Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சனி இரவு நாளை மறு  நாள் திங்கள் பங்கு சந்தை திறக்கும்போது தெரியும் யார் சிங்கம் யார் ஓநாய் என்பது .

செய்தி கேட்ட நேரத்திலே இருந்து ஒரு மணி நேரத்தில்  பிட் காயின்  பயங்கர அடி  வாங்கி உள்ளது .

நமக்கு பாப் கோர்ன் வாங்கி வைத்து இருக்கிறேன் நிறைய .😃

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏற்றுக்கொள்ள முடியாத இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது என்றும் மற்றும்  பிராந்திய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும்  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒக்ரோவ‌ர் 7 தாக்குத‌லின் போது
நெத்த‌னியாகு சொன்ன‌வ‌ர் மூன்று கிழ‌மையில் ஹ‌மாஸ்சை அழித்து விடுவோம் என்று.........................ச‌ண்டை வேண்ட‌ம் த‌னி ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை த‌னி நாடாக‌ அறிவிக்கிறோம் என்று ஜ‌ரோப்பிய‌ ஒன்றிய‌ம் சொல்லி இருந்தால் போர் எப்ப‌வோ நின்று இருக்கும்......................இஸ்ரேல் என்ற‌ யூதர்க‌ளால் மூன்றாம் உல‌க‌ போர் வ‌ர‌க் கூடும்

ஈரான் ர‌ஸ்சியா இர‌ண்டு நாடுக‌ளும் அமெரிக்காவுக்கு இஸ்ரேலுக்கு எதிரான‌ நாடுக‌ள்.......................ஈரான் துணிஞ்சு இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கி இருக்கி என்றால் இது பெரிய‌ அழிவில் போய் முடியும்

ஏதாவ‌து நாடு த‌லையிட்டு இந்த‌ போரை த‌டுத்து நிறுத்த‌னும் போச்சு வார்த்தை மூல‌ம்.......................இல்லையேன் உல‌க‌ அள‌வில் இது பெரிய‌ போராக‌ மாறும்.............................போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்...................................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

அது மட்டும் அல்ல பையா சொறிலங்கா எனும் சொர்க்க நாடு இந்த ஈரானின் உதவியுடன் ரெம்ப கனவில் இருந்தவர்கள் சண்டை நீடித்தால் எல்லோருக்கும் கஷ்ட்டம் ஆனால் சொறிலங்கா கதை அதோ கதைதான்.

அதுக்கு பிறகுதான் புத்தர் சிலை வைப்பது முக்கியமா அல்லது தமிழனுடன் ஒற்றுமையாகி  நாட்டை முன்னேற்றுவது முக்கியமா என்ற நிலைக்கு இனவாத சிங்களவன் வருவான் .

  • கருத்துக்கள உறவுகள்

என்கை முக்கியமான ஆளை காணவில்லை அட இன்னிக்கு சட்டடே  நைட் இல்லையா  சிங்கம் சன்ரைஸ் பப்பில் இருந்து இரை  மீட்க்குது போல் .😃

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

ஏற்கனவே $3000 வட்டியும் முதலுமாக வீட்டுக்கடன் கட்டியபடி இருக்கையில் உந்த பன்னாடைக் கூட்டத்தால வட்டி மட்டுமே $6000 கட்டிக்கொண்டு இருக்கிறன். இதுக்குள்ள இப்ப Prtrolum Gas Liter க்கு $1.65 க்கு மேல வந்திட்டுது. 

இனி exptess way exit ல் god bluss you என்று மட்டையப் பிடிக்க வேண்டியதுதான். 

ஏன் பேராண்டி வரும் லெட்டர்களை  படிப்பது இல்லையோ அதில் சுவிட்ஸ் என்ற லிங்க் தந்து இருப்பார்கள் அதில் குறைவான வட்டி விகிதம் இருக்கும் லண்டனும் us எல்லாம் ஒரே மாதிரித்தான் .

ஒரு பேரழிவு வந்தால் அரசு மக்களுக்கு கொடுக்குமா போல் பல மடங்கு மக்களிடம் இருந்து எடுக்கும் இது எப்போ அரசு உருவானதோ அப்போதில் இருந்து கொரனோ  வந்ததும்  செய்த முதல்  வேலை பலருக்கும் சொன்னேன் பிக்ஸ் பண்ண சொல்லி அவர்கள்  கேட்டார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அவர் பெயர்  Josep Borrell

நான் கூறியது ராஜா ராணி படத்தில் வரும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சந்தானத்தின் சித்தப்பாவாக வரும் சிங்கமுத்து  வெட்டுக்கிளி,.🤣

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

ஏன் பேராண்டி வரும் லெட்டர்களை  படிப்பது இல்லையோ அதில் சுவிட்ஸ் என்ற லிங்க் தந்து இருப்பார்கள் அதில் குறைவான வட்டி விகிதம் இருக்கும் லண்டனும் us எல்லாம் ஒரே மாதிரித்தான் .

ஒரு பேரழிவு வந்தால் அரசு மக்களுக்கு கொடுக்குமா போல் பல மடங்கு மக்களிடம் இருந்து எடுக்கும் இது எப்போ அரசு உருவானதோ அப்போதில் இருந்து கொரனோ  வந்ததும்  செய்த முதல்  வேலை பலருக்கும் சொன்னேன் பிக்ஸ் பண்ண சொல்லி அவர்கள்  கேட்டார்களா ?

பெருசா ஏதாவது வெட்டலாமா என யோசிக்கிறேன்  ☹️

12 மாதத்தில் கட்டின வட்டி ஏறக்குறைய $60,000. முதல் $900 + சொச்சம் 

உப்பிடியே ரெண்டு வருசம் போனால் கதை கந்தல்தான் . 

☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஃபி பெர்க்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ‘இந்த அச்சுறுத்தல்கள் தேவையான இடங்களில் தடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன நடந்தது?

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?

ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கி,மீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்களை எங்கு வீழ்த்தியது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல், லெபனான் மற்றும் இராக் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சிரியா, ஜோர்டான் ஆகியவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கைப்படுத்தி வைத்துள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதி சிரிய துணைத் தூதரகம் தாக்கப்பட்ட பிறகு, இரான் பழிவாங்கும் விதமாகப் பேசியது. இந்தத் தாக்குதலில் உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.

இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,ISRAELI PM'S OFFICE

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “இரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது இரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது,” என்றார்.

“இரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது,” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்,” என்றார்.

மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,X/@POTUS

இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரான் இஸ்ரேலை தாக்கினால், இரானுக்குள் பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தனர்.

இரான் தாக்குதலின் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நின்று அவர்களைப் பாதுகாக்கும் என்றார்.

“அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானின் தூதரகம் மீதான தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

கவலை தெரிவித்த ஐ.நா.

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று மாலை இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மீது இரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல்கள் "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், "பல ஆண்டுகளாக ஸ்திரமின்மையின் சிற்பியாக" இருப்பதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.

"தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும்" செயல்பட்டதாகக் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cv27e22r4dno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகப்போர் மூளும் அபாயம்! அவசரமாக கூடவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை

இஸ்ரேல் மீது ஈரான்  ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் ஈரானால் தாக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் அவசரகால நிலையை அறிவித்து வான்வெளியை மூட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

iran-launches-attack-on-israel

ஈரானின் அச்சுறுத்தல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேலின் நண்பரான அமெரிக்கா, 'ஒதுங்கி நிற்க வேண்டும்' என, ஈரான் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியும் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார்.

iran-launches-attack-on-israel

ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், உலகப்போர் மூளும் அபாயம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://tamilwin.com/article/iran-launches-attack-on-israel-update-1713059850

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

கவலை தெரிவிக்கிறதை விட வேறை என்ன தெரியும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கவலை தெரிவிக்கிறதை விட வேறை என்ன தெரியும் 🤣

அவ்ளவுதான் லிமிட்டு.. அதுக்கு மேல போனா ஓனர் அடிப்பான்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??

ச‌த்திய‌மாய் என‌க்கு தெரியாது அண்ணா.........................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பையன்26 said:

ஒக்ரோவ‌ர் 7 தாக்குத‌லின் போது
நெத்த‌னியாகு சொன்ன‌வ‌ர் மூன்று கிழ‌மையில் ஹ‌மாஸ்சை அழித்து விடுவோம் என்று.......................

இல்லை உறவே     நெத்த‌னியாகு மிகவும் தெளிவாகவே சொன்ன‌வ‌ர்,
போரை நாங்கள் தொடங்கவில்லை, ஒக்ரோபர் 7 எங்களை தாக்கி  ஹமாஸ் பயங்கரவாதிகள் மிகப்பெரும் தவறை செய்து விட்டனர், அதற்கான விலையை அவர்கள் கொடுக்பார்கள்,ஹமாஸ்சை முழுமையாக அழிப்போம். இது ஆரம்பம் தான்.
இன்னொரு திரியில் பாலபத்ர ஓணாண்டிக்கு நீங்கள் ஆதாரம் கொடுத்த

உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+
இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு  +
ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா +   காணொளியும் கண்டேன்.
தமிழ்நாட்டில் பெரும் தொகை முஸ்லிம்கள் இருப்பதினால் அவர்களை மகிழ்வித்து தமது யுரியுப் சனலுக்கு அவர்களை சந்தாகாரர்களாக ஆக்குவதற்கு இப்படியான  செய்திகளை தமிழ்நாட்டில் தயாரிக்கின்றார்கள் என்று நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள்  மனிதர்கள் எனும் வகைக்குள் அடங்கவில்லையா?

மேற்குலகில் வெள்ளைகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு சார்பாக மேற்று ஊடகங்கள் எழுதுகின்றன என்ற கூற்றுக்கு என்ன பதில் உங்களிடம் உண்டு??

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

முஸ்லிம் மத வெறி காரணமாக ஈரான் வெற்றி அடைய வேண்டும் மற்றவர்கள் அழிக்கபட வேண்டும் என்ற அவர்கள் இலக்கில் அவர்கள் களிப்படைவதற்காக
உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+
இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு  +
ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + இப்படியாக  உண்மைகள் அற்ற செய்திகள் கொண்ட காணொளி தயாரிப்பு அவ்வளவே  விஷயம்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இஸ்ரேலை புகழ்ந்து தள்ளாமல்......

பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பது யார் என்ற கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் - பாதுகாப்பு சபையில் இஸ்ரேல்

15 APR, 2024 | 11:34 AM
image
 
ஈரானிற்கு எதிராக அனைத்து தடைகளையும் விதிக்கவேண்டும் என  இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இஸ்ரேலின் பிரதிநிதி  ஜிலாட் எர்டான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இன்னும் தாமதமாவதற்கு முன்னர் ஈரானிற்கு எதிராக அனைத்து தடைகளையும் விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்துள்ளார்.

வின்ஸ்டன் சேர்ச்சில் போன்றவர்கள் தலைமை தாங்கும் உலகமே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள ஈரானின் இராஜதந்திரி அமீர் சையிட் தனது நாடு மேற்கொண்ட நடவடிக்கை அவசியமானது என தெரிவித்துள்ளார்.

ஈரான் பிராந்தியத்தில் மோதலை ஏற்படுத்த விரும்பவில்லை அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபடும் நோக்கம் இல்லை ஆனால்  அமெரிக்கா இராணுவரீதியில் செயற்பட்டால் ஈரான் உரியஅளவிலான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181100

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம் மத வெறி காரணமாக ஈரான் வெற்றி அடைய வேண்டும் மற்றவர்கள் அழிக்கபட வேண்டும் என்ற அவர்கள் இலக்கில் அவர்கள் களிப்படைவதற்காக
உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+
இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு  +
ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + இப்படியாக  உண்மைகள் அற்ற செய்திகள் கொண்ட காணொளி தயாரிப்பு அவ்வளவே  விஷயம்.

இஸ்ரேலுக்கு மத, இன வெறி இல்லாமல் 340000 பலஸ்தீனியர்களை  கொன்று குவித்ததை எப்படி அழைக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சும்மா இஸ்ரேலை புகழ்ந்து தள்ளாமல்......

பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பது யார் என்ற கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

ம‌கிந்தாவின் பெய‌ரை ஒரு தெருவுக்கு வைச்ச‌துக்கான்டி 
எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் அழிவை பார்த்து இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று விவாத‌ம் செய்யின‌ம்.................அவ‌ர்க‌ளும்  எங்க‌ளை மாதிரி த‌னி நாடு கேட்டு போராடி ப‌ல‌தை இழ‌ந்து விட்டின‌ம்.....................என‌க்கு ஒன்று ம‌ட்டும் புரிய‌ வில்லை ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு த‌னி நாடு கிடைப்ப‌து இவ‌ர்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா...................ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் இனி இழ‌ப்ப‌த‌ற்க்கு ஒன்றும் இல்லை 
சிறு வ‌ட்ட‌த்துக்கை 26ல‌ச்ச‌ ம‌க்க‌ள் வாழுகின‌ம் சின்ன‌ குண்டு வெடிச்சாலே அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் அந்த‌ இட‌த்திலே இற‌ந்து போவின‌ம் 
அவ‌ர்க‌ளிட‌ம் இப்போது இருப்ப‌து உயிர் ம‌ட்டும் தான்...................இதுக்காக‌ த‌ன்னும் அந்த‌ ம‌க்க‌ளுக்கு க‌ருணை காட்டுங்க‌ள்.......................2009ம் ஆண்டு புல‌ம்பெய‌ர் நாட்டில் க‌ண்ணீரும் சோறும் சாப்பிட்ட‌தை யாரும் ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் அது எங்க‌ட‌ சொந்த‌ உறவுக‌ள் ஈழ‌ ம‌ண்ணில் செத்து ம‌டியும் போது ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும் போது  தூக்க‌க‌ம் இன்றி த‌விர்த்தோம்................2009த‌  இப்ப‌ கூட‌ நினைச்சு பார்த்தால் ம‌ன‌ம் வேத‌னைப் ப‌டும்😢..........................

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை விட( தன் சொந்த நலனுக்காக) முதுகில் குத்தும் துரோகி ஆபத்தானவன். அவனே முதலில் அழிக்கப்படவேண்டும் - தேசிய தலைவர் பிரபாகரன் 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.