Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(குறுங்கதை)

ஒரு கிலோ விளாம்பழம்

---------------------------------------
பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 
 
'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?'
 
'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......'
 
சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான்.
 
வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர்.
 
இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது.
 
இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ?
 
அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான்.
 
ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள்.
 
பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள்.        
 
ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர்.
 
இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது.
 
மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை.
 
இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். 
 
அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல.
 
முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது.
 
ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர்.
 
பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே.
 
கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான்.
 
வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ரசோதரன் said:

ஒரு கிலோ விளாம்பழம்

சுவியரைப்போல் உங்களுக்கும் நல்ல எழுத்துக்கொடை நன்றாகவே இருக்கின்றது. 💪🏽
புகுந்து விளையாடுறியள்.  தொடர வாழ்த்துகள். 👍🏼

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சுவியரைப்போல் உங்களுக்கும் நல்ல எழுத்துக்கொடை நன்றாகவே இருக்கின்றது. 💪🏽
புகுந்து விளையாடுறியள்.  தொடர வாழ்த்துகள். 👍🏼

🙏.....

தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்துக்கொடை நன்றாகவே இருக்கின்றது      தொடர வாழ்த்துகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

நல்ல எழுத்துக்கொடை நன்றாகவே இருக்கின்றது      தொடர வாழ்த்துகள். 

நன்றிகள் அல்வாயன். உங்களின் அடுத்த கவிதைக்கு காத்துக் கொண்டிருக்கின்றேன்.....😀....நல்ல பகிடிகள் உங்களின் கவிதைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால வாசகனுக்கு  இதுவரை ஏன் எழுத முடியவில்லையோ தெரியாது. முழு வீச்சில் இறங்கி விடீர்கள் . தொடருங்கோ  நாங்களும் தொடர்ந்து ரசித்து வாசிக்கிறோம்.  

 ஊரில் இருந் போது   விளம்பழத்தை வழித்துபோட்டு    பால் விட்டு கரைத்து சீனியும் கொஞ்ச சோறும்போட்டு அம்மா செய்து தருவார்   அமிர்தம் போல இருக்கும். நல்ல விருப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிலாமதி said:

🙏...........

விளையாட்டுகள் தான் நான் எழுதாதற்கு காரணம். எப்போதும் ஏதாவது விளையாடுவேன்.  மிகுதியாக கிடைக்கும் நேரத்தில் வாசிப்பு, சினிமா என்று போய்விடும்.

எப்பவோ ஆரம்பித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகின்றது. இப்பவாவது ஆரம்பித்தேனே என்று நிறைவடைய வேண்டியது தான்...........😀  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தஷ்டி காலங்களிலை விளாம்பழமும் முக்கிய இடத்திற்கு வரும்.விளாம்பழம் என்றவுடன் எனக்கு செல்வச்சன்நிதியானும் அடியார்மடமும் ஞாபகத்திற்கு வந்து போனது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கந்தஷ்டி காலங்களிலை விளாம்பழமும் முக்கிய இடத்திற்கு வரும்.விளாம்பழம் என்றவுடன் எனக்கு செல்வச்சன்நிதியானும் அடியார்மடமும் ஞாபகத்திற்கு வந்து போனது.

👍....

அடியார் மடம் என்றால், உங்களுக்கு வெங்கடாசலம் மாஸ்டரை தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை சென்ற போது அப்பா ஒரு பொலிதீன் பாக் நிறைய விளாம்பழங்கள் எங்களுக்காக புடுக்கி சேர்த்து வைத்து இருந்தார். அரைவாசிக்கு மேல் பழுதாகி இருந்தன.  அதிக நாட் கள் ஆகி விட்டனவோ தெரியவில்லை. உள்ளுக்கு கொஞ்ச சீனி போட்டு சாப்பிட நன்றாக இருந்தது.  🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

இம்முறை சென்ற போது அப்பா ஒரு பொலிதீன் பாக் நிறைய விளாம்பழங்கள் எங்களுக்காக புடுக்கி சேர்த்து வைத்து இருந்தார். அரைவாசிக்கு மேல் பழுதாகி இருந்தன.  அதிக நாட் கள் ஆகி விட்டனவோ தெரியவில்லை. உள்ளுக்கு கொஞ்ச சீனி போட்டு சாப்பிட நன்றாக இருந்தது.  🙂

👍.....

சீனியுடன் கலந்தால் அதன் சுவை சொல்லி மாளாது.

இளம் காயை உடைத்துச் சாப்பிட்டால் தொண்டை கட்டினது போல அடைத்து விடும்.

விளாமரம், இலந்தை போன்றவற்றில் அவைகளில் இருக்கும் முட்களையும் தாண்டி ஏறி இறங்கியிருக்கின்றோம் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க கொஞ்சம் அதிசயமாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த பழம் விளாம்பழம்.

எங்கள் அம்மம்மா வீட்டில் பெரியதொரு மரம் நின்றது.அம்மம்மாவில் இருந்து சின்னம்மாமார் வரை பழங்கள் விழவிழ எடுத்து வைப்பார்கள்.சீனி போட்டு சாப்பிடுவோம்.

இடைஇடையே காய்களை பறித்து வெங்காயம் பச்சைமிளகாள் தூள்தூளாக அரிந்து கொஞ்ச உப்பும் போட்டு சம்பலாக சாப்பிடுவோம்.

பழைய எண்ணங்களை இரை மீட்டதற்கு நன்றி ரசோதரன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

👍.....

விளாமரம், இலந்தை போன்றவற்றில் அவைகளில் இருக்கும் முட்களையும் தாண்டி ஏறி இறங்கியிருக்கின்றோம் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க கொஞ்சம் அதிசயமாகவே இருக்கின்றது.

எமது ஊரில் ஒதுக்குப்  புற  காணியொன்றில்..விளாத்தி ஒன்று நின்றது ..நிறைய காய்த்து பழுக்கும்..காணிக்காரன் முள்ளுவேலி போட்டும்  பார்த்தார் ..பாதுகாக்க முடியவில்லை ..ஊருக்குள் ஒரு கதைபரப்பிவிட்டார்... விளாவில் முனி இருப்பதாகவும்..பகலில் போறவையை சுரண்டுவதாகவும்....எங்கடை சிறார்பருவம் பேய்..முனியை நம்பும்காலம்தானே...இதனால் சின்னப் பள்ளிக்காரர்களிடமிருந்து...சின்னத்தொகை விளம்பழத்தை காணிக்காரர்  சேமித்துக்கொண்டார்..

  • கருத்துக்கள உறவுகள்

             துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.சனம் குறைவாக இருந்தது.கொஞ்ச பக்தர்களே இருந்தார்கள்.கோவில் பெரிதாகவும் அழகாகவும் இருக்கு. முன் வாசலில் காராம்பசு கன்றுடன் நின்று வரவேற்கிறது. சிறப்பாக அம்பாளை தரிசனம் செய்து அர்ச்சனையும் செய்து விட்டு வெளியே வருகிறோம்.  எனக்கு மாவிட்டபுரத்தில்  எங்கள் வீட்டையும்  அருகே இருக்கும் காளிகோவிலையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சென்று வந்த எனது தங்கை சொன்னார், வீடெல்லாம் உடைத்துக்கொண்டு போட்டார்கள். ரோட்டில் இருந்து ஒரே காடாய் கிடக்கு.போகும் வழியெல்லாம் மரங்களாலும் பற்றைகளாலும் மறைந்து போய் கிடக்குது என்று. முன்பு லொறி போன பாதை இப்போது வான் போகவும் சிரமப்பட்டுக்கொண்டு போகுது.

                                             நீங்கள் தெரிந்து எழுதினீங்களோ தெரியாமல் எழுதினீங்களோ தெரியாது நான் முன்பு எழுதிய என் அனுபவ சம்பவத்துடன் அப்படியே ஒத்துப் போகின்றது.......இது 2018 ல் நான் ஊருக்குப் போய் வந்து யாழ் அக்காவை 19 ல் "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" என்னும் ஆக்கத்தில் எழுதியிருந்தேன்.....!

                                                                                   அங்கு எங்களுக்கு ஒரு பனங்காணி இருந்தது. அதில் ஒரு பெரிய விளாத்திமரமும் அதற்கு நடுவாய் ஊடறுத்து ஒரு பனைமரமும் இருந்தது. நான் நண்பர்களுடன் அப்பப்ப அந்த விளாத்தியால் ஏறி பின் பனையில் ஏறி நுங்குகள் வெட்டிப்போட்டு வந்து சீவிக் குடித்திருக்கிறோம்......அதற்கு அருகில் மஞ்சமுன்னா மரம் என்று நினைக்கிறேன் அதன் கீழ் ஒரு சாதாரண கல்லுதான் எந்தவிதமான ஆடம்பரங்களை இல்லை அதை "கல்லடி வைரவர்" என்று சொல்லுவார்கள்.....அதில் என்ன விசேஷமெனில் உங்களுடைய பொருட்கள் ஏதாவது கைதவறி தொலைந்து போனால் ஒரு ஒரு சதத்தை துணியில் முடித்து அந்த வைரவரை நினைத்துக் கொண்டு வீட்டு சாமிபடத்துக்கு முன் வைத்தால் போதும் இரண்டொரு நாளில் அவை கிடைத்துவிடும்.....அவை சின்ன சின்ன பொருட்கள் ஆடு மாடுகள் போன்ற காணாமல் போன்றவைகள்.....நான் இவ்வளவு வருடங்களாச்சுது இன்றும் ஏதாவது பொருட்கள் காணாமல் போனால் அவரை நினைத்திக் கொள்வேன் அவர் என்னைக் காய் விட்டதில்லை..... இதில் விவாதங்கள் செய்யமுடியாது, நம்பிக்கைதானே எல்லாம்.......!

(இன்னுமொரு சம்பவம் அதை "மயிலம்மா" பக்கத்தில் எழுதுகிறேன்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, suvy said:

 👍......

நான் உங்களின் இந்த ஆக்கத்தை முன்னர் பார்த்திருக்கவில்லை. 

இந்த விளாம்பழ விலை பேரம் எனக்கு நடந்த ஒரு அனுபவம், 2020ம் ஆண்டு அங்கு போயிருக்கும் போது. அதை வைத்து, கொஞ்ச கற்பனையையும் கலந்து எழுதினேன்.

13 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு மிகவும் பிடித்த பழம் விளாம்பழம்.

எங்கள் அம்மம்மா வீட்டில் பெரியதொரு மரம் நின்றது.அம்மம்மாவில் இருந்து சின்னம்மாமார் வரை பழங்கள் விழவிழ எடுத்து வைப்பார்கள்.சீனி போட்டு சாப்பிடுவோம்.

இடைஇடையே காய்களை பறித்து வெங்காயம் பச்சைமிளகாள் தூள்தூளாக அரிந்து கொஞ்ச உப்பும் போட்டு சம்பலாக சாப்பிடுவோம்.

பழைய எண்ணங்களை இரை மீட்டதற்கு நன்றி ரசோதரன்.

👍...

நீங்கள் சொன்னவுடன் காயை நாங்களும் அப்படி சாப்பிடும் முறை நினைவில் வந்தது.....

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் ரசோதரன் சிறந்த கதைசொல்லி. ஒரு சிறிய நிகழ்வு நேர்த்தியாக சொல்லப் பட்டுள்ளது. அதுதானே சிறுகதை !

மற்ற யாழ் சொந்தங்களின் பின்னோட்டங்கள் வாசித்தேன். ஈழத்தில் உங்கள் இளம் பருவத்தை அசைபோட்டு நீங்கள் எழுப்பும் நினைவலைகள் (nostalgia) அந்தத் தமிழ் மண்ணின் வாசனையை என் போன்றோர் நுகர வைக்கின்றன. போருக்கு முந்தைய காலகட்டத்தில் என் இளமைப் பருவத்தில் இந்தியப் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில் இருந்து 'இலங்கை' தமிழ் வானொலியை மட்டுமே கேட்கும் எனக்கு கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் குரலில் உங்கள் வருணனைகள் ஒலிக்கின்றன; சீனி கலந்த விளாம்பழமாய்ச் சுவைக்கின்றன.

Edited by சுப.சோமசுந்தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுப.சோமசுந்தரம் said:

🙏........

உங்களினதும், களத்தில் வேறு பலரினதும் தொடர் ஊக்குவிப்பால் நானும் எழுதலாம் என்ற நம்பிக்கை இப்பொழுது சிறிது வந்து விட்டது என்று நினைக்கின்றேன். எல்லாவற்றையும் வாசிப்பவர்களின் பாடு என்னவோ தெரியவில்லை......🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2024 at 20:35, ரசோதரன் said:

உங்களினதும், களத்தில் வேறு பலரினதும் தொடர் ஊக்குவிப்பால் நானும் எழுதலாம் என்ற நம்பிக்கை இப்பொழுது சிறிது வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.

நானும் இப்படிதான் எழுத்தாணி பிடித்தேன். முதலில் என் மகள் மட்டுமே எழுதினாள். இணையத்தில் பதிவு செய்யுமுன் என்னிடம் காட்டிக் கருத்துக் கேட்பது வழக்கம். அவளது எழுத்து பற்றி மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களின் எழுத்து பற்றியும் விவாதிப்போம். வீட்டில் ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, நான் அதனை எனக்கே உரிய முறையில் விவரித்து, "நீ ஏன் இதை  ஒரு கதையாக எழுதக் கூடாது ?" என்று கேட்டேன். அதற்கு அவள், "நீங்களே பாதிக் கதையை முடித்து விட்டீர்கள். இனி நான் எழுதினால் அது என் எழுத்தாக இருக்காது. உங்களுக்கு வாசிப்பும் ரசனையும் இருக்கிறதே ! நீங்கள் ஏன் இதை எழுதக் கூடாது ?" என்று திருப்பிக் கேட்டு ஊக்கம் தந்தாள். நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் யாழில் நுழைந்தேன். புது வரவுகள் 'யாழ் அரிச்சுவடி' பகுதியில்தான் பதிய வேண்டுமென நானாக நினைத்துக் கொண்டு அங்கு பதிந்தேன். பிறகு கதைப் பகுதிக்கு மாற்றித் தந்தார்கள். அக்கதைக்கும், எனக்கும் யாழ் சொந்தங்கள் அளித்த வரவேற்பு அபரிமிதமானது. எனது வெளியுலக நண்பர்களும் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். ஒரு சிறிய நேர எழுத்தாளனாகவே மாறி விட்டதாக உணர்கிறேன். எல்லோரும் இப்படிதான் பிறர் மூலம் தம்மை உணர்ந்திருப்பார்கள்.

         நீங்கள் எழுத்துலகில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வர வாழ்த்துகள்.

       இனி எனது அந்த முதல் எழுத்து. நேரம் வாய்க்கும்போது உங்கள் வாசிப்புக்கு :

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2024 at 22:21, ரசோதரன் said:

காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான்.

அழகான எழுத்துநடை. எனக்கு முறிப்புக் குளத்தால் ஏறி அப்படியே கோணாவில் ஊடாக மல்லாவி வரை ஓடிய நினைவைத்தருகிறது. அந்த வீதியிலும் விளாமரங்களைக் காணலாம். இன்று இயற்கை தொலைந்த செயற்கை வாழ்வினுள் தொலைந்துகொண்டிருக்கின்றோம். நாம் நாட்டை மட்டுமல்ல எம்மையும் சேர்த்தே தொலைக்கின்றோம்.
நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/4/2024 at 01:51, ரசோதரன் said:

👍....

அடியார் மடம் என்றால், உங்களுக்கு வெங்கடாசலம் மாஸ்டரை தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

தெரியவில்லை . 77க்கு பின்னர் நான் சந்நிதி பக்கம் போகவில்லை. ஊரை விட்டு வெளியேறி விட்டேன்.

அல்லது பெயர் ஞாபகமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2024 at 07:31, குமாரசாமி said:

தெரியவில்லை . 77க்கு பின்னர் நான் சந்நிதி பக்கம் போகவில்லை. ஊரை விட்டு வெளியேறி விட்டேன்.

அல்லது பெயர் ஞாபகமில்லை

👍...

இவர் 80 களில் தான் அங்கிருந்தார் என்று நினைக்கின்றேன்.

On 7/4/2024 at 03:53, nochchi said:

அழகான எழுத்துநடை. எனக்கு முறிப்புக் குளத்தால் ஏறி அப்படியே கோணாவில் ஊடாக மல்லாவி வரை ஓடிய நினைவைத்தருகிறது. அந்த வீதியிலும் விளாமரங்களைக் காணலாம். இன்று இயற்கை தொலைந்த செயற்கை வாழ்வினுள் தொலைந்துகொண்டிருக்கின்றோம். நாம் நாட்டை மட்டுமல்ல எம்மையும் சேர்த்தே தொலைக்கின்றோம்.
நன்றி

🙏......

உங்களின் பெயரிலேயே காடு இருக்கின்றது. அந்த திரை விமர்சனத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். 

நொச்சி இலையை அவித்து குளிப்பார்கள் ஏதோ ஒன்றிற்கு. சிறு வயதில் அதை தேடி போனதாக ஒரு ஞாபகம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 22:59, சுப.சோமசுந்தரம் said:

நானும் இப்படிதான் எழுத்தாணி பிடித்தேன். முதலில் என் மகள் மட்டுமே எழுதினாள். இணையத்தில் பதிவு செய்யுமுன் என்னிடம் காட்டிக் கருத்துக் கேட்பது வழக்கம். அவளது எழுத்து பற்றி மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களின் எழுத்து பற்றியும் விவாதிப்போம். வீட்டில் ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, நான் அதனை எனக்கே உரிய முறையில் விவரித்து, "நீ ஏன் இதை  ஒரு கதையாக எழுதக் கூடாது ?" என்று கேட்டேன். அதற்கு அவள், "நீங்களே பாதிக் கதையை முடித்து விட்டீர்கள். இனி நான் எழுதினால் அது என் எழுத்தாக இருக்காது. உங்களுக்கு வாசிப்பும் ரசனையும் இருக்கிறதே ! நீங்கள் ஏன் இதை எழுதக் கூடாது ?" என்று திருப்பிக் கேட்டு ஊக்கம் தந்தாள். நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் யாழில் நுழைந்தேன். புது வரவுகள் 'யாழ் அரிச்சுவடி' பகுதியில்தான் பதிய வேண்டுமென நானாக நினைத்துக் கொண்டு அங்கு பதிந்தேன். பிறகு கதைப் பகுதிக்கு மாற்றித் தந்தார்கள். அக்கதைக்கும், எனக்கும் யாழ் சொந்தங்கள் அளித்த வரவேற்பு அபரிமிதமானது. எனது வெளியுலக நண்பர்களும் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். ஒரு சிறிய நேர எழுத்தாளனாகவே மாறி விட்டதாக உணர்கிறேன். எல்லோரும் இப்படிதான் பிறர் மூலம் தம்மை உணர்ந்திருப்பார்கள்.

         நீங்கள் எழுத்துலகில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வர வாழ்த்துகள்.

       இனி எனது அந்த முதல் எழுத்து. நேரம் வாய்க்கும்போது உங்கள் வாசிப்புக்கு :

உங்களின் முதற் கதையை இப்பொழுது வாசித்தேன். மிகவும் அருமை.....👍

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.