Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அரிசியின் வெவ்வேறு வகைகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 29 மார்ச் 2024, 02:21 GMT

உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம்.

அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா?

எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரிசியின் வகைகள் என்னென்ன?

தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது.

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான்.

அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ்.

அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் .

இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர்.

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும்.

அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது?

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

"ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே."

"இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ்.

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கருப்புகவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன?

சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார்.

மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது.

அரிசி

பட மூலாதாரம்,AATHICHOODI

படக்குறிப்பு,

மருத்துவர் மருதராஜ்

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று.

இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும்.

இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர்.

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ்.

சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன?

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர்.

“இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.”

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும்

காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா?

பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும்.

இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன.

இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது.

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்”

ரேஷன் அரிசி நல்லதா?

பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

“மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர்.

எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ்.

அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ்.

எந்த அரிசியை தேர்வு செய்வது?

இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.”

“அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்”

https://www.bbc.com/tamil/articles/c3gj24ql6x4o

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை அளவாக சாப்பிடலாம் என்று சொல்லியிருப்பது அருமை.........👍

இவர்களில் பலர் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் சோறு சாப்பிடுகின்றனர், மதியமும் இரவும். அதுவே மாசத்து மிகுதியால் வரும் சில நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகின்றது. சோற்றுடன் இவர்கள் சேர்க்கும் காய்களும்  (அப்படித்தான் மரக்கறிகளை சொல்கின்றனர்) குறைவே. எங்கள் அளவிற்கு இவர்கள் மீன் சாப்பிடுவதும் இல்லை.

இப்பொழுது வசதி உள்ளவர்கள் ராகி (குரக்கன்), கம்பு என்று சாப்பிடத் தொடங்கியிருக்கின்றனர். இது நெடுங்காலம் நீடிக்குமா என்று தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, ரசோதரன் said:

எமது ஊர்களில் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். தஸ்சு புஸ்சு ஆபீஸர்மார் நான் சொன்ன கருத்து பொருந்தாது. நான் அறிய / நான் உட்பட  மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு தான் வளர்ந்தோம்.நவநாகரீக உணவுகள் உண்ணவில்லை.  நவநாகரீக நோய்கள் வரவில்லை. பசிக்காமல் உண்ணவில்லை. ஆனால் பசியாற உண்டோம்.உடல் களைக்க வேலை செய்தோம். வியர்வை மணக்க வேலை செய்தோம். நோய்கள் அண்டவில்லை.பசுமதியை கண்டறியோம். வெள்ளை பச்சை அரியை கண்டால் விலகி ஓடினோம். ஆனால் இன்று.....?

இன்றைய மானிடர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு ஐயோ குத்துது குடையுது என்றால் 24 மணி நேரமும் கதவை திறந்து வைத்திருப்பான் தானே அந்த வைத்தியன்....😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

👍....

உடல் உழைப்பு இருந்தால், நீங்கள் சொல்வது மிகச் சரியே.

இன்று இங்கு இவர்கள் பெரும்பாலும் கணினி தொழில்நுட்ப துறையில் நேரம் காலம் அற்று இருந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள். எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றனர், அந்த விபரங்களுடனேயே நோய்களும் வருகின்றன........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமது ஊர்களில் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். தஸ்சு புஸ்சு ஆபீஸர்மார் நான் சொன்ன கருத்து பொருந்தாது. நான் அறிய / நான் உட்பட  மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு தான் வளர்ந்தோம்.நவநாகரீக உணவுகள் உண்ணவில்லை.  நவநாகரீக நோய்கள் வரவில்லை. பசிக்காமல் உண்ணவில்லை. ஆனால் பசியாற உண்டோம்.உடல் களைக்க வேலை செய்தோம். வியர்வை மணக்க வேலை செய்தோம். நோய்கள் அண்டவில்லை.பசுமதியை கண்டறியோம். வெள்ளை பச்சை அரியை கண்டால் விலகி ஓடினோம். ஆனால் இன்று.....?

இன்றைய மானிடர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு ஐயோ குத்துது குடையுது என்றால் 24 மணி நேரமும் கதவை திறந்து வைத்திருப்பான் தானே அந்த வைத்தியன்....😎

வெறும் சுட்ட மரவெள்ளி கிழங்கும் கொஞ்சமே ஆனாலும் கொஞ்ச உப்பும்தான் இந்த போராட்டமே  ஆதராம் என்றால் யாரும் நம்புவார்களா ?

இன்று சிலருடன் கதைக்கும்போது  அந்த பெரிய மனிதனின் ஒருவேளை உணவை பகிர்ந்து கொண்டேன் .

ஆனால் இங்கு நாலு நேரமும் வயுறு புடைக்க திண்டு விட்டு ...........................................எழுதி விட பார்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. 

இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது:

1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎)

5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். 

இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை.

அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஒரு வைத்தியர் போலவே சொல்லியிருக்கிறீர்கள்.........😀

இங்கு பல 'டயட்' வகைகள் எம்மவர் மத்தியிலே இருந்தன. அதில் ஒன்று 'லோ கார்ப் அல்லது நோ கார்ப் டயட்'. கொஞ்சமாக கீன்வா என்ற ஒரு தானியத்தை சிலர் அவித்து சாப்பிட்டனர். கோவிட் வைரஸ் வந்த வரத்தில், எல்லா டயட்டும் காணாமல் போய்விட்டது............🤣. இனி மீண்டும் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக் காலத்தில் எம்மவர்கள் தராசு வைத்து நிறுத்து அளந்து சாப்பிடவில்லை.எரிச்சு பொரிச்சு சாப்பிடவில்லை, தினசரி மச்சம் மாமிசம் சாப்பிடவில்லை. கண்ட கண்ட உப்புகள் சுவையூட்டிகள் பாவிக்கவில்லை அவித்த, ஆவியில் வேக வைத்த சாப்பாடுகளையே உண்டனர். அதனால் இறுக்க களிசான் போட்டுக்கொண்டு ஓடவுமில்லை.ஜிம்முக்கு போய் கண்ட களிசறை பானங்களை குடித்து சிக்ஸ்பேக் வைக்கவுமில்லை 😂

புதிய தொழில்நுட்ப முறையில் வேலை செய்து வாழ்ந்தாலும் உணவு விடயத்தில் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் இன்றியமையாதது.😎

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

👍....

ஒரு வைத்தியர் போலவே சொல்லியிருக்கிறீர்கள்.........😀

இங்கு பல 'டயட்' வகைகள் எம்மவர் மத்தியிலே இருந்தன. அதில் ஒன்று 'லோ கார்ப் அல்லது நோ கார்ப் டயட்'. கொஞ்சமாக கீன்வா என்ற ஒரு தானியத்தை சிலர் அவித்து சாப்பிட்டனர். கோவிட் வைரஸ் வந்த வரத்தில், எல்லா டயட்டும் காணாமல் போய்விட்டது............🤣. இனி மீண்டும் வரும்.

"டயற்" என்பது வகேஷன் போல. முடிவுக்கு வந்தே ஆகும்.

வாழ்க்கை முறை- life style என்பது கல்வி போல, முடிவில்லாமல் தொடர்ந்து வரும்.

எனவே, இந்த உணவை மட்டும் குறி வைக்கும் ஒரு பரிமாண டயற்றை நான் அவ்வளவு ஊக்குவிப்பதில்லை. ஆனால், அளவான உணவு, உடலுழைப்பு, உறக்கம், மன அமைதி இவை அத்தனையும் இணைந்த (integrated life style) வாழ்க்கை முறை தான் நீண்டகால நோக்கில் பலன் தரும்.

இந்த திரி உட்பட,  என்னுடைய சொந்த ஆக்கங்களிலேயே இதனைத் தான் வலியுறுத்தி வருகிறேன். உற்றுக் கவனித்தீர்களானால், இதை நான் சொல்வதாலேயே எதிர்க்கும் "யாழ் கள டாக்டர்கள்" இருக்கிறார்கள்😎! முக நூலிலும், யூ ரியூபிலும் பரியாரிகளிடம் பயிற்சியும், இன்ரர்ன்ஷிப்பும் செய்த நிபுணர்கள்!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

81d045b2529eaac25dae5fa9b1ca3d42.gif

இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂
ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

81d045b2529eaac25dae5fa9b1ca3d42.gif

இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂
ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎

நீங்கள் சொல்வது பாதி சரி: தரவுகள் என்று வரும் போது நூற்றுக் கணக்கானோர், ஆயிரக்கணக்கானோரின் மீது objective ஆக எடுக்கப் பட்ட அளவீடுகள் தான் செல்லு படியாகும். இத்தகைய தரவுகளை வைத்துத் தான் நோய்த் தடுப்போ,  மருத்துவமோ செய்ய இயலும்.

மறுபக்கம், பல தடவைகள் மருத்துவ மனைக்கு தனி ஒருவர் போய் வந்து விட்டு, தன்னிடம் இருப்பவை தரவுகள் என்று அவர் நம்பலாம், ஆனால் இவை மருத்துவ விஞ்ஞானத்திற்கு முழுப்பயன் தருபவை அல்ல.

நோயுற்றவரின் அனுபவம் நவீன விஞ்ஞானத்திற்கு தேவை, ஆனால் உங்கள் அனுபவம் ஆய்வுத் தரவுகளை விட பலம் குறைந்தவை தான். அதற்காக நீங்கள் பகிராமல் இருக்க வேண்டியதில்லை.

அதே நேரம், ஆரோக்கிய நடைமுறைகளை, அனுபவங்களைப் பகிரும் ஆட்களை நையாண்டி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி நீங்கள் செய்யும் போது, "அம்மணமாய் நிற்பவன் உடுப்புப் போட்டவனை எள்ளல் செய்வது" போன்ற முரண் நகை நிலை ஏற்படுகிறது.

On 30/3/2024 at 23:59, குமாரசாமி said:

81d045b2529eaac25dae5fa9b1ca3d42.gif

இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂
ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎

உங்கள் சொந்த அனுபவத்தை வைத்து மருத்துவத்தில் சரி பிழையைத் தீர்மானிக்க முடியாது. அது தரவாகவும் கணிக்கப்பட மாட்டாது. 

ஆக்கபூர்வமான திரிகளில் ஏனையவர்களால் பகிரப்படும் ஆதாரபூர்வமான பலருக்கும் பயன்படும் தகவல்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பதே யாழுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலம் எல்லாம் போட்டு தாக்கியதுதான்,

எனது அண்ணா ஒருமுறை சாப்பாட்டு விஷயத்தில் என்ன பிரச்சனையெல்லாம் இருக்குனு விளங்கபடுத்திய பின்னரே உணவு மீதான விருப்பம்போய் பயம் வந்தது.

பொதி செய்யப்பட்ட எந்த உணவு வகை எடுத்தாலும் முதலில் அதன் பின்னாடி பார்ப்பதே வழக்கம்.

முதலில் பார்ப்பது சுகர்,  சோடியம், கலோரிஸ்.கொலஸ்ட்ரோல்

வெளிநாடுகளில் பெரும்பாலான நம்மவர்கள் இறப்பது கொலஸ்ட்ரோலினாலும் சுகரினாலும் சோடியத்தினாலும்தான்.

கொலஸ்ட்ரோல் மாரடைப்பு இதயவியாதி, சோடியம் எனும் உப்பு ரத்த ழுத்தம், சுகர் பிரச்சனை சொல்லவே தேவையில்லை எம்மில் பாதிக்குமேல் சுகர் பிரச்சனையை காவிக்கொண்டு திரிபவர்களே.

வெளிநாட்டில் ஆட்டு இறைச்சியினால் போய் சேர்ந்த எம்மவர்கள் ஆயிரம்பேருக்கு மேல வரும், எண்ணெயில் பொரித்த உணவுகளால் எந்த நிமிஷம் வேணுமென்றாலும் போகும் நிலையில் உள்ளவர்களும் பாதிபேர் வரும்.

சிலரிடம் சொன்னால் நம்புவதில்லை நான் பொரித்த மீன் சாப்பிட்டு 5 வருசம் வரும், ஆட்டு இறைச்சி அது அதுக்கு மேலிருக்கும், வெள்லை அரிசி சோறு என்பது  உணவில் பெரும்பாலும் இல்லை,

முக்கியமா கொத்துரொட்டி உடல்நல கேடான உணவுகளில் முதன்மையானது .பெரும்பாலும் சமன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியமானது, கோழி இறைச்சியும் கீரையும் அடிக்கடி சாப்பிடலாம் என்பது அபிப்பிராயம்.

இனிப்பு வைககள் குளிர்பானங்கள் தொடுவதேயில்லை, என்னமோ தெரியவில்லை அதெல்லாம் ஒருவகை ஒவ்வாமைபோலாகிவிட்டது, ஒருகாலம் புகை பழக்கத்துக்கு அடிமையாயிருந்தபோது வைத்தியரிடம் போனதுண்டு, வருடத்தில் ஒரு தடவை உடல் பரிசோதனை உண்டு அதை தவிர்த்து இன்றுவரை எந்த காரணத்துக்காகவும் ஆஸ்பத்திரி பக்கம் எட்டி பார்ப்பதில்லை.

எம்மில் சிலர்  பொரித்த எண்ணெயை போத்தலில் விட்டு வைத்து மறுபடியும்மறுபடியும் பயன் படுத்துகிறார்கள், பார்க்கவே பயமாயிருக்கும்.அது உயிருக்கே உலை வைக்கும் விசயம்.

அரிசி விசயத்தில் வடபகுதி மக்கள் 90 மானோர் சிவத்த புழுங்கல் அரிசியும் வன்னி மக்கள் சிவத்த பச்சை அரிசியும் காலம் காலமாக பயன்படுத்துகிறார்கள், இந்த மருத்துவ ஆய்வுகளுக்கு முன்னரே எம் முன்னோர்கள் அறிமுகபடுத்திய உணவு பழக்கம் வியப்பானது.

மேலே ஜஸ்டின் சொன்னதுபோல் இதெல்லாம் பண்ணி 100 வருசம் வாழலாம் என்பது அர்த்தமல்ல,

வாழும் நாட்களில் வாழ்க்கையில் பாதிநாளை ஆஸ்பத்திரியுடனும்  பார்மசியுடனும்,அறுவை சிகிச்சையுடனும்,அரை கிலோ குளிசையுடனும்  கழிப்பது மரணத்தைவிட  நரகவேதனையானது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, valavan said:

👍........

இங்கு அமெரிக்காவில் இப்பொழுது சில காலமாக கொலஸ்ட்ராலுக்கும், மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பில்லை என்ற ரீதியில் ஆராய்சிக் கட்டுரைகள் வரத் தொடங்கிவிட்டன. மாச்சத்தை தவிர்க்கும் சிலர், புரதத்தையும் அத்துடன் அதிக கொழுப்பையும் அதன் காரணமாக சேர்த்து எடுக்க ஆரம்பித்துள்ளனர். முக்கியமாக முட்டை. ஒரு நாளிலேயே பல முட்டைகளை உள்ளெடுக்கின்றனர். சில வருடங்கள் போக வேண்டும் இதன் விளைவுகள் தெரிய வர.

நீரிழிவு/சலரோகம் எங்களின்  பரம்பரை சொத்து போல. ஒவ்வொரு வீட்டையும் இது எட்டிப் பார்க்கின்றது. மிகவும் கட்டுப்பாடான உணவுப் பழக்கங்களுடன் இருப்பவர்கள் கூட, பரம்பரை முகூர்த்தங்கள் காரணமாக, இதிலிருந்து முற்றாக வெளியே வர முடிவதில்லை. கரணம் தப்பினால் இன்சூலின் என்ற நிலை.

எல்லோரும் சொல்வது போல, எல்லோருக்கும் தெரிந்தது போல, நிம்மதி/நித்திரை/உடற்பயிற்சி/விளையாட்டு அவசியம். ஆனால், பொதுவாக, மிகவும் பிந்தியே இவை உணரப்படுகின்றன. நீங்கள் முன்னரேயே சுதாகரித்து விட்டீர்கள்..........👍 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரசோதரன் said:

நிம்மதி/நித்திரை/உடற்பயிற்சி/விளையாட்டு அவசியம். ஆனால், பொதுவாக, மிகவும் பிந்தியே இவை உணரப்படுகின்றன

ரசோ சொல்வதுபோல பிந்தியே உணரபடுவதால்தான் மீள முடியாத பல நோய்களில் பலர் சிக்குகின்றோம்.

உணவு உயிர் வாழ்தலுக்கு எவ்வளவு தூரம் நண்பனோ  கட்டுப்பாடில்லாத உணவு பழக்கங்கள் அதேயளவு கொடூரமான எதிரியும்கூட  என்பதற்காகதான் மேலே ரொம்ப இழுத்து சொல்லிவிட்டேன்.

அனைவரும் உடம்பு விஷயத்திலும் உணவு விசயத்திலும் அக்கறையா இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

இங்கு அமெரிக்காவில் இப்பொழுது சில காலமாக கொலஸ்ட்ராலுக்கும், மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பில்லை என்ற ரீதியில் ஆராய்சிக் கட்டுரைகள் வரத் தொடங்கிவிட்டன

1997 இல் லேசான மாரடைப்பு.

ஓட்டையை போட்டு இதயத்தைப் பார்த்தா 2 அடைப்புகள்.

இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள்.

ஸ்ரெந்த் வைக்கும் தொழில் நுட்பத்தை அப்போது தான் அறிமுகப்படுத்தியதாக சொன்னார்கள்.

எனக்கிருந்த கொலஸ்ரரோல் 200. அந்தநேரம் கூடுதலான கொலஸ்ரரோல் 300 வரை இருக்கலாம் என்றார்கள்.

பதின்ம வயதிலேயே புகைப் பழக்கம் இருந்தபடியால் 100 வீதமும் பகைப் பழக்கத்தாலேயே வந்ததாக சொன்னார்கள்.

அத்தோடு புகையை விட்டது விட்டது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கடவுளே என்று இன்றும் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள்.........👍 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தரவுகள் தரவுகள் என்று கூவிக் கூவி விற்கிறார்கள்.

தரவுகள் யாரால் செய்யப்படுகிறது?

காப்பரேட்கம்பனிகள் அல்லது அவர்கள் நியமித்த அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்களால் நடத்தப்படுகிறது.

பழைய காலத்தில் கஞ்சி பழம்கஞ்சி என்று இருந்தது இன்று ஓட்கஞ்சி.

இந்த ஓட்சை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து எத்தனை கெமிக்கல்கள் கலந்து எங்களுக்கு தருகிறார்கள்.

நுhற்றுக் கணக்கான அரிசி இருந்தாக சொல்லப்படுகிறது.இன்று எத்தனை வகை அரிசிகள் உள்ளன.

இப்போ தை நெல்லை அவர்களிடமே வாங்க வேண்டுமென்கிறார்கள்.

அதே மாதிரி காய்கறிக்கான விதைகளுக்கும் இதே பிரச்சனை.

இப்போ இயற்கையான இறைச்சிக்கும் அலுவல் நடக்குது.

இன்னும் கொஞ்சகாலம் போக செயற்கை இறைச்சியைத் தான் சாப்பிடப் போகிறோம்.

இவை தான் காப்பரேட் கம்பனிகளின் தரவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

மிக உறுதியாக இது போன்ற வதந்திகளை நீங்கள் நம்புகிறீர்கள் போல தெரிகிறது😂.

அமெரிக்காவில், ஐரோப்பாவில், இவை போன்ற முன்னேறிய நாடுகளில் தரவுகள் (data) என்பவை கணணிக்கு  முன்னால் இருந்து ஒருவர் சும்மா ரைப் செய்து விட்டு வெளியே விடுபவை அல்ல. இப்படி தான் விடயம் தெரியாத பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஆரோக்கியம், உணவு, மருந்து என்று வரும் போது ஆயிரக் கணக்கானோரின் பல வருட கால உழைப்பினால் வரும் தரவுகள் தான் உங்களுக்கு ஆலோசனைகளாகவும், மருந்துகளாகவும் உருவாக்கப் பட்டுக் கிடைக்கின்றன. இந்த நடைமுறை தெரியாமல் இருப்பது பாரிய குறைபாடல்ல, ஆனால் தெரியாத ஒரு விடயத்தைத் தேடியறியாமல் தவறான கருத்துகளைப் பரப்புவது கொஞ்சம் நெருடலான விடயம்.

உங்களுக்குப் பொருத்தப் பட்ட ஸ்ரென்ரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று 10 கம்பனிகள் வரை இந்த ஸ்ரென்ற் தயாரித்து விற்கின்றன, ஆனால் அந்தக் கம்பனிகள் போலித் தரவுகளை வைத்து ஸ்ரென்ற் தயாரிக்கவில்லை. 80 களில் இருந்து, Material Scientists எனப்படும் நிபுணர்களும் , பன்றி இதயத்தில் இவற்றை பொருத்தி ஆராய்ந்த டசின் கணக்கான மிருக வைத்தியர்களும், மனிதர்களில் பரிசோதனைகள் செய்த சில டசின் மருத்துவர்களும் என்று சில ஆயிரம் பேரின் உழைப்பினால் உருவான ஸ்ரென்ற் உங்களுக்குப் பொருத்தப் பட்டது. சும்மா கார்ப்பரேற் உருவாக்கிய கற்பனைத் தரவுகள் அல்ல ஸ்ரென்ரின் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி.நான் சொன்னது காப்பரேட் கம்பனிகளைப் பற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/4/2024 at 15:23, இணையவன் said:

உங்கள் சொந்த அனுபவத்தை வைத்து மருத்துவத்தில் சரி பிழையைத் தீர்மானிக்க முடியாது. அது தரவாகவும் கணிக்கப்பட மாட்டாது. 

ஆக்கபூர்வமான திரிகளில் ஏனையவர்களால் பகிரப்படும் ஆதாரபூர்வமான பலருக்கும் பயன்படும் தகவல்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பதே யாழுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் அறிவிப்பிற்கு மிக்க நன்றி.

இனிவரும் காலங்களில் யாழ்களத்தில் உருவாக்கப்படும் ஆக்கபூர்வமான திரிகளுக்குள் எக்காரணம் கொண்டும் உள் நுளையமாட்டேன் என உறுதியளிக்கின்றேன்.

இங்கனம்
குமாரசாமி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.