Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவ்வளவு காலமும் பாடம் எடுந்தாங்க  இனி புலம்பெயருக்கு கடவளே அவர்களை காப்பாத்து .😀

Edited by பெருமாள்
  • Replies 364
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை    ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப

goshan_che

பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

Thumpalayan

எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, பெருமாள் said:

ஒரு கோதாரியும் வேணாம் கூடve  கூட்டிகொண்ட 

 

என்கைய a உங்க இடது கை நாதமுனி இன்னும் கருத்தில் இறங்கவில்லையா ?

ஆரம்பத்தில் அவரில சந்தேகம் இனிஊருறுதி  ஆகி விட்டது  நன்றி வணக்கம் .😄

 

 

4 minutes ago, பெருமாள் said:

இப்படி கேட்பதை விட நேரில நிழலி அல்லது மோகனிடம் யார் இந்த பெருமாள் என்று கேட்டு இருக்கலாம் நானும் வெயிட் பண்ணினேன் உங்களுக்கு திண்ணை இல்லாவிடில் யாழ் இல்லை என்று வெயிட் பண்ணி இருக்கேன் நானும் ரெடியாத்தான் இருக்கேன் .ஸ்டார் மியுக் ௦......😄

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யோவ் என்னையா இது…..ரோதனையா இருக்கு…🤣

நீங்கள் எப்ப இலங்கைக்கு சுற்றுலா போனீர்கள்? அப்படியே போனாலும் கட்டுரை எழுதி தாளிச்சு போடுவியளே🤣.

அந்த கொக்கதடி கொமெண்ட் இலங்கை போய் வந்து அனுபவம் எழுதிய வேற ஒருவருக்கு.  அது எனக்கும் ஜஸ்டினுக்குமான குழுவுக்குறி.

கொக்கதடில மாம்பழம் விழும் எண்டு பார்த்தால்…அணில் எல்லே வந்து கிடந்து உருளுது🤣.

நாதம் - ஆள் இல்லாத போது கதைப்பது சரி இல்லை. ஆள் வரட்டும் ஆளை பொரில்கலாம்🤣.

28 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கில்லாததா.

முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.

இறால் போட்டால் சுறா பிடி படும். 

திமிங்கிலம்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:
29 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கில்லாததா.

முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.

இறால் போட்டால் சுறா பிடி படும். 

திமிங்கிலம்

என்ன

பிச்சை வேணாம்

நாயைப் பிடி.

என்ற மாதிரி இருக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன

பிச்சை வேணாம்

நாயைப் பிடி.

என்ற மாதிரி இருக்கு.

அடையாளம் தெரியவரும் என்பதால்… கொழும்பான், தனி, ஏராளன், ஓணாண்டி, இன்னும் எத்தனை பேரை சந்திக்காமல் விட்டேன்….இந்த டிக்கெட் காசுக்காக மாட்டுப்படேலுமே🤣. First class எண்டாலும் பரவாயில்லை.

15 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு காலமும் பாடம் எடுந்தாங்க  இனி புலம்பெயருக்கு கடவளே அவர்களை காப்பாத்து .😀

தயவு செய்து இப்படி சொன்னது உங்களை போல அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை என நினைக்கவேண்டாம்.

நான் புலம்பெயர் சந்தை என சொன்னது அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சாமல் அவர்களுடன் fair trade செய்வோரையும், நேரடியாக அவர்களிடம் வாங்கி செல்வோரையுமே.

Edited by goshan_che
Posted
5 hours ago, பெருமாள் said:
  On 26/3/2024 at 18:11, goshan_che said:

ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது

அலி சப்ரி வெளிநாட்டுக்கு காசை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அநேகமான முஸ்லிம்கள் படு தூசணத்தால் திட்டி வேலை இல்லாமல் இங்கு என்ன செய்வது என்று திட்டி தீர்த்திருந்தார்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

தயவு செய்து இப்படி சொன்னது உங்களை போல அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை என நினைக்கவேண்டாம்.

நான் புலம்பெயர் சந்தை என சொன்னது அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சாமல் அவர்களுடன் fair trade செய்வோரையும், நேரடியாக அவர்களிடம் வாங்கி செல்வோரையுமே.

பார்ப்பம் எதுவரை பாய்கிராகள் என்று ?

இம்முறை உங்கள் புலம்பல் கேட்கக்க  திண்னை இல்லை நினைவில் வைத்து கொள்ளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பெருமாள் said:

பார்ப்பம் எதுவரை பாய்கிராகள் என்று ?

இம்முறை உங்கள் புலம்பல் கேட்கக்க  திண்னை இல்லை நினைவில் வைத்து கொள்ளுங்க .

அதுசரி உங்க அடுத்த ஆள் நாதமுனி  இடதுகை  இன்னும் கொழும்பில் இருந்து வரவில்லையா ?😀

கையை வெட்டி எடுத்து கொண்டாவது வைத்து கொள்ளாம்  முடிந்தவரை ஒரே ip யையாவது மறைத்து இருக்கலாம் உங்களால் முடியலையே நன்றி ரதி அக்கா ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிற்சேர்க்கை 1

துறைமுக நகரம் - யாழில் சில வருடங்களுக்கு முன்பு “சீனா வீசா எடுத்துத்தான் போக முடியுமாம்” என்ற அளவில் பலர் திரிகளில் சிலர் சக்கரை பொங்கல் வைக்க காரணமான இடம்.

காலி முகத்திடலுக்கும், புதிதாக அமைந்த கொழும்பு துறைமுக தெற்கு முனையத்துக்கும் இடையே ஒரு மணல் திட்டாக விரிந்து கிடக்கிறது இந்த து-மு நகரம்.

கிட்டதட்ட இதன் அரைவாசி பகுதியை மக்கள் போய் பார்க்க முடிகிறது. வாசலில் தனியார் செக்யூரிட்டிகள் மறிக்கிறார்கள். வாகனச்சோதனை இல்லை. ஆனால் கார்/வான் வகைகளுக்குதான் அனுமதி. ஆட்டோவில் போனால் இறங்கி ஒரு golf buggy போல் ஒன்றில் ஏற்றி உள்ளே அனுபுகிறார்கள்.

ஆனால் போகும் ஒவ்வொரு வாகனமும் ஒரு அப்பை டவுன்லோடு செய்து அதில் போவோரின் விபரத்தை கொடுத்து, போகும் நேரத்தையும், காரணத்தையும் கொடுத்து - ஒரு QR code ஐ பெற வேண்டும்.  இந்த கோர்ட்டை வாசலில் ஸ்கான் செய்து உள்ளே விடுகிறார்கள்.

வீதி வழியே போனால் உள்ளே ஒரு நடை பாதை பாலம் தெரிகிறது. அதனை தொடர்ந்து நன்கு செப்பனிட்ட நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை, அதில் நீர் விளையாட்டு சாதனங்கள் என்பன உள்ளன. பாரிய நிரந்தர கட்டிடம் ஏதும் இல்லை. ஆனால் கடற்கரையோரம் பத்து அளவிலான உணவு விடுதிகள் திறந்து வியாபாரம் நடக்கிறது. கடற்கரையில் மக்கள் குளிப்பது, விளையாடுவது நடக்கிறது.

அருகே சொகுசு கப்பல்கள் தரிக்கும் ஒரு இறங்கு துறையும் தயாராகிறதாம். நான் போன சமயம் ஒரு பாய்மரக்கப்பல், இரெண்டு அரைச்சொகுசு Yacht (போல் தெரிந்த)  படகுகள் அருகே தரித்து நின்றன.

முன்பு சைத்திய வீதியில் கடல் அருகே அமைந்திருந்த புத்த கோவில், மற்றும் கலங்கரை விளக்கு இப்போ தரை நடுவே இருக்கிறது.

அதுவும் ஒரு காலத்தில் மிக உயரமாக தெரிந்த அந்த கலங்கரை விளக்கு இப்போ ஏதோ ஒரு மாடி கட்டிடம் போல தெரிகிறது.

கோல்பேசில் ஷங்ரிலா ஓட்டலுடன் சேர்த்து கோல்பேஸ் வன் எனும் 9 மாடி சொப்பிங் மால் வந்துள்ளது.

சப்வே முதல் கொண்டு பல பன்னாட்டு கடைகள் இருக்கிறன. தலைபாகட்டி பிரியாணியும் உண்டு. 

அளவில் இலண்டன் Westfield, Dubai Mall போல இல்லாவிடினும், தரத்தில் ஒரு 85% கிட்ட வருகிறார்கள்.

ஷங்ரிலாவின் அருகே இண்டர்கொண்டினெண்டெல் பாரிய இரெட்டை கோபுர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கிறது. பார்க்க வேலைகள் கிட்டத்தட்ட முடிந்தது போலவே படுகிறது.

அடுத்து தாமரைக்கோபுரம். கப்பித்தாவத்த கோவில் எதிர்புறமாக பெய்ரா ஏரிக்கரையில் உள்ளது. வாசல் வரை போய் பார்த்தேன். மேலே போகவில்லை.

17 minutes ago, nunavilan said:

அலி சப்ரி வெளிநாட்டுக்கு காசை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அநேகமான முஸ்லிம்கள் படு தூசணத்தால் திட்டி வேலை இல்லாமல் இங்கு என்ன செய்வது என்று திட்டி தீர்த்திருந்தார்கள்.

ஓம்…ரேடியோவில் அடிக்கடி அவுஸ்ரேலிய அரசு கப்பலில் வரவேண்டாம், எதுவும் கிடைக்காது என்று போடும் விளம்பரங்கள் ஓடுகிறது.

ஆனாலும் மோகம் குறைவாக தெரியவில்லை. 

மருத்துவத்துக்கு அடுத்த பெரிய வியாபாரம் - வெளிநாட்டு யூனிகளில் இலங்கையில் இருந்து பின் கடைசி வருடம் வெளிநாடு வந்து படிக்கும் வகையிலான படிப்புத்தான்.

அதே போல் - ரம்பா புருசர், லைக்கா போன்றோரை தமிழர்கள் பலர், ரிசி மூலம், நதி மூலம் பார்க்காமல் வரவேற்கிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பெருமாள் said:

அதுசரி உங்க அடுத்த ஆள் நாதமுனி  இடதுகை  இன்னும் கொழும்பில் இருந்து வரவில்லையா ?😀

கையை வெட்டி எடுத்து கொண்டாவது வைத்து கொள்ளாம்  முடிந்தவரை ஒரே ip யையாவது மறைத்து இருக்கலாம் உங்களால் முடியலையே நன்றி ரதி அக்கா ..

🤣 நாதம் பாய். நான் மலையாளி.

வேற வேற டிப்பாட்மெண்ட்🤣.

VPN ல அவர் லங்கா, நான் ஆப்கானிஸ்தான்🤣

@nunavilan @பெருமாள்

நீங்கள் கடைசியாக இலங்கை போனது எப்போ? ஒரு தரவுக்காக கேட்கிறேன்.

—————-

நான் எழுதுவதில் தரவுப்பிழைகள் இருந்தால்…

ஓணாண்டி, ஏராளன், தனி, சுவை போல ஊருக்கு போய் வருவோர் திருத்த வேண்டுகிறேன்🙏.

Posted
7 minutes ago, goshan_che said:

நீங்கள் கடைசியாக இலங்கை போனது எப்போ? ஒரு தரவுக்காக கேட்கிறேன்.

2023 செப்டெம்பர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

2023 செப்டெம்பர்

நன்றி. 

நான் எழுதுவது ஜனவரி 24 க்கு பின்னான நிலை. 

இரெண்டுக்கும் அதிக இடைவெளியில்லை.

நான் எழுதுவதை விட மிக அதிக தூரம் விலகியதாக இருந்ததா உங்கள் இலங்கை பயண அனுபவம்?

Posted
1 minute ago, goshan_che said:

நன்றி. 

நான் எழுதுவது ஜனவரி 24 க்கு பின்னான நிலை. 

இரெண்டுக்கும் அதிக இடைவெளியில்லை.

நான் எழுதுவதை விட மிக அதிக தூரம் விலகியதாக இருந்ததா உங்கள் இலங்கை பயண அனுபவம்?

இம்முறை அதிக இடங்களுக்கு செல்லவில்லை. பெற்றோரை கவனிக்க தான் குடும்பமாக சென்றிருந்தேன். பாசிக்குடாவுக்கும், திருக்கோணேஸ்வரத்துக்கும் போயிருந்தோம். அடுத்த முறை தனிய போகும் போது பல இடங்களை பார்க்கலாம் என இருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள் தங்களை சந்திக்கவில்லை என்ற பெரிய குறை. அடுத்த முறை பார்க்கலாம் என கூறியுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/3/2024 at 09:21, Kavi arunasalam said:

சரி போகட்டும் விடுங்கோ. இப்ப ஏதாவது சொல்லி விடுங்கோவன்.  வரக்கை  கொண்டு வருவார்

அவர்   குமாரசாமி  அண்ணை  கொடுத்து தான் பழக்கம்  கை நீட்டி வேண்டிய பழக்கம் இல்லை  😀

அந்த தாமரை என்னாச்சு,....உங்களுடன் தான்  இருக்கிறதா ?? 🤣😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/3/2024 at 15:11, goshan_che said:

பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்).

 

நீங்கள் அங்கே பென்ஷன் எடுக்கிறீர்கள் போலுள்ளது

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

அளவில் இலண்டன் Westfield, Dubai Mall போல இல்லாவிடினும், தரத்தில் ஒரு 85% கிட்ட வருகிறார்கள்.

தம்பி விலை எவ்வளவாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நீர்வேலியான் said:

நீங்கள் அங்கே பென்ஷன் எடுக்கிறீர்கள் போலுள்ளது

🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣.

இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி விலை எவ்வளவாம்?

கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான். 

டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு. 

பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

அந்த தாமரை என்னாச்சு,....உங்களுடன் தான்  இருக்கிறதா ?? 🤣😂🤣

தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣

மன்னிக்கவும் மாறி பதிந்து விட்டேன்   அது உங்களிடம் கேட்கும் கேள்வி     ....இருந்தாலும் கவி.....படம் வரையலாம்.  பொறுத்து இருந்து பார்ப்போம் 😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

@nunavilan @பெருமாள்

நீங்கள் கடைசியாக இலங்கை போனது எப்போ? ஒரு தரவுக்காக கேட்கிறேன்.

இங்கு பாய்ந்து பாய்ந்து சொறிலங்கா என்று எழுதும்போதே தெரியவில்லையா சண்டைக்கு முன் போய் வந்தேன் இனி போவதாக இல்லை போக வேண்டிய தேவையும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Kandiah57 said:

மன்னிக்கவும் மாறி பதிந்து விட்டேன்   அது உங்களிடம் கேட்கும் கேள்வி     ....இருந்தாலும் கவி.....படம் வரையலாம்.  பொறுத்து இருந்து பார்ப்போம் 😀

கேள்விக்கான பதில்:

தாமரை இலை மேல் நீர் போல் நீ…ஒட்டி ஒட்டாமல் இரு🤣.

2 minutes ago, பெருமாள் said:

இங்கு பாய்ந்து பாய்ந்து சொறிலங்கா என்று எழுதும்போதே தெரியவில்லையா சண்டைக்கு முன் போய் வந்தேன் இனி போவதாக இல்லை போக வேண்டிய தேவையும் வராது.

பதிலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

பதிலுக்கு நன்றி.

அந்த பதில் பிறகு எங்காவது வைத்து வதம் பண்ணத்தான் என்று எனக்கு தெரியும் ஆனால் உண்மை சிங்களம் ஒரு காலமும் தீர்வை கொடுக்கபோவது கிடையாது தீர்வு ஒன்று கிடைத்தால் போகலாம் இன்றும் ஏதோ ஒரு கொதி நிலையில் வைத்து இருக்கணும் என்று விரும்பது காரணம் சிங்கள இனவெறி அரசியல்வாதிகளின் பிழைகளை மறைக்க .

Whats-App-Image-2024-03-28-at-8-02-01-AM

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பெருமாள் said:

அந்த பதில் பிறகு எங்காவது வைத்து வதம் பண்ணத்தான் என்று எனக்கு தெரியும்

என்னை விட என்னை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்🤣.

ஆனால் வேறு எந்த திரியிலும் அல்ல, இந்த திரியில் நீங்கள் என் மீது பாய்ந்தமைக்கு….

இப்படியாக ஊரின் யதர்த்ததுடன் உங்களுக்கு விழுந்து விட்ட 15-20 வருட இடைவெளியே காரணம் என்பதை சுட்டவே அந்த் கேள்வியும், பதிலும்.

நான் இந்த திரியில் வட-கிழக்கு  அரசியலை அதிகம் பேசவில்லை.  

பொருளாதார விடயங்களை மட்டுமே சுட்டினேன்.

காரணமாய்த்தான்.

நான் சொல்ல போவதை ஏற்கும் பக்குவம் பலருக்கு இல்லை என்பதால்தான்.

ஆனால் நான் கணித்தது சரியாயின். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டம் தமிழ் தேசிய அரசியலுக்கு அல்லது தமிழ்  தேசிய அரசியல் செய்வதாக பாவனை செய்வோருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

நாதம் பாய். நான் மலையாளி.

நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄

5 minutes ago, goshan_che said:

பொருளாதார விடயங்களை மட்டுமே சுட்டினேன்.

அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பெருமாள் said:

உண்மை சிங்களம் ஒரு காலமும் தீர்வை கொடுக்கபோவது கிடையாது தீர்வு ஒன்று கிடைத்தால் போகலாம் இன்றும் ஏதோ ஒரு கொதி நிலையில் வைத்து இருக்கணும் என்று விரும்பது காரணம் சிங்கள இனவெறி அரசியல்வாதிகளின் பிழைகளை மறைக்க .

இதில் ஒரு மாற்று கருத்து இல்லை.

ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்:

சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை. 

சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை.

யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன. 

பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை.

கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள்.

கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல்.

மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன்.

செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர்.

நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை.

உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.

19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு

ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣.

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.

  • Like 1
  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.