Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரும் வெளிநாட்டு நபர்கள் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதியை வழங்குவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும், விரைவாகவும் திறமையாகவும் தங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என்று அவர் விளக்கினார். அவர்கள் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார். ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணம் ஒரு மாதத்திற்கு USD 25, மூன்று மாதங்களுக்கு USD 50, ஆறு மாதங்களுக்கு USD 75 மற்றும் ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு USD 200. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் 

தெரிவித்தார்.

https://www.newswire.lk/2024/03/23/on-arrival-licence-for-foreigners-from-april/

  • Replies 63
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். 

  • உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......!  😁

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி, “ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு  திட்டமும்,  அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்கள

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா  பஞ்சி பிடித்த சோம்பேறி  சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது .

அந்த நாட்டில் முக்கிய சிங்கள  அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை ................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

வெளிநாடுகளில் இன்ரர்நசினல் லைசன்ஸ் என்று கொடுக்கிறார்களே அதற்கு என்னாகும்?

நான் எப்ப போனாலும் ஒன்று எடுத்துக் கொண்டு தான் போவேன்.

காரும் மோட்டார் சைக்கிளும் ஓடலாம்.

இனி என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????

மக்கள் தொகையை குறைக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அழுது குழறி, வயிறெரிந்து  பிரயோஜனம் இல்லை. மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????

உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......!  😁

அதுக்குத் தான் AAA  இருக்குதே?

15 டாலருடன் ஒரு வருட அனுமதிப் பத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அழுது குழறி, வயிறெரிந்து  பிரயோஜனம் இல்லை. மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். 

சர்வதேச அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் எங்களுக்கு எப்படி எரிச்சல்??

ஏன் உங்கள் மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? எதற்காக எல்லா இடங்களிலும் சட்டாம்பி வேலை. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

சர்வதேச அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் எங்களுக்கு எப்படி எரிச்சல்??

ஏன் உங்கள் மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? எதற்காக எல்லா இடங்களிலும் சட்டாம்பி வேலை. 

"கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா  பஞ்சி பிடித்த சோம்பேறி  சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது .

அந்த நாட்டில் முக்கிய சிங்கள  அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை"

👆உபயம்; பெருமாள்.

அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????

👆உபயம் ; விசுகர்

Driving Licence என்பது சட்டம் ஒழுங்கு மற்றும்  தொழில்சார் நுட்பம் சம்பந்தப்பட்டது. 

ஆனால் தாங்கள் இருவரும் அங்கே அங்கே உள்ள மக்களின் பழக்க வழக்கம் தொடர்பாக நையாண்டி செய்கிறீர்கள். இதற்குள் ஈழத் தமிழரும் அடக்கம்.

இது வயித்தெரிச்சல் தவிர வேறென்ன? 

இப்போது கூறுங்கள்,

 யாருடைய  மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது?

🤨

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1990.webp

இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை.

உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். 

ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். 

எல்லாம் $$$$ ற்காக.. 

சிறீலங்காவில் காசைக் கொடுத்தால் மாற்றம் எப்போதும் வரும்…🤣🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

எல்லாம் $$$$ ற்காக.. 

இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

"கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா  பஞ்சி பிடித்த சோம்பேறி  சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது .

அந்த நாட்டில் முக்கிய சிங்கள  அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை"

👆உபயம்; பெருமாள்.

அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????

👆உபயம் ; விசுகர்

Driving Licence என்பது சட்டம் ஒழுங்கு மற்றும்  தொழில்சார் நுட்பம் சம்பந்தப்பட்டது. 

ஆனால் தாங்கள் இருவரும் அங்கே அங்கே உள்ள மக்களின் பழக்க வழக்கம் தொடர்பாக நையாண்டி செய்கிறீர்கள். இதற்குள் ஈழத் தமிழரும் அடக்கம்.

இது வயித்தெரிச்சல் தவிர வேறென்ன? 

இப்போது கூறுங்கள்,

 யாருடைய  மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது?

🤨

சாரதிப் பத்திரத்துடன் விளையாடுவது ஒரு கொலைக்குற்றம் என்று தெரிந்தால் இது போன்ற முட்டாள்தனமான முண்டு கொடுப்பு தேவையற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .

வெளிநாட்டவர்கள் சம்பந்தப்படும் பெரும்பாலான விடயங்களில் தற்போது டொலர் .

சிறீலங்கா அரசு எங்கிருந்தெல்லாம் டொலரை பெற முடியுமோ அங்கெல்லாம் கட்டணங்கள் டொலரில்…..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நாகரீகமாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். அல்லாதுவிடின் தாங்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கவில்லையென்றாகிவிடும். 

அப்படி நீங்கள் மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கவில்லையென்பது நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலை? கதை கந்தல்தான் 😁

2 hours ago, விசுகு said:

சாரதிப் பத்திரத்துடன் விளையாடுவது ஒரு கொலைக்குற்றம் என்று தெரிந்தால் இது போன்ற முட்டாள்தனமான முண்டு கொடுப்பு தேவையற்றது. 

👆உங்கள் வயித்தெரிச்சல் வாதம் அடிபட்டவுடன் தட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள். 👇

2 hours ago, பெருமாள் said:

இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .

1 hour ago, MEERA said:

வெளிநாட்டவர்கள் சம்பந்தப்படும் பெரும்பாலான விடயங்களில் தற்போது டொலர் .

சிறீலங்கா அரசு எங்கிருந்தெல்லாம் டொலரை பெற முடியுமோ அங்கெல்லாம் கட்டணங்கள் டொலரில்…..

சிரிலங்கா தவிர்ந்த மிகுதி நாடுகளெல்லாம் இலவசமாகவா கொடுக்கிறார்கள்?  

வாய் சும்மா இருக்கிறதென்பதற்காக கண்டபடி வாயைத் திறக்கப்படாது  கண்டியளோ !

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

நாகரீகமாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். அல்லாதுவிடின் தாங்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கவில்லையென்றாகிவிடும். 

அப்படி நீங்கள் மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கவில்லையென்பது நிரூபிக்கப்பட்டால் உங்கள் நிலை? கதை கந்தல்தான் 😁

உண்மைதான் நான் பள்ளிகல்லூரியில் திறத்த பட்டவன் இங்கு பலமுறை சொல்லியுள்ளேன்?எனது தாய் ஆங்கில ஆசிரியை எத்தனை தரம் சொல்வது?ஒன்றுமே  வேண்டாம் போ................................

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரும் வெளிநாட்டு குடிமக்களுக்கு அரச வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை இப்பொழுதும் வழங்கப்படுகின்றதா? அப்படி இல்லை எனில் அதற்கும் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவு அளவுக்கு அறவீடு செய்யலாமே? மருத்துவக் காப்புறுதி இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நபருக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது அல்லவா? 

அண்மையில் மெக்ஸிக்கோ போய் இருந்த பொழுது எனக்கு சளி தடிமலுக்கு மருந்துக்கே 320 அமெரிக்கன் டாலர் வரைக்கும் அறவிட்டார்கள். 

இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் அரச வைத்தியசாலைகளில் ஒரு சதம் கொடுக்காமல் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பகிடி said:

சரியான கருத்து. இலங்கையில் வெளிநாட்டினர்களுக்கு  இலவச மருத்துவம் கொடுப்பது பற்றி தெரியவில்லை.தகவல் சொல்ல குருசோவையும் காணவில்லை ☹️ வெளிநாட்டினரிடம் டொலரில் கட்டணம் அறவிடுவதே சரியானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். 

மீரா இதைத் தான் முன்னரே கேடடேன்.

நீங்கள் தான் தேவையில்லை நான் ஓட்டுகிறேன் என்றீர்கள்.

தகவலுக்கு நன்றி.

AAA  லைசன்ஸ் எடுக்க வேண்டுமா இல்லாமலே இங்குள்ள லைசன்ஸ்சைக் கா;டி எடுக்கலாமா என்பதை விசாரிக்க வேண்டும்.

இங்கும் கட்டி அங்கும் கட்டவல்லவா வேண்டும்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உண்மைதான் நான் பள்ளிகல்லூரியில் திறத்த பட்டவன் இங்கு பலமுறை சொல்லியுள்ளேன்?எனது தாய் ஆங்கில ஆசிரியை எத்தனை தரம் சொல்வது?ஒன்றுமே  வேண்டாம் போ................................

அதனாலதான் கூறுகிறேன், நாகரீகமாக எழுதக் கற்றுகொள்ளுங்கள் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

சிரிலங்கா தவிர்ந்த மிகுதி நாடுகளெல்லாம் இலவசமாகவா கொடுக்கிறார்கள்?  

வாய் சும்மா இருக்கிறதென்பதற்காக கண்டபடி வாயைத் திறக்கப்படாது  கண்டியளோ !

சும்மா வாயைத் திறந்து செம்புள்ளி குத்து வாங்கியது தாங்கள்.  நாகரீகத்தை பற்றி நீங்கள் கதைப்பதா???🤣🤣🤣

ஆம் மிகுதியான பெரும்பாலான நாடுகளில் U.K. சாரதி அனுமதிப்பத்திரத்துடன் மட்டும் வாகனம் ஓட்ட முடியும் IDP தேவையில்லை… 

🤣

7 hours ago, ஈழப்பிரியன் said:

மீரா இதைத் தான் முன்னரே கேடடேன்.

நீங்கள் தான் தேவையில்லை நான் ஓட்டுகிறேன் என்றீர்கள்.

தகவலுக்கு நன்றி.

AAA  லைசன்ஸ் எடுக்க வேண்டுமா இல்லாமலே இங்குள்ள லைசன்ஸ்சைக் கா;டி எடுக்கலாமா என்பதை விசாரிக்க வேண்டும்.

இங்கும் கட்டி அங்கும் கட்டவல்லவா வேண்டும்.

ஆம் 2022 & 2023 தொடக்கத்தில்  நான் இதனை எடுக்காமலேயே அங்கு ஓட்டினேன். கொழும்பில் போக்குவரத்து பொலிசாரிடம் காட்டியும் இருந்தேன்.

ஆனால் 2023 ஆண்டு 7/8 ம் மாதங்களில் எல்லா மாவட்ட போக்குவரத்து பொலிசாருக்கும் விடயம் தெரிந்து விட்டது. சந்தேகம் இருந்தால் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

இலங்கை வரும் வெளிநாட்டு குடிமக்களுக்கு அரச வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை இப்பொழுதும் வழங்கப்படுகின்றதா? அப்படி இல்லை எனில் அதற்கும் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவு அளவுக்கு அறவீடு செய்யலாமே? மருத்துவக் காப்புறுதி இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நபருக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது அல்லவா? 

அண்மையில் மெக்ஸிக்கோ போய் இருந்த பொழுது எனக்கு சளி தடிமலுக்கு மருந்துக்கே 320 அமெரிக்கன் டாலர் வரைக்கும் அறவிட்டார்கள். 

இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் அரச வைத்தியசாலைகளில் ஒரு சதம் கொடுக்காமல் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

கேள்வியும் விடையும் ( தவறான) உங்களின் கருத்தில் உள்ளதே!

ஆம் வெளிநாட்டவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

https://www.gov.uk/government/publications/hospitalisation-in-sri-lanka-information-pack/information-for-british-nationals-hospitalised-or-in-need-of-medical-help-in-sri-lanka

ஆனால் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவிற்கு ஏற்ப அறவீடு செய்ய வேண்டும் என்பது நகைப்பிற்கு உரியது. வெள்ளை தூசணத்தினால் தான் பேசும். அதன் பிறகு எட்டியும் பார்க்க மாட்டார்கள் ……

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

அதனாலதான் கூறுகிறேன், நாகரீகமாக எழுதக் கற்றுகொள்ளுங்கள் என்று. 

இனவாத சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதை  நாகரீகமாக எழுதுவது என்று எப்போதில் இருந்து மாற்றம் பெற்றது ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

👆உங்கள் வயித்தெரிச்சல் வாதம் அடிபட்டவுடன் தட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள். 👇

எனக்கு வயித்தெரிச்சல்?

சும்மா போய்யா. வாயில வருகுது. அப்புறம் பள்ளிக் கூடம் போகவில்லையா என்று???? தூ.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

எனக்கு வயித்தெரிச்சல்?

சும்மா போய்யா. வாயில வருகுது. அப்புறம் பள்ளிக் கூடம் போகவில்லையா என்று???? தூ.  

நோ ரென்சன். ரிலாக்ஸ் பிளீஸ் 

😀

airport ல் வைத்து பயணிகளுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தல் நன்மையானதா தீமையானதா? 

இதுதான் விவாதிக்கப்பட வேண்டியது. 

பயணிகள் அனைவரும் வெளிநாட்டினர் என்பதையும் கவனிக்க வேண்டும். 

இத விடுத்து வேறு எதைக் கதைத்தாலும் அது வெறுப்பில் இருந்து வருவதுதான். 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.