒரு பதினைந்து நிமிடங்களின் பின் வெள்ளையாகத் தோசை வருகிறது. அத்துடன் சாம்பார் என்னும் பெயரில் எதுவோ வருகிறது. இரண்டு நிறங்களில் சட்னி வைத்திருக்க தோசையைப் பிய்த்து சடனியைத் தொட்டால் குளிர்ந்துபோய் இருக்கிறது. வெறும் தோசையை உண்டுவிட்டு வெளியே வந்து எமது டாக்ஸியை வரும்படி கூறிவிட்டு பயணப் பொதியை எடுத்துக்கொண்டு வந்து வரவேற்பில் நாம் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுத் திரும்ப, மடம் நீங்கள் இன்னும் பே பண்ணவில்லை என்கிறான் ஒருவன்.

 

நேற்றே கொடுத்துவிட்டோமே என்கிறேன். நாம் எப்போதும் போகும்போதுதான் பணத்தைப் பெற்றுக்கொள்வோம் என்கிறான். நேற்று நின்றவரைக் கூப்பிடு என்கிறேன். அவர் இன்று மாலைதான் வருவார் என்கிறான். நான் நிமிர்ந்து பார்க்கக் கமரா தெரிகிறது. கமராவில் பார் நான் நேற்றுத் தந்துவிட்டேன். காட்டில் பே பண்ணுகிறோம் என்று என் கணவர் சொல்ல காட்டில் எடுப்பதில்லை என்று கூறிப் பணமாக வாங்கினார்களே என்கிறேன். இருக்காது மேடம் பொறு உனக்கு கமராவைப் காட்டுகிறேன் என்று உள்ளே சென்றவன் பத்து நிமிடத்தின்பின் வந்து என்னையும் கணவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கமராவை ஓட  விடுகிறான். நானும் கண்ணை வெட்டாமல் பார்க்கிறேன். நான் பணம் குடுத்தது பற்றிய எதுவுமே இல்லை. மீண்டும் சுற்றி சத்தத்தைப் போடச் சொல்கிறேன். சத்தத்தைத் தாம் பதிவு செய்வதில்லை என்கிறான்.

 

இவங்கள் வீடியோவை எடிட் செய்து விட்டார்கள். அதை நின்று பார்த்து சண்டை போட்டால் எம் தொடருந்தையும் விமானத்தையும் விடவேண்டிவரும் என்கிறார். போலீசைக் கூப்பிடுவோமா என்கிறேன் நான். உன்னிடம் ரிசீட் இல்லை. அவர்கள் ஒரே இனத்தவர். உனக்காகவா கதைக்கப்போகின்றனர் என்கிறார். கணவரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு வேறு வழியற்று மீண்டும் 3000 ரூபாயைக் கொடுத்துவிட்டு ரிசீற்றைத்தா என்கிறேன் கடுப்புடன். ரிசீற் கொடுப்பதில்லை என்கிறான் அவன். நீங்கள் எம்மை ஏமாற்றுகிறீர்கள். எனக்கு நேரம் இல்லாமையால் உன்னை ஒன்றும் செய்யாமல் போகிறேன். நீ ரோட்டில் நின்று பிச்சை எடுக்கலாம் என்று கூற, பேசாமல் வா என்று கணவர் என்னை இழுத்துக்கொண்டு போகிறார்.

 

டாக்ஸி ஓட்டுனருக்குக் கூற ஏன் நீங்கள் ரிசீட் வாங்கவில்லை என்கிறார். கோட்டல்களில் ரிசீட் கொடுப்பதில்லை. எத்தனை கோட்டல்களில் நின்றிருப்போம். ஒருவரும் ஏமாறவில்லை. உங்கள் ஆட்கள் தான் சீட் பண்ணி விட்டார்கள் என்று கூற அவர் ஒன்றும் சொல்லாமல் வருகிறார். மூண்டும் இரண்டும் ஐயாயிரம் கோட்டை விட்டுவிட்டோம் என்கிறார் கணவர். 

 

பின் நாம் தொடருந்தில் நிஜாமுதீன் வந்து அங்கிருந்து இன்னொரு டாக்ஸி பிடித்து டெல்லி வந்து விமானம் சென்னையில் இறங்கியதும் தான் மனம் நிம்மதியடைந்தது.

 

       

 

 

 

 

உங்கள் அனுபவக் கட்டுரைகள் ஒரு பாடமாக அமைகின்றன... 

 உண்மையைச் சொல்லோனுமென்டால், வாசிக்கும் போது மனதளவில் ஒரு பீதி ஏற்படுகிறது. ஒரு திகில் திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வு. 

செத்தாலும் உந்த ஊத்தை நாட்டுக்குப் போவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். குறிப்பாக வட இந்தியாவிற்கு!

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 18/3/2024 at 16:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன்.

 

“இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா”

 

அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது

 

“எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்”  என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார்.

 

“அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன்.

 

“இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்”

 

“இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே”

 

“அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்”

 

நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது.

 

“எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்”

 

“இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்”

 

“சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை.

 

“கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன்.

 

 

 

இன்னும் தான் இந்தப் புடிக்கிறது ஓயேலையோ....!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நன்னிச் சோழன் said:

 

 

வட இந்தியா பற்றி பார்க்கும் காணொளிகள் எல்லாம் உண்மை தான் அப்ப.

 

 

உண்மைதான். உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. 😂

11 hours ago, நன்னிச் சோழன் said:

 

உங்கள் அனுபவக் கட்டுரைகள் ஒரு பாடமாக அமைகின்றன... 

 உண்மையைச் சொல்லோனுமென்டால், வாசிக்கும் போது மனதளவில் ஒரு பீதி ஏற்படுகிறது. ஒரு திகில் திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வு. 

செத்தாலும் உந்த ஊத்தை நாட்டுக்குப் போவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். குறிப்பாக வட இந்தியாவிற்கு!

 

இந்தியா நல்லதொரு நாடு. சுற்றிப்பார்க்க நிறைய இருக்கு. தனிய இருவர் போகாது நண்பர்களுடன் சேரந்தோ, ஒரு பயண முகவர்களின் ஒழுங்கிலோ  அல்லது நன்றாக கிந்தி மொழி கதைப்பவருடனோ அல்லது நாடு அடியுண்டவர் என்று சொல்வார்களே.......அவர்களுடன் சென்றால் எந்தப் பயமும் இல்லை.

10 hours ago, நன்னிச் சோழன் said:

 

இன்னும் தான் இந்தப் புடிக்கிறது ஓயேலையோ....!

 

இமிகிறேஷனில் பொறுப்பாக இருப்பவரது  ஒரு நாள் வருமானம் ஐம்பதாயிரத்துக்கும் அதிகம் வரும் என்று நினைக்கிறன். மீண்டும் நாட்டுக்குப் போகவேண்டி இருப்பதால் யாரும் எதிர்க்கவோ காட்டிக் கொடுக்கவோ மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தூரத்திலேயே Hotel உள்ளது (பெயர் மறந்துவிட்டது - Restaurant சேர்ந்தே உள்ளது)

திருச்செந்தூரில் Hotel Chitra Park ( Restaurant இல்லை) சில நிமிட நடை தூரம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, MEERA said:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தூரத்திலேயே Hotel உள்ளது (பெயர் மறந்துவிட்டது - Restaurant சேர்ந்தே உள்ளது)

திருச்செந்தூரில் Hotel Chitra Park ( Restaurant இல்லை) சில நிமிட நடை தூரம்.

 

 

எல்லா இடங்களிலும் தங்கச்சிக்கு நுளம்பு பிரச்சனை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயணக் கட்டுரைகளை படிக்கும்  போது இப்படி ஒரு பயணம் வேணுமா என்று தான் நினைக்க தோணுது.ஆனாலும் மற்றவர்களின் தனிபட்ட விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதற்கு நாம் யார்..?..நாம் வெளிக்கிட்டால் இதை விட கஸ்ரப்பட வேண்டி வருமோ என்ற எண்ணம் தான் மனதில் தோன்றுகிறது..🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அளவுக்கு எதிர்மறையான

டாக்சி சாரதி தொடக்கம் விடுதியில் வேலை செய்யும் வரை எல்லாரோரையும் அவனே இவனே என்று விளித்து எழுதிய 

பயணக் கட்டுரை ஒன்றை நான் இது வரை வாசிக்கவில்லை.

ஒவ்வொருவரின் மனம் போல தான் வாழ்க்கை யும் அதன் அனுபவங்களும்.

சக மனிதர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு

போகும் இடமெல்லாம் துன்பமே அன்றி வேறு எது வாய்க்கும்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வைரவன் said:

இந்த அளவுக்கு எதிர்மறையான

டாக்சி சாரதி தொடக்கம் விடுதியில் வேலை செய்யும் வரை எல்லாரோரையும் அவனே இவனே என்று விளித்து எழுதிய 

பயணக் கட்டுரை ஒன்றை நான் இது வரை வாசிக்கவில்லை.

ஒவ்வொருவரின் மனம் போல தான் வாழ்க்கை யும் அதன் அனுபவங்களும்.

சக மனிதர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு

போகும் இடமெல்லாம் துன்பமே அன்றி வேறு எது வாய்க்கும்?

மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

5 hours ago, யாயினி said:

பயணக் கட்டுரைகளை படிக்கும்  போது இப்படி ஒரு பயணம் வேணுமா என்று தான் நினைக்க தோணுது.ஆனாலும் மற்றவர்களின் தனிபட்ட விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதற்கு நாம் யார்..?..நாம் வெளிக்கிட்டால் இதை விட கஸ்ரப்பட வேண்டி வருமோ என்ற எண்ணம் தான் மனதில் தோன்றுகிறது..🤔

என்னால் உள்ளதை உள்ளபடிதான் எழுத முடியும். மற்றவர்களுக்காக பொய்யாக நடிக்கவோ எழுதவோ என்னால் முடியாது. எனக்கு நடந்ததை நான் எழுதியது வாசிப்பவர்கள் போகும்போது தயாராகப் போவார்கள் என்பதற்காகவே தவிர பயமுறுத்துவதற்கல்ல.

6 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லா இடங்களிலும் தங்கச்சிக்கு நுளம்பு பிரச்சனை.

எல்லா இடமும் என்று எங்கே அண்ணா எழுதினேன்???

  • 3 weeks later...
Posted

கட்டுரைக்கு நன்றி அக்கா. இதிலுள்ள ஒரு பகுதி எனக்கு உபயோகமாக இருக்கலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/4/2024 at 18:16, வைரவன் said:

இந்த அளவுக்கு எதிர்மறையான

டாக்சி சாரதி தொடக்கம் விடுதியில் வேலை செய்யும் வரை எல்லாரோரையும் அவனே இவனே என்று விளித்து எழுதிய 

பயணக் கட்டுரை ஒன்றை நான் இது வரை வாசிக்கவில்லை.

ஒவ்வொருவரின் மனம் போல தான் வாழ்க்கை யும் அதன் அனுபவங்களும்.

சக மனிதர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு

போகும் இடமெல்லாம் துன்பமே அன்றி வேறு எது வாய்க்கும்?

சக மனிதர்கள் மனிதர்கள் போல நடந்து கொண்டால் அவர் அவ்வாறு எழுதியிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/4/2024 at 16:08, இணையவன் said:

கட்டுரைக்கு நன்றி அக்கா. இதிலுள்ள ஒரு பகுதி எனக்கு உபயோகமாக இருக்கலாம். 🙂

நிட்சயமாய். வரவுக்கு நன்றி.

On 22/4/2024 at 16:44, பெருமாள் said:

சக மனிதர்கள் மனிதர்கள் போல நடந்து கொண்டால் அவர் அவ்வாறு எழுதியிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .

உங்களுக்கு விளங்குது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை! KaviDec 12, 2024 08:14AM இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பேசுப்பொருளாகி உள்ளது.. இலங்கை தமிழரான 37 வயது ஜாய், தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, நேற்று (டிசம்பர் 11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர். அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன். தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர். எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன். இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார். அதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் இளைஞர் ஜாயை அழைத்துச் சென்று அறிவுரைகள் கூறி, கியூ பிரிவு போலீஸாரை அணுகுமாறு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர் ஜாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/tamil-nadu/sri-lankan-tamil-kneel-and-cry-in-protest-at-the-ramanathapuram-collectorate/
    • கிழக்கில் அருணின் அரசியல் முக்கியத்துவம்……! December 11, 2024 — அழகு குணசீலன் — “நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு தேவை. அந்த அரசியல் அமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்……. புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும் அல்ல பழைய அரசியல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள இருபத்தியிரண்டு திருத்தங்களும் இல்லாமல் போகும்….”  . இது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தர்க்க ரீதியான குழப்பங்களை தவிர்த்த கருத்து.       அண்மையில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினால்  கூறப்பட்டு, பின்னர்  மறுக்கப்பட்ட/திருத்தப்பட்ட தெளிவற்ற கருத்தை சொல்லாடல் அரசியலுக்குள் சிக்காமல் தர்க்கரீதியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் பிரதி அமைச்சர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் என்.பி.பி. அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக  அருண் ஹேமச்சந்திர அதிக முக்கியத்துவத்தையும், மக்களின் கவனஈர்ப்பையும் பெற்ற ஒருவராக உள்ளார். அருண் ஜே.வி.பி./என்.பி.பி. யின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்ற வகையிலும் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியும், கட்சிதலைமைத்துவத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவருமாகும். திருகோணமலை மாவட்டத்தில் என்.பி.பி.யில் அதிகூடிய 38,368 விருப்புவக்குகளை பெற்றவர். இரண்டாவது நிலையில் வந்த ரொஷான் அக்மீமன 25, 814 விருப்புவாக்குளையே பெற்றிருந்தார்.  இதற்கு மூன்று சமூகங்களும் அருணுக்கு விருப்பு வாக்குகளை அளித்ததே காரணம். இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதியினால்  சர்வதேச உறவுகளைக்கொண்ட வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூகோள அரசியல், பொருளாதார கேந்திர முக்கியத்துவம் கொண்டதும், பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் கழுகுப்பார்வைக்கு உட்பட்டதுமான திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பங்களிப்பு செய்து கணிசமான அந்நியச் செலாவணியை இலங்கைக்கு பெற்றுத்தரும் ஒரு மாகாணம் என்ற அடிப்படையிலும் ஜனாதிபதியின் இந்த தேர்வு மிகவும் பொருத்தமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வெளியுறவு அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு பின்னர் வெளியுறவுத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள  ஒரு தமிழர் இவர். அதேவேளை அவரது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப அவர் பற்றிய தகவல் விபரத்தில், தேசியம்: “இலங்கையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கத்தில்  சர்வதேச, உள்நாட்டு ஊடகப்பதிவுகள் இதற்கு முரணாக அவரை “இலங்கை”அரசியல்வாதி என்று அடையாளம் காண்பதற்கு பதிலாக “தமிழ்”அரசியல்வாதி என்று அடையாளப்படுத்துகின்ற போக்கே முதன்மை பெறுகிறது என்பதையும் இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். இந்த இரண்டு அடையாளங்களையும் சமத்துவமாக, சமாந்தரமாக,சமகாலத்தில் பேணுவதே பன்மைத்துவ சமூக கட்டமைப்பின் அடிப்படை  சமூக, ஜனநாயக, அரசியல் உரிமையாக இருக்கமுடியும். இல்லையேல் கடந்த காலங்கள் போன்று அரசாங்க ஆதரவு தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளை” சிங்களவர்களாக” பார்க்கின்ற இனவாத நோக்கே மேலோங்குமேயன்றி அரசாங்கம் எதிர்பார்க்கின்ற “இனவாதம்” அற்ற இலங்கை சமூகங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை  அது வழங்காது. அருண் ஹேமச்சந்திரவின்  முக்கிய அரசியல் நியமனங்களின் பின்னணியில் ஜனாதிபதிக்கும், அவரது கட்சிக்கும் “கிழக்கு” குறித்து சில இலக்குகள் இல்லாமல் இவை ஒன்றும் இடம்பெறவில்லை. 1.  ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் பலமாகவும், தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் பலவீனமாகவும் உள்ள என்.பி.பி./ஜே.வி.பி.யை கிழக்கில் கட்டி எழுப்புதல். 2.  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இடம்பெற்ற “அநாகரீக  சண்டை  அரசியலை” முடிவுக்கு கொண்டு வருதல். 3. அருண் ஹேமச்சந்திராவை கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தயார் படுத்துதலில் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை ஏற்படுத்துதல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  என்.பி.பி. கிழக்கு மாகாணத்திற்கான 16  நாடாளுமன்ற உறுப்பினர்களில் (திருகோணமலை:4, மட்டக்களப்பு:5, அம்பாறை:7)  7 உறுப்பினர்களை (  முறையே 2+1+4) பெற்றுள்ளது. அடுத்த இரண்டாவது நிலையில் தமிழரசுக்கட்சி (முறையே (1+3+1) 5 உறுப்பினர்களை பெற்றுள்ள சூழலில் மற்றைய கட்சிகள் 4 உறுப்பினர்களை பெற்றுள்ளன.  இந்த 7:5:4 என்ற நிலையானது இன்றைய நிலையில் என்.பி.பி.க்கு திருப்பி அளிப்பதாக இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவில் என்.பி.பி. திருப்தி அடையவில்லை.  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 7:9 என்ற அடிப்படையில் வாக்குகளை பார்த்தால்  கிழக்குமாகாண சபையை என்.பி.பி. கைப்பற்றுவது உறுதியாக இல்லை. இதை சீர்செய்வதற்கான பணி பிரதியமைச்சர் அருணுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஜே.வி.பி.  வட்டாரங்களிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.  இந்த காய் நகர்வின் ஒரு பகுதியே அம்பாறையில்  தேசிய பட்டியலில் முஸ்லீம் பிரதிநிதி ஒருவரை உள்வாங்கி இருப்பது . வடக்கு, கிழக்கில் கிழக்கு மாகாணசபையை கைப்பற்றும் இலக்கையும், வடக்கில் எதிர்க்கட்சி நிலையை எட்டும்  இலக்கையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசியல் அமைப்பு திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும் போது இந்த “இலங்கையர்” அங்கீகாரம் சர்வஜன வாக்கெடுப்புக்கு அப்பால்  வடக்கு கிழக்கின் இரண்டாவது – துணை அங்கீகாரமாக காட்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அத்துடன் பாரம்பரிய தாயகக்கோட்பாட்டை அது நொண்டியாக்கும். கிழக்கு மாகாணத்தில் என்.பி.பி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் சற்று குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி ஏறக்குறைய 1,67,000 வாக்குகளை பெற்றுள்ளது. எனினும் மற்றைய பிரதான எதிர்க்கட்சிகள் பெற்ற மிகுதி வாக்குகளோடு ஒப்பிடுகையில் என்.பி.பி.யின் வாக்குகள் குறைவானவை. இதனால் கிழக்கில் இந்த கட்சிப்பணி அவசியமாகிறது. கிழக்கில் சிங்கள,தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குபெறுகையை அதிகரித்தால் வடக்கு, கிழக்கு துண்டாடலின் அரசியல் பயனை ஜே.வி.பி. அனுபவிக்க கூடியதாக இருக்கும். எனினும் இது இனப்பிரச்சினை தீர்வினால், தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாஷைகளினால்  நிர்ணயிக்கப்படுகின்ற ஒரு விடயமாக அமையப் போகிறது என்பதால்  “இலங்கையர்” கோஷத்தோடு இந்த இலக்கை அருண் ஹேமச்சந்திர ஊடாக  அடைவது அவ்வளவு இலகுவானதல்ல. அதே வேளை இவரைத் தவிர மூவினமக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம்  என்.பி.பி.க்கு கிழக்கில் இல்லை. “கிழக்கு மாகாண சபைக்கு சிங்கள முதலமைச்சரா?” என்று கேட்கின்ற சாணக்கியனுக்கு அருண் மூலம் பதிலளித்து இருக்கிறார் அநுர. இந்த மாகாணசபை குறி பார்த்து சுடும் அரசியலில் என்.பி.பி.மட்டும் அல்ல  முஸ்லீம் காங்கிரஸும்  இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தேசியப்பட்டியல் நியமனம்  ஏறாவூர் நளீம் ஹாயியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூலம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஊர்ச்சண்டை பிளவுகளுக்கு ஒட்டுப் போட்டுள்ளார் ஹக்கீம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிதறும் முஸ்லீம் வாக்குகளை மாகாணசபை அதிகாரத்தை நோக்கி இணைப்பதற்கான மற்றொரு முயற்சி இது. இந்த தந்திரோபாய நகர்வுகள்  எதுவும் இன்றி தமிழரசுக்கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தில் மற்றொரு பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது. “பிரிந்தவர் கூடினால் கேட்கவும் வேண்டுமா ?” என்று பொசிட்டிவாக கேட்பதற்கு இங்கு எதுவும் இல்லை.   யாழ்ப்பாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மாகாணசபைகள் தொடர்பான தனிநபர் பிரேரணையை, சாணக்கியன் எம்.பி. தொடரப்போவதாகவும் அதனூடாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கப் போவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. 159 உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்தரப்புக்கு இந்த அழுத்தம் எப்படி அமையும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். சஜீத், ஹக்கீம் அணிகளை நம்பி அதில் தொங்குகிறது தமிழரசுக்கட்சி. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரமும் இதில் தன்பங்கை செலுத்த தவறப்போவதில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிக இடத்தை பிடித்திருந்தன. கூட்டங்களை  கௌரவமான அரசியல், அதிகாரிகள் கூட்டமாக விடயதானம் சார்ந்து  ஒழுங்காக நடாத்த முடியாத நிலையே இருந்தது. அபிவிருத்திக்குழுக் கூட்டங்களை நடாத்தி முடித்தல் என்பதைவிடவும் குழப்பி முடித்தல்  என்பது ஒருதரப்பு அரசியல் இலக்காக இருந்தது.  தற்போது அடையாள அரசியல் பேசும் கட்சிகளான தமிழரசுக்கட்சி மூன்று உறுப்பினர்களையும்,  முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும் (தேசிய பட்டியல் ஒருவர்)  கொண்டுள்ள நிலையில், அரசியல் அனுபவமேயற்ற, பலவீனமான என்.பி.பி. உறுப்பினர் ஒருவருடன்  அரசாங்க தரப்பு செயற்படுவது கருத்து முரண்பாடான சந்தர்ப்பங்களில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். இதற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொழும்பு தேசிய அரசியலில் அவருக்குள்ள வேலைப்பளுவுக்கு மத்தியிலும் திருகோணமலக்கு மட்டும் அல்ல மட்டக்களப்புக்கும் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பு குழுகூட்ட கேள்விகள் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்கின்ற பந்தும் நேரடியாக அவரிடமே இருக்கிறது. மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு கூட்டங்களில் ஆரம்பத்தில் கட்சி அரசியலில் ஜனா சாணக்கியனோடு ஒத்துழைத்தார்.  வியாழேந்திரன் பிள்ளையானோடு ஒத்துழைத்தார்.  பின்னர் இந்த ஒத்துழைப்பு இரு தரப்பிலும் நீடிக்கவில்லை. அப்போது  குழப்பும் வேகம் குறைந்து காணப்பட்டது. கச்சேரிக்கு வெளியே வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு  முன்னாள் மட்டக்களப்பு மேயரும்,  அன்றைய முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சாணக்கியனின் முதுகை பலப்படுத்தினர்.  இப்போது அவர்களில் ஒருவரான சிறிநேசன் எம்.பி.யாகியுள்ளபோதும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன், சிறிதரன் அணி அரசியல் இவர்களுக்கு இடையே குறுக்கே நிற்கிறது. ஜனாதிபதியுடனான  சந்திப்பு  கேள்விகளும், பதில்களும்  பாஸ்ட்பேப்பர்   மீட்டல் வகுப்பாக  ஊடகங்களில்  திருப்பி திருப்பி அரைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களின்  ஒத்துழைப்பை தமிழரசுக்கட்சி பெறமுடியாத சூழலில் அருண் ஹேமச்சந்திராவுக்கு கூட்டங்களை கொண்டு நடாத்துவதற்கான சூழலை இது  இலகு படுத்துகிறது.  கிழக்கு மாகாண சபை அதிகாத்தை கைப்பற்றுதல்  மூன்று சமூகங்களினதும் அரசியல் எதிர்காலத்தை -திசையை நிர்ணயிப்பதில்  மிகவும் முக்கியமானது.  தேசிய ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் இருந்து  பிராந்திய அடிப்படையிலும், அதிகாரப்பகிர்விலும் இது வேறுபட்டது என்பதால் பிராந்திய கட்சிகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவது வழமைக்கு மாறானது அல்ல. எனினும் தேசியக்கட்சி ஒன்று தென்னிலங்கைக்கு  வெளியே பிராந்திய மட்டத்தில் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் இது அவசியமாகிறது. அதுவும் அநுர அலை நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர திசைகளை  கடந்த என்.பி.பி.க்கு இது இன்னும் முக்கியமானது.     https://arangamnews.com/?p=11527
    • இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் December 12, 2024 11:44 am இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை உத்தியோகத்தர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். மனித வளத்தை மேம்படுத்தாவிட்டால் மக்களுக்கான சேவைகளைச்  சிறப்பாக வழங்க முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். ஐரெக் திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள தரமான கல்வி நிலையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்தப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சிறந்த சேவைகளை எமது மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். “இந்தியா எமக்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அது தொடர வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் முக்கியமானது. விவசாயத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.” – என்றும் ஆளுநர் தனது உரையில் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறி.சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.   https://oruvan.com/indias-help-is-always-needed-northern-governor-vedanayagan/
    • அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? December 12, 2024 11:26 am இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன. அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது. இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார். பேசுபொருளாகுமா கச்சத்தீவு பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது. பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார். மோடி கூறப்போகும் செய்தி  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது. புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும். பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரமணியம் நிஷாந்தன்   https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/
    • பைடன் மனைவியுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரம்ப் குசும்பு The photo’s caption reads, “A fragrance your enemies can’t resist!”   அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங்கள், வர்த்தக அட்டைகள், தான் கையெழுத்திட்ட கிதார் இசைக்கருவி உள்ளிட்டவை இவற்றில் பிரபலமானவை. தேர்தல் வெற்றிக்கு பின், ‘ஷூ’க்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை அவர் தன் சமூக வலைதள பக்கம் வாயிலாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நார்டே – டேம் – கதீட்ரல் தேவாலயம் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில், டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில், மகள் ஆஷ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தன் வாசனை திரவியத்துக்கான விளம்பர படமாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். ‘உங்கள் எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத நறுமணம்’ என்ற வரியுடன் அந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. டிரம்பின் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியானநிலையில், பெரும்பாலானோர் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது, ஜோ பைடனை தரக்குறைவாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் மனைவியை தன் சுய விளம்பரத்துக்காக டிரம்ப் பயன்படுத்தியுள்ளது காட்டுமிராண்டித்தனமானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், எதிரிகளும் தன் வாசனை திரவியத்தை விரும்புவர் என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுள்ள இணையதளவாசிகள், டிரம்பின் நகைச்சுவை உணர்வை பாராட்டி வருகின்றனர்.   https://akkinikkunchu.com/?p=302786
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.