Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதித்துறையை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்கள் கடனுதவி இலங்கைக்கு

உலக வங்கியின் விசேட அறிவிப்பு!

இலங்கையில்  57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி  அதிக பணவீக்கம், மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமை, வேலை இழப்பு மற்றும் வருமானச் சரிவு ஆகியவையே  காரணங்கள் என்று உலக வங்கி வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்  வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

மேலும் இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1376820

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது சொர்க்கபுரியில் ....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

என்னப்பா இது சொர்க்கபுரியில் ....?

சிங்கள அரசியல்வாதிகள் தேனும், பாலும் ஓடுது என்கிறார்கள். 
உலக வங்கி இப்பிடி சொல்லுது.
இதிலை யாரோ ஒரு பகுதி பொய் சொல்லுது என்பது மட்டும் உண்மை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள அரசியல்வாதிகள் தேனும், பாலும் ஓடுது என்கிறார்கள். 
உலக வங்கி இப்பிடி சொல்லுது.
இதிலை யாரோ ஒரு பகுதி பொய் சொல்லுது என்பது மட்டும் உண்மை. 😂

ஏன் யாழ் களத்திலை குறைச்சலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஏன் யாழ் களத்திலை குறைச்சலா?

நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை ராசா…. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை.
 
தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர்.

உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 19:18, விசுகு said:

என்னப்பா இது சொர்க்கபுரியில் ....?

சொர்க்கபுரியில் சொல்ல வேண்டிய புரிதலும் உண்டு , சொல்ல வேண்டாத புரிதலும் உண்டு...
இராணுவ ஆய்வாளர்கள் அதிகமாக சொல்வார்கள் ஒர் விமானதாங்கி கப்பலை பராமரிப்பதை விட பல மடங்கு இலாபகர‌மானதாம் ஒர் தீவை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது...அதிலும் பல கப்பல் துறைமுகங்களை கொண்ட தீவு  சிறப்பாம் ....200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து இருக்கும் ஒர் கூட்டத்திடமிருந்து இந்த தீவு சொர்க்காபுரியாக வருவது என்பது இலகுவான விடயமே ...அதில வேற இந்த கூட்டத்திடம் அடிமையாக இருந்த சில கூட்டங்கள் இப்ப‌ சண்டித்தனம் பண்ண வெளிக்கிட்டுதுகள்....

உலக வங்கிக்கே செக் வைக்கிற அளவுக்கு முன்னாள் அடிமைகள் உசாராக இருக்கிறாங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, putthan said:

இது விளங்கினால் இந்த இனம் எப்போதோ தனக்கென ஒரு நாட்டை அடைந்திருக்கும்.

On 6/4/2024 at 07:50, தமிழ் சிறி said:

இதற்கிடையில்  வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என்று வங்கி கணித்துள்ளது.

இங்கே மேலே கருத்து எழுதிய பலர் - வாசித்தும், வாசிக்காதது போல நடிக்கும் பந்தியை மீள இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 07:50, தமிழ் சிறி said:

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடைசியாக எந்த வருடம் 20% கீழான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்தார்கள் என யாராவது நினைத்தீர்களா?

அல்லது நாட்டு நிலமையை கண்டு வந்து சொன்னர் மீதுள்ள கடுப்பில் இப்படியான கேள்விகளை மறந்தே விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இலங்கையில் கடைசியாக எந்த வருடம் 20% கீழான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்தார்கள் என யாராவது நினைத்தீர்களா?

அல்லது நாட்டு நிலமையை கண்டு வந்து சொன்னர் மீதுள்ள கடுப்பில் இப்படியான கேள்விகளை மறந்தே விட்டீர்களா?

இது கூட நாட்டுமக்களின் கையில் இல்லை ....இனவாதம் ,மத வாதத்தை விட நாட்டு மக்களை வறுமை மற்றும் பொருள் தட்டுப்பாடு என்ற சிக்கலில் மாட்டி ஆட்சியை கைப்பற்றலாம் ,மாற்றலாம் என்ற புதிய பாடத்தை மேய்ப்பாளர்கள் (வல்லாதிக்க சக்திகள்)
கண்டுபிடித்துவிட்டார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை.
 
தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர்.

உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..

நான் சொன்னதுக்கு மாறாக உலக வங்கி எதையும் சொல்லவில்லை.

1. உலக வங்கி எந்த 2022-2023 தரவுகளை வைத்து இதை சொல்கிறது.

இந்த தரவுகள் கூட இலங்கைக்கு புதிதல்ல.  பல வருடகாலமாகவே வறுமை கோட்டுக்கு கீழே குறித்த சதவீத மக்கள் வாழ்வது இலங்கையில் சகஜம். 

இந்த அறிக்கை 25% பேர் வறுமை கோட்டுக்கு கீழே என்கிறது. அப்போ 75% வறுமைகோட்டுக்கு மேலே என்பது சரிதானே? இதைத்தானே நான் எழுதினேன்?

4 வருடமாக வறுமை அதிகரித்தது என்கிறது. இதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் கடந்த 4 வருடத்தில் யூகே யில் வறுமை அதிகரித்துள்ளதா இல்லையா? ஆனால் இதன் அர்த்தம் யூகேயில் கடும் நெருக்கடி என்பதில்லைதானே?

2. 2023-2024 வில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்வு கூறுகிறது. அந்த முன்னேற்றத்தைதான் நான் அனுபவமாக எழுதினேன்.

3. நீங்கள் ஒரு வியாபாரம் தெரிந்த, செய்யும் ஆள் என நினைக்கிறேன். ஆனால் microeconomics ஐ அணுகுவது போல் macroeconomics ஐ அணுகுகிறீர்கள் என நினைக்கிறேன்.

விசுகு அண்ணைக்கும் இதே பிரச்சினைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

இது கூட நாட்டுமக்களின் கையில் இல்லை ....இனவாதம் ,மத வாதத்தை விட நாட்டு மக்களை வறுமை மற்றும் பொருள் தட்டுப்பாடு என்ற சிக்கலில் மாட்டி ஆட்சியை கைப்பற்றலாம் ,மாற்றலாம் என்ற புதிய பாடத்தை மேய்ப்பாளர்கள் (வல்லாதிக்க சக்திகள்)
கண்டுபிடித்துவிட்டார்கள் ...

அதுவே…. நான் இலங்கை போன பின், அங்கே உருவாகிய பொருளாதார நெருக்கடி, அறகளை, ரணில் வருகை, அதன் பின்னான முன்னேற்றம் எல்லாமுமே “உருவாக்கப்பட்ட நெருக்கடி” manufactured crisis என நம்பத்தலைபடுகிறேன்.

ரோலிங்கில் போய் கொண்டிருந்த நாட்டை, கோவிட் மற்றும் இந்த உருவாக்கப்பட்ட நெருக்கடி, பொருள்களை சர்வதேச சந்தையில் வாங்க முடியாதவாறு செய்துள்ளது.

அதை பயன்படுத்தி சில நாடுகள் இலங்கயின் அத்தனை அரசியல் கட்சியையும், பெளத்த பீடத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டில் எடுத்து விட்டன.

அது மட்டும் இல்லாமல் - இலங்கைக்காக பொருள் விநியோகமும் இவர்களின் முகவராகிய தனியாரிடம் போய் விட்டது.

இருக்கும் நாட்டின் இலாபமீட்டும் சொத்துக்களும் இவர்களிடமே விற்கப்படுகிறது.

ஆனால் ஒரு சிறுபான்மையாக - நான் இந்த நிலையை வரவேற்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இது விளங்கினால் இந்த இனம் எப்போதோ தனக்கென ஒரு நாட்டை அடைந்திருக்கும்.

இரண்டு இனங்களுக்கும் விளங்கவில்லை ....நாட்டை உருவாக்கியவர்கள் நல்ல நிலையில் தான் கொடுத்து விட்டு  சென்றார்கள் தங்களுடன் சேர்ந்து பயணித்தால் சிறப்பாக வாழலாம் என்று....சேர் பொன் ராமநாதன் ,அருணாச்சலம் போன்ற தலைவர்கள் பல்கலாச்சார சமுகமாக வாழ வேணும் என்ற நல்லெண்ணத்துடன் நல்லிணக்கமாக செயல்பட்டனர்.....

ஆனால் காலப்போக்கில் பல சித்தாத்தங்கள் அரசியல் தலைவர்களால் மக்களுக்கு புகுத்தப்படதின் விளைவு ....
நாட்டில் பல்கலாச்சாரம் போய் பல் வல்லாதிக்க சக்திகளின் சித்தாந்த,அரசியல் மாட்டி தத்தளிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

.

அதை பயன்படுத்தி சில நாடுகள் இலங்கயின் அத்தனை அரசியல் கட்சியையும், பெளத்த பீடத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டில் எடுத்து விட்டன.

வழமையாக தமிழனுக்கு எதை கொடுத்தாலும் வீரவசனம் பேசும் பூமிபுத்திராக்கள் இப்ப அமைதியாக கை கட்டி எஜமானர்களின்  (கட்சி பேதமின்றி) காலில் விழுந்து ஜனாதிபதியாக வர தவிக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

வழமையாக தமிழனுக்கு எதை கொடுத்தாலும் வீரவசனம் பேசும் பூமிபுத்திராக்கள் இப்ப அமைதியாக கை கட்டி எஜமானர்களின்  (கட்சி பேதமின்றி) காலில் விழுந்து ஜனாதிபதியாக வர தவிக்கின்றனர்

உண்மை. ஆனால் தமிழருக்கு அதிகமாக கொடுத்தால் - ஒரு புதிய புத்திரர் தோன்றும் வாய்ப்பு உருவாகும்.

அல்லது மகிந்தரே மீள புத்திரபாத்திரம் ஏற்கலாம்.

இதை எஜமானர்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.

இதனால்தான் இப்போ உள்ள ஸ்டேடஸ் குவோவையே நீடிப்பது எஜமானர்களின் தெரிவாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை.
 
தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர்.

உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..

இந்த பேய்கள் வெளிக்கிடும் நேரம் பார்த்து உங்கடை கருத்தை பார்த்து சிரிக்க வீட்டுக்குள் களோபரம் மீரா அவர்கள் இனி பகலில் கருத்தை போடுமாறு தயவுடன் கேட்கிறன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

இந்த பேய்கள் வெளிக்கிடும் நேரம் பார்த்து உங்கடை கருத்தை பார்த்து சிரிக்க வீட்டுக்குள் களோபரம் மீரா அவர்கள் இனி பகலில் கருத்தை போடுமாறு தயவுடன் கேட்கிறன் 😀

ஏன் sir I love you எண்டு யாரும் சொன்னவையோ🤣.

மீராவுக்கு இன்னொரு திரியில் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், குடி சனங்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கியயுள்ளேன்.

மேலேயும் உ. வங்கி, என்ன சொன்னது என்று விளக்கி - இந்த அறிக்கை 22/23 பற்றியது. 23/24 முன்னேற்றமான ஆண்டாக அமையும் என்றே உ. வங்கியும், அதைத்தான் நானும் சொன்னோம் என்ற விளக்கமும் கொடுத்துள்ளேன். 

அவர் விளக்கம் உள்ளவர், விளக்கியதும், விளங்கி, விலகி விடுவார்.

ஏனையோர் - Sir தான் (Stupid I Remain)🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 08:50, தமிழ் சிறி said:

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள்

இது இறந்த காலமா?? அல்லது எதிர்காலமா?? 2024 ஆம். ஆண்டில் இப்படி ஒரு அறிக்கை எழுத முடியுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

இது இறந்த காலமா?? அல்லது எதிர்காலமா?? 2024 ஆம். ஆண்டில் இப்படி ஒரு அறிக்கை எழுத முடியுமா?? 

மொழி பெயர்ப்புத் தவறு. உலக வங்கி சொன்னது இது:

"..While prices have eased off recently, the World Bank estimates the poverty rate in Sri Lanka will remain above 22% until 2026. It was about 26% in 2023, compared to pre-COVID levels of 11.3% in 2019, the World Bank said."

https://www.reuters.com/world/asia-pacific/world-bank-raises-sri-lankas-growth-forecast-22-2024-2024-04-02/

"World Bank raises Sri Lanka's growth forecast to 2.2% for 2024"

"றொய்ற்றர்ஸ் கக்கா" என்று திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்😂!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மொழி பெயர்ப்புத் தவறு.

கூகிள் டிரான்சிலேட்டர் பாவித்திருபார்களோ….சேர்?🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.